June 20, 2007

உலக அகதிகள் நாள்

உலகில், இன்றைய நிலையில் வன்முறைகளால் குறைந்தது 44 மில்லியன் பேர் அகதிகளாக இருக்கின்றனர் என்று
ஐ நா மதிப்பிடுகிறது.



தமிழ் நெட் இணையதளம் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணைய தளமாகக் கருதப்படும் தமிழ்நெட் இணைய தளத்தை இலங்கை அரசு முடக்கியுள்ளது. மேலும் மிக முக்கியமான செய்திகளை "BBC" தமிழோசை வழங்கியிருக்கிறது. முழு செய்திகளையும் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.BBCTamil.com Radio Player



கங்கை அமரன் @ ஜாலிஅமரன்

'மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ'
'தம்தன தம்தன தாளம் வரும் - புது ராகம் வரும் - அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்'
'ஓரம் போ... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது..'
'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே'

மனசில் இனிய நினைவுகளை எழுப்பும் பல பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் கங்கை அமரனிடம் பேசியதிலிருந்து... Please 'click' the link

இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா?

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், இது சமூகப் பிழையோடு சரித்திரப் பிழையுமாகும். வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும், அறியாதார் தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலை கொள்ளச் செய்கிறது. இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா அந்த மீசை சூரியனை தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா இது உடனே அழிக்கப்பட வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால், கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறலாக எடுத்துக் கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி என்று கூறியுள்ளார் வைரமுத்து. Please click here..http://sadnyvadai.blogspot.com/2007/06/blog-post.html

இன்றைய குறள்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

இலக்கியம் என்பது

நாகரிகத்தைப் புகட்ட வேண்டும். மக்களிடம் உயரிய குணங்களைப் புகுத்துவதாக இருக்க வேண்டும். எப்படிப்பட்ட கலையும் ஒழுக்கக் குறைவுக்கும், மூட நம்பிக்கைக்கும், சிறிதும் பயன்படக் கூடாததாய் இருக்க வேண்டும்.

- பெரியார்

"நான்மணிக்கடிகை"


தமிழ்பால் தீராத காதலும், பற்றும், மரியாதையும் கொண்ட எத்தனையோ நபர்களில் இவரும் ஒருவர். திரு.ஆதியக்குடி சம்பத், தற்சமயம் சவூதி அரேபியாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். நம்மைப்போல் தமிழ்மேல் பற்றிருக்கும் எவருக்கும் அவர்பால் பற்றிருப்பது ஆச்சர்யமில்லைதான். நான் நெடுநாட்களாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது தளத்தில் தொடர்ந்து எழுதி "தமிழ்ச்சேவை" செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். சுவாசிக்கக்கூட நேரமில்லா வேலைப் பளுவுக்கு இடையிலும் தன்னாலான தமிழ்த்தொண்டை அங்கிருந்து நமக்காகச் செய்யத் தயாராயிருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுவார்..ஆவலோடு காத்திருப்போம். இன்று "நான்மணிக்கடிகை"யிலிருந்து ஒரு பாடல், விளக்கத்துடன் தருகிறார். நன்றி.

கள்வம்என் பார்க்கு துயில் இல்லை, காதலிமாட்டு

உள்ளம்வைப்பார்க்கும் துயில் இல்லை, ஒண்பொருள்

செய்வம்என் பார்க்கும் துயில் இல்லை, அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில்.

தமிழ் விளக்கம் :

நான்கு வகையான மனிதர்களுக்கு கண்ணுறக்கம் வராது:

1.பிறர் பொருளை அவருக்குத்தெரியாமல் அபகரிப்பவர்க்கு

2.மனமொத்த அன்புக் காதலியிடம் மனதைக் கொடுத்தவர்க்கு

3.எப்படியாவது பெரும்பொருள்ச் சேர்த்துத் தனவந்தனாகிவிடவேண்டுமென்று சதா எண்ணிக்கொண்டிருப்பவர்க்கு

4.அப்படிப் பாடுபட்டுச் சேர்த்த பெரும்பொருளைக் காத்துக்காத்துக் கிடப்பவர்க்கு

ஆங்கில விளக்கம் :

In the song which follows, the theme is about four different groups of people who cannot sleep well at night, namely, the thief, a person in love, the person after money and the miser looking after his money:

June 19, 2007

திரு.சிவா என்ற ஒரு நண்பர் கேட்ட கேள்விகளும் நான் அவருக்கு அளித்த பதில்களும்

1. இன்றைய விருந்தோம்பல் பற்றி உங்கள் கருத்து?

விருந்தோம்பல் என்பது அருமையான தமிழ்வார்த்தை : அதைப்போல் விருந்தோம்பல் மிகச்சிறப்பானது. நாம் எப்படி விருந்தோம்பல் செய்கிறோம் என்பதைப் பொறுத்து நமக்கு விருந்தோம்பல் கிடைக்கும். விருந்தோம்பலுக்கு வடை, பாயாசம் தேவையில்லை. பச்சைத்தண்ணீர் பருகுவதற்குப் பரிவோடு கொடுத்தாலே அது விருந்தோம்பல்தான். ஆங்கிலத்தில் அதனை ஹாஸ்பிடாலிடி என்றுகூடச் சொல்லலாம்.

2. உங்களைப் பொருத்தவரை எது ரொம்ப கஷ்டம்?


சும்மா இருப்பது

3. ஹிட்லரை பார்க்க வாய்ப்பு கொடுத்தால் எதை பற்றிப் பேசுவீர்கள்?

உங்களைப் பார்த்துப் பிரமிக்கும் அளவுக்கு நீங்கள் எப்படி மற்றவரின் கவனத்தை உங்கள் பக்கம் திருப்பினீர்கள் என்றும், உங்களுக்கு இன்ஸ்பிரேசன் (மண்ணிக்க தமிழ்வார்த்தை தெரியவில்லை) யாரென்றும் கேட்பேன்.

4. வாழ்க்கையில் நிறையப் பேர் மிருகமாக இருக்கிறார்கள். அதற்கு மூல காராணமாக இருப்பது எது?

மனிதர்கள்தான்

5. மனிதன் என்பதற்கு அடையாளம்?

பிறர் துயர் பார்த்துக் கண் கலங்குபவன். "காயத்திற்கு மருந்துவேண்டாம், கனிவான பார்வைபோதும்". மொத்தத்தில் "மனிதம்" எவனிடம் உள்ளதோ அவனே மனிதன்.

"ஹைகூ"

சொந்தமண்ணிலிருந்து

துரத்தப்பட்ட அகதிகளாய்…

துடுப்பற்ற பரிசலாய்…



...................பிறைநிலா

மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்

மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் உண்மையில் மேலும் 18 கொலைகள் நடக்க காரணமாகிறார்கள். மரணதண்டனையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் 18 கொலைகளை தடுக்கிறார்கள். Please 'click' the link Thinnai

திரைப்பட இயக்குனர் "வசந்த்" நேர்முகம்

இன்றைய குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" செய்தி (ஜுன் 19 செவ்வாய்க்கிழமை) கேளுங்கள், சேது சமுத்திரம் பற்றிய ஒரு பெட்டகம் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக. BBCTamil.com Radio Player

என் அபிப்பிராயத்தை மறுக்க
உங்களுக்கு உரிமையுண்டு
ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு
- பெரியார்

June 18, 2007

யார் குற்றம்? - சிறுகதை

செல்போனை ‘வைப்ரேஷன்’ மோடில் வைத்திருந்தாலும் தொடர்ந்து யாரோ அழைப்பதை உணர்ந்து எரிச்சலாகிப்போனான் நிதிஷ். சமீபத்தில் இம்போர்டரிடமிருந்து வந்த க்ளைம் பற்றி மேனேஜிங் டைரக்டர் மிகக் காரசாரமாக கான்ஃபரன்ஸ் ரூமில் விவாதித்துக்கொண்டிருந்தார். நிதீஷ், அந்த நிறுவனத்தின் மேலாளர், பொறுப்புள்ள பதவியிலிருப்பதால் அனைத்தையும் கையாளவேண்டியது அவன் கடமை. ஆனால் இப்படிப் பொறுப்பே இல்லாமல் இருந்தால் எப்படி என்று மிகவும் கோபித்துக்கொண்டவரிடம், ‘ஓ.கே. சார், ஐல் டேக் கேர்! லெட் மி ஹேவ் சீரியஸ் லுக் இன்டுயிட்’ என்று சமாளித்து ஒரு வழியாக வெளியே வந்தவன் செல்போனை எடுத்துப்பார்த்தான். ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, ‘காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்’ என்று மனதுக்குள் கடிந்துகொண்டே, போன் செய்வதற்கு முன், மெஸேஜைப் படித்தான். இடிந்தே போய்விட்டான் நிதிஷ். மை காட்….ஓ’வென அழமுடியாத குறையாய்….எம்.டி.யிடம், “சார், எம்பையன் இறந்துட்டான் சார், நான், கௌம்புறேன் சார்’ என்று சொல்லி முடிப்பதற்குள் கதறியே விட்டான். உடனடியாக எம்டி-யின் டிரைவர் நிதீஷ்-ஐ காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கிப் பறந்தான்.

அப்போதுதான் காலையில் வீட்டில் நடந்தது நிதிஷ்-ன் நினைவுக்கு வந்தது. “ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், சேத்து லஞ்ச் சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இறுமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! ஃபர்ஸ்ட், பெட்-டுமேல இருக்கற ஒன்னோட மெடிசின்ஸ், காஃப் சிரப் எல்லாத்தயும் எடுத்துவை, ஸ்வரேஷ் எடுத்து சாப்டாலும் சாப்டுருவாம்பா” என்று தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டு சமயலறையில் இருந்தவளிடம் “பாய்டா, ஐல் கால் யு’ என்று கூறி அவசரமாகச் சென்றுவிட்டான். “ஐயோ! என் மகனே! கடவுளே! என்னாச்சோ தெரியலயே! என்ன நடந்துருக்கும்...ம்ம்... சீரியஸா இருந்தாலும் பரவாயில்ல, டாக்டர்ஸ் எப்படியாவது காப்பாத்திருவாங்க, ஆனா உயிருக்கு மட்டும் எதுவும் ஆயிருக்கக்கூடாது” என்று அவன் வேண்டாத தெய்வமே இல்லை.

மருத்துவமனையில் காரை நிறுத்துவதற்குள், நிதீஷ் இறங்கி ஓடி ரிஷப்சனில், “ஸ்வரேஷ்-னு என்னோட சன்….? … “சாரி, சார்…சிரப், டேப்ளட்ஸ் எல்லாம் முழுங்கி, ஓவர்டோஸாகி….காப்பாத்த முடியல, பையன் எறந்துட்டான், கொஞ்சம் முன்னாடிக் கொண்டு வந்துருந்தாக்கூடக் காப்பாத்தியிருக்கலாம்’னு டாக்டர் சொன்னாங்க…எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்….அதோ அந்த எமெர்ஜென்ஸி வார்டுல இருக்காங்க பாருங்க”. நிதீஷ் இடிந்து போய் கீழே விழப்போகும் தருவாயில், டிரைவர் அப்படியே தாங்கலாகப் பிடித்துப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரவைத்தான். நர்ஸ் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்துக் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தாள்.

“நான் எப்போ அந்த எம்பிஞ்சு மொகத்தைப் பாப்பேன், எப்படி என் ஸ்வேதா மொகத்துல முழிப்பேன், ஐயோ! கடவுளே! ஒனக்குக் கண்ணே இல்லையா? நாங்க என்ன பாவம் செஞ்சோம்? ஐயோ! அவள எடுத்து வைக்கச் சொன்ன நான், அந்த மருந்தெல்லாம் நானே எடுத்து வச்சுட்டுப் போயிருக்கலாமே! கண்ணுக்குத் தெரிஞ்சே இப்படி எம்புள்ளய நானே கொன்னுட்டனே!’ என்று தன்னையும் மீறி கதறும்போது பக்கத்தில் நின்ற அனைவருமே கலங்கி விட்டனர்.

அதற்குள் ஸ்வேதா தன் மகனைக் கையில் அணைத்துக்கொண்டு அலறியபடியே ஓடி வந்து தன் கணவனை கட்டிப்பிடித்து, ‘என்னெ மண்ணிச்சுருங்க! பாவி! நானே எம்புள்ளயக் கொன்னுட்டேன், அப்பவே சொன்னிங்களே! நான் கேர்லெஸ்-ஸா இருந்துட்டேங்க! கொஞ்சம் முன்னாடிக் கொண்டுவந்துருந்தாலும் காப்பாத்தியிருக்கலாமே! அதுக்குத்தானெ நான் ஒங்களுக்கு போன் பண்ணேன். டாக்ஸி-ல கொண்டுவர்றதுக்குள்ள எல்லாமே போச்சே!...ஐயோ நான் என்ன செய்வேன்”……

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், யாரைக் குற்றம் சொல்வது, சுலபமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் அளவுக்குச் அவர்கள் சராசரி மனிதர்கள் இல்லை. நன்கு படித்தவர்கள். இழந்த இழப்பை யாராலும் ஈடுசெய்யமுடியாது. நிதீஷ், தன் இறந்துபோன மகனை ஒரு கையிலும், தன் மனைவியை மற்றொரு கையிலும் அணைத்துக்கொண்டு கண்ணீரோடு “ஐ லவ் யு ஸ்வேதா, ஐ லவ் யு” என்றான்.


இது யார் குற்றம்?
இது அன்றாட வாழ்வில் நடக்கக் கூடிய,
ஏன் நடந்த ஒரு சம்பவம்.
குற்றம் யாருடையது?
முடிவை உங்கள் கைகளுக்கே விட்டுவிடுகிறேன்.


- நவின்

டாக்டர் பத்மஸ்ரீ P.B.ஸ்ரீனிவாஸ் II

Powered by eSnips.com

அரசியல் மூலம் பணம், புகழ், பதவி, முதலியவற்றைச் சம்பாதிக்கத் திட்டமிடும் கூட்டத்தினர் மனித சமூதாயத்திற்கு- "எலும்புருக்கி நோய்" போன்றவர்கள்

- பெரியார்

இன்றைய குறள்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" செய்தியில் (ஜுன் 18 திங்கட்கிழமை) அடுத்த குடியரசுத் தலைவரும் மேதகு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்' தான் என்று உரக்க முழங்குகிறார் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். மேலும் ரஜினி'யின் சிவாஜி திரைப்படம் ஒரு பார்வை...ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப் பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெறும் என்கிறார். மேலும் தமிழோசை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com BBCTamil.com

திரு.B.H.அப்துல் ஹமீது

'இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், தமிழ்ச்சேவை' என்று கூறும்போதே அது பிரபல அப்துல் ஹமீது அவர்களின் குரல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு "உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை"க் கவர்ந்தவருடனான ஒரு நேர்முகம். Please 'click' the link FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews

June 17, 2007

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம், ஆகியவைகளைக்- கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்- மகா மகா அயோக்கியன்.
- பெரியார்