அனுராதபுரம் விமானப்படை தள தாக்குதல்: ஒன்றரை கோடி அமெரிக்க டொலர்கள் சேதம் என்கிறது இலங்கை விமானப்படை
கடந்த வியாழனன்று அனுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானப்படையின் எட்டு விமானங்கள் சேதமடைந்ததில் ஏற்பட்டுள்ள இழப்பு ஒன்றரை கோடி அமெரிக்க டொலர்கள் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது
இந்தியாவில் நெல் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது : இந்தியாவில் கோதுமைக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுபோல், நெல்லுக்கான கொள்முதல் விலையும் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்று விவசாய அமைப்புக்களும் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன
தவறான செய்தி வெளியிட்டமைக்காக இலங்கை ஏபிசி நிறுவன ஒலிபரப்பு சேவைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது : இலங்கை ஊடகத்துறை அமைச்சர்இலங்கையின் ஏபிசி வானொலி குழுமம் தவறான செய்தி ஒன்றை நேற்று 25ஆம் தேதி ஒலிபரப்பியதாக தெரிவிக்கப்பட்டு அதன் ஒலிபரப்பு உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது
இரான் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று ரஷ்யா கோருகிறது : இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய சர்வதேசத் தடைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்
சாட் நாட்டில் இருந்து குழந்தைகளைக் கடத்த முயன்றதை யூனிசெஃப் கண்டித்துள்ளது : ஆப்பிரிக்காவின் சாட் நாட்டிலிருந்து பிரான்சுக்கு 103 குழந்தைகளை கடத்த முயன்று, தோல்வியடைந்த சம்பவம் ஒன்றை ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியமான யூனிசெஃப் வன்மையாக கண்டித்துள்ளது
No comments:
Post a Comment