கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கு, புருஷர் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்ற நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லைSeptember 02, 2007
கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டதனாலும், பெண்கள் அடிமையாவதற்கு, புருஷர் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்ற நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை
எச்சரிக்கை : பக்கவாதம்!
STROKE: Remember The 1st Three Letters... S.T.R. My friend sent this to me and encouraged me to post it and spread the word. I agree. If everyone can remember something this simple, we could save some folks. Seriously.. Please read: STROKE IDENTIFICATION: During a BBQ, a friend stumbled and took a little fall - she assured everyone that she was fine (they offered to call paramedics) and just tripped over a brick because of her new shoes. They got her cleaned up and got her a new plate of food - while she appeared a bit shaken up, Ingrid went about enjoying herself the rest of the evening. Ingrid's husband called later telling everyone that his wife had been taken to the hospital - (at 6:00pm , Ingrid passed away.) She had suffered a stroke at the BBQ. Had they known how to identify the signs of a stroke, perhaps Ingrid would be with us today. Some don't die. They end up in a helpless, hopeless condition instead. It only takes a minute to read this... A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough. - S * Ask the individual to SMILE.
- T * Ask the person to TALK..... TO SPEAK A SIMPLE SENTENCE (Coherently) (i.e. . .. It is sunny out today).
- R * Ask him or her to RAISE..... B OTH ARMS.
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:35 PM
1 comments (நெற்றிக்கண்)
நண்பர் யாழ் சுதாகர் தொகுத்துவழங்கும் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் பாடல்கள்!
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:00 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நவின் ஈஸ்நிப்ஸ் பாடல்கள்
இன்றைய குறள்
அகன் அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:52 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 92 - ம் குறள்
- கருத்து வேற்றுமை காரணமாகவே முஷாரப்புடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது : பெனாசீர் - பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப்புடன் தாம் நடத்திய, அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுவர்த்தகள், அதிபரின் அதிகாரங்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் ஆகிய விடயங்களின் ஏற்பட்ட வேற்றுமைகள் காரணமாக தடைபட்டு நிற்பதாக நாடு கடந்து வாழும் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கூறியிறுக்கிறார்
- பாதுகாப்பு செலவு பற்றிய விவரங்களை தெரிவிக்க சீனா முன்வந்துள்ளது : தனது ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்த விபரங்களை ஆண்டுதோரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இராணுவப் படைப் பெருக்கம் குறித்து சர்வதேச அளவில் வெளியிடப்படும் கவலைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை வந்துள்ளது
- இரான் அணுதிட்டம் பெரும் முன்னேற்றமடைந்துள்ளதாக அகமதுநிஜாத் அறிவிப்பு : இரான் தனது அணு ஆற்றல் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் முகமது அகமதுநிஜாத் தெரிவித்துள்ளார். யூரேனியத்தை செரிவூட்டக்கூடிய மூவாயிரம் சென்டிரிபூயூஜ்ஜுகள் இரானிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் அணு ஆற்றல் அமைப்பு இது குறித்து கடந்த வாரம் வெளியிட்ட மதிப்பீட்டை விட இது அதிகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:31 PM
0
comments (நெற்றிக்கண்)
நான்கு மனைவிகள், 11 குழந்தைகளுடன் `சவுக்கிய'மாக வாழ்கிறார் ஒசாமா
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:06 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
September 01, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:56 PM
0
comments (நெற்றிக்கண்)
- இராக்கில் தாக்குதல்களை தாம் நிறுத்தப் போவதாக வல்லமை மிக்க ஷியாப் படைப் பிரிவின் வாக்குறிதியின்படி அவர்கள் நடந்து கொண்டால், இராக்கிய கட்டளைப் படைகளின் படைகளும், இராணுவ வளங்களும் அல் கையீதாவுக்கு எதிரான போரில் மேலும் கூடுதலாக ஈடுபடுத்தப்படலாம் என்று இராக்கிலுள்ள அமெரிக்கத் தளபதிகள் அறிவித்துள்ளார்கள்.
- தற்போது நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசிர் புட்டோ விரைவில் தாம் நாடு திரும்பப் போவதாக கூறியுள்ளார்.
- இந்தியாவின் தென்மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாதில் கடந்த வாரம் 40 பேரின் உயிரை பலிகொண்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்
- மண்ணிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரிய வைரம் என்று கருதப்படக் கூடிய கண்டுபிடிப்பு தொடர்பான விபரங்களை தென்னாபிரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:23 PM
0
comments (நெற்றிக்கண்)
August 31, 2007
அமெரிக்கப் பண்பலை வரிசையில் தமிழ் பாடல்கள்!
அமெரிக்க மண்ணில் வாழும் இந்தியர்கள் அதிவேக வாழ்க்கையில் இருந்தாலும் தமிழ் பாடல்களை அதிலும் குறிப்பாக பழைய பாடல்களைக் கேட்க வாய்ப்புக்கள் உள்ளதென்று நினைக்கும்போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது நண்பர் திரு.ஸ்ரீ மற்றும் திரு.இராஜன் அவர்கள். இந்த நிகழ்ச்சி மாபெரும் இசைமேதை திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் பற்றியது.| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:25 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : itsdiff.com
ஞானி என்பவர் யார்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:15 PM
0
comments (நெற்றிக்கண்)
பஹ்ரைன் நாட்டில் பணிபுரியும் இந்திய நண்பர்களே எச்சரிக்கை!
(மூலம் - வெப்துனியா)
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:09 PM
0
comments (நெற்றிக்கண்)
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் சோனியா, இந்திரா நூயி
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்டு 2007 ( 15:42 IST )
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களின் பட்டியலில் சோனியா காந்திக்கு 6 வது இடம் கிடைத்துள்ளது. பிரபல அமெரிக்க பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஒன்று உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (தொடர்ந்து இரண்டாவதாண்டாக) முதலிடத்திலும், சீனாவின் துணை பிரதமர் வூ யி இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூரின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான காங்லோமெரேட் 3 வது இடத்திலும் உள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. நான்காவது இடத்தில் அமெரிக்க அமைச்சர் கண்டலிசா ரைஸ் இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆறாவது இடமும், பிரபல பெப்சி குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், அமெரிக்க இந்தியருமான இந்திரா நூயிக்கு 7 வது இடமும் கொடுத்துள்ளது அப்பத்திரிகை.
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:03 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: (மூலம் - வெப்துனியா)
'அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி'
நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று மாலை உதயமானது. புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து சரத்குமாரும் அரசியல் களம் கண்டுள்ளார். தனது கட்சி இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் சரத்குமார். அதன்படி இன்று மாலை சென்னை வடபழனி பத்மாராம் கல்யாண மண்டபத்தில் சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். சரியாக இன்று (31-08-2007) மாலை 6.30 மணிக்கு தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். தனது புதிய கட்சிக்கு 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' என்று பெயர் சூட்டியுள்ளார் சரத்குமார். கட்சியின் தலைவராக சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பிற நிர்வாகிகள் விவரம்: அவைத் தலைவர் - முருகன் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) பொதுச் செயலாளர் - கரு. நாகராஜன் துணைத் தலைவர் - எர்ணாவூர் நாராயணன். பொருளாளர் - செல்வராஜ். துணை பொதுச் செயலாளர் - சுந்தரேசன் கொள்கை பரப்புச் செயலாளர் - மருது அழகுராஜா. கட்சிப் பெயரை அறிவித்து செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசுகையில், இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக, ஒரு புதிய அரசியல் நாகரீகத்தை உருவாக்கவே இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களை அரசியல் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகிறோம். அதை ஏற்படுத்தக் கூடிய தகுதி படைத்தது எங்களது கட்சி மட்டும்தான். மற்ற கட்சிகளுக்கு அந்த அருகதை கிடையாது. பிற கட்சிகள் எல்லாம் தங்களது சுய லாபத்திற்காக தொடங்கப்பட்டவை. நாங்கள் அப்படி இல்லாமல், இன்றைய இளைஞர்களை ஆக்கப்பூர்வமான வழியில் அரசியலில் ஈடுபடுத்தி புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காட்டிய வழியில்தான் நாங்கள் போகப் போகிறோம். அவர் கண்ட கனவையே நாங்களும் காணுகிறோம். எங்களது முக்கிய நோக்கம் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். அதே நோக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஒரே நோக்கம்தான். எனவே எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார் சரத்குமார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:41 PM
0
comments (நெற்றிக்கண்)
உயிரை பறிக்கும் "செல்போன்"
விஞ்ஞானிகள் எச்சரிக்கை தகவல்-சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 அக்கம், பக்கத்து கிராமங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு ஊர் பண்ணையார் வீட்டில் மட்டும் இருந்தது அந்த டெலிபோன். அழகான பெண்ணின் இடைபோல, கன்னங்கரேல் உருவத்தில், சுமார் 2 கிலோ எடை அளவு கொண்ட அந்த போனில் வளையம், வளையமாக 10 ஓட்டைகள் இருக்கும். குறிப்பிட்ட எண்ணை விரலால் இடமிருந்து வலமாக சுற்றிவிட்டால் 'ஸ்பிரிங்' போல ரிவர்ஸ்சில் வந்து டிரிங்... டிரிங்... என்று மணியடிக்கும். அப்போதெல்லாம் உலகம் முழுவதும் ஒரே ஒரு 'ரிங்டோன்' தான்! இப்போது ஒரே சட்டைப் பையில் விதம் விதமாக 4 செல்போன்களை தாராளமாக வைத்திருக்கிறார்கள். ஒருபுறம் வேடிக்கையாகவும் இருக்கிறது. காதில் 'ஹெட்போனை' வைத்துக் கொண்டு நடுரோட்டில் தனக்குத்தானே பேசிக் கொண்டு போவதை செத்துப் போன நமது தாத்தா - பாட்டி பார்க்க நேர்ந்தால் 'பாவம், யாரு பெத்த புள்ளையோ இப்படி பைத்தியம் புடிச்சு அலையுது" என்பார்கள்.கற்பனைக்கும் எட்டாத இந்த செல்போனை யார் கண்டுபிடித்தது?சிகாகோவைச் சேர்ந்த 'மார்ட்டின் கூப்பர்' என்பவர்தான் இந்த நவீன செல்போனை கண்டுபிடித்தது.1973-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி உலகின் முதல் செல்போனை கண்டு பிடித்து முதன் முதலாக பேசியதும் இவர்தான். பிரபல 'மோட்டோரல்லா' கம்பெனிதான் முதல் செல்போனை உலகிற்கு காட்டியது.இந்த நிறுவனத்தை சேர்ந்த மார்ட்டின் கூப்பர் முன்னதாக வயர்லெஸ், ஆன்டனா சம்பந்தமான கடை வைத்திருந்தவர் என்பது விசேஷம்.எனினும் இந்த செல்போனுக்கு அடிப்படை ஆதாரத்தை அமைத்துக் கொடுத்தது அமெரிக்காவின் நியூஜெர்சியை அடுத்து 'முர்ரேஹில்' பகுதியில் உள்ள 'பெல்' லேபாரட்டரிதான்.இவர்கள்தாம் வயர்கள் இல்லாத வாக்கி - டாக்கி ரேடியோவை 1947-ல் கண்டுபிடித்து ராணுவ உபயோகத்திற்காக தந்தார்கள். இது அதிக எடைகொண்டதாக இருந்தது. இதனை 1960 வாக்கில் ஓரளவுக்கு நவீனமாக்கினார்கள். இதைத்தொடர்ந்துதான் 1973-ல் மார்ட்டின் கூப்பர் நவீன உயர்ரக செல்போனை கண்டுபிடித்தது. 1990-ல் உலகம் முழுவதும் செல்போன்கள் முற்றிலும் நவீன யுகத்திற்கு போய்விட்டன. செல்போனை கண்டு பிடித்ததற்காக கடந்த 2003-ல் வார்தான் இன்போசிஸ் பிசினஸ் டிரான்ஸ்பர்மேசன் விருது கிடைத்திருக்கிறது மார்ட்டின் கூப்பருக்கு!முதல் செல்போனை 'மோட்டோரல்லா' கண்டு பிடித்தாலும் இன்று உலகம் முழுவதும் செல்போன் வியாபாரத்தில் சக்கைப் போடு போடுவது 'நோக்கியா' நிறுவனம் தான்! உலகில் 36 சதவீதம் பேர் இதைத்தான் வைத்திருக்கிறார்கள். இது தவிர எல்.ஜி. மிட், சுபிசி, பேனாசோனிக், சோனி எரிக்சன், சன்யோ, சாம்சங், சைமன்ஸ், தோஷிபா, பிலிப்ஸ் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.இன்றைக்கு உலகம் முழுக்க சுமார் 350 கோடி பேர் செல்போன் வைத்திருக்கிறார்கள். இவர்களில் அதிகம் பேர் செல்போன்கள் வைத்து நம்பர் 1 இடத்தில் இருப்பவர்கள் சீனாக்காரர்கள். இங்கு 50 கோடி பேரிடம் செல் இருக்கிறது.இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 2007 ஜுன் மாத கணக்குப்படி பதினெட்டே முக்கால் கோடி பேரிடம் செல்போன் இருக்கிறது. இந்தியாவில் மாதத்திற்கு 73 லட்சம் செல்போன்கள் விற்கின்றன. வருகிற 2010-ம் ஆண்டுக்குள் 50 கோடி செல்போன்கள் விற்பனையாகும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.உலகின் பல நாடுகளில் ஜனத்தொகையை விடவும் செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதில் லக்சம்பர்க்காரர்கள் 164 சதவீதம் செல்போன் வைத்து உலகின் முதல் இடத்திலும், ஹாங்ஹாங்கினர் 117 சதவீதம் செல்போன் வாங்கி 2-ம் இடத்திலும் இருக்கின்றனர்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:16 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Couresy : Maalaimalar
வெறிநாய்கள் ஜாக்கிரதை!
நாய்க்கடி என்பது மூளையைத் தக்கும் ஒருவகை நுண்ணுயிரால் (வைரஸ்) ஏற்படும் நோயாகும். அது அதிகமாக நாய்கடியால் ஏற்பட்டாலும் எப்போதாவது அரிதாக பூனைகள், குரங்குகள், ஓநாய்களாலும் ஏற்படலாம்.
உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் ஒவ்வோர் ஆண்டும் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுமார் 50,000 மக்கள் நாய்க்கடி நோயால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். இதில் 20,000 முதல் 25,000 வரை 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நாய்க்கடியில் சுமார் 67% இந்தியாவில் ஏற்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 30,000 பேர் நாய்க்கடியால் ஒவ்வோர் ஆண்டும் இறக்கிறார்கள். அதே சமயம் 50 லட்சம் பேர் நாய்க்கடித்த பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாய்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 கோடி! கடிப்பட்டதில் இருந்து நோய் தொடங்கும் வரையான காலம் 5 நாட்கள் முதல் ஒரு ஆண்டு வரை வேறுபடுகிறது. சராசரியாக இரண்டு மாதங்களில், சதரணமாக இந்த நோய் தொடங்குகிறது. முதலில், முதல் 2-10 நாட்கள் தெளிவற்ற சில அறிகுறிகள் தென்படும். நோயாளி காய்ச்சல், தலைவலி, பசியின்மை, வாந்தி போன்றவற்றால் அவதிப்படுவார். மேலும் கடிபட்ட இடத்தில் வலி, அறிப்பு, மருத்துப்போதல், நமைச்சல் முதலியன இருக்கும். கடைசிக் கட்டத்தில் நோயாளி விழுங்குவதற்குச் சிரமப்படுவார். சில நோயாளிகள் கலக்கத்துடனும், தடுமாற்றத்துடனும் செயல்படத் தொடங்குவர். நோய் வந்த பிறகு இதற்கு வைத்தியம் இல்லை. ஆனால் இந்த நோய் 100% வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. நாய்க்கடி நோய்க்கு 3 வகையான தடுப்பூசிகள் உள்ளன. மிருகத்தின் மூ¨ல்திசு அல்லது திசுவிலிருந்து எடுத்த தடுப்பூசி மருந்து (NTV) ஏ.வியன் தடுப்பூசி (AV)
திசுக்களில் இருந்து பண்ணிய தடுப்பூசி (TCV) திசுகளிலிருந்து உண்டு பண்ணிய தடுப்பூசியால் பல நன்மைகள் உள்ளன. கடிபடுவதற்கு முன்பே, எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைக்கும், கடிபட்ட பின் செய்யும் சிகிச்சைக்கும் இது மிகவும் பயனளிக்கிறது. மிகவும் குறைந்த வலி உடையது. மிகக் குறைந்த அளவு மருந்தே தேவைப்படும். வயிற்றில் ஊசி போட தேவை இல்லை. நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எவ்வளவு சீக்கிரம் இம்மினோகுளோபிளினும் ஒரு தடுப்பூசியும் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்றிலிருந்து 3, 7, 14, 28, 90-வது நாட்களில் மேலும் 5 தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். நாய்க்கடி நோயின் தாக்குதல் ஏற்படக்கூடிய நிலையில் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக மருத்துவ உதவி நாடவேண்டும். உடனடியாக, நாய்க்கடி உள்ள இடங்களையும், நகத்தால் பிராண்டிய இடங்களையும் கவனித்துச் சுத்தப்படுத்த வேண்டியது மிக மிக முக்கியமானதாகும், இது முதலாவதாகவும் செய்ய வேண்டியது ஒன்று. காயம் பட்ட இடங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் உடனேயே குழாயின் கீழ் ஓடும் நீரால் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். நிறைய சோப்பும் நீரும் உபயோகிக்கவும். அதன் பின்னும் இருக்கக் கூடிய கிருமிகளை செயலிழக்கச் செய்ய டிஞ்சர், ஆல்கஹால், டெட்டால், சாவலான் போட்டுக் கழுவ வேண்டும். எரிச்சல் உண்டாக்கக்கூடிய செடிகளின் சாறுகள், காப்பிப்பொடி, மிளகாய்ப் பொடி, உலோகங்கள், அமிலங்கள், சுண்ணாம்பு போன்றவற்றைத் தடவக்கூடாது. கடிப்பட்ட இடத்தைத் தையல் இட்டு உடனடியாக மூடக்கூடாது. மருத்துவரை உடனே அனுகவும். முடிந்தால் கடித்த விலங்கைப் பிடித்து, தனி அறையில் இட்டு, பத்து நாட்கள் உன்னிப்பாகக் கவனித்து, அதற்கு வெறிநோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.
நன்றி -குழந்தை மருத்துவர், சைல்ட் டிரஸ்ட் மருத்துவ மனை
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Kadhambam
கவிப்பேரரசு வைரமுத்துவிலிருந்து காமெடியரசு விவேக் வரை
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:31 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:04 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 91 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:02 PM
0
comments (நெற்றிக்கண்)
இந்தியப் பொருளாதரம் தொடர்ந்து வளர்ச்சி
- இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மிகப் பெரும் அளவில் வளர்ந்து வருகிறது. அரசு கணக்கீடுகளின்படி கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஒன்பது சதவீதமாக இருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் கடந்த ஆண்டில்தான் இந்தியப் பொருளாதாரம் இவ்வளவு வேகமாக ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி வளர்ந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் சரியாக 9.3 சதவீதம் வளர்ந்தாலும் அது அரசை கவலையில் ஆழ்த்தக் கூடும் என பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவது குறித்து அரசு கவலை கொண்டுள்ளது எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியா ஏழு சதவீதம் வளர்ந்து வருகிறது என்பதும் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியப் பொருளாதாரமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. - பத்தாண்டுகளுக்கு முன் மறைந்த டயானாவுக்கு மக்கள் அஞ்சலி:
பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த வேல்ஸ் இளவரசி டயானா
வை நினைவு கூறும் முகமாக இன்று மத்திய லண்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டது - மத்திய கிழக்கின் காசா நிலப்பரப்பில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிரான போரட்டங்கள், வன்முறையில் முடிந்திருக்கின்றன.
- இராக்கின் ஆயுத குழுக்கள் தங்களது செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டும் என்று, இராக் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது
- மேலும் இன்றைய (ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:54 PM
0
comments (நெற்றிக்கண்)

