May 20, 2007

"இடி"

இடி, மின்னல் நேரங்களில் மரத்தடியில் அல்லது அருகில் நிற்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?



Lightening Strikes A Tree - The most popular videos are a click away

என் கவிதைக் கிராமம்!

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் அன்று என் கிராமத்துக்குச் சென்றேன், காளையார்கோவிலிலிருந்து 15 கி.மீ. தொலைவில், தென்கிழக்கில் இருக்கும் என் கிராமத்தின் பெயர் சூரகுடி. என் கிராமமே நிராயுதபாணியாக நின்றது. இன்றுபோய் நாளை வா! என்று என்னால் சொல்லமுடியாது! ஏனெனில் அது என் தாய்க்கு இணையான என் கிராமம். எனை வளர்த்த மண்! நான் தவழ்ந்த மடி! நான் அமிலக்கண்ணீர் வடித்தேன்! தன் கருவுக்குள் சுமந்து பிரசவித்த ஒவ்வொரு குழந்தையும் பக்கத்திலில்லாது துடித்துக்கொண்டிருந்தது என் கிராமம்.
நான் உள்பட அனைவருமே வெளியூர் சென்றுவிட்ட வருத்தத்தில் என் கிராமம் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருந்தது. நான் துள்ளித்திரிந்த அந்த ஈரவயல்கள் வெடிப்போடிக்கிடக்கிறது. நான் நீச்சலடித்த என் குளங்கள் கொக்குகள் நிறைந்து கிடக்கின்றன. அந்தி சாயும் நேரத்தில் கேட்ட பறவைகளில் குரல்கள் நிறைந்த அந்த ஆலமரம் எங்கே போயிற்று? கலகலப்பான என் கிராமத்துக்குள் ஏன் இந்த மயான அமைதி? கண்மாய் நிறைந்து காணப்பட்ட என் கிராமம் எப்போதாவது வரும் குழாய்த் தண்ணீருக்குக் காத்துக்கிடக்கிறது.
போர்க்களத்தில் கணவனை இழந்த கற்புக்கரசி தன் கைக்குழந்தையோடு போர்க்களம் நோக்கி புழுதி கிளம்பக் கதறி ஓடும்போது எதிரியின் அம்பால் மாண்டுபோய்க் கைதவறிய குழந்தை செய்வதறியாது அலறித்துடிக்கும் அந்த கொடூரச்சூழல் என் கிராமத்துக்கு ஏன் வந்தது? இதற்கு நானும் ஒரு காரணமா? நிழலும் நிஜமும் மட்டுமே நிறைந்து கிடந்த என் கிராமத்திற்கு, மரங்களே இல்லாமல் உயிரற்று, வறண்டுபோகுமளவிற்கு வந்த துயர்தான் என்ன? என் கிராமத்தின் மொத்த வேதனையும் ஒரு மாமனிதனின் மரணத்தினால்தானா?
என் தாய்க்கும் என் கிராமத்துக்கும் எந்த வித்யாசமும் எனக்குத் தெரியவில்லை. என் கிராமத்தை பார்க்கும்போதெல்லாம் நான் கண்ணீர் வடிக்கிறேன். நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிப்போன ஒரு கிராமம் போல எனக்குத் தோன்றுகிறது. நான் வளர்ந்த அந்த மண், அந்த என் தாய் மடி எதற்காகவோ ஏங்குகிறது! என் மண் என் கண் முன்னே காணாமல் போய்விடுமோ? என்ற பயம் வந்துவிட்டது. நாம் நேசிப்பதற்கு வேண்டாம் அங்கு சுவாசிப்பதற்குக் கூட மனிதர்கள் இல்லை. எப்போதுமே கூட்டம் நிறைந்து கலகலப்பாக கலைகட்டும் என் கிராமம் ஆள் அரவமின்றி அடங்கிப்போனதே! மழை பெய்து ஓய்ந்ததும் தலை காட்டும் காளான்கள் போல் அவ்வப்போது தலை காட்டும் ஒரு சில மனிதர்கள். என் மக்கள்! என்ன ஆயிற்று என் கிராமத்திற்கு? “ஐயோ! புன்னகை புரியும் தமிழ் மண்ணே! உன்னை விட்டுப் பிரிவது ஒன்றுதான் எனக்கு வருத்தம்!” என்று கதறிய அந்த மாவீரன் கட்டப்பொம்மனின் வேதனை இன்றல்லவா எனக்குப் புரிகிறது. மண்ணை நேசிக்கும் எவனும் தன் மண்ணின் அருமையை உணர்கிறானோ இல்லையோ! வெறுமையை உணரவேண்டும்! துள்ளிக்குதித்த என் கிராமம், மாதம் ஒரு குழந்தையைப் பிரசவித்த என் கிராமம் மாபெரும் மனிதர்களை உருவாக்கிய என் கிராமம் இன்று நிற்கதியாய் நிற்கிறது. என் கிராமத்துக்கு எல்லாம் இருக்கிறது ஆனால் உயிர் மட்டும் இல்லை. என் கிராமம் நாளுக்கு நாள் ஒவ்வொரு உறுப்பாய் இழந்து கொண்டிருக்கிறது. என் கிராமத்தின் கிழக்கு எல்லையில் கம்பீரமாய் நிற்கும் ‘மருதநாயகி’ அம்மன் கோயில்கூட செயலிழந்து, வழிபட யாருமின்றி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மக்களன்றி ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வசதிகள் எல்லாம் பெருகி இருக்கிறது. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த வள்ளல் மட்டும் இன்று உயிரோடு இல்லை. அதனால்தான் என் கிராமத்துக்கும் உயிர் இல்லை. வாழ்க்கை நடத்த வாரிசுகள் இல்லை. மேற்கு எல்லையில் ‘வீரபத்திரர்’ கோயில் வெட்ட வெளியில் வெறுங்கையோடு நிரந்தர அமைதியாய் நிற்கிறது. கோயில் இருக்கிறது, கும்பிட மக்கள் இல்லை. உடல் இருக்கிறது என் அழகான கிராமத்திற்கு! ஆனால் உயிர்? எப்போது என்ன திட்டம் வகுத்தாலும் வீண் வம்பு பேசும் மனிதர்கள் போய் இப்போது திட்டமிட மட்டுமில்லை வம்புக்குக்கூட வாய்கள் இல்லை. எத்தனையோ பிள்ளைகளைப் பெற்றெடுத்து இன்று உயிரற்ற ஒரு அஃறிணையாய் காட்சியளிக்கும் என் கிராமத்தை உயர்ப்பிக்க எனக்கு ஆயிரம் கைகள் வேண்டாம். ஒரே ஒரு மாமனிதன் போதும்! அவன் மட்டும் என்னை ஆசீர்வதிக்கட்டும். சமீபத்தில்கூட இரண்டு மூன்று மரணம். ஆனால் அவை தற்கொலைக்குத் தள்ளப்பட்டவை. மரணத்தின் விளிம்பில்கூட கடைசியாகக் கதறிப் புலம்பியது அந்தக் கல்லறையில்தானாம்... ஆம் வேறு யாரிடம் சொல்வது? கேட்பதற்கு எந்தச் செவிகளும் தயாராயில்லை. அந்த ஒரு மனிதனின் மறைவு மட்டும் நிறுத்தப்பட்டிருந்தால் இத்தனை உயிர்களின் மரணத்ததை என் கிராமம் பார்த்திருக்காது. என் கிராமமே இன்று வெறுங்கையோடு வெறிச்சோடிக் கிடக்கிறது. இவையனைத்தையும் பொறுமையோடு பார்த்துக்கொண்டு, சிவப்புக்கொடி பறக்க, அந்த மாமனிதன் அமைதியாகத் உறங்குகிறான். தொண்டால் துயிலிழந்த அந்த தூயவனை இழந்து துடிக்கும் என் கிராமத்தின் துயர் துடைப்பார் யாரோ?
ஆம்!
நான் இழந்தது
என் தந்தையை மட்டுமல்ல!
மகனை இழந்து தவிப்பது
என் கிராமமும்தான்!
விதவையானது
என் தாய் மட்டுமல்ல!
என் கிராமமே! நீயும்தான்!!
சூரகுடி பாலா

May 19, 2007

இன்ப அதிர்ச்சி!

திடீரென்று சுய நினைவு வந்து கண்ணை மட்டும் விழிக்கமுடியாமல் காதால் மட்டும் கேட்டுணரும்போது, தன்னை "இறந்துவிட்டதாகக் கருதி, அனைவரும் பக்கத்தில் உட்கார்ந்து அழுகும் குரல் கேட்டால், இன்னும் சற்று நேரத்தில் தனது உடல் தீயில் வெந்து போகப் போகிறது" என உணரும் தருவாயில் திடீரென விழித்துக்கொண்டால்......அந்த உணர்வு இங்கே.......அழுத்தவும்Dinamalar.com

சுவாமி விவேகானந்தர்

No knowledge comes from outside; it is all inside.
What we say we "know" should-in strict psychological
language-be what we "discover" or "unveil"
What we "learn" is really what we "discover" by taking the
cover off our own soul, which is the mirror of
infinite knowledge.

Karma Yoga. New York, 1895. Complete Works, 1: 28

"சும்மா" ஒரு change'க்கு இதையுந்தான் கொஞ்சம் கேட்டுப்பாப்போமே!!





இயக்குனர் திரு.ஞானராஜசேகரன் அவர்களின் சமீபத்தில் வெளிவந்த "பெரியார்" திரைப்படம் பற்றிய ஒரு கலந்துரையாடல். இது 'BBC' வானொலியில் ஒலிபரப்பப் பட்டது.Please 'click' here.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்-ஐ ஒருத்தர் எப்படி கிண்டல் பண்றாரு பாருங்க!

வினாடிக்கு 4.17 குழந்தைகள்

உலகத்தில் ஒவ்வொரு வினாடிக்கும் 4.17 குழந்தைகள் பிறக்கின்றனர். இறப்பு வினாடிக்கு 1.80 என்றும் அவற்றுள் சராசரியாக பிழைத்து வளரக்கூடிய குழந்தைகள் வினாடிக்கு 2.37...... இது பற்றி மேலும் அறிய கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்
World Population Counter

"சுவாமி விவேகானந்தர்"

  • Women will work out their destinies—much better, too, than men can ever do for them. All the mischief to women has come because men undertook to shape the destiny of women.
  • “The earth is enjoyed by heroes”—this is the unfailing truth. Be a hero. Always say, “I have no fear.”
  • A few heart-whole, sincere, and energetic men and women can do more in a year than a mob in a century.
  • As soon as I think that I am a little body, I want to preserve it, to protect it, to keep it nice, at the expense of other bodies; then you and I become separate.
- சுவாமி விவேகானந்தர்







"Are you a God?" they asked the Buddha.
"No," he replied.
"Are you an angel, then?"
"No."
"A saint?"
"No"
"Then what are you?"
Replied the Buddha,
"I am awake."

May 18, 2007

"Do Not Believe"

Do not believe because you read it in a book,
Do not believe because you saw it on television,
Do not believe because science says so,
Do not believe because a famous person says so,
Do not believe because a wise person says so,
Do not believe because a wise person believes it,
Do not believe because your best friend believes it,
Do not believe because everyone else believes it,
Do not believe because others have believed it for a thousand years,
Do not believe because you've heard it many times before,
Do not believe because you are told you must,
Do not believe because others expect you to,
Do not believe because it gets you accepted
Do not believe because it will make your parents happy,
Do not believe because it will get you noticed,
Do not believe because you want to believe,
Do not believe because you can't afford not to,
Do not believe because it helps you cope,
Do not believe because you'd go mad if you didn't,
Do not believe because you must believe something
Do not believe because there's nothing else to believe,
Do not believe because it feels good to believe,
Do not believe because it makes sense,
Do not believe because your eyes tell you it is so,
Do not believe because it is your own experience,
Do not believe because it feels true,
Do not believe because you know it is true,
Do not believe any of this, Believe only that you are,
And do not even believe that,
For that is beyond belief.
- Peter Russel

May 15, 2007

"நான் மனிதனே!"

நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.
"நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்"
என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.

சுயமரியாதை மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
நான் யார்?

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்குச் சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம் என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்îதாடு கூடி உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. எந்தக் காரியம் எப்படி இருந்தாலும் அரசியலில், பொது வாழ்க்கையில் கண்டிப்பாக மனித தர்மம் தவிர வேறு எந்தக் கால தர்மமோ, சமய தர்மமோ புகுத்தப்படக்கூடாது என்பதுதான் எனது ஆசையே ஒழிய, உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் என் விருப்பம்போல்தான் நடக்க வேண்டும் என்பதல்ல. எனது பொதுவாழ்வில் நான் அறிவு பெற்ற பிறகு, பார்ப்பனரல்ல èதார் ஆட்சி என்றால் வலியப்போய் ஆதரித்தே வந்திருக்கிறேன். இதில் நான் மானம் அவமானம் பார்ப்பதில்லை. நான் என் ஆயுள் வரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு நல்ல (புகழ்) வார்த்தைகள் சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்கமாட்டேன்.
"நீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்?"
என்று என்னைக் கூடக் கேட்டார்கள். "தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.

பெரியார்

1879 - 1973


"கலாநிதி மாறனின் பதவியிறக்கம்"

"தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,
தருமம் மறுபடி வெல்லும்"

பாரம்பரியம் மிக்கத் தமிழகம், தமிழக அரசியல் களம் இன்னும் என்னென்ன கேலிக்கூத்துக்களைச் சந்திக்கப் போகிறதோ!பொறுத்திருந்து பார்ப்போம்!

May 14, 2007

காளையார்கோயில்

இங்குள்ள திருக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கது. நான் பிறந்த மண்ணும் இதுதான். இது சிவகங்கை மாவட்டத்திலுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமரணம் எய்திய மருது சகோதரர்கள் ஆண்ட பூமி இது. 13 மற்றும் 14-ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர், சேக்கிழார், அப்பர், சுந்தரர் மற்றும் அருணகிரிநாதர் போன்றோர் இத்திருத்தலத்திற்கு வந்து ஆண்டவனைப் பாடி அருள் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய, பார்க்கவேண்டிய, படிக்கவேண்டிய ஒரு திருத்தலமாகும். இதுபற்றி மேலும் அறிய தயவுசெய்து கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Dinamalar.com






May 13, 2007

கலைஞர் அவர்களின் முதல் சட்டமன்றப் பேச்சு!

1957 – ல் குளித்தலைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்குக் கலைஞர் 8 – ஆம் மாதம், நான்காம் நாள் கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தனது ‘கன்னி உரையை’ ஆற்றினார்.


“அவைத்தலைவர் அவர்களே! இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை. என்னுடைய கருத்துரையை ஆற்றவே வந்திருக்கிறேன்”


என்பதுதான் அவர் சட்டமன்ற உறுப்பினராகப் பேசிய முதல் வாக்கியம்.

அன்னையே! வாழ்த்துகிறோம்

இந்த உலகத்தில் மனித ஜீவராசிகள் மட்டுமின்றி
எவை எவைகளுக்கெல்லாம்,
யார் யாருக்கெல்லாம்
"தாய்மை"
என்பதை என்னவென்று உணர முடிகிறதோ!
அவர்களுக்கெல்லாம், அவைகளுக்கெல்லாம்
"அன்னையர் தின வாழ்த்துக்களை"ச்சொல்லி
நாம் அனைவரும் அன்போடு கொண்டாடி மகிழ்வோம்.

எனது வேண்டுகோள்!

தயவு செய்து
உங்களனைவருக்கும்
அம்மாவின் பக்கத்தில் இருக்கும்
பாக்கியம் கிடைத்திருந்தால்...


தயவு செய்து இன்று மட்டுமாவது,
அந்த தாயைக் கட்டியணைத்துக்கொண்டு
அவள் காதுகளுக்குள்
அம்மா!
என்று அடிவயிற்றிலிருந்து சொல்லிப்பாருங்கள்....
அந்த உணர்வு சொல்லும்.....
இந்தப்
பிரபஞ்சத்துக்கும், தாய்க்கும், நமக்கும்
என்ன பந்தம் என்று....
முயற்சித்துப்பாருங்கள்!!

அம்மா நான்
உன்னை நினைத்துப்பார்க்கிறேன்.
ஏங்கித்தவிக்கிறேன்...
இன்று, இப்போது
நீ
என் அருகில்
இல்லையே என்று.......
- நவநீ

May 12, 2007




M - O - T - H - E - R
"M" is for the million things she gave me,
"O" means only that she's growing old,
"T" is for the tears she shed to save me,
"H" is for her heart of purest gold;
"E" is for her eyes, with love-light shining,
"R" means right, and right she'll always be,

Put them all together, they spell
"MOTHER,"
A word that means the world to me.




Howard Johnson (c. 1915)

May 11, 2007

கவனிக்கவேண்டியவை

வாகனம் ஓட்டும்பொழுது கவனிக்கவேண்டியவை ஏராளம் இருக்கிறது. ஆனால் நாம் அவற்றைக் கடைப்பிடிக்கிறோமா? குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளவாவது முயற்சிப்போம். இன்று "REAR VIEW MIRROR, SIDE MIRRORS" மற்றும் "BLIND SPOT" பற்றித் தெரிந்துகொள்வோம்.



Driving: Mirrors, Signal And Manoeuvre - video powered by Metacafe

"BLIND SPOT"



Learning To Drive: Blind Spots - video powered by Metacafe

"YIELD" or

"விட்டுக்கொடுத்தல்" அதாவது ஒருவர் அல்லது அளவான நபர்கள் செல்லும் இடங்களில் இன்னொருவருக்கு விட்டுக்கொடுத்தல் என்பது பொதுவான ஒன்று. அது வாகன ஓட்டுதலிலும் உண்டு. இங்கு அமெரிக்காவில் அதனை ஆங்கிலத்தில் 'YIELD' என்று சொல்வார்கள். அநேகமாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். இது தொடக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று குழப்பமாகவும், கோபமாகவும் இருக்கும். போகப்போக பழகிவிடும். ஆனால் நம் இந்தியாவில் இதற்கென்று தனி விதிமுறையோ, அறிவிப்புப் பலகையோ, சிக்னலோ இல்லை. ஆனால் இங்கு வந்த பிறகு மிகத் தெளிவாக ஒன்று புரிகிறது. இவர்களால் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் வாகனம் ஓட்ட முடியாது. குறிப்பாக இவர்கள் இங்கு 'கியர்' இல்லாத 'ஆட்டோ கியர்' வாகனங்கள் ஓட்டுபவர்கள்.
இதையெல்லாம் சொன்னால் "இந்தியன் தாத்தா" "COUNTRY FRUIT" "தேசத்தந்தை" என்று நம் இந்தியர்களே என்னைக் கேலி பேசுகிறார்கள். என்ன செய்ய? சரி அது போகட்டும்... இதனைத் தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவைப் பாருங்கள். அவர்களாகவே 'YIELD' கொடுத்துச் செல்வார்கள், இதனைக் கண்ட அமெரிக்கர்கள் சிலர் கிண்டலாகவும், கேலிக்கூத்தாகவும் படமெடுத்துக் கொண்டுவந்து இங்கு அரங்கேற்றுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த வீடியோ. அமெரிக்காவில் அனைத்துமே சீர்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்..ஆனாலும் அத்துமீறல்கள், அகோர விபத்துக்கள் அதிகமாவே நடந்து கொண்டிருக்கிறது நாம் கண்கூடாக பார்க்கும் விசயம். ஆனால் இந்த வீடியோவில் யாருமே இல்லாமல் தாங்களாகவே விதிமுறைகளை வகுத்துக்கொண்டு, விட்டுக்கொடுத்து விபத்தில்லாமல் செல்வதைப் பார்க்கும் போது சற்று உதறலாக இருந்தாலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மறக்காமல் அடுத்த பதிவையும் பார்க்கவும். ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, மேலும் அது உங்களுக்குத் தெளிவு படுத்தும் என்று நம்புகிறேன்.



கார் மற்றும் வாகனம் ஓட்டுவதென்பது ஒரு கலை. அதுவும் அமெரிக்க நெடுஞ்சாலைகளில் மிகக் கவனமாக ஓட்ட வேண்டும். விபத்துக்கள் அதிகம் நடக்கும், எல்லாமே மிக மோசமான விபத்துக்களாகத்தான் இருக்கும். முக்கியக் காரணம், அதிவேகம், வாகன நெருக்கங்கள் போன்ற பல காரணங்கள். எவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டும் தினந்தோறும் நடப்பவை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் : 1.இங்கு அனைவருமே போக்குவரத்து விதிகளைக் கடுமையாக மதிப்பவர்கள். 2.குறிப்பாக இந்தியர்கள் மிக ஒழுக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3.விதிகளை அதிகம் மீறுபவர்கள் அமெரிக்கர் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள். 4.அதற்கும் முக்கியக் காரணங்கள் மது மற்றும் போதைப்பொருள் உட்கொள்வதுதான், கடுமையான தண்டனைகள், அபராதங்கள், சட்ட விதிமுறைகள் இருந்தும் குறைந்தபாடில்லை.

இதையெல்லாம் நினைக்கும்போது நம் இந்தியா ஆயிரம் மடங்கு சிறந்ததாகத் தோன்றுகிறது என்பது உண்மையே! இவையெல்லாம் ஒரு புறமிருக்க நாம் இந்தியாவில் எப்படி வாகனங்கள் ஓட்டுகிறோம் என்று நினைத்துப்பார்த்தால் தலை சுற்றுகிறது. அங்கு நம் சாலைகளில் ஓட்டும்போழுது எதுவுமே தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து அதை உன்னிப்பாகக் கவனிக்கும்போதுதான் மிக பிரமிப்பாகவும் அதே வேளையில் பயமாகவும் இருக்கிறது.

இங்கு நம் இந்திய நண்பர் டாக்டர் திரு.ஆதிராஜ் என்பவர் இதற்காக ஒரு தனி வளைப்பதிவையே வைத்திருக்கிறார். அவரின் வீடியோப் பதிவின் சிலவற்றை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இது அமெரிக்க வாழ் மக்களுக்கு மட்டுமல்ல, அகில உலக நண்பர்களுக்கும். சரி... இன்று 'ஹெட்லைட்' உபயோகிப்பது தொடர்பான ஒன்று.