"சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" அதிகாலை.காம்
வணக்கம். நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் www.adhikaalai.com எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது. உலகத்தின் 20 -க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் எமது செய்தியாளர்கள் உள்ளனர். உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைதான் எமது தளத்தின் வேர்கள். எமது பின்புலமாய் சமூக அக்கறையுள்ள சில மாமனிதர்கள்.
சமூகத்தின் சகலமும் ஒலி-ஒளி வடிவில் இடம் பெறும். இதுவரை நம் ஊடகங்களால் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளும், சம்பவங்களும் உயிரோட்டத்துடன் இங்கு வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். சமூகத்தின் பன்முகத்தன்மைகளும் அசலாய் காட்டப்படும். கண்ணியாமான எழுத்துக்கள் கெளரவிக்கப்படும். சாராம்சம் நிறைந்த சச்சரவுகளுக்கு மட்டுமே சரிசம இருக்கைகள் கொடுக்கப்படும். விடை தேடும் பிரச்சினைகளுக்கான விவாதங்கள் முன் நிறுத்தப்படும்.

உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனை, சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், பாட்காஸ்ட்... இப்படி பலவும் இங்கே ஆழமுடன் இடம்பெறும்.
சுருங்கச் சொல்வதாயின் "சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை" சராசரி மனிதருக்கும் எட்டும் வகையில் எடுத்து வைக்கப்படும். எமது தளத்துக்கான ஆலோசனைகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அன்போடு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் எமது பயணத்தில் தோள் கொடுக்க விரும்பும் அன்பு நெஞ்சங்களையும் அரவணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
ஆசிரியர் குழு
அதிகாலை.காம்
www.adhikaalai.com
editor@adhikaalai.com
அதிகாலை.காம்
www.adhikaalai.com
editor@adhikaalai.com
"அதிகாலை" தமிழ் இணைய இதழ் பற்றி திண்ணையில் வந்த அறிவிப்பு...http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803132&format=html
1 comment:
மும்பாயில் தின்னைபேச்சு என்னால் ஆச்சு என்று சொல்ல மாட்டேன்.
இனைய நன்பர்களை சந்தித்தால் தின்னையில் அமருங்கள் என்று சொல்லும் பழக்கம் மும்பை திரு மணி , கதிர், குமணன், பன்னீர், அழகு இன்னும் பலரை சொல்லாலம் இவர்கள் எல்லாம் தின்னையில் மின்னுபவர்கள்
Post a Comment