October 04, 2007

சுவாமி விவேகானந்தர்

"இளைஞனே வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை"

  • 'ஐஸ்லாந்து இராஜதந்திரி விடுதலைப்புலிகளைச் சந்தித்தது குறித்து ஐஸ்லாந்து அரசு மன்னிப்பு கோரியது'- இலங்கை அரசு : இலங்கை வந்த ஐஸ்லாந்து நாட்டு இராஜதந்திரி ஒருவர், இலங்கை அரசின் அனுமதியின்றி விடுதலைப்புலிகளைச் சந்தித்தது தொடர்பில் ஐஸ்லாந்து அரசு தம்மிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது
  • விடுதலைப்புலிகளின் பகுதிக்கு போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் செல்வதில் பிரச்சினை : விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக இன்று கிளிநொச்சிக்குச் சென்ற போர்நிறுத்த கண்காணிப்பு குழு அதிகாரிகளுக்கு ஓம்நதை இராணுவ சோதனைச்சாவடியின் ஊடாகச் செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளுக்கும், போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும் இடையிலான தொடர்புகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறாக தடையேற்படுத்தப்பட்டுள்ளது எனவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் தெரிவித்துள்ளார்
  • பர்மாவில் கைதுகள் தொடர்கின்றன: சர்வதேச நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் அதிகரிக்கிறது : பர்மாவில் கடந்த வாரம் நடந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும், ஆட்களைச் சுற்றி வளைப்பதற்காக, அந்த நாட்டின் பெரிய நகரான ரங்கூனில், பர்மியப் பாதுகாப்புப் படையினர் மேலும் தேடுதல்களை நடத்தியுள்ளனர்
  • எதிர்க்கட்சித் தலைவியைச் சந்திக்க பர்மிய இராணுவத் தலைவர் கொள்கையளவில் ஒப்புதல் : பர்மாவின் இராணுவத் தலைவர், ஜெனரல் தான் ஷ்வே, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக ஆதரவுத் தலைவி, ஆங் சான் சூச்சீ அவர்களை சந்திக்கக் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக பர்மிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது
  • பேனசீர் நாடு திரும்புவதற்கான உடன்பாடு : பாகிஸ்தானுக்கு தான் மீண்டும் திரும்பவும், மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்குமான நிபந்தனைகள் வாய் வழியாக ஒத்துக் கொள்ளப்பட்டுவிட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பேனசீர் பூட்டோ கூறியுள்ளார்
  • காங்கோ விமான விபத்தில் பலர் பலி : காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாஷாவில் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியொன்றில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது
  • இன்றைய (அக்டோபர் 04 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

பந்த் - ஒரு ஆய்வு

பின்னனிப் பாடகி "கலகல" கல்பனா - 3

October 03, 2007

இன்றைய குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கிவிடும்

அறத்துப்பால் : அடக்கம் உடைமை

சுவாமி விவேகானந்தர்

"வீரர்களே கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தடைகளிலிருந்து விடுபடுங்கள்"

ஜனநாயக நாடுகளில் வாரிசு அரசியல் - ஒரு பார்வை

  • இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார் : மோதிலால் நேரு முதல், அவரைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, அவருடைய மகள் இந்திரா காந்தி, இந்திராவின் மகன் ராஜிவ் காந்தி, இன்று ராஜிவின் மகன் ராகுல் காந்திவரை, இந்தக் குடும்பத்தின் ஐந்து தலைமுறையினர், காங்கிரஸ் கட்சியிலும், இந்திய அரசியலிலும் முக்கியத்துவம் மிக்கவர்களாகத் திகழ்ந்துள்ளனர். நவீன ஜனநாயக காலத்திலும், இந்த பரம்பரை (வாரிசு) அரசியல் எந்த அளவுக்குப் பொருந்துகிறது, உலகின் ஏனைய பாகங்களிலும் இந்த நிலை காணப்படுகிறதா, அதன் சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்து பிபிசியின் ஆய்வாளர் நிக் மைல் அவர்கள் தயாரித்த பெட்டகத்தின் தமிழாக்கத்தை நேயர்கள் இன்றைய சிறப்புப் பெட்டகமாகக் கேட்கலாம்
  • முஷாரப்புடனான பேச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டதாக புட்டோ அறிவிப்பு : பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப், தான் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே,அவருடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து தான் நடத்திய பேச்சுவார்த்தைகள் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக தற்போது நாடு கடந்து வாழும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ கூறியுள்ளார்
  • பாகிஸ்தான் செம்மசூதி மீண்டும் திறப்பு : பாகிஸ்தானின் செம்மசூதி
    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள செம்மசூதியை அந்நாட்டு அதிகாரிகள் மீண்டும் திறந்துள்ளார்கள்
  • வட இலங்கை மோதலில் 8 படையினர் பலி : இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்களில், வவுனியா ஓமந்தைக்கு மேற்கே கல்மடு பிரதேசத்திலும், மன்னார் கட்டுக்கரை பகுதியில் இரண்டு இடங்களிலும் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 7 விடுதலைப் புலிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், 3 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் சட்டம் : தமிழ்நாட்டில் இருக்கும் ஏரி, குளம், ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகள், அதன் கரைகள் மற்றும் அவற்றின் நீர்வரத்து மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்திருக்கிறது
  • பர்மா மீதான தடைகள்--ஐரோப்பிய ஒன்றியம் தீவிரம் : பர்மாவில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அங்குள்ள இராணுவ ஆட்சி ஒடுக்கியதை அடுத்து, அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் இணங்கியுள்ளனர்
  • வட இந்திய ரயில் நிலைய விபத்தில் 14 பெண்கள் பலி : வட இந்தியாவின் ஜனசந்தடி மிக்க ஒரு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு குறைந்தது 14 பெண்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 47 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாயினர்

சேது சமுத்திரம் ஆய்வு : 3

October 02, 2007

சர்ச்சைமேல் சர்ச்சைகள் : சேதுசமுத்திரம் கால்வாய் ஒரு ஆய்வு - 1

சர்ச்சைமேல் சர்ச்சைகள் : சேதுசமுத்திரம் கால்வாய் ஒரு ஆய்வு - 2

பத்மஸ்ரீ டாக்டர் PB.ஸ்ரீனிவாஸ் நேர்முகம் : அமெரிக்கப் பண்பலை வரிசையில் ஒலிபரப்பானது. நேர்முகம் காண்பவர் நண்பர் ஸ்ரீ அவர்கள்

ஜார்ஜ் டபிள்யு.புஷ்

இன்றைய குறள்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்

அறத்துப்பால் : நடுவு நிலைமை

சுவாமி விவேகானந்தர்

"வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்"

புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.இ. கருணாகரன்

  • புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அதிபரின் கருத்து: சுற்றுச்சூழல் விவகாரம் குறித்த ஆய்வாளரின் செவ்வி அதிபர் புஷ் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், உலகின் தட்பவெப்ப நிலை குறித்த சமீபத்திய முக்கிய நிகழ்வு குறித்த செய்தியை பார்க்கலாம். புவி வெப்பமடைவதற்கு பிரதான காரணியாக கருதப்படும் கிரீன் ஹவுஸ் கேஸ் என்கிற புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பில், ஐ.நா மன்றத்தின் முன் முயற்சியில் கியோட்டோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி உலக நாடுகளை, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் மிகவும் பின் தங்கிய நாடுகள் என்று வகைப்படுத்தி, அதற்கேற்ப அவை வெளியேற்றும் புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் அளவை குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. கார்பன் வெளியேற்றத்தில் அமெரிக்காவின் பங்கு அதிகம் ஆனால், இந்த உடன்பாட்டை அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் ஆரம்பம் முதலே ஏற்க மறுத்து வருகிறார். கியோட்டோ உடன்பாட்டின் அடிப்படையில் அமெரிக்கா தனது புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைத்தால், அதன் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் பொருளாதார ரீதியில் அது இழப்புகளை சந்திக்க வேண்டிவரலாம் என்பதாலும், புஷ் அவர்கள் கியோட்டோ ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்த பின்னணியில் புஷ் அவர்கள், கடந்த வாரம் வாஷிங்டனில் கூட்டிய சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாட்டில் பேசும்போது, கியோட்டோ உடன்பாட்டிற்கு பதில், ஒவ்வொரு நாடும் தனது சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு போர்வை வாயுக்களை குறைத்தால் போதும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். இது புவி வெப்ப மடைவதை குறைக்க போராடிவரும், சுற்றுச்சூழல் குழுக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில், புஷ் அவர்களின் கருத்துக்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும், கியோட்டோ ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து அவதானித்து வரும் தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.இ. கருணாகரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்.
  • கர்நாடகாவில் ஆளும் கூட்டணியில் நெருக்கடி : கர்நாடகத்தில் பாரதீய ஜனதா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு தற்போது நெருக்கடியான கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைப்பதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இருபது மாதங்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் சிக்கல் எழுந்திருப்பதால், கர்நாடக அரசியல் அரங்கம் பரபரப்படைந்துள்ளது. இரு கட்சிகளும் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் கூட்டங்களை நடத்தின. மதச்சார்பற்ற ஜனதா தளத்தைத் சேர்ந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள், தங்களது ராஜிநாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்தார்கள். இதனிடையே, பெங்களூரில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கெளட பிபிசியிடம் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினார். “எங்கள் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக்கூட்டம் 5-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக, நாளை மறுதினம் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும். அவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். பின்னர் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார் தேவெ கெளட.
    இரு கட்சிகளின் உயர்நிலைத் தலைவர்களும் அமர்ந்து பேசுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்
  • பெனசீருடன் உடன்பாடு ஏற்படக் கூடிய நிலை : பெனசீர் பூட்டோபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவுடன் ஒரு உடன்பாட்டை எட்டக் கூடிய நிலையில் பாகிஸ்தான் அரசு உள்ளதாக பாகிஸ்தான் அரசின் சார்பில் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
    இதற்கு சிலமணி நேரங்கள் முன்பு கருத்து வெளியிட்ட அந்நாட்டின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் கைவிடப்படும் என்று கூறியிருந்தார்
  • பர்மாவுக்கான ஐ.நா பிரதிநிதியின் நான்கு நாள் விஜயம் முடிந்தது : பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களையும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவியான ஆங்சான் சூச்சி அவர்களையும் சந்தித்துப் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் இப்ராஹிம் கம்பாரி அவர்கள், 4 நாள் விஜயத்தின் பின்னர் பர்மாவில் இருந்து புறப்பட்டுள்ளார்
  • வட இலங்கையின் விமானத் தாக்குதல் தொடர்கின்றது : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரது மறைவிடம் ஒன்றின் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு அந்த இடம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது
  • ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்த கீதபொன்கலனின் செவ்வி : வாக்காளர்களை ஈர்க்க சமஸ்டி என்ற விடயம் உதவாது என்ற அரசியல் யதார்த்தத்தை, ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது என்பதையே அதன் அண்மைய அறிக்கையும், அதற்குச் சமாந்தரமாக அதன் தலைவர்கள் சிலரது உரைகளும் உணர்த்துவதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்
  • நோபல் பரிசுக்கு இணையான பரிசு இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் வீரம்ந்திரிக்கு வழங்கப்படுகிறது : நோபல் பரிசுக்கு சமாமமாக சர்வதேச அளவில் மதிக்கப்படும் த ரைட் லைவ்லிஹூட் 2007 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசு இம்முறை இலங்கையர் ஒருவருக்கும் வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
  • இன்றைய (அக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

October 01, 2007

'சோ' சொல்கிறார் : கலைஞர் உண்ணாவிரதம் அர்த்தமற்றது

இன்றைய குறள் (1000 - மாவது பதிவு)

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை

அறத்துப்பால் : நடுவுநிலைமை

பின்னனிப்பாடகி கலகல கல்பனா - 2

சுவாமி விவேகானந்தர்

"தன்னிடம் நம்பிக்கை இழப்பது தெய்வத்திடம் நம்பிக்கை இழப்பதாகும்"

திமுக அரசு கலைக்கப்படலாம் இன்று அதிமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்கிறது : திமுக உண்ணாவிரதம் : உச்சநீதிமன்றம் கண்டனம்

  • சேதுக்கால்வாய் திட்டம் தொடர்பில் தமிழகத்தை ஆளும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் நடத்த திட்டமிட்டிருந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், திமுகவும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களும் திங்கட்கிழமையன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைநகர் சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டங்களும் அதைத் தொடர்ந்து மாநிலம் தழுவிய ஸ்தம்பித நிலையும், உச்சநீதிமன்றத்தின் முழு அடைப்புக்கான தடை உத்தரவை மீறிய நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அஇஅதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று காலை மனு தொடரப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதன் மீதான விசாரணையின் போது தமிழக அரசு குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். தமது முந்தைய உத்தரவை மீறி செயல்படும் தமிழக அரசை இந்திய நடுவணரசு பதவி நீக்க தயங்கக்கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், தேவைப்பட்டால் தமிழக முதல் வரையும், தலைமைச் செயலாளரையும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரும் என்றும் எச்சரித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கடுமையான விமர்சனங்கள் வெளியான சிறிது நேரத்தில், முதல்வர் கருணாநிதி உண்ணா விரத பந்தலில் இருந்து வெளியேறினார். மற்றவர்கள் மாலை வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். ஆனாலும், மதியம் முதலே மாநிலம் தழுவிய அளவில் சாலைப்போக்குவரத்து சீரடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய பரபரப்பான நிகழ்வுகள் குறித்த விரிவான செய்திகள், செவ்விகளை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
  • ஐ.நாவின் மனித உரிமைக் கண்காணிப்பாளர் இலங்கை விஜயம் : மேன்பிரட் நொவக் சர்வதேச நாடுகளில் இடம்பெறக்கூடிய சித்திரவதை தொடர்பான விடயங்களைக் கண்காணிக்கும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விசேட தூதுவர், மேன்பிரட் நொவக் இன்று கொழும்பு வந்தடைந்திருக்கிறார்
  • இலங்கை பணிப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு : சவுதி அரேபியாவில் சம்பளம் வழங்காமை உட்பட பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான, இலங்கையைச் சேர்ந்த அனிஸ்டா மேரி என்னும் பணிப் பெண்ணுக்கு ஐயாயிரம் டாலர்கள் வரை நஷ்ட ஈடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக பூட்டின் அறிவிப்பு : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்கள், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்