September 03, 2007

இன்றைய குறள்

கூறல் முகத்தான் அமர்ந்தின்து நோக்கி
அகத்தானாம் இன்சொ லினதே

அறம் முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்

அறத்துப்பால் : இனியவை

மனமே! இழிந்தவர்க்கும் கூட இன்னும் பணிவுகாட்டு சாக்கடையிலும் தாழ்ந்து பணிந்தோடிவரும் தண்ணீர்போல...

- கவிப்பேரரசு வைரமுத்து

  • வங்கதேசத்தில் மற்றுமொரு முன்னாள் பிரதமர் கைது : ஊழல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகியவை தொடர்பில் வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்காக அவர் சிறையிலும் வைக்கப்பட்டுள்ளார்
  • அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு திடீர் விஜயம்
    அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் சென்றுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் அவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை
  • பாஸ்ரா நகரின் கட்டுப்பாட்டை இராக்கியர்கள் வசம் அளித்தது பிரிட்டன் : இராக்கின் தெற்குப் பகுதியிலுள்ள பாஸ்ரா நகரின் ஒரு முக்கிய பிரிட்டிஷ் தளத்தின் கட்டுப்பாட்டை இராக்கியத் துருப்புக்கள் ஏற்றுள்ளன
  • பிரான்ஸில் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இணைந்தன
  • மேலும் இன்றைய (செப்டம்பர் 03 திங்கட்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

ஒரு நண்பர் குழுமத்தில் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில்கள்!

1. ஒன்றுக்கும் உதவாதவர்களை என்ன செய்யலாம்?

இந்த உலகத்தில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று யாரும் இல்லை

2. விமர்சகர்கள் என்றால் யார்?

எந்த ஒரு பச்சாதாபமும் இல்லாமல் தன்னைத்தானே எவனொருவன் முதலில் விமர்சித்துக்கொள்கிறானோ அவனே ஒரு உண்மையான விமர்சகன். உதாரணம் : கவியரசு கண்ணதாசன். அவரே சொன்னது : ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழந்திருக்கிறேன். அதனால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு அறுகதை இருக்கிறது.
3. உங்களை சினிமாத் தணிக்கைக்குழு உறுப்பினராக்கினால்?


நான் முதலில் சொன்னதுபோல் ஒரு நல்ல விமர்சனாகவே இருப்பேன். ஆனாலும் திரைத்துறையில் உள்ள கடைநிலை ஊழியர்களின் வயிற்றில் அடிக்க நான் விரும்பவில்லை. காரணம் நிறையை பேர் வேலை இழந்துவிடுவர்.
4. தர்மம் தலை காக்குமா?


கட்டாயம் காக்கும். தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும். நண்பரே! நாமெல்லாம் தமிழர்கள், குறிப்பாக இந்தியர்கள். இந்தக் கேள்வியைத் தயவு செய்து இன்னொரு முறை கேட்காதீர்கள். காரணம் நமது இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் வலியுறுத்துவதே அதைத்தான்.

5. அடுத்தவர் குறைகளையே அலசிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி?
அதில் நீங்கள், நான், யாருமே கவனம் செலுத்தாமல் நமது வேலையைப்பார்ப்போம். அவரும் அவர் வேலையைச் செய்கிறார். செய்துவிட்டுப்போகட்டும். மேற்சொன்ன தருமம் மறுபடி வெல்லும்.

பாலைவனப் பரிதாபங்கள்

இரு தினங்களுக்கு முன் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவர் துபாயிலிருந்து திரும்பி இருந்தார், (அரசின் கருணை மூலம்)-amnesty அம்னெஸ்டி மூலம். தம்பியின் கதை கேட்டு மனதே கனத்தது. என்ன செய்வது ஒரு பக்கம் சாப்ட்வேர் (software) மூலம் நம் இளைஞர்கள் பணத்தில் மிதப்பதும் ஞாபகம் வந்தது.தம்பி பத்தாவது வரை படித்துள்ளார்... வெளிநாட்டு மோகத்தினால் மட்டும் இல்லாமல் தன் குடும்ப நிலையை மாற்றவும் நினைத்து ஒரு பெரும் தொகையை ஏஜென்டுக்கு கொடுத்துவிட்டு விமானம் ஏறியுள்ளார். இறங்கியபின்பு தான் தெரிந்தது, அது ஒட்டக கூடாரம் என்று. துபாய் நகரிலிருந்து வெகு தொலைவில் ஆள் அரவம் இன்றி இருந்ததாம். வேலை புல் தோட்டத்தில் புல் அறுத்து ஒட்டகத்துக்கு இடுவது. தன் ஊரில் வீட்டில் உள்ள மாட்டுக்குக் கூட ஒரு வேளை புல் போடாதவன். புது வாழ்க்கை புல்லே ஆனது கொடுமையாய் இருந்தது. ஏஜென்ட் ஏமாற்றி இருக்கிறான். பொறுத்துக் கொண்டு காசுக்காக பணி செய்தபோது அரபி உரிமையாளர் சம்பளமே கொடுக்காத போது தான் புரிந்ததாம், அரபி நேர்மையான ஆள் அல்ல என்று. மூன்று அல்லது நான்கு சம்பளமே இல்லையாம். பின்பு ஒரு மாதம் சம்பளம் கிடைத்ததாம். இப்படி ஒரு வருடம் தண்டனையைக் கழித்து, ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி துபாய் நகருக்கு சென்றிருக்கிறார்.அங்கே வேறு ஒரு தமிழ் நண்பரின் உதவியுடன் ஒரு கார் ஒர்க்ஷாப்-பில் சேர்ந்திருக்கிறார். இது முறை தவறிய (illegal) பணி தான். என்ன செய்வது... குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், முக்கியமாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியாக வேண்டும். வெளியே தலையே காட்டாமல் இரு வருடங்கள் வேலை செய்திருக்கிறார், கிடைக்கும் பணத்தை தெரிந்தவர்கள் மூலமாக வீட்டுக்கும் அனுப்பி இருக்கிறார். இதனிடையே அரசு, விசிட் விசாவில் வந்து திரும்பாதவர்களுக்கும், வேறு வேலைக்குத் தப்பி ஓடியவர்களுக்கும் கருணை அடிப்படையில் தங்கள் நாடு திரும்பலாம் என அறிவித்தது. அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலமாக திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தது. விமான டிக்கெட் எடுக்க வழியில்லாதவர்களுக்கு இந்திய சேவை அமைப்புகள் உதவி செய்தன. தம்பி இதை அறிந்து இந்திய தூதரகத்தில் அடைக்கலம் ஆகியிருக்கிறார். அங்கு இருந்த அதிகாரிகள் இவர் கதையை கேட்டு உதவி செய்வதாய் ஆறுதல் வார்த்தை கூறியிருக்கின்றனர். புல் தோட்டத்து முதலாளி அரபியிடம் பாஸ்போர்ட் மாட்டிக்கொண்டதால், சிரமப்பட்டு அரசின் ஆதரவினால் தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளார். கடைசியாக, இனி என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டேன். பதிலைக் கேட்டு திடுக்கிடத் தான் முடிந்தது.''தடைக்காலம் (Ban period) முடிந்தவுடன் ஒரு வருடம் கழித்து மீண்டும் துபாய் செல்வேன்''.