November 07, 2007

கூடுதல் கைகால்களுடன் பிறந்த பெங்களூரு சிறுமிக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றி

சிறுமியின் எதிர்காலம் குறித்து மருத்துவர் ஷரண் பாடில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இந்தியாவின் பெங்களூரு நகரில் கூடுதல் கைகள் கால்கள் கொண்ட ஒரு இரண்டு வயது பெண்குழந்தையின் மீது நடத்தப்பட்ட மிக நீண்ட நேர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.
இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை இந்தியாவில் நடைபெற்றிருப்பது இதுவே முதல்முறை. டாக்டர் ஷரண் பாடில் தலைமையிலான மருத்துவர்கள் குழுவொன்று 24 மணி நேரங்களூக்கும் மேலாக நடத்திய இந்த அறுவை சிகிச்சையின் பின் குழந்தை லக்ஷ்மியின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கைகள் கால்கள் உடல் உறுப்புகள் அனைத்தும் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது. 2 வயதுக் குழந்தை லக்ஷ்மி இந்த அறுவை சிகிச்சையை நன்றாக சகித்துக்கொண்டாள் என்றும், இனி அவள் மற்றவர்களைப்போல் இயல்பு வாழ்க்கை வாழமுடியும் என்று தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தலைமை மருத்துவர் டாக்டர் ஷரண் பாடில் குறிப்பிட்டார்.

வட இலங்கையில் கடும் மோதல்

  • உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள் : இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
  • லண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது : சித்திரவதை செய்தது, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன
  • பாகிஸ்தான் அவசரநிலைப் பிரகடனத்தை பொதுமக்கள் எதிர்க்க வேண்டும்: பேநசிர் பூட்டோ - பாகிஸ்தானில் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கடந்த சனிக்கிழமை நடைமுறைப்படுத்திய அவசரகால நிலையை எதிர்த்து பொதுமக்கள் கண்டனம் செய்ய வேண்டுமென்று முன்னாள் பிரதமர் பேநசிர் பூட்டோ குரலெழுப்பியிருக்கிறார்
  • செர்பியாவின் தீவிர தேசியவாத தலைவர் செசெல்ஜ் மீது போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு ஆரம்பமாகிறது : செர்பியாவின் தீவிர தேசியவாத கடும் கோட்பாட்டுக் கட்சியின் தலைவர் வொயிஸ்லாவ் செசெல்ஜ் மீதான வழக்கு விசாரணை தி ஹேக்கில் கூடும் அனைத்துலக போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் முன் ஆரம்பமாகவிருக்கிறது
  • உலக எரிபொருள் பயன்பாடு 55 சதவீதம் அதிகரிக்கும் - அனைத்துலக எரிபொருள் கழகம் எச்சரிக்கை : உலக நாடுகள் பயன்படுத்தும் எரிபொருளின் அளவு 2030ஆம் ஆண்டளவில் 55 விழுக்காடுகள் அதிகரிக்கும் என்றும் இதில் பெருந்தொகையான எரிபொருளை சீனாவும் இந்தியாவுமே பயன்படுத்தும் என்றும் அனைத்துலக எரிபொருள் கழகம் புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது
  • பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது : இத்தாலி நாட்டின் பைசா சாய்ந்த கோபுரமானது - உலக அதிசயங்களில் ஒன்று என்ற தனது அந்தஸ்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது.
    ஜெர்மனியிலுள்ள சூர் ஹுசென் என்ற கிராமத்திலிருக்கும் 15ஆம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றுக்கே இந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கின்னஸ் சாதனை நூல் தெரிவிக்கிறது.
    இந்த ஜெர்மனி தேவாலயத்தின் 25 மீட்டர் உயரமான கோபுரம் 5 பாகைக்கு மேல் சாய்ந்திருப்பதாகவும், இத்தாலிய பைசா சாய்ந்த கோபுரம் 4 பாகைக்கும் குறைவாகவே சாய்ந்து நிற்பதாகவும் கின்னஸ் புத்தகம் சார்பாக பேசவல்லவர் ஒருவர் குறிப்பிட்டார்.
    சூர் ஹுசென் தேவாலயத்திற்கான சான்றிதழ் இவ்வாரம் வழங்கபடுகிறது

யுகேந்திரன் - மலேசியா வாசுதேவன்

புலிகள் பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? - கனிமொழி

"ஒரு ராணுவம் வந்து அந்த அப்பாவிகள் மீது இவ்வளவு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது. அவர்களுக்கு வேறு கதியோ, விதியோ கிடையாது. அவர்களைக் காப்பாற்ற ஒரே அமைப்பு புலிகள்தான். அவர்களது பிரச்னையில் நுழைந்து, இது சரி, இது தவறு என்று சொல்ல நாம் யார்? எனக்கு விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. அந்த மக்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு என்று நாம் போய்ப் பார்த்ததில்லை! ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிவது, புலிகளைத் தவிர அந்த மக்களுக்கு வேறு சரண் கிடையாது"

- கனிமொழி, தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்

November 06, 2007

இன்றைய குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமிமைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

அறத்துப்பால் : பொறையுடைமை

நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த இரண்டு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை

  • கூடுதல் கைகால்களுடனான குழந்தைக்கு பெங்களூரில் அறுவை சிகிச்சை : நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்திருந்த ஒரு இரண்டு வயது குழந்தைக்கு இயல்பான ஒரு வாழ்க்கை கிடைக்க 13 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு அறுவை சிகிச்சை மூலம் முயன்றுவருகிறார்கள். இந்தியாவின் பெங்களூரு நகர புறநகர்ப் பகுதியில் ஒரு அசாதாரணமான அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்றுவருகிறது. லக்ஷ்மி தத்மா என்ற அந்தக் குட்டிப் பெண்ணுடைய இடுப்புப் பகுதியில் ஒரு தலையற்ற, முறையான வளர்ச்சியற்ற ஒரு பிள்ளையின் உடல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
    தனது குழந்தையை இந்துப் பெண்தெய்வத்தின் அவதாரமென்று பெற்றோர்கள் பார்க்கிறார்களென்றாலும் அக்குழந்தையைக் காப்பாற்ற அது சிறுபிள்ளையாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்வது அவசியமென்று மருத்துவர்கள் கூறுயிருந்தனர்.
    லக்ஷ்மி விவகாரத்தை முதலில் கையிலெடுத்தவரும் இந்த அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ குழுவுக்கு தலைமை ஏற்றிருப்பவருமான டாக்டர் ஷரன் பாடில், நாற்பது மணிநேரம் தொட்ர்ந்து சிகிச்சை நடக்கலாம் என்பதற்காக தங்களைத் தயார் செய்திருப்பதாகக் கூறினார். இந்த நல்ல காரியம் வெற்றிகரமாய் நிறைவடைந்து சிறுமி லக்ஷ்மி சிறப்பான ஒரு வாழ்க்கை வாழ்வாளென்று இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் அத்தனை பேரும் வாழ்த்துவார்களென்பதில் ஐயமில்லை
  • வரதட்சணைக்கு எதிரான போராட்டம்: மணமகன்களை காக்க முயன்ற காவலர் பலி : இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை வழங்குவதற்கு எதிராக போராட்டம் நடத்தும் கூட்டம் ஒன்றில் இருந்து, இரண்டு மணமகன்களை காப்பாற்ற முயன்ற பொலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்
  • கர்நாடகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி வரவேண்டும் - ஜனாதிபதியிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை : குமாரசாமியுடன் யெதியூரப்பாகர்நாடகத்தில் தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பி.எஸ். யெதியூரப்பா தலைமையில் ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீலிடம் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்தனர்
  • கருணா அணியிலிருந்து பிரிந்து சென்றிருந்தாகக் கூறப்படும் பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியுள்ளனர் : இலங்கையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் கருணாவை பிரிட்டிஷ் அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை, குடிவரவு குற்றம் ஒன்றிற்காக தடுத்து வைத்துள்ள பின்னணியில், மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது அணியின் அலுவலகங்கள் பலவற்றை, கருணா அணியினரிடமிருந்து சமீபகாலத்துக்கு முன் முரண்பட்டதாக கூறப்படும் அவரது தளபதிகளில் ஒருவரான பிள்ளையான் அணியினர் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன
  • யுத்த செலவினங்கள் அதிகமுள்ள இலங்கை வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு : இலங்கையில் யுத்த செலவினத்தை அதிகமாகக் கொண்டதாகக் கூறப்படும் வரவு செலவுத்திட்டம் நாளை காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முக்கிய உரையாற்றவுள்ளார்
  • ஹைட்ரோ கார்பன் வளங்கள் குறித்து இந்தியா-ஆப்பிரிக்கா இடையில் மாநாடு : ஹைட்ரோ கார்பன் துறையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்
  • தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் அறிவுத்திறன், மற்ற குழந்தைகளின் அறிவுத்திறனை விட அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பாலில் காணப்படும் குறிப்பிட்ட ஒரு புரதச்சத்து, குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவித்து, அதன் மூலம், குழந்தையின் அறிவுத்திறன் மேம்படுவதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதே வேளை, இந்த ஆய்வின் முடிவு எல்லா குழந்தை களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஞ்ஞான ரீதியான முடிவல்ல என்கிற சந்தேகத்தையும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, தமிழக தலைநகர் சென்னையை சேர்ந்த மகப்பேறு மருத்துவரும், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருபவருமான மருத்துவர் ஜெயம் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்
  • சௌதி மன்னர்-போப்பாண்டவரிடையே முதல் சந்திப்பு : சௌதி மன்னர் ஒருவர் முதல் தடவையாக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரை வத்திக்கானில் சந்தித்துள்ளார்
  • முஷாரஃபை சந்திக்கப்போவதில்லை என்கிறார் இஸ்லாமாபாத் செல்லும் பேநசிர் பூட்டோ : பாகிஸ்தானில் சென்ற வாரக் கடைசியில் அதிபர் முஷாரஃப் அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ள நிலையில், அவரை சந்திக்கப்போவதில்லை என்று எதிர்கட்சி தலைவி பேநசிர் பூட்டோ கூறியுள்ளார்

November 05, 2007

தான் பிறந்த குலத்தை தாக்கித்தான் பாரதியார் பாடல்கள் எழுதினார்

"தான் பிறந்த குலத்தை தாக்கித்தான் பாரதியார் பாடல்கள் எழுதினார். ஆனால் தற்போதைய அரசியல் தலைவர்கள் தேர்தலை மனதில் வைத்து தாங்கள் சார்ந்திருக்கும் சாதியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டக்கூடத் தயங்குகின்றனர். கடந்த காலத்தில் நம்மிடையே இருந்த பழியைத் துடைக்கவும், வருங்காலத்துக்கு வழிகாட்டவும் போராடிய போராளியாக அவர் திகழ்ந்தார். சுயநலத்துடன் குறுகிய வட்டத்துக்குள் இருந்தவர்களை நாட்டின் மீது பற்றுக் கொள்ள வைத்தார்" - தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில செயலர், மதுரையில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் விழாவில்.

இன்றைய குறள்

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று

பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

தாழ்த்தப்பட்ட சமூகச் சிறுமியை தேவதாசியாக்க தமிழ்நாட்டில் முயற்சி

  • தமிழ்நாட்டின் திருக்கோவிலூருக்கு அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, தேவதாசியாக ஆக்கும் முயற்சியாக, பொட்டுக்கட்டும் சடங்கு ஒன்று இன்று நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிசொல்லும் ஜோதிடக்காரர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் அந்த சிறுமியின் பெற்றோரே இப்படி செய்ய முயன்றதாகவும், இந்தச் செய்தி கேள்விப்பட்ட உள்ளூர் காவல்துறையினர், அவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்த சம்பவம் குறித்து, நேரில் விசாரணை நடத்திவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ரவிகுமார் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.
  • தமிழ்ச்செல்வன் இரங்கல் - தமிழ்நாட்டில் சர்ச்சை : விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தமிழ் நாளேடான ஜனசக்தி தனது தலையங்கத்தில், புன்னகை மாறாத முகப்பொலிவைப் பெற்றிருந்த தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளித்திருககிறது என்று கூறியிருக்கிறது. அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி தமிழ்செல்வனுக்காக எழுதிய இரங்கல்கவிதை கருணாநிதிககும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இருக்கும் ரகசியத் தொடர்பினைத்தான் வெளிப்படுத்துகிறது என்று குற்றஞ்சாட்டி, எனவே திமுக அரசு கலைக்கப்படவண்டும் எனக் கோரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    ஜெயலலிதாவின் கண்டனங்களுக்கு பதில் தெரிவித்த முதல்வர் கருணாநிதி, ஒருவர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பது ஓர் அடிப்படை மனிதநேயப் பண்பாடென்று கூறினார். இதனிடையே மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜி.கே.வாசன் காங்கிரஸ் ராஜீவ் கொலையை மறக்கவும் இல்லை, அவரது கொலையாளிகளை மன்னிக்கவும் இல்லை எனக் கூறியிருக்கிறார். தமிழ்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து சுவரொட்டிகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருக்கின்றனவே என செய்தியாளர்கள் கேட்டபோது, இது குறித்து தங்கள் வேதனையினை கட்சியின் தலைமைக்கு தெரிவிக்க இருப்பதாகக் கூறினார்.
  • புவி வெப்பமடைவதை தடுப்பதற்காக தியாகம் செய்ய மக்கள் தயார் - பிபிசி கருத்துக்கணிப்பு : புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக தியாகம் செய்ய மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று பிபிசி உலக சேவையினால் நடத்தப்பட்ட சர்வதேச கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகிறது
  • விளையாட்டரங்கம் : இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தலைநகர் குவஹத்தியில் இன்று திங்கட்கிழமை நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது. இலங்கை – ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையில் ஷேன் வார்ண்- முத்தையா முரளீதரன் ஆகியோரின் பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட முடிவாகியிருப்பது ஆகியவை குறித்து இன்றைய விளையாட்டரங்கில் கேட்கலாம்
  • இன்றைய (நவம்பர் 05 திங்கட்கிழமை 2007) "பிபிசி" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews

November 04, 2007

மருத்துவர் இராமதாசு அவர்களின் இன்றைய உபயோகமான அரசியல் பிரவேசங்கள் மற்றும் கோரிக்கைக்குரல் - ஆய்வு : 01

அரசு ஊழியர்களுக்குச் செய்யும் சலுகையால் ஆதாயம் பெரும் கருணாநிதி : 02

தனியார்மயமாக்குதல் தேவையா? : 03

மருத்துவர் இராமதாசு அவர்களின் இன்றைய உபயோகமான அரசியல் பிரவேசங்கள் மற்றும் கோரிக்கைக்குரல் - ஆய்வு : 04

எப்போது இறைவனை அடையமுடியும்?

"ஓட்டையாக இருக்கும் பானையில் எவ்வளவு முயற்சித்தாலும் நீரை நிரப்பவே முடியாது. மனிதர்களின் மனமும் பானை போன்றதே. அதில், ஆசை என்னும் ஓட்டை இருந்தால், புனித எண்ணங்களை நிரப்பவே முடியாது. ஆகவே ஆசைகளை விட்டுவிட வேண்டும். அப்போதுதான் இறைவனை அடையமுடியும்" - சத்யசாய்

இன்றைய குறள்

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்

பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

தான் கைது செய்யப்படாதது ஆச்சரியம் என்கிறார் நாடு திரும்பியுள்ள முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் பெனஸீர் புட்டோ

  • தமிழ்ச்செல்வனின் மறைவு பேரிழப்பு - விடுதலைப் புலிகளின் தலைவர் : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய கிளிநொச்சி மீது வெள்ளிக்கிழமை அரச படைகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மக்களின் மனங்களை வென்ற ஆழமாக நேசிக்கப்பட்ட தன்னிகரற்ற தலைவன் எனவும், அவர் உட்பட்ட 6 போராளிகளினதும் மறைவு என்றுமில்லாத ஒரு பேரிழப்பாகும் எனவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்துள்ளார். தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவையொட்டி பிரபாகரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சமாதான வழியில், நீதியான முறையிலே தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை என்றும், சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை என்றும் மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசி தமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள நாவலடியில் ஞாயிற்றுகிழமை மாலை வாகனமொன்றின் மீது இனம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அதில் பயணம் செய்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • தேர்தல்கள் குறித்து முடிவுவெடுக்கப்படவில்லை - பாகிஸ்தான் பிரதமர் : பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரஃப் அவர்கள் அவசரகால நிலை அறிவித்து ஒரு நாள் ஆகியிருக்கும் நிலையில் அங்கே அடுத்த ஜனவரியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் இனி எப்போது நடத்தப்படும் என்பது இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்று பாகிஸ்தானப் பிரதமர் சௌகத் அசீஸ் அவர்கள் கூறியுள்ளார். அத்துடன் சுமார் 300 முதல் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப் படுத்தினார். முன்னாள் பாகிஸ்தான உளவுத் துறை தலைவர் ஹமீத் குல், அரசியல்வாதியாக மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், வெளிநாட்டில் வாழும் முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் நவாஸ் ஷரீஃபின் கட்சிப் பிரதித் தலைவர் ஜாவீத் ஹஷ்மி ஆகியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தான் கைது செய்யப்படாதது ஆச்சரியம் என்கிறார் நாடு திரும்பியுள்ள முன்னாள் பாக்கிஸ்தான பிரதமர் பெனஸீர் புட்டோ
  • வவுனியாவில் ஐவர் சுட்டுக்கொலை : இலங்கையின் வடக்கே வவுனியா தவசிகுளத்தில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் ஆயுதம் தாங்கிய ஐந்து இளைஞர்களை சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • இந்திய மீனவர்கள் விடுதலை : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்ற குற்றத்திற்காகக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 97 இந்திய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்
  • விடுவிக்கப்பட்ட துருக்கியப் படையினர் நாடு திரும்பினர் : குர்த் இனப் போராளிகளால் விடுவிக்கப்பட்ட எட்டுத் துருக்கியப் படையினர் நாடு திரும்பியுள்ளனர்
  • சர்வதேச உதவியை கோரும் மெக்சிகோவின் டாபஸ்கோ மாகாணம் : கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோ நாட்டின் டபாஸ்கோ மாகாணத்தின் ஆளுநர் சர்வதேச உதவியை கோரியுள்ளார். இந்த வெள்ளத்தால் சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • குழந்தைகளை கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐரோப்பியர்கள் விடுவிப்பு : ஆப்ரிக்க குழந்தைகளை ஐரோப்பாவிற்கு கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பிரான்ஸ் நாட்டு பத்திரிக்கையாளர்களையும், நான்கு ஸ்பானிய நாட்டு விமானப் பணிப்பெண்களையும் சாட் அதிகாரிகள் விடுவித்துள்ளனர்

November 03, 2007

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

  • பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் சாசனம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசரநிலைப் பிரகடனம் சட்டவிரோதமானது என்று சற்று நேரத்துக்கு முன்பு அறிவித்திருந்த நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார்
  • பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகள் சிலவற்றை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பதாக தீவிரவாதிகள் கூறுகின்றனர் : பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணங்களில் பாகிஸ்தான் அரசப்படையினரை எதிர்த்துப் போரிட்டு வரும் தலிபான்களுக்கு ஆதரவான தீவிரவாதிகள், அந்த பகுதியில் இருக்கும் மூன்று தாலுக்கா அளவிலான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக கூறியுள்ளனர்
  • பர்மாவிற்கு இரண்டாவது முறையாக செல்கிறார் ஐ.நா விசேடத் தூதுவர் : பர்மாவில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக பர்மா விவகாரங்களுக்கான ஐ.நா வின் விசேட தூதுவர் இப்ராஹிம் கம்பாரி அங்கு விஜயம் செய்யவுள்ளார்
  • மெக்ஸிகோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது : மெக்ஸிகோவில் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள தென்பகுதி மாநிலமான டபாஸ்கோவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களை வானூர்திகள் மூலம் மீட்கும் பெரிய நடவடிக்கை ஒன்று தொடர்ந்து வருகிறது
  • ஹைதியிலிருந்து இலங்கை அமைதிகாப்புப் படையினர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் : ஹைதியில் ஐ,நா.மன்ற அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை துருப்பினர் நூற்று எட்டு பேர் பாலியல் அத்துமீறல்களிலும் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்
  • கர்ணல் கருணா லண்டனில் கைதுசெய்யப்பட்டார் : விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கர்ணல் கருணா, பிரிட்டிஷ் பொலிசார் மற்றும் குடிவரவுத்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையினால் பிரிட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியுள்ளது
  • தமிழ்ச்செல்வன் மறைவையொட்டி புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி நகரப்பகுதி மீது கடந்த வெள்ளிக்கிழமை அரசின் விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 6 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வன்னிப்பிரதேசம் எங்கும் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டதாக கிளிநொச்சியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
  • அமெரிக்க விருது பெற்ற தலாய் லாமாவுக்கு புதுதில்லியில் பாராட்டு விழா; இந்திய அமைச்சர்கள் புறக்கணிப்பு : திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு, சமீபத்தில் மிக உயரிய சிவிலியன் விருது வழங்கி கெளரவித்தது அமெரிக்க காங்கிரஸ். சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தலாய் லாமாவுக்கு அமெரிக்கா இந்த விருதை வழங்கியது

மனித மொழி பேசிய சிம்பான்சி மரணம்

வாஷிங்டன்: மனிதர்களுடன் சைகை மொழியில் பேச பழக்கப்பட்ட முதல் பெண் சிம்பான்சி குரங்கு இறந்து விட்டது. இது அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன் என்பது டார்வின் தத்துவம். அதே நேரத்தில் மனிதனுடன் குரங்கு பேச முடியுமா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கினர். அமெரிக்காவில் நெவாடா மாகாணத்தில் உள்ள சிம்பான்சி மற்றும் மனித தகவல் பரிமாற்றம் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், 1980-ம் ஆண்டு ஒரு பெண் சிம்பென்சி குரங்கு குட்டியை தேர்ந்தெடுத்து வளர்க்க தொடங்கினர். அந்த சிம்பான்சிக்கு `வஷூ' என்றும் பெயரிட்டு அழைத்து வந்தனர். சைகை மொழியில் தகவல் பரிமாற்றம் செய்ய அந்த சிம்பென்சி பல ஆண்டுகளாக பழக்கப்படுத்தப்பட்டது. நாளடைவில் விஞ்ஞானிகளின் சைகையை புரிந்து கொண்டும், அதற்கு உரிய வகையில் செயல்படவும், பதில் அளிக்கவும் `வஷூ' நன்கு பயிற்சி பெற்று விட்டது. மேலும், உலகளவில் `வஷூ'வுக்கு பல மனித நண்பர்களும் உருவாகினர். `வஷூ' நேற்று முன்தினம் இரவு உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டது. இதற்கு வயது 42. `வஷூ'வின் மறைவு, அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. `வஷூ' நினைவாக வரும் 12-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.` இயற்கைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதை நமக்கு தெரியப்படுத்த ஒரு துாதராக வந்தாள் `வஷூ'. ஏராளமானவர்களிடம் அவள் மிகவும் அன்பாக பழகினாள். அவளை நாங்கள் இழந்து விட்டோம்' என்று விஞ்ஞானிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். `வஷூ'வின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த தனியாக ஒரு இணையதள முகவரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில்,` மனித மொழியை புரிந்து கொண்ட முதல் சிம்பென்சி `வஷூ' தான். தனது வளர்ப்பு மகனுக்கும் அந்த மொழியை அவள் கற்றுக் கொடுத்தாள். `வஷூ' மிகவும் தனித்தன்மை வாய்ந்தது' என்பது உட்பட பல உருக்கமான தகவல்களை பலர் அந்த இணைய தள முகவரியில் வெளியிட்டு வருகின்றனர்

November 02, 2007

இன்றைய குறள்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனென்றோ ஆன்ற வொழுக்கு

வேறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுன்று, அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்

அறத்துப்பால் : பிறனில் விழையாமை

நடிகர்கள்தான் மகாபுருஷர்கள்

"முத்தமிழை வளர்க்க 50 ஆண்டுகளாக இந்தச் சென்னை மணவழகர் மன்றத்தைத் தொடர்ந்து நடத்தியிருப்பது பெரிய விஷயம். இப்போது இளைஞர்கள் வேறு மன்றங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். சினிமா வசனம்தான் இயல், சினிமா டப்பாங்குத்து பாட்டுதான் இசை, அந்த காட்சிகள்தான் நாடகம், சினிமா விளம்பரம்தான் ஓவியம், நடிகர்கள்தான் மகாபுருஷர்கள் என்று நினைக்கிறார்கள். இதுபோன்று இளைஞர்களை சீரழிப்பவர்களைக் கண்டிக்கும் துணிச்சல் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேண்டும். இதில் நான் மட்டும்தான் அடிக்கடி மாட்டிக் கொள்கிறேன்" - மருத்துவர் இராமதாசு