யால வன விலங்கு சரணாலயப் பகுதியில், இலங்கை இராணுவ நிலை ஒன்றை தாக்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை, அங்கு அந்த தேசியப் பூங்காவெங்கிலும் தேடும் நடவடிக்கையில், இலங்கை சிறப்புப் படைப்பிரிவினர் உட்பட சுமார் 500 படையினர் ஈடுபட்டுள்ளனர்
வறுமை ஒழிப்புக் கோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் : உலகில் வறுமையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உலக நாடுகளின் தேசிய அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி - உலக சர்வதேச நடவடிக்கை கோரும் நாளில் - நடைபெற்ற ஆர்பாட்டங்களில் பல லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்
இந்திய பங்கு விலைகளில் வீழ்ச்சி : இந்திய பங்குத் தரகர் ஒருவர்வெளிநாட்டவர்கள் செய்யும் முதலீட்டில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்த திட்டத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் பங்குகளின் விலை பெரிதும் குறைந்தது.
குர்து பிரிவினைவாதிகள் மீது எல்லை கடந்து தாக்க துருக்கிய நாடாளுமன்றம் அங்கீகாரம் : வட இராக்கில் குர்து இன பிரிவினைவாதிகளின் தளங்களின் மீது எல்லை கடந்த தாக்குதல்களை நடத்த, துருக்கிய இராணுவத்துக்கு அனுமதி அளித்து, துருக்கிய நாடாளுமன்றம் பெரும் ஆதரவுடன் வாக்கெடுப்பு ஒன்றை நிறைவேற்றியுள்ளது
கவலையில் அமெரிக்கா : நிச்சயமாக அமெரிக்கா கவலையில் இருக்கிறது. இராக்கில் இதற்கு மேலும் இராணுவ சவால்களை சந்திக்க அதற்கு வசதிகள் இல்லை.
மேலும்,அங்கு அது இருப்பதற்கே, துருக்கியின் ஆதரவு அமெரிக்காவுக்கு பெருமளவில் தேவைப்படுகிறது
மொகதீசுவுக்கான உணவு விநியோகத்தை ஐ. நா நிறுத்தியது : சோமாலியாவின் தலைநகர் மொகதீசுவில் உள்ள தனது அலுவலகத்துக்குள், அரச துருப்புக்கள் நுழைந்து, உலக உணவுத் திட்டத்தின் உள்ளூர் தலைமை அதிகாரியை கைது செய்ததன் பிறகு, சோமாலியத் தலைநகருக்கான உணவு விநியோகத்தை தாம் நிறுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது
தென் ஆபிரிக்க எய்ட்ஸ் நிலவரம் குறித்து யூனிசெப் எச்சரிக்கை : தென் ஆப்ரிக்காவில், எய்ட்ஸ் நோய் தொற்றி இறப்போரின் எண்ணிக்கை, அந்த நோய் தொற்றி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில், எய்ட்சுக்கு எதிரான போரில் தென் ஆப்ரிக்கா தோற்று வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சிறார்கள் நிதியம், யூனிசெப் கூறுகிறது
No comments:
Post a Comment