இந்தியாவின் அரச மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு விசாரணை : இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மத்திய அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்க்கீடு வழங்கி இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய நடுவணரசு சட்டம் கொண்டுவந்தது.
இதை எதிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணைகள் இன்று முடிவடைந்திருக்கின்றன.
தீர்ப்புக்கான தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இந்த பின்னணியில், சுமார் மூன்று மாதகாலம் நீடித்த, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு விசாரணைகள் குறித்து, இந்த விசாரணையை தொடர்ந்து அவதானித்து வரும், இந்து பத்திரிகையின் புது தில்லி செய்தியாளர் ஜெ.வெங்கடேசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்
வட இலங்கையில் கடுமையான மோதல்: மக்கள் இடம்பெயர்வு
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தின் தென்மேற்கே மன்னார் கட்டுக்கரை மற்றும் வடக்கே யாழ்ப்பாணம் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்
இந்தியாவில் அருகிவரும் புலிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம் : இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அருகி வருகிறதுஇந்தியாவில் குறைந்துவரும் புலிகளைப் பாதுகாப்பதற்கான ஆய்வுக்கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
தேசிய வனவிலங்குப் பாதுகாப்புக் குழு என்ற அந்தக் குழுவில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர்கள் ரகுபதி, நமோ நாராயண மீனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள், பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் 17 மாநிலங்களில், 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில், 28 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றை, தேசிய புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இவை குறித்த மேலதிக தகவல்களையும், இந்தியாவில் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புலிகளின் எண்ணிக்கை அருகி வருவதற்கான காரணங்கள் குறித்து, இந்தியாவின் முன்னோடி வன உயிரியல் ஆய்வாளர், டாக்டர் ஏ.ஜே.டி.ஜான்சிங் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்
மட்டக்களப்பில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கவலை : மட்டுநகரின் ஒரு தோற்றம்இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் பலவற்றில் அண்மைக் காலமாக ஆயுதமுனையிலான கொள்ளைச் சம்பவங்களும், வீதி வழிப்பறிகளும் மிகவும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
உகாண்டாவின் கிளர்ச்சிக் குழுவினர் அரசுடன் சமாதான பேச்சு வார்த்தைகளை துவங்கவுள்ளனர் : ஆப்பிரிக்காவின் மிக மோசமான மற்றும் நெடுநாளைய மோதல் ஒன்றை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக தேவனின் போராட்டப் படை என்றழைக்கப்படுகின்ற உகாண்டாவின் கிளர்ச்சிக்குழு ஒன்றின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக தலைநகர் கம்பாலா வந்தடைந்துள்ளனர்
இராக்கில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது : இராக்கில் கொல்லப்பட்ட சாமானியப் பொதுமக்களின் எண்ணிக்கையானது அண்மைய மாதங்களோடு ஒப்பிடுகையில் கடந்த அக்டோபரில் குறைவாக இருப்பதாக கடைசியாக பெறப்பட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு மாதங்களாக பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
2005 லண்டன் சுரங்க ரயில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியமைக்காக காவல்துறைக்கு அபராதம் பொலிசாரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி2005 ஆம் ஆண்டு லண்டன் சுரங்க ரயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த அப்பாவியான ஜான் சார்ல்ஸ் டி மெனசஸ் என்பவரை லண்டன் காவல் துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் போது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விட்டதாக, லண்டனின் பிரதான காவல்துறையான லண்டன் பெருநகர காவல்துறை தண்டிக்கப்பட்டுள்ளது
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவப்போன ஜப்பான் கப்பற்படை கப்பல்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன : ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுவரும் அமெரிக்க தலைமையிலான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயலாற்றிவரும் தனது இரண்டு கடற்படை கப்பல்களை உடனடியாக தனது பணிகளை இடைநிறுத்திவிட்டு நாடு திரும்பும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது
சாட் நாட்டிலிருந்து கடத்த முயற்சிக்கப்பட்ட குழந்தைகள் அனாதைகள் அல்ல: சர்வதேச தொண்டு நிறுவனங்கள் - சாட் நாட்டில் பிரஞ்சு உதவி அமைப்பு ஒன்று குழந்தைகளை கடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்க்கு பெற்றோர்கள் இருப்பதாய் தெரியவந்துள்ளதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் கூறுகின்றன
சொமாலியாவில் மனித அவலம்: ஐ.நா.மன்றம் - சொமாலியாவின் இடைக்கால அரசை ஆதரிக்கும் எத்தியோப்பிய படையினருக்கும், பலமான ஆயுதங்களை தன்னிடம் கொண்டிருக்கும் ஆயுத குழுக்களுக்கும் இடையில் சமீபத்தில் உருவாகியிருக்கும் சண்டை காரணமாக, சொமாலிய தலைநகரான மொகதிஷுவில் இருந்து சுமார் தொண்ணூறா யிரம் பேர் வெளியேறியிருப்பதாக, ஐநா மன்றம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment