July 04, 2007

இன்றைய குறள்

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

இந்தியா 2020

"அப்துல்கலாமின் இந்தியா 2020 ஏதோ அணுகுண்டாலும், ராணுவ பலத்தாலும் அடையப்பட வேண்டிய ஒன்று என்றும் அது ஏழைகளுக்கானது அல்ல என்றும் ஒரு திட்டமிட்ட பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. முதலில் கலாம் சொன்ன இந்தியா 2020 என்பது என்ன என்பதை பார்ப்போம்.

"2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மகக்ளின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும். எழுதப்படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100% ஆக வேண்டும்.இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு 127லில் இருந்து 50க்கு உயரவேண்டும்.ஒவ்வொரு இந்தியனும் ஒரு பல்கலைகழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும்.ஈ கவர்னன்ஸ் திட்டம் மூலம் அரசாங்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் இடையறா மின்சார சப்ளை கிடைக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கழிவறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்திடல் வேண்டும்.பொறுப்பான செயல்திட்டம் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஏழைகளுக்கும் மருத்துவ வசதி மிகக்குறைந்த செலவில் கிடைக்க செய்திடல் வேண்டும்.மேலே சொன்ன மக்கள் நல திட்டங்களை அடைந்தபின் இந்தியா உலக அமைதிக்கும் பாடுபடல் வேண்டும்.

மேலே சொன்ன திட்டங்களை அடைய ஒவ்வொரு இந்தியனும் பாடுபட வேண்டும். இதுவரை அரசு திட்டங்கள் சென்றடையாத ஏழைகளை நாம் சென்று அடைய முயலவேண்டும்.

விவசாயிகளுக்கு நபார்ட் மற்றும் பல வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன்சுமையிலிருந்து மீட்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், அறிவாளிகள், பல்கலைகழகங்கள், தொழிற்சாலைகள் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்து உனவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.இன்சூரன்ஸ் கம்பனிகள் மைக்ரோ கிரெடிட், பயிர் இன்சூரன்ஸ் ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தரவேண்டும்.

கார்ப்பரேட்டுகள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தமது சமுதாய கடமையாக நினைக்கவேண்டும். தொலைதொடர்பு யுகம் என்று நாம் பெருமைகொள்வது உண்மை எனில் இதுவரை அணுகப்படடாத மக்களை நாம் அணுகவேண்டும்"

இதுதான்யா கலாம் சொல்லும் இந்தியா 2020. இதில் என்னய்யா மேட்டுகுடித்தனமும் இந்துத்வமும் இருக்கிறது? தொடர்ந்து இணைப்பில் செல்க..பூங்கா - இணையத் தமிழின் முதல் வலை�

வலதுசாரி இந்துத்துவவாதிகளின் கனவை மெய்ப்பித்த "முஸ்லிம்". அதுவும் எப்படிப்பட்ட முஸ்லீம் - ராமபிரானின் பக்தர். அதை அவரே வெளிப்படுத்திக் கொண்டார். ஆனாலும் இரண்டு வேளை தொழுபவர். காலை எழுந்தவுடன் அவர் படிப்பது "பகவத் கீதை". ஆனாலும் குரான் படித்து தொழுகை செய்யும் முஸ்லீம். இந்துத்துவவாதிகள் ஒரு "இந்திய முஸ்லீம்" இப்படித் தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட நினைத்ததை விட அப்துல் கலாமிடம் அளவுக்கு அதிகமாகவே இந்துத்துவவாத தன்மைகள் காணப்பட்டன.இந்திய முஸ்லீம்கள் இப்படியாக இருந்தால் தான் அவர்களை வலதுசாரி இந்துத்துவவாதிகள் "இந்தியர்களாக" ஒப்புக்கொள்வார்கள். கலாம் அவ்வாறு இருந்ததால் தான் அவர் "200% இந்தியராக" ஒப்புக்கொள்ளப்பட்டார். இந்திய முஸ்லீம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவே 2002ல் அவரை ஆதரித்த ஆர். எஸ்.எஸ், இன்றைக்கும் அவரை ஆதரிக்கிறது.தொடர்ந்து இணைப்பில் செல்க..பூங்கா - இணையத் தமிழின் முதல் வலை�

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part I

இன்றைய சூழலில் இந்தியாவில் IAS அதிகாரிகள் நிலை என்ன? IAS அதிகாரிகளின் முக்கியத்துவம் என்ன? இந்தியப் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் நிலைபாடு மற்றும் எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறார். இது ஒரு உபயோகமான வீடியோப் பதிவு என்பதில் ஐயமில்லை

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part II

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part III

July 03, 2007

திருமதி.சபீதா IAS நேர்முகம் Part IV


தமிழோசை

இன்றைய "BBC" (ஜுலை 03 செவ்வாய்க்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

இன்றைய குறள்

அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

'கல்யாணம் ஆகாமல் செத்து மடிந்தாலும் மடிவேனே யல்லாது, வரதட்சிணை கொடுக்க மாட்டேன்' என்று ஒவ்வொரு பெண்ணும் சொல்ல முன்வரவேன்டும்

- மகாத்மா காந்தி

மனிதனால் முடியாத ஏதாவதொன்று இருக்கிறதா? இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லையென நினைக்கிறேன்.

வாழ்க்கையின் உச்சத்துக்குச் செல்ல வேண்டுமெனில் எதையாவது மனிதன் சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். இவர் பெயர் ஜிம் ஸ்பிக்லெர், உலகத்திலேயே மிக உயரமான மரத்தில் ஏறி அதன் உயரத்தைக் கணக்கிட்டுச் சாதனை படைத்திருக்கிறார். மரத்தின் உயரம் 115.55 மீட்டர் உயரம். இது ஒட்டாவா சமாதானக் கோபுரத்தின் உயரத்தைவிட 23 மீட்டர் அதிகம். சாதனைக்கு எல்லை ஏது?

மேட் மெக் அலிஸ்டர் 155 T - சர்ட்டுகளை நான்கு மணிநேரத்தில் தொடர்ந்து அணிவித்துக் கின்னஸ் சாதனை படைத்த வீடியோ

July 02, 2007

அவன் அன்று
நட்ட மரங்கள்
நிமிர்ந்து விட்டன
இவன் நடும்போது
குனிந்தவன்தான்,
இன்னும் நிமிரவே இல்லை...

எங்கள் அரசியல்வாதிகளின் அகராதியில் இல்லாத ஒரு வார்த்தை 'பந்தா'. இதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்லமுடியும். அந்தஸ்தில் ஒரு இந்திய அரசியல்வாதி இருந்தால் அவர் இருக்கும் பகுதிப் பக்கம் கூட என்னைப் போன்ற ஒருவர் போக முடியுமா என்பது சந்தேகம்.

மலேசிய எழுத்தாளர் வீ.செல்வராஜ் அவர்களின் நேர்முகம் Please visit the link Interview with V Selvaraj

மலேசியத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்

மலேசியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறைக் கொட்டடியில் வாடும் செய்தி மனதைப் பதைக்க வைக்கிறது. சொந்த நாட்டில் பிழைக்க வழியின்றி, வருமானமின்றி, செய்வதறியாது, இருப்பவற்றை எல்லாம் அடகு வைத்தும் விற்றும், யார் யாரையோ நம்பிப் பிழைப்புத் தேடி அன்றாடம் பலரும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல கனவுகளோடும், எதிர்கால நம்பிக்கையோடும் அங்கு சென்று, இன்று சரியான ஆவணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எவரும், பெரிய படிப்புப் படித்து, பெரிய வேலைகளுக்குச் சென்றவர்கள் அல்லர். பெரும்பாலானோர் உடல் உழைப்பை உறிஞ்சும் வேலைகள் செய்யவே அங்கு சென்றனர். தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. Thenseide - HOME

பழ. நெடுமாறன் உரை

ஒரே ஒரு கைத்துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், அந்த ஒரு துப்பாக்கியும், அருமைத் தம்பி பிரபாகரனின் நெருங்கிய தோழன் பண்டிதர். பண்டிதரின் தாயார் ஒரே ஓரு பசுமாட்டை வைத்து பால் கறந்து விற்று குடும்பத்தை காத்து வந்த நிலையில், அந்த பசுமாட்டை தன் தாயாருக்கு தெரியாமல் பண்டிதர் ஓட்டிச் சென்று விற்று, அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய ஒரே ஒரு துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இன்று மரபு வழி இராணுவமாக வளர்ந்து, சிங்கள கடற்படையை ஓட ஓட விரட்டியடிக்கும் கடற் புலிப்படையை தன்னகத்தேக் கொண்டு, இன்று வரன் புலிகளையும் பறக்க விடும் அளவிற்கு முப்படைகளோடு வளர்ந்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றோம் என்று ஒவ்வொரு உலகத் தமிழனும் பெருமைப்பட வேண்டும். இலண்டன் அய்பிசி தமிழ் வானொலி சேவையின் ஆண்டு விழாவில் பழ. நெடுமாறன் உரை தொடர்ந்து படிக்க இணைப்பிற்குச் செல்க. மேலும் ஒலிப்பதிவில் இடையிடையில் தடங்கல் இருக்கும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன். மன்னிக்கவும்.Thenseide - HOME

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல் சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை நடத்துவதை விட, ஆண்டான் அடிமையை நடத்துவதை விட மோசமானதாகும்.
அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம் தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள். ஆனால் ஆண்களோ பெண்களைப் பிறவி முதல் சாவுவரை அடிமையாகவும், கொடுமையாகவும் நடத்துகிறார்கள்.

- பெரியார்

தமிழோசை

அமெரிக்க அணு ஆயுதக் கப்பலை அனுமதித்ததால் ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல் கட்சிகள் பற்றிய சென்னை செய்திகள் மற்றும் இன்றைய "BBC" (ஜுலை 02 திங்கட்கிழமை), செய்திகள் கேட்க இணைப்பைத் தொடரவும் BBCTamil.com Radio Player

நாலடியார்

1. அறத்துப்பால்

1.4 அறன் வலியுறுத்தல்

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

நாட்கள் வருவதையும் போவதையும் கண்டு, அதை உணராமல் எப்போதும் இப்படியே வந்துபோகும் என்று சந்தோசமாக இருப்பவர், தன் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்து போனது என்பதை அறிந்து உணராதவர்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Although they daily see the passing away of days, yet they think not of it, and daily rejoice over the present day, as if it would last for ever, for they do not consider the past day to be one day added to the portion of their life that has expired.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?


அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்