August 02, 2007

தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி

பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழவிடவில்லை. தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள். நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை. எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு. கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது."வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை" இலக்கியச் சுடரொளி - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி அவர்களுடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக: "நிலாச்சாரல்"

தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி

பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழவிடவில்லை. தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.

நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை. எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு. கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது."வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை"
இலக்கியச் சுடரொளி - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி அவர்களுடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக: "நிலாச்சாரல்"

அமெரிக்கா : மினியாபொலிஸ் I 35 என்ற நெடுஞ்சாலை பாலம் இடிந்தபோது எடுத்த வீடியோ

அமெரிக்கா : மினியாபொலிஸ் பாலம் இடிந்தபோது எடுத்த வீடியோ

அமெரிக்கா : மினியாபொலிஸ் பாலம் இடிந்த.... வீடியோ

"பாதையைத் தேடாதே.. உருவாக்கு"
உலகத்தின் புனிதமான நீர் உழைப்பாளனின் வியர்வை

- புரட்சியாளர் லெனின்

இன்றைய குறள்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்படையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது

அறத்துப்பால் : மக்கட்பேறு

தமிழோசை

சில மணி நேரங்களுக்கு முன்...

அமெரிக்காவின் மினியாபோலிஸ் என்ற இடத்தில் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் இடிந்து மிஸிசிபி ஆற்றுக்குள் விழுந்து ஏராளமானோர் பலி, மிகவும் வாகன நெருக்கடியான நேரத்தில் இடிந்து விழுந்ததால் பலர் போன இடம் தெரியவில்லை.
மிகவும் பரிதாபத்துக்குரிய அமெரிக்க விபத்துக்களில் இதுவும் ஒன்று. இதுபற்றிய செய்தியை முழுவதுமாகப் பார்க்க இந்த இணைப்பில் செல்க...http://abcnews.go.com/

August 01, 2007

இன்றைய குறள்

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை

அறத்துப்பால் : மக்கட்பேறு

"மற்றவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட மாட்டோம்!"

- காந்தியடிகள்

தமிழோசை

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 153 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு, மதானி விடுதலை : மதானி விடுதலை செய்யப்பட்டிருப்பதை தாம் எதிர்பார்த்ததாகக் கூறிய பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் இல. கணேசன், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மதானிக்கு எதிராக வலுவான வாதங்களை வைத்து வாதாடத் தவறிவிட்டதாகத் தாம் கருதுவதாகவும் குறிப்பிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். இன்றைய (ஆகஸ்ட் 01 புதன்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க

July 31, 2007

எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கே தருகிறேன். இந்தப்பிஞ்சு ஒரு அன்னைத் தெரசாவாகலாம், அன்னை இந்திராவாகலாம்.... என்று மாறும் இந்த அவலம் நமது இந்திய மண்ணில்?





"பிடித்தவைகளைப் பிடித்துக்கொண்டு, பிடிப்போடு, பிடித்தவைகளுக்கே பெருமை சேர்க்கும் கீதாவை பல கிரீடங்கள் தேடிவரும் என்பதில் சந்தேகமில்லை"


இசையுலகில் மட்டுமல்ல எழுத்துலகிலும் கொடிகட்டிப் பறக்கும் கீதா பென்னட், சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் வழித் தோன்றல். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவரான உலகின் பல பாகங்களிலும் இசைநிகழ்ச்சியும் பயிற்சியும் அளித்துவருகிறார். வீணை இசைக்காக அகில இந்திய வானொலி/தொலைக்காட்சியின் உச்சகட்ட விருதைப் பெற்றிருக்கிறார். நாரத கான சபாவிடமிருந்து சிறந்த வீணை வாசிப்பாளர் விருது பெற்ற கீதாவின் மகுடத்தில் இது போல் பல சிறகுகள். ஃப்யூஷன் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கீதா, பல மேற்கத்திய இசைக் குழுக்களில் வீணை வாசிப்பாளராக இருக்கிறார். இவரது வீணை இசை இந்திய அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான சந்தோஷ் சிவன் இயக்கும் Road to Happiness எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. இவர் நிலாச்சாரலுக்காகத் தந்திருக்கும் ப்ரத்யேக நேர்முகம் : Nilacharal

எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி சேர்ந்து பாடியவை

Powered by eSnips.com

ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டா தரணி பகுதி 3

"தயாநிதி மாறனும் தற்போதைய மந்திரியும்" IV

மலையாள நண்பர் ஒருவரின் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்!!

Powered by eSnips.com

படித்ததில் கனத்தது!!


இன்றைய குறள்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு, அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது

அறத்துப்பால் : வாழ்க்கைத் துணைநலம்