August 25, 2007
ஓணம் நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள்! இலைபோட்டு சாப்பிடுவதை மறந்து நெடுநாட்களாகி விட்டாலும், (சாப்பிட வழியில்லை என்பது வேறு விசயம்!) இந்த படத்தை பார்த்தாவது ஆறுதல் அடைந்துகொள்வோம். என்னைப்போன்ற எத்தனையோ லட்சக்கணக்கான நண்பர்கள் குடும்பத்தோடு திரும்பவும் இந்தியா வந்து இலைபோட்டு, அந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடும், வெறியோடும், கனவோடும் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களனைவருக்கும் இந்தப் படத்தின் மூலம் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:22 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 85 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:31 PM
0
comments (நெற்றிக்கண்)
சல்மான்கான் சிறையில் : தமிழோசை
- நடிகர் சல்மான்கான் இந்தியாவில் அரிய வகை மான் ஒன்றை கொன்றதற்காக தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் முறையீடு செய்தார். ஆனால் இந்த முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சல்மான் கான் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
- இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உரிய விடுப்புகளை பெறாமல், பணிக்கு வராமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
- சீனாவில் பெண் கருக்கலைப்பு தொடர்பில் புதிய சட்டம்
- சுமார் 80 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள கிரேக்கத்துக்கு ஐரோப்பிய நாடுகள் விரைந்து உதவிகளை அனுப்பிக் கொண்டுள்ளன.
- மேலும் இன்றைய (ஆகஸ்ட் 25 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:11 PM
0
comments (நெற்றிக்கண்)
ஃபாக்ஸ் மூவி டோன் செய்திக்காக "மகாத்மா காந்தி" அவர்களின் நேர்முகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:31 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : rediff.com
August 24, 2007
சீரழிக்கும் சீரியல்கள் : மன்னிக்கவும்.. சத்தியமாக நான் நமது இந்தியத் தணிக்கைக்குழுவைச் சொல்லவில்லை
ஒரு பக்கம் ‘குஷ்பு, சுஹாசினி பேச்சு தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையே குழி தோண்டி புதைத்துவிட்டது. ஒருத்தனுக்கு ஒருத்திதான் இந்த மண்ணின் மாண்பு.உயிரே போனாலும் கற்பு தான் முக்கியம்’ என்று ஆவேசத் தலைவர்கள் ரோட்டுக்கு வந்து கொடும்பாவி கொளுத்துகிறார்கள். இன்னொருபுறம் ஓசைப்படாமல் நம் படுக்கையறைக்குள்ளேயே கலாச்சாரத்தை கொத்து பரோட்டா போடும் அநியாயத்தை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அவலம்!தரணி என்கிற பையன் காதலிப்பது பூஜாவை. கல்யாணம் செய்து கொள்வதோ கல்கியை. ‘வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்தானே’ என்று கவுண்டமணி பாணியில் இன்னமும் தமிழ்நாட்டில் டி.வி. சீரியல்கள் அதிகம் பார்க்காத ஆத்மாவாக நீங்கள் அவசரப்பட்டால் ஸாரி. தரணியை பழி வாங்க பூஜா புறப்படுகிறாள். எப்படி?
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:30 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : குமுதம்
இன்றைய குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:17 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 84 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:16 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இலங்கையின் வடக்கே ஓமந்தை சோதனைச் சாவடி இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் திறந்திருக்கும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது
- குற்றவாளிகள் தண்டனை அனுபவிக்கும் விடயத்தில் பாகிஸ்தான் மற்றும் பிரிட்டன் அரசுகள் புதிய வழிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளன
- சீனாவில் எட்டு கிலோ யுரேனியத்தை கள்ளச் சந்தையில் விற்க முயன்றதாக ஒரு கூட்டம் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த எட்டு கிலோ யுரேனியத்தை சீன அரசு தேடி வருகிறது.
- இன்றைய (ஆகஸ்ட் 24 வெள்ளிக்கிழமை 2007) "அஅஅ" செய்திகளுக்கு இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:05 PM
0
comments (நெற்றிக்கண்)
August 23, 2007
எக்காலத்துக்கும் பொருந்துவது "திருக்குறள்" மட்டுமல்ல, இந்த மாமேதையின் சொற்பொழிவும்தான்! நான்கு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோமா?
குடியரசுத் தலைவர் திரு. ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் FeTNA தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவினைத் துவக்கி வைத்து ஆற்றிய உரை ஜூலை 5, 2003 வாழ்த்துக்கள் வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் ஆண்டுவிழாவில் தமிழர்கள் மட்டுமின்றி எல்லா இந்தியர்களையும் தொடர்புகொள்வதில் அளவிலா மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் தமிழ்நாட்டு பள்ளி பிள்ளைகளுக்காக உலகப் புகழ்பெற்ற ப்ரொபஸர் டேவிட் கோல்ட்ஸ்டெயினுடைய மெக்கானிக்கல் யுனிவர்ஸ் அன்ட் பியான்ட் என்ற அறிவியல் சொற்பொழிவை தமிழாக்கம் செய்யும் முயற்சியை இந்த தருணத்தில் துவக்கி வைப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : எண்ணங்கள்
கர்நாடகாவில் நாங்கள்தான் பூர்வக்குடிகள்! நாங்கள் பிழைக்கவந்த தமிழர்கள் இல்லை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:56 PM
1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : கூகிள் குழுமம்
இன்றைய குறள்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:48 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 83 - ம் குறள்
அமைதி எப்படி கிடைக்கும்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:42 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தற்போது நாடு கடந்து வாழ்ந்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீஃப் நாடு திரும்பலாம் என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது
- இந்தியாவில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் எண்ணம் இடதுசாரிக் கட்சிகளுக்கு இல்லை. ஆனாலும் அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு குறித்த அரசின் முடிவையடுத்தே ஆதரவு குறித்து தெரிவிக்கப்படும் என இந்திய இடதுசாரிகள் கூறியுள்ளனர். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 23 வியாழக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:03 PM
0
comments (நெற்றிக்கண்)
August 22, 2007
தமிழ்நாடு அரசின் கேபிள் தொலைக்காட்சி : ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:48 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:47 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
ஜெயிப்பது யார்? கலைஞரா? மாறனா? - பகுதி : 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:45 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
"பாதங்கள் நடக்கலானால் பாதைகள் தடுப்பதில்லை"
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:33 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:14 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 82 - ம் குறள்
அமைதி எப்படி கிடைக்கும்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:12 PM
0
comments (நெற்றிக்கண்)
காயாத கானகத்தே
- தமிழ் நாடக வரலாறு குறித்து தொடர்
தமிழ் நாடகத்துக்கென்று தனியான ஒரு பாணிமட்டுமல்லாது, சிறப்புமிக்க ஒரு வரலாறும் உள்ளது.
தெருக்கூத்தில் ஆரம்பித்து, இலக்கியம் வரை பல்வேறாகப் பரிமாணித்துள்ள தமிழ் நாடகத்தின் வளரச்சி குறித்து பெட்டகத் தொடர் இது.
தமிழ் சினிமாவின் அடித்தளமாக இருந்த நாடகம், அரசியல் களத்திலும், சமூக களத்திலும் பெரும் பங்காற்றியுள்ளது.
தமிழ் சமூகத்தில் நாடகம் ஆற்றிய பங்கு குறித்தும், தற்போதைய உலகில் நாடகம் சந்திக்கும் சவால்கள் குறித்தும் நமது தமிழக செய்தியாளர் டி என் கோபாலன் இந்த நீண்ட தொடரைத் தயாரித்து வழங்குகிறார்.
நாடகத் துறையில் புகழ்பெற்று விளங்கியவர்களின் செவ்விகளுடன், தமிழ் நாடக வரலாற்றை இந்தத் தொடர் மூலம் நேயர்கள் அறிந்து கொள்ளலாம். இணைப்பில் செல்க... http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml - இந்தியாவுக்கும் - ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் வெகுவாக மேம்படும் என்று ஜப்பானியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
- இராக் அரசாங்கம் குறித்த அமெரிக்க விமர்சனங்கள் பொறுப்பற்றவை என்றும், நாகரீகமற்றவை என்றும் இராக்கிய பிரதமர் நூரி அல் வர்ணித்துள்ளார். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 22 புதன்கிழமை 2007) "BBC" செய்திகளுக்கு இணைப்பில் செல்க....
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : "BBC"
"போங்கடா நீங்களும் உங்க தேசியமும்" பாமரனின் பகிரங்கக் கடிதம்!
இது கர்நாடக இந்தியர்களுக்குப் புரிபடவில்லையே என்று. காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சனை வந்தாலே போதும் நமது ‘தேசியக்’ கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக திரண்டு ‘சொட்டு நீர்கூட கொடுக்கக்கூடாது’ என்று போடுவார்கள் தீர்மானம். கர்நாடக காங்கிரஸ் சொல்வது சரியா…
தமிழக காங்கிரஸ் சொல்வது சரியா… இதில் எது சரி…? வாயே திறக்காது அவர்களது ‘தேசியத்’தலைமை.
ஜனதா தளம் மட்டும் சும்மாவா… ஐக்கியமோ… ஐக்கியமற்றதோ… யாருக்கும் குறைந்தவர்களா என்ன…? எடுத்துவிடு அங்கொரு அறிக்கை… இங்கொரு அறிக்கை… இது குறித்து இவர்களது தலைமையும் கப்சிப். இந்தத் ‘தேசியச்’ சிக்கலில் சிக்கிக் கொள்ள விரும்பாத மற்ற தலைமைகளோ… ‘நயாகரா நீர் வீழ்ச்சியைத் தமிழகத்திற்குத் திருப்பிவிட வேண்டும்…செவ்வாய் கிரத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்து தாமிரபரணியோடு இணைக்க வேண்டும்…’ என்றெல்லாம் அள்ளி வீசுவார்கள். காஷ்மீரிலுள்ள பண்டிட்டுகளுக்காக கண்ணீர் வடிப்பவர்கள் காவிரியையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு கதை. மொத்தத்தில் கேணையர்கள் நாம்தான். நமக்கு தேசபக்தியை டன் கணக்கில் ஊட்டோ ஊட்டென்று ஊட்டும் தேசிய ஒருமைப்பாட்டின் ஒட்டுமொத்த ஏஜண்டுகளோ இந்த விஷயத்தில் மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள்.ஆக இவர்களது தேசீயம்… ஒருமைப்பாடு… எல்லாம் தமிழகத்திற்கு மட்டும்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வித்தியாசமானதொரு‘தேசிய ஒருமைப்பாட்டு’ பார்முலாவே வைத்திருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு ’40 லட்சம் தமிழர்கள் ‘பிணைக் கைதிகளாக’ கர்நாடகாவில் இருக்கிறார்கள்…பெருமூச்சையும் கொஞ்சம் மெதுவாக விடுங்கள்…’ என்கிற ரகத்தில் வேதம் ஓதுகிறார் படையப்பா. இது அரசு தூதரல்ல. தேவதூதரே போனாலும் தீர்க்கமுடியாத பிரச்சனை… ஆகவே 40 லட்சம் தமிழரின் பாதுகாப்புக்காக முறத்தால் புலி துரத்திய கூட்டம் வாயையும் மற்றதையும் மூடிக் கொண்டிருப்பது தான் தேசிய சேவை. அரசியலைப் பொறுத்தவரை… ‘தேசிய’ அரசியலில் குப்பை கொட்டி விட்டு மாநிலக் கட்சியானவைகளும் உண்டு… உள்ளூரிலேயே ஓணான் பிடிக்க முடியாத ‘ஜாம்பவான்கள்’ ‘தேசிய’ அரசியலை வெட்டி முறிக்கக் கிளம்பிய கதைகளும் உண்டு. ஆனால் அப்பாவித் தமிழர்களைப் பொறுத்தவரை… ‘தேசிய ஒருமைப்பாடு…’ ‘இறையாண்மை…’ என்பதற்கெல்லாம் அர்த்தமே வேறு. ஈழத்தைப் பொறுத்தவரை இலங்கையின் ‘இறையாண்மைக்குப்’ பங்கம் வராதவாறு உதை வாங்க வேண்டும்.
பம்பாயிலோ… கர்நாடகத்திலோ… என்றால் இந்தியாவின் இறையாண்மைக்கு எந்த பங்கமும் நேராமல் உதை வாங்க வேண்டும். எங்கு எவ்வளவு வாங்கினாலும் அங்கங்குள்ள அரசுகளின் இறையாண்மை பாதிக்கப்படாமல் வாங்கவேண்டும் என்பதே தேசபக்திக்கு அடையாளம்.
போங்கடா நீங்களும் உங்க தேசியமும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:11 AM
1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : பாமரன்
August 21, 2007
தோழர் ஜீவா
பொதுவாழ்க்கையில் அரசியலில் எத்தனையோ பேர் இயங்கியுள்ளார்கள். பலர் தலைவராகவும் அறியப்படுகிறார்கள். ஆனால் சிலர் தாம் பொதுவாழ்க்கையில் இயங்குவதற்கான முன் மாதிரிகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாகத் தமிழகச்சூழலில் முற்போக்கு, சனநாயக, இடதுசாரிச் சிந்தனை மரபின் முகிழ்ப்புக்கும் அதனின்று மேற்கிளம்பும் செயற்பாட்டுக்கும் உறுதியான தளம் அமைத்தவர்களில் ப. ஜீவானந்தத்துக்குத் தனியான இடமுண்டு. தமிழ் மரபுக்குள்ளிருந்து முற்போக்கு சனநாயக இடதுசாரிச் சிந்தனை மற்றும் செயல் வாதத்துக்கு உத்வேகம் கொடுத்தவர் ஜீவா என்று கூறலாம். தமிழ்நாட்டில் நிலவி வந்த காந்திய, பெரியாரிய, மார்க்சியச் சிந்தனைகளின் தாக்கத்துக்கு உட்பட்டு தமிழ்ச் சமூகத்தில் புரட்சிகரமான மாற்றம் உருவாகத் தீவிரமாக உழைத்தவர் ஜீவா. பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறி குடியரசு இதழை உருவாக்கி அதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டுவதில் மும்மரமாக ஈடுபட்டார். பெரியாரோடு இணைந்து செயற்படும் மனநிலையில் ஜீவா அப்பொழுது இருந்தார். 1935வரை சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். 1934-ம் ஆண்டு பகத்சிங்கின் 'நான் நாத்திகன் ஏன்?' என்னும் நூலை ஜீவா மொழி பெயர்த்தார். இந்நூல் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்தது. இதனால் ஜீவாவும், கண்ணம்மையும் (ஈ.வே.ரா.வின் தங்கை) கைது செய்யப்பட்டனர். கருத்துரிமைக்காக முதன்முதலில் தமிழகத்தில் சிறைசென்றவர்கள் இவ்விருவருமாகவே இருப்பார்கள். சுயமரியாதை இயக்கம் இக்காலங்களில் சோவியத் யூனியன் மீதும் லெனின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இயக்கமாக இருந்தது. பெரியாரின் சோவியத் பயணம் மற்றும் அது தொடர்பான அவரது அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தின. மார்க்சியச் சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட மா. சிங்கார வேலரும் இக்காலங்களில் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயற்பட்டு வந்தார். இந்தச் சூழலில் சுயமரியாதை இயக்கம் காங்கிரஸ் கட்சியைவிட முற்போக்கானது என்று ஜீவா கருதினார். ஜீவா குடியரசு இதழில் பாடல்களையும், கட்டுரைகளையும் எழுதி வந்தார். பெரியார் நடத்திய மாநாடுகளிலும் சிறப்பாகக் கலந்து வந்தார். சோசலிசம், பகுத்தறிவு, விஞ்ஞான நோக்கு ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். 1935-ல் நடைபெற்ற திருத்துறைப்பூண்டி மாநாட்டில் ஜீவா மற்றும் பெரியாரின் அணுகு முறைகளிக்கிடையே முரண்கள் வெளிப்பட்டன. இதனால் அவ்வியக்கத்திலிருந்து ஜீவா விலகிக் கொண்டார். பின்னர் 1936-ல் சாத்தான்குளம் அ. இராகவன் உள்ளிட்டோருடன் இணைந்து 'சுயமரியாதை சமதர்மக்கட்சி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் சார்பில் 'அறிவு' என்ற இதழையும் தொடங்கினார். சுயமரியாதை சமதர்மக் கட்சி ஏன் தொடங்கப் பட வேண்டும்? சுயமரியாதை இயக்கத்தி லிருந்து இந்தக்கட்சி எந்தவிதத்தில் வேறு படுகிறது? இவற்றை விளக்கி ஒரு துண்டுப் பிரசுரத்தை ஜீவா வெளியிட்டார். சுயமரியாதை இயக்கம் பற்றிய ஜீவாவின் மதிப்பீடு எத்தகையது என்பதை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சியும் இக்காலங்களில் இயங்கிவந்தது. இக்கட்சிக்குள் கம்யூனிஸ்டுகள் உட்புகுந்து செயற்படத் தொடங்கினார். கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள் பலமுனைகளில் நிகழ்ந்தன. இவர் களுடனும் இணைந்து ஜீவா செயற்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜீவா தேர்ந்தெடுக்கப்படார். 1937-ல் ஜனசக்தி இதழின் ஆசிரியராகவும் பொறுப்பெடுத்தார். 'சோசலிஸ்டு வார இதழ்' என்ற தலைப்போடு ஜனசக்தி வெளிவரத் தொடங்கியது. தமிழக இடதுசாரி அரசியல் முகிழ்ப்பின் சின்னமாக ஜீவா இயங்கினார். அவரது பணிகள் பலநிலைகளில் வேகம் கண்டன. 1938 டிசம்பரில் 'தாமரை' இதழ் தொடங்கப் பட்டது. இதன் மூலம் இடதுசாரி இலக்கிய மரபுக்கான விரிதளம் உருவாக்கப்பட்டது. ஜீவா சங்க இலக்கியம், திருக்குறள், கம்பன், பாரதி படைப்புகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு மிக்கவராக இருந்தார். தமிழ் இலக்கிய மரபுகளுடன் பரிச்சயம் மிக்கவராக இருந்தது அவரது தனிச்சிறப்பு. சமூகம், இலக்கியம் பற்றிய புதிய பார்வைக்கான தளம் அமைத்துக் கொடுத்தார். 1930களின் இறுதியில் இருந்து தமிழ் இலக்கியம், தமிழிப்பண்பாடு குறித்து முற்போக்கு இடதுசாரிப் பார்வையை முன்னெடுத்து வளர்த்துச் சென்றார். திமுக வினர் 1950-களின் பின்னர் மேற்கொண்ட தமிழ் இலக்கியம் பற்றிய உரையாடல்களை ஜீவா 1930-களில் இறுதியில் இருந்து முன்னெடுத்தார். இதன் மூலம் பண்பாட்டுப் போராட்டக் களத்தில் ஜீவா முன்னோடியாகச் செயற்பட்டுள்ளார். இதனையே ஜீவாவின் 'தளமும் வளமும்' உறுதிப்படுத்துகின்றது. "குறிப்பிட்ட இனம் சார்ந்த பண்பாட்டு விழுமியங்களை கம்யூனிஸ்டுகள் எப்படி உள்வாங்குவது என்பதில் இந்திய இடது சாரிகள் மத்தியில் முரண்பட்ட அணுகு முறைகள் இருந்தன. ஜீவா இதில் தெளிவாகச் செயற்பட்டார் என்று கூற முடியும். அதுவே அவரின் மிகப்பெரும் பலம் என்று கூறலாம் பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு விமரிசனங்களுக்கு இன்னும் கூட ஆட்படுத்தப்படுவதைக் காணமுடியும். இதில் ஜீவாவின் அணுகுமுறை வேறுபட்டிருந்தது" என்று பேரா.வீ.அரசு குறிப்பிடுவதை சமகாலப் பின்புலத்தில் வைத்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தென்றல் (அமெரிக்கா)
இன்றைய குறள்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:11 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 81 - ம் குறள்
அமைதி எப்படி கிடைக்கும்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:03 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இந்தியா – அமெரிக்கா அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ரோனன் சென் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களால் இந்திய நாடாளுமன்றத்தில்l பெரும் அமளி ஏற்பட்டது.
- இராக்கை எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் முகமாக சிரியாவுடன் அதிக அளவிலான ஒத்துழைப்பை இராக்கியப் பிரதமரான நூரி அல்மலிக்கி கோரியுள்ளார். இராக்கின் ஸ்திரத்தன்மைக்கு சிரியா ஆதரவளிக்கும் என அதன் அதிபர் கூறியுள்ளார். இன்றைய (ஆகஸ்ட் 21 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:56 PM
0
comments (நெற்றிக்கண்)
August 20, 2007
தண்ணீரே வேண்டாம்! பெப்சி, கோகோ-கோலா போதும்!!
பெற்றோர்கள் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை, பிள்ளைகளுக்குச் சிறுவயதில் இருந்தே பழக்கினால், பல பாரதூரமான பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாமல்லவா? தண்ணீரின் அற்புதம் பற்றி இவர்கள் முழுமையாக அறிவது மிக அவசியம். பல உலக நாடுகளில், பல கோடி மக்கள் , நல்ல குடிநீர் இன்றி அவஸ்தைப்படுவதை இவர்கள் அறிவார்களா? சுத்தமான, நல்ல தண்ணீர் வசதி தாரளமாக இருக்க, இனிப்பும் வண்ணமும் சேர்த்து அதிக விலையில் விற்கும், மென்பானங்களை வாங்கி, நமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதை இனியாவது நிறுத்துவோமே.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:34 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
அமைதி எப்படி கிடைக்கும்?
"தவறான வழியில் பொருள் சேர்க்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவ்வாறு சேர்க்கப்பட்ட பொருள் நிலைக்காது. எவன் ஒருவன் நியாய வழியில் சம்பாதிக்கிறானோ, அவனே அனைவரிலும் நல்லவனாக திகழ்கிறான். அவனது வாழ்க்கையே நல்வாழ்க்கையாக இருக்கிறது"
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:39 AM
0
comments (நெற்றிக்கண்)
ஆமடா சின்னத் தம்பி! திரு.ரமணன்
இசைக் கவி ரமணனின் இன்னொரு பாடல் இங்கே. நாட்டு நடப்புகளை, உள் மனத்தின் ஆற்றாமைகளை, ஏக்கங்களை, நம்முடன் கவிஞர் பகிர்ந்துகொள்கிறார்; வருத்தம் தோய்ந்த இந்த வரிகள், உங்கள் செவியோரம் இதோ வலம் வருகின்றன....... இந்த இணைப்பில் சென்று பாடலைக் கேளுங்கள் http://tamil.sify.com/columns//fullstory.php?id=14451388
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:28 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : சிபி.காம்
இன்றைய குறள்
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:23 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 80 - ம் குறள்
தமிழோசை
- இந்தியா அமெரிக்கா இடையேயான அணுசக்தி உடன்பாட்டை மேலெடுத்துச் செல்லக் கூடாது என இந்திய இடதுசாரிகள் தொடர்ந்து வற்புறுத்துகின்றன
- துருக்கியின் புதிய அதிபருக்கான தேர்தலில் முக்கிய வேட்பாளரான வெளியுறவு அமைச்சர் அப்துல்லா குல் பற்றி பல மாதங்களாக நீடித்த சர்ச்சைகளுக்கு பின்னர் புதிய அதிபர் தேர்தலுக்கான ஆயத்தங்கள் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளன. மேலும் தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 20 திங்கட்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க.. http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:20 AM
0
comments (நெற்றிக்கண்)
August 19, 2007
மாலனின் அரசியல்!
கடந்த வாரம் சிறீலங்கா பாஸ்போர்ட் பற்றி தமிழ் வலைப்பதிவுலகம் பற்றி எரிந்தது. இது பற்றி தமிழ் சசி அவர்கள் விரிவான பதிவு ஒன்று இட்டுள்ளார் மாலனின் அரசியல். அவர் இந்த பிரச்சினை பற்றி வாழ்வியல் மற்றும் அரசியல் கோணத்தில் மிக விரிவாக அலசி இருந்தார். எனக்கு தெரிந்த ஒன்றையும் இதன் மூலம் சொல்ல விரும்புகிறேன். சிறீலங்கா பாஸ்போர்ட்டில் ஒரு சிறப்பு இருக்கிறது. அது நம் யாருடைய பாஸ்போர்ட்டிலும் இல்லாதது. சிறீலங்கா பாஸ்போர்ட்டில் முகப்பு பக்கத்தில் தமிழ் இடம் பெற்று இருப்பது தான் அந்த சிறப்பு. உங்கள் பார்வைக்காக இதோ............................................சென்னை பதிவர் பட்டறையில் மாலன் அவர்கள் வலைப்பதிவுகளில் நன்னடத்தை என்பது குறித்தும், ஈழத்தமிழர்கள் சிறீலங்கா பாஸ்போர்ட் வைத்துக் கொள்வது பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
மாலன் சிறந்த பத்திரிக்கையாளர், எந்தவித பந்தாவும் இல்லாதவர் என்ற காரணத்தால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் சிறந்த, நன்கு அறிந்த பத்திரிக்கையாளர் என்பதால் அவர் முன்வைக்கும் "அரசியலை" எதிர்க்காமல் இருக்க முடியாது.
- புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு மத்தியில் அவர் விதைக்க விரும்புவதை "அதிகபட்ச ஜனநாயகம்" இருக்கும் வலைப்பதிவுகளில் எதிர்க்காமல் எங்கு சென்று எதிர்ப்பது?
- இந்தப் பத்திரிக்கையாளர்கள் பணியாற்றும் பத்திரிக்கைகளுக்கு வாசகர் கடிதம் எழுதியா எதிர்க்க முடியும்?
- அப்படி வாசகர் கடிதம் எழுதினாலும் அதனை இந்தப் பத்திரிக்கையாளர்கள் வெளியிடுவார்களா?
- அல்லது இது வரை தீவிரமான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்களா?
ஆனால் இன்றைக்கு என் வலைப்பதிவு மூலமாக என் கருத்துக்களை கூற முடிகிறது. யாரையும் கேள்வி கேட்க முடிகிறது. ஒரு சாமானியனுக்கு இணையம் கொடுத்த இந்த ஜனநாயக உரிமை பலரின் கண்களை உறுத்துகிறது. இந்த ஜனநாயக உரிமையை முறிக்க அவர்கள் இணையத்தில் நன்னடத்தை என்பதை முன் வைக்கிறார்கள்.
இணையத்தில் பிரச்சனை இல்லை என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தமிழ் இலக்கிய சூழலிலும், தமிழக மற்றும் இந்திய வெகுஜன ஊடகங்களிலும் இருக்கும் பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் நடப்பது ஒன்றுமேயில்லை. ஆனால் அங்கெல்லாம் நன்னடத்தை வேண்டும் என யாரும் போதிப்பதில்லை.
எனக்கு முதன் முதலில் அறிமுகமான இலக்கிய சண்டை என்று சொன்னால் நான் பள்ளியில் படிக்கும் பொழுது சமுத்திரத்திற்கும், திலகவதிக்கும் இடையே நடந்த சண்டையை குறிப்பிடலாம். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சமுத்திரம் பெண் எழுத்தாளர்கள் குறித்து உளறி வைக்க, திலகவதி நாங்கள் இப்படி பட்டவர்களை அடிக்க செருப்புகளை தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார். பதிலுக்கு திலகவதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமுத்திரம் தாக்க திலகவதி நீதிமன்றம் சென்று சமுத்திரம் என்னைப் பற்றி எழுதக்கூடாது என தடை உத்திரவு வாங்கியதாக ஞாபகம் இருக்கிறது.
அன்று தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் நன்னடத்தைப் பற்றி பேசுகிறவர்கள் இந்த இலக்கியவாதிகள் எப்படி "உதாரண புருஷர்களாக" இருக்கலாம் என்பது குறித்து இலக்கிய மேடைகளில் பேசலாம்.
இந்திய வெகுஜன ஊடகங்களின் நன்னடத்தைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. தயாநிதி மாறனை மைய அமைச்சர் பதவியில் இருந்து திமுக விடுவித்துக் கொண்ட பொழுது தினமலர் "கொசு தொல்லை ஒழிந்தது" என்பதாக தலைப்பு செய்தி வெளியிட்டது. தினகரன் அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்ட பொழுது "தஞ்சையில் எலிகளின் தொல்லை" என தலைப்பு செய்தி வெளியிட்டது. இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்களே. தனிமனித தாக்குதல் வெகுஜன ஊடகங்கள் முழுக்க நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமா அப்பாவிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் அதன் மூலம் அவர்கள் வாழ்வியலை சிதைக்கும் போக்கும் ஊடகங்களில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஹனீப் இவ்வாறே ஊடகங்களால் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் அவர் நிரபராதி எனக்கூறிய பொழுது அந்த ஊடகங்கள் சிறு மன்னிப்பு கூட கோரவில்லை. அடுத்த பரபரப்பு செய்திக்கு மாறி விட்டன.
இன்றைய வணிக மயமான ஊடகங்களுக்கு மத்தியிலே வலைப்பதிவுகளிலும், சிற்றிதழ்களிலும் தான் காத்திரமான பல நல்ல படைப்புகள் வெளிவருகின்றன. வெகுஜன ஊடகங்களில் நல்ல படைப்புகள் வெளிவருவது எப்பொழுதோ நின்று போய் விட்டது. வலைப்பதிவுகளில் சிரீயஸான விடயங்கள் மட்டும் தான் வர வேண்டும் என்ற கோட்பாடு தேவையில்லை. வலைப்பதிவுகள் அதன் இயல்பான பாதையில் பயணிப்பதே நல்லது. அந்த வகையில் மொக்கைகள்/கும்பிகள் தேவையற்றவை எனச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. வலைப்பதிவுகளில் அனைத்தும் கிடைக்கிறது. வருகின்ற வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.
வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகம். ஒரு சிலர் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டு தங்களை மட்டுமே எழுத்தாளர்கள் என்பதாக உருவாக்கி கொண்ட முறைக்கு எதிராக "எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனே" என்பதை உருவாக்கிய சமதர்மம் வலைப்பதிவு உலகம். இங்கு மொக்கைகளும் கிடைக்கும், நல்ல காத்திரமான படைப்புகளும் கிடைக்கும். இதற்கு இலக்கணங்களையும், கோட்பாடுகளையும், நியதிகளையும் யாரும் வடிவமைக்க தேவையில்லை.
அப்படி நியதிகளை வகுத்தாலும் அதை உடைப்பதில் வலைப்பதிவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஆனந்தம் உண்டு
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : சசியின் டைரி
இரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : கைமண் அளவு
சரத்குமாரின் புதிய கட்சி : திராவிட மற்றும் கழகம் என்ற வார்த்தைகளே ஊழல் நிறைந்தது
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:01 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இடஒதுக்கீடு பகுதி 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:59 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இடஒதுக்கீடு பகுதி 4
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:55 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
டாடா தொழிற்சாலை பற்றிய பதிவு : பகுதி 5
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:54 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
அறுசுவை உணவு என்றால் என்னவென்று தெரியுமா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:13 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Unknown Source
இன்றைய குறள்
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு
அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:00 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 79 - ம் குறள்
அமைதி எப்படி கிடைக்கும்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:59 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- கைத்தறி நெசவிற்கு பெயர் பெற்ற அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் சுனாமிக்கு பின்பு கைத்தறி நெசவு மீண்டும் உயிர் பெற்று வருவதாக அந்த பிரதேச நெசவாளர்கள் கூறுகின்றார்கள்.
சுனாமியின் போது இந்த பிரதேசத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் அழிந்து போயின. பலர் மரணமடைந்தனர். - இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்து காரணமாக நீரில் படகு மூழ்கி ஐஸ் கட்டிகள் கொண்டு வந்த பெட்டிகளைப் பிடித்தபடி தத்தளித்துகொண்டிருந்த 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்பாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
- இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு பிரச்சனையில் ஆளும் மத்திய அரசுக்கு நெருக்கடி: இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகளின் பிடி இறுகி வரும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியாக, ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கூட்டங்களை நடத்தியது.
- ஆசிய பசிபிக் பிராந்திய எட்டாவது சர்வதேச எயிட்ஸ் மாநாடு ஞாயிற்றுகிழமையன்று கொழும்பு பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தொடங்கியது. எதிர்வரும் 23 ம் திகதிவரை ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் 60 நாடுகளிலிருந்து சுமார் 3000 பேர் கலந்துகொண்டு இந்தக் கொடிய நோயின் தாக்கம் குறித்து விவாதிக்கவிருக்கிறார்கள். மேலும் இன்றைய (ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:45 PM
0
comments (நெற்றிக்கண்)
அண்ணாகண்ணன் : பொதிகை நேர்காணல் 2005
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:04 AM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:33 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : ஆறாம்திணை
August 18, 2007
நண்பர் யாழ் சுதாகர் தொகுத்து வழங்கும் இதயத்தைப் பிழிந்து எங்கோ எடுத்துச் செல்லும் யேசுதாஸின் இனிய பாடல்கள்!! இசையை ரசிக்கும் எவருக்கும் மொழி அவசியம் இல்லை என்பது இந்தப் பதிவின் மூலம் நிரூபணமாகும் என்பதில் ஐயமில்லை!
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:20 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 78 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:02 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- பருவ மழையினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளில் உணவுப்பற்றாகுறை ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
- இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், இடதுசாரிக் கட்சிகள் தங்கள் நிலையைத் தளர்த்திக் கொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றன. தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 18 சனிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:50 PM
0
comments (நெற்றிக்கண்)





