August 31, 2007
குடும்பப் பின்னனியால் இல்லாமல் திறமையை மட்டுமே நம்பி வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடிகர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
August 30, 2007
இன்றைய குறள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 90 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:50 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- காணமல்போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து தவிப்பு
போர் மற்றும் பல்வேறு கரணங்களினால் காணாமல் போனவர்களை நினைவு கூறும் வகையில் சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இவ் வேளையில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களினால் இது வரை காணாமல் போனதாகக் கூறப்படும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை உறவினர்கள் நினைவு கூறுகின்றார்கள் - பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும், தற்போது நாடுகடந்து லண்டனில் வாழும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுக்கும் இடையில், அந்நாட்டின் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக, பெனாசிர் புட்டோ பிபிசியிடம் தெரிவித்தார்.
- அணு ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கருத்து வேறுபாடுகளை களைய குழு அமைக்க முடிவு : இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காணும் முயற்சியாக ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
- இன்றைய (ஆகஸ்ட் 30 வியாழக்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:45 PM
0
comments (நெற்றிக்கண்)
நெஞ்சு பொறுக்குதில்லையே!
அதிகாலையில்
ஆனால், இன்றைய சமுதாயத்தில் தாய்மார்களின் நிலை, கேள்விக்குறியாகி வருகிறது. பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்று சொல்வதற்கேற்ப, முதியோர் இல்லங்களில், பெற்றோரை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. கோவை நகரில் அங்கொங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த முதியோர் இல்லங்கள், இன்று புற்றீசல் போல பல இடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் கோவை நகரில் மட்டும் 60 முதியோர் இல்லங்கள் துவக்கப்பட்டுள்ளன. பொத்தி, பொத்தி பாதுகாக்க வேண்டிய பெற்றோரை, இன்றைய இளைஞர்களில் சிலர், நெஞ்சிரக்கமின்றி தனியார் காப்பகங்களில் விட்டுவிட்டு, தங்களது பொறு ப்பை தட்டிக் கழிக்கின்றனர்.அவர்களும், உற்றார் உறவினர் இல்லாமல், பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ முடியாமல், கண்ணீரோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். "என்னோட பிள்ளை கலெக்டராகணும்; கமிஷனராகணும்; டாக்டராகணும்' என பலவிதமான கனவுகளோடு வியர்வை சிந்தித்து சம்பாதித்து ஒவ்வொரு காசையும், தனது குழந்தையின் கல்விக்காக கொட்டுகின்றனர் பெற்றோர். ஆனால், மெத்த படித்ததும் வெளிநாட்டு கனவில் மிதக்கின்றனர். வேலை கிடைத்ததும், பெற்றோர் ஒதுக்கித்தள்ள "துணிந்து' முடிவெடுத்து விடுகின்றனர்.
"வெளிநாட்டில் அதிகம் குளிர் இருக்கும்; உன்னோட உடம்பு தாங்காது; முதியோர் இல்லத்தில், கொஞ்சள் நாள் இருங்கள்; திரும்பி வந்து உங்களை கூட்டிச் செல்கிறேன்' இதுவே, பெற்றோருக்கு, அக்குழந்தைகள் சொல்லும் கடைசி வார்த்தைகள். அதன்பின், பாசத்துக்கு பதில், பணம் தான் வரும், பராமரிப்பு செலவுக்காக. முதியோர் இல்லங்களை பராமரித்து வருபவர்களிடம் விசாரித்தபோது, "பெற்ற குழந்தைகளை காட்டிலும், பேரன், பேத்திகளே, தாத்தா, பாட்டிகளை அதிகம் வெறுக்க துவங்குகின்றனர். அக்காலத்தில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு முதியோர்களிடம் இருந்தது. இப்போது, இரண்டு வயதானதும், அருகிலுள்ள காப்பகத்தில் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச் செல்கின்றனர். இதனால், தாத்தா, பாட்டிகளின் அருமை தெரியாமல், இக்குழந்தைகள் வளர்கின்றன.
"வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் கூறும் அறிவுரையால் எரிச்சல் அடைகின்றனர்; வயதான காலத்தில் அவர்கள் இருமுவது கூட சிறிய குழந்தைகளுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. தங்களது குழந்தைகளுக்காக, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பதும் அதிகரித்து வருகிறது' என்கின்றனர் காப்பக நிர்வாகிகள்.
மாமியார் மருமகள் இடையே ஏற்படும் பிரச்னை, வயதாகும்போது வரும் உடல் நலக்குறைவு, பேரன், பேத்திகளால் ஓரம் கட்டப்படுவது என பல்வேறு காரணங்களால்,கோவையில் சமீபகாலமாக முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. முதியோர் உதவித்தொகையாக, மாதம் ரூ.400 கருணை தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், இத்தொகை தனியார் காப்பகங்களில் வசிக்கும் முதியோருக்கு கிடைப்பதில்லை.
"ஜப்பான் நாட்டில் மொத்த வருவாயில் 30 சதவீதம், அந்நாட்டின் முதியோர்களுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதம் கூட சீனியர் சிட்டிசன்களுக்கு செலவு செய்யப்படவில்லை' என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் 2055ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பர். அப்போது, "முதியோரை பராமரிப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குமுன், நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் அரசுடமையாக்க வேண்டும்; மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பெற்றோரை கடைசி காலத்தில் கவனிக்க, பிள்ளைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். இருப்பினும், தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொரு மகனும், மகளும், தங்களது மனசாட்சியிடம் "எனக்கும் வயதாகுமோ' என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுப் பாருங்கள்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:23 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:18 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
காமராஜரைப் பயன்படுத்தும் அரசியல் கட்சி - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:14 AM
0
comments (நெற்றிக்கண்)
ஜாதி அரசியல் - 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:13 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இந்தியத்தேர்தல் - 4
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:11 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
August 29, 2007
சாதனையாளர்கள் செய்வதை வித்தியாசமாகத்தான் செய்வார்கள்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:40 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
உடைமையுள் இன்மை விருந்தோமபல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 89 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:15 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் காலாரா நோய் காரணமாக நுறு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- பாக்தாத் தங்கும் விடுதியில் வைத்து எட்டு இரானியர்களை தவறுதலாக தாங்கள் கைது செய்ததை, இராக்கிலிருக்கும் அமெரிக்க கட்டளைத் தளபதிகள் ஒப்புக் கொண்டிருப்பதுடன், இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்றும் தெரிவித்துள்ளனர்.
- அப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளால், கடந்த ஆறு வாரங்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 19 தென் கொரியர்களில், 12 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- இராக்கிய ஷியாக் குழு தனது இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது
- இன்றைய (ஆகஸ்ட் 29 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:07 PM
0
comments (நெற்றிக்கண்)
August 28, 2007
லட்சுமண ஐயர்
இடுங்கிய கண்களில் எப்போதும் வழியும் கருணை... வார்த்தைகளில் அன்பின் கதகதப்பு... தொண்ணூறு வயதிலும் துவளாத கம்பீரம், வாழ்க்கை முழுதும் தீராத தியாகம்... இதுதான் லட்சுமண ஐயர்! கோபிச்செட்டிப்பாளயத்தில் இறங்கி, ‘‘ஐயர் வீடு எங்கே இருக்கு?’’ என்று யாரைக்கேட்டாலும், அந்தப் பழைய பிரமாண்டமான வீட்டின் முன் அழைத்துப் போய் நிறுத்கிறார்கள். பழைமையின் அழகில் மிளிரும் அந்த விசாலமான இல்லத்தில், தன் கடைசி மகனுடன் வசித்து வருகிறார் லட்சுமண ஐயர். ‘‘நம்மகிட்டே எதுக்குங்க பேட்டியெல்லாம்... காந்தியடிகளின் எளிமைக்கும் தியாகத்துக்கும் முன்னால நான் செய்கிற காரியங்களெல்லாம் ஒண்ணுமேயில்ல தம்பி..!’’ அடக்கமாக அவர் சிரிப்பதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கிறது. ‘‘எங்க அப்பா காங்கிரஸ்காரரு. ‘சுதந்திரப் போராட்டத்துக்கு நிறைய இளஞர்கள் தேவப்படுது. நாட்டுக்காகப் பாடுபடுடா’ன்னு பத்து வயசிலேயே என்னை விடுதலைப் போர்ல கலந்துக்க அனுப்பினார். 1933-ம் வருஷம் நடந்த முதல் சட்டசபைத் தேர்தல்ல, ராஜாஜி கட்சியில நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆனாக அப்பா! அப்ப, இந்தப் பகுதிகள்ல கூட்டங்களுக்கு வரும் தலவர்கள் நம்ம வீட்டுக்கும் வருவாக. நேரு, நேதாஜி, வினோபாஜி, ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர், பெரியார், பக்தவசலம்னு எல்லா அரசியல் தலைவர்களும் இந்த வீட்டுக்கு வந்திருக்காக. அவங்ககூட அரசியல் கூட்டங்களுக்கு நானும் போவேன். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துக்கிட்டதுக்காக என்னைக் கைது செய்து, வேலூர் சிறையில அடச்சாக. என் மனவி, மாமனார், மாமியார் எல்லாரும் ஜெயிலுக்குப் போயிட்டாக. வெளியில் வந்ததும், வார்தா போய்க் காந்தியடிகளைப் பார்த்தேன். ‘சுதந்திரத்துக்காகப் போராட நிறையப் ஆட்கள் இருக்காங்க. ஹரிஜனங்களுக்காக வேல செய்யத்தான் ஆள் இல்ல. நீங்க அவங்களுக்காகப் பாடுபடுங்க’ன்னு காந்திசொன்னார். அதன்படியே கோபிச்செட்டிப்பாளையம் திரும்பினதும், ஹரிஜன மக்களை அழைச்சுட்டுப் போய்ப் பொதுக்கிணற்றுல தண்ணீர் எடுத்தோம். மேல்சாதியச் சேர்ந்தவக எங்களத் தடுத்தாக. நான் நீதிமன்றம் போனேன். ரொம்ப நாள் வழக்கு நடந்தது. ‘‘தண்ணீர் விட்டோ
வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரைக்இ கண்ணீராற் காத்தோம்;
கருகத் திருவுளமோ!’’
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : விகடன்
இன்றைய குறள்
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:17 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 88 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:16 PM
0
comments (நெற்றிக்கண்)
குளவி கொட்டி பலர் மருத்துவமனையில் அனுமதி
- இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்பிரசித்திபெற்ற புராதன சின்னங்களில் ஒன்றான சிகிரியா மலைச் சுவரோவியங்களைக் காணச்சென்ற உல்லாசப்பயணிகள்மீது அங்குள்ள குளவிக் கூட்டமொன்று நடத்திய தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்திருக்கின்றனர்.
- அனைவருக்கும் அறிவியல் : அல்சைமர் எனப்படும் மூளை அழுகல் நோய் தொடர்பில் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் சாதகமான சில முடிவுகளை தந்திருக்கின்றன.
- மதச் சார்பற்ற நாடான துருக்கியின் அதிபராக, இஸ்லாமியப் பின்னணி கொண்ட அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் பதவியேற்றுள்ளார்.
- அணு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசுக்கு காலக் கெடு விதிக்கப்போவதில்லை : சி பி ஐ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று புதுடெல்லியில் துவங்கியது. இந்தியா- அமெரி்ககா இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
- ஆப்கனில் கஞ்சா பயிரிடுவது அதிகரிப்பு : ஹெராயின் போதைப் பொருட்களை தயாரிக்க உதவும் கஞ்சா செடிகள் பயிரிடப்படும் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக, ஆப்கானிஸ்தானின் போதைப் பொருள் தயாரிப்பு குறித்த ஐக்கிய நாடுகளின் வருடாந்திர ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்றைய (ஆகஸ்ட் 28 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:06 PM
0
comments (நெற்றிக்கண்)


