- உடலின் அவ்வப்போதைய தேவைக்கு ஏற்ப அளவாக உணவு உட்கொள்வது.
- உடலின் தேவையை அதிகரிப்பது - உடற்பயிற்சி செய்வது.
- இன்சூலின் எடுத்துக் கொள்வது. இன்சூலின் மாத்திரையாக உட்கொள்ள முடியாது. ஏனெனில் அது ஒரு புரதம் எனவே நமது உடலில் அது செரித்து மாற்ற மடைந்து விடும். எனவே அதை ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டும்.
- க்ளுக்கோஸ் போன்ற உணவுப் பொருட்கள் உணவிலிருந்து நமது இரத்தத்தில் கலக்காமல் மாத்திரைகள் மூலம் தடுப்பது. மேலும் நமது உடலின் அனைத்து தசைகளையும் இரத்தத்தில் உள்ள அதிகமான க்ளுக்கோஸை உபயோகிக்க வைப்பது.
- பலருக்கு முறையான, சரியான, ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இவைகளிலேயே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சிலருக்கு நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஊசியும் மாத்திரைகளும் தேவைப்படும்.
- நோயின் தன்மையைப் பொறுத்து தினமும் இன்சூலின் போடவேண்டுமா அல்லது தினசரி மாத்திரைகள் வேண்டுமா அல்லது இரண்டுமே சேர்த்து வேண்டுமா என மருத்துவர் தீர்மானிப்பார்.
- இந்தியாவில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிகம். ஜனத்தொகையில் 7-9 சதவீதம் வரை சர்க்கரை வியாதி உள்ளவர்களே.
- எந்த வியாதியாக இருந்தாலும் மனம் தளராமல் அதற்குரிய வழிமுறைகளை கடைபிடித்து அந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
எனது முகநூல் பக்கம்
▼
No comments:
Post a Comment