July 21, 2007

* உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.
* மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான மனமே புத்துணர்வுடனும், செயலாக்கம் மிக்கதாகவும் இருக்கும். சோர்வடைந்த உள்ளத்தால் எவ்வித பயனும் இல்லை. அவர்களால் அடுத்தவருக்கும் நன்மைகள் செய்ய முடிவதில்லை. அத்துடன் உடன் இருப்பவர்களுக்கும் துன்பம்தான் விளைகிறது. சோர்வுடன் இருக்கும் ஒருவரைக் காணும் மற்றொருவர், தனக்கும் துன்பம் வந்துவிட்டது போலவே கவலை கொள்கிறார். எனவே, துன்பத்துடன் இருப்பவர்கள், யாரையும் சந்திக்காமல் தனிமையில் இருப்பதே நல்லது. அந்த வேளையில் தனக்கு துன்பம் நேர்ந்ததற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிறிது நேரம் தனிமையில் அதற்கான காரணத்தை சிந்தித்து விட்டாலே, அதனால் பயன் ஒன்றுமில்லை என்பது புலப்பட்டுவிடும். ஆகவே, ஒன்றுமில்லாத சோர்வை விரட்டி, மகிழ்ச்சியுடன் இருங்கள்.
-தாயுமானவர்

"புத்தி தெளிவாகவும், மனம் சமநிலைப்பட்டும் ஒரு பேனாவைப் பிடிக்கும் அளவு உடலில் தெம்பு இருக்கும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன்"

- பிரபஞ்சன்

இன்றைய குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்திற்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. 72 வயதான பிரதீபா பாட்டீல் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும் இன்றைய (ஜுலை 21 சனிக்கிழமை) 'BBC' செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player

பாடல்களைக் கேட்கும்போது நம்மையறியாமலே மனதுக்கு ஒரு இனம் புரியாத உணர்வு கிடைக்கும் என்றால் அவை நல்ல இசையென்று பொருள். "நல்ல இசையைக் கேளுங்கள், உங்களின் ஆத்மாவை அது எங்கோ ஓர் இடத்துக்கு எடுத்துச்செல்லும்" என்று "இசைஞானி" சொல்வார். அவற்றில் இவைகளும் அடங்கும். கேட்டுப்பாருங்கள்.
Powered by eSnips.com

நாலடியார்

1. அறத்துப்பால்

1.8. சினம் இன்மை

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - ஈர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு

- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை

வெறி பிடித்த நாய் தன்னைக் கடித்துவிட்டால், அதைத் திருப்பிக் கடிப்பார் யாருமில்லை. அது போல சீரிய குணம் இல்லாதவர்கள், தீய வார்தைகளைத் தன்மீது உபயோகித்தால், கற்று உணர்ந்த பெரியவர்கள் அதே வார்தைகளைத் தம் வயால் அவர் மீது சொல்லமாட்டார்கள்


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Placidity
There is none here who, though they see a dog snap angrily at them, will in return snap at the dog again with their mouth. When base born persons mischievously utter base things, will the noble repeat such words with their mouths in return?

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

July 20, 2007

மனத்தின் சமநிலையோடு, மனக் கொந்தளிப்பைச் சாட்சியாக விலகி நின்று எழுத்தாளன் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்

- பிரபஞ்சன்

இன்றைய குறள்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று


பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

July 19, 2007

வரலாற்றின் நீண்ட சரித்திரத்தில் வன்முறையுடன் எந்த ஒரு நாடு மீதும் படை எடுக்காத ஒரே நாடு இந்தியா தான் என்பது உண்மை


- சுவாமி விவேகானந்தர்

"வேதாந்த் பரத்வாஜ்" இளம் இசைக்கலைஞர் பகுதி 3

இன்றைய குறள்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்போரின் நோன்மை உடைத்து


தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

பாடல் இயற்றுபவரைப் பாடலாசிரியர் என்போம். பாடுபவரைப் பாடகர் என்போம். படத்தை இயக்குபவரை இயக்குனர் என்போம். படத்தில் நடிப்பவரை நடிகர் என்போம். படத்தில் நடனமாடுபவரை, நடனக் கலைஞர் என அழைப்போம். சாதாரணமாக ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் சிறந்த புலமை பெற்றிருப்பது வழக்கம். அபூர்வமாகச் சிலர் தம்முள் பன்முகத் திறனை வளர்த்துக் கொண்டு அஷ்டவதானியாகவும், சதாவதானியாகவும் திகழ்வதுண்டு. மனோரஞ்சித மலர் யார் எந்தப் பழத்தை நினைத்துக் கொண்டு முகர்ந்தாலும் அந்த மணத்தை அளிப்பதாகச் சொல்வார்கள். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க
Tamil movie links presenting cinema news,movie reviews,song reviews,actors,actresses&pictures

July 18, 2007

திரு.யாழ் சுதாகர் அவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அவர், தான் வானொலி அறிவிப்பாளராக இருந்தபோது நடந்தவைகளையும், அனுபவங்களையும் அழகாகப் பாடல்களோடு தொகுத்து வழங்கியிருக்கிறார். நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
Get this widget | Share | Track details

இன்றைய குறள்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்

அறத்துப்பால் : இல்லறவியல்

"இந்திய விடுதலைக்காகப் பிசாசின் உதவியைப் பெற வேண்டியிருந்தால் கூட நான் அதனோடு பேசுவேன்"

- நேதாஜி

தமிழோசை

இன்றைய (ஜுலை 18 புதன்கிழமை) "BBC" செய்திகள் கேட்கக் கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

வேதாந்த் பரத்வாஜ் இசைக்கலைஞர் பகுதி 2

July 17, 2007

எழுத்தாளனுக்குக் கொந்தளிப்புத் தேவைதான், ஆனால் அந்தக் கொந்தளிப்பிலேயே அவன் ஆழ்ந்துவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது

- பிரபஞ்சன்