பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை! ஆற்றல் இல்லை! என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக
- பெரியார்

உலகத்தில் சம்பாதிக்க எத்தனையோ நல்ல வழிகள் இருக்கின்றன. உலக அளவில் பிச்சைக்காரர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள். பிச்சை எடுப்பதைத் தொழிலாக வைத்திருப்பவர்கள் கையாளும் உத்திகள் ஏராளம். அந்த உத்திகளில் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்திகள் என்று கொஞ்சம் இருக்கிறது. இரக்கப்படுவதற்காகவே சில உத்திகள் வைத்திருப்பார்கள். சிலர் புகை வண்டிகளில் செல்லும்போது நாம் அமர்ந்திருக்கும் இடங்களைச் சுத்தம் செய்து இறுதியாகக் கையேந்துவார்கள். சிலர் சிக்னல்களில் வாகனங்கள் நிற்கும்போது கைக்குழந்தைகளோடு பிச்சையெடுப்பார்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்துள்ள நாடுகளில் கூட ஸ்டைலாக உடையணிந்து கையில் ஒரு போர்டுடன் நின்றுகொண்டிருப்பார்கள். அந்தப் போர்டில் 'தயவு செய்து உதவி செய்யுங்கள், என்னால் எந்த வேலையும் செய்யமுடியா
த நிலையிலிருக்கிறேன்" என்றெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு நிற்பார்கள். இன்னும் சிலர் கையில் பூங்கொத்துடன் நின்றுகொண்டிருப்பார்கள். இனாமாகக் காசு கொடுத்ததாக இருக்கவேண்டாமென்ற உத்தி இது. இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.| Powered by eSnips.com |