December 20, 2007

நம் தேசியக்கொடியும், தேசியகீதமும் மங்கையரின் உள்ளாடைக்குள்!

குஷ்புக்கு பழநி கோர்ட் நோட்டீஸ் : சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை குஷ்பு, முப்பெரும் தேவியர் சிலை அருகே காலணி அணிந்து உட்கார்ந்திருந்த போட்டோ பத்திரிகைகளில் வெளியானது. இச்செயலை கண்டித்து இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் பல ஊர்களில் உள்ள கோர்ட்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஆயக்குடியை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் சார்பில் வக்கீல் தினேஷ் குமார் பழநி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில்,"பட விழாவின் போது தெய்வ உருவங்களுக்கு முன் காலணி அணிந்து கால்மேல் கால்போட்டு குஷ்பு உட்கார்ந்தது, வழிபாட்டுக்குரிய தெய்வ உருவங்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இந்திய தண்டனை சட்டப்பட்டி இது குற்றமாகும். இதுகுறித்து அவரை விசாரிக்க வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட் சசிகலா பிப் 28-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய குஷ்புவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
எல்லாம் சரிதான். சந்தோசம்தான். இந்தக் கொடுமைக்கு நாம் யாரிடம் போய் முட்டிக்கொள்வது?





















நமது தேசியக்கொடியும், தேசிய கீதமும், இந்துக்கடவுள்களும் பெண்களின் உள்ளாடைக்குள் சென்றுவிட்டதே! இதை நாம் எண்ண செய்யப் போகிறோம். கீழ்க்காணும் இணைப்பில் சென்று பார்த்தால் நண்பர்களுக்கு உண்மை விளங்கும். இதற்கு எத்தனை பேர் போர்க்கொடி தூக்கப்போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.....இந்த இணைப்பில் சென்று பார்ப்பதைக்கூட அவர்கள் வியாபாரத்திற்கான விளம்பர உத்தியாகவே எடுத்துக்கொள்வர் என நினைக்கிறேன். ஒன்று மட்டும் தெளிவாகப்புரிகிறது. நாம் குரல் எழுப்பவேண்டிய எத்தனையோ பிரச்சினைகளை விட்டுவிட்டு பிரயோஜனமில்லாதவைகளுக்காக பிதற்றிக்கொண்டிருக்கிறோம்......
இந்த மாதிரியான அநாகரீகமானவற்றை எதிர்த்து ஒவ்வொருவரும் குரல்கொடுக்கவேண்டும்.... http://www.cafepress.com/buy/hindu/-/pv_design_prod/pg_6/p_storeid.45451248/pNo_45451248/id_10795115/opt_/fpt______________D/c_70

1 comment:

Veera said...

எங்கேயோ இருக்குற குப்பம்மா, செருப்பு என்ன, தண்ணி(!) போட்டுட்டு கூட கோவிலுக்கு போகலாம். ஆனா அவங்கள எல்லாம் இவங்க எதிர்க்க மாட்டாங்க!! விளம்பரம் கிடைக்காதே.. ஆனா குஷ்புவ எதுத்தா ஈஸியா விளம்பரம் கிடைச்சிடுமே!!