November 04, 2007
அரசு ஊழியர்களுக்குச் செய்யும் சலுகையால் ஆதாயம் பெரும் கருணாநிதி : 02
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:03 PM
0
comments (நெற்றிக்கண்)
மருத்துவர் இராமதாசு அவர்களின் இன்றைய உபயோகமான அரசியல் பிரவேசங்கள் மற்றும் கோரிக்கைக்குரல் - ஆய்வு : 04
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
எப்போது இறைவனை அடையமுடியும்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:50 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:45 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 149 - ம் குறள்
தான் கைது செய்யப்படாதது ஆச்சரியம் என்கிறார் நாடு திரும்பியுள்ள முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் பெனஸீர் புட்டோ
- தமிழ்ச்செல்வனின் மறைவு பேரிழப்பு - விடுதலைப் புலிகளின் தலைவர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சி மீது வெள்ளிக்கிழமை அரச படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மக்களின் மனங்களை வென்ற ஆழமாக நேசிக்கப்பட்ட தன்னிகரற்ற தலைவன் எனவும், அவர் உட்பட்ட 6 போராளிகளினதும் மறைவு என்றுமில்லாத ஒரு பேரிழப்பாகும் எனவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்துள்ளார். தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவையொட்டி பிரபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சமாதான வழியில், நீதியான முறையிலே தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை என்றும், சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை என்றும் மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசி தமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள நாவலடியில் ஞாயிற்றுகிழமை மாலை வாகனமொன்றின் மீது இனம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
- தேர்தல்கள் குறித்து முடிவுவெடுக்கப்படவில்லை - பாகிஸ்தான் பிரதமர் : பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரஃப் அவர்கள் அவசரகால நிலை அறிவித்து ஒரு நாள் ஆகியிருக்கும் நிலையில் அங்கே அடுத்த ஜனவரியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் இனி எப்போது நடத்தப்படும் என்பது இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தானப் பிரதமர் சௌகத் அசீஸ் அவர்கள் கூறியுள்ளார். அத்துடன் சுமார் 300 முதல் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப் படுத்தினார். முன்னாள் பாகிஸ்தான உளவுத் துறை தலைவர் ஹமீத் குல், அரசியல்வாதியாக மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், வெளிநாட்டில் வாழும் முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் நவாஸ் ஷரீஃபின் கட்சிப் பிரதித் தலைவர் ஜாவீத் ஹஷ்மி ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தான் கைது செய்யப்படாதது ஆச்சரியம் என்கிறார் நாடு திரும்பியுள்ள முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் பெனஸீர் புட்டோ
- வவுனியாவில் ஐவர் சுட்டுக்கொலை : இலங்கையின் வடக்கே வவுனியா தவசிகுளத்தில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஐந்து இளைஞர்களை சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
- இந்திய மீனவர்கள் விடுதலை : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்ற குற்றத்திற்காகக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 97 இந்திய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்
- விடுவிக்கப்பட்ட துருக்கியப் படையினர் நாடு திரும்பினர் : குர்த் இனப் போராளிகளால் விடுவிக்கப்பட்ட எட்டுத் துருக்கியப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்
- சர்வதேச உதவியை கோரும் மெக்சிகோவின் டாபஸ்கோ மாகாணம் : கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ நாட்டின் டபாஸ்கோ மாகாணத்தின் ஆளுநர் சர்வதேச உதவியை கோரியுள்ளார். இந்த வெள்ளத்தால் சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- குழந்தைகளை கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐரோப்பியர்கள் விடுவிப்பு : ஆப்ரிக்க குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையாளர்களையும், நான்கு ஸ்பானிய நாட்டு விமானப் பணிப்பெண்களையும் சாட் அதிகாரிகள் விடுவித்துள்ளனர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:35 PM
0
comments (நெற்றிக்கண்)
November 03, 2007
பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்
- பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசரநிலைப் பிரகடனம் சட்டவிரோதமானது என்று சற்று நேரத்துக்கு முன்பு அறிவித்திருந்த நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்
- பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகள் சிலவற்றை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தீவிரவாதிகள் கூறுகின்றனர் : பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் பாகிஸ்தான் அரசப்படையினரை எதிர்த்துப் போரிட்டு வரும் தலிபான்களுக்கு ஆதரவான தீவிரவாதிகள், அந்த பகுதியில் இருக்கும் மூன்று தாலுக்கா அளவிலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக கூறியுள்ளனர்
- பர்மாவிற்கு இரண்டாவது முறையாக செல்கிறார் ஐ.நா விசேடத் தூதுவர் : பர்மாவில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக பர்மா விவகாரங்களுக்கான ஐ.நா வின் விசேட தூதுவர் இப்ராஹிம் கம்பாரி அங்கு விஜயம் செய்யவுள்ளார்
- மெக்ஸிகோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது : மெக்ஸிகோவில் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தென்பகுதி மாநிலமான டபாஸ்கோவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை வானூர்திகள் மூலம் மீட்கும் பெரிய நடவடிக்கை ஒன்று தொடர்ந்து வருகிறது
- ஹைதியிலிருந்து இலங்கை அமைதிகாப்புப் படையினர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் : ஹைதியில் ஐ,நா.மன்ற அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை துருப்பினர் நூற்று எட்டு பேர் பாலியல் அத்துமீறல்களிலும் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்
- கர்ணல் கருணா லண்டனில் கைதுசெய்யப்பட்டார் : விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கர்ணல் கருணா, பிரிட்டிஷ் பொலிசார் மற்றும் குடிவரவுத்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையினால் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது
- தமிழ்ச்செல்வன் மறைவையொட்டி புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரப்பகுதி மீது கடந்த வெள்ளிக்கிழமை அரசின் விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 6 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வன்னிப்பிரதேசம் எங்கும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
- அமெரிக்க விருது பெற்ற தலாய் லாமாவுக்கு புதுதில்லியில் பாராட்டு விழா; இந்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு : திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு, சமீபத்தில் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கி கெளரவித்தது அமெரிக்க காங்கிரஸ். சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு அமெரிக்கா இந்த விருதை வழங்கியது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:06 PM
0
comments (நெற்றிக்கண்)
மனித மொழி பேசிய சிம்பான்சி மரணம்
வாஷிங்டன்: மனிதர்களுடன் சைகை மொழியில் பேச பழக்கப்பட்ட முதல் பெண் சிம்பான்சி குரங்கு இறந்து விட்டது. இது அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பது டார்வின் தத்துவம். அதே நேரத்தில் மனிதனுடன் குரங்கு பேச முடியுமா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கினர். அமெரிக்காவில் நெவாடா மாகாணத்தில் உள்ள சிம்பான்சி மற்றும் மனித தகவல் பரிமாற்றம் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், 1980-ம் ஆண்டு ஒரு பெண் சிம்பென்சி குரங்கு குட்டியை தேர்ந்தெடுத்து வளர்க்க தொடங்கினர். அந்த சிம்பான்சிக்கு `வஷூ' என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். சைகை மொழியில் தகவல் பரிமாற்றம் செய்ய அந்த சிம்பென்சி பல ஆண்டுகளாக பழக்கப்படுத்தப்பட்டது. நாளடைவில் விஞ்ஞானிகளின் சைகையை புரிந்து கொண்டும், அதற்கு உரிய வகையில் செயல்படவும், பதில் அளிக்கவும் `வஷூ' நன்கு பயிற்சி பெற்று விட்டது. மேலும், உலகளவில் `வஷூ'வுக்கு பல மனித நண்பர்களும் உருவாகினர். `வஷூ' நேற்று முன்தினம் இரவு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டது. இதற்கு வயது 42. `வஷூ'வின் மறைவு, அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `வஷூ' நினைவாக வரும் 12-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.` இயற்கைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை நமக்கு தெரியப்படுத்த ஒரு துாதராக வந்தாள் `வஷூ'. ஏராளமானவர்களிடம் அவள் மிகவும் அன்பாக பழகினாள். அவளை நாங்கள் இழந்து விட்டோம்' என்று விஞ்ஞானிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். `வஷூ'வின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தனியாக ஒரு இணையதள முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில்,` மனித மொழியை புரிந்து கொண்ட முதல் சிம்பென்சி `வஷூ' தான். தனது வளர்ப்பு மகனுக்கும் அந்த மொழியை அவள் கற்றுக் கொடுத்தாள். `வஷூ' மிகவும் தனித்தன்மை வாய்ந்தது' என்பது உட்பட பல உருக்கமான தகவல்களை பலர் அந்த இணைய தள முகவரியில் வெளியிட்டு வருகின்றனர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:48 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
November 02, 2007
இன்றைய குறள்
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:12 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 148 - ம் குறள்
நடிகர்கள்தான் மகாபுருஷர்கள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:59 PM
0
comments (நெற்றிக்கண்)
இலங்கை விமானப்படை குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் மரணம்
- விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் இலங்கை இராணுவத்தினரின் வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார். அவருடன் வேறு ஐந்து பேரும் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்ச்செல்வன் - ஒரு பார்வை : தமிழ்ச்செல்வன் என்றவுடன் பலரது நினைவுக்கும் வருவது அவரது மலர்ந்த புன்னகை பூக்கும் முகம்தான்.
இந்த மிக மோசமான உள்நாட்டுப்போரில் அவரது எதிரிகளுக்கோ, இந்த புன்னகை என்பது அவரது கொடூரத்தை மறைத்த ஒரு முகமூடி. அவ்வளவுதான். ஆனால் அவரது நண்பர்கள், அவரை ஒரு மதிப்புக்குரிய மற்றும் நன்கு அறியப்பட்ட போராளியாகவும், ஒரு நல்ல நகைச்சுவை உணர்வுமிக்கவராகவும் கருதினர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1984-ல் இணைந்த தமிழ்ச்செல்வன் அவர் பிறந்த மண்ணான யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிகாக்கும் படைகளை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கியமானவர். 1993-ல் அவர் ஒரு விமானத்தாக்குதலில் காயமடைந்து ஒரு காலில் இருந்து எல்லா சதையும் எடுக்கப்பட்டு, கோல் ஊன்றாமல் நடமாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழ்ச்செல்வன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளியே தெரிந்த முகமாக விளங்கினார். புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுக்கு தலைமை தாங்கியதுடன், இலங்கை அரசுடன் நடந்த ஏறக்குறைய எல்லா அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார். இலங்கையில் உள்ள மற்ற எல்லா அரசியல்வாதிகளையும்விட ஒருக்கால் மிகவும் அதிகமாக பேட்டி காணப்பட்டவர் அவராக இருக்கலாம். தமிழ்ச்செல்வனுக்கு, அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வருடங்களுக்கு முன்னர் பிறந்த ஒரு மகன் ஆகியோர் இருக்கின்றனர் - இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் : இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் மூலம் திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, புதிய தமிழகம் கட்சியின் சார்பில், புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- மெக்ஸிகோவில் பெரு வெள்ளம் : மெக்ஸிகோவின் தென்பகுதி மாநிலமான தபஸ்கோவில், இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிகவும் மோசமான வெள்ளப்பெருக்கில் அகப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றுவதற்காக, மீட்புப் பணியாளர்கள் மும்முரமாகப் போராடி வருகிறார்கள்
- இந்தியாவில் சிறார் தொழிலாளர்கள் பலர் மீட்கப்பட்டனர் : இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை நடத்திய பொலிஸார் அங்கு வேலை செய்த குறைந்தது 70 சிறார்களை மீட்டதாக தெரிவித்திருக்கிறார்கள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:50 PM
0
comments (நெற்றிக்கண்)
சம்பாதிக்க வழியா இல்ல...இவரப்பாருங்க!
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:39 AM
0
comments (நெற்றிக்கண்)
November 01, 2007
இன்றைய குறள்
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 147 - ம் குறள்
கடவுள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள நான் பட்டை அடிக்கிறேன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:42 PM
0
comments (நெற்றிக்கண்)
வட இலங்கையில் கடுமையான மோதல்
- இந்தியாவின் அரச மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு விசாரணை : இந்திய உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மத்திய அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்க்கீடு வழங்கி இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய நடுவணரசு சட்டம் கொண்டுவந்தது.
இதை எதிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணைகள் இன்று முடிவடைந்திருக்கின்றன.
தீர்ப்புக்கான தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர். இந்த பின்னணியில், சுமார் மூன்று மாதகாலம் நீடித்த, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு விசாரணைகள் குறித்து, இந்த விசாரணையை தொடர்ந்து அவதானித்து வரும், இந்து பத்திரிகையின் புது தில்லி செய்தியாளர் ஜெ.வெங்கடேசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம் - வட இலங்கையில் கடுமையான மோதல்: மக்கள் இடம்பெயர்வு
இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தின் தென்மேற்கே மன்னார் கட்டுக்கரை மற்றும் வடக்கே யாழ்ப்பாணம் முகமாலை இராணுவ முன்னரங்க பகுதிகளில் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக இரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர் - இந்தியாவில் அருகிவரும் புலிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம் : இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை அருகி வருகிறதுஇந்தியாவில் குறைந்துவரும் புலிகளைப் பாதுகாப்பதற்கான ஆய்வுக்கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
தேசிய வனவிலங்குப் பாதுகாப்புக் குழு என்ற அந்தக் குழுவில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர்கள் ரகுபதி, நமோ நாராயண மீனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வனம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள், பல்வேறு அமைச்சகங்களின் செயலர்கள் உள்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் 17 மாநிலங்களில், 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில், 28 புலிகள் சரணாலயங்கள் உள்ளன. அவற்றை, தேசிய புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏற்கனவே, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறம்பட செயல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இவை குறித்த மேலதிக தகவல்களையும், இந்தியாவில் பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புலிகளின் எண்ணிக்கை அருகி வருவதற்கான காரணங்கள் குறித்து, இந்தியாவின் முன்னோடி வன உயிரியல் ஆய்வாளர், டாக்டர் ஏ.ஜே.டி.ஜான்சிங் அவர்களின் செவ்வியையும் நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம் - மட்டக்களப்பில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கவலை : மட்டுநகரின் ஒரு தோற்றம்இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் பலவற்றில் அண்மைக் காலமாக ஆயுதமுனையிலான கொள்ளைச் சம்பவங்களும், வீதி வழிப்பறிகளும் மிகவும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
- உகாண்டாவின் கிளர்ச்சிக் குழுவினர் அரசுடன் சமாதான பேச்சு வார்த்தைகளை துவங்கவுள்ளனர் : ஆப்பிரிக்காவின் மிக மோசமான மற்றும் நெடுநாளைய மோதல் ஒன்றை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக தேவனின் போராட்டப் படை என்றழைக்கப்படுகின்ற உகாண்டாவின் கிளர்ச்சிக்குழு ஒன்றின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்காக தலைநகர் கம்பாலா வந்தடைந்துள்ளனர்
- இராக்கில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது : இராக்கில் கொல்லப்பட்ட சாமானியப் பொதுமக்களின் எண்ணிக்கையானது அண்மைய மாதங்களோடு ஒப்பிடுகையில் கடந்த அக்டோபரில் குறைவாக இருப்பதாக கடைசியாக பெறப்பட்ட விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு மாதங்களாக பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
- 2005 லண்டன் சுரங்க ரயில் துப்பாக்கி சூடு: பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியமைக்காக காவல்துறைக்கு அபராதம் பொலிசாரால் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி2005 ஆம் ஆண்டு லண்டன் சுரங்க ரயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த அப்பாவியான ஜான் சார்ல்ஸ் டி மெனசஸ் என்பவரை லண்டன் காவல் துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தின் போது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறி விட்டதாக, லண்டனின் பிரதான காவல்துறையான லண்டன் பெருநகர காவல்துறை தண்டிக்கப்பட்டுள்ளது
- ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு உதவப்போன ஜப்பான் கப்பற்படை கப்பல்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன : ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுவரும் அமெரிக்க தலைமையிலான ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயலாற்றிவரும் தனது இரண்டு கடற்படை கப்பல்களை உடனடியாக தனது பணிகளை இடைநிறுத்திவிட்டு நாடு திரும்பும்படி ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது
- சாட் நாட்டிலிருந்து கடத்த முயற்சிக்கப்பட்ட குழந்தைகள் அனாதைகள் அல்ல: சர்வதேச தொண்டு நிறுவனங்கள் - சாட் நாட்டில் பிரஞ்சு உதவி அமைப்பு ஒன்று குழந்தைகளை கடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்படும் சம்பவத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்க்கு பெற்றோர்கள் இருப்பதாய் தெரியவந்துள்ளதாக சர்வதேச உதவி நிறுவனங்கள் கூறுகின்றன
- சொமாலியாவில் மனித அவலம்: ஐ.நா.மன்றம் - சொமாலியாவின் இடைக்கால அரசை ஆதரிக்கும் எத்தியோப்பிய படையினருக்கும், பலமான ஆயுதங்களை தன்னிடம் கொண்டிருக்கும் ஆயுத குழுக்களுக்கும் இடையில் சமீபத்தில் உருவாகியிருக்கும் சண்டை காரணமாக, சொமாலிய தலைநகரான மொகதிஷுவில் இருந்து சுமார் தொண்ணூறா யிரம் பேர் வெளியேறியிருப்பதாக, ஐநா மன்றம் தெரிவித்துள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:27 PM
0
comments (நெற்றிக்கண்)
October 31, 2007
இன்றைய குறள்
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை
அறத்துப்பால் : பிறனில் விழையாமை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 146 - ம் குறள்
பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு
- தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது : உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது
- பாபர் மசூதி விவகாரம் - விசாரணைக் குழுவுக்கு மீண்டும் காலநீட்டிப்பு : அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழ்நிலை குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷனுக்கு 42-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது
- யுத்தச் செய்தி தணிக்கை வர்த்தமானியை இலங்கை அரசு விலக்கிக்கொண்டது : இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தின்கீழ் உணர்ச்சிபூர்வமான இராணுவச் செய்திகளை வெளியிடுவதற்கும், பிரசுரிப்பதற்கும் தடைவிதிக்கும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் இராணுவ யுத்த செய்தித் தணிக்கையை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை மேற்கொண்டிருந்தார்
- மட்ரிட் ரயில் குண்டுவெடிப்பு: 20 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு : மட்ரிட் நகரில் 2004 ஆம் ஆண்டில் சுமார் இருநூறு பேர்வரை பலியாகக் காரணமான ரயில் குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று, பெரும்பாலும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 20 பேரை ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம் ஒன்று குற்றவாளிகளாகக் கண்டுள்ளது
- இன்றைய (அக்டோபர் 31 புதன்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:36 PM
0
comments (நெற்றிக்கண்)
நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன் - ஜெயகாந்தன்
''நான் மகிழ்ந்திருக்கிறேன். பிறரை மகிழ்வித்திருக்கிறேன். நான் துன்புற்றிருக்கிறேன். பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். நான் மகிழ்ந்து பிறரை துன்புறுத்தியிருக்கிறேன். பிறரை மகிழ்வித்து நான் துன்புறுத்தியிருக்கிறேன். இதெல்லாம் எதற்காக? நான் இந்த வாழ்க்கையோடு என்னைச் சம்பந்தப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வாழ்க்கை என்னைப் பாதிக்கிறது. நானும் இந்த வாழ்க்கையைப் பாதிக்கிறேன். வாழ்க்கை எனக்கு முடிவும் தொடக்கமுமற்ற நெடுங்கதையாக காட்சி தருகிறது. அவ்வப்போது சிதறிச் சிதறி அலைகளாய் என் மீது மோதும் சிறுகதைகளாகவும் பொருள் கொள்கிறது'' - ஜெயகாந்தன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:27 PM
0
comments (நெற்றிக்கண்)
