July 21, 2007

நாலடியார்

1. அறத்துப்பால்

1.8. சினம் இன்மை

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - ஈர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு

- சமண முனிவர்கள்


தமிழ் விளக்கவுரை

வெறி பிடித்த நாய் தன்னைக் கடித்துவிட்டால், அதைத் திருப்பிக் கடிப்பார் யாருமில்லை. அது போல சீரிய குணம் இல்லாதவர்கள், தீய வார்தைகளைத் தன்மீது உபயோகித்தால், கற்று உணர்ந்த பெரியவர்கள் அதே வார்தைகளைத் தம் வயால் அவர் மீது சொல்லமாட்டார்கள்


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை

Placidity
There is none here who, though they see a dog snap angrily at them, will in return snap at the dog again with their mouth. When base born persons mischievously utter base things, will the noble repeat such words with their mouths in return?

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

July 20, 2007

மனத்தின் சமநிலையோடு, மனக் கொந்தளிப்பைச் சாட்சியாக விலகி நின்று எழுத்தாளன் பார்க்கக் கற்றுக் கொள்ளவேண்டும்

- பிரபஞ்சன்

இன்றைய குறள்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று


பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

July 19, 2007

வரலாற்றின் நீண்ட சரித்திரத்தில் வன்முறையுடன் எந்த ஒரு நாடு மீதும் படை எடுக்காத ஒரே நாடு இந்தியா தான் என்பது உண்மை


- சுவாமி விவேகானந்தர்

"வேதாந்த் பரத்வாஜ்" இளம் இசைக்கலைஞர் பகுதி 3

இன்றைய குறள்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்போரின் நோன்மை உடைத்து


தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்


அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

பாடல் இயற்றுபவரைப் பாடலாசிரியர் என்போம். பாடுபவரைப் பாடகர் என்போம். படத்தை இயக்குபவரை இயக்குனர் என்போம். படத்தில் நடிப்பவரை நடிகர் என்போம். படத்தில் நடனமாடுபவரை, நடனக் கலைஞர் என அழைப்போம். சாதாரணமாக ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் சிறந்த புலமை பெற்றிருப்பது வழக்கம். அபூர்வமாகச் சிலர் தம்முள் பன்முகத் திறனை வளர்த்துக் கொண்டு அஷ்டவதானியாகவும், சதாவதானியாகவும் திகழ்வதுண்டு. மனோரஞ்சித மலர் யார் எந்தப் பழத்தை நினைத்துக் கொண்டு முகர்ந்தாலும் அந்த மணத்தை அளிப்பதாகச் சொல்வார்கள். தொடர்ந்து படிக்க இணைப்பில் செல்க
Tamil movie links presenting cinema news,movie reviews,song reviews,actors,actresses&pictures

July 18, 2007

திரு.யாழ் சுதாகர் அவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. அவர், தான் வானொலி அறிவிப்பாளராக இருந்தபோது நடந்தவைகளையும், அனுபவங்களையும் அழகாகப் பாடல்களோடு தொகுத்து வழங்கியிருக்கிறார். நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
Get this widget | Share | Track details

இன்றைய குறள்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை

நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்

அறத்துப்பால் : இல்லறவியல்

"இந்திய விடுதலைக்காகப் பிசாசின் உதவியைப் பெற வேண்டியிருந்தால் கூட நான் அதனோடு பேசுவேன்"

- நேதாஜி

தமிழோசை

இன்றைய (ஜுலை 18 புதன்கிழமை) "BBC" செய்திகள் கேட்கக் கீழுள்ள இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

வேதாந்த் பரத்வாஜ் இசைக்கலைஞர் பகுதி 2

July 17, 2007

எழுத்தாளனுக்குக் கொந்தளிப்புத் தேவைதான், ஆனால் அந்தக் கொந்தளிப்பிலேயே அவன் ஆழ்ந்துவிட்டால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது

- பிரபஞ்சன்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.7. சினம் இன்மை

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து



- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை


சினத்துடன் கூடிய சுட்டெரிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய ஒருவனை, அந்தச் சினமே சுட்டெரிந்து கொல்லுவதால், கற்றுணர்ந்த பெரியவர்கள் அப்படிப்பட்ட வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள்

- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Placidity

As the angry words which a man speaks, opening his mouth unguardedly, continually burn him, so those who possess that knowledge which arises from oral instruction and incessant search after truth will never be angry and utter burning words of fury.

Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

இன்றைய குறள்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது

அறத்துப்பால் : இல்லறவியல்

தமிழோசை

இலங்கையில் தற்போதைய உள் நாட்டு நிலைமைகள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் போர், அதனைத்தொடர்ந்த மக்களின் இடப்பெயர்வுகள், சமாதான முயற்சிகள், அதில் திருச்சபையின் பங்கு ஆகியவை உட்பட பலவிதமான விடயங்கள் குறித்து கத்தோலிக்க ஆயர் வணக்கத்துக்குரிய கிங்ஸிலி சுவாம்பிள்ளை "BBC" க்கு செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார். கேட்க இணைப்பில் செல்க, BBCTamil.com மேலும் இன்றைய (ஜுலை 17 செவ்வாய்க்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

கண்ணுக்குக் கண் -- பல்லுக்குப் பல்

இளம் இசைக்கலைஞர் வேதாந்த் பரத்வாஜ்

July 16, 2007

"நிலாச்சாரல்" இணைய சஞ்சிகைக்காக திருமதி.ரஜினி அவர்களுடன் நான் கண்ட நேர்முகம்

இந்தியப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆப்பிரிக்கர்களுக்கு இந்தியர்களை மிகவும் பிடித்திருக்கிறது, காந்திஜி, நெல்சன் மண்டேலா போன்ற சுதந்திர உணர்வளித்தவர்களின் நினைவுகளோடு இந்தியர்களை அணுகுகிறார்கள்.

இந்தியாவில் காணப்படும் விருந்தோம்பல் எங்கும் காணக் கிடைக்கவில்லை. கலாசாரம், பண்பாடு, ஆன்மீக வளம் காரணத்தால் பிரமிக்க வைப்பது இந்தியா, இந்தியா..... இந்தியாதான்....

தொடர்ந்து படிக்க கீழுள்ள இணைப்பில் செல்க.Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

தமிழோசை

இன்றைய (ஜுலை 16 திங்கட்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான தேர்தல் பற்றிய ஆய்வு : பகுதி 1

சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான தேர்தல் பற்றிய ஆய்வு : பகுதி 2

"தோல்வியே இலக்கு"

(Go for No)
"வாழ்க்கை என்பது வியாபாரம்"
கண்ணதாசன் தத்துவம், கூர்ந்து கவனித்தால் நாம் ஒவ்வொருவரும் நம்மை வணிகம், அதாவது வியாபாரம் செய்துகொண்டுதானிருக்கிறோம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெருகிறோம். பண்டமாற்று முறை தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கைத் தத்துவமே அதுதான். நாம் நம்மை வியாபாரி என்பதை ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, லாபம், வெற்றி, சாதனை எல்லாமே நம்முடைய தோல்வி, இழப்பு, உழைப்பு ஆகியவற்றைக் கொடுத்து அதற்குப் பதிலாக நாம் பெற்றதுதான். தொடர்ந்து நான் நிலாச்சாரலுக்காக எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கத்தைப் படிக்க இணைப்பை அழுத்தவும். தங்களின் மேலான கருத்துக்களை "நிலாச்சாரல்" வாயிலாக வரவேற்கிறேன். Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

இன்றைய குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

இல்வாழ்க்கை பண்புடையதாகவும், பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை

அறத்துப்பால் : இல்லறவியல்

நமது தேசம் முழுமையான வளர்ச்சி அடையாததற்குக் காரணம், ஆண்கள், பெண்களுக்கு முழுமையான வாழ்க்கையை அளிக்காததுதான். பெண்களுக்கு முழுமையான வாழ்க்கை அளிக்காததால் ஆண்களின் வாழ்க்கையும் முழுமை அடையவில்லை
- பிரபஞ்சன்

July 15, 2007

"கறுப்பு தினம்"

எத்தனை அப்துல் கலாம்,
எத்தனை அன்னைத் தெரெசா,
எத்தனை காந்தி மகான்,
எத்தனை இந்திரா காந்தி,
எத்தனை விவேகானந்தர்,
எத்தனை ஆல்வா எடிசன்,
எத்தனை ஜான்சிராணி,
எத்தனை பாரதி,
எத்தனை பகத்சிங்??

கருகிப்போயினரோ??

கருவுக்குள் இருக்கும் போதே காலம்
கருக்கிவிட்டதே
அந்தக் கருப்புத் தினத்தை
கண்களை விட்டும் இதயத்தை விட்டும்
என்றென்றும் அழிக்க முடியாத நாள்.
இந்த நாள் இனி வேண்டாம்!
என் இளைய சமுதாயமே!
எத்தனை ஏக்கங்கள்! லட்சியங்கள்!
இவையத்தனையும் உங்களோடு
சேர்ந்தே பொசுங்கி விட்டதே!
உங்களின் மறைவால் எனது பாரதம்
முன்னேற்றத்தில் பத்தாண்டுகள் தள்ளிப் போனதே! வேண்டாம் இந்த விபரீதம்!
இனியும் வேண்டாம்!
அஞ்சலி செலுத்தவேண்டாம் இந்த ஆத்மாக்களுக்கு!
ஒரு சொட்டுக்கண்ணீர் விடுங்கள்
அவையனைத்தும் சேர்ந்துபோய்
அந்தக் கொடூரத் தீயை அணைக்கட்டும். பச்சிழங்குழந்தையைத் தாயின்
கையைவிட்டுப் பறித்துக் கண்முன்னே நெருப்பில் தூக்கியெறிந்த இயற்கையின் கொடூரம் என்றுமே இப்பாருக்கு வேண்டாம்.
கண்ணீருடன் கடந்தபோன ஆண்டுகளின்
இதே நாளை நினைவலைகளை நிறுத்தி….

தமிழோசை

இன்றைய (ஜுலை 15 ஞாயிற்றுக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே க்ளிக் செய்க
BBCTamil.com Radio Player

Kumaraswamy Kamaraj - Karma Veerar

15 July 1903 - 2 October 1975

" சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார், பொருள் நாடார், தான் பிறந்த
அன்னையையும் நாடார், ஆசைதனை நாடார்,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்"

கண்ணதாசன்

"Sensible comedy is the key to my success"


Y.Gee.Mahendra

திரையுலகம், சின்னத்திரை மட்டுமல்லாது நாடக உலகத்திலும் கிட்டத்தட்ட 55 வருடங்களாகக் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் திரு.ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் அமெரிக்கா வந்திருந்தபோது அவரோடு பகிர்ந்துகொண்ட வானொலி நேர்முகம். எனக்கு மிகவும் நல்லதொரு பரிச்சையமான மனிதர். ஒருமுறை நான் அப்போதிருந்த ஜே.ஜே.தொலைக்காட்சி (இப்போதைய ஜெயாத் தொலைக்காட்சி) நிகழ்ச்சியொன்றில் நண்பர்களோடு சேர்ந்து நடிக்கும்போது நடுவராக வந்திருந்த திரு.ஒய்.ஜி.மகேந்திரன் என்னை மிகவும் பாராட்டி, அவரது அலுவலகத்தில் வந்து சந்திக்கச் சொன்னார். காரணம் நான் எடுத்துக்கொண்ட பாத்திரமே அவருடைய "இரகசியம் பரம இரகசியம்" என்றதொரு நாடகத்தில் உள்ள நகைச்சுவைக் காட்சிகள்தான். சினிமாவில் உள்ளவற்றைப் பிரதிபலிப்பதுதான் வழக்கம். 1996-1997 ல் தொலைக்காட்சிகள் இன்றைய அளவுக்கு பிரபலமாகாத நேரம் ஆதலால் நான் இவரது நாடகத்திலுள்ள காட்சிகளை நடித்து கைதட்டு வாங்கியதால், பிரமித்துப்போய் என்னை வாரியணைத்துக்கொண்டார். பிறகு நானும் பலமுறைச் சந்தித்திருக்கிறேன், அவரால் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடித்த நாட்களை இன்றும் நினைவுகூர்ந்து பார்க்கிறேன். மிகவும் ஒரு நல்ல மனிதர். நிஜத்திலும் இவர் ஒரு நகைச்சுவையான மனிதர். இவரின் அலுவலகத்திற்கு யார் எப்போது போனாலும் விருந்துபசரிப்பு உண்டு. பிறகு நான் தொடர்ந்து சந்திக்க வாய்ப்புக்களில்லை. இவரின் மகளும் இவரும் சேர்ந்து நடத்திய ஒரு நிகழ்ச்சியில்கூட நான் பொதிகைத் தொலைக்காட்சியில் பங்கேற்று பரிசு பெற்றேன். எவ்வளவு உயரத்தில் சென்றாலும், நகைச்சுவையுணர்வோடும், எளிமையோடும் பழகக் கூடிய எத்தனையோ திரையுலக நண்பர்களில் திரு.ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர் என்பதை மகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இனி தொடர்ந்து அவரது பேட்டியைக் கவனிப்போம். உடன் உரையாடுபவர் KZSU பண்பலை வானொலிக்காக எனது நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள்.

Powered by eSnips.com

இன்றைய குறள்

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல


பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது


அறத்துப்பால் : இல்லறவியல்

* பிறரைக் கஷ்டப்படுத்தித் தான் சுகமடைய விரும்புபவன், மனம் என்ற விலங்கிடம் சிக்கி, விடுதலை அடைய முடியாதவனாகி விடுகிறான். சுகமாக வாழ வேண்டிய ஜீவன்களை வதைப்பவன், சாவிற்குப் பிறகு கூட நலம் பெறுவதில்லை


- புத்தர்

மனிதனால் முடியாததென்று ஒன்றுமேயில்லை

மனிதனால் முடியாததென்று ஒன்றுமேயில்லை

July 14, 2007

ஹரிஹரன் பாடல்கள் கேட்க ப்ளேயரை இயக்கவும்

Powered by eSnips.com

இன்றைய குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை


வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடைமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாகும்


அறத்துப்பால் : இல்லறவியல்

'ஒரு வீழ்ச்சி ஏற்பட்டால், அதைத் திருத்தி மீண்டும் உற்சாகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்த வீழ்ச்சி, மீண்டும் அதுபோல் ஏற்படாமல், அதிக கவனமாக இருப்பதற்காக ஏற்பட்டது என்று கருத வேண்டும். நடந்து முடிந்தவற்றைக் குறித்து வருந்துவதால் பயனில்லை. காயம்பட்ட இடத்தைப் பார்த்து அழுது கொண்டிருப்பதில் பொருளில்லை. அதற்கு மருந்து போடுவது தான் முக்கியம்'
- அமிர்தானந்தமயி

வெட்டிவேர் வாசம்

வெட்டிவேரின் பிரமாண்ட தோற்றம்
இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும், 10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும். இதில் கவனிக்கப் படவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண்??? எனவே மண் அரிப்பை தடுப்பது நமது கடமைகளில் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு இன்று உலகம் முழுவதும் ஒரு புல்லையே நம்பியுள்ளது. அது நம் நாட்டின் ''வெட்டிவேர்'' என்றால் பலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால் உண்மை அதுதான்.


நம்மிடம் அறியப்பட்டு இன்று ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மடகாஸ்கர் நாட்டில் 2000ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக அவர்களின் 1,00,000 பேர் பயன்படுத்தும் ரயில்பாதை சுமார் 280 மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டது. ஆனால் வெட்டிவேரின் உதவியால் அது சீராக்கப்பட்டு இன்று தடையின்றி ஓடுகிறது. விவசாயம் வளர்ந்து சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. அதன் PDF காட்சியை இங்கே காணுங்கள்.
சுற்றுலாவிற்கு பெயர் போன நமது மலையரசி '' நீலகிரி '' ஒவ்வொரு மழையின் போதும் நிலசரிவுகளால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நாமும் வெட்டிவேரின் உதவியால் தீர்வு காணலாமே. இதை பார்த்துவிட்டு உங்கள் விவசாய நண்பர்களுக்கு ஆலோசனை கூறுங்கள்.

தமிழோசை

இன்றைய (ஜுலை 14 சனிக்கிழமை) 'BBC' செய்திகள் கேட்க இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்

இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார். பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது.மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்களால் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார். அப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும். அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும். -தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள் (Legal assistance) கொடுக்கப்படவில்லை. றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Chacking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் (அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை. மூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக் குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.
அன்னிய நாடுகளில் கொடுமை செய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
500,000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள். தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப் பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை. அதாவது வேலைக்குப் போகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப் போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப் போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை. இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.
இந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது' வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப் பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப் பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது. இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப் பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது. நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது. றிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் (33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும். ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982) படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம்.

வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப்பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள். இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும். இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும். றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும். றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும். இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல. ஒரு இளம் பெண் (பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக் குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒரு மாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள். அதன்பின் அந்த வீட்டுத் தலைவி, வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன். குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம். வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப் பராமரிக்கும் அனுபவமும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள். இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும்.இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும். றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும். றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும். இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல. ஒரு இளம் பெண் (பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக் குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒரு மாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள். அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன். குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.

இறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச்செய்வோம். காலம் மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண் தாழ்த்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி - இமெயில் மூலமாகவோ பேக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.தயவு செய்து, உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.
Father of the dead child,(Re Rizana Nafeek)
Mr. Naif Jiziyan Khalaf
Al Otaibi c/o, Sri Lankan Embassy,
P.OBox,94360
Riyadh-11693
Kingdom of Saudi Arabia
Fax.00 9661 460 8846,
E-mail:lankaemb@sabakah.net.sa
என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும். ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

சிரிப்பு சிகிச்சை : தென்கச்சி சுவாமிநாதன்

'வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'ன்னு ரொம்ப காலமா சொல்லிக்கிட்டு வர்றோம் இல்லையா? இது ஏதோ சம்பிரதாயமாச் சொல்ற வார்த்தையில்லே! இது உண்மைதான்னு விஞ்ஞானிகளே இப்ப ஒத்துக்கறாங்க! அமெரிக்கா, இங்கிலாந்து - இங்கேயெல்லாம் இப்ப 'சிரிப்புச் சிகிச்சை' அப்படின்னு ஒரு புது சிகிச்சை முறையையே உருவாக்கிட்டாங்களாம். மனசுலே அழுத்தம் ஏற்படுதில்லே... இந்த மன அழுத்தம் பல நோய்களை உண்டாக்கிப்புடும். அதிகப்படியான ரத்த அழுத்தம், இதய நோய்கள், வயிற்றுப்புண் (பெப்டிக் அல்சர்) மன உளைச்சல், நரம்பு சம்பந்தமான கோளாறுகள்... இப்படி பல சிக்கல்கள் வர்றதுக்கு மன அழுத்தம் ஒரு முக்கியமான காரணம். இந்த மன அழுத்தத்தை விரட்டிப்புட்டா அந்த நோய்கள் நம்மை நெருங்காது. சரி, மன அழுத்தத்தை விரட்டறத்துக்கு என்ன வழி ? வாய்விட்டுச் சிரிக்கிறதுதான் சுலபமான வழி! அதுக்காகத்தான் இந்தச் சிரிப்பு சிகிச்சை முறையைக் கொண்டுக்கிட்டு வந்திருக்காங்க. அந்த சிகிச்சை அங்கே எப்படி நடக்குதுங்கறதைச் சொல்றேன். அதைக் கேட்டுட்டு நீங்க சிரிக்க ஆரம்பிச்சுடுவீங்க... ஏன்னா அது கேக்கறத்துக்குக் கொஞ்சம் வேடிக்கையாயிருக்கும்! வாய் விட்டுச் சிரிக்கறத்துக்கு முன்னாடி லேசான சுவாசப்பயிற்சி அவசியமாம். மூச்சையிழுத்து வெளியே விடறப்போ கைகளை மேலே தூக்கணும்... அப்புறம் கீழே இறக்கணும்... இப்படி ஒரு பத்து தடவை சுவாசப்பயிற்சி செஞ்ச பிறகு சிரிப்பு சிகிச்சையை ஆரம்பிக்கணும்.
சிகிச்சை நம்பர் ஒன்று :
பலத்த சிரிப்பு. கூட்டமா நின்னுக்க வேண்டியது. யாராவது ஒருத்தர் ஒண்ணு ரெண்டு மூணு சொல்லணும். ஒன்-டூ-த்ரீன்னு சொன்ன உடனே எல்லாரும் கையை உயரே தூக்கிக்கிட்டு... வாயை முழுசாத் திறந்து 'ஹா...' ஹா...!'-ன்னு சிரிக்கணும். இந்த சிரிப்பை இரண்டு நிமிட இடைவெளி விட்டு மறுபடி சிரிக்கலாம்.
சிகிச்சை நம்பர் இரண்டு :
மவுனச்சிரிப்பு. இந்தச் சிரிப்புலே வாய் அகலமாத் திறந்திருக்கணும். சிரிக்கிறவங்க அதிகமா சத்தம் எழுப்பக்கூடாது. அப்படி சிரிச்சிக்கிட்டே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கணும். இது ரொம்ப இயல்பா இருக்கணும். மவுனச் சிரிப்புலே செயற்கைத்தனம் இருக்கப்புடாது.
சிகிச்சை நம்பர் மூன்று :
உதடு மூடிய சிரிப்பு : இந்தச் சிரிப்புச் சிரிக்கறப்போ உதடுகள் மூடியிருக்கணும். சிரிப்பை வெளியிலே காட்டிக்காமே லேசா முணுமுணுக்கலாம். இந்தப் பயிற்சி நுரையீரலுக்கு நல்லது. அடி வயிற்றுத்தசைக்கு நல்லது. அதைச் சார்ந்திருக்கிற உறுப்புகளுக்கும் நல்லது.
சிகிச்சை நம்பர் நாலு :
நடுத்தர சிரிப்பு : மனசுக்கு அமைதி தேவையா? அதுக்கு இந்தச் சிரிப்பு ரொம்பப் பொருத்தம். நீங்க அதிகமாவும் சிரிக்கப்புடாது... குறைவாவும் சிரிக்கப்புடாது... இதுவும் கூட்டமா இருந்து சிரிக்க வேண்டிய ஒரு சிரிப்புதான்!
சிகிச்சை நம்பர் ஐந்து : நடனச் சிரிப்பு : சிரிச்சிக்கிட்டிருக்கறப்பவே நடனம் ஆடறது மாதிரி அப்படியும் இப்படியும் துள்ளிக் குதிச்சி சிரிக்கணும். அதாவது ஒரு குழந்தையின் சிரிப்பு மாதிரி இது இருக்கணும்! அதுக்காக முரட்டுத்தனமா குதிச்சிக் கையை காலை உடைச்சிக்காதீங்க! மென்மையாக் குதிச்சி சிரிச்சாப் போதும்! இதுதான் இப்ப மேல் நாடுகள்லே உள்ள ஐந்து வகையான சிகிச்சை முறைகள்! சரி இந்த சிகிச்சைக்கு நேரம் காலம் உண்டா? உண்டு! காலை 6 மணி முதல் 7 மணி வரை சிரிப்புச் சிகிச்சைக்கு ரொம்பப் பொருத்தமான நேரமாம்! அதிகாலையிலேயே சிரிப்பை ஆரம்பிச்சுட்டா அன்றைக்குப் பூராவும் நம்மகிட்டே ஒருவிதமான சுறுசுறுப்பு ஒட்டிக்கிட்டே இருக்குமாம்! அனுபவிச்சிப் பார்த்தவங்க சொல்றாங்க!
ஒரு சமயம் ஒரு கல்யாணம் விசாரிக்கப் போயிருந்தேன். முதல் நாளே போய்ச் சேர்ந்துட்டேன். கல்யாண மண்டபத்துலேயே சமையல் கட்டுக்குப் பக்கமா இருந்த ஒரு ரூம்லே நிறைய பேர் படுத்திருந்தாங்க. நானும் ஒரு ஓரமா படுத்துக்கிட்டேன். நடு ராத்திரி தூங்கிக்கிட்டிருந்த ஒருத்தர் திடீர்ன்னு எழுந்திரிச்சார்... ஒரு மாதிரியா சிரிச்சிக்கிட்டே உடம்பை அப்படியும் இப்படியும் நெளிச்சிக்கிட்டே ஆட ஆரம்பிச்சுட்டார்... கொஞ்ச நேரம் கழிச்சி ஆட்டத்தை நிறுத்திட்டு அமைதியாயிட்டார். நான் மெதுவா அவருகிட்டே போய்... ''என்னங்க விவரம்?''-ன்னு விசாரிச்சேன்! ''ஒண்ணுமில்லே சார்... என் சட்டைக்குள்ளே ஒரு கரப்பான் பூச்சி புகுந்துட்டுது.... கிச்சு கிச்சு மூட்டற மாதிரியிருந்துது... அதை வெளியே விரட்டறதுக்காகத்தான் அப்படிப் பண்ணினேன்!'' அப்படின்னார்!

July 13, 2007

ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்க வேண்டுமானால் குழந்தைகளுக்குச் சங்கீதம், ஓவியம் போன்ற கலைகளைச் சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்

- பிரபஞ்சன்

இன்றைய குறள்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்

அறத்துப்பால் : இல்லறவியல்

பிறப்பதற்கு முன்னதாகவே சிசுவின் பாலினத்தை தெரிந்துகொள்வதற்கான சோதனை மற்றும் பால் தெரிவிற்காக கருக்கலைப்புச் செய்வது ஆகியன இந்தியாவில் சட்ட விரோதமானவையாகும். ஆனால் கருவில் இருப்பது பெண் சிசு என்று தெரிந்துகொண்டு அதனைக் கலைப்பது மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவற்றை தடுக்க முடியாத நிலையில் இந்திய அரசாங்கம் இருக்கிறது. BBCTamil.com
மேலும் இன்றைய (ஜுலை 13 வெள்ளிக்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக.BBCTamil.com Radio Player

வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்

தமிழ்நாடு ஆவலுடன் ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் வாசித்து கிளுகிளுப்படையும் நடிகர்களின் விவாக விஷயம் குறித்ததல்ல இந்த கதை. இது ஒரு தனி பெண் ஒரு அரசுக்கு எதிராக நின்று போராடும் கதை. தனது உரிமைக்காக தருமத்துக்காக தன் குடும்பத்திலிருந்து வலுகட்டாயமாக பிரிக்கப்பட்டு போராடும் பெண்ணின் கதை. இரண்டு வயது கூட நிரம்பாத கைக்குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு போராடும் தாயின் கதை.
கணவனை காணக்கூட முடியாமல் சிறைக்கம்பிகளின் அப்பால் நிற்க வைக்கப்பட்ட ஒரு தமிழ் பெண் தமிழ் பண்பாட்டினை விட்டுக்கொடுக்காமல் போராடிவரும் கதை. தமிழ்பண்பாட்டுக்காக தான் அணியும் திலகத்துக்காக தன் கணவருடன் இணைவதற்காக போராடும் ஒரு தமிழ் பெண்மணியின் கதை இது. கதை அல்ல இனி வரும் காலங்களில் இது மதவெறி பிடித்த அரசொன்றின் இராட்சத அதிகார பலத்தை எதிர்த்து நின்று போராடிய ஒரு ஒற்றைக் குடும்பத்தின் வீர காவியம். எமனிடமிருந்து கணவன் உயிரை மீட்ட சாவித்திரி, எமனிடம் தன் ஆயுளைக் கொடுத்து காதலியை மீட்ட ருரு, கணவனுக்காக நீதி கேட்டு அரசனையே எதிர்த்த கண்ணகி என காவிய மாந்தர்களில் வைத்து எண்ணப்பட வேண்டிய வீரப்பெண்மணியாக ஜொலிக்கிறார் ரேவதி. அவருக்காகவும் தன் குழந்தை திவ்விய தர்சனிக்காகவும் பகீரத முயற்சிகளுடன் தவமிருக்கிறார் சுரேஷ். இதில் ஆனந்தமான விஷயம் என்னவென்றால் குறைவாக என்றாலும் அதிசயிக்கத்தக்க அளவில் கணிசமான எண்ணிக்கையில் மலேசிய இஸ்லாமியர் (பெண்கள் உட்பட) ரேவதிக்காகவும் சுரேஷ¤க்காகவும் குரல் கொடுத்திருக்கின்றனர். 'இஸ்லாமிய சகோதரிகள்' எனும் பெண்கள் அமைப்பு ரேவதியின் விடுதலைக்காக அமைதி ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்.முழுவதும் படிக்க இணைப்பை அழுத்துக... Thinnai

"Helping hands are better than Praying Lips"


Who said english is easy???

Fill in the blank with YES or No
1._____I dont have brain
2._____I dont have sense
3._____I am stupid

July 12, 2007

ராமபிரான் காட்டுக்கு சென்றதும் ஒரு ஆசிரமத்திலிருந்து மற்றொரு ஆசிரமத்திற்கு புறப்பட்டார். அப்போது, அந்த ஆசிரமத்திலிருந்த இரண்டு இளைஞர்கள் அவருடன் சென்றனர். இரண்டாவது ஆசிரமத்திலிருந்து மூன்றாவது ஆசிரமத்திற்கு புறப்பட்டதும், இன்னும் இரண்டு இளைஞர்கள் சேர்ந்துகொண்டார்கள். ஆக நான்கு இளைஞர்களும், ராமன், லட்சுமணன், சீதா ஆகியோர் உட்பட ஏழு பேர் மற்றொரு ஆசிரமத்தை நோக்கி சென்றனர். அந்த ஆசிரமத்திலிருந்த குருபத்தினிகள் அவர்களை வரவேற்றனர். அந்தக் கூட்டத்தில் சீதை மட்டுமே பெண் என்பதால் அவளை அடையாளம் கண்டுகொண்டனர். மற்றவர்களில் யார் ராமன், யார் லட்சுமணன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
அவர்கள் சீதையிடம் அங்கு நின்ற ஒவ்வொருவராக காட்டி, "இவர் ராமரா?, இவர் ராமரா?' என கேட்டுக்கொண்டே வந்தனர். சீதையும் "இவர் ராமர் இல்லை. இவர் ராமர் இல்லை' என சொல்லிக்கொண்டே வந்தாள். கடைசியாக ரிஷிபத்தினிகள் ராமனைச் சுட்டிக்காட்டி, "இவர் ராமரா?' என்று கேட்டார்கள். சீதை பதில் சொல்லாமல் நாணத்துடன் தலையை கவிழ்ந்துகொண்டாள். "இவர்தான் ராமர்' என்று கூறவில்லை.
இதிலிருந்து ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். உலகிலுள்ளவர்கள் கடவுள் தங்கள் அருகில் இருந்தும் அடையாளம் காணத் தவறி விடுகிறார்கள். அதே நேரம், பிற பொருட்கள் கடவுளாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்கள். சிலருக்கு பணம் கடவுளாகத் தெரிகிறது. சிலருக்கு உலக இன்பங்கள் கடவுளாகத் தோற்றமளிக்கின்றன. ஆனால், நிஜமான பக்தன் எல்லோரையும் கடவுளாகப் பார்க்கிறான். எந்நேரமும் கடவுளுடனேயே இருக்கிறான். நாமும் எல்லாரையும் கடவுளாகப் பார்ப்போமே!
- பகவான் ரமணர்

இன்றைய குறள்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்

அறத்துப்பால் : இல்லறவியல்

நல்ல கவிதைகளைப் படித்தவுடன் நான் எழுதிய ஒன்றுகூடக் கவிதை இல்லையென்று புரிந்தது, அத்தனையும் கிழித்துப் போட்டுவிட்டேன்
- பிரபஞ்சன்

தமிழோசை

இன்றைய (ஜுலை 12 வியாழக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே க்ளிக் செய்க BBCTamil.com Radio Player

July 11, 2007

"ட்ரம்மர் சிவமணி" மற்றும் "மேன்ட்லின் ஸ்ரீனிவாசன்"

ஒரு அருமையான வீடியோப்பதிவு

நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல, எவ்வளவு 'அடர்த்தியாக' வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்

- பிரபஞ்சன்

கூகிள் : தமிழ்

இன்றைய குறள்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

பழிக்கத்தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

நாலடியார்

1. அறத்துப்பால்

1.6 துறவு

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது


- சமண முனிவர்கள்

தமிழ் விளக்கவுரை

விளக்கு இருளைப் போக்கும். ஒருவனுடைய தவமானது அவனது பாவங்களைப் போக்கும். விளக்கின் எண்ணெய் குறையும் போது இருளானது சூழ்ந்து கொள்ளும், அதேபோல ஒருவனது நல்ல குணங்கள் குறையக் குறைய அவனை தீமைகள் முற்றிலுமாகச் சூழ்ந்து கொள்ளும்.


- ஆதியக்குடியான்

ஆங்கில விளக்கவுரை
Asceticism
Like as when a lamp is brought into a room darkness disappears, so sin cannot stand before the effects of former good deeds. And like as darkness approaches and spreads over the room when the oil in the lamp is decreasing, so when the effect of the good deeds is exhausted, the effect of evil deeds will take its place.
Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar

தமிழோசை

லண்டன் தாக்குதல் குற்றவாளிகள் நால்வருக்கு ஆயுள் தண்டனை லண்டன் நகரின் போக்குவரத்து அமைப்புக்கள் மீது கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த முயற்சி செய்த குற்றத்திற்காக நான்கு பேருக்கு இலண்டன் நீதி மன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மேலும் இன்றைய 'BBC' (ஜுலை 11 புதன்கிழமை) நிகழ்ச்சிகளைக் கேட்க க்ளிக் செய்க BBCTamil.com Radio Player

July 10, 2007

இன்றைய குறள்

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது, இன்பமும் ஆகாது
அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

பெரியார்

விருதுநகரில் தேர்தல் சமயம். நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், படிக்காத காமராசரைப் பற்றி படித்த காமராசன் (கவிஞர் நா.காமராசன்) பேசுவார் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. காமராசரின் மீது மதிப்பு, மரியாதை கொண்ட தந்தை பெரியாரிடம் ஒருவர் சென்று, "அய்யா! பெருந்தலைவரை அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள்" என்று சுவரொட்டியைக் காட்டி கோபப்பட,
பெரியார் அந்த சுவரொட்டியைப் பார்த்து விட்டு சொன்னாராம்.
“சரியாத்தான் போட்டிருக்கானுங்க, ஆனா இதுல ஒரு வார்த்தை சேர்த்துக்கிட்டா நல்லாருக்கும்” என்று சொல்லிச் சொன்னாராம்,
“படிக்காத காமராசர்" உருவாக்கிய பள்ளிக்கூடத்தில், 'படித்த காமராசர்' பேசுவார் என்று போட்டிருக்கணும்" என்றாராம்.

எழுச்சியுறும் இந்தியா

இந்திய பொருளாதாரத்தின் அதிவேக வளர்ச்சி குறித்து பிபிசி பல பெட்டகங்களைத் தயாரித்து வழங்குகிறது. இவை குறித்து தமிழோசையில் ஒலிபரப்பான பெட்டகங்கள்.BBCTamil.com
முதலில் இந்தியா காணும் அதீத பொருளாதார வளர்ச்சி அங்கு கலாச்சார மாற்றங்களுக்கும் இடம் தந்துள்ளது. ஆயினும் திருமணம் என்று வரும் போது, அங்கு பெரும்பாலும் பெரியோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் மற்றும் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களுக்கே அங்கு இன்னமும் முக்கியத்துவம் காணப்படுகிறது. மேலும் இன்றைய (ஜுலை 10 செவ்வாய்க்கிழமை) தமிழோசை நிகழ்ச்சிகளைக் கேட்க BBCTamil.com Radio Player

July 09, 2007

இன்றைய குறள்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

மலேசியா வாசுதேவன் ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்

மலேசியா வாசுதேவன் & ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்

மலேசியா வாசுதேவன் & ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்

Part IV

மலேசியா வாசுதேவன் & ஸ்ரீலேகா பார்த்தசாரதி நேர்முகம்

உலக வரலாறுகளைத் திருப்பிப்போட்டவை

தமிழோசை

சவுதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான இறுதி முயற்சிகள். மேலும் இன்றைய "BBC" செய்திகள் (ஜுலை 09 திங்கட்கிழமை) கேட்க இணைப்பில் செல்கBBCTamil.com Radio Player



இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா?
இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி) தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு -தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது।
இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...
- பெரியார்

July 08, 2007

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய தருணம்

அதே வேளையில் இணைய தளத்தின் மூலமாகவும், எஸ்.எம்.எஸ் வாயிலாகவும் இன்னும் எந்த வகையிலெல்லாம் ஓட்டளித்தீர்களோ அத்தனை உணர்வுள்ள இந்தியனுக்கும்
ஒரு இந்தியன் என்ற முறையில் நன்றியுணர்வோடு எனது பதிவின் மூலமாக கைகுலுக்குகிறேன். ஏனெனில் நான் நன்றி சொல்லக்கூடாது. அது நாகரீகமன்று.

"நல்ல கவிதைகளைப் படித்தவுடன்,நான் எழுதியது ஒன்று கூடக் கவிதை இல்லையென்று புரிந்தது. அத்தனையையும் கிழித்துப் போட்டுவிட்டேன்."

• மின் ஊடகங்கள் மீது எனக்கு அவ்வளவாக மரியாதை இல்லை. மிக உயர்ந்த அளவில் வளர்ந்துள்ள விஞ்ஞானத்தை, வெறும் சினிமாவை வரவேற்பறைக்குக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்திக் கொச்சைப் படுத்திவிட்டார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.. பிரபஞ்சனுடன் ஒரு பேட்டி Please continue with link Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

இன்றைய குறள்

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை


அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்
அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது

- பெரியார்

தமிழோசை

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் இருக்கின்ற செம்மசூதியை சுற்றி வளைத்துள்ள பாகிஸ்தானிய துருப்புகளுக்கும், மசூதிக்குள் இருக்கின்ற தீவிர எண்ணம் கொண்ட இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையில் பதட்டமான மோதல் தொடர்ந்து வருகின்றது. இன்றைய "BBC" (ஜுலை 08 ஞாயிற்றுக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க. கடந்த ஐந்து நாட்களில் மரணம் 335 பேர். தமிழோசை நிகழ்ச்சிகளைக் கேட்க கீழே 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

"மக்களுக்கு செய்யும் சேவையே நிஜமான ஆன்மிகம்"

"தலைவனாவதற்காகவே பிறக்க வேண்டும்' இப்படி சொன்னவர் தான் வீரத்துறவி விவேகானந்தர். சொன்னதுடன் நிற்கவில்லை. மிகப்பெரிய ஆன்மிகத் தலைவராகவும் அவர் விளங்கினார். கோல்கட்டாவில் புகழ் பெற்ற தத்தா குடும்பத்தில் அவதரித்தவர் சுவாமி விவேகானந்தர். இவரது தாய் புவனேஸ்வரி காசி விஸ்வநாதரின் பக்தை. ஆண் குழந்தை இல்லாத இவர், விஸ்வநாதரிடம் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென வேண்டிக் கொண்டார். அவர் நினைத்தபடியே, 1863, ஜனவரி 12 காலை 6.49 மணிக்கு விவேகானந்தரின் அவதாரம் நிகழ்ந்தது. விவேகானந்தரின் தந்தை வக்கீல் விஸ்வநாதன் குழந்தைக்கு வைத்த பெயர் நரேந்திரநாத் தத்தா. "நரேன்' என செல்லமாக அழைப்பார். ஆனால், தாய் புவனேஸ்வரி "விரேஸ்வரன்' என்று பெயர் வைத்தார். இது காசி விஸ்வநாதரின் மற்றொரு பெயர். ஆனால், பள்ளியில் "நரேந்திரநாத்' என்ற பெயரில் சேர்த்து விட்டனர். பள்ளிப்படிப்புக்கு பிறகு, விவேகானந்தரை ஐ.சி.எஸ். பட்டப் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பினார் தந்தை. பணக்கார பிள்ளைகள் எல்லாமே அந்தப் படிப்பின் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய பதவிகளை அடைந்து கொண்டிருந்த நேரம் அது. விவேகானந்தருக்கு படிப்பில் அதிக நாட்டமில்லை. மாறாக மத ஈடுபாடு அவரிடம் அதிகமாக இருந்தது. அப்போது "பிரம்ம சமாஜம்' என்ற இந்துமத அமைப்பு பிரபலமாக இருந்தது. ராஜாராம் மோகன்ராய் துவங்கிய இந்த இயக்கத்தில் தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர், கேசவ்சந்திர சென் போன்ற சீர்திருத்தவாதிகள் இடம் பெற்றிருந்தனர். அந்த இயக்கத்தில் இணைந்தார் விவேகானந்தர்.

விஸ்வநாதன் தன் மகனின் மனதை மாற்றுவதற்காக, திருமண முயற்சியில் ஈடுபட்டார். ஒரு செல்வந்தக் குடும்பம் நரேந்திரனுக்கு மிகப்பெரிய வரதட்சணையுடன் பெண் கொடுக்க முன்வந்தது. ஆனால், பணம், பெண் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டிருந்த விவேகானந்தர் ஒரேயடியாக மறுத்து விட்டார். ஒருமுறை, விவேகானந்தர், பிரம்ம சமாஜத்தலைவர் ராஜாராம் மோகன்ராயிடம், "தலைவரே! நான் உங்கள் அமைப்பில் உறுப்பினர். இந்த அமைப்பு கடவுள் பற்றை வலியுறுத்துகிறது. யாரைப் பற்றி நாம் மக்களிடம் பேச வேண்டுமோ, அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கடவுளைப் பற்றி பேசப்போகும் நாம், மக்கள் நம்மிடம் "கடவுள் எங்கே இருக்கிறார்' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர் களா?'' என்று கேட்டார். எதிர்பாராத இந்தக் கேள்வியால், மோகன் ராய் அசந்துவிட்டார். "இந்த இளைஞன் பிற்காலத்தில் சிறந்த ஞானியாவான்' என்று மட்டும் அவரது வாய் முணுமுணுத்தது. ஆனாலும், இந்த கேள்விக்கு மோகன் ராயால் பதில் சொல்ல முடியவில்லை. விடை கிடைக்காததால், பிரம்ம சமாஜத்தின் மீது விவேகானந்தருக்கு இருந்த பிடிப்பு தளர்ந்தது. "கடவுள் இல்லை என ஒரு கூட்டத்தார் சொல் கின்றனரே. அது உண்மைதானோ?' என்ற ரீதியில் அவரது மனம் சிந்திக்கத் தொடங்கி விட்டது. தனது உறவினரான ராமச்சந்திரதத்தரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார் விவேகானந்தர்.

அவர் விவேகானந்தரிடம், "நரேன்! நீ தட்சிணேஸ்வரம் போ. அங்கே ஒரு காளி கோயில் இருக்கிறது. அங்கே ராமகிருஷ்ணர் என்ற மகான் இருக்கிறார். அவரிடம் சென்றால், உன் கேள்விக்கு விடை கிடைக்கும்' என்றார். விவேகானந்தர் ராமகிருஷ்ணரிடம் சென்றார். ராமகிருஷ்ணர் அவரைத் தொட்டார். மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டார் விவேகானந்தர். "கடவுளைப் பார்த்திருக்கிறேன். நரேன். பார்த்ததென்ன...பேசவும் செய்திருக்கிறேன்' என்றார். "கடவுள் என்பவர் யார்? அவரிடம் கேட்க வேண்டியது என்ன?' என்பது பற்றி அவர் போதித்தார். அவரது போதனை விவேகானந்தருக்கு பிடித்து விட்டது. அதுவரை "நரேன்' என்ற பெயருடன் திகழ்ந்த அவர், தனக்கு "விவீதிஷானந்தா' என பெயர் சூட்டிக் கொண்டார். இந்தியாவை முழுமையாகச் சுற்றினார். கன்னியாகுமரி கடலில் குதித்து நடுவிலுள்ள பாறைக்குச் சென்று, மூன்று நாட்கள் அங்கேயே தியானத்தில் அமர்ந்து, "மக்களுக்கு செய்யும் சேவையே நிஜமான ஆன்மிகம்" என்ற உண்மையை உணர்ந்தார். இந்த விவேகம் தனக்கு கிடைத்ததற்கு அறிகுறியாக "விவேகானந்தர்' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

அந்தப் பெயரே உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானது. இந்தப் பெயருடனேயே சிகாகோ சென்று சர்வதேச மகாசபை நடத்திய, உலகின் அனைத்து மத தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில், இந்துமதத்தின் பெருமையை எடுத்துரைத்து, உலக மதங்களுக்கெல்லாம் இந்துமதமே வழிகாட்டியாக இருக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார். அங்கேயே நிதிதிரட்டி, தன் குருநாதரின் பெயரால் "ராமகிருஷ்ண மடம்' என்ற அமைப்பை உருவாக்கினார். உலகெங்கும் அந்த மடத்தின் கிளைகள் உருவாயின. அவர் வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் தான். ஆனால், செய்த பணிகள் அளவில்லாதவை. 1902 ஜூலை 4ல், அவர் காலமானார். "நாம் செலுத்துகின்ற பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக இறைவன் ஏதேனுமொரு நலனைத் தரவேண்டுமென்று, நாம் எதிர்பார்க்கும் வரை இறைவன் மீது உண்மையான பக்தி உண்டாகாது' என்கிறார் சுவாமிஜி.

நல்லதை மட்டுமே பேசுங்கள்

* உலகில் பிறந்துள்ள மனிதர்கள் அனைவரும் ராஜகுமாரர்களே. அவர்கள் எதற்காகவும், யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த உலகம் மனிதர்களின் பயன்பாட்டிற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரசித்து அனுபவியுங்கள். ஆனால், எதன் மீதும் பற்று மட்டும் வைத்து விடாதீர்கள். ஏனெனில், அதுவே உங்களது பலவீனமாக மாறிவிடும். ஆசை என்ற விதையை மனதில் விதைத்து விட்டால், அதுவே பல துன்பங்களை விளைவிப்பதாக அமைந்து விடும்.


* சமுதாயத்தை சீர்திருத்தும் முயற்சியை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். தீய வழிகளில் செல்வோரிடம் அவர்களது செயலால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லுங்கள். அப்போது, அவர்களை "தீயவனே' என்று சொல்லாமல், "நீ நல்லவன்' என்று சொல்லி, அதைவிட இன்னும் நல்லவனாக மாறும்படி தன்மையாக எடுத்துக்கூறுங்கள். ஏனெனில், பலவந்தமாக செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகள், அதன் வேகத்தை தணித்து எதிர்மறை விளைவுகள் தருவதாகவே இருக்கும். எனவே, சொல்லப்படும் கருத்தின் தன்மை இனிதாக இருக்க வேண்டியது அவசியம்.


* இன்பம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கிறது. இன்பமானது, தனது தலையில் துன்பம் எனும் மகுடத்தை சூட்டிக்கொண்டுதான் வருகிறது. எனவே, இன்பத்தை அனுபவிக்க தெரிந்தவர்கள் துன்பத்தையும் அனுபவிக்கும் அளவிற்கு பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மனோபலத்தைக் கொடுக்கும்.

July 07, 2007

சமீபத்திய மதுரை தேர்தலில் தி.மு.க.வின் பின்னடைவு, விஜயகாந்த் - தின் முன்னேற்றம், காங்கிரஸின் வெற்றிக்குரிய ரகசியங்கள்!?

சமீபத்திய தேர்தலில் மதுரையில் தி.மு.க.வின் பின்னடைவிற்குக் காரணம் என்ன? விஜயகாந்த் - தின் முன்னேற்றத்துக்குக் காரணம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசு அவர்கள்தான் 2011 - ல் தமிழக முதல்வர்!?

இன்றைய குறள்

அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

தமிழோசை

இன்றைய (ஜுலை 07 சனிக்கிழமை) "BBC" நிகழ்ச்சிகளைக் கேட்க 'க்ளிக்' செய்க BBCTamil.com Radio Player

எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால், செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும்



- பாரதிதாசன்

தமிழுக்கும் அமுதென்று பேர்! -

அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்தமிழ்

எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்தமிழ்

நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்தமிழ்

எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்தமிழ்

எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்தமிழ்

எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
தவறாமல் இந்தப் பாடலைக்கேட்கவும், இணைப்பில் செல்க.http://www.tamilnation.org/asx/thamizh.asx

காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய எத்தனையோ பாடகர்களில் திருச்சி லோகநாதன் அவர்களின் குரலையும் தமிழ்பால் பற்றுள்ள எவரும் மறந்துவிட முடியாது
Powered by eSnips.com

July 06, 2007

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம்பெறுமா??

இன்று 7.7.2007 தினத்தன்று 7 அதிசயங்கள் பற்றிய தகவல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது! உலகின் 7 அதிசயங்களாக எகிப்து நாட்டை சேர்ந்த பிரமீடு உள்ளிட்ட 7 இடங்கள் கிரேக்க அறிஞரால் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இவற்றில் 6 இடங்கள் இப்போது இல்லை. இந்நிலையில் புதிய கட்டடக்கலை வல்லுனர் குழு உலகின் 7 புதிய அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து உலகெங்கிலும் உள்ள மக்கள், மொபைல் போன் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால், அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலை, ஈபிள் டவர் உள்ளிட்ட 21 சின்னங்கள் இப்போதைய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் 7 அதிசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று 7.7.2007 அன்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. லிஸ்பன் நகரில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. உலகின் 7 அதிசயங்களை அறிவதற்காக உலகமக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் இதில் இடம்பெறவேண்டும் என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பு. ஏன்? ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பு! இதற்காக லட்சக்கணக்கான மக்கள் இணையதளத்தில் வாக்களித்தது நினைவிருக்கலாம்.

இன்றைய குறள்

அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்

அறத்துப்பால் : அறன் வலியுறுத்தல்

தமிழோசை

இன்றைய 'BBC' (ஜுலை 06 வெள்ளிக்கிழமை) செய்திகள் கேட்க இணைப்பில் செல்க BBCTamil.com Radio Player

சிவாஜி : அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன் : சுகுணா திவாகர்

நண்பர் சுகுணா திவாகர் அவர்களின் 'சிவாஜி' பற்றிய விமர்சனம்!
பத்துவருடங்களுக்கு முன்புவரை ரஜினி என்றால் மெண்டல் என்றும் பரட்டை என்றும் ஒரு இமேஜ் இருந்தது. ஆனால் அது திடீரென்று ஆன்மீகவாதியாக அரசியல் தீர்மானிப்பாளராக என்று பலவிதத் தோற்றங்களுக்கு மாறிவிட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள்தான் ரஜினி படம் பார்ப்பார்கள் என்கிற நிலை மாறி எல்லோருமே ரஜினி படத்தைப் பார்த்தாக வேண்டும் என்கிற ஒரு 'நிர்ப்பந்தம்' எப்படியோ உருவாகிவிட்டது. ஒருவேளை ரஜினியின் படம் 'எப்போதோ ஒருமுறை' வெளியாகாமல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியானால் அதை யாரும் சீந்தமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ரஜினியின் குறும்பும் ஸ்டைலும் பைத்தியக்காரத்தனமான சேட்டைகளும் நகைச்சுவைகளும் எனக்கும் பிடித்தமான ஒன்று. சமயங்களில் கமலின் படங்களில் உறுத்தும் நடுத்தர வர்க்கத்து புத்திசாலித்தனப் பாவனையும் போலி முற்போக்கும் எரிச்சலூட்டுபவை. இதனாலேயே ரஜினியை ரசிக்க வேண்டியிருக்கிறதோ என்ற எண்ணமும் எழுகிறது.

ஆனால் ரஜினி தத்துவஞானி ரேஞ்சிற்குப் பெண்களைப் பற்றி உதிர்க்கும் கருத்துக்கள் எப்போதும் எரிச்சலூட்டுபவை. இதோடு ஷங்கர் என்கிற விஷக் கிருமியும் சேர்ந்துவிட்டதால் எப்படியும் படம் மோசமாகத்தானிருக்கும் என்ற அரசியல் ரீதியான முன் தீர்மானத்தோடு சிவாஜி படத்திற்குச் சென்றால்..? ஏதோ தெலுங்குப் படத்திற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றியது. 'சிவாஜி - த லூஸூ' குழந்தைகள் பார்க்கவேண்டிய அனிமேஷன் படம். இனிச் சில அபத்தங்கள்.

* அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக இருந்தால் 200 கோடி சம்பாதிக்க முடியுமா என்பதை அமெரிக்கவாழ் நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படியே 200 கோடி சம்பாதித்தாலும் அத்தனையயும் இலவசச் சேவைக்கு ஒருவன் வழங்க முடியுமா என்ன? திட்டமிட்டு ஆதி (சுமன்) சிவாஜியை நடுத்தெருவிற்குக் கொண்டு வருகிறார் என்கிறது கதை. ஆனால் சுமன் அப்படியே விட்டுவிட்டால் கூட சிவாஜி இருக்கிற பணத்தையெல்லாம் இலவசச் சேவை செய்துவிட்டு நடுத்தெருவிற்குத்தான் வந்திருப்பார்.

* இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் ஊடுருவியிருக்கிறது. ஆனால் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் மட்டும் நேர்மையான அதிகாரிகளே வேலை செய்கின்றனர். ரஜினி தகவல் கொடுத்தவுடனே கருப்புப்பணம் வைத்திருப்பவர்களைப் பிடித்துச் சென்று விடுகின்றனர். புல்லரிக்கிறது. அதேபோல அமெரிக்கா செல்லும் ரஜினி வெள்ளையாக மாற்றிய பணத்தை தன் அறக்கட்டளைக்கு அனுப்பச் சொன்னதும் அனைவரும் ஒரு பைசா கூட 'ஆட்டை' போடாமல் அனுப்பி வைக்கின்றனர். ஏ.வி.எம் செலவழித்த நூற்றுக்கணக்க்கான கோடிகளில் கால்வாசி சாக்கு வாங்குவதற்கே செலவாகியிருக்கும்.

* தமிழ்ப்பண்பாடுப்படி பெண் வேண்டும் என்கிறார் ரஜினி. உடனே தமிழ்ப் பண்பாட்டின்படி நயன்தாரா மாராப்பைக் கழற்றியெறிந்துவிட்டு 'பல்லேலக்கா' என்று ஆட்டம் போடுகிறார். ஸ்ரேயாவும் பாடல் காட்சிகளிலும் ரயிலை நிறுத்தும் காட்சிகளிலும் (இந்த ரயில் நிறுத்தும் காட்சி அனேகமாக 327வது தமிழ்ப் படத்தில் இடம் பெறுகிறது) 'மேற்படிப் பாணியில்' தமிழ்ப் பண்பாட்டைக்' காப்பாற்றுகிறார்.

* சாலமன் பாப்பையா 'சிவாஜியில் உங்களுக்கு நல்ல வேடம் என்றவுடன் நடிக்க வந்துவிட்டார்' போலும். கடைசியில்தான் தெரிகிறது, தமிழ் இலக்கியம், கலாச்சாரம் எல்லாம் பேசித் தன் இரண்டு பெண்களையும் கூட்டிக் கொடுக்க அலைகிறார். பாப்பையா மட்டுமில்லை, ரஜினியும் தன் புரொஜெக்ட் நிறைவேற அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கூட்டிக் கொடுக்கிறார். இதுவரை ரஜினி ஏற்காத 'வித்தியாசமான' வேடம்.

* அந்த ஜோசியக்காரன் போன்ற கொடூரமான வில்லனை எந்தப் படத்திலும் பார்த்ததேயில்லை. ரஜினி ஸ்ரேயா ஜாதகத்தைப் பார்த்தவுடனே 'திருமணம் நடந்தால் ரஜினி உயிருக்கு ஆபத்து' என்கிறார். அத்தோடு விட்டாரா? திருமணத்திற்கும் வந்து 'சீக்கிரம் தாலியறுப்பாய்" என்று ஸ்ரேயாவை 'வாழ்த்துகிறார்'. பொருத்தம் பார்க்கும் ஜோசியக்காரனைத் திருமணத்திற்கு அழைக்கும் முதல் வீட்டுக்காரர்கள் இவர்களாகத் தானிருக்கும்.

* ரஜினி ஒரு 15 அடியாள்களை வைத்து தமிழ்நாட்டிலிருக்கும் தொழிலதிபர்களிலிருந்து அதிகாரிகள், அமைச்சர் வரை மிரட்டுகிறார். பாவம் அவர்கள் அனைவரும் அடியாட்கள் வைத்துக் கொள்ளாத, வன்முறையில் நம்பிக்கையில்லாத காந்தியவாதிகள்.

* ரகுவரன் என்னும் திறமையான கலைஞரை இந்தப் படம்போல எந்தப் படத்திலும் வீணடித்ததில்லை.

* ரஜினியின் சண்டைக் காட்சிகள் போகோ சேனலையும் ஜெட்டிக்ஸ் சேனலையும் ஒருசேரப் பார்த்ததைப் போல இருக்கிறது.

* படத்தில் விவேக் காமெடி என்ற பெயரில் எரிச்சல் ஏற்படுத்துகிறார் என்றாலும் மேலே சொன்னபடி பெரும்பான்மையான காட்சிகள் காமெடியாகத் தானிருக்கின்றன. அதில் உட்சபட்சம் கருப்புப் பணமெல்லாம் ஒழிந்து ரேஷன்கார்டு போல மணிகார்டு வந்து 2015ல் இந்தியா வல்லரசாவது. விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

* இந்தக் கதையைத்தான் லீக் ஆகிவிட்டது, லீக் ஆகிவிட்டது என்று பில்டப் கொடுத்தீர்களா, அடப்பாவிகளா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் வாங்கி நாலு 'இரும்புக்கை மாயாவி' யைப் படித்து மிக்ஸ் செய்தால் அதுதானே சிவாஜி கதை!

* ஆனாலும் படத்தில் இரண்டு பெரிய வித்தியாசங்கள் இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வழக்கமாக ஷங்கர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டவிரோதமாக 'சமூக சேவை' செய்யும் கதாநாயகன் 'மாட்டிக்' கொண்டவுடன் மக்கள் அவனை விடுதலை செய்யச் சொல்லி போராடோ போராடென்று போராடுவார்கள். அதேபோல ரஜினி படங்களின் கிளைமாக்சில் ரஜினியின் தங்கை, அம்மா, மனைவி என்று யாரையாவதோ அல்லது ஒட்டுமொத்தமாகவோ வில்லன் கடத்திக் கொண்டுபோய்க் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருப்பான். ஆனால் இந்த இரண்டு கருமாந்திரங்களும் இந்தப் படத்தில் இல்லை.

* அதேபோல சென்ற படத்தில் மலைகள், லாரி என்றெல்லாம் ஷங்கர் 'வித்தியாசமாக' பெயிண்ட் அடித்திருந்தார். ஆனால் இதில் மாறுதலாக தொப்பையுள்ள 50 பேரை அழைத்துவந்து அவர்களின் தொந்தியில் ரஜியின் முகத்தை பெயிண்ட் அடித்துக் குலுங்க விட்டிருக்கிறார். ஒரே கதையை வைத்து பல படங்களை எடுத்து இம்சைப்படுத்துவதைவிட பேசாமல் ஷங்கர் பெயிண்ட் அடிக்கப் போகலாம்.

இந்த அபத்தங்களையும் தாண்டி நிழலாடும் சில அரசியல் உறுத்தல்கள்:

* பராசக்தி படத்தின் தொடக்கக் காட்சியில் சிவாஜி ரங்கூனிலிருந்து சென்னையில் காலடி வைக்கும்போது ஒரு பிச்சைக்காரர் 'அய்யா தர்மம் போடுங்க' என்பார். 'தமிழ்நாட்டின் முதல் குரலே இப்படி இருக்கே' என்பார் சிவாஜி. அதில் ஒரு கூர்மையான அரசியல் விமர்சனமும் சமூகநிலை குறித்த எள்ளலும் இருக்கும். ஆனால் அதே காட்சியை சிவாஜியில் பார்க்கும்போது காறித் துப்பலாமென்றுதான் தோன்றுகிறது.

* ரஜினி மருத்துவமனை கட்டும்போது 'ஷாக்' அடித்து ஒரு சிறுவன் துடிக்கும் காட்சியில் 'சிவாஜி பார்ட்டி'யில் இறந்துபோன அந்த தொழில் நுட்பக் கலைஞன் ஞாபகத்திற்கு வந்துபோவது தவிர்க்க முடியவில்லை.

* கர்நாடகத்து ரஜினி 'காவேரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமா?' என்று பாடும்போது 'சும்மா எரியுதில்ல'.

- சுகுணா திவாகர்

கம்ப்யூட்டர் "கீ போர்டையும், மௌசையும்" மறந்து விடுங்கள்!! புதிய கம்ப்யூட்டர் புரட்சி!!

கம்ப்யூட்டர் "கீ போர்டையும், மௌசையும்" மறந்து விடுங்கள்!! புதிய கம்ப்யூட்டர் புரட்சி!!

May 30 - Microsoft co-founder Bill Gates unveils the Microsoft Surface, a tabletop computer that reacts to touch.The 30-inch display screen is mounted under a plastic tabletop and will initially cost $5,000 to $10,000. It will, at first, only be available in select hotels, casinos, and T-Mobile stores in November

July 05, 2007

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது நடிகர் திலகத்துக்கு பிறகு அவருடைய கலை வாரிசான கலைஞானி கமல் ஹாசனுக்கு வழங்கப்படவிருப்பதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி கேள்விப்பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இத்தகைய சிறப்பை நடிகர் திலகத்தை தொடர்ந்து பெறுவதற்கு கமல் ஹாசனை விட தகுதி படைத்தோர் இந்தியாவில் வேறு எவருமில்லை என்பதை மறுக்க முடியாது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஒரு நடன இயக்குநராக பின்னர் நடிகனாக வளர்ந்து கமல் படைத்த சாதனைகள் மலைக்க வைப்பவை. இன்று ஒரு தயாரிப்பாளராக, இயக்குநராக, கதை வசன கர்த்தாவாக, பாடலாசிரியராக, பாடகராக பல்வேறு பரிமாணங்களில் முத்திரை பதித்த ஒரு முழுக்கலைஞன், தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல, வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி கட்டிய மாபெரும் கலைஞன் என்பதை அவரது விமர்சகர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள். நடிகர் திலகத்தை அடுத்து செவாலியே விருதை கமல் பெறப்போவது உண்மையானால் கண்டிப்பாக தமிழர்க்கும் தமிழகத்துக்கும் பெருமையே!

தசாவதாரம் கதை - வழக்கு : கமல் கடிதம்

பெரிதாக்கிப் படிக்கப் பதிவின் மீது 'க்ளிக்' செய்து படிக்கவும்.



என் ஆசான், தந்தை, நடிப்புலகச் சக்ரவர்த்தி நடிகர் திலகம் அந்த "சிவாஜி" எங்கே! இன்றைய சிவாஜி எங்கே! அன்று நடந்தது ஆவி துடித்தது....இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது!!