பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை
அறத்துப்பால் : பிறனில் விழையாமை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை
அறத்துப்பால் : பிறனில் விழையாமை
''நான் மகிழ்ந்திருக்கிறேன். பிறரை மகிழ்வித்திருக்கிறேன். நான் துன்புற்றிருக்கிறேன். பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். பிறரை மகிழ்வித்து நான் துன்புறுத்தியிருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? நான் இந்த வாழ்க்கையோடு என்னைச் சம்பந்தப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வாழ்க்கை என்னைப் பாதிக்கிறது. நானும் இந்த வாழ்க்கையைப் பாதிக்கிறேன். வாழ்க்கை எனக்கு முடிவும் தொடக்கமுமற்ற நெடுங்கதையாக காட்சி தருகிறது. அவ்வப்போது சிதறிச் சிதறி அலைகளாய் என் மீது மோதும் சிறுகதைகளாகவும் பொருள் கொள்கிறது'' - ஜெயகாந்தன்
லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட முதுபெரும் எழுத்தாளரான லா.ச.ராமாமிருதம், தனது 91-வது வயதில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவ்ர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் பெற்று விளங்கியவர் லா.ச.ராமாமிருதம். லா.ச.ரா என்று பிரபலமாக குறிப்பிடப்பட்ட இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வருபவர். அபிதா என்ற அவர் எழுதிய நாவல் மிகவும் புகழ் பெற்றது (ஒரு நாவல்தான் எழுதியுள்ளார்). ஏராளமான சிறுகதைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ள இவர், உணர்ச்சி பெருக்கான நடையினால் வாசகர்களை மிகவும் கவர்ந்தவர். தன்னை சௌந்தர்ய உபாகசர் என்று அழைத்து கொண்ட லா.ச.ரா வின் தமிழ்நடை மிகவும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் குடும்பம் மற்றும் பெண்கள் ஆகிய விஷயங்களை மையமாக கொண்டு கதை எழுதியிருக்கும் இவர், சிந்தாநதி என்னும் நூலுக்காக 1989-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வென்றார். தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்பட்ட லா.ச.ரா, 1916-ம் ஆண்டு திருச்சியின் லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. தந்தை மற்றும் ஊர் பெயரை இணைத்து கொண்டு லா.ச.ராமாமிருதம் என்னும் பெயரில் அவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கதை 18-வது வயதில் மஞ்சரியின் சிறுகதை பத்திரிகையில் வெளியானது.அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் 91 வயதான லா.ச.ரா இன்று அதிகாலை சென்னையில் மரணமடைந்தார். இலக்கிய உலகைச் சேர்ந்த பல முன்னணி எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப்பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்
அறத்துப்பால் : பிறனில் விழையாமை
நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்
அறத்துப்பால் : பிறனில் விழையாமை
இத்தாக்குதலின் மூலம் பல செய்திகளை விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உணர்த்த முயன்றிருக்கின்றார்கள்.
இளங்கோவனின் இறுதிக் குரல்....
விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அனுராதபுரம் வான்படைத் தளத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பலமுறை சிறிலங்கா அரச படைகளானது முயற்சித்தபோதும் கரும்புலிகளின் மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதல் காரணமாக அது சாத்தியமாகவில்லை.
வான்படைத் தளத்தின் கள நிலைமைகளைத் தெளிவாக வன்னியின் கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்த கரும்புலிகள் அணியின் தலைவர் லெப். கேணல் இளங்கோ, மூன்றாவது முறையாகவும் காயமடைகின்றார். அந்நிலையில் தனக்கு கீழ் செயற்பட்ட கரும்புலி வீரர்களுக்குரிய கட்டளைகளைச் சரிவர வழங்கி, தலைவன் நினைவைச் செயலில் முடித்த அந்த வீரன் கட்டளைப் பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான்.
"தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்....." என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.
இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே போற்றுதற்குரியது. அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும். இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.
அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது. குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது. அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது. ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர். தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.
வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..
கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார். மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.
போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...
விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.
பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார். மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார். நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார். இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார். சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.
அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:
குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில், கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார். கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா. வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.
கெய்ரோ: "ஈராக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் அமைப்புகள் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும்" என அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் வேண்டுகோள் விடுத்துள்ள `ஆடியோ டேப்' வெளியாகி உள்ளது. அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பேசிய `ஆடியோ டேப்' அல்-ஜசீரா `டிவி'யில் ஒளிபரப்பானது. அதில், பின்லேடன் பேசியிருப்பதாவது: ஈராக்கில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு முஸ்லிம்கள் அமைப்புகள் தனித்து செயல்படுவது கவலையளிக்கிறது. கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு, அனைவரும் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் தவறு செய்கின்றனர். உங்களில் சிலர் கடமைகளை மறந்து செயல்படுவது கவலையளிப்பதாக உள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல. இதனால், நமது சகோதரர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படும். தனித்தனியாகச் செயல்படுவோர் ஒரே அணியில் இணைவதைக் காண முஸ்லிம்கள் காத்திருக்கின்றனர். உங்களுக்கான கடமையிலிருந்து தவற வேண்டாம். அனைத்து இடங்களிலும் உள்ள அல்-குவைதா அமைப்பின் சகோதரர்கள் குழுக்களாக பிரிந்து பயங்கரவாதத்தைச் செயல்படுத்தக் கூடாது. தலைவர்கள் தங்களது தனிப்பட்ட செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக போராடக் கூடாது. அதற்கு பதிலாக முஜாகிதீன்களின் வழியை பின்பற்ற வேண்டும். முஜாகிதீன்கள் இந்த நாட்டின் செல்வங்கள். இறைவன் கட்டளையை மீறுவோர் அதற்கான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு பின்லேடன் பேசியுள்ளார். சமீபகாலமாக ஈராக்கில் போராடி வரும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்க ராணுவத்தோடு இணைந்து கொண்டு, அல்-குவைதாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டே, பின்லேடனின் பேச்சு அடங்கிய `டேப்' வெளியிடப்பட்டுள்ளது என அமெரிக்க ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. இந்த `ஆடியோ டேப்' எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது பற்றிய விவரங்களை அல்-ஜசீரா வெளியிடவில்லை. இது பற்றி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
"சாமானிய மக்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் கதைகளை எழுதியவர் புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இந்தச் சமுதாயம் அங்கீகரிக்கவில்லை. அவர் எழுதியது வட்டாரத் தமிழ், சுத்தத் தமிழ் அல்ல என்று விமர்சனம் செய்தனர். ஆனால் பேச்சுத் தமிழ்தான் ஜீவ சக்தி என்று புதுமைப்பித்தன் அனைவருக்கும் உணர்த்தினார். இளைய தலைமுறையினர் புதுமைப்பித்தன் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்" - ஆர். நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவில்...
வழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள். போட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார். தாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ். தமிழோசைக்கு ரோஸ் அவர்கள் அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2007/10/071018_transrose?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள கொன்னையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், சாந்தாமணி தம்பதியர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பால் கறப்பதற்காகக் கடந்த வருடம் வாங்கி வந்த சிந்து இனப்பசு ஒன்று கடந்த புதன் இரவு பத்துமணியளவில் அனைவரும் வீட்டிற்குள் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புதைந்து மெகாசீரியல்களில் அழுதுகொண்டிருக்கும்போது, திடீரெனச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து பார்த்தனர். வெளியில் உள்ள தெருவிளக்குக் கம்பத்தில், கட்டாந்தரையில் லேசான தடுமாற்றத்தோடு துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த கன்றுகளைப் பார்த்ததும் தன்னை மறந்து அனைவரும் சந்தோசக்களிப்பில் துள்ளிக்குதித்தனர். அந்தச்சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு வந்து பார்த்துச் செல்கின்றனர். கன்றுகளில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக ஒரு பசு ஒரு கன்று ஈனுவதே வழக்கம். செய்தி : நண்பர் விஜய் - திருச்செங்கோடு"நான் பாட்டெழுத வந்தகாலம் - திரையுலகில் சுதந்திரப் போராட்டத்தின் சூடு குறைந்துபோன காலம்; பொதுவுடைமைச் சித்தாந்தம் வெளிநடப்புச் செய்த காலம்; திராவிட இயக்கத்தின் தீவிரம் தீர்ந்துபோன காலம்; வீரியத் தமிழ் பேசும் இதிகாசப் படங்கள் சரிந்துபோன காலம்; அண்ணன்-தங்கை, அன்னை-பிள்ளை, அண்ணன்-தம்பி என்ற உறவுகளை உள்ளடக்கம் கொள்ளலாம் என்றால் கூட்டுக் குடும்பங்கள் கலைந்து வந்த காலம், என் கையில் திணிக்கப்பட்டதும், என் பேனாவில் நிரப்பப்பட்டதும் காதல், காதல், காதல். அதுவும் நுகர்வுக் கலாசாரத்தில் நொறுங்கிப் போன காதல்" - கவிஞர் வைரமுத்து
நம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது. சமூக நீதியைக் காப்பதா? திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு திறமையானவர்களை ஊக்குவிப்பதா? என்பதே அது. சமுதாய அளவில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன, சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களை மேலே கொண்டு வர இடஒதுக்கீடு அவசியம்தான். அதே நேரத்தில் மிகச் சிறந்த மேதைகளை உருவாக்குவதற்குத் திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு மையங்களை ஏற்படுத்தவேண்டும். - ஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னாள் ஆசிரியர்