Showing posts with label கவிஞர் "பாலா"வின் கவிதைத்தொகுப்பிலிருந்து. Show all posts
Showing posts with label கவிஞர் "பாலா"வின் கவிதைத்தொகுப்பிலிருந்து. Show all posts

April 27, 2007

அம்மாவுக்கு
அசைவச் சாப்பாடு
ரொம்பப் புடிக்கும் - அவள்
அப்பாவுக்கும் எங்களுக்கும்
பறிமாறிவிட்டுச் சட்டியில்
மீதமிருப்பதைச் சின்னவனுக்கு
நாக்கு நீளமென்று - எனக்கு எடுத்துப்
பெரியவனுக்குத் தெரியாமல் பதுக்கிவைப்பாள்
அவள் குடிப்பதென்னவோ
வழக்கம்போல "பழைய கஞ்சி"தான்...
தாய்மை
பாலா - சென்னை

April 26, 2007

"உன் பிரிவு"

முதன்முதலாய் வந்த
காதலைச் சொல்லத்துடிக்கும்
ஓர் ஊமையின்
உயிர் வலிக்கும் இந்த வலிக்கும்
வித்தியாசம் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை...

புரியாமல் தவிக்கிறேன்.

"பாலா" - சென்னை

April 08, 2007

"சோதனை"

இங்கு
அச்சகம் வைத்திருப்பவனின்
"பால் கணக்கு"க் கோடுகளெல்லாம்
படைப்பபுகளாகிவிடுகின்றன....
பாவம்...
தவிக்கிறாள் தமிழ்த்தாய்!

பாலா - சென்னை