இந்தியப் பிரதமரை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி : இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு புதுடெல்லி வந்தார். சனிக்கிழமை மாலை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்
இலங்கை மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா உயர்ஸ்தானிகர் வேதனை : இலங்கைக்கு தற்போது விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் அவர்கள், இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தினை அமுல்படுத்துவதில் இருக்கின்ற பலவீனமும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பதும் வேதனைக்குரிய விடயம் என்று கூறியிருக்கிறார்
யாழ்ப்பாணம் குருநகர் குடாகடலில் மோதல் : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் குருநகர் குடாகடலில் சனிக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய இராணுவத்தின் படகு ஒன்றில் இருந்த 3 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது
பர்மாவில் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் கைது : பர்மாவில் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களில் மீதமுள்ள மூன்று தலைவர்களையும் பர்மிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை வன்முறை மூலமாக இராணுவம் மட்டுப்படுத்தியது
ரஷ்ய மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமெரிக்கா ஆதரவு : ரஷ்யாவில் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலர் கொண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்
ஒரினச் சேர்க்கை பாதிரியாரை பதவி நீக்கம் செய்துள்ளது வாட்டிகன் : இத்தாலி நாட்டுத் தொலைக்காட்சியில் தன்னை ஒரினச் சேர்க்கையாளர் என்று ஒப்புக்கொண்ட உயர் பதவியில் இருக்கின்ற பாதிரியார் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தியை வாட்டிகன் ஒப்புக்கொண்டுள்ளது
No comments:
Post a Comment