சேதுக்கால்வாய் திட்டம் தொடர்பில் தமிழகத்தை ஆளும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் நடத்த திட்டமிட்டிருந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், திமுகவும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களும் திங்கட்கிழமையன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைநகர் சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டங்களும் அதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய ஸ்தம்பித நிலையும், உச்சநீதிமன்றத்தின் முழு அடைப்புக்கான தடை உத்தரவை மீறிய நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அஇஅதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று காலை மனு தொடரப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதன் மீதான விசாரணையின் போது தமிழக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். தமது முந்தைய உத்தரவை மீறி செயல்படும் தமிழக அரசை இந்திய நடுவணரசு பதவி நீக்க தயங்கக்கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் தமிழக முதல் வரையும், தலைமைச் செயலாளரையும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரும் என்றும் எச்சரித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கடுமையான விமர்சனங்கள் வெளியான சிறிது நேரத்தில், முதல்வர் கருணாநிதி உண்ணா விரத பந்தலில் இருந்து வெளியேறினார். மற்றவர்கள் மாலை வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். ஆனாலும், மதியம் முதலே மாநிலம் தழுவிய அளவில் சாலைப்போக்குவரத்து சீரடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய பரபரப்பான நிகழ்வுகள் குறித்த விரிவான செய்திகள், செவ்விகளை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம். ஐ.நாவின் மனித உரிமைக் கண்காணிப்பாளர் இலங்கை விஜயம் : மேன்பிரட் நொவக் சர்வதேச நாடுகளில் இடம்பெறக்கூடிய சித்திரவதை தொடர்பான விடயங்களைக் கண்காணிக்கும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விசேட தூதுவர், மேன்பிரட் நொவக் இன்று கொழும்பு வந்தடைந்திருக்கிறார்
இலங்கை பணிப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு : சவுதி அரேபியாவில் சம்பளம் வழங்காமை உட்பட பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான, இலங்கையைச் சேர்ந்த அனிஸ்டா மேரி என்னும் பணிப் பெண்ணுக்கு ஐயாயிரம் டாலர்கள் வரை நஷ்ட ஈடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக பூட்டின் அறிவிப்பு : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்கள், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்
No comments:
Post a Comment