September 27, 2007
- இலங்கையில் இரண்டு வயது பெண்குழந்தையை விற்க முற்பட்ட தகப்பன் கைது : இலங்கையின் வடமத்திய மாகாணமான தம்புள்ளயில் தனது இரண்டு வயதுப் பெண்குழந்தையை வாராந்தப் பொதுச் சந்தையொன்றில் விற்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்
- உலக உல்லாசப் பயண தினம் இம்முறை இலங்கையில் கொண்டாடப்படுகிறது : இன்று உலக உல்லாசப்பயண தினமாகும். இதனையொட்டி 150 நாடுகளை அங்கத்தவர்களாகக்கொண்ட உலக உல்லாசப் பயண அமைப்பு தனது இவ்வருடக் கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்காக, அண்மைக் காலங்களில் உல்லாசப் பயணத்துறையில் மிகவும் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இலங்கையைத் தெரிவுசெய்திருக்கிறது
- பாகிஸ்தானின் அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன : பாகிஸ்தானில் மேலும் 5 வருடங்களுக்கு அதிபராகத் தொடர்வதற்கான, மறு தேர்தலுக்காக, அதிபர் முஷாரஃப் அவர்கள், தனது வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்துள்ளார்.
மேலும் பல எதிர்க்கட்சி வேட்பாளர்களும், இன்று வியாழக்கிழமை காலை தமது மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதேவேளை, இராணுவத் தளபதியாக செயற்படும் சமகாலத்தில், அதிபராகவும் முஷாரஃப் அவர்கள் தொடர முடியாது என்று வாதிடும் எதிர்த்தரப்பினரால், தாக்கல் செய்யப்பட்ட, முஷாரஃப் அவர்களின் வேட்பாளருக்கான தகைமையைக் கேள்விக்குள்ளாக்கும் பல மனுக்கள் குறித்து, பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருகின்றது. - இலங்கை மோதல்களில் 19 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கை இராணுவத்தினர்இலஙகையின் வடக்கே இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள், கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் இன்று மாத்திரம் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
- பர்மாவில் தொடரும் போராட்டத்தில் ஒரே நாளில் குறைந்தது ஒன்பது பேர் பலி : பர்மாவின் பிரதான நகரான ரங்கூனில் மற்றுமொரு நாளாக நடந்த மோதல்களில் ஒன்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், பதினோரு பேர் காயமடைந்ததாகவும், பர்மிய அரசு கூறுகிறது
- பர்மாவில் போராட்டங்களை நடத்துபவர்கள் மீது வன்செயல்களை பிரயோகிக்கக் கூடாது என்று அமெரிக்க வலியுறித்தியுள்ளது : பர்மாவில், அமைதியான போராட்டங்களை நடத்துபவர்களுக்கு எதிராக வன்செயல்கள் மேற்கொள்ளப்படுவதாக விபரித்துள்ள அமெரிக்கா, அவை நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது
- பால்கன் போரில் முன்னாள் யூகோஸ்லாவியாவின் இரு இராணுவ அதிகாரிகள் குற்றவாளிகள் என அறிவிப்பு : பால்கன் போரின் ஆரம்பத்தில், 1991 ஆம் ஆண்டில், குரோசியாவின், வுகோவார் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பில், யூகோஸ்லாவியாவின், இரண்டு இராணுவ அதிகாரிகளை, த ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச தீர்ப்பாயம், குற்றவாளிகளாகக் கண்டுள்ளது
- விண்வெளியில் நாசாவின் புதிய ஓடம் செலுத்தப்பட்டது : செவ்வாய் கிரகமும், வியாழன் கிரகமும் சுற்றிவரும் பாதைகளுக்கு இடையே இருக்கின்ற பகுதியில் உள்ள விண்கற்களின் தொகுதிக்கு முதற்தடவையாக விஜயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படும், ஒரு விண் ஓடத்தை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஏவியுள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:11 PM
0
comments (நெற்றிக்கண்)
September 26, 2007
தென்கச்சி கோ.சுவாமிநாதன்
வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் இலட்சக்கணக்கானவர்கள் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்தோம். அவரது நேர்காணல் இங்கே.தென்கச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?
தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரத்துச் சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். காஞ்சி பல்லவ மன்னனின் படைவீரர்களின் ஒரு பகுதியினர் குடியேறி உருவான ஊர் இது என்று எங்கள் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பழங்கால கத்திகள் கேடயங்கள் இப்போதும் எங்கள் வீடுகளில் உண்டு.
தென்கச்சி கோ.சுவாமிநாதனைப் பற்றிச் சொல்லுங்கள்?
எங்கள் பகுதியில் சுவாமிநாதன்கள் நிறையபேர் உண்டு. சுவாமிமலை பக்கத்தில் இருப்பது ஒரு காரணம். கும்பகோணத்தில் படிக்கிறபோது ஒரே வகுப்பில் நிறைய சுவாமிநாதன்கள் இருந்தோம். அடையாளம் தெரிவதற்காக வகுப்பு ஆசிரியர் ஊர்ப் பெயரையும் சேர்த்துவிட்டார்.
'இன்று ஒரு தகவல்' - என்ற சிந்தனை எப்படி வந்தது?
இந்த சிந்தனை எனக்கு வரவில்லை. சென்னை வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம் அவர்களுக்கு வந்தது.
இதுவரைக்கும் எத்தனை இன்றுகளைக் கடந்திருக்கிறீர்கள்?
இதுவரைக்கு 11 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன்.
மறக்க முடியாத இன்று எது?
இன்று ஒரு தகவலை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று என்றைக்கு என்னுடைய அதிகாரிகள் சொல்கிறார்களோ அன்றுதான் எனக்கு மறக்கமுடியாத இன்று.
கதை இல்லாமல் தகவலே சொல்வதில்லையே. தனியாகச் சிறுகதையோ நாவலோ எழுதியதுண்டா?
ஆரம்பகாலத்தில் என்னுடைய இளம் வயதில் ஒருசில சிறுகதைகள் எழுதியது உண்டு. என்னைவிட சிறப்பாக பலபேர் எழுதுவதைப் பார்த்ததும் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.
கொஞ்சம் இழுத்துப் பேசுகிற இந்த கிராமிய பாணிப்பேச்சு எப்போது வந்தது?
இழுத்துப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெரியுமா? மூச்சு வாங்குகிறது. அவ்வளவுதான்.
உங்கள் கிராமிய வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?
கிராமிய வாழ்க்கையில் பட்டணங்களைக் கனவு கண்டு கொண்டிருந்தேன். பட்டண வாழ்க்கையில் கிராமங்களைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
உங்கள் கிராமத்தில் உங்களை மிகவும் கவர்ந்த மனிதர் யார்?
அப்படி ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவரைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் - நிலைக்கண்ணாடியில்!
அரசியலில் கூட்டணி பற்றி ஒரு கதை சொல்ல முடியுமா?
அரசியலைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:
"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம். இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"
கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"
அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"
உங்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட பாடல் எது? ஏன்?
"பத்தினிப்பெண்' என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடியிருக்கிற 'உலகம் என்பது ஒரு வீடு' என்கிற பாடல். காரணம் : அதன் அருமையான கருத்து அற்புதமான இசை.. இனிமையான குரல் எல்லாமும்தான்!
உண்மையைப் போன்ற ஒரு கற்பனையையும் கற்பனையைப் போன்ற ஓர் உண்மையையும் சொல்ல முடியுமா?
இது, விசு அல்லது அறிவொளி ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது.
உங்களுக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் யார்? எந்தக் காட்சியில் நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்தீர்கள்?
நாகேஷ்.
'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' என்கிற படம் பார்த்தபோது அப்படிச் சிரித்த அனுபவம் உண்டு.
நீங்கள் வீட்டில் இருக்கும்போது ஏதேனும் ஜோக் அடித்ததுண்டா?
ஜோக் அடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வருவதுண்டு.
உங்கள் திரையுலக அனுபவம் எப்படி இருந்தது?
திரையுலகத்தில் நீண்ட அனுபவம் ஏதுமில்லை. 'பெரிய மருது' - என்கிற படத்தில் டணால் தங்கவேலுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'காதலே நிம்மதி' - என்கிற படத்தில் நீதிபதியாக கொஞ்சநேரம் வந்தேன்.
அதன் விளைவு -
அதற்குப் பிறகு யாருமே என்னை நடிக்கக் கூப்பிடுவதில்லை!
உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது?
எனக்கு.. கேட்பது பிடிக்கும்! பேசுவது பிடிக்காது!
உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாமிநாதன் யார்? பேச்சாளரா? எழுத்தாளரா? உதவிநிலைய இயக்குநரா? குடும்பத் தலைவரா? நடிகரா?
படுத்துத் தூங்குகிற சுவாமிநாதனைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவரால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இல்லை!
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:10 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 115 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:58 PM
0
comments (நெற்றிக்கண்)
- 'உலக நாடுகளைப் பழிவாங்கும் கருவியாக மனித உரிமைகள் பயன்படுத்தப்படக் கூடாது' - ஐ.நா பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த உரை : மனித உரிமைகள் என்ற விடயத்தை உலக நாடுகளை அரசியல் ரீதியாக பழிவாங்கும் ஒரு கருவியாக பயன் படுத்தக் கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்சபையின், 62 வது வருடாந்த சந்திப்புக்கான தனது உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்
- பர்மா பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் கருத்து : பர்மா பிரச்சினை தொடர்பாக இந்தியா முதன் முறையாக இன்று கருத்துத் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பர்மாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும், பர்மாவின் அரசியல் சீர்திருத்தம் மற்றும் தேசிய நல்லிணக்கம், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக, பரந்துபட்ட நடைமுறையாக இருக்க வேண்டும் என்று இந்தியா எப்போதும் விரும்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
- பர்மாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியது : பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது இராணுவத்தினர் தாக்கியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன
- நேபாளத்தை குடியரசாக்குவதற்கு நேபாளி காங்கிரஸ் ஆதரவு : நேபாளத்தை குடியரசாக அறிவிப்பதற்கு, தனது ஆதரவை அந்த நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான நேபாளி காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவமபர் மாதம் தேர்தெடுக்கப்படவுள்ள அரசியல் சாசன சபை, இந்த மாற்றத்ததை ஏற்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளனர் - இலங்கையின் வடபகுதி மோதலில் 13 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தைக்கு மேற்கில் உள்ள இராணுவ முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் எறிகணை வீச்சு மற்றும் நேரடி மோதல்களில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 9 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:40 PM
0
comments (நெற்றிக்கண்)
இராமர் பால ஆராய்ச்சியில் ஈடுபடும் அதிமேதாவிகளுக்கு எனது பணிவான வேண்டுகோள்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:49 AM
0
comments (நெற்றிக்கண்)
September 25, 2007
இன்றைய குறள்
தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:42 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 114 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:39 PM
0
comments (நெற்றிக்கண்)
- யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது : உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
- அதிபராகத் தேர்தெடுக்கப்படாவிட்டால், இராணுவப் பொறுப்பில் தொடர முஷாரஃப் திட்டம் : அதிபர் முஷாரஃப்பாகிஸ்தானின் அதிபர் தேர்தலில் பர்வேஸ் முஷாரஃப் அவர்கள், மேலும் ஒரு பதவிக் காலத்துக்கு தேர்தெடுக்கப்படாவிட்டால், இராணுவத் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள அவர் எண்ணியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
- காலநிலை மாற்றம் தொடர்பில் உலகத் தலைவர்களின் உடனடி நடவடிக்கை தேவை என்கிறார் ஐ.நா தலைமைச் செயலர் : காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலகத் தலைவர்கள் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூண் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்
- புவி வெப்பமடைதலுக்கு மனிதனின் செயற்பாடே காரணம்: பிபிசி ஆய்வில் தகவல் : இதற்கிடையே, பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் கலந்து கொண்ட பெரும்பாலானோர், புவி வெப்பமடைதலுக்கு, ஒரு முக்கிய காரணியாகக மனிதனின் செயற்பாடே இருக்கிறது என்று கூறியுள்ளனர்
- பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை : அதிபர் புஷ் பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்
- யார் இந்த பர்மா ஜெனரல்கள்? : பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்
- இன்றைய (செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:26 PM
0
comments (நெற்றிக்கண்)
மேட்ரிமோனியல் பெயரில் இப்படியொரு மோசடி!
சென்னை : திருமணம் செய்து கொள்வதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியவன் சிக்கினான். திருமண வெப்சைட்டுகள் மூலம் ஐ.ஏ.எஸ்., என்றும் சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும் போலியாக விளம்பரம் கொடுத்து இதுவரை ஐந்து பெண்களை திருமணமும் செய்து கொண்டுள்ளான். திருமண ஆசை காண்பித்து, பல பெண்களிடம் உல்லாசம் அனுபவித்தும் பணத்தை சுருட்டியிருப்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நெய்வேலியைச் சேர்ந்தவர் லியாகத் அலி(34); கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவன். நெய்வேலியிலேயே கம்ப்யூட்டர் மையத்தை நடத்திய லியாகத் அலிக்கும், கடலூரைச் சேர்ந்த சபரியாவுக்கும் (28) அவரது பெற்றோரால் கடந்த 2002-ல் திருமணம் நடந்தது. தற்போது ரூபினா (2) குழந்தை உள்ளது. நெய்வேலியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி நஷ்டமடைந்ததால், பின்னர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் கம்ப்யூட்டர் மையத்தை தொடங்கினான். அங்கு கம்ப்யூட்டர் மையம் என்ற பெயரில், கள்ள ரூபாய் நோட்டு கும்பலுடன் செயல்பட்டு ஏமாற்றிய வழக்கில் திருச்சி பாலக்கரை போலீசாரால் லியாகத் அலி கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஜாமீனில் வெளியே வந்த லியாகத் அலி, மணமாலை டாட் காமில் பணிபுரிந்த நண்பர் முருகானந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கம்ப்யூட்டரில் கைதேர்ந்த லியாகத் அலி, "ராஜேஷ் சாப்ட்வேர் இன்ஜினியர், சுதாகர் ஐ.ஏ.எஸ், சந்தீப்சிங் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் புதிய வெப்சைட்டை தொடங்கினான். அந்த வெப்சைட்டின் முகவரி மற்றும் மொபைல் போன்களின் நம்பரை மட்டுமே கொடுத்து மணமாலை டாட் காமில் நண்பரின் உதவியுடன் வரன்களை தேடுவதுபோல் விளம்பரப்படுத்தினான். குறிப்பாக விவாகரத்தான, ஊனமுற்ற, விதவை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்ததால் விளம்பரத்தை பார்த்து பல பெண்கள் ஆச்சரியப்பட்டனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சங்கீதா, சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரும், "ராஜேஷ் சாப்ட்வேர் இன்ஜினியர், லண்டன்' என்ற விளம்பரத்தைக் கண்டு விண்ணப்பித்தார். மொபைல்போனில் மட்டுமே சங்கீதா மற்றும் அவரது தாயிடம் லியாகத் அலி முதலில் பேசினான். தான் பிறந்து வளர்ந்தது எல்லாமே லண்டன்தான் என்றும், லண்டனுக்கு எந்த விமானத்தில் செல்வது, எவ்வளவு லக்கேஜ் விமானத்தில் எடுத்து சென்றால் அனுமதிப்பர், மேற்கொண்டு லக்கேஜ்ஜை கார்கோவில் அனுப்பினால் குறைந்த கட்டணமே வசூலிப்பர் மற்றும் உலக விஷயங்களை அனைத்தும் கரைத்து குடித்தவன் போல் இன்டர்நெட்டில் இருக்கும் தகவல்களை திரட்டி அசத்தினான். இதனை உண்மையென நம்பிய சங்கீதா குடும்பத்தினர், லியாகத் அலி சொல்வதை கேட்டு ஆச்சரியப்பட்டனர். அவரை சந்திக்க மும்பைக்கு சங்கீதா மற்றும் அவரது குடும்பத்தினர் சென்றனர். லண்டனில் இருந்து தற்போதுதான் வந்ததாகவும், வரும் வழியில் லக்கேஜ் தவறவிட்டதாகக் கூறி பதட்டமடைவதுபோல் "பாவ்லா' காண்பித்தான். இன்னும் இரண்டு நாளில் லண்டன் போக வேண்டுமே விசா எடுக்க பணம் இல்லையே என்று கூறியதும், பெற்றோரிடம் இருந்து சங்கீதா லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி கொடுத்தார். அந்த பணத்தில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி ஜாலியாக செலவழித்து வந்தான்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:55 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
September 24, 2007
ராமர்பால விவகாரம் பற்றி தா.பாண்டியன்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:55 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : விடாது கருப்பு
மனிதனை விட மண்ணுக்கே மரியாதை - தா.பாண்டியன் வேதனை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நெல்லை மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் சுடலைமுத்து கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பொதுக் கூட்டம் நடந்தது.
இதில் தா.பாண்டியன் பேசுகையில், தாமிரபரணியில் நடக்கும் மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நெல்லை மாவட்ட செயலாளர் சுடலைமுத்து கடந்த மாதம் வீரவநல்லூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது வன்மையாக கண்டிக்கதக்கது. சிறைகளுக்கு என்று தனி விதிகள் உள்ளன. 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற காலத்தில், முதல் 14 மாதங்கள் பரோலில் வர அனுமதி கிடையாது. ஆனால் சுடலைமுத்து கொலை தொடர்பாக தண்டனை பெற்று சிறையில் இருந்தவர் ஒரே மாதத்தில் பரோலில் வெளியே வந்தது காவல்துறையின் அக்கறையின்மையை காட்டுகிறது.
சுடலைமுத்து கொலையில் தொடர்புடையதாக 12 பேரின் பெயர்களை சாட்சியான நாகராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் 4 பேர் மட்டுமே போலீசாரால் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே சுடலைமுத்துவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மனிதனை விட மணலுக்குதான் மரியாதை. மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய சுடலை முத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தேசிய நிர்வாக குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் அரிகேசவநல்லூர் பஞ்சாயத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அயூப்கான் மட்டும் உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.
அயூப்கானுடன் சேர்ந்து போராடிய தலித் சமூகத்தை சேர்ந்த சுடலைமுத்து கொலை செய்யப்பட்டதன் மூலம் அரசின் கொள்கை கொல்லப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இன்னமும் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பதவியேற்ற சில நாட்களிலேயே சேரன்மாதேவி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். வருவாய்த் துறையினர் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மணல் கொள்ளை நடப்பதற்கு இதுவே சாட்சி.
நெல்லை அருகே ஓமநல்லூரில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய விவசாயிகள், ஏழை எளிய மக்கள் 56 பேர் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மக்களுக்காக நல்லாட்சி செய்வதில் கருணாநிதி உறுதியாக இருப்பது உண்மையென்றால் அவர்கள் மீது போட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:36 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தட்ஸ் தமிழ்
இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:31 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 113 - ம் குறள்
ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒரு பதிவு
(ஆங்கிலத்திற்கு மன்னிக்க) : Right to Emergency Care: Date Of Judgment: 23/02/2007. Case No.: Appeal (civil) 919 of 2007.
The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital. The hospital bears the responsibility of informing the police, first aid, etc.
Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:18 PM
1 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilaweb
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:16 PM
0
comments (நெற்றிக்கண்)
ராமர்பால விவகாரம் பற்றி நல்லகண்ணு!
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : விடாது கருப்பு
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : விடாது கருப்பு
