March 12, 2012
February 23, 2012
"பனித்துளி" திரைப்படத்தில் நான் எழுதிய 'சல்சா' இசைப் பாடல் !!
நண்பர்களே! விரைவில் வெளிவர இருக்கும் பனித்துளி திரைப்படத்தின் பாடல்களை கீழுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம். இதில் ஐந்தாவதாக உள்ள "பசியா தூக்கமா" என்ற சல்சா இசையில் அமைந்த பாடல் நான் எழுதியது. நண்பர்கள் கேட்டு, ரசித்து தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள். இடையிடையே வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் நண்பர்கள் மன்னிக்க :) கதையின் சூழல் கருதி தவிர்க்க இயலாமல் எழுத வேண்டிய கட்டாயம். நண்பர்களின் புரிதலுக்கு நன்றி!! தொடர்ந்து சிறந்த பாடல்களை தருவேன் என்று கூறி பாடலை ரசித்தமைக்கு நன்றியையும் முன்கூட்டியே தெரிவிக்கிறேன். நன்றி!!இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளவும். http://mp3.tamilwire.com/panithuli-2012.html
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, ganesh venkatraman, lyricist nawin seetharaman, Navanee, nawin seetharaman, panithuli, pasiya thookkama, salsa
December 18, 2011
"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" : கலெக்டர் சகாயம்
"ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரம் பற்றிப்பேச அருகதையில்லை" என தான் பதிலெழுதிய சுவாரசியமான தகவல்களை ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் சகாயம் தெரிவித்தார். மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது :"அனைத்து துறைகளிலும் தாய் மொழியாம் தமிழை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்பட்ட கருத்துக்களை நீங்கள் அனைவரும் உங்கள் அலுவலகத்தில் களத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கருதுவதில் நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மைதான் இடர்பாடாக இருக்கிறது. தமிழ் மொழி பேசுவதால் நமக்குள் நாமே தாழ்வானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்ற வேண்டும்.
எந்தவொரு பொருளும் தொலைவில் இருக்கின்ற வரைதான் அதன் மேல் நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும். எப்பொழுது அந்தப் பொருள் நமது கைக்குள் வருகிறதோ அப்பொழுது அதன் மேல் உள்ள ஈர்ப்பு போய்விடும். அதற்காகதான் நான் எப்பொழுதும் சொல்வதுண்டு. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். மாறாக ஆங்கில அடிமைத்தனத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்று!
ஒரு முறை ஒரு கிராமத்தில் சமபந்தி நிகழ்வில் எனக்கு ஒரு அலுவலர் மனு கொடுக்கும் பொழுது மனுவின் இறுதியில் கருப்பையா என்ற தனது பெயரை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டிருந்தார். நான் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கிறேன். யாரோ ஒரு ஆங்கிலேயர் எனக்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார். அவருடைய மனுவைப் பரிசீலிக்க நான் தயாராக இல்லை எனக் கூறிய பொழுது அந்தக் கருப்பையா என்னிடத்தில் வந்து அய்யா நான் தமிழன் தான் என்று சொன்னார்.
நீங்கள் இருப்பது தமிழ்நாட்டில்; பழகுவது தமிழ் மக்களோடு; பிறகு ஏன் உங்கள் கையெழுத்தை மட்டும் ஆங்கிலத்தில் போடுகிறீர்கள். அதை தமிழில் போட்டு கொண்டு வாருங்கள். ஒரு முறை போட்டால் உங்களுக்குப் பழகாது. அதனால் குறைந்தது 50 முறை ஒரு தாளில் போட்டு கொண்டு வாருங்கள் என்று கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். இந்த நிகழ்வு அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தது. இதை படித்த யாரோ ஒருவர் எனக்கு ஒரு தந்தியை அனுப்பியிருந்தார்.
அதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே, கையெழுத்தைத் தமிழில்தான் போட வேண்டும் என்று சொல்லுவது எங்கள் உரிமையை, சுதந்திரத்தைப் பறிப்பது போன்ற செயலாகும். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இவ்வளவு மெனக்கட்டு எனக்கு தந்தி அனுப்பியிருந்த அவருக்கு 'ஆங்கில அடிமைகளுக்குச் சுதந்திரத்தைப் பற்றி பேச அருகதை இல்லை' என்று பதில் அனுப்பியிருந்தேன். எதற்கு இதை சொல்லுகிறேன் என்றால், அந்த அளவிற்கு ஆங்கில மோகம் நம் தமிழ் மக்களிடையே பரவி கிடைக்கிறது.
பல்வேறு மொழிகளை அறிந்திருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினான். ஆனால் ஒரு மொழியைக்கூட உருப்படியாக தெரிந்து கொள்ளாத நாம், நம் தாய் மொழியை விட்டு ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டவர்களாக ஆங்கில அடிமைகளாக உள்ளோம்.
எனவே, தமிழர்களாகிய நாம் நம்முடைய பழம் பெருமைகளைப் பேசி பேசியே காலங்களைக் கடத்துவதில் பயனில்லை. என்றைக்கு ஆங்கில அடிமைத்தனத்திலிருந்து விடுபடுகிறோமோ அன்று தான் தமிழன் என்ற பெருமை நிலைக்கும். இதற்கு இந்த ஆட்சி மொழி கருத்தரங்கம் நல்ல பாதை வகுக்கும். இந்த நிகழ்ச்சி வெறும் ஆட்சி மொழி கருத்தரங்காக மட்டுமல்லாமல் உங்களுக்குச் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் களமாக அமைந்திருக்கும். உங்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கும். இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் எழுதப்படும் கோப்புகளும், தங்களின் கையெழுத்துகளும் இனி தமிழிலேயே அமையும் என்று உறுதியேற்க வேண்டும். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சதவீதம் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி நடைமுறைப்படுத்தப்படும்" என்று கலெக்டர் சகாயம்பேசினார்.
இறுதியில் ஆட்சி மொழியை அலுவலகங்களில் சிறந்த முறையில் பயன்படுத்திய அலுவலர்களுக்குப் பரிசு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களையும், ஆட்சி மொழி கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்குச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர். பெ.சந்திரா, திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி.லெ.கல்யாணசுந்தர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் (பொறுப்பு) முனைவர்.கோ.விசயராகவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர்.கா.பசும்பொன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மாவட்ட ஆட்சியாளரின்ன் நேர்முக உதவியாளர் (பொது) திரு.அலிஅக்பர் நன்றியுரையாற்றினார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:10 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, collector Sagayam, madurai collector, nawin seetharaman
November 26, 2011
"பனித்துளி" - TUM HO YAARA
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:30 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai, Navanee, nawin seetharaman, panithuli, tum ho yaara
November 07, 2011
கண்ணகி மண்ணிலிருந்து ஒரு "கருஞ்சாபம்" : கவிஞர் தாமரை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:12 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, Eelam, LTTE, nawin seetharaman, Tamil Eelam, thamarai
November 02, 2011
7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல
7 ஆம் அறிவு படம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீன் அக்டோபர் 26 ஆம் தேதி “படம் எனக்கு பிடித்திருக்கிறது. படத்தை பாராட்டி வரும் தங்கம் இதழில் எழுதுவதாக இருக்கிறோம். நீங்கள் அவசியம் பாருங்கள்” என்றார். சரியென்று ஒருவழியாக குடும்பத்தோடு சென்று பார்த்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் கவின் சொன்னான், “தசாவதாரம் கதையையே எடுத்து இருக்காங்கப்பா. அதுலேயும் ஆரம்பத்துல அந்தக் காலத்து சம்பவம் வரும். இதுலேயும் அது மாதிரிதான். அதுல அமெரிக்காவிலிருந்து, ஒருத்தன் மோசமான கிருமியை தேடி இந்தியாவுக்கு வருவான். இதுல சீனாவுல இருந்து ஒருத்தன் வர்றான்.” என்றான்.தசாவதாரம், 7 ஆம் அறிவு இரண்டும், கதையில் மட்டுமல்ல, பவுத்தம் பற்றிய கருத்துக்களை இருட்டடிப்பு செய்ததிலும் ஒரே மாதிரி இணைந்திருக்கின்றன.
தசாவதாரம், வைணவ கோயில்களை சைவர்கள் இடித்ததாக காட்டியது. ஆனால் வரலாற்றில் பவுத்த கோயில்களை வைணவர்கள் இடித்ததே அதிகம்.
ஸ்ரீ ரங்கநாதனிலிருந்து, காஞ்சிபுரம் அத்தி வரதர், திருமலை கோவிந்தா வரை அந்த சிலைகள் இருக்கும் நிலை, உலகம் முழுக்க புத்தர் சிலைகள் இருக்கும் நிலை.
குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.
போதிதர்மன், புத்தனின் பாதங்களில் சரணடைந்தான். அவன் ஒரு பவுத்தன். போதிதர்மன் தமிழன் என்பதினாலோ சித்த வைத்தியனாகவோ சீனாவிற்கு செல்லவில்லை. புத்தரின் கருத்துக்களை சுமந்து கொண்டுதான் அவன் சீனாவிற்கு சென்றான். போதிதர்மன் தமிழனாக மட்டும் இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் அவன் இருந்த தெருவுக்கே தெரிந்திருக்க மாட்டான். பவுத்தனாக இருந்ததினால்தான், அவன் உலகமெங்கும் உள்ள பவுத்த நாடுகளில் கொண்டாடப்பட்டு, இந்து ஜாதி வெறி பவுத்த எதிர்ப்பு மன்னர்களால், தமிழகத்தில், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டான். புத்தரை எந்த பிராந்திய, மொழி உணர்வுகளுக்குள் அடக்க முடியும்? அவருக்கு இந்தியாவில் என்ன மரியாதை இருக்கிறது? பிறகு அவரின் சீடனுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கும்? நல்லதும் கெட்டதும் புத்தருக்கு என்ன நேர்ததோ அதுவே அவர் சீடர்களுக்கும் நேர்ந்தது.
போதிதர்மனிடம் பவுத்தத்தை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமில்லை. ஆக, அவன் தமிழனல்ல. பவுத்தன்.
ஆனால், 7 ஆம் அறிவு பவுத்ததிடமிருந்து அவனை பிரித்து, தமிழனாக அடையாளப்படுத்துகிறது. சிக்கல் அதிலிருந்தே, அதனாலேயே துவங்குகிறது.
தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும் இணைந்து, 7 ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.
“இன்னைக்கு வந்திருக்கிற கடிகாரம் என்னங்க நேரம் காட்டுது, ஒவ்வொன்னும் ஒவ்வொரு நேரம் காட்டுது. எங்க பாட்டி சூரிய வெளிச்சத்த வைச்சே சரியான டைம் சொல்லுவாங்க. துல்லியமா இருக்கும். அதாங்க நம்ம தமிழனோட அறிவியல்” என்று சுவிஸ்லிருந்து வாங்கிய, கருணை கிழங்கு சைசு கடிகாரத்தை கையில கட்டிக்கொண்டு பேசுகிற ஒரு ……… மாதிரி,
இந்த படத்துலேயும் வாழ்க்கையை நவீன அறிவியல் வளர்ச்சியின் மீது வசதியாக வைத்துக் கொண்டு, வாயலேயே வடை சுடுகிற வசனங்கள் நிறைய இருக்கு.
“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது.
பட்டறிவுக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்னவென்று சொல்வது? நல்லா.. வருது.. சொன்னா அசிங்கமாயிடும்.
நவீன தொடர்பு சாதனங்களின் உச்சமான இணையத்தில், Face Book ல் ஜாதி பெருமை பேசுகிற படித்த ஒருவனைப் போல், கிராபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தமிழனின் பெருமையாக இந்துப் பெருமை பேசுகிறது 7 ஆம் அறிவு.
கொடிய தொற்று நோயிலிருந்து சீன மக்களை காப்பாற்றுவதற்காக போதி தர்மன் சீனாவிற்கு போனாராம்.
ஆனால், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது.
அதுபோல், சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.
‘மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது, நாம் கலைகள் பல வற்றி்லும் மருத்துவம்…’ என்று பெருமை பேசுகிறது படம்.
போன நூற்றாண்டுவரை பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் உயிரற்ற கணவனின் உடலோடு, ஒன்றாக வைத்துக் கொளுத்திய இந்து சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி இந்த ‘பெருமையை’ கூச்சமில்லாமல் எழுத முடிந்தது?
ஹாலிவுட் படங்களை பார்த்து, வில்லனுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைக்கிற தமிழ் பட இயக்குநர்கள், கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.
இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்.
‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம். அது சரி, தமிழை குரங்கு என்று சொன்னவர் பெயர் நெல்சன். உளுந்தூர்பேட்டை ஊரு. அவரைத்தான் மிக அசிங்கமான வார்த்தையால் சுபா சீனிவாசன் திட்டுவார்.
தமிழுக்கு எதிராக கருத்து சொன்னவர் நெல்சன் என்கிற கிறித்துவ குறியீட்டோடு, படத்தின் கடைசியில் ‘மதம் மாற்றத்தினால் நம் அடையாளத்தை அழித்து விட்டார்கள்’ என்ற அறிவுரையை பொறுத்திப் பார்த்தால் புரியும். ஆனால், போதிதர்மனின் சிறப்பே அவர் புவுத்தனாக மதம் மாறியதுதான்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது.
(பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதிக சத்தத்தோடு சிரமப்படுத்திட்டாரு. பாடல்களில் இளைராஜா சாயில் அமைந்த, எம்மா..எம்மா.. காதல் பொன்னம்மா… பாடல், அபூர்வசகோதரர்கள் படத்தில் வந்த ‘உன்ன நினைச்சு பாட்டு படிச்சேன்..தங்கமே..’ என்ற பாடலை நினைவுபடுத்தியது. சூழலும் அந்த படம்போன்றே சர்க்கசில் வேலை செய்பவரின் காதல் தோல்வி. அதற்காகத்தான் அதே எஸ்.பி.பியை பாட வைத்தார்களோ? சீன இசை பாடல், ‘டிவிங்கிள், டிவிங்கள் லிட்டில் ஸ்டார்…’ Rhymes யை நினைவுட்டியது.)
“நம்முடைய வீரமும், பெருமையும் நமக்கு தெரியக்கூடாது என்பதினால், நம்ம ஆண்ட ஒவ்வொருத்தரும் அத திட்டமிட்டு மறைச்சிட்டாங்க” என்று வீரமாக பேசுகிறார் போதிதர்மனோட DNA.
சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன?
ஆனால், இங்கு இருக்கிற இளியச்சவாய் தமிழன்கிட்ட மட்டும் இடஓதுக்கிட்டுக்கு எதிரான வசனங்களோட திரையிடலாம். காரணம் நம்மதான் தமிழர்களாச்சே.
இதுல பெரிய கொடுமை படத்தோட தயாரிப்பாளர் இடஓதுக்கிட்டுகாகவே கட்சி நடத்துகிற திமுக தலைவரோட பேரன். கஷ்டம். யாருக்கு? யாருக்கோ!
பல்லவ மன்னர்களை தமிழர்களாக காட்டியிருக்கிறது 7 ஆம் அறிவு. அவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற பட்டிமன்றம் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் பவுத்தர்கள் இல்லை.
களப்பிரர்கள் என்கிற சமண மற்றும் பவுத்த மன்னர்களின் காலங்கள் முடிந்த பிறகு, துவங்குகிறது பல்லவர்களின் காலம். களப்பிரர்கள் சமணர்கள் என்பதினாலேயே அவர்களின் காலத்தை இருண்ட காலம் என்று, வரலாற்று ரீதியாக பொய் சொல்லப்பட்டது.
அவர்கள் நிச்சயம் தமிழர்கள் இல்லை என்பது மட்டுமல்ல தமிழின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
பல்லவர்களின் பவுத்த வெறுப்பும், சமஸ்கிருத விருப்பும், சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் விளக்கு பிடித்த காரணத்தினாலும் அவர்களின் ஆட்சி சிறப்பானது, அவர்கள் தமிழர்கள் என்றும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. பல்லவர் காலத்தில்தான் தேவாரம் எழுதிய திருஞானசம்பந்தனும், திருநாவுக்கரசும் சமண சமயத்தை கொன்று, சாகும் தருவாயில் இருந்த, சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர்.
அதேபோல் வைணவத்திற்கும் பல்லவர்கள் தீவிட்டி பிடித்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்களை ‘மங்களா சாசனம் செய்த திருப்பதிகள்’ என பல்லவர்களால் அழைக்கப்பட்டன. பல கிராமங்கள் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தானமாக தரப்பட்டன.
பவுத்தத் துறவிகளை கேலி செய்து மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் வட மொழியில் எழுதியுள்ளான். எவனெல்லாம் சமண, பவுத்த சமயங்களை தீ வைத்துக் கொளுத்தி, சைவ சமயத்திற்கு தீவிட்டி பிடித்தானோ அவனை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் போல், மகா மன்னர்கள் என்றும் பச்சைத் தமிழர்கள் என்றும் கதைகளையே வரலாறாக எழுதினார்கள்.
அப்படித்தான் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் போன்றவர்கள், ஆனந்த விகடன் கிருஷ்ணமூர்த்தியாக இருந்து பின் கல்கி அவதாரம் எடுத்த, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கு மகா மன்னர்களாக தெரிந்தார்கள். அதனால்தான் பொன்னியன் செல்வனில் ராஜராஜ சோழனையும், சிவகாமி சபதத்தில் நரசிம்ம பல்லவனையும் தமிழனின் சிறந்த மன்னர்களாக சித்தரித்தும் பவுத்த மன்னன் புலிகேசியை வில்லனாகவும் கதை எழுதினார்.
அதன் பொருட்டே இன்றுவரை ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், புலிகேசி மன்னர்களை கோமாளிகளாக சித்தரித்து தொடர்ந்து கார்டூன், ஜோக் என்று நக்கலடிக்கிறார்கள். ஆனந்த விகடனில் பயிற்சி எடுத்த ஒரு இயக்குரும் புலிகேசி மன்னனை கோமாளியாக படம் எடுத்தார்.
கல்கிக்கும், இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களும் இவரைப்போல் நாவல்கள்தான் எழுதினார்கள்.
டாக்டர் அம்பேத்கர் சொல்வார், ‘இந்தியாவிற்கு ஒரு முறையான வராலாறு என்று சொன்னால், அது பவுத்ததிற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம்தான்’ என்பார்.
7 ஆம் அறிவில் குறிப்பிடுகிற காலம் முதலாம் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் காலம். ஏறக்குறைய திருநாவுக்கரசு சைவ சமயம் பரப்பிய காலம். அதற்கு பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேஸ்வரவர்மன் இவர்களுக்குப் பிறகு இரண்டாம் நரசிம்மவர்மன் காலம். இவன் காலத்தில்தான் தேவாரம் பாடிய சுந்தரர் இந்த மன்னனின் துணையோடு, சமண சமயத்தை சூறையாடி, சைவ சமயத்தை பரப்பிய காலம். இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதுதான் காஞ்சி கைலாச நாதர் கோயில்.
அந்தக் கோயில் கல்வெட்டுகளில், அவன் தன் வரலாறை முழுக்க சமஸ்கிருதத்தில் பதித்துள்ளான்.
ஆக, 7 ஆம் அறிவில் காட்டப்படுகிற போதிதருமன், பல்லவ ராஜகுமாரன் அல்ல, அவன் பல்லவர்களால் ஒடுக்கபட்ட பவுத்த போதகர். காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த மடத்தில், பயின்றவர். ‘இனி இங்கு பவுத்தத்தை பரப்ப முடியாது’ என்ற காரணத்தால், சீனா சென்றவர். அவரைப் போலவே அவருடன் படித்த போதிருசி என்பவர் ஜப்பான் சென்றார்.
சரி, போதிதர்மனை தமிழன் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அந்த பெருமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவருக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களை பின்பற்றுவதற்கு பதில், வள்ளுவரையே ‘தன் ஜாதிக்காரர்’ என்று எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுகிறான்.
இப்படி ஜாதி வெறி பிடித்த படித்த தமிழர்களிடம், போதிதர்மனை பரிந்துரைப்பதின் மூலம், இனி போதிதர்மனையும் தங்கள் ஜாதிக்காரராகத்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது.
இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு. எனக்கும் கூட அப்படித்தான் தோணுது.
தந்தை பெரியார் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, கல்வியில் இடஓதுக்கீடும் கிராமப்புற பள்ளிக்கூடமும் கொண்டு வருவதற்கு பாடுபட்டார்.
ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து படித்த வந்த சிலர், சினிமாகக்காரனாக மாறி இப்படி சமூகத்திற்கும், ஒடுக்கபட்ட மக்களுக்கும் எதிராக வாயில வர்றத எல்லாம் வசனமா எழுதிகிட்டு இருக்காங்க. இதுக்கா இவுங்க படிச்சது?
இதுக்கு இவுங்க பெசமா ஆடு, மாடே மேய்ச்சிருக்கலாம். அதுவே இவர்கள் எடுக்கிற சினிமாவை விட மேன்மையானது. சமூகத்திற்கு பயனுள்ளது.
வே.மதிமாறன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:02 AM
4
comments (நெற்றிக்கண்)
October 28, 2011
மீண்டும் நெருக்கடியில் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" : படம் வெளியிடத் தடை!
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:47 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai, Adhikaalai Nawin, anjali, courtesy : adhikaalai.com, karan, Navanee, nawin seetharaman
September 26, 2011
Onam 2011 Chattanooga TN, USA : Kids 'Bollywood' Dance - www.adhikaalai.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:10 PM
0
comments (நெற்றிக்கண்)
September 13, 2011
Onam 2011 Chattanooga Tennessee, USA : 'Desi Girls' Kids dance
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:13 PM
0
comments (நெற்றிக்கண்)
August 21, 2011
Don't Pass It On - Short Film : www.adhikaalai.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:58 PM
0
comments (நெற்றிக்கண்)
July 20, 2011
தம்பி வெட்டோத்தி சுந்தரம் - பாடல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:22 AM
0
comments (நெற்றிக்கண்)
July 19, 2011
கரண் - அஞ்சலி நடித்த இயக்குனர் V.C.வடிவுடையானின் "தம்பி வெட்டோத்தி சுந்தரம்" பட ட்ரெய்லர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:09 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: anjali, balasingh, kanjakaruppu, karan, nawin seetharaman, thambi vettothi sundaram, trailer, tvs, v.c.vadivudaiyan
July 05, 2011
"தம்பி வெட்டோத்தி சுந்தரம்" "பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, Navanee, nawin seetharaman, thambi vettothi sundaram, v.c.vadivudaiyan
May 05, 2011
"அதிர்வு" இணையத்தை நடத்தும் கண்ணன் என்பவர் தமிழர்களின் எதிரிதான்!
யாழ்பாணம் குரும்பசிட்டியை சொந்த ஊராகக் கொண்டவரும், தற்போது லண்டனில் கணினித் துறையை சேர்ந்தவருமான சிவகணேசன் தில்லையம்பலம் (எ) கண்ணன் என்
கடைசி கட்ட போரின் போது உலக கவனத்தை ஈர்த்து லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் என்ற தமிழ் இளைஞனை, உண்ணாவிரதத்தின் போது 'பர்கர்' சாப்பிட்டார் என்று பணத்தை வாக்கிக் கொண்டு பெயர் தெரியாத சில ஆங்கில ஏடுகள் எழுதியவுடனேயே, கண்ணன் தன்னுடைய அதிர்வு இணையத்தில், தானே ஏதோ கண்டுபிடித்தது போல், இத்தனை டாலருக்கு பரமேஸ்வரன் பர்கரை மறைந்திருந்து சாப்பிட்டார் என்று செய்தி வெளியிட்டு உலகத் தமிழினத்துக்காக ஒரு சிறு தியாகம் புரிந்தவரை பற்றி தவறான செய்தியை பரப்பியது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரன், லண்டனில் உள்ள நீதித்துறையை நாடி, செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகத்தின் மீது பொய் குற்றச்சாட்டை எதிர் கொண்டு, கடைசியில் பரமேஸ்வரன் நேர்மையானவர் என்பதை நிருபித்தார். ஏதோ பாவம் தமிழராய் பிறந்துவிட்ட கண்ணன் மீது பரமேஸ்வரன் வழக்கு தொடுக்கப்படவில்லை. அன்று வழக்கு போட்டிருந்தால், தான் மறைமுகமாய் சிங்களத்திடம் பெற்ற அனைத்து பணத்தையும் இழந்திருப்பார். ஆனால், பரமேஸ்வரன் தற்போது தனக்கேன் வம்பு என தமிழர் பிரச்சனைகளிலிருந்து ஒதுக்கி வைத்ததில், கண்ணனின் பங்கு வெற்றி பெற்றது. புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....
தமிழகத்திலிருந்து வரும் நக்கீரனில் எழுதிய ஜெகத் கஸ்பர் என்ற திருட்டு சாமியார், உலகத் தமிழினத்திற்க துரோகம் இழைத்து வந்தபோது, உலக மக்களும் பல ஊடகங்கள் வழியேவும், பல அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் திருட்டு சாமியாரின் செயல்பாடுகள் தெரிந்த போதும், இவரைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியதினால், இவரை தாக்கி அந்த திருட்டு சாமியார் நக்கீரனில் 4 வரிகளை எழுதினார். இதை பயன்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொண்டவர்தான் இந்த திருட்டு அதிர்வு கண்ணன். புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....
கனடா நாட்டில் இப்போது வாழ்ந்து வரும் நக்கீரன் என்ற புனைப்பெயருடைய பெரியவர், வேலுபிள்ளை தங்க வேலு என்பவர், ஆரம்ப காலம் தொட்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய் இருந்து வருபவர். இன்று வயதாகி விட்டாலும், தான்னால் ஏதாவது ஈழ மண்ணிற்கு செய்ய இயலுமா என தேடித் தேடி எழுதியும், செயல்பட்டு வருபவர். அவருடைய அனுபவம் கூட இல்லாதா, கண்ணன், தன்னுடைய அதிர்வு இணையத்தில் தவறாய் எழுதினார். இந்த எழுத்தைப்பற்றி, முதிர்ந்த அந்த பெரியவர், ஒரு வார்த்தையை கூட பதிலாய் தரவில்லை. சரியாக குட்டை வைத்தார். புத்தியிருந்தால் அப்போதே கண்ணன் திருந்தி இருப்பார். ஆனால்....
தற்போது, கனடாவில் முதன் முறையாக இளைய சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், தன்னுடைய அதிர்வு இணையத்திற்கு செவ்வி வழங்கவில்லை என்றவுடன், தமிழர் என்றும் பாராமல், கேவலமாய் ராதிகா சீறிசபைஈசனைப் பற்றி எழுதியுள்ளார்.
இப்போது கே.பி என்ற சிங்கள அடிமையிடம் வேளை செய்து வரும் புலம் பெயர் துரோககளுடன் கண்ணன் கைகோர்த்துக் கொண்டு, அவர்களுக்கு சாதமான சூழலைப் பற்றி மெதுவாய் எழுத்தின் மூலம் ஊடூருவி எழுதி வருகிறார். தமிழகத்திலும் சில தமிழ் துரோகிகளோடு சேர்ந்து கொண்டு, தமிழகத்தில் உள்ளவர்களைப் பற்றியும் பொய்யை பரப்பியும் எழுதியும் வருகிறார்.
தமிழினம் பிளவுபட்டிருக்கும் சமயத்தில், நாம் அதிர்வைப்பற்றிய கட்டுரையை எழுத வேண்டாம், கண்ணன் திருந்தி விடுவார் என்று தப்பான கணக்கில் இருந்து விட்டோம். ஆனால், இவரின் சிங்கள முளையை உலகத் தமிழர்களிடம் காட்டியாக வேண்டிய சூழலை திரும்பவும் ஏற்படுத்தியானாலேயே இப்படியான ஒரு கட்டுரையை நாம் எழுதினோம். இப்படிப்பட்டவரை தமிழர்கள் முற்று முழுதாய் நிராகரிக்க வேண்டும். இவரின் முகத்திரை விரைவில் கிழியும் சமயம் வெகு தூரத்தில் இல்லை.
- வீரத்தமிழ்மகன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:34 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai, Adhikaalai Nawin, Navanee, nawin seetharaman
February 21, 2011
பூங்காத்து திரும்புமா? ஏம்பாட்ட விரும்புமா?
"மலேசியா வாசுதேவன் நலமாக உள்ளார்" என்ற செய்தியைக் கேட்டு ஆனந்தத்தில் கண்கள் கலங்கியதும், உடனே அந்த மாமனிதன் பாடிய, நானும் என் தந்தையும் சேர்ந்து கடைசியாகப் பார்த்த, என் தந்தைக்கும், கிட்டத்தட்ட அனைவருக்கும் பிடித்த "முதல் மரியாதை" படத்தின் "பூங்காத்து திரும்புமா" என்ற பாடலையும், "ஆகாய கங்கை" என்ற பாடலையும் உடனே திரும்பத் திரும்பக் கேட்டேன். அதனை என் தளத்தில் பிரசுரித்து என் சந்தோசத்தையும் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்தச் சந்தோசம் நிலைக்காமல், சில தினங்களிலேயே.... "பூங்காற்று திரும்புமா?" என்றாகிவிட்டது. அவர் குரலில் உள்ள கம்பீரமும், கொஞ்சலும் அப்பப்பா.... மனிதர் வில்லனாக நடிக்கும்போது அவர் குரலில் உள்ள நக்கலும், திமிறும்.... நேரில் பார்க்கும்போது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். சில ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்தபோது எந்தவித பந்தாவும் இல்லாமல் ஒரு குழந்தையாய் சிரித்துப் பேசியவர்... இன்று நம்மிடம் இல்லை. மனிதர் வாழ்க்கையில் நொந்து மன உளைச்சலுடன் இருந்தபோது இந்தத் திரையுலக பிரம்மாக்கள் எவரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. இன்று வரிந்துகட்டிக்கொண்டு வாய் கிழியப் பேசுகிறார்கள்.... என்ன உலகம்.... சாயம் பூசுபவர்கள் என்பதை நிச வாழ்விலும் நிரூபிக்கின்ற இந்தக் கூட்டத்தில் இல்லாமல் "ஆகாய கங்கை"யில் அந்த மாமனிதனின் புனிதமான ஆத்மா கலந்து போகட்டும்.- அதிகாலை நவின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:50 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: adhikaalai, Adhikaalai Nawin, Navanee, nawin seetharaman
February 03, 2011
அதிகாலையின் இன்றைய சூடான செய்திகள்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21728&Itemid=177
தனுஷ் - அனன்யா நடிக்கும் "சீடன்" ட்ரெய்லர் வெளியீடு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21721&Itemid=68
கவர்ச்சி நடிகை "சோனா" புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21729&Itemid=177
கவர்ச்சி நடிகை "கல்பனா பண்டிட்" புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21730&Itemid=177
2-G ஸ்பெக்ட்ரம் ஊழல் : முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கைது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21701&Itemid=54
காணொளி : கெய்ரோவில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் : முபாரக் பதவி விலக போராட்டம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21704&Itemid=56
சமீரா ரெட்டி "நடுநிசி நாய்கள்" புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21720&lang=ta&Itemid=177
பிப்ரவரி-தூங்கா நகரம், யுத்தம் செய், நடுநிசி நாய்கள் : மூன்று படங்கள் ரிலீஸ்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21719&lang=ta&Itemid=67
இசைஞானி இளையராஜாவின் இசையில் "அழகர்சாமியின் குதிரை"
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21707&Itemid=68
'அஞ்சலி' கிளாமர் புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21711&Itemid=177
மிக்ஸட் மிட்நைட் க்ஷிக்ஸ் கேலரி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21706&Itemid=177
சீமானுக்கு தாமரை எழுதிய கடிதத்திற்கான பதில் : நிலவரசு கண்ணன்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21695&Itemid=148
கவிஞர் மதுமிதாவின் "இரவு" புத்தக வெளியீடு : 'கலெக்டர் சாகாயம்' வெளியிட்டார்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21698&Itemid=185
இந்த வார இராசி பலன்கள் : 02-02-2011 முதல் 08-02-2011 வரை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21697&Itemid=75
நாம் ஃபவுண்டேஷன் - ரோட்டரி கிளப் இணைந்து ஆட்டோ வழங்கும் திட்டம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21710&Itemid=55
"அழகர்சாமியின் குதிரை" படத்தின் புகைப்படத்தொகுப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21708&Itemid=177
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, adhikaalai.com, Navanee, nawin seetharaman
November 02, 2010
அதிகாலையின் இன்றைய சூடான செய்திகள்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21060&Itemid=91
நல்ல சினிமா எடுப்பது 'தாய்மைப் போராட்டம்' மாதிரி : இயக்குனர் மிஷ்கின்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21075&Itemid=68
பாக்யாஞ்சலி நடிகர் வேலு மீது போலீசில் புகார் : வெளிவரும் திரை மர்மங்கள்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21073&Itemid=68
'சிங்கம் புலி' நாயகியின் வாந்திக்கு ஆர்யா பிரதர்தான் காரணமா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21072&Itemid=68
நடிகை ரீமா சென் : தொடரும் மர்ம நபர் யார்? காதலரா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21071&Itemid=68
நடிகை சினேகாவின் ஆண் நண்பர்கள் லிஸ்ட்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21067&Itemid=70
'வேலாயுதம்' கிராமத்து கேரக்டரில் கலக்கும் மும்பை நடிகை ஹன்சிகா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21066&Itemid=68
டைரக்டர் கொடுத்த டார்ச்சரில் 28 சிகரெட்டுகளை ஊதித்தள்ளிய உதட்டழகி நடிகை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21063&Itemid=68
ஐ.டி. ஜோக் : "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?" : நியாயமான ஒரு கேள்வி!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21062&Itemid=9
தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே! : கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21027&lang=ta&Itemid=163
உலக நாயகன் கமல்ஹாசனின் 'மன்மத அம்பு' பாடல்கள் 'லைவ் ரிலீஸ்'
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21041&Itemid=68
ரஜினியின் 'ஹரா' தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21039&Itemid=68
போராடும் புயல் நடிகை ஜெனிலியா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21038&Itemid=68
கோட்டி படத்தின் ஆடியோ ரிலீஸ்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21037&Itemid=68
நேற்று உமாசங்கர், இன்று சகாயம்; தமிழக அரசின் பழி வாங்கும் படலம் தொடர்கிறது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20947&lang=ta&Itemid=163
தபால் தலை வெளியீடுகளும் தமிழ்த் தலைவர்களும் : புதியமாதவி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21035&Itemid=185
விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் தேவையா? இது என்ன ராஜநீதியோ...?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20949&Itemid=148
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: courtesy : adhikaalai.com, Navanee, Nawin, nawin seetharaman
அதிகாலையின் இன்றைய சூடான செய்திகள்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21060&Itemid=91
நல்ல சினிமா எடுப்பது 'தாய்மைப் போராட்டம்' மாதிரி : இயக்குனர் மிஷ்கின்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21075&Itemid=68
பாக்யாஞ்சலி நடிகர் வேலு மீது போலீசில் புகார் : வெளிவரும் திரை மர்மங்கள்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21073&Itemid=68
'சிங்கம் புலி' நாயகியின் வாந்திக்கு ஆர்யா பிரதர்தான் காரணமா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21072&Itemid=68
நடிகை ரீமா சென் : தொடரும் மர்ம நபர் யார்? காதலரா?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21071&Itemid=68
நடிகை சினேகாவின் ஆண் நண்பர்கள் லிஸ்ட்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21067&Itemid=70
'வேலாயுதம்' கிராமத்து கேரக்டரில் கலக்கும் மும்பை நடிகை ஹன்சிகா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21066&Itemid=68
டைரக்டர் கொடுத்த டார்ச்சரில் 28 சிகரெட்டுகளை ஊதித்தள்ளிய உதட்டழகி நடிகை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21063&Itemid=68
ஐ.டி. ஜோக் : "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?" : நியாயமான ஒரு கேள்வி!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21062&Itemid=9
தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே! : கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21027&lang=ta&Itemid=163
உலக நாயகன் கமல்ஹாசனின் 'மன்மத அம்பு' பாடல்கள் 'லைவ் ரிலீஸ்'
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21041&Itemid=68
ரஜினியின் 'ஹரா' தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21039&Itemid=68
போராடும் புயல் நடிகை ஜெனிலியா
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21038&Itemid=68
கோட்டி படத்தின் ஆடியோ ரிலீஸ்!
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21037&Itemid=68
நேற்று உமாசங்கர், இன்று சகாயம்; தமிழக அரசின் பழி வாங்கும் படலம் தொடர்கிறது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20947&lang=ta&Itemid=163
தபால் தலை வெளியீடுகளும் தமிழ்த் தலைவர்களும் : புதியமாதவி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=21035&Itemid=185
விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் தேவையா? இது என்ன ராஜநீதியோ...?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20949&Itemid=148
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: courtesy : adhikaalai.com, Navanee, Nawin, nawin seetharaman
November 01, 2010
தமிழக அரசே! கலெக்டர் சகாயத்தை களங்கப்படுத்தாதே!:கிறிஸ்தவ மக்கள் கொந்தளிப்பு
மதம் தாண்டி, மனிதத்தை நேசிக்கும் மாமனிதர் கலெக்டர் சகாயம்
03.10.2010 தேதியிட்ட ‘நம் வாழ்வு’ வார இதழில் “காந்தியின் மனசாட்சி” என்று தலைப்பிடப்பட்டு வெளிவந்த பேட்டி ஒன்றை வாசித்தேன். அது 5 பக்கங்களில் விரிந்திருந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.உ.சகாயம்,I.A.S., அவர்களின் மனந்திறந்த அந்தப் பேட்டி என் மனதைத் தொட்டது. முக்கியமான அரசுப் பணியில் இருக்கும் ஒருவர் இந்தக் காலத்திலும் இவ்வளவு நேர்மையாகவும், இத்துணைத் துணிச்சலோடும், தெளிவோடும், தீர்க்கமாகவும், அடித்தட்டு மக்களிடம் ஆத்மார்த்தமான பாசத்தோடும். கரிசனையோடும் இருக்க முடியுமா என்று ஆனந்த ஆச்சரியப்பட்டேன். எப்படியாவது இவருக்கு நான்கு வரி எழுதிப்போட்டுப் பாராட்ட வேண்டுமென எண்ணிக்கொண்டிருந்தேன்.
கடந்த இரு ஆண்டுகளாக அரசுத் திட்டங்களையும், சிறப்புத் திட்டங்களையும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டுவந்துசேர்த்து எங்
கள் மாவட்ட நலனுக்காக நேர்மையாகப் பாடுபட்ட எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு உ.சகாயம் அவர்களை, இன்னும் ஒரு ஆண்டு பணிக்காலம் இருக்கும் நிலையில் திடீரெனப் பணி மாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பது சிறுபான்மை இனத்தவர் மனதைப் புண்படுத்துவதாகவும், நாமக்கல் மாவட்ட நலனுக்கு முரண்பட்டதாகவும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கப் பாடபடும் அனைத்து சமூக நல ஆர்வலர்கள் உள்ளத்தையும் நோகடிப்பதாகவும் உள்ளது.எனவே, சிறுபான்மை இன நலனில் அக்கறையும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் தமிழக அரசு மேற்கண்ட மாறுதல் உத்தரவை இரத்துசெய்து ஆணை வழங்க வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
அன்பு குடிமக்கள், ஊர்ப் பொதுமக்கள், நாமக்கல் டவுன்பகுதி.
இது ஒரு சாம்பில்.
அடுத்து வருவது ஒரு நீண்ட, பணிகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு.
இவர் பொறுப்பேற்ற பின் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், கிராமப்புற மக்கள் மிகவும் முன்னேறி உள்ளனர். மாவட்ட ஆட்சியரை நாம் எளிதில் அணுக முடியும், ஏன், மாவட்ட ஆட்சித் தலைவரைத் தங்கள் கிராமத்திலேயே, தாங்கள் இருக்கும் இடத்திலேயே மக்கள் சந்திக்க முடியும். மக்கள் தங்கள் குறைகளை உடனே தீர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பல்வேறு பணிகளை மக்களோடு இணைந்து செயல்படுத்தினார். இப்படி மக்கள் நலனுக்காக அரும்பாடுபட்ட மக்கள் நல அதிகாரி திரு. உ. சகாயம் அவர்களை தமிழக அரசு எந்த வித முகாந்திரமுமின்றி, மக்கள் எண்ணத்திற்கு எதிராக, உடனடி மாறுதல் செய்திருப்பதை, அதுவும் அவர் பயிற்சிக்குச் சென்ற நேரம் பார்த்து மாறுதல் செய்துள்ளதை நாமக்கல் மக்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் திரு.உ.சகாயம் அவர்களின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்பட்டுவரும் திட்டங்கள்
1. கிராம நிர்வாக அலுவலர்கள் அரசு விதிப்படி அந்தந்தக் கிராமத்திலேயே தங்குவதை உறுதி செய்தல்.
2. நாமக்கல் மாவட்டத்தில் மரம் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி, ஒரு கோடி மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 15 இலட்சம் மரங்களை நட்டுச் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தார். “கட்டிடங்களுக்கு நடுவே கானகம்” என்ற திட்டம் இவரின் சீரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு.
3. மக்கள் குறைதீர்க்க ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று நாள் முழுக்கக் காத்திருக்கும் நிலையை மாற்றி, ஆங்காங்கு அமைக்கப்பட்டிருக்கும் கணினி மூலம் ஆட்சித் தலைவருக்கு மின் அஞ்சலில் புகார் அனுப்பி, தீர்வு காணும் திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக அமல்படுத்தினார். “தொடுவானம்” என்ற பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, உலக மக்களின் கவனத்தையே ஈர்த்தது.
4. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராம புறத்திற்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களோடு, அதிகாரிகளோடு தங்கி மக்களின் குறைகளைத் தீர்த்தார். கிராமப் புறங்கள் இந்நாட்டின் முதுகெலும்பு. கிராம மக்கள் இந்நாட்டின் கண்கள் என்பதை அங்கீகரித்தார். விவசாயிகளுக்காக விவசாயிகள் குறைதீர்க்கும் தினத்தைக் கிராமத்திலேயே நடத்திச் சாதனை புரிந்தார்.
5. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயல்பட்டார். சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மூலமும் இடைத் தேர்வுகள் மூலமும், சிறந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதன் மூலமும் அரசுப் பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறச் செய்தார். எழை மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்.
6. மாவட்ட நிர்வாகத்தின் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க அரும்பாடுபட்டார். இலஞ்சத்திற்கு அப்பாற்பட்டவராக, தலைநிமிர்ந்து நின்றார். ஊழல் புரிந்த அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தார். மக்கள் வரிப் பணத்தை யாரும் சுரண்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
7. நுகர்வோர் பாதுகாப்பு கருதி, உணவுக் கலப்படம், போலி மருந்துகள், அதிக கல்விக் கட்டண வசூல் ஆகியவற்றைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
8. கிராமத்தில் தங்கிப் பணிபுரியாத, மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களைப் பணி நீக்கம் செய்து, மக்கள் நலனை உயர்த்திப்பிடித்தார். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக மாநில அளவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்த சவாலைத் தயக்கமின்றிச் சந்தித்தார்.
9. விவசாய உற்பத்திப் பொருள்களை விவசாயிகள் உரிய விலைக்கு விற்க முடியாமல் வறுமையில் வாடுவதை உணர்ந்து “உழவர் உணவகம்” என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைச்சலை உணவுப் பொருள்களாக மாற்றி விற்க ஏற்பாடுசெய்து, ஒவ்வொரு விவசாயியும் ஒரு நாளுக்கு ரூ.450/- முதல் ரூ.750/- வரை இலாபம் ஈட்டும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்.
10. அரசு ஊழியர்கள், குறிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நீதிபதிகள் தங்களுடைய சொத்துக்களை வெளியிடுவது குறித்து அதிகாரிகள் தயக்கம் காட்டிய நிலையில், தானாக முன்வந்து, தன் சொத்துக்களை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. உ. சகாயம் அவர்கள்.
11. நாமக்கல் மாவட்ட வெப்சைட்டில் நிர்வாகம் குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளியிட்டு, ஜனநாயக நாட்டில் வெளிப்படைத் தன்மை மிகவும் முக்கியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர்.
12. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னுடைய பெயர், பட்டியலில் எந்த வரிசை எண்ணில் இருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உறுதி செய்தவர்.
13. தான் பணிசெய்த ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி, சவால்களைச் சந்தித்துவருபவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே பெப்சி நிறுவனத்தைக் காஞ்சிபுரத்தில், நுகர்வோர் விரோதமாகச் செயல்பட்டதற்காக, இழுத்து மூடி சீல் வைத்தவர்.
14. அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இடைத்தரகர் இன்றி, முழுமையாக மக்களைச் சென்றடையச் செய்தார். ஊரக வேலை உத்திரவாதத் திட்டம், பொது விநியோகத் திட்டம், பேரிடர் நிர்வாகம், தகவல்பெறும் உரிமை ஆகிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இவருக்கு நிகர் இவரே.
15. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப் பிரதேசங்களையும் அங்கு வாழும் ஆதிவாசி மக்களையும் மாவட்ட நிர்வாகத்தின் தனிக்கவனத்திற்குக் கொண்டு வந்தவர். புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு நலத் திட்டங்களை முறையாக அமல்படுத்தினார்; கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரிக்குக் கொல்லிமலையில் விழா எடுக்கச் செய்தவர்.
16. மாற்றுத் திறனாளிகளின் நலனுக்குத் தனிக் கவனம் செலுத்தி, அரசின் கொள்கைப்படி மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு, சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு சலுகைகள் எளிமையாகச் சென்றடையச் செய்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு “ஊன்றுகோல் திட்டம்” என்ற ஒன்றைக் கொண்டுவந்து முன்மாதிரியாகத் தானே ஒரு மாற்றுத் திறனாளியைத் தத்து எடுத்து எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்ததைத் தொலைக்காட்சிகூட வியந்து பாராட்டியது.
17. முதியவர் பாதுகாப்பிற்காகச் சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கிராமப் புறங்களில் பல முதியோர்கள் வயோதிக நிலையில் தம் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு, உணவின்றி, உறைவிடமின்றி இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களில் பலருக்கு மறுவாழ்வளித்தவர். இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்த முதல் மாவட்ட ஆட்சியரும் இவரே!
18. மாவட்டத்தின் ‘கிராம குறைதீர் மன்றம்’ அமைத்து, பல்லாண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து, சத்தமில்லாமல் சாதனை புரிந்தவர்!
19. தமிழ் மீது அதிகப் பற்றுக்கொண்ட நம் ஆட்சியர் இவர் மனுக்களைக்கூடத் தமிழில் தரவும், கையொப்பத்தை அழகுத் தமிழில் எழுத வேண்டுமென்றும் பொதுமக்களை ஊக்கப்படுத்தியவர்.
20. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாவட்டத்தில் மக்களோடு உரையாடி, குறைகளைத் தீர்த்த எளிமையான ஆட்சித் தலைவர்.
அருட்திரு மரிவளவன் S.J.
Fr. Marivalan,S.J
National Director Apostleship of Prayer
Beschi Illam, Karur Road,
Dindigul - 624 001, India
நன்றி : திரு இருதய தூதன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:22 PM
2
comments (நெற்றிக்கண்)
Labels: courtesy : adhikaalai.com, Navanee, nawin seetharaman
October 22, 2010
காணொலி : மகிந்தவுக்கு ஆப்புவைத்த அமெரிக்க தமிழ் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்
நாட்டை இணைத்த நல்ல ஜனாதிபதி என ஆரம்பித்த வரவேற்புரை, சிறிது சிறித்தாக போரையும், தமிழர்கள் படும் அவஸ்தையையும் விவரித்தன. அமெரிக்கர்களும், வேற்றின மக்கள் பலரும் கலந்துகொண்ட இன் நிகழ்வில், அவர் உரையை நிறுத்தமுடியாமல் ஏற்பாட்டாளர்கள் திண்டாடியதாக அறியப்படுகிறது. அவரை மேடைக்கு அழைக்கும்போது, ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கிறோம் என்று கூறி அழைத்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்கள். இருப்பினும் வரவேற்புரையை ஜோர்ஜ் வில்லி நீண்டநேரமாக உரையாற்றி தான் சொல்லவந்த அனைத்தையும் சொல்லிவிட்டுத் தான் சென்றுள்ளார்.
ஒரு கட்டத்தில், துட்டகைமுணுவுக்கு ஒப்பாக ஜனாதிபதியை ஒப்பிட்ட ஜோர்ஜ் வில்லி, துட்டகைமுணு, எல்லாளனை போரில் வென்றாலும் பலமான எதிரியை வீழ்த்தியமைக்காவும், எல்லாளன் வீரத்தைப் பாராட்டியும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்ததையும் நினைவு கூர்ந்தார், ஒரு கணம் எங்கே இவர் விடுதலைப் புலிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்கச் சொல்லிவிடுவாரோ என பலர் திகைப்பில் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. 1958ம் ஆண்டு கலவரம், பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு சம ஒதுக்கீடு என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதையை மிகுந்த சங்கடத்தில் இவர் ஆழ்த்தியதை எவராலும் மறுக்கமுடியாது.
மேடையில் அமர்ந்திருந்த ஜனாதிபதி விழா ஏற்ப்பாட்டாளரை அடிக்கடி உத்துப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். கடைசியாக இனி பள்ளி செல்லும் தமிழ் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் இரத்தம் படியக்கூடாது, நீங்கள் ஒரு பிரபாகரனை வென்றிருக்கலாம், ஆனால் அது போல பலர் தோன்றலாம், அவர்கள் அவ்வாறு தோன்றுவதும் தோன்றாமல் இருப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என அவர் பேசிமுடிக்க , என்ன நடந்தது என சற்றும் புரியாமல், அமெரிக்கர்களும், வேற்றின மக்களும் எழுந்து நின்று கைதட்டியதே மிகக் கொடுமையான விடையமாக ஜனாதிபதிக்கு இருந்தது. அசடுவழியும் முகத்தை ஒருவாறு சீர்திருத்திக்கொண்டு, மற்றைய நிகழ்ச்சிகளுக்கு நகர்ந்தார் ஜனாதிபதி. இருந்தாலும் அவர் இந்த அவமானத்தை இலகுவில் மறக்கப்போவது இல்லை.
விழா முடிவில் யாரை எல்லாம் திட்டித் தீர்த்தாரோ தெரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா அவருக்கு பல அவமரியாதைகளை கொடுத்த நாடாக அமைந்துவிட்டது.... முழத்திற்கு முழம் தனது உரையில் "யுவர் எக்சலன்ஸி"( மாண்புமிகு) "யுவர் எக்சலன்ஸி" your excellency என்று ஜோர்ஜ் வில்லி கதைத்ததால், மகிந்த அவர் என்ன கதைக்கிறார் என்பதைக் கூட விரைவாக சுதாரித்துக்கொள்ளவில்லை !
அமெரிக்க செனட்டர், ஜனாதிபதி மகிந்த, புத்திஜீவிகள், கல்விமான்கள், வேற்றின மக்கள் என பலர் கலந்துகொண்ட இவ் விழாவில் மிகத் துணிச்சலாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ஜோர்ஜ் வில்லி அவர்களை நாம் பாராட்டாமல் இருக்கவே முடியாது. இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல என்பார்களோ ????
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20954&Itemid=63
Courtesy : Athirvu
நேற்று உமாசங்கர், இன்று சகாயம்; தமிழக அரசின் பழி வாங்கும் படலம் தொடர்கிறது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20947&lang=ta&Itemid=163
காணொலி : மகிந்தவுக்கு ஆப்புவைத்த அமெரிக்க தமிழ் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20954&Itemid=63
விடுதலைப்புலிகள் மீதான தடை இன்னும் தேவையா? இது என்ன ராஜநீதியோ...?
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20949&Itemid=148
கள்ளக்காதல் விவகாரத்திற்கு கவுன்சிலிங் செய்யும் கோலிவுட்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20940&Itemid=70
'சுப்ரமணியபுரம்' சசிகுமாரின் அடுத்த படம் "ஈசன்"
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20952&Itemid=68
கலைஞரின் "இளைஞன்" ஓரு வரலாற்றுப் படம் : விரைவில் திரைக்கு வருகிறது
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20953&Itemid=68
கே.பி. மீதான அடிப்படை விசாரணை இன்னும் பூர்த்தியடையவில்லை : இலங்கை
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20934&Itemid=91
திருமாவளவன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வாரா? : கார்த்தி சிதம்பரம் ஆவேசம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20932&Itemid=55
சென்னை, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா : பிரதமர் மன்மோகன் சிங் திறப்பு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20930&Itemid=55
கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் மருத்துவமனையில் அனுமதி
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20927&Itemid=54
2011-ல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பாகிஸ்தான் பயணம்
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20924&Itemid=56
காஷ்மீர், தீவிரவாதிகளுடன் 10 மணி நேர கடும்போர் முடிவு : 2 தீவிரவாதிகள் சாவு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20922&Itemid=54
பிகார் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் : 53 சதவீத வாக்குகள் பதிவு
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=20920&Itemid=54
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:57 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Adhikaalai Nawin, courtesy : adhikaalai.com, Navanee

