December 09, 2007

வார்ப்பில் ..... எனது கவிதை

1.விஞ்ஞானம் தோற்கிறது!

என்னவள்
உள்ளிழுத்து வெளிவிடும்
மூச்சுக்காற்று
கார்பன் டை ஆக்ஸைடாம்
யார் சொன்னது?
பிறகெப்படி நான்
இத்தனை நாள் உயிரோடு!?

2.தண்ணீர்ப் பஞ்சம்

என்னவளே!
உன் புருவங்களின்
ஓரத்தில் பொதிந்து நிற்கும்
அந்த வியர்வை
முத்துக்களைச் சற்றே
உன் சுண்டுவிரலால்
சுழற்றிவிடு!
தண்ணீர்ப் பஞ்சமாவது தீரட்டும்
இந்தத் தமிழகத்தில்!

3.அவளுக்காக!

என்
இதயத்துடிப்பைச் சற்றே
நிறுத்திவைத்தேன்
என்னவள்
எந்தன் மார்பில்
முகம்புதைத்தபோது!
அவள் தூக்கம்
கலைந்துவிடக்கூடாதென்பதற்காக!

சென்னை நவின்,
இர்வைன், கலிபோர்னியா (USA)

http://www.vaarppu.com/view.php?poem_id=935

No comments: