அப்போதெல்லாம்
என்னை உன்னுடன்
அழைத்துப்போகாமல் செல்லும்
உன் பயணத்திற்காக
நான் அழுது புரண்டிருக்கிறேன்
என் தேம்பல் தீர்வதற்குள் நீ
திரும்பி வந்துவிடுவாய்....
ஆனால்
இப்போதும் அலறித்துடிக்கிறேன்....நீ
வரவேயில்லை....
எப்போது அப்பா வருவீர்கள்?
????????????????????????????
நாங்கள் பார்க்காத
நீண்டநாள் பயணம் இதுதானாம்...
அம்மா சொல்கிறாள்....
"தந்தையின் மரணம்"
- வேதனையுடன் உங்கள் வாரிசுகள்।
பாலா - சென்னை