August 31, 2007
இந்தியப் பொருளாதரம் தொடர்ந்து வளர்ச்சி
- இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் வளர்ந்து வருகிறது. அரசு கணக்கீடுகளின்படி கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஒன்பது சதவீதமாக இருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் கடந்த ஆண்டில்தான் இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வேகமாக ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி வளர்ந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் சரியாக 9.3 சதவீதம் வளர்ந்தாலும் அது அரசை கவலையில் ஆழ்த்தக் கூடும் என பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது குறித்து அரசு கவலை கொண்டுள்ளது எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியா ஏழு சதவீதம் வளர்ந்து வருகிறது என்பதும் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. - பத்தாண்டுகளுக்கு முன் மறைந்த டயானாவுக்கு மக்கள் அஞ்சலி:
பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த வேல்ஸ் இளவரசி டயானா
வை நினைவு கூறும் முகமாக இன்று மத்திய லண்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது - மத்திய கிழக்கின் காசா நிலப்பரப்பில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான போரட்டங்கள், வன்முறையில் முடிந்திருக்கின்றன.
- இராக்கின் ஆயுத குழுக்கள் தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டும் என்று, இராக் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது
- மேலும் இன்றைய (ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:54 PM
0
comments (நெற்றிக்கண்)
பின்னனிப் பாடகர் சங்கீதா - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:17 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
பின்னனிப் பாடகர் சங்கீதா - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
குடும்பப் பின்னனியால் இல்லாமல் திறமையை மட்டுமே நம்பி வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடிகர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
August 30, 2007
இன்றைய குறள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 90 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:50 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- காணமல்போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து தவிப்பு
போர் மற்றும் பல்வேறு கரணங்களினால் காணாமல் போனவர்களை நினைவு கூறும் வகையில் சர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இவ் வேளையில் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களினால் இது வரை காணாமல் போனதாகக் கூறப்படும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை உறவினர்கள் நினைவு கூறுகின்றார்கள் - பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும், தற்போது நாடுகடந்து லண்டனில் வாழும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுக்கும் இடையில், அந்நாட்டின் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தம் குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக, பெனாசிர் புட்டோ பிபிசியிடம் தெரிவித்தார்.
- அணு ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கருத்து வேறுபாடுகளை களைய குழு அமைக்க முடிவு : இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காணும் முயற்சியாக ஒரு குழுவை அமைக்க முடிவு செய்யப் பட்டிருக்கிறது.
- இன்றைய (ஆகஸ்ட் 30 வியாழக்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:45 PM
0
comments (நெற்றிக்கண்)
நெஞ்சு பொறுக்குதில்லையே!
அதிகாலையில்
ஆனால், இன்றைய சமுதாயத்தில் தாய்மார்களின் நிலை, கேள்விக்குறியாகி வருகிறது. பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்று சொல்வதற்கேற்ப, முதியோர் இல்லங்களில், பெற்றோரை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. கோவை நகரில் அங்கொங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த முதியோர் இல்லங்கள், இன்று புற்றீசல் போல பல இடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் கோவை நகரில் மட்டும் 60 முதியோர் இல்லங்கள் துவக்கப்பட்டுள்ளன. பொத்தி, பொத்தி பாதுகாக்க வேண்டிய பெற்றோரை, இன்றைய இளைஞர்களில் சிலர், நெஞ்சிரக்கமின்றி தனியார் காப்பகங்களில் விட்டுவிட்டு, தங்களது பொறு ப்பை தட்டிக் கழிக்கின்றனர்.அவர்களும், உற்றார் உறவினர் இல்லாமல், பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ முடியாமல், கண்ணீரோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். "என்னோட பிள்ளை கலெக்டராகணும்; கமிஷனராகணும்; டாக்டராகணும்' என பலவிதமான கனவுகளோடு வியர்வை சிந்தித்து சம்பாதித்து ஒவ்வொரு காசையும், தனது குழந்தையின் கல்விக்காக கொட்டுகின்றனர் பெற்றோர். ஆனால், மெத்த படித்ததும் வெளிநாட்டு கனவில் மிதக்கின்றனர். வேலை கிடைத்ததும், பெற்றோர் ஒதுக்கித்தள்ள "துணிந்து' முடிவெடுத்து விடுகின்றனர்.
"வெளிநாட்டில் அதிகம் குளிர் இருக்கும்; உன்னோட உடம்பு தாங்காது; முதியோர் இல்லத்தில், கொஞ்சள் நாள் இருங்கள்; திரும்பி வந்து உங்களை கூட்டிச் செல்கிறேன்' இதுவே, பெற்றோருக்கு, அக்குழந்தைகள் சொல்லும் கடைசி வார்த்தைகள். அதன்பின், பாசத்துக்கு பதில், பணம் தான் வரும், பராமரிப்பு செலவுக்காக. முதியோர் இல்லங்களை பராமரித்து வருபவர்களிடம் விசாரித்தபோது, "பெற்ற குழந்தைகளை காட்டிலும், பேரன், பேத்திகளே, தாத்தா, பாட்டிகளை அதிகம் வெறுக்க துவங்குகின்றனர். அக்காலத்தில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு முதியோர்களிடம் இருந்தது. இப்போது, இரண்டு வயதானதும், அருகிலுள்ள காப்பகத்தில் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச் செல்கின்றனர். இதனால், தாத்தா, பாட்டிகளின் அருமை தெரியாமல், இக்குழந்தைகள் வளர்கின்றன.
"வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் கூறும் அறிவுரையால் எரிச்சல் அடைகின்றனர்; வயதான காலத்தில் அவர்கள் இருமுவது கூட சிறிய குழந்தைகளுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. தங்களது குழந்தைகளுக்காக, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பதும் அதிகரித்து வருகிறது' என்கின்றனர் காப்பக நிர்வாகிகள்.
மாமியார் மருமகள் இடையே ஏற்படும் பிரச்னை, வயதாகும்போது வரும் உடல் நலக்குறைவு, பேரன், பேத்திகளால் ஓரம் கட்டப்படுவது என பல்வேறு காரணங்களால்,கோவையில் சமீபகாலமாக முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. முதியோர் உதவித்தொகையாக, மாதம் ரூ.400 கருணை தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், இத்தொகை தனியார் காப்பகங்களில் வசிக்கும் முதியோருக்கு கிடைப்பதில்லை.
"ஜப்பான் நாட்டில் மொத்த வருவாயில் 30 சதவீதம், அந்நாட்டின் முதியோர்களுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதம் கூட சீனியர் சிட்டிசன்களுக்கு செலவு செய்யப்படவில்லை' என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் 2055ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பர். அப்போது, "முதியோரை பராமரிப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குமுன், நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் அரசுடமையாக்க வேண்டும்; மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பெற்றோரை கடைசி காலத்தில் கவனிக்க, பிள்ளைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். இருப்பினும், தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொரு மகனும், மகளும், தங்களது மனசாட்சியிடம் "எனக்கும் வயதாகுமோ' என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுப் பாருங்கள்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:23 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:18 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
காமராஜரைப் பயன்படுத்தும் அரசியல் கட்சி - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:14 AM
0
comments (நெற்றிக்கண்)
ஜாதி அரசியல் - 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:13 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இந்தியத்தேர்தல் - 4
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:11 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
August 29, 2007
சாதனையாளர்கள் செய்வதை வித்தியாசமாகத்தான் செய்வார்கள்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:40 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
உடைமையுள் இன்மை விருந்தோமபல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 89 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:15 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் காலாரா நோய் காரணமாக நுறு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- பாக்தாத் தங்கும் விடுதியில் வைத்து எட்டு இரானியர்களை தவறுதலாக தாங்கள் கைது செய்ததை, இராக்கிலிருக்கும் அமெரிக்க கட்டளைத் தளபதிகள் ஒப்புக் கொண்டிருப்பதுடன், இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்றும் தெரிவித்துள்ளனர்.
- அப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளால், கடந்த ஆறு வாரங்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்த 19 தென் கொரியர்களில், 12 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- இராக்கிய ஷியாக் குழு தனது இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது
- இன்றைய (ஆகஸ்ட் 29 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:07 PM
0
comments (நெற்றிக்கண்)


