October 21, 2015
May 06, 2010
"தம்பி வெட்டோத்தி சுந்தரம்" திரைப்படத்தில் 'நவின்'
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:56 PM
2
comments (நெற்றிக்கண்)
Labels: அதிகாலை நவின், தம்பி வெட்டோத்தி சுந்தரம், நவநீ, நவின்
August 26, 2009
தமிழர்களை சிங்கள இராணுவம் செய்த கோரக்கொலைகள் : வைகோ அறிக்கை
அந்தப் படுகொலைகள் நடந்தபோது, சிங்களச் சிப்பாய் ஒருவனின் கைத்தொலைபேசியில் படம் பிடித்த காட்சிகள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. கொல்லப்பட்ட இளைஞர்களின் கைகளில் கயிறு கட்டப்பட்டு உள்ளது தெரிகிறது. எனவே, ஏராளமான இளைஞர்களை இப்படிக் கைகளைப் பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, பின்னர் கயிற்றால் கட்டி, விலங்குகளைக் கட்டி இழுத்து அடைத்து வைப்பதுபோல் அடைத்து வைத்து இருந்ததும், சித்திரவதை செய்ததும் தெரிய வந்து உள்ளது.
தமிழ் இனத்தைக் கொன்று குவிக்கும் கொலைபாதகம் நடத்தி வருகிற கொடியவன் ராஜபக்சேயின் அரசும், இராணுவமும், தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்வதும், கொல்வதும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொல்வதும், அன்றாட நிகழ்வுகளாக, சர்வசாதாரணச் சம்பவங்களாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்து உள்ளது.
தற்போது தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள கோரப் படுகொலைகள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்து இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும், லண்டனில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும், செய்தித்தாள்களும், உலகத்துக்குத் தெரிவித்தன. மனிதகுல வரலாற்றில் யூதர்களைக் கொடூரமாகக் கொலை செய்த
ஹிட்லரின் நாஜிப் படையினர்கூடச் செய்யத் துணியாத முறையில், சிங்கள இராணுவத்தினர், தமிழ் இளைஞர்களையும், இளம் பெண்களையும் வதைத்துத் துன்புறுத்திக் கொன்று அழித்தனர். யுத்தகளங்களில் தோற்கடிக்கப்பட்ட படைவீரர்களைக் கைது செய்தாலும், அவர்களை மனிதாபிமானத்தோடு போர்க்கைதிகளாக நடத்த வேண்டும் என்று, ஐ.நா. மன்றமும், மனித உரிமைகள் ஆணையமும், ஜெனீவாவில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் வலியுறுத்துகின்றன. சிங்களச் சிப்பாய்களை விடுதலைப் புலிகள் கைது செய்து வைத்து இருந்த காலத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து, அவர்களை மிகுந்த பண்பாட்டோடு புலிகள் நடத்தி வந்தார்கள் என்பதை பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்களே பல கட்டங்களில் தெரிவித்து உள்ளனர். ஆனால், சிங்கள இராணுவம், மிருகங்களைவிடக் கேவலமான முறையில், கொடூரமாகத் தமிழர்களைத் துன்புறுத்தினர். குறிப்பாகத் தமிழ்ப் பெண்களை, ஆடைகளை அகற்றிப் படுநாசம் செய்தனர். அதிலும் யுத்தகளத்தில் போரில் உயிர்நீத்த தமிழ்ப் பெண்களின் சீருடைகளை அகற்றி, கோரச் சிரிப்புடன் சிங்களச் சிப்பாய்கள் வன்புணர்ச்சி நடத்தியது, உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத கொடுமை ஆகும்.நம் நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைக் காட்சிகளைக் காண்கிறபோது, இதயம் வெடித்து விடுவதுபோல இருக்கிறது.
ஈராக்கில், அபு கிரைப் சிறையில் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கச் சிப்பாய்களால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஈராக்கியர்கள் ஆளாக்கப்பட்ட உண்மை, முதலில் கைத் தொலைபேசிக் காட்சிகளாக வெளியில் வந்தவுடன், ஈராக்கில் ஆக்கிரமிப்புச் செய்த அமெரிக்க நாட்டிலேயே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு பேருக்கு பத்து ஆண்டுக்கால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
அதைப்போல, கியூபாவில் குவாண்டனமோ வளைகுடாவில் அமைந்து உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளத்தில், கைதிகள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதற்கு உலகமே கண்டனம் தெரிவித்தது. அந்த முகாமை மூடிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.
ஆனால், அங்கெல்லாம் நடந்ததைவிட மிகக் கொடூரமான முறையில் தமிழர்களை சிங்கள இராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள இராஜபக்சே அரசையும், இராணுவத் தளபதிகளையும், கொடுஞ்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க முன்வர வேண்டும்.
முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டி விலங்கிட்டு, சிங்களவன் துப்பாக்கியால் சுடும்போது, அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து, துடிதுடிக்க அவர்கள் மடிவதையும் காண்கையில், நம் உள்ளத்தில் வேதனை நெருப்புப் பற்றி எரிகிறது.
ஐயோ, நாதியற்றுப் போனோமா நாம் இந்த நானிலத்தில்? என்று மனம் பதறித் துடிக்கிறது. இக்கோரப் படுகொலைகளைச் செய்துவிட்டு, வழக்கம்போலச் சிங்கள அரசு, அப்படி நடக்கவே இல்லை என்றுகூறி விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்துகிறது.
இலங்கையில் சிங்கள அரசால் மனித உரிமைகள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டு, தமிழ் இனம் உலகில் எங்கும் நடந்து இராத இனக்கொலைக்கு ஆளாகிய நிலையில், நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, ஆய்வு நடத்த ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து, சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, வாக்கு அளித்த நாடுகள் தங்கள் மனச்சாட்சியைக் குழிதோண்டிப் புதைத்து விட்ட பாவத்தைச் செய்தன.
தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித்தந்த இந்திய அரசு, ஐ.நா. மன்றத்திலும், இலங்கையை ஆதரித்தது வெட்கக்கேடான இழிசெயல் ஆகும். ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் வதைபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக தவித்துக் கொண்டு இருக்கின்ற மூன்று இலட்சம் தமிழர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மழை வெள்ளத்தோடு அவர்களின் கண்ணீரும் சேர்ந்து கொண்டது.
முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ்செயலுக்கும், தமிழர்கள் சிந்திய இரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்குக் காரணமான ஆயுதங்களையும், அனைத்து இராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்குத் தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்புக் கிடையாது.
ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசின் ரத்த வெறியாட்டம் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்தே தீரும். இந்தத் துன்பமான நேரத்தில், உலகெங்கும் உள்ள தமிழர்கள், மனம் தளர்ந்துவிடாமல், நம் இனத்தைக் காக்க, கொடுமை செய்தோரைக் கூண்டில் நிறுத்த, உறுதிகொண்டு போராடுவோம். அனைத்து உலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுவோம்.இந்தக் கோர நிகழ்ச்சிகளை அறியும் வேளையில், உலகெங்கும் உள்ள மனித மனங்கள் பதறவே செய்யும். ஈழத்தமிழர்களின் துயரத்தையும், சிங்கள அரசின் கொடுமைகளையும் உலக மக்கள் அறியும்போது, இன்றைய நிலைமை நிச்சயமாக மாறும். தமிழர்களின் பக்கம் நியாயம் இருக்கிறது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்குரல், நியாயத்தின் குரல் என்பதை உலகம் ஒருநாள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவே செய்யும் என்ற நம்பிக்கையோடு, நம் தர்மயுத்தத்தைத் தொடர்வோம்.
- வைகோ அறிக்கை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:11 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee, அதிகாலை நவின், அதிகாலை.காம்., நவநீ
December 09, 2008
சர்ச்சைக்குரிய பாபர் மசூதியின் பாரம்பரிய வரலாறும் அதன் திசை திருப்பப்பட்ட சோடிப்புகளும்
1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்
சுமணர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது. வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலைகளை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது. 'இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்' என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://manuneedhy.googlepages.com/Babari_Masjid_History.pdf
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:14 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, Courtesy:onlinepj, Navanee, tntj, அதிகாலை நவின், சென்னை நவின், நவநீ, நவின், பாபர் மசூதி
November 29, 2008
நன்றி நவிலல் தினம் - Thanks Giving Day
"டாங்க்கி"
"கா பை"
"ஹ்வாலா"
"மாகே"
"டாரிம்"
என்ன? புதுசுபுதுசா எதோ சொல்றேன்னு பாக்குறீங்களா? இந்த முகவரிக்கு எப்படிப் போகலாங்க"ன்னு ஒருத்தர்ட்ட கேட்டா, அவர் பொறு
மையா அந்த இடத்துக்குப் போகும் வழியைச் சொன்னா நாம் என்ன சொல்வோம். ரெம்ப நன்றிங்க என்று சொல்கிறோம் இல்லையா? அந்த நன்றி என்ற சொல்லுக்கு உலகில் ஒவ்வொரு நாடும் என்ன மாதிரி சொல்றாங்க? அதத்தான் மேல சொன்னேன். எந்த நாட்டுல் எப்படிச் சொல்றாங்கன்னு இந்தக் கட்டுரையின் இறுதியில் ஒரு பட்டியல் இருக்கு. அதப் பாத்து நீங்க நன்றியை எங்க எப்படிச் சொல்லலாம்ன்னு தெரிஞ்சுக்கலாம். சரி இப்ப விசயத்துக்கு வருவோம்!"எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"
இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது. அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி சொல்ல ஒதுக்கியிருக்கிறார்கள். அதுக்காக மத்த நாள்ல அமெரிக்கர்கள் நன்றி சொல்ல மாட்டாங்களா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் கூட பார்க்காத மாதிரி ஒதுங்கியும், முகத்தைத் திருப்பிக் கொண்டும் செல்வதை பெரும்பாலும் அமெரிக்காவில் காண முடியும். அறிமுகமில்லாத ஒரு இந்தியர் இன்னொரு இந்தியரைப் பார்த்து நமஸ்தே... வணக்கம்.... ஹாய்..... என்று சொல்கிறார் என்றால் சொன்னவர் அமெரிக்காவுக்குப் புதுசு என்று அர்த்தம்.அதே நேரத்தில் அறிமுகமில்லாத ஒரு அமெரிக்கர்/ரி ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டால் ஹலோ... ஹாய் என்பார்கள். எப்படி இருக்கிறீர்கள்? என்றெல்லாம் கூட விசாரிப்பதும், உதவி என்ற வகையில் அல்லாமல் ஒரு சாதாரண தகவலைச் சொன்னால் கூட நன்றி என்று நாலு முறை நாவலிக்காமல் சொல்லுகிறவர்கள் அமெரிக்கர்கள். வருசம் முழுக்க எங்களுக்காக உழைச்சீங்க, உங்களுக்கு எங்கள் நன்றிகள்! முதலாளிகள், தொழிலாளிகளுக்கும்; நிர்வாகம் தங்கள் ஊழியர்களுக்கும்; ஒருவருக்கொருவர் நன்றி பரிமாறிக்கொள்ளும் நன் நாளாக, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நான்காம் வாரத்தில் வியாழக் கிழமை அனுசரிக்கப்படுகிறது. இன்றைக்கு அமெரிக்கா முழுமைக்கும் இந்த நன்றி நவிலப்படுகிறதற்கு காரணம் யார்?
இங்கிலாந்து...!
ஏன்?
இதற்கும் ஒரு பின்னணி உண்டு. அது என்னவென்று பார்ப்போமா?
இங்கிலாந்து
1600-களில் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் அந்த நாட்டை ஆண்டுவந்த அரசனின் இரும்புப் பிடிகளுக்குள் சிக்கித்தவித்தது. இப்படித்தான் வழிபடவேண்டும்; மதச் சடங்குகள் இன்னின்னபடிதான் நடைபெறவேண்டும்; பிறப்பாயிருந்தாலும், இறப்பாயிருந்தாலும் அரசகட்டளைப்படிதான் நடக்கவேண்டும், என்கிற கட்டுப்பாடு கிறிஸ்தவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது. ஒரு சாரார் அரச கட்டளைக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டு வெஞ்சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகினர். தங்களுக்கு விருப்பமான முறையில் கடவுளை வணங்கமுடியவில்லையே என்று எண்ணியவர்கள் ரகசியமாக திட்டம் தீட்டி இங்கிலாந்தைவிட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்தனர். இவர்கள் "புரிடான்ஸ்" (puritans) என அழைக்கப்பட்டனர்.மத சுதந்திரம் வேண்டி, தங்கள் தாயகத்தை விட்டு ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக, "ஸ்பீட் வெல்" மற்றும் "மே ·ப்ளவர்" என்ற இரண்டு கப்பல்களில் இலக்கு இல்லாத தங்கள் பயணத்தை (செப்டெம்பர் ,1620ம் ஆண்டு) துவங்கினர். உணவு, துணி, யுதம், விவசாயக் கருவிகள், விதைகள் என்கிற சேகரிப்புகளோடு நிரந்தரமாகப் புலம் பெயர்ந்துவிடுகிற முயற்சியாகப் பயணித்தனர்.
கனவு பூமி
ஏதோ ஒரு துணிச்சலில் குழந்தை குட்டிகளோடு 1620ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் ஆறாம் தேதி 102 பயணிகளுடன் 32 குழந்தைகள் உடபட கிளம்பிய அவர்களுக்கு இன்ன இடத்துக்குத்தான் போகிறோம் என்கிற உறுதியில்லாமல் கப்பல் போன போக்கில் பயணித்தனர்! கடற்பயணம் எளிதாக அமைந்துவிடவில்லை. நிலம் காணா நீர்ப்பரப்பு நீண்டு கொண்டே போக, கடல் நோய் கண்டு பலர் தங்கள் கனவு நிறைவேறாமலேயே மாண்டுபோயினர். கடற்பயணத்திலேயே இரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க : http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=7600&lang=ta&Itemid=163
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, Thanks giving day, அதிகாலை நவின், அதிகாலை.காம், சென்னை நவின், நவநீ, மனுநீதி
October 17, 2008
“தாம்பத்யம்” – நவநீ
“ஒன்னெ மட்டும் நான் சந்திக்கலேன்னா என்னிக்கோ ஆத்துலயோ, ஒரு கொளத்துலயோ விழுந்து செத்துருப்பேன் சிவகாமி. அந்தப் பகவானாப் பாத்து ஒன்னெ எங்கிட்ட கொண்டுவந்து சேத்துருக்கார். ஏதோ முன் ஜென்மப் பந்தம்! இல்லாட்டி நான் ஒன்னெ சந்திச்சுருப்பேனா சொல்லு. ஒனக்கு ஒன்னும் ஆகாது சிவகாமி! ஒன்னோட கையிலதான் என்னோட உயிரு போகணும்னு அந்தப் பகவான் ஏற்கனவே எழுதிட்டான் சிவகாமி” என்று துக்கம் தொண்டை அடைக்க, பெட்டில் படுத்திருந்த சிவகாமியின் கைகளைத் தன் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தார் பரமசிவம்.
டாக்டர் வந்து பரிசோதித்துவிட்டு, “சுகர் கொஞ்சம் ஹை-யா இருக்கு, ப்ரஷரும் நார்மலா இல்ல, அதான் ஒங்களுக்கு மயக்கம் ஜாஸ்தியா வருதும்மா, மெடிசின்ஸ் தர்றேன்…. எடுத்துக்கங்க, சாப்பாடு நான் சொன்னபடி சாப்பிடுங்க, எல்லாம் சரியாய்டும், நத்திங் டு வொர்ரி, கண்ணெவிட மேலாக் கவனிச்சுக்க ஒங்க கணவர் பக்கத்துல இருக்கறச்ச நீங்க ஒர்ரி பண்ணலாமா? ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணப்படாது, சரியா?” என சிரித்த முகத்தோடு, சிவகாமியிடம் கூறிவிட்டு, “டேக் கேர் மிஸ்டர் பரமசிவம்” என்று சொல்லிச் சென்றார் டாக்டர்.
“சிவம் நான் ஒண்ணு சொன்னாத் தப்பா நெனைக்க மாட்டீங்களே? எனக்கு இப்படி அடிக்கடி ஒடம்பு சரியில்லாம வர்றத நெனச்சா மனசுக்கு ரொம்பப் பயமா இருக்கு. யாருக்கும் தெரியாம நம்ம காம்பவுன்ட்-ல இருக்கற முப்பாத்தம்மன் கோயில்ல வச்சு எனக்கு ஒரு மாங்கல்யம் கட்டிடுறீங்களா? நான் நிம்மதியா மாங்கல்யத்தோட, பொட்டும், பூவுமா நித்ய சுமங்கலியாப் போய்ச் சேருவேன்… சிவம்! செய்வீங்களா?” - என்று கலங்கிய கண்களை தன் முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள் சிவகாமி.
பதறிப்போன பரமசிவன் “என்ன சிவகாமி நீ! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுற! ஒங்கண்ணுக்கு முன்னாடிதானே டாக்டர் சொல்லிட்டுப்போனாங்க, நீ நல்லாருப்பெ சிவகாமி! ஒனக்கு ஒன்னும் செய்யாது சிவகாமி! மாங்கல்யந்தானே! சரி கவலய விடு, நீ சொன்னமாதிரியே நான் வர்ற வெள்ளிக்கிழமை ஒங்கழுத்துல தாலி கட்டுறேன் சரியா? நீ எனக்குன்னே பொறந்தவ சிவகாமி. விசாலம் செத்த அன்னைக்கே, அவகூட நானும் போய்ச்சேந்துருக்கணும், பகவான் என்னெ ரொம்பச் சோதிச்சுட்டார். ஆனா விசாலம் என்னெத் தனியா விடக்கூடாதுன்னு, ஒன்னோட ரூபத்துல வந்து எங்கூடவே வாழ்ந்துகிட்டு இருக்கா, நாம ரெண்டு பேரும் இன்னும் ரொம்ப நாள் உயிரோட இருப்போம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
“ஐயா! ஒங்களுக்குப் போன் வந்திருக்காம், ஆபீஸ்ல கூப்படுறாங்க! ஆயாம்மாள் வந்து சொல்லிச் சென்றாள்.
“ஹலோ! என்னப்பா! சௌக்யமா இருக்கேளா? பணமெல்லாம் டைமுக்கு வந்து சேந்துருக்குமே! நான் ஒரு ப்ராஜக்ட் விசயமா சைனா வந்தேன். கொஞ்சம் டைம் கெடச்சது, அதான் ஏர்போர்ட்ல இருந்து பேசுறேன். நான் யு.எஸ். போனதும் கால் பண்றேன், ஒடம்பப் பாத்துக்கங்க! முடிஞ்சா இந்த இயர் என்ட்-ல பசங்களுக்கு சம்மர் வெகேசனுக்கு சென்னை வர்றதா இருக்கோம். கன்ஃபாம் ஆனா சொல்றேம்பா, வேற ஒண்ணும் சேதி இல்லயே!” ஒரே மூச்சில் மகன் ஸ்ரீகாந்த் எதிர்முனையில்.
“….ம்ம்…ம்.. இல்லப்பா” பரமசிவம் சொல்லி முடித்தவுடன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
பரமசிவம் ஒரு ரிடையடு தாசில்தார். நேர்மையான, கௌரமான மனிதர். தனது மனைவி விசாலம். குழந்தையே இல்லாமல் தவமாய் தவமிருந்து திருமணமாகிப் பதினான்கு வருடங்களுக்குப்பின் பெற்றெடுத்த ஒரே பிள்ளை ஸ்ரீகாந்த். மகன், தனக்கு இது வேண்டுமென்று நினைக்கும்போதே அவன் கண் முன் கொண்டுவந்து அதை நிறுத்தியிருப்பார் பரமசிவம். அளவுக்கு மீறிய சுதந்திரம் பிள்ளைக்குக் கொடுத்தவர். படித்தவராயிற்றே! கேம்பஸ் இன்டர்வியு மூலமாகவே வேலை கிடைத்துத் தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு முறை இந்தியா வந்திருந்தபோது தனது பெற்றோரிடம், தான் ஒரு இந்திய வம்சாவழிப் பெண்ணை விரும்புவதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும், அனுமதி கேட்பதற்குப் பதிலாக தகவல் சொன்னான். சற்று அதிர்ச்சியுற்றாலும், அதனைப் புரிந்துகொண்ட பரமசிவமும் விசாலமும் மகனின் மனம் புண்படக்கூடாதென்பதற்காக ‘சரி’ என்று ஒப்புக்கொண்டனர்.
திரும்ப அமெரிக்கா சென்ற ஸ்ரீகாந்த், மூன்று மாதங்கள் கழித்து, பெற்றோரை அமெரிக்கா அழைத்துச்செல்வதற்கான, விசாவில் தாமதம் ஏற்படுகிறதென்பதால், அதுவரை பொறுக்கமுடியாத வம்சாவழிப்பெண், எங்கே வேறொரு கை மாறிவிடுமோ என்று திருமணத்தை முடித்துவிட்டு வழக்கம்போலப் பெற்றோருக்குத் தகவல் சொன்னான். இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் கணவர் இவற்றையெல்லாம் நினைத்து மனதுக்குள்ளேயே வேதனைப்படுவதையும் பார்க்கப் பொறுக்காமல், பல நாள், இதுபற்றியே பேசிப்பேசிக் கவலையடைந்த விசாலம் அவளுக்கே தெரியாமல் ஒருநாள் தூக்கத்திலேயே போய்ச்சேர்ந்துவிட்டாள். விசாலமும் தன் பிள்ளையும்தான் இந்த உலகம் என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே இருந்த பரமசிவம் தனியாளாய் தவித்து நின்றார்.
அதுவரை கலங்காத பரமசிவம் தன்னையும் மீறிக் கதறிக் கதறிக் கண்ணீர்விட்டுத் தானும் உயிரை விட்டுவிடுவோம் என்று நினைக்கையில்,
“அப்பா ஒங்களவிட்டா எனக்கு யாருப்பா இருக்கா? என்னெ மன்னிச்சுருங்கப்பா, அம்மா என்னெ நெனச்சு ரொம்பக் கவலப்பட்டே போய்ச்சேந்துட்டாங்கப்பா, நீங்களாவது இனிமே எங்ககூட இருங்கப்பா” என்று தன் மகன் தன்னைக்கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது, தான் கூடிய விரைவில் தன்னை அமெரிக்கா அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கொஞ்சம் ஆறுதலாகப் பேசியதும் பரமசிவன் மனம் மாறிவிட்டார்.
ஆனால் நடந்த கதை வேறு, விசா எல்லாம் தயார் செய்துகொண்டு அழைத்துப்போகும்வரை, தன்னைத் தனியாக விட்டால் அம்மாவையே நினைத்து ரொம்பக் கவலைப்பட்டு எதுவும் செய்து கொள்வார் என்ற அக்கறையில், இப்போது தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்றவன்தான். வருடங்கள் 7 ஆகிவிட்டது. வாரம் தவறாமல் மகனிடமிருந்து போன் வரும். ஆனால் விசா இன்னும் வந்தபாடில்லை. பரமசிவனும் இதுவரை அதுபற்றிக் கேட்டதும் இல்லை. தனக்கு மாதாமாதம் வரும் பென்சன் பணத்தையும், மகன் அனுப்பும் பணத்தையும் கூட அந்த இல்லத்துக்கே அவர் கொடுத்துவிடுவதால், அனைவருக்குமே பரமசிவத்தின்மேல் மதிப்பும் மரியாதையும் அதிகம். பரமசிவத்தின் ஆலோசனையின் பேரில் இப்போது முதியவர்கள் மட்டுமல்லாது ஆதரவற்ற சில குழந்தைகளையும் அந்த இல்லம் தத்தெடுத்துக்கொண்டது.
பரமசிவனைச் சிவகாமி தன்னுடைய 50-வது வயதில் சந்தித்தாலும், தனக்குப் பரமசிவன் மேல் அளவுகடந்த மரியாதை, இதுவரை உணராத ஒரு பாச உணர்வு. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனக்கு ஏதோ நெருங்கிய சொந்தம் கிடைத்தது போன்ற ஒரு தெளிவு. தனக்கென்று கடவுள் இவரை அனுப்பியிருக்கிறார் என்றெல்லாம் ஏதேதோ மனதுக்குள் தோன்றிற்று. காதல், காமம், உறவு, இல்லறம், பிரிவு இவையெல்லாம் சிவகாமிக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது கருணை ஒன்றே! தியானம், பக்தி, படிப்பு இவைகள்தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டிருந்த சிவகாமிக்கு தன்மீது பரமசிவம் காட்டும் அக்கறை, பொறுப்பு, பாசம், பரிவு, பகிர்தல் இவையெல்லாம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு அந்தப்பாச உணர்வுகளை மனம் தேட ஆரம்பித்தது. இருவருக்குமே இந்த வயதில் எது தேவையோ அந்தத் தேவைகள் ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிடைத்ததை மனப்பூர்வமாக, ஆத்மார்த்தமாக உணர்ந்தனர். தத்தம் உணர்வுகளைச் சரியான அலைவரிசையில் பகிர்ந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் இருந்துவிட்டால் அந்த உறவில் ஏற்படும் பலமே வீரியம் மிக்கதுதான். அது அங்கு இரட்டிப்பானது. எப்போதும் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். ஒன்று கோவிலில் இருப்பார்கள் அல்லது அங்குள்ள சிறிய பூங்காவில் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
சிவகாமி முதன்முறையாக அழுதது அன்னைத் தெரெசாவின் மறைவின்போதுதான். இரண்டாவது முறையாக இன்றுதான் அழுதிருக்கிறாள். தனக்கு உடல்நிலை மோசமாகி அடிக்கடி படுத்த படுக்கையாகி விடுவதால், எங்கே? தான் பரமசிவத்தை விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்று எண்ணித் தனக்கு மாங்கல்யம் கட்டச்சொல்லும்போதுதான் அழுதிருக்கிறாள். கடவுளிடம் இந்தக் கன்னியுள்ளம் வேண்டுவதெல்லாம் “நான் மறுபடியும் சிவகாமியாகவே பிறக்கவேண்டும். பரமசிவனின் மனைவி ஆவதற்காகவாவது பிறக்கவேண்டும். ஆனால் ஒரு ஆதரவற்ற அனாதையாக மறுபடிப் பிறக்கவே கூடாது” என்பதுதான்.
இன்று சிவகாமி மிகவும் தெளிவான முகத்தோடு காணப்பட்டாள். வெள்ளிக்கிழமையும் வந்தது. அங்குள்ள பிள்ளைகளும், முதியோர்களும் புத்தாடையிலும் இனிப்புகளிலுமாக குதூகளித்து அனைவரும் பேசிக்கொண்டனர். “சிவகாமிப்பாட்டிக்கும் பரமசிவம் தாத்தாவுக்கும் பொன்விழாவாம். அந்தத் தாத்தாவுக்கு 75 வயசாச்சாம். சீக்கிரமே 100-வது வயசுக்கல்யாணமும் கொண்டாடணும், அப்பத்தானே எங்களுக்கெல்லாம் நெறைய ஸ்வீட், ட்ரெஸ் எல்லாம் கெடைக்கும்... ஹையா.. ஜாலி.... பெஸ்ட் ஆப் லக் தாத்தா!’’ தனக்கு 75 வயது ஆகாவிட்டாலும் அனைவரிடமும் அவ்வாறு சொல்லி, எந்த உறவுகளுமே இல்லையென்றாலும், அந்த இல்லம்தான் உலகம் என்று ஆயிரமாயிரம் கனவுகளோடு துள்ளிக்குதிக்கும் கள்ளம் கபடமற்ற பிஞ்சு உள்ளங்களின் முன்னிலையிலும், வாழ் நாளெல்லாம் தான் பெற்ற பிள்ளைகளுக்காக மெழுகாக உருகித் தன்னை அர்ப்பணித்துவிட்டுக் கடைசிக்காலத்தில், எப்பொழுது ஆதரவும், பரிவும், பாசமும் அவர்களுக்குத் தேவையோ அப்பொழுது, பெற்ற பிள்ளைகளாலேயே சுமையென நினைத்துத் தூக்கி வீசப்பட்ட அந்த ஆதரவற்ற முதியோர்களும் வாழ்த்துவதைவிடவா வேறொருவர் வாழ்த்திவிட முடியும்? அந்த அற்புத உலகத்தைத் தமதாக்கிக் கொண்டு அவர்களின் ஆசீர்வாதத்தோடு, வாழ்க்கை, இல்லறம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாசம், பரிவு, கருணை இவைகளே வாழ்க்கை என்று எண்ணி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழ்ந்து மறைந்த அந்த அன்னைத் தெரசாவைப் போன்றே வெள்ளை உள்ளம் படைத்த அந்தக் கன்னி சிவகாமியின் கழுத்தில் பரமசிவன் தாலியைக் கட்டித் தன் சொந்தமாக்கிக்கொண்டு அந்த இல்லத்துக்குள்ளேயே இருவரும் தன் சொந்தங்களான அந்தப் பிஞ்சுக்குழந்தைகளோடு குழந்தைகளாக அடைக்கலம் புகுந்தனர்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:14 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, Navanee, Thaambathyam, Thambathyam, அதிகாலை நவின், தாம்பத்யம், திண்ணை, நவநீ, நவின்
