எனது முகநூல் பக்கம்

வாழ்ந்த தெய்வம்

வாழ்ந்த தெய்வம்
வான் நோக்கிச் சென்றுவிட்டால்
வராத கண்களிலும்
வற்றாத கண்ணீர் வரும்.
பூமிதன்னில் சேவைசெய்து

புனிதமாகியது
போதுமென்றென்னி
வானகம் சென்றாயோ

அங்கும் உன் புனிதப்
பாதம் பதிக்க
தாயே!

உன்னால் என் தாயகத்துக்குப் பெருமை!
நீர் இப்பூவுலகில் இல்லாவிட்டாலென்ன
உன்னை வானுலகிலாவது சந்திக்கமாட்டேனா?

அதற்காகவேணும் நான் அங்கு வரவேண்டும்!

என் வாழ்நாளில் நேரடியாக என் கண்களால் பார்த்துவிட வேண்டுமென்று நினைத்து பலமுறை முயற்சித்துக் கடைசிவரை பார்க்கவே முடியாமல் போன என் இன்னொரு தாய்! ஏதோ அவர் நினைவு வந்தது, அதனால் இதனை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

இன்றைய குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்

"தமிழோசை"

இன்றைய 'BBC' (ஜுன் 06 புதன்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

Today's Quote

The most incomprehensible thing about the universe is
that it is comprehensible.


Albert Einstein