July 22, 2007

"யாழ் சுதாகர்"

"யாழ் சுதாகர்" பெயரில் மட்டுமல்ல இனிமை, கோபுரக் கலசங்களாக இருப்பினும் கீழுள்ள குடிசைகளைத் தன்னோடு கை சேர்த்து மேலிழுக்க முயற்சிக்கும் மனித நேயம், தமிழனுக்கேயுரிய தனித்துவம், எளிமை, கருணை இவையனைத்துக்கும் சொந்தக்காரர்தான் அந்த "யாழ் குரலோன்". இந்த மூக்கொழுகும் மூன்று வயதொத்த மழலையின் மண்கோபுர விளையாட்டான, எனது வலைத்தளைத்தைப் பற்றி, அவர் வாயால் வாழ்த்திய வார்த்தைக்காவியம் இது.

"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையத் தளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துனையிருப்பானாக"


என்னே யான் பேறு! பிறவிப்பலனை அடைந்துவிட்டேன்! நன்றி! அந்த மாமனிதனுக்கும்! பிறகு கடவுளுக்கும்!! அவரின் வலைத்தளத்தை நீங்களும் பிரயாணித்துப் பிரமிப்படையுங்கள். இது என் பாக்கியம்!!
http://www.blogger.com/profile/14507708154159068336

இன்றைய குறள்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்

தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 22 ஞாயிற்றுக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

"மனித உன்னதம், மனித அற்பத்தனம், மனித இனிமை, மனித பொதுத்தன்மை எல்லாம் மகிழ்ச்சியையும், கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறபோது எழுத முடிகிறது"

- பிரபஞ்சன்

"தலைக்குமேலே வெள்ளம் போனா சான் என்ன முழம் என்ன" - பழமொழி, "மெகா சீரியல் டிவி-ல போனா சுனாமி என்ன பூகம்பம் என்ன?" - புதுமொழி

ஒன்றுபட்டுப் போராடினால் சிங்கமென்ன ஜெகத்தையே வெல்லலாம். இந்த வீடியோவைப்பாருங்கள்!