இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியாவின் இந்திய வம்சாவழியினர் பற்றி இன்று வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், "இது நமக்குக் கவலையளிக்கக்கூடிய பிரச்சினை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களோ, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரோ எப்போது பாதிக்கப்பட்டாலும், அது நிச்சயமாக இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார். மலேஷியாவில் சம-உரிமை கோரி் போராட்டம் நடத்திய இந்திய வம்சாவழியினரின் போராட்டத்தை அடுத்து ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, அந்த நாட்டு அரசுடன் இந்தியா தொடர்பு கொண்டு வருவதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அடக்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் நலனைப் பாதுகாப்பது தொடர்பாக மத்திய அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஜெயலலிதா உள்ளிட்ட மற்ற தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்கள். இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமையன்று அந்தப் பிரச்சினை குறித்து மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார் பிரணாப் முகர்ஜி. "வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினர் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. மலேஷியாவில் கணிசமான அளவில் உள்ள இந்திய வம்சாவழியினர் அந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கிறார்கள். மலேஷியாவுடன் இந்தியா நல்ல நட்புறவு கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேஷிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வருகிறோம்" என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
புத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு : தஸ்லிமா நஸ்ரின்வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய'த்விக்ஹோண்டிதோ' புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார். "மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அவர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்" என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார். இந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார். தஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்
பேநசிர் பூட்டோ தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டுள்ளார் : தேர்தல் விஞ்ஞாபனத்துடன் பேநசிர் பூட்டோடிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அவசரநிலை விலக்கப் போவதாக பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் அவர்கள் அறிவித்ததை அடுத்து, ஜனவரி மாதம் நடக்கவுள்ள தேர்தலுக்கான தமது கட்சியின் விஞ்ஞாபனத்தை பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவியான பேநசிர் பூட்டொ வெளியிட்டுள்ளார். தொழில்வாய்ப்பு, கல்வி, சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக தனது கட்சியின் கொள்கை இருக்கும் என்று திருமதி பூட்டோ தெரிவித்துள்ளார். இந்த தேர்தல்களில் தான் ஒரு எதிர்ப்புடனேயே பங்கேற்பதாகவும், அவற்றை தான் அங்கீகரிக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்
கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையிலான ரயில் சேவை அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது : நாட்டின் தலைநகரமாகிய கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து, கொழும்புக்கும் வவுனியாவுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரயில் சேவை, இன்று அனுராதபுரம் நகருடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
இலங்கை யுத்தத்தில் பொதுமக்கள் அதிகம் கொல்லப்படுவது குறித்து யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அதிர்ச்சி : இந்த வாரத்தின் முதல் நான்கு தினங்களில், இலங்கையின் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களின்போது சுமார் 49 சிவிலியன்கள் கொல்லப்பட்டதோடு, சுமார் 60 பேர்வரையில் காயமைடைந்திருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம் என்றும், இது குறித்து தாம் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு தெரிவித்திருக்கிறது
புவி வெப்பமடைதலை தடுப்பது தொடர்பில் உலக முன்னணி வணிக நிறுவனங்கள் கோரிக்கை : புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச இலக்கு ஒன்றை நிர்ணயிப்பது தொடர்பில் உலக நாடுகள் மத்தியில் ஒரு இணக்கப்பாடு காணப்பட வேண்டும் என்று உலகின் முன்னணி வணிக நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் முன்முயற்சியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒன்றுபட்ட கோரிக்கையை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 150க்கும் அதிகமான சர்வதேச முன்னணி வணிக நிறுவனங்கள் முன்வைத்துள்ளன
கடத்தப்பட்டிருந்த கொரில்லாக்கள் பிறப்பிடம் திரும்புகின்றன : ஐந்து ஆண்டுகாலமாய் ஒரு சர்வதேச பிணக்குக்கு காரணமாக அமைந்திருக்கின்ற நான்கு அரிய வகை ஆப்பிரிக்க கொரில்லாக்கள், மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டிலுள்ள தமது பிறப்பிடத்துக்குத் திரும்பும் பயணத்தின் கடைசி நிலைக்கு தற்போது வந்துள்ளன
யுரேனியம் செறிவாக்கலில் இரான் ஈடுபடுவதைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி : ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஹாவியர் சொலானா, இரானை அதன் யூரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவைக்க எடுக்கப்படும் மற்றொரு முயற்சியில், இரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளர் சயீத் ஜலீலியை லண்டனில் சந்தித்து பேசியுள்ளார்
கரடி பொம்மைக்கு 'முகமது' பெயரிட்ட சர்ச்சை - ஆசிரியருக்கு தண்டனை போதாது என்று கூறி கார்டூமில் ஆர்ப்பாட்டம் : பிரிட்டிஷ் பள்ளிக்கூட ஆசிரியை கிலியன் ஜிப்பொன்ஸ்ஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறி அதனைக் கண்டித்து, சுடானின் தலைநகர் கார்ட்டூமின் ஊடாக நூற்றுக்கணக்கானோர் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்
No comments:
Post a Comment