வானகமும் ஆற்றல் அரிது
"வாராது வந்த மாமணி" என்பது போல், "செய்யாமற் செய்த உதவி" என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.
அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்
அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பெண்டகன் மற்றும் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் ஆகியவை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஆறாம் ஆண்டு நிகழ்வுகள் இன்று நியூயார்க் மற்றும் வாஷிங்கடனில் இடம்பெற்றுள்ளன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 3000 பேர் பலியாயினர். அந்த தாக்குதலின் போது நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில் உயிர்தப்பிய தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசரகால பணியாளர்கள், தாக்குதலில் உயிரிழந்த அனைவரின் பெயர்களையும் வாசித்தனர்