தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.கிருஷ்ணசாமியை இன்று திங்கட்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சில அடையாளம் தெரியாத நபர்கள் வேல்கம்புகளாலும் கத்தியாலும் குத்தியிருககின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிசமான அளவு இரத்த இழப்பு ஏற்பட்டிருககிறது, அவர் தற்போது மதுரை தனியார் மருத்துவமனையன்றில் அனுமதிககப் பட்டிருககிறார். உயிருககு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது. நாளை பசும்பொன்னில் நடைபெறவிருககும் முத்துராமலிங்கத்தேவர்அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. முக்குலத்தோரைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவரென நினைத்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டிருகககூடும் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
நைஜீரியாவில் 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் : எஃப்.பி.எஸ்.ஓ. மிஸ்ட்ராஸ் என்ற இத்தாலிய நிறுவனத்திற்காக நைஜீரியாவின் எண்ணைக் கிணறு ஒன்றில் வேலைபார்த்துவந்த நான்கு இந்தியர்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட வடக்கான் குளம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டனர். நான்காவது நபர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர்களை விடுவிக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நைஜீரியாவுக்கான இந்தியாவின் துணைத் தூதர் அனில் த்ரிகுணாத் தமிழோசையிடம் விளக்கினார். கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்த விபரங்களை நேயர்கள் கேட்கலாம்
மும்பை பங்கு சந்தையின் புதிய சாதனையும், நிலமற்ற ஏழை விவசாயிகளின் போராட்டமும் : இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் இன்று 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துசென்றுள்ளது. பங்குச் சந்தையின் அதிவேக வளர்சியின் காரணமாக இந்திய நிறுவனங்களின் மதிப்பு உயந்துள்ளது
வட இலங்கையில் இராணுவத்தினர் புலிகள் இடையில் மோதல் வலுத்துள்ளது : இலங்கையின் வடக்கே மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இராணுவ முன்னரங்க பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மன்னார் தம்பனை பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்திருந்த பொறிவெடியில் சிக்கிய இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மேற்குலக நாடுகளின் ஈடுபாடு போதாது என்கிறார் சவுதியரேபிய மன்னர் : பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தில் போதிய முயற்சி எடுக்கவில்லை என்று தான் நம்புவதாக சவுதியரேபிய மன்னர் அப்துல்லா கூறியுள்ளார்
No comments:
Post a Comment