June 12, 2009

தமிழா... உன் கதி இதுதானா?

'உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர். ஆளரவமற்ற இருட்புலத்தில் அவர்கள் புதைக்கப்பட்டனர். யாரும் கண்ணீர் சிந்தவில்லை. யாரோ அவர்களைக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனர். அவர்தம் புகழ்வாய்ந்த பெயர் கூறிட அங்கே சிலுவையோ... சமாதியோ... மண்டபமோ ஏதுமில்லை.

புல் முளைத்திருக்கிறது அங்கே. தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று அந்த ரகசியத்தைத் தாங்கியிருக்கிறது. கரை மீறிச் சீறியடிக்கும் அலைகள் மட்டுமே சாட்சியம். வல்லமை வாய்ந்த அவ்வலைகள் கூட தொலைதூர இல்லத்துக்கு செய்தியைக் கொண்டுபோக முடியாது...' என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!

விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜ பக்ஷேவின் ராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்குப்பறந்தனர். ராஜபக்ஷேவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின.

ஒரே நாளில் பல்லா யிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது! சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின.

இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் 'நாடி ஜோசியம்' சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச்வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், 'இரவு' என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.

'என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது. என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்?

எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!' என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். 'பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது.

அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!' என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா?

முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திரிகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா?

ராணுவத்திலும் காவல் துறையிலும் தமிழர் கணிசமாக இடம் பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.'பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது.ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய ரத்த வெறியே காரணம்!' என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர்.

நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்தயாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956-ல் அறிவிக்கப் பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்?

பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958-ல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்?

யாழ்ப்பாணத்தில் 1974-ல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன் நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977-ல் வெறித்தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்?

'தமிழரின் அறிவுக்கோயில்' என்று கொண் டாடப்பட்ட யாழ்நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக் கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27-ம் நாள் 18 தமிழரும் குரூர மாகக் கொல்லப்பட்டது யாரால்? சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல் களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது.

புத்த பூமியை ரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி... ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான ராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

வீடிழந்து, உறவிழந்து, மனஅமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற ராணுவத்தின் முன்மார் பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும்.

'புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?' என்று பண்டார நாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்ஷேவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்... அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும்.

காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித்தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப் பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ஷே வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத்தமிழரின் இதயரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும். பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும்.

ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ஷே சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவ டிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், ஃபிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக 'நூரம்பர்க் விசாரணை' நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்' உருவானது. 'உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே' என்று தெளிவுபடுத்துகிறது. 'சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்' என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.

'ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ஷே அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்ஷேவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!

வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!'சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும்.

வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!' என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள். ஈழத்தில் வாடும் தமிழரும், புலம் பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம்.

ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். 'அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்' என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடெல்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது.

அதனால்தான் அது ராஜபக்ஷேவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.'பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட்பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?' என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்!

- தமிழருவி மணியன்

June 10, 2009

அந்த மாவீரன் இனி திரும்பி வரப்போவதில்லையென்பதே உறுதியானது!

நம்பினாலும் நம்ப மறுத்தாலும் அந்த மாவீரன் இனி திரும்பி வரப்போவதில்லையென்பதே உறுதியானது! : அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம்.

வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது.
Justify Full
கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம்.

எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம்.

எமது மனங்களில் என்ன இருந்தாலும் - நாம் நம்ப மறுத்தாலும் - அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை பற்றிய தூய்மையான கனவைச் சுமந்து - 37 ஆண்டுகளாக அந்தக் கனவை நனவாக்குவதற்கு மட்டுமே போராடிய அந்த உன்னதமான மனிதர் - எமது இனத்தின் பெருந் தலைவர் - அந்தப் போராட்டக் களத்திலேயே வீழ்ந்து போனார்.

'தமிழீழத் தனியரசு' ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்பினார். அதனை அமைப்பதற்குச் சிறந்த வழி என தான் நம்பிய ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியிலே தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரமாயிரம் போராளிகளுக்கு அவர் தலைமையேற்றார். அந்த வழியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்து - எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாமல் போராடினார். அந்த வழியிலேயே தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒவ்வொரு போராளியையும் அவர் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே அந்தப் போராளிகளை வழிநடத்திய தனது தளபதிகளையும் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே தானும் போராடி எமது கண்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து அவர் போய்விட்டார்.

தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தளகர்த்தருமான மேன்மை மிகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் - தமிழர் சரித்திரத்தின் மகுடமாக, எமது நெஞ்சத்தில் நிலைத்த நினைவாக, எம்மை வழிநடத்திச் செல்லும் ஆன்ம சக்தியாக - இனி எங்கள் மனங்களிலும், அறிவிலும் வாழ்வார்.

அந்தப் படங்களைப் பார்த்தேன்: தமிழ்த் தேசிய இனத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாறு அங்கே சரிந்து கிடந்தது.

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும்.

விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, பாணு, ராஜூ, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும்.

விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும்.

ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?...

அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...

அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..

அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..

எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது.

தப்பி ஓடி வேறு ஊர்களுக்குச் சென்று விடாமல் அந்த மண்ணிலேயே அவர் வாழ்ந்திருக்கின்றார்.

வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார்.

உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.

அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட 'தமிழீழம்' என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார்.

மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.

ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் அணிவித்து களத்திற்கு அனுப்பிய சயனைட் நச்சுக்குப்பியை தன் கழுத்திலும் அவர் அணிந்திருக்கின்றார்.

எத்தனையோ கரும்புலிகளின் உடல்களில் அணிந்து அனுப்பி வைத்த வெடிகுண்டு அங்கியை - துப்பாக்கி குண்டு பட்டு தற்செயலாக வெடித்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பொட்டம்மான் வற்புறுத்திக் கழற்றும் வரையிலும் - தன் உடலில் அவர் அணிந்திருந்திருக்கின்றார்.

எல்லாவற்றுக்கும் மேலாக - தானே துப்பாக்கியை ஏந்திப் போரிட்டு களத்தில் அவர் மடிந்திருக்கின்றார்.

மில்லர் முதல், திலீபன் முதல் - தான் வழியனுப்பி வைத்த ஒவ்வொரு கரும்புலி வீரரிடமும் - "நீங்கள் முன்னாலே செல்லுங்கள் நான் பின்னாலே வருவேன்" என்று எவ்வளவு தெளிவுடன் சொன்னாரோ - அதே தெளிவுடனேயே அவர்கள் பின்னாலேயே அவரும் சென்றிருக்கின்றார்.

தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் படி அடுத்தவர்களிடம் கேட்காத மகோன்னதமான தலைமைத்துவப் பண்பின் இலக்கணமாக அவர் வாழ்ந்திருக்கின்றார்... வீழ்ந்திருக்கின்றார்.


முப்பது வருட காலமாகப் போராடி - சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்த்த தமிழ் சாம்ராச்சியம் - அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்த நொருங்கி மண்ணோடு மண்ணாகி விட்டது. ஆனால் - இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் - மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம்ராச்சியங்கள் எழுவதும் வீழ்வதுமே வரலாறு.

பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது - ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம் தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது.

'தமிழீழம்' என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறிவிற்குள்ளும் அவர் ஆழப் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார்.

விடுதலை பெற்ற மனிதர்களாக - மதிப்புடனும் பெருமையுடனும் - இந்த உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியையும், வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்.

தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் கோரிக்கையைப் பலப்படுத்தி -

எங்கள் இனத்தின் சின்னமாக, எங்களது அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும் சோகத்தினதும் மகிழ்ச்சியினதும் வெளிப்பாடாக - தனது சாவுக்குப் பின்னாலும் நின்று நிலைத்து வாழும் வகையான ஒரு கொடியைத் தமிழுக்கு அவர் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் -

பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டியெழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிவிட்டுச் சென்றிருக்கும் உறுதியும் துணிவும் வீரமும் தான்.

பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் - வீரம், துணிவு, உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து, திரைப்படங்களில் பார்த்ததோடு சரி.

ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

சரியோ தவறோ - அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்; அந்த மனிதர் மட்டுமே - எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார்.

அந்த மனிதர் மட்டுமே - எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார்.

தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம்.

சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஒரு புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி எனத் தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.

அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள் தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது - அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான்.

அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களை தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது தான் அவர் வரித்துக்கொண்ட இலட்சியம். அந்த இலட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்.

அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, அந்த இலட்சியத்திற்காகவே வீழ்ந்தும் போனார் அந்தப் பெருமனிதன்.


அவரது இழப்பைத் தாங்கும் மனத் திடம் எமக்கு இல்லாமலிருக்கலாம்; அல்லது, அவரது வீரச்சாவை ஏற்க முடியாமல் வேறு ஏதும் காரணங்கள் எம்மைத் தடுக்கலாம்; ஆனால், அத்தகைய எமது மனப் பலவீனங்களோ, அல்லது வேறு காரணங்களோ - 37 ஆண்டுகளாக எமக்காகவே போராடி வீழ்ந்த அந்த மாதலைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய இறுதி வணக்க மரியாதைகளைச் செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவையாக இருப்பது நியாயப்படுத்த முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது நாம் அவருக்கு இழைக்கும் துரோகமும் கூட.

அவர் "இருக்கிறார்" என்றும் "இல்லை" என்றும் ஒரு மர்மத்தை நீடித்துச் சென்று, அவர் இருப்பதைப் போலவே ஒரு மாயையை வளர்த்துச் சென்று, திரும்பவும் எழுந்தருளி அவர் வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம்.

அவரது இல்லாமையை ஏற்றுக்கொண்டு, அவருக்குரிய இறுதி வணக்கங்களைச் செலுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றுக்கொண்டு, அவர் விட்டுச் சென்றிருக்கும் தலைமைத்துவ இடைவெளியைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்துகொண்டு - வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நாம் எல்லோருமாகச் சேர்ந்து நகர்த்துவதே தேவையானதும் நேர்மையானதுமாகும்... ஒரு வகையில் அதுவே நாம் அவருக்குக்கு வழங்கும் மரியாதையும் கூட.

தேசத் தந்தை எஸ். ஜே.வி செல்வநாயகத்தி்ன் மறைவுடன் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 1' முடிவுக்கு வந்தது.

தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீரச்சாவுடன் ஆயுதம் தாங்கி முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 2' முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் - தமிழர் போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த எமது ஆட்சியும், கடந்த அறுபது ஆண்டு காலமாக நாம் இழந்து வரும் எம் அடிப்படை அரசியல் உரிமைகளும் இன்னும் மீளவும் வென்று எடுக்கப்பட்டுவிடவில்லை.

மிகக் கொடூரமான இன அழிப்புப் போருக்குள் சிக்கி - உருக்குலைந்து - முட்கம்பி வேலிகளுக்குள் முடங்கிச் சிறையிடப்பட்டிருக்கும் எமது மக்களின் கெளரவமான வாழ்வு இன்னும் மீளவும் பெற்று எடுக்கப்பட்டுவிடவில்லை.

முன்னாலே சென்றுவிட்ட அந்தத் தலைவன் வழியில் பின்னாலே செல்வதே இப்போது எம் முன்னால் உள்ள தலையாய கடமை.

பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - 'தமிழர்கள்' என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம்.

அவர் காட்டிய உறுதியுடன்... அவர் காட்டிய விடா முயற்சியுடன்... அவர் காட்டிய ஒழுக்கத்துடன்... அவர் காட்டிய இன பக்தியுடன்... - 30 ஆயிரம் தமிழ் போர் வீரர்கள் அணிவகுத்த - அவர் ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் எங்கள் தேசத்தின் தேசியக் கொடியின் கீழ் நாமும் அணிதிரள்வோம்.

அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து புதிய வேகத்துடன், முன்னெடுப்போம்... 'தமிழீழப் போர் - 3'

தி.வழுதி

Courtesy : Puthinam

May 26, 2009

ஈழம்தான் அற்றுப்போய்விட்டதா அல்லது காலம்தான் அற்றுப்போய்விட்டதா


ஈழத்தின் தீயூழ்!
மாவீரன் பிரபாகரன் மாண்டான் என்னும் செய்தி தொலைக்காட்சிப் பெட்டிகளைத் துளைத்துக் கொண்டு வெளிப்பட்டபோது, அடிவயிற்றை முறுக்கிக் கொண்டு, இனம் புரியாத பீதி யாவரையும் ஆட்கொண்டது. தமிழ்நாடு இழவு வீடாக மாறியது! "ஈழம் எங்கள் தாகம்'' என்று போர் முரசு கொட்டியவன், தன்னுடைய தாய் நாட்டு விடுதலைக்காகப் பதினெட்டு வயதில் களம் புகுந்தவன், களத்திலேயே செயல்பட்டு, களத்திலேயே உண்டு, களத்திலேயே உறங்கி, சிங்களக் காடையர்களுக்கு முப்பதாண்டு காலம் சிம்ம சொப்பனமாக விளங்கியவன், களத்திலேயே நீடு துயில் கொண்டு விட்டான் என்று சிங்களச் செய்திகள் சொல்லுகின்றன!

ஒரு புறநானூற்றுத் தாய் சொன்னாள் : "அவனை ஈன்ற வயிறு இதுதான்; அதன் பிறகு அவனை நான் எங்கே அறிந்தேன்! பகைவர்களின் கருவறுக்கப் போர்க் களங்களில் தென்படுவான்! அங்கே போய்ப் பாருங்கள்!''

ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி ஒரு மகனை ஈழத்தாய் ஒருத்தி அந்த மண்ணின் விடுதலைக்காகச் சுமந்தாள்!

இலங்கை மக்கள் ஒரே நாட்டின் மக்கள் என்று முழங்குகிறாரே ராஜபட்ச! சிங்கள ராணுவக் குண்டு வீச்சுக்கு அஞ்சி ஈழ மக்கள் ஊர்களைக் காலி செய்து கொண்டுபோன பிறகு, அந்தப் பகுதியிலே கூட அன்று; அந்தத் தமிழர்களின் வீடுகளிலேயே சிங்களவர்களைக் கொண்டு வந்து ராணுவப் பாதுகாப்போடு குடியேற்றுகிறாரே ஏன்? வஞ்சகம்தானே!

தமிழினத்தை முற்றாக அழித்து, அந்தப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளாக்கும் அவருடைய வஞ்சகச் செயலை அறிந்தும், மன்மோகன் சிங் - கருணாநிதி கூட்டணி அரசு அவருக்கு வகைதொகை இல்லாமல் போர்க் கருவிகளை வழங்கியதே! போரால் அவருடைய கருவூலம் வறண்டு விட்டது என்று வகைதொகை இல்லாமல் கடன் கொடுத்து உதவியதே!

வாலி வலிமையானவன்; நேரியவன்; பெருந்தன்மையானவன்; ஆனால் தன்னால் வாலில் கட்டி அடிக்கப்பட்ட ராவணன் தன்னுடைய நட்புக்காக இறைஞ்சுகிறான் என்று இரங்கி, தீயவனோடு நட்புப் பூண்டான். ராவணனின் நட்பால் வாலிக்கு எந்தப் பயனுமில்லை. ஆனால், சிற்றினச் சேர்க்கை காரணமாக ராமனின் அம்புக்கு இரையாக நேரிடவில்லையா? ராவண வதம் நிகழ்வதற்கு வாலி வதம் நிகழ்ந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையா?

வலிமையான நாடு இந்தியா! பல்லாயிரக் கணக்கில் தமிழ் மக்களைக் கொன்று மாபாதகம் புரிகின்ற ராஜபட்சவுடன் சேராத கூட்டு ஏன் சேர வேண்டும்? அந்த நீச ஆட்சிக்கு ஆயுதங்கள் ஏன் வழங்க வேண்டும்? இந்த நீச நட்பால் இந்தியா மானக்கேடடைந்தைத் தவிர பெற்ற பயன் என்ன?

நடந்து முடிந்த தமிழினப் பேரழிவு குறித்துச் சிங்களக் காடையர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். தமிழினத்தைச் சின்னா பின்னப்படுத்தி விட்டதாகக் குதூகலிக்கிறார் ராஜபட்ச! மண்டியிட்டு மண்ணை முத்தமிடுகிறார்!

அந்தக் குறியீட்டின் மூலம் அவர் சிங்கள இனத்திற்குச் சொல்லும் செய்தி இந்த மண்ணை உங்களுக்கு மட்டுமே உரித்தாக்கி விட்டேன் என்பதுதானே!

சிறுபான்மை, பெரும்பான்மை என்பதெல்லாம் கிடையாது; ஒருபான்மைதான் உண்டு என்று வெற்றிக்குப் பிந்தைய பாராளுமன்றத்தில் விளம்பி இருக்கிறார் ராஜபட்ச! அதனுடைய பொருள் இதுவரை இருந்து வந்த, இடையில் கேள்விக்குள்ளான, ஒற்றையாட்சி முறையை மீண்டும் உறுதிப்படுத்தி விட்டேன் என்பதுதானே!

ஈழப் பிரிவினைக்குக் கூட பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, முடிந்தால் நிறைவேற்றிக் கொள் என்பது ராஜபட்சவின் அறைகூவல்!

அப்படி முடியாதென்றால் "ஜனநாயகத்தில் நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்'' என்று சமாதானமாகப் போய்விட வேண்டும் என்பது ராஜபட்சவின் அறிவுரை!
அதை விட்டு விட்டு உரிமை பற்றிப் போராடினால் சிங்கள ராணுவம் சுட்டுப் பொசுக்கும்; அதற்குச் சுடத் தெரியவில்லை என்றால் இந்தியாவைத் துணைக்கழைத்துக் கொள்ளும் என்பது ராஜபட்சவின் எச்சரிக்கை.

இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அதிபர்களும் தங்கள் தங்கள் பங்குக்குத் தமிழின அழிப்பு வேலையை மேற்கொண்டவர்கள்தான்! ஆனால் கடைசியாக ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் அந்தப் பகுதி சிக்கிக் கொண்டதுதான் பேரவலம்! இந்தியா அந்தக் கசாப்புக் கடைக்காரருக்கு வெட்டுக் கத்தி கொடுத்து உதவியது அதை விடக் கொடுமை!

அந்த வெட்டுக் கத்தியைக் கொடுக்க விடாமல் தடுத்து, ஆடுகளைக் காக்கும் அதிகார பீடத்தில் கருணாநிதியைத் தமிழ் மக்கள் கீழேயும் மேலேயும் ஏற்றி வைத்திருந்தும், இவரும் சேர்ந்து கொண்டு "ஐயோ! ஆடுகள் வெட்டப்படுகின்றனவே! என்று நீலிக் கண்ணீர் வடித்துக் குரலெடுத்து ஒப்பாரி வைத்தது, வஞ்சகத்திலெல்லாம் வஞ்சகம்!

ஈழத் தமிழினத்திற்கு எதிராக நினைக்கவே நெஞ்சு நடுங்கும் கொடுஞ்செயல்கள் ஜெயவர்த்தன காலத்திலேயே தொடங்கி விட்டன! ஆனால் அவருடைய கழுத்தை அப்போதைக்கப்போது பிடித்துக் கட்டுக்குள் வைக்க இந்திரா காந்தி போன்ற வீராங்கனைகளும், எம்.ஜி.ஆர். போன்ற பொன்மனச் செம்மல்களும் ஆட்சிகளில் இருந்தார்கள்! ஈழப் போராளிகளை ராணுவ ரீதியாக வளர்த்தவர்கள் அவர்கள்தான்!

முதல் மூன்று ஈழப் போர்களிலும் மூன்றில் இருபகுதிச் சிங்களவர்கள் மூன்றில் ஒரு பகுதித் தமிழர்களிடம் மண்ணைக் கவ்வியதன் விளைவாக தமிழீழம் அறிவிக்கப்படாத விடுதலை பெற்ற நாடாகச் செயல்பட்டது!

ஈழத்தில் போராளிகளிடம் தரைப்படை இருந்தது; சிறு கப்பல்களும், விமானங்களும் இருந்தன. ஈழத்தின் 16,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் போராளிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அவர்களின் நாடு ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக இல்லையே தவிர மற்ற எல்லாம் நடந்தேறின. இதற்கிடையே ரணில் விக்கிரமசிங்க வரவேண்டிய இடத்திற்கு ராஜபட்ச வருவதற்குத் தங்களை அறியாமலேயே ஈழப் போராளிகள் உதவி விட்டார்கள்!

எத்தனையோ பிழைகள் செய்திருக்கிறார்கள்! யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பது போலத்தான் அது! இவர்களின் இடத்தில் டக்ளஸ் தேவானந்தாவையும், இத்தனை லட்சம் தமிழர்கள் அழிவதற்குச் சிங்களவர்களுக்கு உளவு சொல்லி, ஈழப் பிழைப்புக்குப் பதிலாக ஈனப் பிழைப்புப் பிழைத்த கருணாவையும் நினைத்துப் பாருங்கள்! மலத்தை மிதித்து விட்டது போன்ற அருவருப்பு ஏற்படவில்லையா?

ரணிலுக்குப் பதிலாக ராஜபட்ச வந்தது தமிழின அழிவுக்கு முதற் காரணம்.

சோனியாவின் "ரப்பர் முத்திரை' என்று புகழ்கொண்ட மன்மோகன் சிங் பிரதமரான காலமும், சொல் வேறாகவும், செயல் வேறாகவும் வாழ்ந்து பழக்கப்பட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரான காலமும் ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தோடு பொருந்தி அமைந்து விட்டதை ஈழத்தின் தீயூழ் என்றுதான் வள்ளுவ மொழியில் சொல்ல வேண்டும்!

இவ்வளவு கொடுமைகளுக்கும் ஈழம் கசாப்புக் கடை ஆனதற்கும் ராஜபட்ச முதற் காரணம்! ஆயுதம் வழங்கிய மன்மோகன் சிங் துணைக் காரணம்! மன்மோகன் சிங்கை முடக்குகின்ற அதிகாரம் முற்றாக வாய்த்திருந்தும், அந்த அதிகாரத்தை உரிய வழியில் பயன்படுத்தி இந்தியாவின் அயல் விவகாரக் கொள்கையையே மாற்றுவதை விடுத்து, நாளைக்கொரு மனிதச் சங்கிலி, ஒருவேளை தொடங்கி மறுவேளை வரும்வரை உண்ணாநோன்பு என்று பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்த கருணாநிதி இன்னொரு துணைக் காரணம்!

ராஜபட்ச என்னும் முதற் காரணமும் மன்மோகன் சிங், கருணாநிதி என்னும் துணைக் காரணங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பிணமாவதற்கும் நான்காம் விடுதலைப் போர் முடிவுக்கு வரவும் காரணங்களாயின!

நான்காம் விடுதலைப் போர் முடிவுற்று விட்டது. அதனுடைய பொருள் ஐந்தாம் விடுதலைப் போர் அடுத்துத் தொடங்கும் என்பதே!

நான்கோடு எண்ணிக்கை முடிந்துவிட்டதாக ராஜபட்சவோ, மன்மோகன் சிங்கோ, கருணாநிதியோ, கருணாவோ கருத மாட்டார்கள். நான்கின் வளர்ச்சி ஐந்து என்பதை அவர்கள் அறியாதவர்களில்லை! எந்த விடுதலைப் போராட்டமும் இலக்கை அடையாமல் முற்றுப் பெற்றதாக வரலாறு கிடையாது.

ஒருவேளை அந்த ஒற்றைப் பிரபாகரன் இல்லையென்றே ஆகிவிட்டாலும் ஓராயிரம் பிரபாகரன்களை காலம் உடனடியாக உருவாக்கும்! ஈழத்தின் தேவைக்கு ஏற்பக் காலத்தால் வடிவமைக்கப்பட்டவன்தானே பிரபாகரன்! ஈழம்தான் அற்றுப் போய்விட்டதா? அல்லது காலம்தான் அற்றுப் போய்விட்டதா?

உலகின் மூத்த இனம், சிந்து சமவெளி நாகரிகம் கண்ட இனம், தெய்வப் புலமைத் திருவள்ளுவனைப் பெற்ற இனம் நாதியற்றுப் போக இயற்கை அனுமதிக்காது!

May 18, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்:செ.பத்மநாதன் சேனல் 4 சற்றுமுன்-செவ்வி வீடியோ

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
இதனையடுத்து ஜரோப்பியவாழ் தமிழர்கள் பெரும் மனச்சோர்வடைந்து குழப்பத்தில் காணப்பட்டனர். இந்த ஒட்டுக் குழுக்கள் தமது இணையத்தளம் மூலம் இப்பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். எனவே தமிழீழ உறவுகளே இலங்கை அரசின் கூலிப்படைகள் நடாத்தும் இணையங்களை சென்று பார்வையிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.

May 16, 2009

எழுத்தாளர் பாமரன் : அதிகாலைக்கான பிரத்தியேக நேர்முகம்

எழுத்தாளர் பாமரன் : அதிகாலைக்கான பிரத்தியேக நேர்முகம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14384&lang=ta&Itemid=107

தமிழினம் அறுந்து/தோற்றுப்போன தேர்தல் – 2009 : நாக.இளங்கோவன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14398&lang=ta&Itemid=163

தமிழர்கள் படுகொலை: போராட தயாராகுமாறு பழ.நெடுமாறன் அழைப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14410&lang=ta&Itemid=52

எழுத்தாளர் பாமரன் : அதிகாலைக்கான பிரத்தியேக நேர்முகம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14384&lang=ta&Itemid=107

ஈழப்போராட்டத்துக்கு இந்தியா நண்பனா? எதிரியா? : தோழர் மருதையன் செவ்வி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13896&lang=ta&Itemid=107

காசில்லை கனவுகள் மட்டும் நிறைந்து கிடக்கும் இப்பிஞ்சுகளுக்கு உதவுங்கள்!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14371&lang=ta&Itemid=185

சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணியப்போவதில்லை–ரோஹித்த போகொல்லாகம
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14401&lang=ta&Itemid=52

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : சிறிலங்கா இராணுவ கேணல் கைது
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14395&lang=ta&Itemid=52

May 01, 2009

ஒவ்வொரு தமிழனும் அவசியம் காணவேண்டிய காணொளி

இக் காணொளி ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம். தயவுசெய்து இக் காணொளியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

April 28, 2009

இதோ இன்னொரு பிரபாகரன்! அன்றிருந்த சார்லஸ் ஆன்டனி இதோ மீண்டும்...

சார்லஸ் ஆன்டனி - 20 ஆண்டுகள் கழித்து சிங்கள அரசாங்கத்துக்கு மீண்டும் ஒரு புலி சொப்பனமாக மாறியிருக்கும் பெயர்! அன்று இருந்த ஆன்டனி, பிரபாகரனின் ஆத்மார்த்தமான நண்பன். இன்று இருக்கும் ஆன்டனி, உயிருக்குயிரான மகன்! சார்லஸ் ஆன்டனியைப் பிரபாகரனால் மறக்க முடியாது. 25 ஆண்டுக்கு முன்னால், சாவகச்சேரி காவல் நிலையத்தைக் கைப்பற்றிய சம்பவம்தான் ஜெயவர்த்தனே அரசாங்கத்துக்குப் புலிகள் மீது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. ஒரு பஸ்ஸைக் கடத்தி, அதில் சார்லஸ் தலைமையிலான புலிப் படை காவல் நிலையத்தை நோக்கி வந்தது. இயந்திரத் துப்பாக்கிகள் முழங்க உள்ளே நுழைந்த சார்லஸ், அங்கு ஆயுத அறை எங்கே இருக்கிறது என்று தேடினார். ஒரு ரிவால்வர், 28 துப்பாக்கிகள், இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள் என இருந்ததை அள்ளிக்கொண்டு வெளியேறினார்கள். சார்லஸைக் குறிவைத்துத் தேடியது சிங்கள ராணுவம். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் மீசாலை என்ற இடத்தில் அவர் தங்கி இருப்பதாகத் தகவல் கிடைக்க… போய் இறங்கினார்கள்.

பனை மரங்களுக்குள் ராணுவம் பதுங்கியிருக்க, வெட்டவெளியில் மாட்டிக்கொண்டனர் சார்லஸூம் இரண்டு போராளிகளும். முதல் குண்டு நெஞ்சில் பாய்ந்தது. உயிரோடு தான் பிடிபடக் கூடாது என்று நினைத்த சார்லஸ், ‘என்னைக் கொன்றுவிடு. எந்தப் புலியையும் ராணுவம் உயிரோடு பிடிக்கக் கூடாது’ என்று சக போராளிக்கு உத்தரவு போட்டார். அவன் சம்மதிக்கவில்லை. மீண்டும் கட்டாயப்படுத்தி கெஞ்சினார் சார்லஸ். கடைசியில் அழுதுகொண்டே சுட்டான் அவன். ‘பிரபாகரன் இந்த அளவுக்கு உடைந்துபோய் நான் பார்த்ததில்லை’ என்று கிட்டு சொல்லும் அளவுக்கு அந்த மரணம் பிரபாகரனைப் பாதித்தது. ஆன்டனியை மறக்க முடியவில்லை அவரால். இரண்டு ஆண்டுகள் கழித்து தனக்கு மகன் பிறந்தபோது, ‘சார்லஸ் ஆன்டனி’ என்று பெயர் வைத்தார். மீசாலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட சார்லஸ் மீண்டு வருவான் என்று சிங்கள ராணுவம் கனவிலும் நினைத்திருக்காது. சாதாரணமாக சைக்கிளில் போய் இயக்கத்தை வளர்த்த பிரபாகரன், இன்று விமானத்தை வைத்து சிங்கள அரசுக்குச் சிக்கல் கொடுத்துவரும் குடைச்சலின் பின்னணியில், அவரது மகன் சார்லஸ் இருப்பதாகச் சந்தேகப்படுகிறது சிங்கள அரசு.

விமானக் குண்டுவீச்சில்தான் சார்லஸின் வாழ்க்கையே ஆரம்பிக்கிறது. இன்று சார்லஸூக்கு 23 வயது. அவர் பிறந்த காலங்களில்தான் சிங்கள ராணுவம் அதிகமாக விமானப் படைத் தாக்குதலைத் தொடங்கியது. இதிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று புலிகள் மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். ‘குண்டுவீச்சில் இருந்து பாதுகாப்பு’ என்ற புத்தகம் போட்டு வீடு வீடாகக் கொடுத்தார்கள். அம்மா மதிவதனியுடன் பெரும்பாலும் பதுங்கு குழிகளில்தான் வளர்ந்தார் சார்லஸ். புதுக்குடியிருப்புப் பள்ளியில் தொடக்கக் கல்வி படித்தார். அட்வான்ஸ் லெவல் வரை படித்ததாகச் சொல்கிறார்கள். அதாவது, இங்கு நம் ப்ளஸ் டூ போல. ஜெனரல் சர்டிஃபிகேட் ஆஃப் எஜுகேஷன் என்று இதற்குப் பெயர். இதை அவர் முடிக்கும்போது இலங்கையில் போர்ச் சூழல் குறைந்து ரணில் விக்கிரமசிங்கே ஆட்சிக் காலம் ஆரம்பமானது. எனவே, தன்னை உயர் படிப்புக்காக வெளி நாட்டுக்கு அனுப்பிவைக்க மகன் ஆசைப்பட்டுக் கேட்கிறார். ‘அது பாதுகாப்பானதல்ல’ என்று பிரபாகரன் நினைக்கிறார். கொழும்பில் படிக்க அனுப்பலாமா என்ற யோசனை. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் வாங்கி இருக்கிறார்கள்.ஆனால், அதையும் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்கள். ஆனால், மகனது படிப்புக்குத் தடை போட பிரபாகரனுக்கு மனமில்லை. காரணம், சார்லஸின் டெக்னாலஜி ஆர்வம். சின்ன வயதில் இருந்தே எதையாவது பிரித்து மேய்வதில் ஈடுபாடு காண்பித்திருக்கிறார். போர்ப் பயிற்சிகளைவிட, போர் ஆயுதங்களைக் கையாளுவது, அது பற்றி படிப்பதில்தான் ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது. முதலில் ஏற்பட்டது கப்பல் ஆர்வம். படகுகள் கட்டும் பிரிவில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சில மாதங்களில் கம்ப்யூட்டரைக் கையாளும் ஆர்வமாக அது மாறியிருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஆஸ்திரேலியாவில் இருந்து கம்ப்யூட்டர் படித்த 8 பையன்கள் கிளிநொச்சிக்குள் வந்திறங்கினர். அவர்கள் சார்லஸூக்குக் கற்றுக்கொடுத்தனர்.

அந்த எட்டு பேரும் பிரபாகரனால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள். கிளிநொச்சியில் இருந்து படிப்பில் ஆர்வமான பையன்களை பிரபாகரன் தேர்ந்தெடுத்து, பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆஸ்திரேலியா அனுப்பிவைத்தாராம். அவர்கள், அங்குள்ள மொனாஸ் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் படித்ததாக சிங்களப் பத்திரிகை ‘தி பொட்டம்லைன்’ எழுதுகிறது. சார்லஸூக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்த ஆசான்கள் இவர்கள்தானாம். இதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சார்லஸ் வலம் வந்தார். அடுத்ததாக, கிளிநொச்சிக்கு வந்து இறங்கியதுதான் இப்போது கலக்கிக்கொண்டு இருக்கும் வான் படை. இளம் நீல நிற வரிப்புலிச் சீருடையும் ‘வானோடி’ என்று பொறிக்கப்பட்ட சின்னத்தையும் பொருத்தி ஒரு படை கட்ட வேண்டும் என்பது பிரபாகரனின் பல்லாண்டுக் கனவு. அவருடன் அப்பையா அண்ணை என்று ஒருவர் ஆரம்ப காலத்தில் இருந்திருக்கிறார். அவர்’நான் விமானம் செய்யப் போறேன்’ என்று சில வேளைகளில் ஆர்வம் காட்டி இருக்கிறார். அப்போது, எல்லாரும் அவரைக் கிண்டல் செய்வார்களாம். கடற்படையில் வேலை பார்த்த தனது நண்பன் டேவிட் மூலமாக ‘கடற்புலி’களை ஆரம்பித்த பிரபாகரன், வான் படைக்கு ஒரு நண்பரைத் தேடினார். சங்கர் கிடைத்தார். கனடாவில் ஏரோநாட்டிக்ஸ் படித்தவர். ஏர் கனடாவில் வேலை பார்த்தவர். முதல் கட்டமாக பழைய விமானம் வாங்கப்பட்டது.

மாவீரர் துயிலுமிடம், வற்றாப்பளை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விமானத்தை வைத்துப் பூத் தூவினார்கள். ‘பிரபாகரன் வைத்திருக்கும் விமானம் பூ தூவத்தான் லாயக்கு’ என்று சிங்களத் தளபதிகள் காமென்ட் அடித்தார்கள். ‘விமானங்களை வாங்குவதற்கு முன் இயக்குவதற்கு ஆட்களைத் தயார் பண்ணுங்கள்’ என்று சங்கர் சொல்ல, ஒரு டீம் பிரான்ஸ், மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட நாட்டில் கொண்டுபோய்விட வேண்டியது எங்கள் வேலை. அங்கேயே ஏதாவது வேலை பார்த்துப் படித்து முடிக்க வேண்டியது உங்களது சாமர்த்தியம்’ என்ற அடிப்படையில் 20 பையன்கள் அனுப்பப்பட்டார்கள். வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களும் உதவ, படிப்பை முடித்து 2002-ல் இந்தக் குழு கிளிநொச்சி வந்து இறங்கியது. இவர்கள் விமானப்படை சம்மந்தமான தொழில்நுட்பங்களை சார்லஸூக்கு ஊட்டினார்கள். அவர்களுக்கு தீனியாக சிறு விமானங்கள் தயாராக இருந்தன. ஒரு ஆள் மட்டும் பயணிப்பவை. செக்கோஸ்லோவேகியா நாட்டின் ‘சிலின் இசட் 143 எல்’ ரக விமானங்கள் இவை. நாங்கள் புலிகளுக்கு விற்கவில்லை என்று அந்த நாடு மறுக்கிறது. வாங்கியதை அப்படியே பயன்படுத்தாமல், அதில் பல மாறுதல்களைச் செய்துள்ளார்களாம். இங்குதான் சார்லஸின் முக்கியப் பங்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது வான் படையை ரத்னம் மாஸ்டர் என்பவர் வழிநடத்தி வருகிறாராம். சிறு விமானத்தை அதிக பயன்பாடு உள்ளதாக மாற்றும் வேலையை சார்லஸ் டீம் பார்த்து வருகிறது.

600 கி.மீ தூரம் போய் திரும்பத்தான் அதில் எரிபொருள் நிரப்ப முடியும். அதாவது ஒரு முறை கொழும்பு போய்விட்டுத் திரும்ப முடியும். விமானத்தில் குண்டு நிரப்பிக்கொண்டு போய் ஓர் இடத்தைத் தாக்க வேண்டும் என்று முடிவெடுக்கும்போது, அவ்வளவு எடையைக் கொண்டுசெல்ல இந்த விமானங்கள் வசதிப்படவில்லையாம். எனவே, சுமார் 240 கிலோ எடைகொண்ட குண்டுகளைப் பொருத்தும் பலம்கொண்டதாக மாற்றும் காரியங்களை சார்லஸ் டீம் பார்த்ததாம். அதே போல், ரேடாரின் கண்ணுக்குப் படாமல் தப்பிக்கவைக்கவும் இவர்களது குழு பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலுக்காக இரவு 8.30-க்குக் கிளம்பிய புலிகளின் விமானத்தை 9.20-க்குத்தான் சிங்களப் படை அறிய முடிந்திருக்கிறது. அதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் சண்டை அதிகமாக நடக்கும் புதுக்குடியிருப்புக்குத் தென் மேற்குப் பகுதியில் இருந்துதான் விமானங்களைக் கிளப்பியிருக்கிறார்கள்.

ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது. இன்னொன்று வருமான வரிக் கட்டடத்தின் 3-வது மாடிக்கும் 12-வது மாடிக்கும் மத்தியில் புகுந்தது. 240 கிலோ குண்டு வெடித்ததில் அந்தக் கட்டடமே தீப்பிடித்து எரிந்தது. புலிகள் வைத்திருக்கும் விமானத்தை ‘குரும்பட்டி மெஷின்’ என்று சிங்களவர்கள் கிண்டல் செய்வார்களாம். வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் தேங்காய்க்குக் குரும்பு என்று பெயர். அந்தக் குரும்பை வைத்து இதுவரை எட்டு முறை குடைந்தெடுத்துவிட்டார்கள். அதுவும் குண்டுகளைக் கட்டிக் குதிக்கும் வான் கரும்புலிகள் வந்த பிறகு அச்சம் அதிகமாகி இருக்கிறது. ‘பலவீனமான இனத்தின் பலமான ஆயுதம்தான் கரும்புலிகள்’ என்று பிரபாகரன் சொல்கிறார். ‘உன்னுடைய எதிரி உனக்கு எந்தக் கஷ்டத்தைக் கொடுத்தானோ, அதையே அவனுக்குத் திருப்பிக் கொடு’ என்பது இந்தக் கரும்புலிகளின் லட்சிய முழக்கமாம். ‘காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்’ என்று வான் புலிகளின் சட்டையில் எழுதப்பட்டிருக்கிறது. அதுதான் கண்டம்விட்டுக் கண்டம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

ஒருத்தி தாலியறுத்ததால் ஓராயிரம் தமிழச்சிகள் தாலியறுக்கவேண்டுமா? காணொளி











April 20, 2009

இன்றைய சூடான செய்திகள்

சீறிப்பாயும் சீமான் சிங்களப்பெண்ணைக் கதாநாயகியாக்கியது சரியா? S.Ve.சேகர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13041&lang=ta&Itemid=163
இலங்கை தமிழினப்படுகொலை : பாதுகாப்பு வலைய பரிதாபங்கள் - வீடியோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13072&lang=ta&Itemid=52
கருணாநிதி CNN-IBN பேட்டி பற்றி ஜெயலலிதா : CNN-IBN பேட்டி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13103&lang=ta&Itemid=62
கருணாநிதி பேட்டி:அந்தர் பல்டி : சோ, சுப்ரமணியம் சுவாமி, அபிசேக் சிங்வி Video
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13102&lang=ta&Itemid=62
ஜெயலலிதா பிரதமராக முழு ஆதரவு - வைகோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13082&lang=ta&Itemid=52
பிரதமராவதற்கு சரத்பவார் தகுதியானவர் : ஜெயலலிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13081&lang=ta&Itemid=52
பிரபாகரன் என் நல்ல நண்பர் - என்.டி.டி.வி NDTV திரித்துவிட்டது : கருணாநிதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13083&lang=ta&Itemid=52
தோனியின் சகோதரர் பிஜேபி-யில் இணைந்தார் : வீடியோ
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13096&lang=ta&Itemid=52
பிரபாகரன் என் நண்பர்:நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு:கருணாநிதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=13047&lang=ta&Itemid=55

April 07, 2009

ஏப்ரல் 08 ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் வைகோ

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நாளை ஏப்ரல் 08-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் வைகோ

March 31, 2009

எங்கள் தமிழீழத் தாகம் தணியாது! பாவாணனின் குருதி கொதிக்கும் சொற்பொழிவு

குண்டு விழுந்தாலென்ன?
வீடு குலுங்கி இடிந்தாலென்ன?
சதைத்துண்டு பறந்தாலென்ன?
எங்கள் தமிழீழ தாகம் தணியாது!
எங்கள் தாயகம் யார்க்கும் பணியாது!

சொற்பொழிவைக் கேட்க தலைப்பைச் சொடுக்கவும்

March 27, 2009

தமிழீழ விடுதலைப்புலிகளே - உலகத் தமிழர்களின் முகவரி : கை.அறிவழகன்

ஏறத்தாழ 32 ஆண்டு கால விடுதலைப் போராட்டம், சொல்லொணாத இழப்புகள், எழுச்சியும் வீழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான பயணம், காலத்தை வென்று, விடுதலையின் வெம்மையைத் தணியாமல் காப்பாற்றிக் களத்தில் இருக்கும் காரணி, உலக வல்லாதிக்கங்களுக்கு எதிராகச் சமரில் இருக்கும் ஒரே இயக்கம், அரச ஒடுக்குமுறை மற்றும் பேரினவாத மேலாதிக்கம் கட்டுக்கடங்காமல் திமிறிப் பாய்ந்த போது வரலாற்றுத் தேவையாகத், தன்னியல்பாகத் தோன்றிய ஒரு இயக்கம், உண்மையில் தனித்துவம் மிக்க உலகின் முந்தைக் குடியின் முகவரியாகப் பரிணமித்திருக்கிறது.

உளவியல் ரீதியாக இன்று ஒவ்வொரு தமிழரும் புலிகளை தங்கள் இனத்தின் முற்று முழு முகவரியாகவும், ஏகப் பிரதிநிதிகளாகவும் சிந்தனை செய்தது, உலகின் பல்வேறு நாடுகளில் புலிக்கொடி பறந்த போது வெட்ட வெளிச்சமானது. உளவியல் தாக்கங்கள் மனித இனக் குழுக்களுக்கு எப்போதும் வரலாற்றுத் தேவைகளின் அடிப்படையில் தோன்றும் வாழ்வாதார உரிமைகளின் மீது கட்டமைக்கப்படுகிறது. இன்றைக்கு உலகெங்கும் தமிழர்கள் தங்கள் வாழ்வாதார உரிமைகளில் ஒன்றான உளவியல் அமைதியை பெருமளவில் இழந்திருக்கிறார்கள். சிங்களப் பேரினவாதம் எம்மக்களின் மன அமைதியை குலைக்க முயலும் போதெல்லாம் அந்த வெற்றிடங்களை நிரப்பிச் சமன்படுத்தும் பணியைச் செவ்வனே செய்தவர்கள் விடுதலைப் புலிகள் தான், அவர்கள் மக்களின் நம்பிக்கையை, விடுதலை நோக்கிய அவர்களின் தாகத்தைத் தணியாமல் வைத்திருந்தார்கள். வெற்றியோ, தோல்வியோ விடுதலைப் போராட்டத்தின் சமரில் எமது இன எதிரிகளை நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ளும் ஆற்றல் இன்றளவும் விடுதலைப் புலிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்.
தங்கள் குறிக்கோள்களை அடையத் தேவையான தெளிவான சிந்தனைகளோடு அவர்கள் விடுதலையை நோக்கிய பயணம் செய்கிறார்கள், கடந்த மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் தனது உரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,

"இது எமது மண், இந்த மண்ணிலே தான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். எங்கள் மூதாதையரின் மூச்சுக்காற்று இந்த மண்ணில் கலந்திருக்கிறது"
இந்த வாக்கியங்களின் பின்னால் இருக்கும் மறைபொருள் மிக எளிதானது, நாம் தனி ஈழம் நோக்கியே பயணப்படுகிறோம் என்கிற அந்த எளிதான உரையின் சாரம் அறியாது தனி ஈழம் கேட்கவில்லை என்று திரிக்க முனைவது முற்றிலும் தவறான ஒரு முன்னுதாரணம், இதனை எந்தப் பேராசிரியர் செய்தாலும், அது சரியான நேரத்தில் செய்யப்படும் மிகத் தவறான வரலாற்றுப் பிழையாகவே உட்கொள்ளப்படுமே அன்றி புலமையாகவும் ஆய்வாகவும் அல்ல. தொடர்ந்து வாசிக்க....இணைப்பில் செல்க http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=12039&lang=ta&Itemid=185

March 19, 2009

இனி வறுமைக்குச் சொமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை, இதோ நம் சொந்தங்களே இருக்கிறார்கள்

மனிதம் கொன்று.... மனம் தின்று.... ஈழம் இன்று....ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது. குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது.

'கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை. 'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்!

'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப் பெரும் பாதிப்பில் சிக்கி இருக்கிறார்களே... அதைப் பற்றி யார் பேசப் போவது?' என்று கண்ணீர் வார்த்தைகளால் கேட்கிறார் யாழ் மாவட்டப் பாதிரியார்களில் ஒருவரான ஜெபனேசன் அடிகள்.

ஒரு நாள் இரவு மின்சாரம் இல்லையென்றால், மறுநாள் வாழ்க்கையே வெறுக்கிறது. பால்காரர் வராவிட்டால், வேலைக்காரம்மா லீவு போட்டால், கேபிள் கட்டானால் இங்கே பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடுகிறது. சில கல் தொலைவில் இலட்சக்கணக்கான மக்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல், கிடந்து துடிக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை, உணவில்லை, மாற்று உடையில்லை, மருந்து இல்லை. எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமன், ஈழத்தில் மட்டும் ஏரோபிளேன் ஏறி வந்து குண்டுகள் வீசுகிறான். உயிர் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பதைத் தவிர, சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ''81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள்' என்று புள்ளிவிவரம் சொல்கிறார், முல்லைத் தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன். மாத்தளன் கடற்கரைப் பகுதிக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் வந்து இறங்கியபோது, 'எங்களக் காப்பாத்தச் சோறு போடுங்க', 'எம் புள்ளைகளைக் குணப்படுத்த மருந்து கொடுங்க' என்று மொழி தெரியாத மனிதர்களிடம் பிச்சை கேட்டு ஆணும் பெண்ணுமாகக் கதறிய கோலம் காணச் சகிக்காதது. குண்டடி பட்டுச் செத்தவர்கள் போக, பாம்புக் கடி, நாய்க் கடியால் இறந்தவர்களும் மலேரியா காய்ச்சலுக்கு மருந்து இல்லாமல் மறைந்த வர்களும் அதிகம்.
18 பேர் நான்கு நாட்களில் தொடர்ச்சியாகச் செத்து விழுக, விநோதமான வியாதி ஏதாவது பரவிஇருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கிறது கொஞ்சம் அக்கறையுள்ள மருத்துவக் குழு. அவர்களால் காரணத்தை வெளியில் சொல்ல முடியவில்லை. 'உணவின்மை, ஊட்டச் சத்து இல்லாதது, நோய் எதிர்ப்புச் சக்தி இழந்தது என மூன்று காரணங்களால் நிறையப் பேர் தூங்கிய நிலையில் இறந்துகிடக்கிறார்கள்' என்கிறது மருத்துவர் குழு. 'பிள்ள சாப்பிட்டே மூணு நாள் ஆகியிருக்கும் போல இருக்கே' என்று கேட்கிறார். தூக்கி வந்த அம்மா, அமைதியாகத் தலை கவிழ்ந்து நிற்கிறார். துக்க மிகுதியில் அழுவதற்கு உடலில் கண்ணீர் மிச்சம் இல்லாததே அவரது மயான மௌனத்துக்குக் காரணம்.பால் வளம் இழந்த மார்பின் காரணம் அறியுமா குழந்தை? சபேசன் சிந்து, சிவராசா சக்தி கணேசன் ஆகிய இரண்டு குழந்தைகள் பெயர் வரலாற்றில் இடம் பெறும். அம்மையிடம் பால் இல்லாமல் செத்த பிள்ளைகள். இனி, உலகில் வறுமைக்கு சோமாலியாவைச் சொல்ல வேண்டியதில்லை. நமது சொந்தங்களே இருக்கிறார்கள். தன் வளர்ப்பு மகனைத் தேடி, தயா தங்கராசா என்பவர் வன்னி மருத்துவமனைக்குப் போகிறார். அவர் சொல்லும் காட்சி... ''வைத்திய சாலைக்குள் அனைவரும் உறுப்புகளை இழந்தவர்களாக இருந்தார்கள். யாரையும் பார்க்க அவ்வளவாக அனுமதிக்கப்படவில்லை.நோயாளிகளுக்குத் தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுகூடத் தெரியாது. தங்களது வலியின் காரணமாகவும் கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவு முழுவதும் கத்திக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தார்கள். இரண்டு கால்களையும் கைகளையும் இழந்த ஒரு கர்ப்பிணித் தாய், தாதியை அழைத்து தான் சாவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கதறிக்கொண்டு இருந்தாள். ஒரு தாய் வெறுமையுடன் உட்கார்ந்திருந்தாள். குண்டு விழுந்து அவள் ஓடத் தொடங்கியபோது அவளது குழந்தை கொல்லப்பட்டதாம். ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி குழந்தையைப் புதைக்கும் துணிவு அவளுக்கு இருந்திருக்கிறது. தனது குழந்தையின் உடல் காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை அவள் விரும்பவில்லை. இதைச் சொல்லும்போது அவள் அழவில்லை. உளவியல் பிரச்னைக்கு அவள் உட்பட்டிருந்தாள் என்பது உறுதி!''சாவைச் சட்டை பண்ணாமல்... ரத்தத்தை அலட்சியப்படுத்தி... சதைகள் பிய்ந்து தொங்கும்போது உணர்வில்லாமல் பார்த்து... குப்பைமேட்டைக் கொளுத்துவது போல மனித உடல்கள் எரிவதை வெறுமனே வேடிக்கை பார்க்க மக்கள் பழகிவிட்டால், அந்த மனம் என்னவாகும்?குழந்தைகளுக்கு விருப்பமே விமானம் பார்ப்பதுதான். ஆனால், ஈழத்துக் குழந்தைக்கு அதுதான் எமன். 30 ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் இருந்து வாங்கி வரப்பட்ட விமானம்தான் குண்டு போடுவதைத் தமிழ்ப் பகுதிகளில் தொடங்கிவைத்தது. அதனுடைய கிர் ஒலியைக் கேட்டாலே, மக்களுக்குக் கிறுக்குப் பிடித்தது. அதிலிருந்து தப்பிக்கப் பதுங்கு குழிகள் வெட்டி, அதில் வாழப் பழகினார்கள். வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசும் அளவுக்குப் பலரது வாழ்க்கை பதுங்கு குழிக்குள் கழிந்தன. கடந்த ஆண்டில் மட்டும் 14 ஆயிரம் டன் குண்டுகள் விமானங்களின் மூலம் போடப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் பெருமையாக அறிவித்துள்ளது.சமீபகாலமாகப் பயன்படுத்தப்படும் பீரங்கிக் குண்டுகள் ஏற்படுத்தும் சத்தம் காது சவ்வு மற்றும் தொப்புள் ஆகிய இரண்டையும் கிழிக்கிறதாம். இதனால், காது வழியாக ரத்தம் வடிந்த நிலையில் வாழ்வோரும் தொப்புள் வெடித்து வேறு எந்தக் காயமும் இல்லாமல் மரணிப்போரும் அதிகமாகி வருகிறார்களாம்.


கொடூரங்களைச் செய்வதைவிட அதைப் பரப்புவதையும் சரியாகவே சிங்கள ராணுவம் செய்து வருவதாகச் சொல்கிறார்கள். மக்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துவதில் ராணுவம் இறங்கி உள்ளது. கற்பழிப்புக் கதைகளை ராணுவம் இதனால்தான் அதிகம் பரப்பி வருகிறது. 100 பேர் சாவு, 200 பேர் சாவு என்ற தகவல்களைப் பரப்புவதை 'உளவியல் யுத்தம்' என்கிறார்கள். அதனால்தான் கடுமையான போர் ஆரம்பமாவதற்கு முன், கடந்த ஜூலை மாதம் விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரைத் தொடுத்துள்ளான். வதந்திகளைப் பரப்பி மனங்களைக் குழப்பி வருகிறான்' என்று எச்சரித்தது.கற்பழிக்கப்படும் பெண்களது உடல்களைப் பொது இடங்களில் போட்டுவிட்டுப் போவது அப்படித்தான். பெண்களையும் சிறுவர்களையும் இது அதிகமாகப் பாதிக்கிறது. இழப்புகள், சோகங்கள், இடப் பெயர்வுகள் பல மாதங்களாகத் தொடர்வதால் தலைவலி, உடல் சோர்வு, அதிகக் கோபம், உணவில் விருப்பமின்மை, கவலை, சோகம், அச்சம், வேதனை என அத்தனை உளவியல் பாதிப்புகளும் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.இந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா என்று மனநல மருத்துவர் ருத்ரனைக் கேட்டோம். ''நம் வீட்டில் ஒரு சாவு விழுந்தால், அது அதிகபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் நம் மனச் சிறையில் உட்கார்ந்து கிடக்கும். அந்தச் சோகம் மெள்ள மெள்ள மறைந்து, நாம் அடுத்த வேலைக்குத் தாவிவிடுவோம். நம் வீட்டிலேயே அடுத்தடுத்து மரணங்கள் சம்பவித்தால், மறுபடி மறுபடி நமது சோகம் தட்டியெழுப்பப்படும். அது மாதிரிதான், நிமிஷத்துக்கு நிமிஷம் நாள்கணக்கில், மாதக்கணக்கில் மரணங்கள் நடந்தால், அழுவதற்கு நம்மிடம் கண்ணீர் இல்லை. பழகிப்போகும். அப்படித்தான் மரணத்தைப் பார்த்து அம்மக்கள் மனசு பழகிப் போய்விட்டது.அழுகை என்பது மனதின் தற்காப்பு. சொல்லிப் பயனில்லாததை அழுவதன் மூலமாக அறிவிக்கிறோம். அது எப்போதாவதுதான் சாத்தியம். தொடர்ச்சியாக அழ முடியாது. இவ்வளவு பேர் செத்து விழும்போதும் அம் மக்களால் அழ முடியாததற்குக் காரணம், அதைப் பார்த்து அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதால்தான்.குண்டு வீச்சையும், பீரங்கி வருகையையும் முதல் தடவை பார்க்கும் தலைமுறையாக இருந்தால், அவர்களுக்குப் பதற்றம் இருந்திருக்கும். 30 ஆண்டுகளாகப் பார்த்துச் சலித்துப்போன சத்தம். சென்னையில் குண்டு விழுகிறது என்றால், ஏற்படும் பதற்றம், அச்சம் அந்த மக்கள் மனதில் இல்லை. ஏனென்றால், அச்சத்தை நித்தமும் எதிர்பார்த்துதான் அவர்களது வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. 'நாளை நலமடைவோம்' என்று அவர்கள் நினைப்பதில்லை. 'இன்றிருந்ததைவிட நாளை இன்னும் மோசமாகும்' என்ற எதிர்பார்ப்புடனே மறுநாளை எதிர்கொள்கிறார்கள்.
பதற்றம் என்ற வார்த்தைதான் உளவியலில் ஆரம்பமான அளவு. ஆனால், அவர்களது மனதில் பதற்றம் அப்படியே பதிந்துபோய்விட்டது. போர்ச் சூழலில் கஷ்டப்படும் மக்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஏனென்றால், அவர்களது பயமே மரணத்தைப் பார்த்துத்தான். அதனால், தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள். ஆபத்து, மரணம், துயரம் ஆகிய மூன்றையும் எதிர்பார்த்து வாழும் வாழ்க்கைதான் ஈழத் தமிழருடையது. அதனால்தான் அவர்கள் அழுவதில்லை. சோகமாவதில்லை. நிம்மதியற்ற அரசியல் சூழ்நிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழும் மக்களுக்கு இதுதான் தலைவிதி.ஒருவனின் வாழ்க்கையை அவனது அனுபவம்தான் தீர்மானிக்கிறது. இவர்களுக்கு அனுபவமே அச்சம் கலந்ததாக இருக்கிறது. நிம்மதியான கடந்த காலம் இல்லாததால் நம்பிக்கையான எதிர்காலத்தைக் கற்பனை செய்ய முடியவில்லை. வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதைச் சொல்ல இயலவில்லை. குழந்தைகள்கூட தொடர்ந்து இந்தச் சம்பவங்களைப் பார்த்துப் பழகிவிட்டார்கள். அவர்களுக்கு உடல் காயங்களால் வலி இருக்கலாம். அதிர்ச்சி குறைந்து போயிருக்கும். தனது தாய்-தகப்பனைத்தான் குழந்தைகள் தனது பாதுகாப்பாக நினைக்கும்.ஆனால், இலங்கையில் யார் யார்கூடவோ ஓடி, வாழ்ந்து பழகியதால் சமூகத்தைத் தனது பாதுகாப்பாக நினைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தை இழந்த குழந்தைக்குச் சமூகமே குடும்பமாக ஆகும். படிப்பை இழந்த பிள்ளைகள் மனதில் ஏற்பட்ட வெறுமைக்கு அளவு இல்லை. இது இரண்டு தலைமுறைகளைப் பாதிக்கும். பணத்தால் வரும் தைரியம் கொஞ்ச நாள்தான். கல்வியால் வரும் தைரியம் ஆயுள் வரை இருக்கும். எனவே தைரியமற்ற, எந்தச் சிந்தனையுமற்ற, கோழையான, வெறுமையான மனிதர்களாக்கும் கொடுமையே அங்கு நிகழ்கிறது.அங்கு ஓர் அரசியல் தீர்வு வரும் என்று வைத்துக்கொண்டாலும், போருக்குப் பின் அந்த மக்களை மறுபடியும் உடல், மன ஆரோக்கியத்துடன் கட்டமைக்கிற பணி மிகப் பெரிய சவால்!'' என்கிறார் ருத்ரன்.சூனியம் ஓர் இனத்தைச் சூழ்வதும் அதன் சொந்தங்கள் சும்மா இருப்பதுமான சூழல் வேறு இனத்தில் நடக்காது. நாற்காலி யுத்தத்தில் தமிழகம் மும்முரமாகிவிட்டது. ஆனால், ஈழ மக்கள் வாழ்வோ உளவியல் யுத்தத்தில் உயிர்விட்டுக்கொண்டு இருக்கிறது!
ப.திருமாவேலன்

February 12, 2009

Slumdog millionaire: சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்

Slumdog millionaire: Review in TAMIL (Exclusive)
சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்
- தமிழ்ச்செல்வன்

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்க்கை முறையின் தனித்துவத்தை கொச்சைப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஒரு அயல்நாட்டு திரைப்பட இயக்குனரின் சாமர்த்திய திறமையால் சர்வதேச அரங்கில் அசிங்கப்படுத்தபட்டுள்ளன.
இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா?கடந்த சில தினங்களுக்கு முன் ''சினிமாத்துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிற்கான பல விமர்சனங்கள் மின் அஞ்சலின் மூலம் வரப் பெற்றேன் அதில் ஒரு விமர்சனம் அமெரிக்காவிலிருக்கும் ஒரு சகோதரரிடமிருந்து வந்தது இவை...

***----------***

From: Navaneetha Krishnan. USA.
வணக்கம்!
மிகவும் உணர்வுப்பூர்வமான... அதே சமயம் ஒவ்வொரு தமிழனுக்கும், ஏன் ஒவ்வொரு மனிதனுக்கு எழ வேண்டிய உணர்வு! அருமை.... அற்புதம்! நீங்கள் ஏன் இதுபோன்ற வித்தியாசமான, நியாயமான ஆக்கங்களை அதிகாலை.காம் இணையம் வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது? இன்னும் அதிகமான உள்ளங்கள் படித்துப் பயன்பெறுமே! ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டுப்போகட்டுமே! நாம் அதைச் செய்வோமே!

இதுதான் என்னை தங்களுக்கு எழுதத் தூண்டியது. இந்த உணர்வுகளை நானும் அடைந்தேன்! அமெரிக்காவின் ஒரு பிரபல திரையரங்கிற்கு, நான் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே பார்க்கச் சென்றது நூறு சதம் உண்மை. ஆனால் வெட்கித்தலைகுனிந்தேன். காரணம் மும்பைக்குடிசைகளைப்பற்றிய காட்சியமைப்புக்காக அல்ல, அந்தத் திரையரங்கில் கிட்டத்தட்ட 2-3 நபர்கள்தான் இந்தியர்கள், இதில் நானும் என் மனைவியும் உட்பட. படம் முடிந்ததும் அனைத்து அமெரிக்கர்களின் பார்வையும் எங்கள் மீது இருந்ததை இப்பொழுதும் நான் உணர்கிறேன். ஏதோ அந்தப்படத்தில் நடித்த ஒரு நடிகர் அங்கு வந்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது எப்படி மேலும் கீழுமாக பார்ப்பார்களோ அது போல் பார்த்ததற்கு காரணம் பிறகுதான் புரிந்தது. பச்சையாகச் சொல்லவேண்டுமெனில் "கேவலப்படுத்தியிருக்கிறார்கள்". இந்தியா வல்லரசாகும், அப்படியாகும், இப்படியாகும் என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த 2009-ல் இன்றும் இந்தியா இப்படித்தான் இருக்கிறதா? என்ற கேள்விக்கனைகளும், இந்தியா மீதான் அவர்களின் தவறான கோணமும் இன்னும் தொடருவதற்கு இது உந்துகோலாக இருக்கிறது. இந்தக்காட்சிகளின்படி இது உண்மையா? பொய்யா? என்ற விவாதம் வேறு. ஆனால் ஆஸ்கார் நோக்கி செல்லும் ரஹ்மான் மாத்திரமே நம் கண்ணுக்குத் தெரிவதால் நாம் இதை இப்போதைக்கு ஒரு புறம் தள்ளிவைப்போம் அவ்வளவே! நன்றி!!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
http://www.adhikaalai.com/
http://manuneedhi.blogspot.com/

***---------------***

இந்த விமர்சனம் கண்டவுடன் நண்பர் வைத்தீஸ்வரன் மூலம் இத்திரைப்படத்தின் குறுந்தகடு வாங்கப் பெற்று இந்த திரைப்படம் பற்றிய விமர்சனம் எழுதினேன். இந்தியாவின் மிகப் பெரும் வர்தக நகரமான, மும்பை நகரை அழகான வார்த்தையில் சொல்வதென்றால் "தூங்காத நகரம்" என்று சொல்லலாம் அந்த நகரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மும்பையின் குடிசை வாழ் பகுதி மக்களின் வாழ்க்கை முறையின் மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய மொழிகளில் தயாரித்து வெளியிட்டு வந்த அசிங்கங்கள் ஒரு சில பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மறைத்தோ அல்லது தெரியாமலோ வந்த பல சம்பவங்கள் இந்த படத்தின் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தொழில்துறையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்துவரும் ஒரு நாடு. உலகின் அடுத்த வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது.இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்து வரும் அஹமது சல்மான் ருஸ்டி கடந்த 1988 ம் ஆன்டு தனது 4வது நூலான "சாத்தானின் வேதங்கள்" மூலம் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதற்காக ருஸ்டியை ஈரான் முன்னாள் அதிபர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி கொலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவனது நரகல் நடை எழுத்திற்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது. கர்ப்பப்பை சுதந்திரம் (?) கேட்டு எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமாவுக்கு அமோக வரவேற்புகள் வாழ்த்துக்கள். இது போல் ஒரு சமூகத்தை இழிவு படுத்தி எழுதினால் அதற்கு ஆஸ்கார் விருது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேற்கத்திய நாட்டின் கேடு கெட்ட கலாச்சாரப் புத்தி இது. மிக திறமைவாய்ந்த இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்கிறதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவனின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதியின்மை, குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில், சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், மத ரீதியான சண்டைகள், வெட்டுக்குத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை, தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம், அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டி இந்தியாவின் மானத்தை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளான் அந்த இயக்குனன்.இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குலோப் மற்றும் பாஃப்டா விருதுகளும் படத்தொகுப்பாளர், ரெசூல் பூக்குட்டி என்பவருக்கு பாஃப்டா விருதும் வழங்கி அவர்களை ஆஸ்காருக்கும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.இந்தியாவை கவுரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அரிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.

முதல் சந்தேகம், ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?

படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை?நாயகனாக வரும் 2 சகோதரர்களை அதாவது திருடர்களை முஸ்லிம்களாக காட்டியுள்ள இயக்குனன் அதில் ஒரு தொழு‍கைக் காட்சியும் வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டு முஸ்லிம்களின் கண்ணியத்தை கொச்சைப் படுத்தியிருக்கின்றான். கதாநாயகனை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன ...?அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அனில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும்.சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொடூரம்?இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனன், உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திரங்களை மட்டும் மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டுகிறான். அந்த காட்சியிலும் கூட இந்திய போலீஸ்காரர் கொடூரமானவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படியான காட்சி அமைப்பு கதையின் கருவிற்கு கட்டாயம் தேவை தானா?

அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள். மற்ற நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள்? இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின் எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி ஸ்பூனால் கண்களை தோண்டி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார்படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்?வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்ற இந்திய நகரங்கள் பற்றி இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழும். ஆனாலும் இயக்குனன் பொய்யான ஒன்றை காட்டவில்லை, நிஜமான ஒரு சில சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறான். நாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்களையும், அந்த நாட்டு வாழ்க்கை முறையையும் கேவலமாக சித்தரித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா?இந்தியத் திரைப்படத்துறைக்கு அந்த தைரியம் இருக்கிறதா? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?

இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction ) விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய ஏகாதிபத்தியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்காக விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெறுகிறது. அந்நிய நாட்டு திரை துறையினரின் இந்த போக்கை இந்திய அரசு தொடர்ந்து அனுமதிக்குமேயானால் வரும் காலங்களில் இந்தியாவின் நீதித்துறை, நிர்வாகத்துறை, பாதுகாப்புத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் தவறுகள் காட்சிகளாக பதியப்பட்டு சர்வதேச அரங்கில் துகிலுரிக்கப்படும் ஆட்சியாளர்கள் இப்போ‍தே விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.

February 10, 2009

இன்றைய செய்திகள்

குழாயடி கூச்சல்கள், இலங்கைத் தமிழர் நலன் காக்க உதவாது : ராமதாஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10504&lang=ta&Itemid=52
ஆப்கானில் படுகொலை செய்யப்பட்ட சைமன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதிஉதவி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10503&lang=ta&Itemid=52
முல்லைத்தீவு நோக்கி தமிழக வழக்கறிஞர்கள் பயணம்: போலீஸ் கைது நடவடிக்கை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10502&lang=ta&Itemid=55
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10501&Itemid=52
மும்பையில் விமானம்-ஹெலிகாப்டர் மோதல் தவிர்ப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10500&Itemid=52
வரும் 17-ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10499&Itemid=52
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடங்கி வைத்தார் லாலு பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10496&Itemid=52
சவூதிக்கான இந்திய தூதருக்கு தமிழ்ச்சங்கப் பாராட்டு விழா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10507&Itemid=52
ஓய்வூதிய அதிருப்தி : விருதுகள் திருப்பியளிப்பு : முன்னாள் ராணுவத்தினர்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10506&Itemid=52
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூச ஜோதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10505&Itemid=52
எந்திரனில் (ரோபோ) ரஜினியா? டேனியா?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10523&Itemid=67
பாலாவின் அடுத்த நான்கு படங்கள்! யாருக்கு ஜாக்பாட்?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10522&Itemid=67
ஆர்யா இப்போ சூர்யா ரேஞ்சுக்குப் போய்ட்டாருங்க!
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10521&Itemid=67
கல்யாண மாப்பிள்ளையாகப்போகிறார் கஞ்சாகருப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10520&Itemid=67
டமிளு நாக்கு ஒத்தண்டி : நிகிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10519&Itemid=67
விக்ரம் - கந்தசாமி பாடல் ஒலிப்பதிவு புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10517&Itemid=67
ரகசியா-கலக்கல் புகைப்படத்தொகுப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10516&Itemid=67
தினம் ஒரு தகவல் : நிம்மதி - கொல்லிமலைச் சாரல் பொ.ஆனந்த் பிரசாத்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=blogcategory&id=155&Itemid=244
ஒன்றிப்போதலே வெற்றியின் இரகசியம் - சேமுமு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10514&Itemid=164

January 30, 2009

"அதிகாலை" இன்றைய செய்திகள்

போர்நிறுத்தமும், உத்திரவாதமான பேச்சுவார்த்தையுமே அமைதி தரும்:பா.நடேசன்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10225&Itemid=52
சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52
தீக்குளிப்பதற்கு முன் முத்துக்குமார் வினியோகித்த துண்டுப் பிரசுரம்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10205&Itemid=52
தீக்குளித்து வீர மரணமடைந்த முத்துக்குமாருக்கு விடுதலைப்புலிகள் அஞ்சலி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10204&Itemid=52
மும்பை தாக்குதல் : ப.சிதம்பரம் - பாகிஸ்தான் தூதரக அதிகாரி சந்திப்பு

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10220&Itemid=52
அமெரிக்கா : ஹிலாரி கிளின்டனின் வெளியுறவு அமைச்சர் பதவி செல்லாது

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10217&Itemid=52

முல்லைத்தீவு-வெளியேறும் பொதுமக்களை நாங்கள் தடுக்கவில்லை:பா.நடேசன்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10216&Itemid=52

காந்தி நினைவு தினத்தில் புழல் கைதிகளுக்கு விழிப்புணர்ச்சி வகுப்புகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10203&Itemid=52
பார்த்திபன் கனவு # 16 : இரண்டாம் பாகம் - அத்தியாயம் 6 : கலைத்திருநாள்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10197&Itemid=110

சென்னை - காந்தி நினைவு தினம் : அரசியில் பிரமுகர்கள் பங்கேற்பு-காணொளி

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10228&Itemid=52

காதலா? ஆக்சனா? ஆக்சன்தான் என்கிறார் அருண்விஜய்!

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10233&Itemid=67
மம்மூட்டி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10234&Itemid=67

January 11, 2009

காங்கிரசின் பச்சைத்துரோகமும் தி.மு.கவின் ஒட்டுத் துரோகமும்!

காங்கிரசு கட்சியானது தமிழினத்திற்குத் தொடர் துரோகங்களைச் செய்து வருகிறது என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவர். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரசினும் தமிழினத்திற்கின்னல் விளைத்தார் எவரேனும் காட்டலரிது.
1956-ல் தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று மாற்றச்சொல்லி அறவழியில் உண்ணா நோன்பிருந்தார் சங்கரலிங்கனார். 76 நாள்கள் நோன்பிருந்தும் காங்கிரசின் வஞ்ச மனம் கனியவில்லை. இறுதியில் காலமானார் சங்கரலிங்கனார். இத்தனைக்கும் சங்கரலிங்கனாரும் ஒரு காங்கிரசுக்காரர்தான். காந்தியாருடன் தண்டியாத்திரை சென்றவர் அவர்.தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர் என்பதற்கு இது சான்று. அந்த சூக்குமம் புரிந்ததால்தான் எந்தத் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரரும் தமிழ் தமிழர் என்று பேசுவதில்லை என்பதை ஓர்க. வெள்ளையர் போனபின்னர் தமிழ்நாட்டிற்காக, தமிழருக்காக உயிர் ஈந்த இவரோடு காங்கிரசின் கணக்கு தொடங்கி குறி வைத்து தமிழினத்தை அது அழித்து வருகிறது.

"தமிழ், தமிழர் என்று வந்தால் காங்கிரசு கட்சிக்கு காங்கிரசுக் காரரும் பகையாவர்"
1965-ல் இந்தி மொழியை தமிழர்களிடம் வலிந்து திணித்த காங்கிரசு, அதற்கெதிராக கிளர்ந்த தமிழ் மக்களை, காவற்துறையாலும், அரணம் கொண்டும் சுட்டுப் பொசுக்கியது. அந்தக் கொடுமையான 1965 ஆம் ஆண்டின் பிப்ரவரி 8-க்கும் 12-க்கும் இடையேயான 5 நாள்களில் மட்டும் சுடப்பட்டுக் கொல்லப் பட்டவர்கள் 63 பேர். பிப்ரவரி 12 ஆம் நாள் மட்டும் கொல்லப் பட்டவர்கள் 31 பேர். பலரின் சோதனைகளும் வேதனைகளும் வெளியே வரவில்லை. திராவிடக் கட்சிகளாய் இருந்தவை சொன்ன கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 145. அண்ணா என்ற சிறந்த தலைவரும், அவருக்குப் பெரியவராகப் பெரியாரும் இருந்து, இராசாசி, டி.டி.கே போன்றோரெல்லாம் இந்தி திணிப்பை எதிர்த்தபோதும், காங்கிரசின் தமிழ்ப் பகைமைக்கு, இரத்த வெறிக்குப் பலியானவர்கள் நூற்றுக்கும் மேல்.

ஒவ்வொரு தமிழரைக் கொன்ற போதும், "இந்தி தெரியாவிட்டால் நீ இந்தியனே இல்லை" என்று சொல்லிக் கொன்று போட்டன காங்கிரசின் வடக்கு மூளைகள்! அந்தப் பகையோடு 1967-ல் இடுப்பொடிந்து போன காங்கிரசு 1987-ல் தமிழீழத்தில் திலீபன் உண்ணா நோன்பிற்குக் காரணமாய் இருந்து அவர் உயிரையும் காவு வாங்கியது. காங்கிரசை காந்தியார் கலைக்க வேண்டும் என்று சொன்னது அதன் இரத்த வெறியை அறிந்ததனால் இருக்கக் கூடும்.

தமிழகத்தில் சங்கரலிங்கனாரையும், தமிழீழத்தில் திலீபனையும் பலிவாங்கியது காங்கிரசு. காந்தியம் பேசும் காங்கிரசிடம் அறப்போராட்டங்களும் செல்லாது என்பதற்கு தமிழினத்தின் மேல் அது தொடுத்த இந்தத் தாக்குதல்கள் காட்டா நிற்கின்றன.

தொடரும் அதன் தமிழின இரத்த வேட்கையே, 1987-ல் ஒன்னே கால் இலக்க அரணத்தை அனுப்பி, தமிழீழத்தில் 8000 பேரைக் கொன்றதும், கண்ணில் பட்ட மகளிரை சீரழித்ததும். மற்று, 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கருணாநிதியுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டு, மெல்ல மெல்ல தமிழீழத்தில் நடந்த பேச்சு வார்த்தைகளைக்கெடுத்து, தமது இத்தாலி வழி தொடர்புகளாலும், இந்தியாவின் பல்வேறு துறைசார் தொடர்புகளாலும் தமிழீழ மக்களை உலக அரங்கில் தனிமைப் படுத்தி, சிங்களன் துணையோடு இன்றைக்குப் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று வருகிறது.
தொடர்ந்து வாசிக்க இணைப்பில் செல்க... http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=9668&lang=ta&Itemid=62

January 10, 2009

ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கமா?

ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கமா? இப்படி ஒரு தலைப்பிட்டு என்னை வந்தடைந்தது ஒரு மின்னஞ்சல்... அதனை வாசித்ததும் நான் உறைந்துபோனேன்.... இதென்ன உண்மையா? விசமிகளின் வேலையா? எனக்குள் ஏற்பட்டவை.... சந்தேகங்கள், குமுறல்கள்... விடைகாண இயலவில்லை... என்பதைவிட 'முயற்சிக்கவில்லை' என்பதே சரியாக இருக்கும்....
எப்படியோ அதை அப்படியே உங்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்....

ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கமா? ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஷார்ஜா ஒளிபரப்பு சேவையில் வெளிநாட்டு இலக்கியங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார். டாக்டர் ஆர்.சிங் எழுதியுள்ள "அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள்" - இந்து தலைவர்களின் உடன்படிக்கை குறிப்பேடு : என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்படியான அந்த 13 கட்டளைகள் என்ன?
1. இஸ்லாமியர்களை குறிவைத்து எதிர்மறையான செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருவதால் அந்நாட்டை இந்துக்கள் மிகவும் நேசமுடைய ஒரு நாடாக கருதவேண்டும்......
இப்படித் தொடர்கிறது இந்தச் செய்தி. இதைத்தொடர்ந்து வாசித்துவிட்டு.... நண்பர்களே உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்! தொடர்ந்து வாசிக்க சுட்டியில் பிரயாணிக்க..... http://manuneedhy.googlepages.com/PAGE1.pdf
http://manuneedhy.googlepages.com/PAGE2.pdf