September 16, 2007

அம்முவாகிய நான்....பத்மா மகன்

உள் மனதிலிருந்து பகிர்ந்துகொண்ட இவர்களின் குரலிலிருந்து, உழைப்பையும், உணர்வுகளையும் பார்க்க முடிந்தது. நல்ல இயக்குனர்கள் வரிசையில் பத்மா மகன் வருவார் என்பதில் துளியளவும் ஐயமில்லை. அவருடைய இத்தனை வருட உழைப்பு, வலி, அனுபவம் அனைத்தும் அவருடைய வார்த்தைத் தேடலில் தெரிந்தது. காரணம் சினிமாவில் நிரந்தரமாகக் கால் பதிப்பதென்பது எவ்வளவு வலியுடையது என்பதை என்னால் உணரமுடிகிறது. அவருடைய இந்தப்படம் சிறந்த வெற்றியடைவதோடு, உலகம் முழுவதும் பேசப்படவேண்டும் என்று வாழ்த்துவதோடு, இவருக்கு வாய்ப்புக் கொடுத்த திரு.பார்த்திபன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம். இதில் பேசியவர்களின் உணர்வுப்பூர்வமான பகிர்தலின் வாயிலாகவே, இது ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

இன்றைய குறள்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது

அறத்துப்பால் : செய்ந்நன்றியறிதல்

யார் குற்றம்? - நவநீ

"ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், கேன்டீன்ல சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இருமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! முதல்ல பெட் மேல இருக்கற ஒன்னோட மருந்து, மாத்திரை எல்லாத்தயும் எடுத்துவை. ஸ்வரேஷ் எடுத்துச் சாப்ட்டாலும் சாப்டுருவாம்பா" என்றபடியே தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டுச் சமையலறையில் இருந்தவளிடம் விடைபெற்று அவசர அவசரமாகச் சென்றுவிட்டான்.செல்போனை 'வைப்ரேஷன்' மோடில் வைத்திருந்தாலும் தொடர்ந்து யாரோ அழைப்பதை உணர்ந்து எரிச்சலாகிப் போனான் நிதிஷ். சமீபத்தில் இம்போர்டரிடமிருந்து வந்த க்ளைம் பற்றி மேனேஜிங் டைரக்டர் மிகக் காரசாரமாக கான்ஃபரன்ஸ் ரூமில் விவாதித்துக் கொண்டிருந்தார். நிதீஷ், அந்த நிறுவனத்தின் மேலாளர், பொறுப்புள்ள பதவி. அவர் கேள்விகளைச் மாளித்து ஒரு வழியாக வெளியே வந்தவன் செல்போனை எடுத்துப்பார்த்தான். ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, 'காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்' என்று மனதுக்குள் கடிந்துகொண்டே, மெஸேஜைப் படித்தான். குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடம் என்ற செய்தியைப் படித்து இடிந்தே போய்விட்டான் நிதிஷ். யார் குற்றம்? எனது கதையைத் தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க.

"அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்"
- சுவாமி விவேகானந்தர்

  • 'தென்னக பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் மதவாத சக்திகளுக்கு மத்திய அரசு இடம் தரக்கூடாது'- கருணாநிதி : சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்ப்போர், திராவிட இயக்கத்தை வீழ்த்தவே சதி செய்கிறார்கள் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். ஈரோட்டில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமக்குத்தான் பாதகம் என்று உணர்ந்து இலங்கைக்காரர்களின் தூண்டுதலின் பேரிலோ என்னவோ, இதிகாச பாத்திரமான இராமரைப் பயன்படுத்தி, திட்டத்தை தடுத்து நிறுத்த முயலுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார். தென்னக மக்களின் பொருளாதார முன்னேற்றம் வளருவதற்குத் தடையாக இருக்கும் மதவாத சக்திகளுக்கு, மத்திய அரசு இடம்தரக் கூடாது என்று ஒரு தீர்மானமும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது
  • தாய்லாந்து விமான விபத்தில் குறைந்தது 90 பேர் பலி : தாய்லாந்தில் ஒரு விமான விபத்தில் குறைந்தது தொண்ணூறு பேர் பலியாகியுள்ளனர். பிரபல உல்லாசபுரி நகரமான புகெட் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது http://www.bbc.co.uk/tamil/2115.ram
  • இராக்கில் 30 பேர் பலி : இராக்கிய போலீஸார் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடத்திய தாக்குதல்களில் மொத்தமாக, குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்
  • கட்டிடங்களை மோத வரும் விமானங்களைச் சுட்டு வீழ்த்த உத்தரவிடுவேன் என்கிறார் ஜேர்மனிய அமைச்சர் : தீவிரவாதிகளால் பயணிகள் விமானமொன்று கடத்தப்பட்டு, அந்த விமானம் மக்கள் வசிக்கும் கட்டங்களைத் தாக்கப் பயன்படுத்தப்படப் போகிறது என்ற ஒரு நிலைமை ஏற்படுகின்ற பட்சத்ததில் அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்த ஜேர்மனியச் சட்டம் தெளிவாக இடம்தராத போதிலும் அதைச் சுட்டு வீழ்த்துவதற்குத் தான் படைகளுக்கு ஆணையிடுவேன், என்று ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சரான பிராண்ஸ் யோசஃப் யுங் அவர்கள் தெரிவித்துள்ளார்
  • ஆஃப்கானில் பங்களாதேச உதவிப் பணியாளர் கடத்தல் : பங்களாதேச உதவிப் பணியாளர் ஒருவர் ஆஃப்கானிஸ்தானில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்
  • டார்பூர் நெருக்கடியைத் தீர்க்கக் கோரி உலகெங்கும் ஆர்ப்பாட்டம் :
    சுடானின் டார்பூர் பிராந்திய நெருக்கடி நிலையை முன்னிலைப்படுத்தி, உலகின் 30 நாடுகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன