சே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்
- கியூபாவின் புரட்சிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது. சே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார். இந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள். அர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது. சே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.
- காச நோய்க்கெதிரான மருந்துகளின் விநியோகம் : காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது எக்ஸ்ரே ஆராயப்படுகிறதுஉலகின் 19 நாடுகளுக்கு காச நோய்க்கெதிரான மருந்துகளை விநியோகிப்பதில், உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் சபையும் கூட்டாக செயற்படவுள்ளன
- பாகிஸ்தானின் துணை இராணுவத் தளபதியாக உளவுத்துறையின் முன்னாள் தலைவர் நியமனம் : பாகிஸ்தானின் உளவுத்துறையின் முன்னாள் தலைவரான ஜெனரல் அஸ்ஃபாக் கியானி அவர்கள், இராணுவத்தின் துணைத்தளபதியாக பதியேற்றுள்ளார்
- இராக்கில் உள்ள பிரிட்டிஷ் படையினரை குறைக்கும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் அறிவிப்பு : இராக்கில் இருக்கும் பிரிட்டிஷ் படைகளில், பாதி படையினருக்கும் அதிகமானவர்களை குறைப்பதற்கான திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்ணைத்தளபதியாக பதியேற்றுள்ளார்
- மருத்துவத்துக்கான நோபல் பரிசு : இந்த வருடத்துக்கான நோபல் பரிசு, மரபணுக்களை இலக்கு வைத்தல் என்ற தொழில்நுட்பத்தை விருத்தி செய்த, இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டன் நாட்டவர் ஒருவர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment