July 12, 2007

ராமபிரான் காட்டுக்கு சென்றதும் ஒரு ஆசிரமத்திலிருந்து மற்றொரு ஆசிரமத்திற்கு புறப்பட்டார். அப்போது, அந்த ஆசிரமத்திலிருந்த இரண்டு இளைஞர்கள் அவருடன் சென்றனர். இரண்டாவது ஆசிரமத்திலிருந்து மூன்றாவது ஆசிரமத்திற்கு புறப்பட்டதும், இன்னும் இரண்டு இளைஞர்கள் சேர்ந்துகொண்டார்கள். ஆக நான்கு இளைஞர்களும், ராமன், லட்சுமணன், சீதா ஆகியோர் உட்பட ஏழு பேர் மற்றொரு ஆசிரமத்தை நோக்கி சென்றனர். அந்த ஆசிரமத்திலிருந்த குருபத்தினிகள் அவர்களை வரவேற்றனர். அந்தக் கூட்டத்தில் சீதை மட்டுமே பெண் என்பதால் அவளை அடையாளம் கண்டுகொண்டனர். மற்றவர்களில் யார் ராமன், யார் லட்சுமணன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
அவர்கள் சீதையிடம் அங்கு நின்ற ஒவ்வொருவராக காட்டி, "இவர் ராமரா?, இவர் ராமரா?' என கேட்டுக்கொண்டே வந்தனர். சீதையும் "இவர் ராமர் இல்லை. இவர் ராமர் இல்லை' என சொல்லிக்கொண்டே வந்தாள். கடைசியாக ரிஷிபத்தினிகள் ராமனைச் சுட்டிக்காட்டி, "இவர் ராமரா?' என்று கேட்டார்கள். சீதை பதில் சொல்லாமல் நாணத்துடன் தலையை கவிழ்ந்துகொண்டாள். "இவர்தான் ராமர்' என்று கூறவில்லை.
இதிலிருந்து ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். உலகிலுள்ளவர்கள் கடவுள் தங்கள் அருகில் இருந்தும் அடையாளம் காணத் தவறி விடுகிறார்கள். அதே நேரம், பிற பொருட்கள் கடவுளாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்கள். சிலருக்கு பணம் கடவுளாகத் தெரிகிறது. சிலருக்கு உலக இன்பங்கள் கடவுளாகத் தோற்றமளிக்கின்றன. ஆனால், நிஜமான பக்தன் எல்லோரையும் கடவுளாகப் பார்க்கிறான். எந்நேரமும் கடவுளுடனேயே இருக்கிறான். நாமும் எல்லாரையும் கடவுளாகப் பார்ப்போமே!
- பகவான் ரமணர்

இன்றைய குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்

அறத்துப்பால் : இல்லறவியல்

நல்ல கவிதைகளைப் படித்தவுடன் நான் எழுதிய ஒன்றுகூடக் கவிதை இல்லையென்று புரிந்தது, அத்தனையும் கிழித்துப் போட்டுவிட்டேன்
- பிரபஞ்சன்

தமிழோசை

இன்றைய (ஜுலை 12 வியாழக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே க்ளிக் செய்க BBCTamil.com Radio Player

July 11, 2007

"ட்ரம்மர் சிவமணி" மற்றும் "மேன்ட்லின் ஸ்ரீனிவாசன்"

ஒரு அருமையான வீடியோப்பதிவு

நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல, எவ்வளவு 'அடர்த்தியாக' வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்

- பிரபஞ்சன்

கூகிள் : தமிழ்

இன்றைய குறள்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

பழிக்கத்தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.6 துறவு

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

விளக்கு இருளைப் போக்கும். ஒருவனுடைய தவமானது அவனது பாவங்களைப் போக்கும். விளக்கின் எண்ணெய் குறையும் போது இருளானது சூழ்ந்து கொள்ளும், அதேபோல ஒருவனது நல்ல குணங்கள் குறையக் குறைய அவனை தீமைகள் முற்றிலுமாகச் சூழ்ந்து கொள்ளும்.


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Asceticism
Like as when a lamp is brought into a room darkness disappears, so sin cannot stand before the effects of former good deeds. And like as darkness approaches and spreads over the room when the oil in the lamp is decreasing, so when the effect of the good deeds is exhausted, the effect of evil deeds will take its place.
Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

தமிழோசை

லண்டன் தாக்குதல் குற்றவாளிகள் நால்வருக்கு ஆயுள் தண்டனை லண்டன் நகரின் போக்குவரத்து அமைப்புக்கள் மீது கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக நான்கு பேருக்கு இலண்டன் நீதி மன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும் இன்றைய 'BBC' (ஜுலை 11 புதன்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க க்ளிக் செய்க BBCTamil.com Radio Player

July 10, 2007

இன்றைய குறள்

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது, இன்பமும் ஆகாது
அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

பெரியார்

விருதுநகரில் தேர்தல் சமயம். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்) பேசுவார் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. காமராசரின் மீது மதிப்பு, மரியாதை கொண்ட தந்தை பெரியாரிடம் ஒருவர் சென்று, "அய்யா! பெருந்தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்" என்று சுவரொட்டியைக் காட்டி கோபப்பட,
பெரியார் அந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டு சொன்னாராம்.
“சரியாத்தான் போட்டிருக்கானுங்க, ஆனா இதுல ஒரு வார்த்தை சேர்த்துக்கிட்டா நல்லாருக்கும்” என்று சொல்லிச் சொன்னாராம்,
“படிக்காத காமராசர்" உருவாக்கிய பள்ளிக்கூடத்தில், 'படித்த காமராசர்' பேசுவார் என்று போட்டிருக்கணும்" என்றாராம்.

எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது. இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்கள்.BBCTamil.com
முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது. மேலும் இன்றைய (ஜுலை 10 செவ்வாய்க்கிழமை) தமிழோசை நிகழ்ச்சிகளைக் கேட்க BBCTamil.com Radio Player

July 09, 2007

இன்றைய குறள்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

மலேசியா வாசுதேவன் ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்