November 08, 2007

அன்பிற்கினிய நண்பர்களனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! "இங்கு-க்ளிக்" செய்து "பட்டாசை" வெடிக்கச் செய்யுங்கள்

இன்றைய குறள்

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது
அறத்துப்பால் : பொறையுடைமை

ஆன்மிகம் என்பது..

"ஆன்மிகம் என்பது வாழ்க்கையை முழுமையாக வாழக் கற்றுக் கொடுக்கும் ஒரு கலை. ஆசைகளைத் துறப்பதல்ல. முறையான ஆசைகளோடு வாழ்வதும், அதை வாழ்க்கை நலன்களாக மாற்றிக் கொள்வதும் ஆன்மீகம்" - வேதாத்திரி மகரிஷி

இலங்கை ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் வெட்டிக் காயங்களுடன் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

  • கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்ய: மத்திய அமைச்சரவை பரிந்துரை : கர்நாடக மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், தென்னிந்தியாவில் முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வழி ஏற்பட்டிருக்கிறது
  • வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வாக்கில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் : பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் பிப்ரவரி 15-ம் தேதி வாக்கில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் அறிவித்துள்ளார்
  • இலங்கை ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் வெட்டிக் காயங்களுடன் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன : இலங்கையின் தென்மாகாணத்தின் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலுள்ள திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள ஒசுவின்ன எனும் கிராமத்திலிருந்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டு சிவிலியன்களின் சடலங்களை வியாழக்கிழமை காலை பொலிசார் கண்டுபிடித்திருக்கிறார்கள்
  • பிரிட்டனில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முதல்முறையாய் ஒரு பெண் குற்றவாளியாய் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார் : பிரிட்டனில் அண்மையில் சட்டமாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் முதல் பெண் குற்றவாளியாக முஸ்லிம் யுவதி ஒருவர் இன்று குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்
  • கருணா பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரும் பட்சத்தில் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுமா? பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் பதில் : லண்டனில் கைதான இலங்கையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணா பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன
  • விடுதலைப் புலிகள்-நோர்வே போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இடையே கிளிநொச்சியில் சந்திப்பு : இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் கடந்த வாரம் அரச படைகளின் விமான குண்டு வீச்சில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருக்கும் நிலையிலும் சமாதான ஏற்பாட்டாளர்களாகிய நோர்வே தரப்பினர் அமைதிகாப்பது குறித்து விடுதலைப் புலிகள் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் கண்டனமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்
  • அமெரிக்கா இலங்கை கடற்படைக்கு புதிய ராடார் கருவி மற்றும் படகுகளை வழங்கியுள்ளது : இலங்கை கடற்படையின் கரையோர ரோந்து மற்றும் காவல் நடவடிக்கைகளுக்கு மேலதிக வலுச்சேர்க்கும் நோக்கில் அமெரிக்கா இன்று வியாழக்கிழமை ராடார் பொருத்தப்பட்ட கரையோரக் கண்காணிப்பு கருவியொன்றினையும் ஒரு தொகுதி நவீன படகுகளையும் வழங்கியிருக்கிறது
  • 40 வயதுக்கு மேற்பட்டவர்களே இலங்கையிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளமுடியும் என முஸ்லிம் மத விவகார அமைச்சகம் அறிவிப்பு : இலங்கையிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்பவர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என முஸ்லிம் மதவிவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் முஸ்லிம்களிடையே பொதுவாக கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது

November 07, 2007

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!! - ஏன்தான் வருதோ இந்த திருநாட்கள்?

யப்பா எப்பப்பா வருவேன்னு என் சின்ன பொண்ணும்...

அப்பா அடுத்த தீபாவளிக்காவது வந்துருவியான்னு என் பெரிய பொண்ணும்...

என்னங்க இது உங்களுக்கே நல்லா இருக்கான்னு எம் பொஞ்சாதியும்...

ஏன்டா மகனே நான் சுடு காட்டுக்குப் போறதுக்குள்ளே வந்துருவியான்னு என் ஆத்தாவும்...

கேட்கும்போது ... ....

ஏன்தான் வருதோ இந்த திருநாட்கள்??



- உங்கள் பிரியமுள்ள சம்பத் (சவூதி அரேபியா)

மன்மத ராசா "மாலதி"

இன்றைய குறள்

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று

அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது"

"எதிர்கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மாநகராட்சி தேர்தல் முறைகேடு அதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் பல தொகுதிகளில் அத்தகைய முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைக்க கூடாது. விஜயகாந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும். அவர் மட்டும் ஜெயித்த மாதிரிதான் நிலைமை
வரும். இதை இருகட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா வருவதுதான் நல்லது. மூன்றாவது அணி வர வாய்ப்பு இல்லை. எனவே பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது" - சோ

கூடுதல் கைகால்களுடன் பிறந்த பெங்களூரு சிறுமிக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி

சிறுமியின் எதிர்காலம் குறித்து மருத்துவர் ஷரண் பாடில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இந்தியாவின் பெங்களூரு நகரில் கூடுதல் கைகள் கால்கள் கொண்ட ஒரு இரண்டு வயது பெண்குழந்தையின் மீது நடத்தப்பட்ட மிக நீண்ட நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.
இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை இந்தியாவில் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை. டாக்டர் ஷரண் பாடில் தலைமையிலான மருத்துவர்கள் குழுவொன்று 24 மணி நேரங்களூக்கும் மேலாக நடத்திய இந்த அறுவை சிகிச்சையின் பின் குழந்தை லக்ஷ்மியின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கைகள் கால்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. 2 வயதுக் குழந்தை லக்ஷ்மி இந்த அறுவை சிகிச்சையை நன்றாக சகித்துக்கொண்டாள் என்றும், இனி அவள் மற்றவர்களைப்போல் இயல்பு வாழ்க்கை வாழமுடியும் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தலைமை மருத்துவர் டாக்டர் ஷரண் பாடில் குறிப்பிட்டார்.

வட இலங்கையில் கடும் மோதல்

  • உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள் : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
  • லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது : சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன
  • பாகிஸ்தான் அவசரநிலைப் பிரகடனத்தை பொதுமக்கள் எதிர்க்க வேண்டும்: பேநசிர் பூட்டோ - பாகிஸ்தானில் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கடந்த சனிக்கிழமை நடைமுறைப்படுத்திய அவசரகால நிலையை எதிர்த்து பொதுமக்கள் கண்டனம் செய்ய வேண்டுமென்று முன்னாள் பிரதமர் பேநசிர் பூட்டோ குரலெழுப்பியிருக்கிறார்
  • செர்பியாவின் தீவிர தேசியவாத தலைவர் செசெல்ஜ் மீது போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு ஆரம்பமாகிறது : செர்பியாவின் தீவிர தேசியவாத கடும் கோட்பாட்டுக் கட்சியின் தலைவர் வொயிஸ்லாவ் செசெல்ஜ் மீதான வழக்கு விசாரணை தி ஹேக்கில் கூடும் அனைத்துலக போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் முன் ஆரம்பமாகவிருக்கிறது
  • உலக எரிபொருள் பயன்பாடு 55 சதவீதம் அதிகரிக்கும் - அனைத்துலக எரிபொருள் கழகம் எச்சரிக்கை : உலக நாடுகள் பயன்படுத்தும் எரிபொருளின் அளவு 2030ஆம் ஆண்டளவில் 55 விழுக்காடுகள் அதிகரிக்கும் என்றும் இதில் பெருந்தொகையான எரிபொருளை சீனாவும் இந்தியாவுமே பயன்படுத்தும் என்றும் அனைத்துலக எரிபொருள் கழகம் புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது
  • பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது : இத்தாலி நாட்டின் பைசா சாய்ந்த கோபுரமானது - உலக அதிசயங்களில் ஒன்று என்ற தனது அந்தஸ்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது.
    ஜெர்மனியிலுள்ள சூர் ஹுசென் என்ற கிராமத்திலிருக்கும் 15ஆம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றுக்கே இந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கின்னஸ் சாதனை நூல் தெரிவிக்கிறது.
    இந்த ஜெர்மனி தேவாலயத்தின் 25 மீட்டர் உயரமான கோபுரம் 5 பாகைக்கு மேல் சாய்ந்திருப்பதாகவும், இத்தாலிய பைசா சாய்ந்த கோபுரம் 4 பாகைக்கும் குறைவாகவே சாய்ந்து நிற்பதாகவும் கின்னஸ் புத்தகம் சார்பாக பேசவல்லவர் ஒருவர் குறிப்பிட்டார்.
    சூர் ஹுசென் தேவாலயத்திற்கான சான்றிதழ் இவ்வாரம் வழங்கபடுகிறது

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

புலிகள் பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? - கனிமொழி

"ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களது பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது"

- கனிமொழி, தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்

November 06, 2007

இன்றைய குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமிமைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த இரண்டு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை

  • கூடுதல் கைகால்களுடனான குழந்தைக்கு பெங்களூரில் அறுவை சிகிச்சை : நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த ஒரு இரண்டு வயது குழந்தைக்கு இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்க 13 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் முயன்றுவருகிறார்கள். இந்தியாவின் பெங்களூரு நகர புறநகர்ப் பகுதியில் ஒரு அசாதாரணமான அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்றுவருகிறது. லக்ஷ்மி தத்மா என்ற அந்தக் குட்டிப் பெண்ணுடைய இடுப்புப் பகுதியில் ஒரு தலையற்ற, முறையான வளர்ச்சியற்ற ஒரு பிள்ளையின் உடல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
    தனது குழந்தையை இந்துப் பெண்தெய்வத்தின் அவதாரமென்று பெற்றோர்கள் பார்க்கிறார்களென்றாலும் அக்குழந்தையைக் காப்பாற்ற அது சிறுபிள்ளையாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று மருத்துவர்கள் கூறுயிருந்தனர்.
    லக்ஷ்மி விவகாரத்தை முதலில் கையிலெடுத்தவரும் இந்த அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ குழுவுக்கு தலைமை ஏற்றிருப்பவருமான டாக்டர் ஷரன் பாடில், நாற்பது மணிநேரம் தொட்ர்ந்து சிகிச்சை நடக்கலாம் என்பதற்காக தங்களைத் தயார் செய்திருப்பதாகக் கூறினார். இந்த நல்ல காரியம் வெற்றிகரமாய் நிறைவடைந்து சிறுமி லக்ஷ்மி சிறப்பான ஒரு வாழ்க்கை வாழ்வாளென்று இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் அத்தனை பேரும் வாழ்த்துவார்களென்பதில் ஐயமில்லை
  • வரதட்சணைக்கு எதிரான போராட்டம்: மணமகன்களை காக்க முயன்ற காவலர் பலி : இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை வழங்குவதற்கு எதிராக போராட்டம் நடத்தும் கூட்டம் ஒன்றில் இருந்து, இரண்டு மணமகன்களை காப்பாற்ற முயன்ற பொலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
  • கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி வரவேண்டும் - ஜனாதிபதியிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை : குமாரசாமியுடன் யெதியூரப்பாகர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பி.எஸ். யெதியூரப்பா தலைமையில் ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீலிடம் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்
  • கருணா அணியிலிருந்து பிரிந்து சென்றிருந்தாகக் கூறப்படும் பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியுள்ளனர் : இலங்கையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணாவை பிரிட்டிஷ் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை, குடிவரவு குற்றம் ஒன்றிற்காக தடுத்து வைத்துள்ள பின்னணியில், மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது அணியின் அலுவலகங்கள் பலவற்றை, கருணா அணியினரிடமிருந்து சமீபகாலத்துக்கு முன் முரண்பட்டதாக கூறப்படும் அவரது தளபதிகளில் ஒருவரான பிள்ளையான் அணியினர் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன
  • யுத்த செலவினங்கள் அதிகமுள்ள இலங்கை வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு : இலங்கையில் யுத்த செலவினத்தை அதிகமாகக் கொண்டதாகக் கூறப்படும் வரவு செலவுத்திட்டம் நாளை காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முக்கிய உரையாற்றவுள்ளார்
  • ஹைட்ரோ கார்பன் வளங்கள் குறித்து இந்தியா-ஆப்பிரிக்கா இடையில் மாநாடு : ஹைட்ரோ கார்பன் துறையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்
  • தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் அறிவுத்திறன், மற்ற குழந்தைகளின் அறிவுத்திறனை விட அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலில் காணப்படும் குறிப்பிட்ட ஒரு புரதச்சத்து, குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவித்து, அதன் மூலம், குழந்தையின் அறிவுத்திறன் மேம்படுவதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதே வேளை, இந்த ஆய்வின் முடிவு எல்லா குழந்தை களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஞ்ஞான ரீதியான முடிவல்ல என்கிற சந்தேகத்தையும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, தமிழக தலைநகர் சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருபவருமான மருத்துவர் ஜெயம் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • சௌதி மன்னர்-போப்பாண்டவரிடையே முதல் சந்திப்பு : சௌதி மன்னர் ஒருவர் முதல் தடவையாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரை வத்திக்கானில் சந்தித்துள்ளார்
  • முஷாரஃபை சந்திக்கப்போவதில்லை என்கிறார் இஸ்லாமாபாத் செல்லும் பேநசிர் பூட்டோ : பாகிஸ்தானில் சென்ற வாரக் கடைசியில் அதிபர் முஷாரஃப் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ள நிலையில், அவரை சந்திக்கப்போவதில்லை என்று எதிர்கட்சி தலைவி பேநசிர் பூட்டோ கூறியுள்ளார்

November 05, 2007

தான் பிறந்த குலத்தை தாக்கித்தான் பாரதியார் பாடல்கள் எழுதினார்

"தான் பிறந்த குலத்தை தாக்கித்தான் பாரதியார் பாடல்கள் எழுதினார். ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்கள் தேர்தலை மனதில் வைத்து தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டக்கூடத் தயங்குகின்றனர். கடந்த காலத்தில் நம்மிடையே இருந்த பழியைத் துடைக்கவும், வருங்காலத்துக்கு வழிகாட்டவும் போராடிய போராளியாக அவர் திகழ்ந்தார். சுயநலத்துடன் குறுகிய வட்டத்துக்குள் இருந்தவர்களை நாட்டின் மீது பற்றுக் கொள்ள வைத்தார்" - தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில செயலர், மதுரையில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில்.

இன்றைய குறள்

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுமியை தேவதாசியாக்க தமிழ்நாட்டில் முயற்சி

  • தமிழ்நாட்டின் திருக்கோவிலூருக்கு அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, தேவதாசியாக ஆக்கும் முயற்சியாக, பொட்டுக்கட்டும் சடங்கு ஒன்று இன்று நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிசொல்லும் ஜோதிடக்காரர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் அந்த சிறுமியின் பெற்றோரே இப்படி செய்ய முயன்றதாகவும், இந்தச் செய்தி கேள்விப்பட்ட உள்ளூர் காவல்துறையினர், அவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்த சம்பவம் குறித்து, நேரில் விசாரணை நடத்திவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
  • தமிழ்ச்செல்வன் இரங்கல் - தமிழ்நாட்டில் சர்ச்சை : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தமிழ் நாளேடான ஜனசக்தி தனது தலையங்கத்தில், புன்னகை மாறாத முகப்பொலிவைப் பெற்றிருந்த தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளித்திருககிறது என்று கூறியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி தமிழ்செல்வனுக்காக எழுதிய இரங்கல்கவிதை கருணாநிதிககும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இருக்கும் ரகசியத் தொடர்பினைத்தான் வெளிப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டி, எனவே திமுக அரசு கலைக்கப்படவண்டும் எனக் கோரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    ஜெயலலிதாவின் கண்டனங்களுக்கு பதில் தெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஒருவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது ஓர் அடிப்படை மனிதநேயப் பண்பாடென்று கூறினார். இதனிடையே மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜி.கே.வாசன் காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறக்கவும் இல்லை, அவரது கொலையாளிகளை மன்னிக்கவும் இல்லை எனக் கூறியிருக்கிறார். தமிழ்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து சுவரொட்டிகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருக்கின்றனவே என செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்து தங்கள் வேதனையினை கட்சியின் தலைமைக்கு தெரிவிக்க இருப்பதாகக் கூறினார்.
  • புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக தியாகம் செய்ய மக்கள் தயார் - பிபிசி கருத்துக்கணிப்பு : புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று பிபிசி உலக சேவையினால் நடத்தப்பட்ட சர்வதேச கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது
  • விளையாட்டரங்கம் : இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தலைநகர் குவஹத்தியில் இன்று திங்கட்கிழமை நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது. இலங்கை – ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையில் ஷேன் வார்ண்- முத்தையா முரளீதரன் ஆகியோரின் பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட முடிவாகியிருப்பது ஆகியவை குறித்து இன்றைய விளையாட்டரங்கில் கேட்கலாம்
  • இன்றைய (நவம்பர் 05 திங்கட்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews