திருமாவளவனை கைது செய்ய உத்தரவு
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தொல்.திருமாவளவனுக்கு சிதம்பரம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடி பகுதியில் கடந்த 11.05.1997-ல் தேர்தல் பிரசாரத்தின்போது விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், அத்து மீறி பேசியதாகவும் திருமாவளவன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சிதம்பரம் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் இந்த வழக்கு நீதிபதி பிரகாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணைக்காக தொல்.திருமாவளவன் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி பிரகாசன் உத்தரவிட்டார்.
1 comment:
அடடா முதலில் செயல் படுத்துங்கள், அதற்க்கு முன் ஒரு வேலை செய்ய வேண்டும் ஆங்கிலேயர்கள் குற்றவாளிகளை அடைவேண்டு மென்றே ஆஸ்திரேலிய நிலப்பரப்பை கண்டறிந்தனர்.
இனிமேல் புவியில் புதிய கண்டமில்லை ஆகையால் புதிய கிரகம் கண்டுபிடிக்க வேண்டும் இவர்களை அடைத்து வைக்க , ஆமா கோடி பேருக்கு மேல் தேறுவார்கள், எங்க கொண்டு பொறதாம் அனைவரையும்
Post a Comment