தீயினும் அஞ்சப் படும்
எனது முகநூல் பக்கம்
December 30, 2007
இன்றைய குறள்
தீயினும் அஞ்சப் படும்
பெனசீர் பூட்டோவின் கட்சிக்கு அவரது மகன் தலைமை
படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பெனசீர் பூட்டோவின் கட்சி, பெனசீர் பூட்டோவின் கணவர் மற்றும் அவரது 19 வயதான மகனை கட்சியின் இணைத் தலைவர்களாக அறிவித்துள்ளது. அத்தோடு இன்னும் ஒன்பது நாட்களில் நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்க்க விரும்புகிறது என்பதையும் அக்கட்சி உறுதி செய்துள்ளது. திருமதி பூட்டோவின் மகனான பிலவால், ஜனநாயகத்தை மலர செய்வது தான் சிறந்த பழி வாங்குதல் என தனது தாயார் பலமுறை கூறி இருப்பதாக கூறியுள்ளார். திருமதி, பூட்டோவின் கணவரான ஆசிப் அலி ஜர்தாரி, பாகிஸ்தான் மக்கள் வன்முறையை கைவிட்டு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார். அத்தோடு மற்றுமொரு பிரதான எதிர்கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப்பையும் அவர் தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
Overseas workers to get 24x7 helpline
December 29, 2007
பாகிஸ்தான் எதிர்காலம்? - நிபுணர் கருத்து
பாகிஸ்தானில் தேர்தல் நடக்குமா?
பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை இலங்கையில் அமைதி ஏற்படாது : டக்ளஸ் தேவானந்தா ஆவேசம்
"பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை, அரசியல் தீர்வுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பு ஒப்புக் கொள்ளாது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட வேண்டும்' என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளிநாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :December 27, 2007
எனக்கே சொந்தம்!
ஏன் இடதுமார்பில்
வைத்து நடக்கிறேன்
என்கிறாயே தோழி?
சொல்கிறேன் கேள்!
என் இதயத்தினுள்ளிருக்கும்
என்னுயிர்க் காதலரை
வெளியிலுள்ள
வேறு யாரும்
பார்க்கக்கூடாதல்லவா?
இன்றைய குறள்
தீவினை யென்னுஞ் செறுக்கு
பி.சுசீலாவிற்கு பத்மஸ்ரீ?
கண்டசாலாவுடன் தொடங்கி எஸ்.பி.பாலசுப்ரமணியம் வரை மூன்று தலை முறையாக 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கும் பிரபல பின்ணணிப் பாடகி பி.சுசீலாவிற்கு இந்திய மத்திய அரசின் உயர் விருதான (பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற) பத்ம விருதுகளில் எதுவும் இதுவரை வழங்கப்பட வில்லை. 'இதுவரை அவர் செய்திருக்கும் சாதனைகளுக்கு ஏற்ப அவர் கௌரவிக்கப் படவில்லை என்றாலும், இழப்பு திரையுலகினருக்குத்தானேயன்றி அவருக்கு இல்லை' என்று பத்மவிபூஷண் விருது பெற்ற வரபிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். சுசீலாவின் பெயர் இதற்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக ஆந்திர அரசின் தகவல் குறிப்பு தெரிவிக்கின்றது. விரைவில் கிடைத்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.
பேனசீர் புட்டோவின் வாழ்க்கை ஒரு பார்வை
1953 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி பிறந்தார் பேனசீர் புட்டோ. தெற்கு ஆசியாவின் பிரபலமான ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பேனசீர் புட்டோ. அவரது தந்தையான ஜுல்ஃபிகர் அலி புட்டோ 1970 களில் மக்களின் ஆதரவைப் பெற்ற பிரதமராக திகழ்ந்தார். இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சியை இழந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோ பதவியிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்பட்டார். தனது தந்தை பதவியிலிருந்து நீக்கப்பட்டு தூக்கிலடப்பட்ட சம்பவங்களே அவரை அரசியலில் நுழைய வைத்தது எனக் கூறப்படுகிறது. அவரது தந்தையை தூக்கிலிட்ட ஜியாவுல் ஹக் பேனசீரையும் சிறையிலடைத்தார். ஜியாவுல் ஹக் ஒரு விமான விபத்தில் பலியான பிறகு, நடைபெற்ற ஜனநாயக முறையிலான தேர்தலில் வெற்றி பெற்று உலகளவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பெண் பிரதமராக பொறுப்பேற்றார். 1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார். இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, கடந்த அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார். ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.
நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.
தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது. அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.
December 26, 2007
இன்றைய குறள்
சொல்லிற் பயனிலாச் சொல்
பொன்மொழிகள்
- வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச்செல்லாதே, வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா
- மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்
- மகானாய் வேண்டாம் ஒரு தாய்க்கு நல்ல மகனாய் இரு
- குழந்தையை ரசிக்கக் கற்றுக்கொள் குணவானாவாய்
- இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்பாக விடுதலைப் புலிகளை வீழ்த்த்த வேண்டும் : இலங்கை ஜனாதிபதி
இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி மரணம்
December 25, 2007
இன்றைய குறள்
மாசறு காட்சி யவர்
விரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் துகளில் முழு பைபிளையும் எழுதி சாதனை
பூர்வ மொழியான ஹீப்ருவில் மூன்று இலட்சம் வார்த்தைகளைக் கொண்ட நூல் கிறிஸ்துவர்களின் திருமறையான பைபிள். உலகின் மிகச் சிறிய பைபிள் என்ற சாதனையை இதற்கு முன் தக்கவைத்திருந்த நூல் 2.8 செண்டிமீட்டர் அகலமும் 3.4 செண்டிமீட்டர் நீலமும் 1 செண்டிமீட்டர் உயரமும் கொண்டது, இதில் 1514 பக்கங்கள் இருந்தன. தற்போது பைபிளின் மூன்று லட்சம் வார்த்தைகளை ஒரு குண்டூசி முனையில் எழுதி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிலில் உள்ள ஹைஃபா தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள். அரை மில்லிமீட்டர் அளவேகொண்ட ஒரு சதுரங்கத்தில் முழு பைபிளும் மெல்லிய மின்-கதிர் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது
பொன்மொழிகள்
- தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை
- காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்
- எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்
- படைப்பாளனாய் வேண்டாம், நல்ல விமர்சகனாய் இரு
ஒட்டகச்சிவிங்கிகள் ஒற்றை இனம் அல்ல
December 24, 2007
"ஆண்டவனின் கருவறையில் அனைவரும் சமம்" - 'வாரமொரு ஆலயம்' நடராஜ் பிரகாஷ்
இன்றைய குறள்
பெரும்பய னில்லாத சொல்
ஒரு டாலருக்கு! ஒரு பாலம்
நியுயார்க் டைம்ஸ் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு
December 23, 2007
இன்றைய குறள்
பயனில சொல்லாமை நன்று
புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் - நடிகர் விஜய்
குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி
இந்தத் தேர்தலில், வடக்கு, தெற்கு குஜராத் மற்றும் செளராஷ்டிரா பிராந்தியங்களில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது. கடந்த 2002-ம் ஆண்டு மதக்கலவரம் நடைபெற்ற மத்திய குஜராத்தில், கடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சி, இந்த முறை கணிசமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. 2002-ம் ஆண்டு கலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது, முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியதாக நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தச் சம்பவம் தொடர்பாக, உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றி, தேசிய அளவில் அந்தக் கட்சி பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்று நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த நரேந்திர மோடி,தேர்தல் பிரசாரத்தின்போது, புதுப்புது வழிகளில், புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தி எதிர் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், அது எடுபடவில்லை. குஜராத் மக்கள், எதிர்மறை சக்திகளைத் தோற்கடித்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த வெற்றி, ஐந்தரை கோடி குஜராத் மக்களுக்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து ஐந்தாவது முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. என்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கு, பிரதமர் மன்மோகன் சிங், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். குஜராத் மாநில முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளர் மகேஷ் ரங்கராஜன் அவர்களின் பேட்டியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
December 22, 2007
இன்றைய குறள்
மக்கட் பதடி யெனல்
ஒரு சபிக்கப்பட்ட வைரம்
உத்தரப்பிரதேச குண்டுவெடிப்பு தொடர்பில் இருவர் கைது
இந்தியா சீனா இராணுவக் கூட்டுப் பயிற்சி முகாம் - நிபுணர் கருத்து
உலகின் மிகப்பெரிய இரண்டு இராணுவங்களை கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனா இடையில் முதல்முறையாக இராணுவ கூட்டுப் பயிற்சி முகாம் நடந்துவருகிறது. சீனாவின் தென்மேற்கிலுள்ள யுன்னான் பிராந்தியத்தில் டிசம்பர் 20 தொடங்கி ஒருவாரகாலம் இந்தக் கூட்டுப் பயிற்சி முகாம் நடக்கிறது. 1962-ல் இந்தியா சீனா இடையில் குறுகியகாலமானாலும் ரத்தக்கறை படிந்த யுத்தம் ஒன்று நடந்திருந்தது. பலகாலமாக இறுக்கமாகவுள்ள இருநாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாள நடவடிக்கை இந்த இராணுவ கூட்டு முயற்சி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி டி.எஸ்.ராஜன் அவர்களின் செவ்வியை தமிழோசையில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
December 21, 2007
இன்றைய குறள்
நீர்மை யுடையார் சொலின்
நிலைக்கண்ணாடி போல இருப்பவர் வைரமுத்துதான்" - மு.கருணாநிதி
இலங்கை படையினரின் குறுக்கீடின்றி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை
December 20, 2007
இன்றைய குறள்
பண்பில்சொல் பல்லா ரகத்து
கருணாநிதி சோனியா சந்திப்பு
சிப்ஸ் சாப்பிடுவோருக்கு ஆண் குழந்தை
தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தேதி அறிவிப்பு
இந் நிலையில், சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம், அந்தக் குற்றவாளிகள் சிறை வைக்கப்பட்டுள்ள கோவை மத்திய சிறைக்கு ஓர் உத்தரவை அனுப்பியுள்ளார். அதில், தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேரையும் வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இந்த நிலையில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி, இந்த மூன்று கைதிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறை தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்கள், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு, ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நம் தேசியக்கொடியும், தேசியகீதமும் மங்கையரின் உள்ளாடைக்குள்!



இந்தியர்களை மலேசியா வெறுத்து பழிவாங்குவது ஏன்?
December 19, 2007
இன்றைய குறள்
பாரித் துரைக்கும் உரை
இசை - சர்.சி.வி.ராமன்
"மத்திய மாநில அரசுகள் ஒத்துழைத்தால் இந்திய பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேலும் அதிகப்படுத்த முடியும்" - பிரதமர் மன்மோகன் சிங்
இந்திய ஆறுகளை இணைக்கும் திட்டத்தை ஒரு தேசியத் திட்டமாக அறிவித்து, அதற்காக கால வரையறையுடனான செயற்திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கருணாநிதி கேட்டுக்கொண்டார்.
December 18, 2007
மூன்று ஹிஜிரி வருடங்களைக் கொண்ட 2008
இன்றைய குறள்
நட்டார்கட் செய்தலிற் றீது
பிரதமர் மன்மோகன் சிங் - தமிழக முதல்வர் கருணாநிதி சந்திப்பு
மேக்கப்-புக்கு மூன்று வருடமா?
இந்திய முன்னாள் அமைச்சர் ஜக்தீஷ் டைட்லருக்கு சீக்கியக் கலவரத்தில் பங்கு விவகாரம்
December 17, 2007
இன்றைய குறள்
எல்லாரும் எள்ளப் படும்
சுழன்றும் ஏர் பின்னது உலகம்
எழுச்சியுறும் இந்தியா
மலேசிய தமிழர்கள் மீதான சில குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன
பிரமோத் மஹாஜன் கொலை வழக்கில் அவரது சகோதரர் குற்றவாளியாக அறிவிப்பு
December 16, 2007
கீரிப்பிள்ளை
இன்றைய குறள்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு
ஹைக்கூ கவிதைகள்
வரிசையாகச் சுமக்கும்
ஏழை விவசாயி….
குட்ஸ் வண்டி
2.வண்டுக் காதலனைக் கண்டதும்
மலருக்குப் பதட்டம்
வியர்வையாய்….
பனித்துளிகள்
3.அழுதவானம் எழுதிப்பார்க்கும்
அந்தரங்க வரிகள்….
நீரோடை
4.இந்தியத் தாயின்
இறுதிக் கண்ணீர்த்துளி....
இலங்கை
5.சொந்தமண்ணிலிருந்து
துரத்தப்பட்ட அகதி
துடுப்பற்ற பரிசல்
பிறைநிலா
விவாகரத்து : இலக்கிய ஆர்வம்
இலங்கையில் நிரந்தர சமாதானம் எனது இறுதி ஆசைகளில் ஒன்று: சர் ஆர்தர் சி.கிளார்க்
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத் தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பது தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று இங்கிலாந்தினைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வானியல் விஞ்ஞான ஆய்வு எழுத்தாளர் சர் ஆர்தர் சி.கிளார்க் இன்று தெரிவித்திருக்கிறார். 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிரித்தானியாவில் பிறந்த "செய்மதி தொழினுட்பத்தின் தந்தை" என்று வர்ணிக்கப்படும் சர் ஆர்தர் சி.கிளார்க் கடந்த 50 வருடங்களிற்கும் மேலாக இலங்கையில் தங்கியிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும், நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இதுவரை வெளியிட்டிருப்பதோடு பிரபலமான பல சர்வதேச விருதுகளையும், உள்ளூர் விருதுகளையும் பெற்றிருக்கிறார். தனது 90வது பிறந்த தினத்தினையொட்டி கருத்து வெளியிடும்போதே இவர் இலங்கையில் நிரந்தர சமாதானம் குறித்த தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருக்கிறார். செய்தித் தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்திய முன்னோடி என்ற ரீதியில் உலகப் புகழ்பெற்ற இவர், ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதற்காக 1950 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கைக்கு வந்திருந்தார். 1979 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை இவர் கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரிந்திருப்பதோடு, இலங்கைப் பிரஜை ஒருவரிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதியுயர் விருதுகளான "சாஹித்ய ரத்னா", "வித்யா ஜோதி", மற்றும் "லங்கா அபிமான்ய" போன்ற விருதுகளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். கொழும்பில் இன்று இடம்பெறும் இவரது பிறந்த தினக் கொண்டாட்டங்களில், 1965 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்ஸே லினோவ் விசேட அதிதியாகக் கலந்துகொள்கிறார் என்பது இங்கு சிறப்பம்சமாகும்.
"ஒசாமாவுடன் பணியாற்றியது கட்டுக்கடங்காத சந்தோஷம்'* சொல்கிறான் முன்னாள் கார் டிரைவர்
குவான்டனாமோ: "ஒசாமாவுடன் பணியாற்றியபோது, கட்டுக்கடங்காத சந்தோஷத்தில் இருந்தேன்' என்று, அவனுடைய முன்னாள் கார் டிரைவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, உலக வர்த்தக மையம் விமானம் கொண்டு தகர்க்கப்பட்ட பின், அதற்கு காரணமான ஒசாமா பின்லாடனை அமெரிக்கா தீவிரமாக தேட தொடங்கியது. ஆனால், இதுவரை அவன் சிக்கவேயில்லை. அதே ஆண்டில் நவம்பர் 24ம் தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் அமெரிக்க வீரர்கள் பல சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களை சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது பிடிபட்டவன் தான் சலீம் அகமது ஹாம்தான். கியூபாவில் குவான்டனாமோ என்ற இடத்தில் அமெரிக்க கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள தனிமை சிறையில் ஹாம்தான் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு முறை அவன் மீது வழக்கு நடத்தப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக அவனை மீண்டும் நீதிபதி முன் நிறுத்த ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன் அவனிடம் விசாரணை நடத்தி, அவனது வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். அதில் அவன் கூறியிருப்பதாவது:நான், ஒசாமா பின்லாடனின் டிரைவர் மற்றும் பாதுகாவலன். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் விமானம் மூலம் தகர்க்கப்பட்ட போது, காந்தகாரில் உள்ள ஒரு இடத்தில் தங்கி இருந்தார். அவரையும், அவரது மகன் ஒட்டமானையும், நான் தான் காரில் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றேன். அமெரிக்கர்கள் பிடியில் அவர் சிக்கி விடக் கூடாது என்பதற்காக பல வாரங்கள், ஒவ்வொரு நகராக அவரை நான் தான் அழைத்து சென்றேன். உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட போது, குறைந்தது ஆயிரத்து 500 பேராவது இறப்பர் என ஒசாமா எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு மேலும் இறப்பு எண்ணிக்கை இருந்ததால், மிகவும் திருப்தி அடைந்தார். அவருக்கு விசுவாசமாக இருப்பதாக நான் பிரமாணம் எடுத்துள்ளேன். கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் அவரிடம் பணியாற்றினேன்.இவ்வாறு ஹாம்தான் கூறியுள்ளான்.
கடிகார முட்களைப்போல் தி.மு.க.,வில் அழகிரி, ஸ்டாலின் செயல்பட கவிஞர் வைரமுத்து வலியுறுத்தல்
December 15, 2007
இன்றைய குறள்
புன்சொ லுரைப்பான் பொறை
உன்னதமான சங்கீதம்
தமிழக மீனவர்கள் ஆந்திராவில் கைதாகி விடுதலை
அவசரகால நிலையை அகற்றினார் பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப்
பாகிஸ்தான் அதிபர் பெர்வேஷ் முஷாரஃப் அவர்கள் கடந்த மாதம் முதல் நாட்டில் போட்டிருந்த அவசரகால நிலையை விலக்கியுள்ளார். கூடவே அரசியல் சாசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் தன்னால் நியமிக்கப்பட்டிருந்தவர்களிற்கு நாட்டின் முக்கிய நீதிபதிப் பதவிகளுக்கான சத்தியப் பிரமாணங்களையும் செய்து வைத்துள்ளார். இப்படியொரு நிலையில் அவசரகாலச் சட்டத்தை விலக்குவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்கிறார்கள் அதிபரை விமர்சிப்பவர்கள். அவசரகால நிலைமையின் போது பதவி விலக்கப்பட்ட பக்கச்சார்பற்ற நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்படப் போவதில்லை. கூடவே செய்தி ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருக்கப் போகின்றன. இந்த முன்னெடுப்புகள் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரம் உள்ள நிலையில் வந்துள்ளன.
December 14, 2007
இன்றைய குறள்
என்னைகொல் ஏதிலார் மாட்டு
தி.மு.க., அ.தி.மு.க தவிர மற்ற எந்தக் கட்சிகளும் எங்களுக்குத் தீண்டத் தகாதவை அல்ல - டாக்டர் ராமதாஸ்
புவி வெப்பமடைதல் தொடர்பிலான ஐ.நா. மாநாடு நிறைவு நேரம் தாண்டியும் நீடிக்கிறது
புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்பில் சமரச உடன்பாடு ஒன்றைக் காண்பதற்கான முயற்சியில் பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பாலியில் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு இரவாகியும் தொடர்கிறது. மாநாடு முடிவடைவதற்கான கால எல்லை கடந்துவிட்ட நிலையில், சட்ட ரீதியான இலக்குகளை நிர்ணயிக்க முடியுமா என்பதற்கான முட்டுக்கட்டைகளை நீக்க முடியும் என்பதில் சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த இலக்குகளை நிர்ணயிப்பதை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. 2020 அளவில் கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் 40 வீதம் வரை கட்டாயமான வெட்டு வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூறுகின்றன. வறிய நாடுகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக அவற்றுக்கு உதவுவதற்கான கட்டமைப்பு மற்றும் ஒரு புதிய ஒப்பந்த வேலைகளுக்கான நிதி ஆகியவை உட்பட இறுதி ஆவணத்துக்கான பெரும்பாலான எழுத்து வேலைகள் எல்லாம் உடன்பாடு காணப்பட்டு விட்டதாக பாலியில் இருக்கின்ற பிபிசியின் சுற்றுச்சூழல் நிருபர் கூறுகிறார்.
December 13, 2007
பொண்ணுங்க மாறிட்டாங்க!
“ஸோ…நீங்க டவுட் பட்டா நாங்க பேசிறணுமா? மொதல்ல இந்த மாதிரி காலேஜ் காம்பஸ்-குள்ள இன்டீசன்ட்டா நடந்துக்கறத ஸ்டாப் பண்ணு. ப்ளீஸ்.. என்னெ தொந்தரவு பண்ணாத. ஒன்னோட ஃப்ரண்ட்ஸ் சொன்னதுல எந்த டவுட்டும் இல்ல. நான் இன்னொருத்தர லவ் பண்றேன். அவரத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். வீட்ல எல்லாருக்கும் சொல்லிட்டேன். வர்ற செமஸ்டர் முடிஞ்சதும் கல்யாணம். சாரி….ராஜேஷ்! நீ அந்த மாதிரி நெனச்சு இத்தனை நாளா எங்கிட்ட பழகிருந்தா என்னெ மன்னிச்சுரு. எனக்கும் ஒம்மேல அந்த மாதிரி கொஞ்சம் எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனா நான் தனியா திங்க் பண்ணிப் பாத்தப்போ அவருதான் எனக்கு பொருத்தம்னு தோணுது. இனி என்னெப் பாக்காத, பேசாத. எக்ஸ்ட்ரீம்லி சாரி” ஸ்வேதா அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
இதை ராஜேஷ் கொஞ்சங்கூட எதிர்பார்க்காதவனாய் வாய் பேசமுடியாமல் அந்த இடத்தை விட்டு கண் கலங்க நகர்ந்தான்.
“ஏய்!…இதெல்லாம் ஒனக்குத் தேவையாடா? நீ காலேஜ்-ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி என்னடா செய்ய? அவ்வளவு பேருக்குமே நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கணு தெரியுமேடா. இப்ப என்ன செய்யப்போற? போய் தூக்குமாட்டிட்டு சாவுடா. டேய்! இந்த மாதிரி பொண்ணுங்கள நம்பாதடா, பொண்ணுங்க முன்னாடி மாதிரி இல்ல, இப்பல்லாம் ரொம்ப மாறிட்டாளுங்கடான்னேன். கேட்டியா நீ! இப்ப முட்டிகிட்டு சாவுடா”. நண்பர்கள் அனைவரும் வழக்கம்போல் ஒருமையில் அவளையும் சேர்த்துத் திட்டினார்கள்.
“இவளுக்குத்தான் அறிவு இல்ல, அந்த டாபருக்கு புத்தி எங்கடா போச்சு. நீங்க லவ் பண்றது தெரிஞ்சும்... இவளோட சுத்துறான்னா, அவன் சரியான சோமாறிடா. மச்சான் அவன் எந்த ஏரியாடா? அட்லீஸ்ட் எந்தக் காலேஜ்-னாச்சும் யாருக்காவது தெரியுமாடா? மவனே அந்தப் பொறம்போக்கெ தீத்துடுவோம் மச்சான்.
“ஏய்! அதெல்லாம் வேணாண்டா. எனக்காக நீங்க எதாச்சும் செய்யணுன்னா ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்கடா. அவங்கிட்ட என்னோட மேட்டர மட்டும் பக்குவமா சொல்லி, அவள விட்டுறச் சொல்லுங்கடா. அவன் மனசு வச்சா நடக்கும் மச்சான் ப்ளீஸ்” ராஜேஷ் வெட்கத்தை விட்டுச் சொன்னான்.
“தோடா! என்ன காதல் பிச்சையா? இதெல்லாம் வேலைக்கி ஆவாது மச்சான். மவனே! கையக் கால எடுத்துருவோம் எனக்கு ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆள் இருக்குடா” ஒரு மேதாவி சொல்லி முடித்தார்.
ஒரு வழியாக ராஜேஷ்-ஸ்வேதா விசயத்தை அவனிடம் பக்குவமாகச் சொல்ல ஒத்துக்கொண்டார்கள். செமஸ்டர் தொடங்கியது. அனைவருமே படிப்பிலும், தேர்விலும் மும்முரமாக இருந்தனர். ஒரு நாள் கல்லூரி முடிந்து மொத்தமாக வெளியே வந்த ராஜேஷின் நண்பர்கள் அந்தக்காட்சியைக் கண்டு அதிர்ந்து போயினர்.
ஒரு பார்வையற்ற வாலிபனுக்கு உதவுவதற்காக, அந்த வாலிபனின் கையைப்பிடித்துக்கொண்டு, போக்குவரத்து நிறைந்த அந்த சாலையை, ராஜேஷ் கடந்து கொண்டிருந்தான். ஸ்வேதாவோடு அஷ்டலட்சுமி கோவிலில் பார்த்த அந்த வாலிபன் பார்வையற்றவன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.
அடுத்த நாள் கல்லூரி சென்ற ராஜேஷ் தன் நண்பர்கள் யாருமே தன் கண்ணில் படவில்லையென்பதால் அனைவரையும் ஒரு வழியாகத் தேடிக் கண்டுபிடித்தான்.
“மச்சான் என்னெ மன்னிச்சுருங்கடா! ஒங்களயெல்லாம் என்னால மறக்க முடியாதுடா. நீங்க நெனக்கிறமாதிரி எனக்கு ஒங்கமேல கோபம் இல்லடா. ஒரு தப்பான தகவல் ஏன் குடுத்தோம்னு நீங்க ஃபீல் பண்றது எனக்குப் புரியுது மச்சான். ஆனா தப்பு அங்க இல்ல மச்சான், எம்மேலதான்டா. ஸ்வேதா என்னெ முழுசா லவ் பண்ணலடா. அப்படி ஒரு ஃபீலிங் இருந்ததென்னமோ உண்மைதான்டா. ஆனா இப்ப எனக்கு எல்லா மேட்டரும் தெரிஞ்சு போச்சுடா. இனிமே அவளை நான் நெனைச்சுப் பாக்கக்கூட அருகதை இல்லடா. அவ ரொம்ப பெரிய மனசு உள்ளவ மச்சான். நீங்க சொன்ன மாதிரி பொண்ணுங்க ரொம்ப மாறிட்டாங்கடா. முன்னாடி மாதிரியெல்லாம் இல்லேங்கறது நூத்துக்கு நூறு உண்மைடா.
“டேய்! என்னடா புதிர் போடுற? என்னடா ஆச்சு ஒனக்கு? மாறிட்டாங்கங்குற, பெரிய மனசுங்குற.. ம்ம்...என்ன?”
ஆமடா மச்சான்! அவ அந்த ஹீரோவ லவ் பண்றாடா. பார்வை இல்லேன்னு தெரிஞ்சும் எந்தப்பொண்ணுடா லவ் பண்ணுவா? நம்மதான்டா பொண்ணுகள தப்பாவே கணக்குப்போட்டு வச்சுருக்கோம். அவ, அவளோட வாழ்க்கையையே அவனுக்கு குடுக்க நெனைக்கிறப்போ, ஆஃப்டர் ஆல் என்னோட லவ் என்ன மச்சான் பெருசு? அவனுக்கு எதோ ஜாப் சம்மந்தமா எக்ஜாம் எழுதறதுக்கு ஹெல்ப் கேட்டு ஒரு விளம்பரம் வந்திருக்கு. இவ ஹெல்ப் பண்ணிருக்கா. அவனுக்கு அந்த வேலை ஓகே ஆயிடுச்சு. அப்பறம் அவனுக்கு நெறைய எய்ம் இருக்கு மச்சான், ஐஏஎஸ் எழுதணுங்கறான். ப்ரிபேர் பண்ணிகிட்டுருக்கான். இன்னும் என்னென்னமோ சாதிக்கணுங்கறான். இப்படிப்பட்ட பார்வையில்லாத ஒரு இளைஞனோட கனவுகள முழுசா பூர்த்தி செய்ய ஸ்வேதா முழு மூச்சா இறங்கிட்டாடா. பார்வை இல்லாட்டிக்கூட அவனோட தைரியம், லட்சியம், கனவு, இவளோட ஹியூமானிடி இதெல்லாம் பாக்கறப்போ நாமெல்லாம் எங்கேயோ இருக்கோம் மச்சான். காதல் கீதல் எல்லாத்தயும் விட வாழ்க்கையில எதையாவது சாதிக்கணுங்கற ஒரு வைராக்கியந்தான்டா முன்னாடி நிக்கிது. அவனுக்கு நெறைய உதவிகள் செஞ்சுகிட்டுருக்கா மச்சான். அப்படியே அவங்களுக்குள்ள நல்ல ஒரு அன்டர்ஸ்டேன்டிங் ஆகி, அது மேரேஜ் வரைக்கும் போய்டுச்சு… எப்படியோ நல்லாருக்கட்டும் மச்சான். ஷீ இஸ் ரியலி க்ரேட் மச்சான். ராஜேஷால் மேற்கொண்டு பேசமுடியவில்லை.
நண்பர்களின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.
இன்றைய குறள்
நட்பாடல் தேற்றா தவர்
ஜெயலலிதா சொல்கிறார்!
இலங்கைக்கான பிரிட்டனின் தூதரின் கருத்துகளுக்கு இலங்கை அரசு கண்டனம்
இலங்கை அரசின் வெளியுறவுச் செயலர் பாலித கோஹனஇலங்கைக்கான பிரிட்டிஷ் தூதர் டொமினிக் சில்கோட் கடந்த திங்களன்று ஒரு கூட்டத்தில் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு தனது முறையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. விடுதலைப்புலிளின் கோரிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்ட சில்கோட் அவர்கள் , தமிழ்த்தாயகம் என்ற அரசியல் அபிலாஷையே நியாயத்தன்மையற்றது என்று தான் கூறமாட்டேன் என்று கூறியிருந்தார். சில்கோட்டை வெளியுறவு அமைச்சகத்துக்கு அழைத்த இலங்கை ஆட்சியாளர்கள், அவர்களது அதிருப்தியை வெளியிட்டனர். பிரிட்டிஷ் அரசு தனி நாடு ஒன்று உருவாக்கப்படுவதை உறுதியாக நிராகரித்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அரசியல் அபிலாஷைகள் நியாயமான வழிகள் மூலம் தெரிவிக்கப்படவேண்டும் என்ற பொருள்படவே தான் இதைக் கூறியிருந்ததாக சில்கோட் கூறினார்
December 12, 2007
இன்றைய குறள்
திறன்தெரிந்து கூறப் படும்
ஐ.ஐ.எம்- (IIM)மின் ஊழல்
இந்தியாவின் வேலை செய்திறன் பற்றாக்குறை குறித்த சந்திப்பு
December 11, 2007
இன்றைய குறள்
புன்மையாற் காணப் படும்
ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?
பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானியை பா.ஜ.க அறிவித்தது
மின்சார பற்றாக்குறை விவகாரம்: பாமக - திமுக முறுகல்
திமுக-பாமக தலைவர்கள்தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினை, பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரை மட்டுமன்றி, அரசியல் கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி, மின்சாரப் பற்றாக்குறை பிரச்சினையில் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளது. தமிழக மின்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி பகுதியில் தனியார் மின் நிறுவனத்தின் சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையம் தொடர்பாக திமுக – பாமக இடையே சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, ஆர்க்காடு வீராசாமி மற்றும் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
December 10, 2007
இன்றைய குறள்
முன்னின்று பின்னோக்காச் சொல்
