October 16, 2007

எடிட்டர் அந்தோணி

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

"நான் எந்தப் பரிசுப்பொருளையும் ஏற்கமாட்டேன். எனது இரண்டு சூட்கேசுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு ராஷ்டிரபதி பவனத்திலிருந்து நான் வெளியேறுவேன்" - முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், பதவிக் காலத்தின் இறுதி நாட்களில்

இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்த நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

  • பல ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே எட்டப்பட்ட அணு ஒப்பதத்தை, இடைநிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
    இந்தியாவின் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இடது சாரிகள் இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். ஒப்பந்தத்தை செயற்படுத்தினால், மத்திய அரசுக்குத் தரும் ஆதரவைத் திரும்பப்பெறப் போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
    இந்நிலையில், உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக இந்த ஒப்பந்தத்தை மேலெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
    இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்ததன் காரணமாக, இந்தியாவின் நம்பகத்தன்மை பாதிக்கும் என்று தமிழோசையிடம் தெரிவித்த பாதுகாப்பு ஆய்வாளர் கே. சுப்பிரமணியம், இந்திய அமெரிக்க உறவுகளில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறினார். இதே விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினரான, உ ரா வரசராசன், நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில், அக் கருத்துக்களை ஏற்று செயற்படும் ஆட்சியாளர்களின் மதிப்பு உலக அரங்கில் உயரும் என்றார்.
  • இலங்கை மோதல்களில் 30க்கும் அதிகமான புலிகளை கொன்றதாக இராணுவம் அறிவிப்பு : இலங்கையின் வடக்கே இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் திங்கள் கிழமையன்று இடம்பெற்ற கடுமையான வெவ்வெறு மோதல்களின் போது 30க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் ஒரு இராணுவச் சிப்பாயும் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • அனைவருக்கும் அறிவியல் : டைனோசாரின் நீளம் 100 அடியை விட அதிகம் அர்ஜென்டினாவின் தென் மேற்குப்பகுதியில் சமீபத்தில் மிகப்பெரிய டைனோசார் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசோர்களிலேயே, இது மிகப்பெரிய எலும்புக்கூடு என்று இதைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்
  • ரஷ்ய- இரானிய அதிபர்கள் முக்கியச் சந்திப்பு : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அவர்கள், இரானிய அதிபர் மஃமுட் அஹமதி நெஜாத் அவர்களுடன் தெஹ்ரானில் பேச்சு நடத்தியுள்ளார்
  • இரானிய மனித உரிமை ஆர்வலர் கைதுக்கு சர்வதேச கண்டிப்பு : இரானில் மிகவெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதை இரானிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டு வரும் மனித உரிமை குழுக்கள் கண்டித்திருக்கின்றன

October 14, 2007

சீறிலங்கா ஒரு பார்வை

கையில் ஆயுதமேந்தத் தோன்றுகிறது....உங்களுக்கெப்படி?

சொந்த மண்ணிலிருந்து துரத்தப்பட்ட என் உடன்பிறப்புக்களான தமிழ்ச்சகோதர சகோதரிகளை நினைத்துவிட்டு இந்தப் பாடலைக் கேட்கும்போது என்னையுமறியாமல் கையில் ஆயுதமேந்தத் தோன்றுகிறது....உங்களுக்கெப்படி?



இஸ்லாம் விளக்கம் P.ஜைனுல் ஆபுதீன்

இஸ்லாம் : கேள்வி பதில் - P.ஜைனுல் ஆபுதீன்

இன்றைய குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

ஒருவர்க்கு உயர்வு தரக்கூடியது ஒழுக்கம் என்பதால் அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது

அறத்துப்பால் : ஒழுக்கம் உடைமை

"சிலம்பம்" குறும்படம்

தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ள மூளையின் பிரதிபலிப்பும், ஏக்கமும், ஆதங்கமும் இந்தக் குறும்படத்தின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு மெதுவான, சற்று வேகமாக நகராத குறும்படம்தான். ஆனால் சொல்லப்பட்டிருக்கிற விசயம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் எழுத்தாணிகொண்டு எழுதப்பட்டுவிடும் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை. இதேபோன்று நமது கலாசாரப்பிரதிபலிப்புகளோடு பல நல்ல குறும்படங்களைத் தொடர்ந்து எடுக்கவேண்டுமென்று திரு.நா.கவி.குமார் அவர்களைக் கேட்டுக்கொண்டு, அவரையும், அவரோடு இணைந்து பணியாற்றிய அனைத்து நண்பர்களையும் பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.இந்தப்படைப்பாளியின்(நா.கவி.குமார்)அதே ஆதங்கப்பெருமூச்சுடன் இங்கே உங்களோடு இந்தக் குறும்படத்தை இணையத்தில் முதன் முதலாகப் பெருமையோடு பகிர்ந்துகொள்கிறேன். நன்றி- "இசங்கமம் விஜய்" (http://www.sangamamlive.com/)


சங்கவை, அங்கவை

"இன்றைய சினிமாவில், தமிழ்ச்செல்வி என்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணிடம், தமிழ்ப் பெண்ணுக்கான ஆடையைப் பார்க்கமுடியவில்லை. அள்ளிக்கொடுத்த வள்ளல் பாரியின் மகள்கள் சங்கவை, அங்கவை. அப்பெயர்களை ஒரு தமிழ்ப்படத்தில் எவ்வளவு சீரழித்திருக்கிறார்கள்!"

-நெல்லை கண்ணன்

இந்தியாவில் வரதட்சிணைக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை

  • இந்தியாவில் வரதட்சிணைக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியாவின் சட்ட ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தலைமையிலான சட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை சட்ட அமைச்சர் பரத்வாஜிடம் சமர்ப்பித்துள்ளது.
    ஏற்கெனவே, வரதட்சிணைக் குற்றங்களுக்கு தண்டணை விதிக்க சட்டத்தில் இடம் உள்ள நிலையில், அதில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று நீதிபதி லட்சுமணன் அவர்களிடம் கேட்டபோது, மகளிர் அமைப்புக்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அரசு சட்ட ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். அதிகபட்ச தண்டனையாக தற்போதுள்ள ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆணையத்தில் நடைபெற்ற விவாத்தின்போதும் அதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், உலக அளவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வரும் நிலையிலும், பல்வேறு தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும், ஆயுள் தண்டனையே போதுமானது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.ஆர். லட்சுமணன். அதே நேரத்தில், குறைந்தபட்ச தண்டனையாக தற்போது 7 ஆண்டுகளாக இருப்பதை, பத்து ஆண்டுகளாக அதிகரிக்குமாறு அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • இலங்கைக்கும் ஐ.நாவுக்கும் இடையேயான மோதல் குறித்த செய்தி ஆய்வு : கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த ஐ நா மன்றத்தின் மனித உரிமை ஆணையர் லூயிஸ் ஆர்பர் அவர்கள் தமது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் தமது கவலைகளையும் விமர்சனங்களையும் வெளியிட் டிருந்தார்
  • மத்திய கிழக்கு விஜயத்தில் கொண்டலீசா ரைஸ் : தற்போது மத்திய கிழக்குப் பயணத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் கொண்டலீசா ரைஸ் அவர்கள், முதலாவதாக இஸ்ரேலியத் தரப்புடன் பேசியுள்ளார்
  • கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற இனக்குரொத கூச்சல் தொடர்பாக கிரிக்கெட் சபை விளக்கம் : ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சிமெண்ட்ஸ்
    இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இரண்டிலே நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற இனக்குரொத கூச்சல்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விளக்கம் கேட்டுள்ளது

இன்றைய தலைமுறைக் காதலர்கள்

October 13, 2007

இதுதான் நமது உலகம்!!

இன்று நாம் என்னவாக இருக்கிறோமோ அதற்கு நன்றி தெரிவிப்போம் - காரணம் இந்த இணைப்பை அழுத்துங்கள் புரியும். குறைந்தபட்சம் நம்மாலானவற்றைச் செய்யலாமே! இன்றே தொடங்குவோம். இதுதான் நமது உலகம்!!http://manuneedhy.googlepages.com/Poverty.ppt

இன்றைய குறள்

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

கற்பவை கற்றுச் சினம் காத்து அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்

அறத்துப்பால் : அடக்கம் உடைமை

எடிட்டர் அந்தோணி

2011-ஆம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்பேன்

"மக்கள் நம்பிக்கையைப் பெற்று மக்கள் ஆதரவுடன் 2011-ஆம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்பேன். காமராசர் ஆட்சியை அமைப்பேன்" - சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர்

ஒரினச் சேர்க்கைப் பாதிரியாரை பதவி நீக்கம் செய்துள்ளது வாட்டிகன்

  • இந்தியப் பிரதமரை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி : இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு புதுடெல்லி வந்தார். சனிக்கிழமை மாலை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்
  • இலங்கை மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா உயர்ஸ்தானிகர் வேதனை : இலங்கைக்கு தற்போது விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் அவர்கள், இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தினை அமுல்படுத்துவதில் இருக்கின்ற பலவீனமும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பதும் வேதனைக்குரிய விடயம் என்று கூறியிருக்கிறார்
  • யாழ்ப்பாணம் குருநகர் குடாகடலில் மோதல் : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் குருநகர் குடாகடலில் சனிக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய இராணுவத்தின் படகு ஒன்றில் இருந்த 3 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது
  • பர்மாவில் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் கைது : பர்மாவில் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களில் மீதமுள்ள மூன்று தலைவர்களையும் பர்மிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை வன்முறை மூலமாக இராணுவம் மட்டுப்படுத்தியது
  • ரஷ்ய மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமெரிக்கா ஆதரவு : ரஷ்யாவில் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலர் கொண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்
  • ஒரினச் சேர்க்கை பாதிரியாரை பதவி நீக்கம் செய்துள்ளது வாட்டிகன் : இத்தாலி நாட்டுத் தொலைக்காட்சியில் தன்னை ஒரினச் சேர்க்கையாளர் என்று ஒப்புக்கொண்ட உயர் பதவியில் இருக்கின்ற பாதிரியார் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தியை வாட்டிகன் ஒப்புக்கொண்டுள்ளது

October 12, 2007

இன்றைய குறள்

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

நெருப்பு சுட்ட புண்கூட ஆறிவிடும், ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது
அறத்துப்பால் : அடக்கம் உடைமை

குத்துப்பாட்டைத் தமிழகத்தின் தேசியகீதமாக மாற்றாதீர்கள்

மெலடி என்ற வார்த்தை தமிழ்சினிமாவில் மெல்ல மறைந்து வருகிறது. குத்துப்பாட்டு ஷாட்கட் முயற்சி, இதற்கு இசையமைப்பாளர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது, குத்துப்பாட்டு மாயையிலிருந்து தமிழ் சினிமா மாறவேண்டும். தமிழகத்தின் தேசிய கீதமாக இதை மாற்றாதீர்கள்.

- ஏ.ஆர்.ரஹ்மான்

வீரப்பன் தொடரை ஒளிபரப்ப இடைக்காலத் தடை

  • தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையேயுள்ள காட்டுப் பகுதியில் இருந்தபடி கொலைகள், சந்தனக் கடத்தல், யானைகளை வேட்டையாடுதல் போன்ற பல்வேறு குற்றங்களை செய்து வந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், வீரப்பன் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
    வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை தனியார் டி வி ஒன்று தொடராக ஒளிபரப்ப திட்டமிட்டது. அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்தத் தொடரை ஒளிபரப்பவிருந்தனர். இத்தொடர் ஒளிபரப்பானால், அதனால் தனக்கும் தனது இரு பெண்களுக்கும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தம் என்று கூறி வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி நீதிமன்றத்தை அணுகி இத் தொடருக்கு எதிராக தடை கோரினார். அந்த வழக்கை விசாரித்த சென்னை சிவில் நீதிமன்றம் ஒன்று, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அதனை ஒளிபரப்பத் தடை வித்தித்துள்ளதாக, முத்துலட்சுமியின் வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார். இருந்த போதிலும் இந்த நீதிமன்றத் தடைக்கு எதிராக தான் ஏற்கனவே மேன்முறையீடு செய்துவிட்டதாகக் கூறுகிறார், வீரப்பன் குறித்த தொடரை இயக்கும் கவுதமன். இந்தத் தொடர் வீரப்பினின் இரு பக்கங்களையும் மக்கள் முன் கொண்டுவரும் என்றும், தொடரைப் பார்த்த மக்கள் வீரப்பனின் குடும்பத்துக்கு அன்பையும் ஆதரவையும் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
  • பெனசிர் நாடுதிரும்புவதை தடுக்கப்போவதில்லை என்கிறார் முஷாரஃப் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ அடுத்த வாரம் நாடு திரும்ப இருப்பதை தான் தடுக்கப்போவதில்லை என பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கூறுகிறார்
  • ஐ. நா மனித உரிமைகள் ஆணையர் யாழ் விஜயம் : ஐநா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட வேண்டும் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ. நா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆபர் அம்மையாரிடம், யாழ் குடாநாட்டின் பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மூத்த குடிமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • இலங்கை செய்தியாளர்களின் பிரச்சினைகள் குறித்த சந்திப்பு : இலங்கையில் செய்தியாளர்கள் பணியாற்றுவதில் மிகவும் அபாயகரமான நிலைமையை எதிர்நோக்குவதாக, இங்கு லண்டனில் நடந்த செய்தித்துறையைச் சார்ந்தவர்களின் சந்திப்பு ஒன்றில் விவாதிக்கப்பட்டது
  • அமைதிக்கான நோபல் பரிசு : அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், அல்கோர் அவர்களுக்கும் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவுக்கும் வழங்கப்படுகிறது
  • மலேரியா கட்டுப்பாட்டு திட்டம் பலனளிக்கிறது: உலக வங்கி
    கொசுக்கடியால் பரவுகிறது மலேரியாமலேரியா நோயை கட்டுப்படுத்துவதற்காக உலக வங்கி ஆரம்பித்த ஒரு புதிய திட்டம் இரண்டு ஆண்டுகளை எட்டியிருக்கும் நிலையில் 18 நாடுகளில் அந்நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைகிறது என உலக வங்கி கூறுகிறது
  • விசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் - பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு : ஆண்-பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்-பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்
  • இன்றைய (அக்டோபர் 12 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews