Showing posts with label நன்றி : கூகிள் குழுமம். Show all posts
Showing posts with label நன்றி : கூகிள் குழுமம். Show all posts

October 08, 2007

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்

நன்றி மக்கள் சட்டம்
அன்பார்ந்த நண்பர்களே. ரமலான் மற்றும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்தச் சில ஆலோசனைகள்...

1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாகப் பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.

3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.

4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.

5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.

10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.

11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரச்சினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.

17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.

(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)

-மக்கள் சட்டம் குழு


October 06, 2007

யூஸ்ஃபுல் பெட்ரோல் பம்ப் டிப்ஸ்

ஆங்கிலத்திற்கு மன்னிக்க : Gas Pumping Tips from someone in the Petroleum pipeline business!!

I've been in petroleum pipeline business for about 31 years, currently working for the Kinder-Morgan Pipeline here in San Jose, CA. We deliver about 4 million gallons in a 24-hour period from the pipe line; one day it's diesel, the next day it's jet fuel and gasoline. We have 34 storage tanks here with a total capacity of 16,800,000 gallons. Hereare some tricks to help you get your money's worth.
Tip 1.
Fill up your car or truck in the morning when the temperature is still cool. Remember that all service stations have their storagetanks buried below ground; and the colder the ground, the denser the gasoline. When it gets warmer gasolineexpands, so if you're filling up in the afternoon or in the evening, what should be a litre is not exactly a litre. In the petroleumbusiness, the specific gravity and temperature of the fuel (gasoline, diesel, jet fuel, ethanol and other petroleum products) are significant. Every truckload that we load is temperature- compensated so that the indicated gallonage is actually the amount pumped. A one-degree rise in temperature is a big deal for businesses, but service stations don't have temperature compensation at their pumps.
Tip 2.
If a tanker truck is filling the station's tank at the time you want to buy gas, do not fill up; most likely dirt and sludge in the tank is being stirred up when gas is being delivered, and you might be transferring that dirt from the bottom of their tank into your car's tank.

Tip 3.
Fill up when your gas tank is half-full (or half-empty), because the more gas you have in your tank the less air there is andgasoline evaporates rapidly, especially when it's warm. (Gasoline storage tanks have an internal floating 'roof' membrane to act as a barrier between the gas and the atmosphere, thereby minimizing evaporation).
Tip 4.
If you look at the trigger you'll see that it has three delivery settings: slow, medium and high. When you're filling up do not squeeze the trigger of the nozzle to the high setting. You should be pumping at the slow setting, thereby minimizing vapors created while you are pumping. Hoses at the pump are corrugated; the corrugations act as a return path for vapor recovery from gas that already has been metered. If you are pumping at the high setting, the agitated gasoline contains more vapor, which is being sucked back into the underground tank so you're getting less gas for your money .Hope this will help ease your 'pain at the pump'

September 29, 2007

விட்டமின்கள்

விட்டமின் E, விட்டமின் C, B விட்டமின்கள், விட்டமின் D, கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்பு : சில வருடங்கள் முன்பு வரை மல்டி விட்டமின் மாத்திரைகள் கொஞ்சம் அபூர்வம். இப்போது நிறைய புதுப்புது மாத்திரைகள், டானிக்குகள் வந்து விட்டன. அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் இருபாலருக்கும் வெவ்வேறு வயதில் தினமும் பெற வேண்டிய விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருள்களின் அளவை பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் பத்தில் ஒருவர் தான் சரியான அளவு விட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்களை உணவு மூலமாக பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவை உட்கொள்வதே
இல்லை. இதனாலேயே தற்போது மருத்துவர்கள் அதிக அளவில் மல்டி விட்டமின்களைப் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. நீங்கள் விட்டமின் மாத்திரை அல்லது தாது புஷ்டி டானிக் உட்கொள்ள நினைத்தால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

விட்டமின் E:
தினசரி அளவு அபாய அளவு 15mg (சிந்தெடிக் Eயில் 33 IU அளவு) 1000 IU அளவு - உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக் கூடியது. கண்ணில் காட்ராக்ட் ஏற்படுவதைத் தவிர்க்கும். அல்ஜைமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயின் முன்னேற்ற வேகத்தைக் குறைக்கும். இதைத்தவிர ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கும். பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'ஜெப்ரி ப்ளும்பெர்க்' என்பவர் ஒரு நாளைக்கு 100 முதல் 400 IU அளவு இந்த விட்டமினைப் பெறுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறார். அபாய அளவு தாண்டி உட்கொண்டால் மூளை உறைந்து போக வாய்ப்புண்டு (Haemorrhage). மேலும் ரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதால் காயம் பட்டால் சிரமமும் ஏற்படும்.

விட்டமின் C:
தினசரி அளவு அபாய அளவு பெண்களுக்கு 75mg ஆண்களுக்கு 90mg தொடர்ந்து 2000mgக்கு மேல் விட்டமின் C - யால் சளி தடுக்கப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சளி பிடிக்கும் ஆரம்பகட்டங்களில் அதிக அளவு விட்டமின் C - யை தினமும் உட்கொள்பவர்களுக்கு சளியின் தாக்கம் குறைவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளுக்குத் தேவையான அளவு சராசரியாக ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றில் கிடைக்கிறது. புகைப் பிடிப்பவர்கள் மேலும் ஒரு 35mg அளவு உட்கொள்ள வேண்டும். அபாய அளவு மீறினால் வயிற்றுப் பிடிப்பு, மூச்சடைப்பு, கழிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளில் 200mg அளவைத் தாண்டினாலே குடலின் உறிஞ்சும் தன்மை குறையும், குடலில் வருகின்ற கழிவுப் பொருட்களில் நீர் உறிஞ்சப்படாவிட்டால் மலம் கழிச்சலாகப் போகும்.

B விட்டமின்கள்:
தினசரி அளவு அபாய அளவு 50 வயதிற்குள் 1.3mg 50 வயதிற்கு மேல் ஆண்கள் 1.7mg பெண்கள் 1.5mg 1000mgக்கு அதிகமான போலிக் அமிலம். B6 - 100mg. போலிக் அமிலம் (Folic Acid) (B12 மற்றும் B6) இதயத்தைப் பாதுகாக்கும், பிறப்பில் ஏற்பட்ட குறைகளை நீக்கும், வயோதிகத்திலும் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ரத்ததில் உள்ள ஹோமோசிஸ்டீன் (homocysteine) எனும் பொருளின் அளவைச் சீராக வைத்திருக்கும். இந்த அளவு
உயர்ந்தால் இதய நோய், சுவாசக் கோளாறுகள் முதலியவைகளுக்கு வழி வகுக்கக் கூடியது. கொஞ்ச நாளாகவே மூளை வழக்கமான சுறுசுறுப்போடு இல்லையே என்று தோன்றினால் உங்களுக்கு விட்டமின் B12 குறைபாடு இருக்கலாம். இதன் அளவு மிகக் குறைந்தால் தளர்வு, நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும். வயோதிகர்களுக்கு உணவிலிருந்து B12ஐப் பெறும் தன்மை குறைவதால் அவர்களுக்கு B12 குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அபாய அளவைத் தாண்டினால் போலிக் அமிலம் B12 குறைபாட்டை நிறைவு செய்வதற்கு பதிலாக நரம்புச் சிதைவில் முடியும். தொடர்ந்து அதிக அளவு உட்கொண்டால் நிலை தடுமாற்றம், மரத்துப் போதல், தசை பலவீனம், நரம்புச் சிதைவு ஆகியவை ஏற்படக் கூடும். ஆனால் தேவையான அளவை மிஞ்சும் ஆபத்து சாதாரணமாக ஏற்படுவதில்லை.

கால்சியம்:
தினசரி அளவு அபாய அளவு 50 வயது வரை 1000mg 50 வயதுக்கு மேல் 1200mg - 2500mg வலுவான பற்களுக்கும், வலுவான எலும்புகளுக்கும் கால்சியம் அதிக அளவில் தேவைப்படுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) நோயைத் தவிர்க்கவும் கால்சியம் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி தேவைப்படும் அளவை சமீபத்தில் கூட்டி அறிவித்துள்ளார்கள். சாதாரணமாக மூன்று அல்லது நான்கு டம்ளர் ஸ்கிம்டு பாலில் ஒரு நாளின் தேவை கிடைக்கும். அபாய அளவைத் தாண்டினால் மலச்சிக்கலும், சிறுநீரகக் கோளாறுகளும் உருவாகலாம்.

விட்டமின் D:
தினசரி அளவு அபாய அளவு 50 வயதிற்குள் - 200 IU 50 முதல் 70 வரை - 400 IU 70 வயதிற்கு மேல் - 600 IU தொடர்ந்து 1000 - 2000 IU - கால்சியம் மட்டும் தனியே உடலுக்கு பயனளிக்காது. அத்துடன் இந்த 'சூரிய ஒளி' விட்டமினும் கிடைக்கபெற வேண்டும். கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப் பொருட்களை நமது உடல் ஏற்றுக் கொள்வதற்கு விட்டமின் D உதவி செய்கிறது. இது பால், முட்டையின் வெள்ளைக் கரு போன்ற மிகச் சில உணவுப் பொருள்களில்
மட்டுமே கிடைக்கிறது. ஆனால் சூரிய ஒளி உடலில் படும்போது தோலின் அடியில் இது உற்பத்தியாகிறது. ஆகையால் நீங்கள் வெயிலே படாதவராகவோ, மொடாப் பால்குடியராகவோ இல்லாவிட்டால் உங்களுக்குத் தேவையான அளவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். அபாய அளவைத்
தாண்டி தொடர்ந்து உட்கொண்டால் மூச்சடைப்பு, தளர்ச்சி, இதயத் துடிப்பு
வேறுபாடு ஆகியவை ஏற்படக்கூடும்.

மக்னீசியம்:
தினசரி அளவு அபாய அளவு ஆண் - 420mg பெண் - 320mg 320mg - பல்லுக்கும், எலும்புக்கும் அத்தியாவசியமான மற்றொரு தாதுப் பொருள். முழு தானியங்கள், கடலை போன்ற வகைகள், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து
உடலுக்குத் தேவையான மக்னீசியம் கிடைக்கிறது. ஒரு சராசரி மல்டிவிட்டமின் மாத்திரை தினசரி தேவையில் 25% வரை அளிக்கிறது. 350mg-க்கு மேல் மாத்திரையாக உட்கொண்டால் கழிச்சலும், மூச்சடைப்பும்
ஏற்படும்.

இரும்பு:
தினசரி அளவு அபாய அளவு பெண் 50 வயதிற்குள் - 15mg 75mg - குழந்தைகள், விடலைகள் (Teenagers), குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம்
ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.

August 27, 2007

பொறுத்தது போதும்! பொங்கி எழுவோம்! பட்டினி கிடக்கும் நம் சகோதரர்களுக்கு உணவு, மருந்து கொண்டு செல்வோம்! பழ. நெடுமாறன்

யாழ் நகரம் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அங்கு வாழும் ஐந்து இலட்சம் மக்களும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க சிங்கள அரசு முடிவு செய்தது. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் 'ஏ9' நெடுஞ்சாலையை அடைத்தது. உணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் இன்றியமையாத பொருட்கள் எதுவும் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. மக்கள் சொல்லொணாத துன்பத்திற்கு ஆளானார்கள். பொருட்களின் விலை பலநூறு மடங்கு உயர்ந்தது. மக்கள் பட்டினியால் வாடினார்கள். நோயாளிகளும் முதியோர்களும் குழந்தைகளும் போதுமான மருந்துகள் இல்லாமல் சாவைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். தங்கள் கண் எதிரிலேயே தங்களால் நேசிக்கப்படுபவர்கள் துடிதுடித்து சாவதைப் பார்த்து மக்கள் கண்ணீர் சிந்தினர். இந்த செய்திகள் எல்லாம் அன்றாடம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தபோது தமிழக மக்களைச் சோகம் கவ்விக் கொண்டது. துயருறும் தனது சகோதர மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் அளிக்க அவர்கள் துடியாகத் துடித்தனர். ஆனாலும் இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள கடல் அதைத் தடுத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் காலஞ்சென்ற எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது யாழ்ப்பாணப் பகுதியில் பெரும் புயல் வீசி மக்களுக்கும் சொத்துகளுக்கும் பெரும் சேதம் நேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டவுடன் இந்திய அரசின் அனுமதியை உடனடியாகப் பெற்று இரண்டு கப்பல்கள் நிறைய உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்து உற்றுழி உதவினார் அவர்.


அதைப் போல இப்போதும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் யாழ் மக்களின் பட்டினியைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார் என மக்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பாகவே நின்று விட்டது. சிங்கள இனவெறி அரசின் மனித நேயத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. ஆனால் அண்டையில் இருக்கக் கூடிய இந்திய அரசு இதற்குக் கண்டனம் தெரிவிக்கவே இல்லை. தமிழக, இந்திய அரசுகளின் இந்தப் பாராமுகப் போக்கினைப் பார்த்து வேதனை அடைந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கிற அமைப்புகள் ஒன்றுகூடி யாழ் மக்களின் துயரைத் துடைக்க முடிவு செய்தன. கடந்த 9.12.06 அன்று யாழ்ப்பாண மக்களுக்கு உணவு, மருந்துகள் திரட்டி அனுப்புவது எனத் தீர்மானித்தனர். அதற்கிணங்க தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் வீடுவீடாகச் சென்று இரு கையேந்தி மக்களிடம் பொருட்களைப் பெற்றனர். ஏழையெளிய மக்கள் கூட தாமாகவே முன்வந்து தங்கள் சக்திக்கு மீறிய அளவிற்கு பொருட்களை அள்ளித் தந்தனர். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதைப்போல சாதாரண மக்கள் முன்வந்து கொடுத்த இந்தப் பொருட்களின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேலாகும். 28.012.07 அன்று இந்தப் பொருட்களை யாழ்ப்பாணம் அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு உதவும்படி இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர். 9.2.07 அன்று இதற்கான அனுமதியை வழங்கும்படி இந்திய அரசை வேண்டிக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனாலும் மார்ச் மாதம் வரை எவ்வித பதிலும் இல்லை. அதற்குப்பின் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ., பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசு ஆகியோர் பிரதமரிடம் நேரிலும் கடிதம் மூலமும் இப்பிரச்சனையை தெரியப் படுத்தினார்கள். அவரும் அதனைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனாலும் மே மாதம் வரை இந்திய அரசின் அனுமதிக் கடிதம் வரவில்லை. அதற்குப் பிறகு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சார்பில் பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து பல்லாயிரக்கணக்கான கடிதங்களும் தந்திகளும் தொலைநகலிச் செய்திகளும் அனுப்பப்பட்டன. இதற்குப்பின் 5.6.2007 அன்று சென்னையில் அத்தனை அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் உண்ணாநோன்பு போராட்டத்தை நடத்தினார்கள். 13.06.07 அன்று ஜெனிவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்திற்குச் சென்று அங்கு தென்ஆசிய பகுதிக்குப் பொறுப்பாளராக இருக்கும் உடோ வாகன் மெய்க் என்பவரை நேரில் சந்தித்து இது குறித்து நான் முறையிட்ட போது அவர் அளவுகடந்த வியப்பு அடைந்தார். செஞ்சிலுவைச் சங்கம் பொதுவான மனித நேய அமைப்பாகும். உலக நாடுகளின் அரசுகள் எதுவாக இருந்தாலும் அதனுடைய தொண்டுகளுக்கு துணை நின்றே வந்திருக்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சனையில் இந்திய அரசு அனுமதி தரத் தயங்குவதின் பின்னணி என்ன என்பது குறித்து இந்திய அரசுடன் உடனடியாகத் தொடர்பு கொள்கிறேன்'' என்று கூறினார்.


கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக நாம் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகப் போயின. எளியவர்களான நமது தோழர்கள் வீதிவீதியாக - வீடுவீடாகச் சென்று குருவிகள் சேர்ப்பது போல் சேர்த்த பொருட்கள் பசியால் வாடும் சகோதர மக்களுக்கு அனுப்ப முடியாமல் வீணாகி வருவதைக் கண்டு மனம் நொந்தார்கள். வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்ட அரிசி கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போகத் தொடங்கிற்று. மருந்துகள் அதன் மேல் பொறிக்கப்பட்டிருக்கும் தேதிகளைக் கடந்து கொண்டிருந்தன. இதையெல்லாம் நமது தோழர்களின் உள்ளங்களையும் அள்ளிக் கொடுத்த பொது மக்களின் உள்ளங்களையும் எந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாக்கியிருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு பிறந்தது. கடந்த 04.08.07 அன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விழுப்புரத்தில் தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அந்த மாநாட்டில் பேசினார்கள்.


செப்டம்பர் 7ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட்டு இராமேசுவரம் நோக்கியும் திருச்சியிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் நோக்கியும் இரு அணிகளாகச் சென்று செப்டம்பர் 12ஆம் தேதியன்று படகுகளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் செல்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்ட முடிவினை நாம் மேற்கொள்வதற்கு இந்திய, தமிழக அரசுகளே பொறுப்பாகும். இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக இந்தப் பொருட்களை அனுப்புவதற்கு நாம் செய்த முயற்சிகள் வீணாகிவிட்ட நிலையில் நாமே அந்தப் பொருட்களை படகில் ஏற்றிக் கொண்டு செல்வது என்பது சட்ட விரோதமாக இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் கடமை தவறியதாகாது. நமது சகோதர மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை. இந்த கடமையை நாம் செய்ய முற்படும்போது இந்திய கடற்படை நம்மைத் தடுக்கலாம். சிங்கள கடற்படை நம்மை சுடலாம். எது நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் நமது கடமையை நாம் துணிந்து செய்வோம். செப்டம்பர் 12ஆம் தேதி நாகப்பட்டினம், இராமேசுவரம் கரைகளில் கடல் அலைகளோடு மக்கள் அலை போட்டியிடட்டும். கூடுவோம்! உயிர்காக்கும் பொருட்களைக் கொண்டு செல்வோம்!! பட்டினியால் துடிக்கும் தமிழர்களுக்கு அளிப்போம்!! வரலாற்றுக் கடமையாற்றத் தமிழர்களே திரண்டு வருக!!

August 23, 2007

கர்நாடகாவில் நாங்கள்தான் பூர்வக்குடிகள்! நாங்கள் பிழைக்கவந்த தமிழர்கள் இல்லை

பெங்களுர் வாழ் தமிழ் மக்களுகெல்லாம் தாம் இம் மண்ணின் மைந்தர் அல்ல பிழைக்க வந்த மக்கள் என்ற தவறான என்ணம் இருக்கின்றது. அந்த கருத்தாக்கம் தவறு தமிழரே இம் மண்ணின் பூர்வ குடிகள் என்பதை ஆதாரத்துடன் நிறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
2001-வருட மக்கள் தொகை கணக்குப்படி கருநாடகத் தமிழரின் எண்ணிக்கை 95-இலக்கம். அவர்கள் எல்லாம் வந்தேறிகளாய் இங்கு வந்தவர்களா? தொன்று தொட்டு இங்கேயே வாழ்ந்து வந்தவர்களா? இதற்கு விடை காண, வரலாற்றை விவரிக்க வேண்டும். 1956-ம் ஆண்டில் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன, அதன் பிறகு, பழைய சென்னை மாகாணத்திலிருந்த எல்லையோரப் பகுதிகளான பெங்களூர், கோலார் தங்கவயல், குடகு, பெல்லாரி, சித்திரதுருகம், கொள்ளேகாளம் போன்ற இடங்களில்தான் கரு நாடகத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கெல்லாம் அப்பகுதிகளுடனான தனி வரலாறு உண்டு. பத்திராவதி, சிக்கமக்ளூர், சிவமுகா போன்ற பகுதிகளில் உள்ள இரும்பாலைகள், கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய கண்கானி முறையில் ஆசைக்காட்டியும் வலியவும் தமிழர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பணிக்கமர்த்தப்பட்டனர். கருநாடகத்தின் உட்பகுதியில் தனி பண்பாட்டு தீவுகளாக வாழ்வமைத்துக் கொண்டவர்கள் இவர்கள். ஆனால் பெங்களூர் மற்றும் தங்க வயல் தமிழர்களின் நிலையோ, இவற்றிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை. பெங்களூர் தமிழர்கள் நகரின் மக்கள் தொகையில் தற்போது 35% விழுக்காடுகள் உள்ளனர். முசுலிம்களோ, பெங்களூரில் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். கன்னடரோ, கருநாடகத்தின் தலைநகரில் 25% விழுக்காடுதான் உள்ளனர். தெலுங்கரில் சிலரும் மராட்டியரில் சிலரும் தங்களை கன்னடர் என்றே சொல்லிகொள்கின்றனர். பழைய சென்னை மாகாணத்தில் இருந்து சில பகுதிகளையும், ஐதராபாத் நிசாமிடமிருந்து சில பகுதிகளையும், பம்பாய் மாகாணத்திருந்து சிலபகுதிகளையும், மைசூர் மாகாணத்தின் சில பகுதிகளையும் இணைத்து கருநாடக மாநிலம் அமைக்கப்பெற்ற பின்னரே கன்னடர்கள் பெங்களூர் நகருக்கு பெரிய அளவில் வந்து குடியேறத் தொடங்கினார்கள் என்பதே வரலாற்று உண்மை.
பெங்களூரிலும், கோலார் தங்க வயலிலும் காணப்படும் தமிழர்-கன்னடர் இனப்பூசல் தமிழர்கள் பிழைப்புத் தேடி வந்தேறியதால் வந்த ஒரு பூசல் அன்று. தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த தமிழகத்தின் எல்லைப்புறத் தமிழ்ப்பகுதிகளை 1956-ம் ஆண்டில் "மொழிவழியில்" கன்னடருக்கு அரிந்துகொடுத்தமையால் வந்த வினையே அப்பூசலாகும். அண்மையில் பெங்களுருக்கு வந்து குடியேறிய கன்னட வெறியர்கள், இப்பெங்களுரின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல், இப்பகுதியில் தொன்று தொட்டுவாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கு அண்டி பிழைக்க வந்தவரே என்று சொல்லித் தமிழரை விரட்டவும் அழிக்கவும் பார்க்கின்றனர். இந்நிலையில், பெங்களுரின் வரலாற்றை சுருங்கப் பார்க்கலாம். பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களுர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத்தலை நகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கி.பி.997-ம் ஆண்டில் ஓசக்கோட்டை முதலான இம் மாவட்டத்தின் பல பகுதிகள் சோழ அரசன் இராசராசதேவனால் வெல்லப்பட்டன. மாகடிப் பட்டணத்தை 1139-ம் ஆண்டில் நிறுவியவர்கள் சோழர்கள்தான். இன்று எலவங்கா என்றழைக்கப்படும், பெங்களுர் பகுதி சோழவள நாட்டின் ஒருபகுதியாக இருந்தது. அதற்கு "இலைப்பாக்கநாடு" என்று பெயர். இந்த இலைப்பாக்கநாடு ஹொய்சோழர்கள் ஆட்சியில் "எலவக்கா" என்றாகி பிறகு "எலவங்கா" என்று திரிந்தது. சோழ கங்கர்கள் அல்லது நுளம்பர்கள் என்னும் சிற்றரச மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலி சோழர்க்கு அடங்கிய சிற்றரசாக ஆண்டு வந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. மைசூர் மாவட்டத்திலுள்ள தலைக்காட்டை தலைநகராக் கொண்டு ஆண்டு வந்த கங்கர்கள் தமிழையே பேசி வந்ததால், தமிழ் கங்கர் எனப்பட்டனர். Source : (பெங்களுரில் சோழர் ஆட்சியா..? )
தொடரும்
அன்புடன்அரவிந்தன்
பெங்களூர்

August 13, 2007

தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்

"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்து கொண்டு போன குரலிலும் இவ்வளவு கோபம் கொண்டு சொல்கிறாள், அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் வாடிய மலரென கிடக்கும் கௌசிகா.
அவள்தான் உதயகுமார், பாக்கியலட்சுமியின் முதல் கனவு. அவர்களை பொறுத்த வரை குடும்பத்தின் நம்பிக்கை. குமுளமுனை மகா வித்தியாலயத்தின் அனைவரும் அறிந்த உயர்தரம் பயிலும் கெட்டிக்கார மாணவி அவள். அவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன் "தமிழ்த்தினம்" என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள். போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே, செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர்.
ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது. அப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் "கிபிர்" எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன. ஒலியை விட வேகம் கூடிய, இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூடச் செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்துக் கொள்ள முடியமால் போனது. தங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோசச் செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும் இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள்.
குண்டுகள் அவள் வயிற்றைக் கிழித்துக் குடல்களை பெருஞ்சேதம் செய்திருந்தன. மருந்துவர் அவளின் காயத்தின் நிலை பற்றி இன்னொரு மருந்துவருடன் ஆங்கிலத்தில் உரையாடியது அவளது காதிலும் விழுந்தது.
(இதுதான் கலைப்பிரியா)

கௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது. ஒகஸ்ட் 14-ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கௌசிகாவின் கட்டிலைச் சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.

"அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா" "தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்" "அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா" சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்" "எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது.

என்னை கட்டியணைம்மா..." "எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ" "அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா" "கஜி...தேவாரம் பாடு" "பாய்....பாய்....பா....ய்ய்...இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்

(ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)