June 19, 2007

"ஹைகூ"

சொந்தமண்ணிலிருந்து

துரத்தப்பட்ட அகதிகளாய்…

துடுப்பற்ற பரிசலாய்…



...................பிறைநிலா

மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்

மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் உண்மையில் மேலும் 18 கொலைகள் நடக்க காரணமாகிறார்கள். மரணதண்டனையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் 18 கொலைகளை தடுக்கிறார்கள். Please 'click' the link Thinnai

திரைப்பட இயக்குனர் "வசந்த்" நேர்முகம்

இன்றைய குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" செய்தி (ஜுன் 19 செவ்வாய்க்கிழமை) கேளுங்கள், சேது சமுத்திரம் பற்றிய ஒரு பெட்டகம் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக. BBCTamil.com Radio Player

என் அபிப்பிராயத்தை மறுக்க
உங்களுக்கு உரிமையுண்டு
ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு
- பெரியார்

June 18, 2007

யார் குற்றம்? - சிறுகதை

செல்போனை ‘வைப்ரேஷன்’ மோடில் வைத்திருந்தாலும் தொடர்ந்து யாரோ அழைப்பதை உணர்ந்து எரிச்சலாகிப்போனான் நிதிஷ். சமீபத்தில் இம்போர்டரிடமிருந்து வந்த க்ளைம் பற்றி மேனேஜிங் டைரக்டர் மிகக் காரசாரமாக கான்ஃபரன்ஸ் ரூமில் விவாதித்துக்கொண்டிருந்தார். நிதீஷ், அந்த நிறுவனத்தின் மேலாளர், பொறுப்புள்ள பதவியிலிருப்பதால் அனைத்தையும் கையாளவேண்டியது அவன் கடமை. ஆனால் இப்படிப் பொறுப்பே இல்லாமல் இருந்தால் எப்படி என்று மிகவும் கோபித்துக்கொண்டவரிடம், ‘ஓ.கே. சார், ஐல் டேக் கேர்! லெட் மி ஹேவ் சீரியஸ் லுக் இன்டுயிட்’ என்று சமாளித்து ஒரு வழியாக வெளியே வந்தவன் செல்போனை எடுத்துப்பார்த்தான். ஏழு மிஸ்டு கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து. கோபம் தலைக்கேறியது, ‘காலையில கௌம்பும்போதே மீட்டிங் இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன், அப்படியென்ன தலைபோற விசயம்’ என்று மனதுக்குள் கடிந்துகொண்டே, போன் செய்வதற்கு முன், மெஸேஜைப் படித்தான். இடிந்தே போய்விட்டான் நிதிஷ். மை காட்….ஓ’வென அழமுடியாத குறையாய்….எம்.டி.யிடம், “சார், எம்பையன் இறந்துட்டான் சார், நான், கௌம்புறேன் சார்’ என்று சொல்லி முடிப்பதற்குள் கதறியே விட்டான். உடனடியாக எம்டி-யின் டிரைவர் நிதீஷ்-ஐ காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கிப் பறந்தான்.

அப்போதுதான் காலையில் வீட்டில் நடந்தது நிதிஷ்-ன் நினைவுக்கு வந்தது. “ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், சேத்து லஞ்ச் சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இறுமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! ஃபர்ஸ்ட், பெட்-டுமேல இருக்கற ஒன்னோட மெடிசின்ஸ், காஃப் சிரப் எல்லாத்தயும் எடுத்துவை, ஸ்வரேஷ் எடுத்து சாப்டாலும் சாப்டுருவாம்பா” என்று தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டு சமயலறையில் இருந்தவளிடம் “பாய்டா, ஐல் கால் யு’ என்று கூறி அவசரமாகச் சென்றுவிட்டான். “ஐயோ! என் மகனே! கடவுளே! என்னாச்சோ தெரியலயே! என்ன நடந்துருக்கும்...ம்ம்... சீரியஸா இருந்தாலும் பரவாயில்ல, டாக்டர்ஸ் எப்படியாவது காப்பாத்திருவாங்க, ஆனா உயிருக்கு மட்டும் எதுவும் ஆயிருக்கக்கூடாது” என்று அவன் வேண்டாத தெய்வமே இல்லை.

மருத்துவமனையில் காரை நிறுத்துவதற்குள், நிதீஷ் இறங்கி ஓடி ரிஷப்சனில், “ஸ்வரேஷ்-னு என்னோட சன்….? … “சாரி, சார்…சிரப், டேப்ளட்ஸ் எல்லாம் முழுங்கி, ஓவர்டோஸாகி….காப்பாத்த முடியல, பையன் எறந்துட்டான், கொஞ்சம் முன்னாடிக் கொண்டு வந்துருந்தாக்கூடக் காப்பாத்தியிருக்கலாம்’னு டாக்டர் சொன்னாங்க…எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்….அதோ அந்த எமெர்ஜென்ஸி வார்டுல இருக்காங்க பாருங்க”. நிதீஷ் இடிந்து போய் கீழே விழப்போகும் தருவாயில், டிரைவர் அப்படியே தாங்கலாகப் பிடித்துப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரவைத்தான். நர்ஸ் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்துக் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தாள்.

“நான் எப்போ அந்த எம்பிஞ்சு மொகத்தைப் பாப்பேன், எப்படி என் ஸ்வேதா மொகத்துல முழிப்பேன், ஐயோ! கடவுளே! ஒனக்குக் கண்ணே இல்லையா? நாங்க என்ன பாவம் செஞ்சோம்? ஐயோ! அவள எடுத்து வைக்கச் சொன்ன நான், அந்த மருந்தெல்லாம் நானே எடுத்து வச்சுட்டுப் போயிருக்கலாமே! கண்ணுக்குத் தெரிஞ்சே இப்படி எம்புள்ளய நானே கொன்னுட்டனே!’ என்று தன்னையும் மீறி கதறும்போது பக்கத்தில் நின்ற அனைவருமே கலங்கி விட்டனர்.

அதற்குள் ஸ்வேதா தன் மகனைக் கையில் அணைத்துக்கொண்டு அலறியபடியே ஓடி வந்து தன் கணவனை கட்டிப்பிடித்து, ‘என்னெ மண்ணிச்சுருங்க! பாவி! நானே எம்புள்ளயக் கொன்னுட்டேன், அப்பவே சொன்னிங்களே! நான் கேர்லெஸ்-ஸா இருந்துட்டேங்க! கொஞ்சம் முன்னாடிக் கொண்டுவந்துருந்தாலும் காப்பாத்தியிருக்கலாமே! அதுக்குத்தானெ நான் ஒங்களுக்கு போன் பண்ணேன். டாக்ஸி-ல கொண்டுவர்றதுக்குள்ள எல்லாமே போச்சே!...ஐயோ நான் என்ன செய்வேன்”……

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், யாரைக் குற்றம் சொல்வது, சுலபமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் அளவுக்குச் அவர்கள் சராசரி மனிதர்கள் இல்லை. நன்கு படித்தவர்கள். இழந்த இழப்பை யாராலும் ஈடுசெய்யமுடியாது. நிதீஷ், தன் இறந்துபோன மகனை ஒரு கையிலும், தன் மனைவியை மற்றொரு கையிலும் அணைத்துக்கொண்டு கண்ணீரோடு “ஐ லவ் யு ஸ்வேதா, ஐ லவ் யு” என்றான்.


இது யார் குற்றம்?
இது அன்றாட வாழ்வில் நடக்கக் கூடிய,
ஏன் நடந்த ஒரு சம்பவம்.
குற்றம் யாருடையது?
முடிவை உங்கள் கைகளுக்கே விட்டுவிடுகிறேன்.


- நவின்

டாக்டர் பத்மஸ்ரீ P.B.ஸ்ரீனிவாஸ் II

Powered by eSnips.com

அரசியல் மூலம் பணம், புகழ், பதவி, முதலியவற்றைச் சம்பாதிக்கத் திட்டமிடும் கூட்டத்தினர் மனித சமூதாயத்திற்கு- "எலும்புருக்கி நோய்" போன்றவர்கள்

- பெரியார்

இன்றைய குறள்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய "BBC" செய்தியில் (ஜுன் 18 திங்கட்கிழமை) அடுத்த குடியரசுத் தலைவரும் மேதகு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்' தான் என்று உரக்க முழங்குகிறார் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். மேலும் ரஜினி'யின் சிவாஜி திரைப்படம் ஒரு பார்வை...ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப் பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெறும் என்கிறார். மேலும் தமிழோசை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com BBCTamil.com

திரு.B.H.அப்துல் ஹமீது

'இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், தமிழ்ச்சேவை' என்று கூறும்போதே அது பிரபல அப்துல் ஹமீது அவர்களின் குரல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு "உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை"க் கவர்ந்தவருடனான ஒரு நேர்முகம். Please 'click' the link FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews

June 17, 2007

ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம், ஆகியவைகளைக்- கற்பித்தவன் அயோக்கியன்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்- மகா மகா அயோக்கியன்.
- பெரியார்

உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள்

மூளையின் குறிப்பிட்ட பகுதி சரியான முறையில் இயங்காமலிருப்பதே காக்கை வலிப்பு நோய்க்குக் காரணம்; அப்பகுதியை அறுவை சிகிச்சையின் வாயிலாக அகற்றிவிட்டால் நோய் குணமாகும் Please 'click' Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

இன்றைய குறள்

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய (ஜுன் 17 ஞாயிற்றுக்கிழமை) "BBC" செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

June 16, 2007

"கையை வெட்டினாலொழிய பிழைக்கமாட்டாய்"
என்று டாக்டர் சொன்னால் வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.
"காலை வெட்டினால் ஒழிய பிழைக்கமாட்டாய்"
என்றால், காலை வெட்டிவிடச் சம்மதிக்கிறோம்.
"மலஜலம் கழிக்க வேறு ஓட்டைப் போட வேண்டும்"
என்றால், போட்டுக் கொண்டு அதில் மலஜலம் கழிக்கிறோம். எடுத்து விட வேண்டும் என்றால்
"கருப்பையை" எடுத்து விடச் சம்மதிக்கிறோம். இன்னும் முக்கிய உறுப்புகளை, முக்கிய பண்டங்களை இழந்தாவது உயிர் வாழ சம்மதிக்கிறோம். அப்படியிருக்க ஒரு "அயோக்கியக் கூட்டம்" நம்மை ஜெயித்து, அடிமையாக்கி, தங்களுக்கு அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட ஒரு கொள்கையை நம் மீது பலாத்காரத்தாலும், தந்திரத்தாலும், புகுத்தி இழிவு படுத்தி வைத்திருப்பதை ஒழிக் வேண்டும் என்றால் இதற்கு இவ்வளவு யோசனை, எதிர்ப்பு, தயக்கம், வெட்கம், என்றால் இந்த இழிவு (சூத்திரத் தன்மை) எப்பொழுது தான், எந்த வகையில் தான் மறைவது? என்று கேட்கின்றேன். என் மீது கோபிப்பவர்கள் இதற்குப் பரிகாரம் சொல்லாமல் கோபித்தால் அவர்களை வெறும் "வெறியர்கள்"!!! என்று தானே அறிவாளிகள் சொல்லுவார்கள்.

இன்றைய குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்

அறத்துப்பால் : வான்சிறப்பு

தமிழோசை

இன்றைய (ஜுன் 16 சனிக்கிழமை) "BBC" செய்தி, ஐ.நா.சபை முன்பு தமிழர்களின் "உரிமை ஊர்வலம்" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'சிவாஜி' திரைப்பட வெளியீடு போன்ற சுவாரஸ்யமான செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
BBCTamil.com Radio Player

"கொடைநாடு எஸ்டேட்"