May 08, 2007

ப்ரகாஷ்ராஜ் பேட்டி

வேற்றுமொழிக்காரராக இருந்தாலும் மொழியின் முக்கியத்துவத்தை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதானால்தான் இன்றும் அவரால் தனக்கென ஒரு இடத்தைப் பற்றிக்கொள்ள முடிகிறது. என்னைப் பொருத்தவரையில் அவர் ஒரு நல்ல நடிகன், கலைஞன் என்பதையும் தாண்டி நல்ல ஒரு ரசிகன். நான் நேரில் பார்த்த ஒரு காட்சி, நான் கடந்த ஆண்டு சென்னையிலிருந்த போது எனது நண்பனின் படத்திற்கு 'கால்ஷீட்' சம்பந்தமாக பார்க்கப் போயிருந்தோம். அன்று பலத்த மழை, காரை நிறுத்திவிட்டுப் பார்த்தால் 'மனிதர் மழையில் நனைந்துகொண்டு' எதையோ நினைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். இது வெளித்தோற்றத்துக்கு வேண்டுமானால் அதிகப்பிரசிங்கித்தனமாக இருக்கலாம். ஒரு நல்ல கலை ரசனையுடைய, இந்த உலகத்தை ரசிக்கக் கூடிய ரசிகன் என்பதற்கு இதைவிட வேறென்ன சொல்ல முடியும்? சரி அவர் 'மொழி' பற்றி என்ன சொல்கிறார்....Please click'Heading'

புதிய கட்சி

எதிர்பார்த்தபடியே நடிகர் சரத்குமார் வெகுவிரைவில் (இரண்டு மாதத்திற்குள்) புதிய அரசியல் கட்சி துவங்குகிறார்.

"வீதிக்கொரு கட்சி உண்டு
ஜாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி கேட்க மட்டுமிங்கு நாதி இல்ல
இது நாடா இல்ல வெறுங்காடா?
இதைக்கேட்க யாருமில்லை தோழா"

வேறென்ன பாடுவது?...சரி பொருத்திருந்து பார்ப்போம்.

சுதந்திரம் எப்போது?? - திபெத்

திபெத்

சுதந்திரம் எப்போது?? - திபெத்

May 07, 2007

"சென்னை சங்கமம்" - 1

"சென்னை சங்கமம்"
கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய நம் தமிழ்மொழி, நமது கலாச்சாரம், கலை, இலக்கியம், இசை, பண்பாடு, வேதம், நமது கிராமியக்கலை இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நம்மையறியாமலேயே ஒரு வித ஈர்ப்பு, உணர்வு உண்டாகும். இவைகளையெல்லாம் நினைத்துப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி இது. இவற்றைப் பார்த்துப் பிரமித்துப் போனதோடு, தயவுசெய்து இதே பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இன்னொரு வீடியோவையும் பார்க்கத் தவறாதீர்கள்! அது "கலாச்சாரச் சீர்கேடு" என்ற தலைப்பில் இருக்கும்.

"சென்னை சங்கமம்" - 2

"சென்னை சங்கமம்" - 3

"சென்னை சங்கமம்" - 4

"சென்னை சங்கமம்" - 5

"சென்னை சங்கமம்" - 6

"கலாச்சாரச் சீர்கேடு"

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
எதிர்வரும் 20 - 25 ஆண்டுகளில் "இந்தியா உலக நாடுகளில் முதன்மையான நாடாக இருக்கும்" என்ற நமது கனவுகள் எங்கே? இந்தத் தலைமுறைகள் போய்க்கொண்டிருக்கும் பாதைகள் எங்கே? எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் என்பது உண்மைதான். அதே கையில் இருக்கக் கூடிய சிகரெட்'டைப் போல ஊதித் தள்ளிவிடுவார்களோ என ஒரு புறம் அச்சமாகவும் உள்ளது. எது எப்படியோ? நமது இந்தியா முன்னேறி உலக நாடுகள் வியக்கும் வண்ணம் உயர்ந்து நிற்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அதே நேரத்தில் அமெரிக்க மங்கையர்கள் போல அனைவரின் கையிலும் சிகரெட்-களும் உயர்ந்து நிற்கும். பிறகு அனைவரும் சொல்வார்கள் "தாயைப்போல பிள்ளை நூலைப்போல ஜீன்ஸ்" என்று. சிகரெட் பிடிப்பதென்று முடிவெடுத்தபின் யார் பார்த்தாலென்ன? சவூதி அரேபிய மோக்கா என நினைத்துக்கொண்டு கலாச்சாரத்தை சந்திசிரிக்க வைக்கும் இந்தத் தலைமுறையை .......ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை. வாழ்க பாரதம்!!

May 06, 2007

இந்த வாரம் ஹரிஹரனின் குரலில்..



தவிப்பு

கையிலொரு குழந்தை
இடுப்பிலொரு குழந்தை - அந்தத் தாய்
சாலையின்

பாதியைக் கடக்கும்போது
'க்ரீன்' சிக்னல்...........

- நவநீ

உன்னி கிருஷ்ணன்

கர்நாடக இசையும் திரைப்பட இசையும் அவ்வப்போது சங்கமித்துக்கொண்டாலும், முழுக்க முழுக்க கர்நாடக இசையாகவே திரைப்படம் இருந்தால், 'பார்க்கும் கூட்டம் புரியாமலே தலையாட்டும் கூட்டமாக மட்டுமே இருக்கும்' என்று சொன்ன ஒரு கவிஞனின் வார்த்தை நிரூபனமாகிவிடும். எனவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, எந்தவகையில் கலந்திருந்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் என்று கர்நாடக இசை மற்றும் திரைப்படப் பின்னனிப் பாடல் என்ற இரண்டிலுமே தேர்ந்த திரு.உன்னி கிருஷ்ணன் சொல்வதைப் பார்ப்போம்.




May 05, 2007

புதிய கட்சி

சரத்குமார் தொடங்கப்போகும் புதிய கட்சி பற்றி, அவரே சொல்கிறார்!

பகவான் ரமண மகரிஷி

அந்நிய நாட்டுக்காரர்களுக்கு தெரிந்த நமது மண்ணின் பெருமை, அருமை, அற்புதம், நடந்து கொண்டிருக்கும் மகிமைகள் பற்றி நமக்கும் தெரியவேண்டாமா? கலாச்சாரத் தொடர்பே இல்லாத அவர்களே வியந்து போகும் அரிய பெரிய விஷயங்களைப் பற்றி நாமும் தெரிந்து கொள்வோம்.

பகவான் ரமண மகரிஷி

அவருடைய வாழ்க்கை எப்படித் தொடங்கியது?

How to root out sexual impulse?

திருவாசகம் - 1

நமச்சிவாய வாழ்க! நாதம் தாழ் வாழ்க!!திருவாசகத்துக்குருகாதார் ஒரு வாசகத்துக்குமுருகார்!

திருவாசகம் - 2

திருவாசகம் - 3

திருவாசகம் - 4

திருவாசகம் - 5

திருவாசகம் - 6

திருவாசகம் - 7

திருவாசகத்துக்குருகாதார் ஒரு வாசகத்துக்குமுருகார்!

"காஞ்சிப் பெரியவர்"

'If U have more than U require, U R a Thief"

May 04, 2007

"இசைஞானி இளையராஜா"

தொடர்ந்து "இசைஞானி இளையராஜா"வின் பேட்டி வரும்....

நானுனை நீங்கமாட்டேன்! நீங்கினால் தூங்கமாட்டேன்!

"கவிஞர் வாலி" "இசைஞானி இளையராஜா"

நம்மூரு நையாண்டி மேளக்கச்சேரி பாப்போமா? 'க்ளிக்' பண்ணுங்க!

May 03, 2007

பூங்காத்து திரும்புமா?

என்னைப் பொருத்தவரையில் எத்தனை முறை இந்தப் பாடல்களைக் கேட்டாலும், மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒரு சுகமான 'வலி' இருப்பதை உணரமுடிகிறது. உங்களுக்கு??

நிலாவே வா

பனி விழும் இரவு

கண்ணே கலைமானே!

மன்றம் வந்த தென்றலுக்கு..

என்ன சத்தம் இந்த நேரம்??

May 02, 2007

கவிப்பேரரசு வைரமுத்துவின் திரையுலக முதல் பாடல்

துள்ளியெழுந்தது பாட்டு

பாலம் இடிப்பதற்குமுன் பெயர் மாற்றத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

விஸ்வஹிந்து பரிஷத் இராமர் பாலத்தை இடித்தால் நாடு தழுவிய போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் 'நாசா' கண்டுபிடித்த பழம்பெரும் பாலத்திற்கு 'ஆதாம் ப்ரிட்ஜ்' என்று பெயர் வைத்ததுபற்றி ஏன் வாய் திறக்கவில்லை. ஆக பிரச்சினை அதல்ல, எல்லாமே தேர்தலையும், இந்திய அரசியலையும் உள்நோக்கத்தில் வைத்துக்கொண்டுதான் செயல்படுகிறது. இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் அதற்குக் குரல் கொடுப்போம். ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். To view Dinamalar please click here.
Welcome To Dinamalar.com - Leading National Tamil Daily

பேராசிரியர் இராமநாதன் அவர்களின் பேட்டி :

புவிக்கோளம் சூடாகிக் கொண்டிருக்கிறது; அதன் விளைவுகளை 2000வது ஆண்டில் உணரலாம்’ என்று 20 ஆண்டுகள் முன்னரே கூறினார் பேரா. வீரபத்ரன் ராமநாதன். தி நியூ யார்க் டைம்ஸ் இதை முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஹார்வார்ட், பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள் இந்தக் கூற்றை ‘நான்சென்ஸ்’ என்று இகழ்ந்தார்கள். ஆனால், ராமநாதன் சொன்னதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்பட்டது.

இராமநாதன் அவர்கள் :கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் என் தாத்தா விவசாயியாக இருந்தார். பிறந்தது சென்னையில். பிறகு திருச்சி, மதுரை, பங்களூரு ஆகிய இடங்களில் படித்தேன். அப்பா ராணுவத்தில் இருந்த பின் விற்பனையாளராக மாறினார். அது எங்களைப் பல ஊர்களுக்கும் கொண்டு சென்றது. பங்களூரில் பள்ளிப் படிப்பை முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எஞ்சினியரிங் படிக்கச் சென்றேன். செகந்திராபாதில் குளிர்சாதனத் துறையில் சிறிதுகாலம் பணியாற்றினேன். அப்போது தான் எனக்குப் பொறியியல் பிடிக்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தேன்.

பேராசிரியர் இராமநாதன் அவர்கள் 'தென்றல்' (அமெரிக்கா) மாத இதழுக்கு அளித்த மிக மிக உபயோகமான பேட்டியைத் தொடர்ந்து படிக்க, தயவு செய்து 'தலைப்பை'க் 'க்ளிக்' செய்யவும். நீங்கள் 'தென்றல்' மாத இதழின் வாசகர் இல்லையெனில் இலவசப் பதிவு செய்துகொள்ளவும்.
பேரா.வி.ராமநாதன்

ஹரிஹரன் குரலில்.....




'தண்ணீர் தேசம்' - கவிப்பேரரசு வைரமுத்து

அனுபவம் வேண்டுமா –
இளமையை இழ…
ஆயுள் வேண்டுமா –
போகம் இழ...
கவிதை வேண்டுமா –

உன்னை இழ…
காதல் வேண்டுமா –
இதயத்தை இழ….
வளர்ச்சி வேண்டுமா –

தூக்கத்தை இழ…
வரவு வேண்டுமா –
வியர்வையை இழ…

என் தந்தை எழுதிய "உண்மையான உழவனுக்குத் திருநாளேது" என்ற கவிதைக்கு கிடைத்த பரிசு இந்தத் 'தண்ணீர் தேசம்'. (அந்தக் கவிதையை வெகுவிரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.) அப்போதுதான் நான் இதனைப் படிக்க நேர்ந்தது. இது ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஒன்று. எங்கு போகிறோம் என்று தெரியாமலேயே வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் நாமும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் கம்ப்யூட்டர் யுகத்தில் கம்ப்யூட்டர் மூலமாகவே நீங்களும் படிக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
(பின் குறிப்பு : நான் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வதற்கு முன்பே படித்துவிட்டேன்)
தொடர்ந்து படிக்க தயவு செய்து கீழுள்ள இணைப்பைக் 'க்ளிக்' செய்யவும்.
http://navneethsmart.googlepages.com/ThanneerDesam.pdf



April 30, 2007

மே தின வாழ்த்துக்கள்!!

உலகத்திலேயே மிகப் புனிதமான நீர்
உழைப்பாளனின் வியர்வை...
இந்த மேதின நாளில் அனைத்துலக உழைக்கும் தோழர்களுக்கும் வாழ்த்துக் கூறுவோம்.
மே தினம்!
உழைப்பவர் சீதனம்!!
என்று கையை மேலே உயர்த்தி, அர்த்தம் தெரியாத அந்த ஐந்து ஆறு வயதுகளிலேயே என் தந்தையோடு சேர்ந்து ஊர்வலங்களில் கோசம் போட்டதை நினைவுகூர்கிறேன்.
இந்த நாளில் நாம் "மாவீரன் பகத்சிங்"கை நினைவு கூர்வதும் மிகப்பொருத்தமாக இருக்கும். பகத்சிங் பற்றி தமிழில் ஒரு முழுமையான திரைப்படம் இதுவரை வரவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் நாம் இந்த வீடியோத் தொகுப்பின் மூலம சிறிது ஆறுதல் அடைவோம்.

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

"மாவீரன் பகத்சிங்"

ஏ இந்தியனே!

இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும், ஏன்? இந்தியா மீது அக்கறை கொண்ட, இந்தியாவைப் பற்றி படித்த, ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் கூடத் தெரிந்த, அறிந்த ஒரு விசயம் என்னவெனில்,
“இந்தியாவுக்கும் அதாவது இராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் (சீறிலங்கா) இடையே இராமாயண காலத்தில், கிட்டத்தட்ட 17,50,000 ஆண்டுகளுக்கு முன், த்ரேதா யுகத்தில் ‘வானர சேனை’களால் சாட்சாத் இராமபிரான் மேற்பார்வையில், முன்னிலையில் பாலம் (வரதி) ஒன்று கட்டப்பட்டது”.
இது படித்ததோடு சரி. உண்மையா? பொய்யா? யாருக்காவது தெரியுமா? ஆனால் ‘நாசா’ (NASA) ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பாலம் இன்றும் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சந்தோசமான விசயம்.

“ஒவ்வொரு இந்தியனும் வேதனைப்படக்கூடிய விசயமும் கூட”

காரணம் அதற்குச் சூட்டியிருக்கக்கூடிய பெயர் “ஆதாம் பாலம்” (ADAM BRIDGE).

ஏ இந்தியனே!
இதுவரை நீ
இளிச்சவாயனாக இருந்தது போதும்!
இனிமேலாவது விழித்துக்கொள்!!


'லண்டன் பாலம்' (LONDON BRIDGE) மற்றும் அமெரிக்காவில் உள்ள 'கோல்டன் கேட் ஆப் அமெரிக்கா' (GOLDEN GATE) போன்றவற்றை "இராமர் பாலம்" என்றோ அல்லது "லட்சுமணர் பாலம்" என்றோ நாம் பெயர் சூட்டினால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இன்னொரு உலக யுத்தம் வெடிக்கும்.

இந்தியனே!
தமிழனே!! சிந்தித்துப்பார்!!!
இதற்காக நீ செய்யப்போவது என்ன?
குறைந்தபட்சம் இந்த விசயத்தை
உனக்குத் தெரிந்த வட்டத்துக்குச் சொல்
காலம் பதில் சொல்லும்!

நீ உன் கடமையைச் செய்தால்…..

பாலம் யார் கட்டியது? யார் மேஸ்திரி வேலை பார்த்தார்? எத்தனை சித்தாள் வேலை செய்தார்கள்? அதில் எந்தெந்த சாதிக்காரன் என்ன பங்கு வகித்தான் என்பதெல்லாம் அடுத்த விசயம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த இராமாயணம், மஹாபாரதம் போன்ற மானுடம் போற்றும் இதிகாசங்களைக் கற்பனை என்று கேலி பேசிக்கொண்டிருக்கும் அரைவேக்காடுகளைக் கண்ணத்தில் அறைந்தாற்போல் விஞ்ஞானம் இன்று பல உண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது, "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி" என்று பேசுவது எத்தனை தூரம் உண்மை? நம் பாரம்பரியம் என்ன? நம் வரலாறு என்ன? அதில் எத்தனை புதிர்கள் அடங்கியிருக்கின்றன? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் தோன்றிய மனிதனின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது? மனிதன் எப்படி வாழ்ந்தான்? நமது கலாச்சாரம் என்ன? நமக்கும் இலங்கைக்கும் உள்ள உறவுகள் எப்படி? இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு விடை சொல்லப்போகும் இந்த விண்வெளிப் புகைப்படங்களைப் பாருங்கள்.

நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் இவைகளெல்லாம் ஆராய்ச்சியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் வேண்டுமானால் வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த ப்ரபஞ்சத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், ஆன்மீகப்பாதையில் ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ஜீவராசிக்கும் இந்தியக் கலாச்சாரம் எப்படிப்பட்டது, நமது தொடக்கம் என்ன? நமது மூலம் யார்? இந்த உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் நம் இந்தியப் பங்கீடு என்ன? நாம் எப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்கவர்கள் என்றெல்லாம் புரியும். ஆக,
எனதருமை தோழர்களே!

உங்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!

நமது சக சகோதரர்களுக்கும் இதனைச்சொல்லுங்கள்!!

விதைத்து வைப்போம், முளைக்கும்போது முளைக்கட்டும்
ஆனால் நாம் விதைக்கக்கூடிய ஒவ்வொரு விதையும் ஆலவிருட்சங்களாக அணி வகுக்கட்டும்.

நவநீ
இதுபற்றி முழுவதும் அறிய மேலே தலைப்பை 'க்ளிக்' செய்யவும்.
பின் குறிப்பு : இதுபற்றி மெய்லில் பெற தயவுசெய்து தங்களின் மெய்ல் முகவரியை எனக்கு அனுப்பவும். எனது குறிக்கோள்!! இந்த விசயம் உலகத்தின் எந்த மூலையில் இந்தியன் இருந்தாலும் அவன் இதுபற்றித் தெரிந்து "குரல்" கொடுக்கவேண்டும்.


நல்லவர்கள் நினைப்பது ஒன்றுதான் நடப்பதில்லை..

நம் தமிழ்நாட்டில்....- ஆம் அது இன்றும் பொருந்தும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் சிம்மக்குரல் கொடுத்த ஒரு மாவீரனை நாம் எல்லாம் மறந்திருக்கமாட்டோம்.

வீரபாண்டியக் கட்டபொம்மன் - ஜாக்சன் துரை வீரவசனம்

வீரவசனம் - போருக்குப் போகுமுன்

பாஞ்சாலங்குறிச்சிப் போர்!

போருக்குத் தயாராகுங்கள்!!

பாஞ்சாலங்குறிச்சிப் போர்ப்படை - வீரபாண்டியக் கட்டபொம்மன்

வீரபாண்டியக் கட்டபொம்மன்

சுதந்திரத்தைச் சும்மா வாங்கிவிடவில்லை

"தமிழகமே ஒரு பெரிய கள்ளுக்கடையாக மாறுகிறபோது"

திருக்குறளுடன் நாம் எந்தவிதமான உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?
நாம் விரும்பும் வகையில் உறவுகொள்ள நமக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது. இந்த உறவின் தன்மையை வகுத்துக்கொள்ள வேண்டியது நாம்தாம்.திருவள்ளுவரை மேடைப் பேச்சில் வியந்து பாராட்டலாம். அவருடைய பேரறிவைக் குறட்பாக்களை அள்ளி வீசி நிரூபிக்கலாம். ஒரு குறளுக்கு ஒன்பது விளக்கங்களைச் சொல்லிச் சபையோரை வியப்பில் ஆழ்த்தலாம். குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை "எடுத்துவிட்டுப்" பேச்சாளர் தன் ஆங்கில ஞானத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டலாம்.வள்ளுவருக்கு இணையான மேதை இன்று இல்லை என்றும் முன்னர் இருந்ததில்லை என்றும் நாளை தோன்றப் போவதில்லை என்றும் சூளுரைக்கலாம். திருவள்ளுவருக்குப் பெருமை சேர்கிறதோ இல்லையோ பேச்சாளரின் வாய் வீச்சு தொடரும்போது அவர் மெத்தப் படித்த மேதாவி என்பதைச் சபை ஏற்றுக்கொள்ளும்படி ஆகிவிடும்.

மேடைப் பேச்சாளர் தன் புலமைக் கொடியை நிலைநாட்டத் திருக்குறளைச் சற்று விரிவாகக் கற்றிருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. ஆங்காங்கே வாகாகச் சில குறள்களைப் பொறுக்கி நெட்டுரு செய்திருந்தாலே போதுமானது.பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தி வருவதுபோல் அக்குறள்களின் தேர்வு அமைந்திருந்தால் சொற்பொழிவாளர் கெட்டிக்காரர்தான். அரசியல் மேடைகளில் எந்தெந்த குறள்கள் ஜொலிக்கும் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். கைவசம் இருக்கும் குறளுக்குத் தோதாகப் பேச்சின் தலைப்பு அமையவில்லை என்றால் அதை இழுத்து மடக்கிக் கைவசப்படுத்திக் கொள்வதும் மேடைப் பேச்சுக்குரிய சாமர்த்தியங்களில் ஒன்றுதான். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பத்தில் சிறிது கூச்சமாகவே இருக்கும். கூச்சம் மனித ஜன்மங்களுடன் இணைந்து வந்துகொண்டிருக்கும் ஒரு பழைய வியாதி. ஆனால் கைதட்டல் தரும் பரவசம் அக்கூச்சத்தை இருந்த இடம் தெரியாமல் அடித்துவிடும்.திருக்குறள் சார்ந்த புலமையை மெய்யாகவே தேடிச் செல்வது மற்றொரு வகையினரின் இயல்பு. இவர்களின் நோக்கம் சமுதாய நலன் சார்ந்தது. வள்ளுவரின் கருத்துகளைச் சமுதாயத்தில் பரப்பினால் மக்கள் மேல்நிலையை அடைந்துவிடுவார்கள் என்பது இவர்கள் நம்பிக்கை. தமிழ் வாசகர்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகியோரின்ஏகோபித்த பாராட்டைப் பெற்று வருகிறவர்கள் இவர்கள். திருக்குறளைத் தமிழ்ச் சமூகத்தில் பரப்பும் தொண்டைத் தலைப் பொறுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் இவர்களுடைய செயலபாடுகள் பொதுவாக இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. எழுத்து வடிவத்திலும், பேச்சு வடிவத்திலும். மேடைப் பேச்சாளர்கள் நூலாசிரியராகவும், நூலாசிரியர்கள் மேடைப் பேச்சாளராகவும் இயங்குவது இயற்கை.இரண்டு ஆற்றல்களையும் சரிசமமாகக் கொண்ட இரட்டைத் துப்பாக்கிகளும் நம்மிடையே உண்டு.திருக்குறளைச் சமுதாயத்தில் பரப்ப விரும்புகிறவர்களின் ஆவேசங்கள் கட்டுக் கடங்காதவை. இவர்களை நாம் அவ்வப்போது சந்திக்கிறேன். தமிழ்ச் சமுதாயத்தில் ஒவ்வொருவரும் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி - குறளை முழுமையாக மனப்பாடம் செய்ய வேண்டும், திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்கினால்கூடத் தவறில்லை என்றார் ஒரு நண்பர். திருக்குறளை முழுமையாகக் கற்றவர்களையே தமிழ் அறிஞர்கள் என ஒப்புக்கொள்வேன் என்றார் மற்றொருவர். திருக்குறளை முழுமையாகக் கற்றறியாதவர்களின் டாக்டர் பட்டங்களைத் தான் மதிப்பதில்லை என்றும் சேர்த்துக்கொண்டார்.

தமிழர்களுக்கு வேதம், குரான், பைபிள், பகவத் கீதை, தம்மபதம் எல்லாம் குறள்தான் என்றார். இவர்களுடைய ஆவேசங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு. 1330 குறள்களையும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒப்பிக்கத் தெரிந்து விட்டால் தமிழ்ச் சமூகம் மேல்நிலையை அடைந்துவிடுமா என்று நான் என் ஆவேச நண்பரிடம் கேட்டேன். உறுதி, உறுதி, உறுதி என்று மூன்று முறை சொன்னார்.நமக்குத் தேவை மனப்பாடத் தகுதியா அல்லது முற்றாக நம்பி ஏற்கும் குறள்களின் கருத்துகளையேனும் வாழ்வில் புகுத்தி அவற்றின் வலிமையை நடைமுறையில் உணர்ந்துகொள்வதா என்று கேட்டேன். இந்த உணர்வு வலுவடையும்போதுதானே திருவள்ளுவர் மீது அதிக நம்பிக்கை கொள்வோம் என்றும் சொன்னேன். குறள் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு நூல். இன்றும் நம்மைச் செம்மைப் படுத்திக்கொள்ளவும் செழுமைப்படுத்திக்கொள்ளவும் அந்நூல் உதவும் என்று நம்பத் தொடங்கும்போதுதான் குறளுக்கும் நமக்குமான உறவு துளிர்க்கத் தொடங்குகிறது. வாழ்வுக்கு வழிகாட்டும் நு‘லை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? மேடைப் பேச்சுக்கு உபயோகப்படும் கருவியாகவா? நினைவாற்றலை வளர்க்க ஒரு பயிற்சியாகவா? புலமைப் பிரகடனத்திற்கான முகாந்தரமாகவா?நாம் வாழ்வின் தளத்தில் ஏழ்மைப்பட்டு நிற்கிறோம். பொருள் சார்ந்த ஏழ்மையும் கலாச்சாரம் சார்ந்த ஏழ்மையும் இக்காலத்தில் நம்மை வாட்டுகின்றன. பொது வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது காலாவதியாகி விட்டது. பண உறவுகள் வாழ்க்கைக்கு அடிப்படையான சகல உறவு களையும் கபளீகரம் செய்துகொண்டிருக்கின்றன. மனித நேயம் என்ற சொல்தான் எழுத்திலும் பேச்சிலும் அதிகம் அடிபடும் சொல். வாழ்க் கையில் அருகிப் போயிருப்பதும் இந்த மனிதநேயம்தான்.

உலகியல் சார்ந்து கால்களை மண்ணில் ஊன்றி நிற்க வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். இந்த உலகத்துக்குரிய இன்பங்களைத் துறக்காமல், பொறிகளை ஒடுக்காமல், மற்றொரு உலகத்தை எண்ணி ஏங்காமல், மனைவி, குழந்தைகளுடன் வாழ விரும்புகிறோம்.இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள சில அடிப்படை நியதிகளை இளமையிலேயே நாம் தெரிந்துகொண்டுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு செயலுக்குத் துணையாக நிற்பது மற்றொரு சந்தர்ப்பத்தில் பொய்த்துப் போய்விடுகிறது. நிரந்தரமான நியதிகள் என்று எதுவுமே கிடையாதா? இருந்தால் அவற்றைத் தொகுத்துக்கொள்வது வாழ்க்கைக்கே ஊன்றுகோல் போல அமையுமே.

இவ்வாறான தேடல் உருவாகும் மனங்களுக்குத்தான் பொது நெறிகளை வற்புறுத்தும் பேரிலக்கியம் தேவையாக இருக்கிறது. நாம் உலகியலில் பற்றுகொண்டிருப்பதால் திருவள்ளுவரின் உறவு மிக இணக்கமாக அமைந்துவிடுகிறது. ஒரு ஊரின் வரைபடம் ஒன்று நம் கைவசம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது சரியான வரைபடம்தானா? அந்த வரைபடம் சார்ந்து பயணத்தை மேற் கொள்ளும்போது அது சுட்டும் இடங்களுக்கு நாம் போய்ச் சேர்ந்தால் அந்த வரைபடம் சரியானதுதான்.

சில நோய்களுக்குச் சுயமாகச் சிகிச்சை செய்துகொள்ள வழிவகைகள் கூறும் நு‘ல்கள் இருக்கின்றன. அவற்றின் உதவியால் நோய்களைக் குணப்படுத்திக்கொள்ளும்போது அந்த நு‘ல் களின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.வாழ்க்கையின் அடிப்படையையே கற்றுத் தர முற்பட்ட நு‘ல் வள்ளுவம். அது தமிழ் வாழ்வுக்குரிய நெறியை வகுத்திருக்கிறது. மதிப்பீடுகளை மொழிக்குள் துல்லியப்படுத்தித் தருகிறது. திருவள்ளுவர் 2000 வயதான இளைஞர்.இன்றும் அவர் உயிர்ப்புடனே இருக்கிறார்.அந்த உயிர்ப்பை நமக்கு உணர வைப்பது அவருடைய மொழி ஆற்றலும் சிந்தனையின் கூர்மையும். அதில் பழமையின் பாசி இன்னும் படியவில்லை.வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொள்ளத் திருக்குறளைப் பயன்படுத்தும் போதுதான் அந்தப் பெருநு‘லுக்குரிய மதிப்பை உண்மையாகவே அதற்கு அளிக்கிறோம். 1330 குறள்களையும் நாம் மனப்பாடமாகக் கற்றுவிடலாம். குறுகிய நேரத்தை ஒதுக்கி ஓராண்டில் முடித்துவிடலாம். ஆனால் அந்த மனப்பாடத் தகுதி நம் வாழ்க்கையில் கடுகளவு மாற்றத்தைக்கூட உருவாக்காது. குறளைக் கற்று அதன் பொருளை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

புரிந்துகொள்ளப் பல உரைகள் இருக்கின்ன. அந்த உரைகள் நமக்கு உபயோகமானவை தான். ஆனால் குறளுக்கு நாம் அளிக்கும் பொருள் உரைகள் சார்ந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உரையாசிரியர்களுக்குள் கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. உரைகளை ஏற்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும்கூட எந்த உரையைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை நாம்தாம் எடுக்க வேண்டியிருக்கிறது.

நாம் நமக்குச் சொந்தமான உரைகளை விவேகத்துடன் உருவாக்கிக்கொள்ள முடியும். உரைகளின் உதவியுடன் நாம் உருவாக்கும் அர்த்தங்கள் மூலப் பாடத்துக்கு முரண்பட்டு நிற்கக்கூடாது. இதன் பொருள் திருவள்ளுவர் ஒன்று சொல்ல நாம் அதை மற்றொன்றாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான். திருவள்ளுவரை நாம் நண்பராகத்தான் பாவிக்க வேண்டும். இதற்குமுன் எந்த நூற்றாண்டிலும் இல்லாத இளமையை அவர் சென்ற நூற்றாண்டில் - இப்போது நாம் தாண்டி வந்திருக்கும் நூற்றாண்டில் - பெற்றிருக்கிறார்.

அவர் மிகப் பெரிய பெருமையை அடைந்தததும் சென்ற நூற்றாண்டில்தான். எந்த அறிவையும் புனிதப்படுத்தினால் அது அந்நியப்பட்டுப் போய்விடும். நடைமுறையிலிருந்து பின்னகர்ந்து சடங்குக்குள் சென்று விழும். சடங்கும் சம்பிரதாயமும் தோன்றிவிட்டால் பூசாரிகள் தோன்றிவிடுவார்கள்.திருக்குறள் மக்களுக்கான நூல். அது நிரந்தரமான உண்மைகளைக் கூறுகிறது என்றாலும்கூடக் காலத்துக்கு காலம் அவற்றில் சில குறள்கள் அழுத்தம் கொள்கின்றன. கால மாற்றத்தில் முன்னகர்ந்திருப்பவை பின்னகர்ந்தும் பின்னகர்ந்தவை முன்னகர்ந்தும் வரக்கூடும். காலத்தை வென்று நிற்கும் செவ்விலக்கியங்களின் குணம் இது.

இன்றைய காலத்துக்கு ஏற்ப பகுத்தறிவுப் பார்வையும் சமத்துவம், சம நீதி சார்ந்த பார்வையும் திருக்குறள் மீது ஏறுகின்றன. அந்நிலை இயற்கையானது தான். பொது ஒழுக்கம் சீரழிந்து இவ்வொழுக்கத்தை மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்ற உணர்வு தலைதூக்குகிறபோது திருவள்ளுவரின் ஒழுக்கம் சார்ந்த கருத்துகள் மேலோங்கும்.சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல்வாதிகள் "கள்ளுண்ணாமை" என்ற அதிகாரத்தை மேடையில் பல குறள்களைச் சுய நம்பிக்கையுடன் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் அப்படிக் கூற முடியும் என்றுதோன்றவில்லை. தமிழகமே ஒரு பெரிய கள்ளுக்கடையாக மாறுகிறபோது - அந்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை - "கள்ளுண்ணாமை" மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கலாம்.

இப்படித்தான் பேரிலக்கியங்கள் தங்கள் முகங்களை மாறி மாறி ஒளிரச் செய்து காலத்தைத் தாண்டி வருகின்றன. திருக்குறளைப் பின்பற்றித் தம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக்கொண்டவர்கள் அது பற்றிப் பேசலாம்.
திரு.வி.க.வும் மு.வ.வும் அவர்களைப் போல் எண்ணற்ற தமிழர்களும் திருக்குறள் நெறிகளைக் கடைப்பிடித்துத் தம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொண்டவர்கள். அவர்களைப் போன்றவர்கள் அறிவார்கள் திருக்குறளின் வலிமையை. அவர்களைப் போன்றவர்களால்தான் திருக்குறள் மீது ஆழ்ந்த நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும் முடியும்.

திருக்குறளை முழங்கும் பிரச்சாரப் பீரங்கிகளிடம் "நீங்கள் குறள் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறீர்களா?" அல்லது அவ்வாறு வாழவேனும் முயற்சிக்கிறீர்களா? என்று கேட்க மக்களுக்கு உரிமை உண்டு.அவ்வாறு கேட்பவர்கள்தான் திருவள்ளுவரின் நண்பர்கள்.

தனது மரணத்தைத் தானேகூட படம்பிடிக்க நேரும்

தமிழனுக்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தக்கொடுமை??
இந்தத் தாயன்னையின் மடிமீது ரத்த ஆறுகள்தான் ஓடுகின்றது.....

சுவாமி விவேகானந்தரின் 'சிகாகோ' சொற்பொழிவு

April 29, 2007

என் தேசமே!! நீ எப்படியிருக்கிறாய்?

விமான விபத்து - Mid-Air Collision DHL 757 and Tu-154

சுவாமி விவேகானந்தரின் 'சிகாகோ' சொற்பொழிவு

Hinduism- Part 1 of 5

Hinduism- Part 2 of 5

Hinduism - Part 3 of 5

Hinduism- Part 4 of 5

Hinduism- Part 5 of 5

நாகேஷ் கதை சொல்கிறார்

கவியரசு கண்ணதாசன்

பட்டாபட்டி "ட்ரௌசர்" விவேக் விளக்கம்

மனதை ஒரு நிலைப்படுத்த முடியுமா?

முடியுமென்றால் முயற்சித்துப் பாருங்கள்!!
நீங்கள் இதைக் கேலிக்கூத்தாகக் கூட நினைக்கலாம்…
பரவாயில்லை, செய்த பிறகு உங்களுடைய அனுபவத்தை எனக்குச் சொல்லுங்கள்!
  • நீங்கள் 'பெஞ்ச்' அல்லது 'நாற்காலி'யின் மீது அமர்ந்திருந்தால் உங்களுடைய வலது காலை சற்று மேலே தூக்கி கடிகாரச் சுற்றில் (Clock-wise) ஒரு வட்டம் போடுங்கள்

  • இப்போது காலை நிறுத்தாமல் உங்களின் வலது கையால் காற்றில், அதாவது உங்களின் முகத்திற்கு நேராக எண் ஆறு (6) போடவும்...........

......................................................


  • என்ன? தலை சுற்றுமே!!
    முயற்சித்துப்பாருங்கள்!! முடியவில்லையா??
    சிரித்ததுதான் மிச்சம்… ஆம்…..


    உங்கள் காலின் டைரக்ஷன் மாறிவிடும், காலை ஒரு நிலைப்படுத்தினால் கையின் டைரக்ஷன் மாறிவிடும்….

    மனதைக் கட்டுப்படுத்த முடிகிறதா? மூளையைக் கட்டுப்படுத்தினாலும் உடலையும் மனதையும் ஒருநிலைப் படுத்த உங்களால் முடிந்தால், கண்டிப்பாக நீங்கள் எதையும் சாதிக்கமுடியும்.

    இது அறிவியல் சம்பந்தப்பட்ட உடலியல் கூற்று என்றாலும் ஒரு பெரிய ஆன்மீகத் தத்துவம் அடங்கியிருக்கிறது.

    "உங்கள் ஆத்மா உங்களை எங்கு இழுத்துச்செல்கிறதோ அங்கு உங்களால் செல்ல முடியும் என்றால் நீங்கள் பேறு பெற்றவர். ஆத்மா எப்போதுமே நல்ல திசையை நோக்கியே இழுத்துச்செல்லும்"

    "உங்களால் அதை நோக்கிச் செல்ல முடியாமல் உடலை நோக்கி ஆத்மாவை இழுக்க முடியும் என்றால் நீங்கள் சாதாரண மனிதர். அதைத்தான் எல்லோருமே செய்கிறோம்"



ஆக அதை ஒரு நிலைப் படுத்தி விட்டோம் எனில் நாம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து விடலாம்.

  • கால் செய்வது சாதாரண மனிதன் செய்வது
  • கை காற்றில் செய்வது ஆத்மா செய்வது
    ஆத்மாவும் உடலும் ஒன்று சேர்ந்தால் மனிதன் உயர்நிலையை அடைவான்
  • ஒரு மனிதன் ஒரு நேரத்தில் ஒரு பாதையில்தான் செல்லமுடியும். இரண்டு வேறுபட்ட வழிகளில், பாதைகளில் செல்ல முடியும் என்றால், நீங்கள் சாதாரணப் பிறவி இல்லை.


    இப்படி இன்றைக்கு இந்தப் ப்ரபஞ்சத்தில் ஒரு சிலரே உள்ளனர். நாமும் முயற்சிப்போம்!! முடியும்!!!

    - நவநீ (ஆக்கம்: யாரோ - நன்றி) எங்கோ படித்தது


April 28, 2007

Who is God and What?

A speech from Mahatma Gandhi where he reasons the existence of a benevolent god put to a montage of images. speech Mahatma Gandhi god love truth malevolent benevolent good light peace indefinable mysterious unseen power felt defies perceive transcends senses reason who why what know rule god persist pure death life untruth darkness supreme ( more )

கண்டுகொண்டேன்!

கண், காது
கை, கால் என
எல்லாவற்றையுமே
இரண்டாகப் படைத்த
இறைவன்
இதயத்தை மட்டும்
ஏன்
ஒன்றாகப்படைத்தான்?
இன்றுதான் தீர்ந்தது
எனது பல நாள் குழப்பம்

ஆம்…
அந்த இன்னொன்று இருப்பது
உன்னிடத்தில்….

நவின் - சென்னை

April 27, 2007

அழகழகழகழகழகழகே.....

தமிழீழம் பாடல் : அழகே! அழகே!! தமிழழகே!!!

இதுதாங்க நம்ம மொழியோட அழகு

பேரிழப்பு

நேற்று உன் கண்களையே
பார்த்துப் பேசிக்கொண்டிருந்த நான்…..
கையிலிருந்த என்
கவிதைத் தொகுப்பையும்! தவற விட்டேன்
தயவுசெய்து

என் கவிதைத்தொகுப்பை
மாத்திரமாவது திருப்பிக்கொடு….


நவநீ

அம்மாவுக்கு
அசைவச் சாப்பாடு
ரொம்பப் புடிக்கும் - அவள்
அப்பாவுக்கும் எங்களுக்கும்
பறிமாறிவிட்டுச் சட்டியில்
மீதமிருப்பதைச் சின்னவனுக்கு
நாக்கு நீளமென்று - எனக்கு எடுத்துப்
பெரியவனுக்குத் தெரியாமல் பதுக்கிவைப்பாள்
அவள் குடிப்பதென்னவோ
வழக்கம்போல "பழைய கஞ்சி"தான்...
தாய்மை
பாலா - சென்னை

தமிழனுக்கென்று "ஒரு கொடி" இருக்கக் கூடாதா??

வினா எழுப்புகிறார் - தமிழ்க்கம்பீரம் "வைகோ"

"வைகோ" - 2

"வைகோ" - 3

April 26, 2007

"வைகோ" - 4

"வைகோ" - 5

"வைகோ" - 6

"வைகோ" - 7

"வைகோ" - 8

"வைகோ" - 9

தாஜ்மாஹாலின் காதிலே
இராமகாதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்று சேரலாம்

என்ன? புரியவில்லையா?

எழுதியவர் கவிஞர் மு.மேத்தா
அவர் எழுதிய "ஆகாயத்திற்கு அடுத்த வீடு" கவிதைத் தொகுப்பிற்கு 'சாகித்ய அகாடமி' விருது கிடைத்துள்ளது. அவரைப் பாராட்டிப் பேசும்போது, திரு.ஜெயகாந்தன் "இந்தியில் வருவது மட்டுமல்ல இந்திய இலக்கியங்கள்", இந்தியாவின் வேர் தெற்கேதான் இருக்கிறது, இமயமலை வடக்கே இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் எழுதுபவர்கள் தென் மாநிலக் கவிஞர்கள்தான் " என்றாராம். மொத்தத்தில் அவர் ஒரு தமிழன் என்ற முறையில் மட்டுமல்லாது ஒரு "வியாபார நோக்கமில்லாத கவிஞர்" என்ற முறையில் நாம் பாராட்டுவோம். மேலும் கவிஞர் மு.மேத்தா பற்றி அறிய
Please click
மு. மேத்தா - Mu Mehta - Tamil Language & Literature

"உன் பிரிவு"

முதன்முதலாய் வந்த
காதலைச் சொல்லத்துடிக்கும்
ஓர் ஊமையின்
உயிர் வலிக்கும் இந்த வலிக்கும்
வித்தியாசம் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை...

புரியாமல் தவிக்கிறேன்.

"பாலா" - சென்னை

விபத்துக்கள் நேர்வதற்கு முக்கிய காரணங்கள் Please 'Click' 'ME'

ஒரு எளிய கவிஞர்

திரு.என்.சுரேஷ் அவர்களின் பேட்டி. சுவாரஸ்யமாக இல்லையென நினைக்காமல் கடைசிவரை பாருங்கள். உண்மையில் வார்த்தைகள் திக்கித்திக்கி வந்தாலும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். உணர்ச்சிவயப்படும்போது வார்த்தைகள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்யும். பேட்டியைப்பார்க்க "ஒரு எளிய கவிஞர்" தலைப்பை 'க்ளிக்' செய்யவும்

April 24, 2007

"மேஸ்ட்ரோ" - "இசைஞானி"




ஓஷோ - இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லை

கண்ணில்லை காதலிக்கும்போது மட்டும்

ஒரு வழியாகத்
தண்டவாளங்களைக் கடந்துவிட்ட காதல் இளசுகள்...
வாழ்க்கையை??

சங்கர் - சவூதி

“நாம மனசு வச்சா நடக்குமுங்க”

மனசு என்பது என்ன?
அது எங்கே இருக்கிறது?
எப்படி இருக்கிறது?

அது வாழ்க்கையில் வெற்றிக்கான வழியைக்காட்டுமா?

மனம்தான் வாழ்வின் நிர்ணய சக்தி. நம் இன்ப துன்பங்களின் கர்ப்பப்பை. வெற்றி தோல்விகளின் விளைநிலம். மனம்தான் வாழ்க்கைப் போராட்டத்துக்கான போர்க்கருவிகளின் பட்டறை, பாசறை, பள்ளியறையும்கூட. வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்தையும் மனம்தான் செதுக்குகிறது. வாழ்வா - சாவா? புகழா - இகழா? வெற்றியா - தோல்வியா? இவையெல்லாம் நம் கையில் இருக்கிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. வாழ்வில் எண்ணத்தின் உயரம் நம் உள்ளத்தின் உயரம். உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் உயர்வதைக் கடவுளாலும் தடுக்க முடியாது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு - குறள்

தந்தையின் உடலில் ஓர் உயிர் அணுவாக இருந்த நாம், தாயின் கர்ப்பப்பை நோக்கி பிரயாணம் செய்து, நம்மோடு கூட வந்த லட்சக்கணக்கான உயிர் அணுக்களை ஜெயித்து தாயின் கருவில், சினைமுட்டையில் கலந்தோம். ஓடி ஓடித் தாயின் கருவில் இடம் பிடித்த நாம், ஓடி ஓடிப் பூமித்தாயின் மடியில் இடம்பிடிக்க வேண்டியதும் அவசியம்தானே! இந்த உலக வாழ்க்கையே ஓர் ஓட்டப்பந்தயம்தான்! ஓடுவது நமது இயல்பு. ஜெயிப்பது நமது இயற்கை. ஓடத்தயங்குபவர்களை உலகம் வாரிச்சுருட்டி வெளியில் தள்ளிவிடும். இந்த உலகம் இயங்கவேண்டிய கர்மபூமி. இயங்காமல் இருக்க எவருக்கும் உரிமையில்லை.

வாழ்க்கைப் பயணத்தில் கடுமையாக ஓடி ஓடி உழைத்து மேலே வரவேண்டியதுள்ளது. மேலே வந்துவிட்டோமே என்று உழைப்பை நிறுத்திவிட்டால் கண்டிப்பாக விபத்து நேரிடும். உழைப்பே உணவு, உழைப்பே ஓய்வு, உழைப்பே உயிர். எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். சாகிறவரை வாழவேண்டாமா? அதற்காக வாழ்வில் உழைப்பை விடமுடியுமா? இந்த வாழ்க்கை வளையத்துக்குள், சுழற்சிக்குள் புகுந்து விளையாடி எதிர் நீச்சல் போடவேண்டும்.

வாழ்க்கையில் ஜெயிக்க கடவுளின் கருணை இயல்பானது. ஆனால் மனித முயற்சி, கடும் உழைப்புதான் ஜெயத்தை நிர்ணயிக்கிறது. பஞ்சபூதங்களும் நமது பாதுகாவலர்கள்தான். அவற்றைக்கண்டு சோர்வடைய வேண்டாம். மனதைக் கவிழ்த்து வைத்திருப்பவர்களுக்கு, கடவுளின் அருள் ஒருபோதும் கிடைப்பதில்லை. கவிழ்த்து வைத்த பாத்திரத்தில் தண்ணீரைச் சேமிக்க முடியுமா? திறந்த மனத்தோடு பிரபஞ்சத்தோடு தொடர்புகொண்டால் பஞ்சபூதங்களும் நமக்குச் சாதகமானவைகளே!

நமக்கு எதிரான எண்ணங்களைத் தவிர்த்து, எதிர்ப்பனவற்றைக்கூட சாதகமாக்கிக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றிதான். இப்படி இருந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இல்லாத ஒன்றைக் காரணம் காட்டி தோல்வியை நியாயப் படுத்தவேண்டாம். எதுவும் நம்மை தோற்கடிக்கக் கூடாது என்ற வைராக்யம் இருந்துவிட்டால் பாதகமான குறைகள், சாதகமான நிறைகள் ஆகிவிடும். நம்முடைய குறைகள் 1. மாற்றக்கூடியது. 2. மாற்ற முடியாதது. மாற்றவே முடியாத குறைகளை ஒருபோதும் குறைகளாகக் கருதாமல் அவற்றை மூலதனமாக்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். இதனால் வெற்றி உறுதியாகிறது. எல்லோரையும் மாற்றவேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே! என்று மன அமைதி இழக்கிறோம். ஆனால் நாம் அதற்குத் தகுந்தாற்போல் மாறியிருக்கிறோமா? வலிமை வாய்ந்த இரும்பத்தூணை வெளியிலிருந்து எதுவும் வீழ்த்துவதில்லை. அதனுள் உருவாகும் ஷஷதுருதான் தூணை சாய்த்து விடுகிறது.

நம்மிடம் இருக்கும் நல்லதும், கெட்டதும்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன. மனிதன் தன்னைத்தானே பார்க்கிறபோது வேகம் குறைகிறது. விவேகம் பிறக்கிறது. வாழ்வில் உயர உங்களை நீங்களே உற்றுப்பாருங்கள். தன்னையே தான் உற்றுப்பார்க்கும் முயற்சி சுயவிமர்சனத்தால் வெற்றிபெறும்.

நம்மை உயர்த்த, நம்மைக் கவனிக்க நேரமில்லை என்றால், நம்மீது நமக்கு அக்கறை இல்லையா? அவ்வளவு அலட்சியமா? நம்மீது நமக்கு ஈடுபாடு இருந்தால் நம்மை உயர்த்த எப்படியாவது நேரத்தை ஒதுக்குவோம். அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி அமைதியான பிச்சைக்காரன்வரை 24 மணிநேரம்தான் இருக்கிறது. நிற்கவே இடமில்லாத டவுன்பஸ்ஸில் கண்டக்டர் திரும்பத் திரும்ப போய் வர இடம் கிடைக்கிறதே எப்படி? நம்மை மாற்றியமைப்பது மிக முக்கியமான, அவசியமான அவசர வேலை என்றால் அதற்கான நேரம் கிடைத்துவிடும்.

மனசுக்கு இயல்பான இன்ப நாட்டம் உண்டு. கஷ்டத்தை அது விரும்பாது. இன்பம் விழையும் இயல்பு. எது இன்பம் எனத் தோன்றுகிறதோ அதையே திரும்பத் திரும்பச் செய்யத் தோன்றும். புதிய புதிய வரவுகளை அது தேடுவதேயில்லை. குழந்தைப்பருவம் தொடங்கி சாகிறவரை இந்த இன்பம் விழையும் இயல்பை யாரும் விடமாட்டோம். வளர வளர நாம் செயல்களை மாற்றியிருப்போம். செயல்களை மாற்றியிருப்பதால் வளர்ந்து விட்டோம் எனத் தவறாக நினைக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் வளர்வதே இல்லை.

இன்பம் விழையும் மன இயல்பு துன்பத்தில்தான் முடிகிறது. இடையிடையே விளம்பரங்கள் இல்லாமல் எப்படி டி.வி. சீரியல் பார்க்கமுடியாதோ அது போலத்தான் க~;டங்கள் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறைக்கு வராது. சோதனையும், வேதனையும் இல்லாமல் சாதனை பிறக்கவே முடியாது. பிரச்சினையே இல்லாத வாழ்வு அர்ச்சனையே இல்லாத கோவில் மாதிரி. நாம் பிறப்பதற்கு முன்பும் பிரச்சினைகள் இருந்தன. நம் மரணத்திற்குப் பின்பும் அவை இருக்கப் போகின்றன. நாம்தான் இடையில் வந்து இடையில் போகிறோம். நமக்குப் பிரச்சினைகள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பிரச்சினைகளுக்கு நாம் அவசியம் தேவை. எனவே அவற்றை அனுசரித்து வாழப் பழகிக்கொள்ளவேண்டும். நமது பிரச்சினைகளின் அகல ஆழம் தெரிந்தவர்கள் நாம்தான். நாம் மட்டுமே உறுதியான முடிவை எடுக்கமுடியும். அதனைத் தீர்க்கமுடியும். கனமான பறவைகளை அதன் லேசான இறக்கைகள்தான் மேலே தூக்குகின்றன.

நமது பிரச்சினைகளுக்கு பிறருடைய கருத்துக்களைக் கேட்கலாம். பரிசீலனை செய்யலாம். அவைபற்றி ஆலோசனைகூட செய்யலாம். ஆனால் அவைதான் தீர்ப்பு என்று முடிவெடுக்கக்கூடாது. பேண்ட் முதல் பெண்டாட்டிவரை நண்பர்களின் அபிப்ராயப்படி தேர்ந்தெடுக்கும் ஆண்கள் தோற்றுப்போவது நிச்சயம். புடவை முதல் புரு~ன் வரை தோழிகளிடம் யோசனை கேட்கும் பெண்கள் நிம்மதியாக வாழமுடியாது. எல்லோரையும் ஓர் எல்லையில் நிறுத்தவும். எதற்கும் பிறரையே சார்ந்திருக்க ஊனமுற்றவர்கள்கூட விரும்புவதில்லை. ஆரோக்யமாக இருக்கிற நாம் ஏன் பிறரைச் சார்ந்திருக்கவேண்டும்? இந்த மன ஊனம் சகிக்க முடியாதது. பிறரைச் சார்ந்து வாழ்வது என்கிற ஊன்றுகோலை உதறி எறிய வேண்டும். இல்லையென்றால் மந்திர தந்திர மதவாதிகள், குட்டிச்சாமியார்கள், ராசிபலன் பார்ப்பவர்கள் நம்மை வசப்படுத்தி நிரந்தர ஊனமாக்கி விடுவார்களென்பது நிச்சயம்.

வாழ்க்கை விசித்திரமானது. நாம் தயாரித்து வைத்துள்ள பதில்களுக்கேற்ப வாழ்வில் கேள்விகள் பிறப்பதில்லை. எல்லா கேள்விகளுக்கும் யாராவது பதில் சொல்லமாட்டார்களா? என்று தடுமாற வேண்டாம். பிறரது அபிப்ராயங்களால் பாதிக்கப்படக்கூடாது. நாம்தான் விடைகாணவேண்டும். அதுதான் உண்மையான தன்னம்பிக்கை.

“தன்னைத் தன்னாலே உயர்த்திக்கொள்க!
தன்னை இழிவுறுத்தலாகாது! தானே தனக்குப் பகை!
தானே தனக்கு நண்பன்!
- பகவத் கீதை

நாம் பரபரப்புடனும், அவசரத்துடனும், கவலையுடனும் எதைத் தேடினாலும் கிடைக்கப்போவதில்லை. கிடைத்தாலும் கிடைத்தது தெரியாது. தெரிந்தாலும் ருசிக்காது. எண்ணங்களே வாழ்வை உருவாக்குகின்றன. எண்ணங்களை நம் மனம்தான் உருவாக்குகிறது. எனவே மனம் நம் வசம் இருக்கவேண்டும்.

"வாழ்க்கை ஒரு உற்சவம்,
அதனைக்கொண்டாட வேண்டும்"
என்பார் ஓஷோ
ஆனந்தமாக இருக்கவேண்டும். கண்களில் கனவுகளையும், மனசில் ஆனந்தத்தையும் நிரப்பினால் "வானம் வசப்படும்"
‘வெற்றி நிச்சயம்’ நம்மைத்தேடி வரும்,
மொத்தத்துல இது எல்லாமே................


“நாம மனசு வச்சா நடக்குமுங்க”

ஆக்கம் - சங்கர் (க.சங்கரநாராயணன் : சவூதி அரேபியா)

"மேஸ்ட்ரோ"




April 22, 2007

"கிராமம்"

சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமான தன் சொந்த ஊரில் இருக்கும் தன் அம்மாவுக்கு பாலு அமெரிக்காவிலிருந்து போன் செய்தான். ஐந்து பிள்ளைகளைப்பெற்று, உத்யோக காரணங்களுக்காக எல்லோருமே வெளியூரில் இருப்பதை நினைத்தும், சமீபத்தில் மறைந்துபோன தன் கணவரை நினைத்தும் கவலைப்படும் அம்மா, எப்போது பிள்ளைகள் போனில் பேசினாலும் அவர்கள் கவலைப்படக்கூடாதென்பதற்காக சந்தோசமாகத்தான் பேசுவாள். அந்தப் பகுதியில் யாருக்கு என்ன குறை நேர்ந்தாலும் தான் முன்னின்று தீர்த்துவைத்து நல்லது செய்யும் ஒரு உன்னதமான நல்ல மனிதர்தான் பாலுவின் அப்பா சீதாராமன். அவர் மறைவின்போது அந்தப்பகுதி மக்களே கண்ணீர் விட்டுத் துடித்துக் கதறிய காட்சி இன்னும் கண்ணைவிட்டு நீங்கவில்லை. மரணம் யாரைத்தான் விட்டுவைத்தது? அம்மா குரலில் ஏதோ ஒரு மாற்றம், “என்னம்மா! என்னாச்சும்மா! ஒடம்பு கிடம்புக்கு முடியலையாம்மா? பணம் வந்து சேந்துச்சாம்மா?” பாலு கேட்டான். “இல்லைய்யா! நான் நல்லாருக்கேன்! பணமெல்லாம் வந்துருச்சு, நீ எப்படிய்யா இருக்கெ?” அம்மா நலம் விசாரிக்க ஆரம்பித்தாள். பாலுவுக்கு மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல். அம்மாவைத் திரும்பத் திரும்பக் கேட்டான். இனி அம்மா மறைக்க விரும்பவில்லை. “அய்யா! நீ மனசு சங்கடப்படாத! நம்ம முருகையா மாமா இல்லைய்யா! அவம்பொண்டாட்டி இருளாயி ராத்திரி மருந்தக் குடிச்சிட்டு செத்துப்போய்ட்டாய்யா….ஏதோ மாமியா மருமவக்குள்ள சண்டையாம், அத புருசன் கேக்கலேன்னு…இந்தச் சண்டாளி இப்படிப் பண்ணிப்புட்டா....ய்…யா…. ” அம்மாவின் தொண்டையில் துக்கம் வார்த்தைகளை வரவிடவில்லை. பாலு பதறிப்போனான், அவனால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, தொடர்ந்து அவனால் போனில் பேச முடியவில்லை. பாலுவின் தந்தை மறைவுக்குப்பின் அந்த ஊரில் எல்லாமே துரதிஷ்டவசமாகத்தான் நடக்கிறது. அவர் உயிரோடிருந்தபோது தன் பிரச்சினைகளை யார் வந்து சொன்னாலும் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பக்குவமாகப் பேசி, பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துவைத்துவிடுவார். இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கக் காத்திருக்கிறதோ என்று வேதனையுடன் பாலு சோபாவில் சாய்ந்தான்…..

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு முருகையா கையில் எட்டு மாத கைக்குழந்தையோடு தன் மனைவி இருளாயியை அழைத்துக்கொண்டு, கொட்டும் மழையில், இடி மின்னலோடு கூடிய அந்த கும்மிருட்டில் தன் வீட்டுக்கதவைத் தட்டியது தன் கண் முன்னே வந்தது, இவையெல்லாம் ஏதோ நேற்று நடந்தது போல இருந்தது பாலுவுக்கு. “கதவத்தெறந்து, யாருன்னு பாருய்யா, ரசம் அடுப்புல கெடக்கு, கொதிச்சுப்போய்ட்டா ரசம் வாய்க்கி வெளங்காது” என்ற அம்மாவின் குரலையடுத்து, பாலு கதவைக் கஷ்டப்பட்டு திறந்தான். அப்போது பாலுவுக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது, பாலுவைப் பார்த்தவுடன், “மச்சான் இல்லையா? மருமயனே!” முருகையா. “இல்ல மாமா” பாலு. “யாருடாது இந்த அடமழையில?” அம்மா குரல் அடுப்படியிலிருந்து ஒலித்தது. “நாந்தாக்கா முருகையா, அக்கோவ்! செத்த இங்குட்டு வந்துட்டு போக்கோவ்! அம்மா வெளியே வந்தாள், முருகையா, ஒரு கிழிந்த சாக்கை மடித்து தன் எட்டுமாதப்பெண் குழந்தை நனையாமல் இருக்க மேலே கொங்கானியாகப் போட்டுக்கொண்டு மனைவியோடு நனைந்து நடுங்கிக்கொண்டு நின்றதைப் பார்த்த அம்மா, “அடப்படுபாவி, என்னடா புத்தியா கெட்டுப்போச்சு ஒனக்கு, பச்சப்புள்ளய நனையவிட்டுக்குட்டு அங்கன நிக்கிற, உள்ள வாடா மொதல்ல, இந்தா தலைய தொவட்டுறா” என்று தன் முந்தானையை எடுத்துக்கொடுத்த தன் கூடப்பிறக்காத அக்காவைப் பார்த்த உடன் முருகையா கதறி அழுதே விட்டான். “அக்கா ஙப்பன் என்னயும், எம்பொண்டாட்டி, புள்ளையும் வீட்ட விட்டு வெளில போடான்னு அடிச்சு வெரட்டிட்டாருக்கா, இருளாயிக்கும் அவருக்கும் என்னமோ பெரச்சனைக்கா, நான் எங்கக்கா போவேன், எனக்கு யாருக்கா இருக்கா?” மச்சான் வந்த ஒடனே ஒரு முடிவு பண்ணனும்க்கா, அதுக்குத்தாங்க்கா இங்க வந்தேன்” என்று புலம்பிக்கொண்டிருந்தான். “சரி சரி நீ உள்ள வா, மச்சான் வெள்ளெனதேண்டா வருவாரு, நீ ஒன்னும் கவலப்படாமெ இரு! இந்தாடி இருளாயி அங்கன கொடில யாம்புட்டு பழய சீலை கெடக்குடி எடுத்துக் கட்டிகிட்டு இந்த ஈரத்துணிய மாத்துடி சட்டுனு, பச்சப்புள்ளக்காரி ஒடம்புக்கு எதுகும் வந்துறப்போகுது”. பொழுது விடிந்தது, அடைமழை விட்டு வானம் வெளுத்திருந்தது, “ஏலே! பாண்டி நம்ம பனமரத்துல கொஞ்சம் ஓலை வெட்டியாடோவ்! டேய்! முருகையா! இங்கன கெழக்குப் பக்கத்துல எரவாரத்துல ஓலைய மோஞ்சு குடிசயப் போட்டுக்கடா!” சீதாராமன் சொல்லி முடித்தார்.
முருகையாவுக்கு மேலும் இரண்டு ஆண்குழந்தை பிறந்து இன்று நிம்மதியாக அந்த ஓலைக்குடிசையில் வாழ்ந்துகொண்டிருந்தான். சீதாராமனின் கைக்குழந்தைகளை, முருகையா தன் குழந்தைகளாகக் கருதி கைகளுக்குள்ளேயே போட்டு வளர்த்தான். முருகையாவின் தந்தை ராமச்சந்திர வேளார் கோயில் பூசாரியாதலால் மிகவும் கட்டுப்பாடு மிக்கவர். அவருக்கு, தன்னை ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் சீதாராமன் முருகையாவுக்குத் தஞ்சம் கொடுத்தது இன்றுவரை கொஞ்சம் மனவருத்தம்தான். ஆனாலும் நல்ல மரியாதைக்குரிய மனிதர் என்பதாலும், அவர் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற அவ்வட்டார மக்களின் அபார நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ ராமச்சந்திர வேளார் சீதாராமனிடம் இதுவரை அந்த விஷயம் பற்றிப் பேசியதே இல்லை. அந்தக் கிராமத்தில் இவர்கள் வேறு வேறு சமூகத்தினர் என்றாலும், அனைவருமே மாமன், மருமகன் என்று முறைவைத்து ரத்த சம்பந்த உறவுகளைப்போலவே உறவு கொண்டாடும் அந்த கிராமங்களுக்கே உரிய பண்பாடு இருந்தது. எந்த விசயத்தையும் சீதாராமனின் ஆலோசனைப்படியே நடத்துவார்கள். எத்தனையோ பிரச்சினைகள் நடந்த போதிலும் அந்தப்பகுதிக்குப் போலீஸ் இதுவரை வந்ததில்லை, கிராமக்கட்டுப்பாடு, ஒழுக்கம் எல்லாமே இன்றுவரை சிறப்பாகத்தான் இருக்கிறது.

அக்காவின் அதிகாலை டீயை உறிஞ்சிக்கொண்டே “மச்சான் எனக்கும் குடும்பம் கொஞ்சம் பெரிசாயிருச்சு, இந்தக்குடிசையில கொஞ்சம் செரமமா இருக்கு, நம்ம கம்மாக்கரையில் இருக்கற வரகாம்புஞ்சயில ஒரு குடிசையப் போட்டுக்கிறனே, கூடவே புஞ்சயப் பாத்துக்கிறேன் மச்சான்” என்றான் முருகையா. பதிலுக்கு சீதாராமன் சிரித்துக்கொண்டே, “கேட்டியா சங்கதிய, ஒந்தம்பி வரகாம்புஞ்சயப் பாத்துக்கறேன்னு சொல்றாம் பாத்தியா?” என்று கொட்டத்தில் பசுவுக்குத் தவிடு வைத்துக்கொண்டிருந்த தன் மனைவியிடம் சொன்னார். “சரி அவெஞ்சொல்றது நாயந்தானே! கையில எட்டுமாசக் கொழந்தையோட வந்தான், இப்ப கூட ரெண்டு பயலுகளாயிப்போயிட்டாங்கெ, நம்ம புஞ்சையும் பூதிலதானே கெடக்கு, அவந்தான் பாத்துக்கிறேன்னு சொல்றானே, பாத்துக்கிறட்டும்” என்றாள் பதிலுக்கு.


“முருகையா மாமா முன்னாடி மாதிரி ஏம்மா நம்ம வீட்டுக்கு வர்றதில்ல?” பாலு, எப்போது விடுமுறைக்குத் தன் சொந்த ஊருக்குச் சென்றாலும் கேட்பதுண்டு. “அவனுக்குப் பேரன் பேத்தி ஆயிப்போச்சுய்யா, மூத்தவ பாண்டியம்மாளுக்கு இது மூணாவது பெரசவமாம், இருளாயி அங்கெ பொய்ட்டா, இவன் மயம்புட்டு புள்ளயல வச்சுகிட்டு அல்லாடறான் பாவம், இதுல எங்கெ இங்கெ வர்றது?” என்றாள் அம்மா பதிலுக்கு.
பாலுவுக்கு விடிந்ததே தெரியவில்லை, அப்படியே சோபாவில் சாய்ந்தவன் கண்ணயர்ந்துவிட்டான். மனசு கேட்கவில்லை, மறுபடியும் போனை எடுத்தான், இப்போது இந்தியாவில் பொழுது சாயும் நேரம்தான், அம்மா தூங்கியிருக்கமாட்டாள். எதிர்முனையில் அம்மா அரசல்புரசலாக, பதட்டத்துடன் போனை எடுத்து “யாரு பேசறது”, “நாந்தாம்மா! பாலு” சொல்லி முடிப்பதற்குள், “அய்யோ! அந்த வகுத்தெரிச்சலெ ஏய்யா கேக்குறே! அந்தப் பாதகத்தி மருந்தக்குடிச்சது தாங்காமெ, ஊர ஒன்னுகூடி அங்கனெ நிக்கையில, இந்தப்பய முருகையா, எல்லாரு கண்ணுலயிம் மண்ணெத்தூவிப்புட்டு சுடுகாட்டு ஊரணி வேம்புல கயத்துல தொங்கிட்டான்யா.. நான் என்ன செய்யிவேன், இந்தா... ஊரே அலறியடிச்சு ஓடுதே!” என்று அலறி அம்மா போனை வைத்தாள். பாலு உறைந்துபோய் நின்றான்.

- நவநீ

April 21, 2007

"ஆதங்கம்"

என்னதான்
உனக்கு நான்
மிகநெருக்கமானவனாக

இருந்தாலும் - என்னை
உன் வீட்டு
வாசல்வரைதானே
அனுமதிக்கிறாய்...
செருப்பு

பாலா - சென்னை

"தேசியகீதம்"

என்னைப் புல்லரிக்கவைத்த ஒரு வீடியோ இங்கே!!