June 19, 2007
June 18, 2007
யார் குற்றம்? - சிறுகதை
அப்போதுதான் காலையில் வீட்டில் நடந்தது நிதிஷ்-ன் நினைவுக்கு வந்தது. “ஸ்வேதா! நான் கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், சேத்து லஞ்ச் சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு சரியில்லாம இறுமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! ஃபர்ஸ்ட், பெட்-டுமேல இருக்கற ஒன்னோட மெடிசின்ஸ், காஃப் சிரப் எல்லாத்தயும் எடுத்துவை, ஸ்வரேஷ் எடுத்து சாப்டாலும் சாப்டுருவாம்பா” என்று தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டு சமயலறையில் இருந்தவளிடம் “பாய்டா, ஐல் கால் யு’ என்று கூறி அவசரமாகச் சென்றுவிட்டான். “ஐயோ! என் மகனே! கடவுளே! என்னாச்சோ தெரியலயே! என்ன நடந்துருக்கும்...ம்ம்... சீரியஸா இருந்தாலும் பரவாயில்ல, டாக்டர்ஸ் எப்படியாவது காப்பாத்திருவாங்க, ஆனா உயிருக்கு மட்டும் எதுவும் ஆயிருக்கக்கூடாது” என்று அவன் வேண்டாத தெய்வமே இல்லை.
மருத்துவமனையில் காரை நிறுத்துவதற்குள், நிதீஷ் இறங்கி ஓடி ரிஷப்சனில், “ஸ்வரேஷ்-னு என்னோட சன்….? … “சாரி, சார்…சிரப், டேப்ளட்ஸ் எல்லாம் முழுங்கி, ஓவர்டோஸாகி….காப்பாத்த முடியல, பையன் எறந்துட்டான், கொஞ்சம் முன்னாடிக் கொண்டு வந்துருந்தாக்கூடக் காப்பாத்தியிருக்கலாம்’னு டாக்டர் சொன்னாங்க…எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்….அதோ அந்த எமெர்ஜென்ஸி வார்டுல இருக்காங்க பாருங்க”. நிதீஷ் இடிந்து போய் கீழே விழப்போகும் தருவாயில், டிரைவர் அப்படியே தாங்கலாகப் பிடித்துப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரவைத்தான். நர்ஸ் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்துக் கொஞ்சம் குடிக்கக் கொடுத்தாள்.
“நான் எப்போ அந்த எம்பிஞ்சு மொகத்தைப் பாப்பேன், எப்படி என் ஸ்வேதா மொகத்துல முழிப்பேன், ஐயோ! கடவுளே! ஒனக்குக் கண்ணே இல்லையா? நாங்க என்ன பாவம் செஞ்சோம்? ஐயோ! அவள எடுத்து வைக்கச் சொன்ன நான், அந்த மருந்தெல்லாம் நானே எடுத்து வச்சுட்டுப் போயிருக்கலாமே! கண்ணுக்குத் தெரிஞ்சே இப்படி எம்புள்ளய நானே கொன்னுட்டனே!’ என்று தன்னையும் மீறி கதறும்போது பக்கத்தில் நின்ற அனைவருமே கலங்கி விட்டனர்.
அதற்குள் ஸ்வேதா தன் மகனைக் கையில் அணைத்துக்கொண்டு அலறியபடியே ஓடி வந்து தன் கணவனை கட்டிப்பிடித்து, ‘என்னெ மண்ணிச்சுருங்க! பாவி! நானே எம்புள்ளயக் கொன்னுட்டேன், அப்பவே சொன்னிங்களே! நான் கேர்லெஸ்-ஸா இருந்துட்டேங்க! கொஞ்சம் முன்னாடிக் கொண்டுவந்துருந்தாலும் காப்பாத்தியிருக்கலாமே! அதுக்குத்தானெ நான் ஒங்களுக்கு போன் பண்ணேன். டாக்ஸி-ல கொண்டுவர்றதுக்குள்ள எல்லாமே போச்சே!...ஐயோ நான் என்ன செய்வேன்”……
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், யாரைக் குற்றம் சொல்வது, சுலபமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் அளவுக்குச் அவர்கள் சராசரி மனிதர்கள் இல்லை. நன்கு படித்தவர்கள். இழந்த இழப்பை யாராலும் ஈடுசெய்யமுடியாது. நிதீஷ், தன் இறந்துபோன மகனை ஒரு கையிலும், தன் மனைவியை மற்றொரு கையிலும் அணைத்துக்கொண்டு கண்ணீரோடு “ஐ லவ் யு ஸ்வேதா, ஐ லவ் யு” என்றான்.
இது யார் குற்றம்?
- நவின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:51 PM
6
comments (நெற்றிக்கண்)
டாக்டர் பத்மஸ்ரீ P.B.ஸ்ரீனிவாஸ் II
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:47 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:40 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:33 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 17 - ம் குறள்
தமிழோசை
இன்றைய "BBC" செய்தியில் (ஜுன் 18 திங்கட்கிழமை) அடுத்த குடியரசுத் தலைவரும் மேதகு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம்' தான் என்று உரக்க முழங்குகிறார் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். மேலும் ரஜினி'யின் சிவாஜி திரைப்படம் ஒரு பார்வை...ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் மணிக்கணக்கில் சிவாஜியைப் பற்றி ஏதாவது பேசிகொண்டிருக்கின்றன. அனுபவமிக்க சினிமா நோக்கர் ஸ்ரீதர்பிள்ளை ஆசியாவிலேயே இரண்டாவது அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகர் ரஜினி என்றும், இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் கூட்டணியில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெறும் என்கிறார். மேலும் தமிழோசை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும். BBCTamil.com BBCTamil.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:39 PM
0
comments (நெற்றிக்கண்)
திரு.B.H.அப்துல் ஹமீது
'இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம், தமிழ்ச்சேவை' என்று கூறும்போதே அது பிரபல அப்துல் ஹமீது அவர்களின் குரல் என்று சொல்லக்கூடிய அளவுக்கு "உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களை"க் கவர்ந்தவருடனான ஒரு நேர்முகம். Please 'click' the link FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:04 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
June 17, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:17 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Thamizhachi
உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:05 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:46 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 16 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:36 PM
0
comments (நெற்றிக்கண்)
June 16, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:19 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:03 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 15 - ம் குறள்
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:01 AM
0
comments (நெற்றிக்கண்)
இது எனது கல்லூரிக்காலத்துக் கவிதை!
நீதானே
பௌர்ணமி
நான் ஏன்
தேய்ந்து போகிறேன்?
நீதானே
தலை வாறுகிறாய்
நான் ஏன்
கலைந்து போகிறேன்...
நீயல்லவோ பூ
நான் ஏன்
வாடிப்போகிறேன்?
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:56 AM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:46 AM
0
comments (நெற்றிக்கண்)
June 15, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:33 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழ் தேசியம் : ஐ.நா. சபை முன்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:00 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 14 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:35 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Vivekananda Network
June 14, 2007
குடிகாரருக்குக் கட்சியில் இடமில்லை!
பரபரப்புக்குப் பெயர் போனவர் பா.ம.க. தலைவர் ராமதாஸ். புகைப்பழக்கம், போதை மருந்துகள், கிரிக்கெட் விளையாட்டு இவற்றைத் தடை செய்ய வேண்டும் என்ற போராட்டங்களைத் தொடர்ந்து, தற்பொழுது அவர் கையில் எடுத்து இருப்பது குடியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். குடிகாரர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் அவர். கள்ளச் சாராயத்தை ஒழிக்கவே முடியாது என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவிக்க, அதைத் தொடர்ந்து ராமதாஸ் இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 'பா.ம.க. நிர்வாகிகள் யாராக இருந்தாலும், குடிப்பழக்கம் இருப்பது தெரியவந்தால் உடனடியாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்' என்றும் தீர்மானம் போட்டிருக்கிறார். துணிச்சலான முயற்சிதான்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:16 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Thendral
தமிழோசை
பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி. பிரதிபா பாடீலை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்திருப்பது, இந்தியக் குடியரசின் 60-வது ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தார் சோனியா. சட்டத் துறையில் பட்டம் பெற்ற பிரதிபா பாட்டில் 72 வயதானவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்டால் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.மகாரஷ்டிர மாநிலத்தின் காபினட் அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், நாடாளுமன்ற மேலவை துணைத் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் உள்பட காங்கிரஸ் பரிந்துரைத்த பெயர்களை இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்ததை அடுத்து, பிரதிபா பாடீலுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கபடுவதற்கான ஒரு துவக்கமாக தான் கருதுவதாக தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்றைய "BBC" (ஜுன் 14 வியாழக்கிழமை) செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும் BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:46 PM
0
comments (நெற்றிக்கண்)
உயிர்த்தெழுவார்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:46 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Dinamalar
இன்றைய குறள்
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:19 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 13 - ம் குறள்
June 13, 2007
இன்றைய குறள்
துப்பாய தூஉ மழை
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 12 - ம் குறள்
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:34 AM
0
comments (நெற்றிக்கண்)
"கலைமாமணி" தேனிசைச் செல்லப்பா நேர்முகம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:25 AM
0
comments (நெற்றிக்கண்)
June 12, 2007
இன்றைய குறள்
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:09 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 11 - ம் குறள்
தமிழோசை
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:50 AM
0
comments (நெற்றிக்கண்)
June 11, 2007
தமிழா! நீ பேசுவது தமிழா?
| தமிழா.asx |
| Hosted by eSnips |
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : tamilnation.org
'சிம்பொனியில் திருவாசகம்'
காதலைப் பாலியல் வெறியாகவோ, மகிழ்ச்சியைக் களி வெறியாட்டமாகவோ, துயரத்தை விரக்தியாகவோ மாற்றி இசையைக் கொச்சைப் படுத்தாதவர் இசைஞானி இளையராஜா. தொடர்ந்து பேட்டியைப் படிக்க இணைப்பை அழுத்தவும். FreeTamil magazine presenting news,poem,story,movie & music reviews
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:26 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:16 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: பத்தாம் குறள்
Today's Quote
Remember that the nation lives in the cottage.
But, alas! Nobody ever did anything for them.
Our modern reformers are very busy about widow remarriage.
Of course, I am asympathizer in every reform,
but the fate of a nation does not depend upon the number of husbands their widows get,
but upon the condition of the masses.
Can you raise them?
Can you give them back their lost individuality without making them lose their innate spiritual nature?
Can you become an occidental of occidentals in your spirit of equality, freedom, work, and energy, and at the same time a Hindu to the very back bone in religious culture and instincts?
This is to be done and we will do it.
You are all born to do it.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:04 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
தமிழோசை
இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறதுஇந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.
எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.
அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.
50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களாள் கணிக்கப்பட்டுள்ளது.
BBCTamil.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:54 PM
0
comments (நெற்றிக்கண்)
கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களுடன் ஒரு நேர்முகம்
"மஹாராஜாவை விதூஷகர் கிண்டல் பண்றாப்லதான்" Please 'click' the linkNilacharal - A Tamil entertainment ezine presenting interesting contents and useful services
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:07 AM
0
comments (நெற்றிக்கண்)
"மன்மத லீலையை வென்றார் உண்டோ"
கர்நாடக இசைப் பாரம்பர்யம் திரு.அசோக் ரமணி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், அவர் வேறுயாருமில்லை, ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, தமிழகத்துத் "தியாகையர்" என்று அனைவராலும் போற்றப்பட்ட திரு.பாபநாசம் சிவன் அவர்களின் பேரன்தான். அவருடைய இசை சம்பந்தப்பட்ட சேவைகளையும், சிறப்புக்களையும், மிக அழகாக நம்மோடு ஒரு நேர்முகமாக அமெரிக்கப் பண்பலை வரிசையின் மூலமாகப் பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது தாத்தா பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்ட நேர்முகம். வழக்கம்போல் மிகச்சிறப்பாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நமது நண்பர் திரு.ஸ்ரீ அவர்கள். நேர்முகத்தைக்கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
Tamil1 Tamil2 Tamil3
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:03 AM
0
comments (நெற்றிக்கண்)
June 10, 2007
"டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி"
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:38 PM
0
comments (நெற்றிக்கண்)
எனது புதுக்கவிதை
எனது "பேரிழப்பு" புதுக்கவிதை 'நிலாச்சாரல்' இணையதள சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கவிதையைப்பார்க்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
#b2#b2
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : www.nilacharal.com
Today's Quote
There is nothing either good or bad, but thinking makes it so
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடத்தாதவனின் நிலையும் ஆகும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: ஒன்பதாம் குறள்
தமிழோசை
கடந்த வியாழக்கிழமை இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாக ஆயுதம் தாங்கிய பொலிசாரினால் வெளியேற்றப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கு பஸ்களில் சுயவிருப்பத்திற்கும் மாறாக அனுப்பிவைத்த சம்பவத்திற்கு இலங்கை அரசு இன்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசின் சார்பில் இதற்கான பகிரங்க வருத்தத்தினை இன்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.
மேலும் "BBC" இன்றைய (ஜுன் 10 ஞாயிற்றுக்கிழமை) செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:59 PM
0
comments (நெற்றிக்கண்)
June 09, 2007
இதக்கேட்டுட்டு ஒங்க கருத்துக்களைப் பதிவு செய்ங்க ப்ளீஸ்...
சி.எஸ்.ஜெயராமன் பாடல்கள்
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:07 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: எட்டாம் குறள்
குருஜி
ஆன்மீக குரு என்று அறியப்பட்ட இந்தியா, இன்று தகவல் தொழிற்புரட்சிக்கு தலைமை தாங்கி தொழில்நுட்ப குருவாகவும் மலர தயாராகிக் கொண்டிருக்கிறது. புதியதான வெற்றிக்கென விளைக்கப்பட்ட குருஜி டாட் காம் மூலம் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஓர் புகழ் மகுடம் சூட்ட பேராவல் கொண்டுள்ளோம். குருஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் ஆசிரியர்களிடமிருந்து தேவையான உதவிகளை தேவையான நேரத்தில் பெறலாம். அதுபோன்று, குருஜி டாட் காம் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
குருஜி டாட் காம் என்பது க்ராளரின் மூலம் இந்தியா மற்றும் அதைச் சார்ந்துள்ள தகவல்களை அறிய உதவும் முதல் தேடுதல் பொறியாகும். எங்களின் ப்ரொப்ரைட்டரி அல்காரிதம், வலையில் உள்ள இந்தியத் தகவல்களை அறிந்து தங்களுக்கு மிக வேகமாக கிடைக்கச் செய்கிறது. ஐஐடி, ஐஐஎஸ்சி மற்றும் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளம், ஆர்வமிக்க பொறியாளர்களைக் கொண்டுள்ள எமது குழு, இந்தக் கண்டுபிடிப்பு நாளுக்கு நாள் சிறப்புற அயராது உழைக்கிறது. Welcome to Guruji.com, the Gateway to Indian Cyber-Space! To visit Please 'click' the link guruji : the Indian search engine
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:08 AM
0
comments (நெற்றிக்கண்)
June 08, 2007

நேற்று வரை மூன்று தமிழ்
இன்று முதல் நான்கு தமிழ்
இதோ கைத்தொலைபேசியில்
கணினித் தமிழ்!
Kavipperarasu also composed this for the youth:
அன்புள்ள காதலி
இனி தமிழில் காதலி
Please 'click' here, Home of Murasu Anjal
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:38 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:30 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
தனக்குவமை இல்லாதான் தாள்சோர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:42 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: ஏழாம் குறள்
Today's Quote
but by the view they take of them.
Epictetus, c 200 AD
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:40 AM
0
comments (நெற்றிக்கண்)
வேட்டையாடு விளையாடு 100வது நாள் விழா
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:49 AM
0
comments (நெற்றிக்கண்)
வேட்டையாடு விளையாடு 100வது நாள் விழா -கமல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:46 AM
0
comments (நெற்றிக்கண்)
வாங்கிக்கொள் வட்டியோடு - அல்லிராணியே!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:51 AM
0
comments (நெற்றிக்கண்)
Part II
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:41 AM
0
comments (நெற்றிக்கண்)
June 07, 2007
"எங்கள் திறன் உலகை மாற்றி அமைப்பதிலல்ல தங்கியிருக்கிறது. எங்களை நாங்கள் மாற்றி அமைப்பதில்தான் தங்கியிருக்கிறது. நாங்கள் உலகில் விரும்பும் மாற்றத்தை நாங்களே அடையவேண்டும்..."
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:46 PM
0
comments (நெற்றிக்கண்)
மொழி என்பது வாழ்க்கை!
அப்படி மாறினா, அது தாயையே மாத்திக்கிட்ட மாதிரி! Please 'click' the link
மொழி என்பது வாழ்க்கை!
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:18 PM
0
comments (நெற்றிக்கண்)
"தமிழ்" வான்புகழ் வள்ளுவன் முதல் கலைஞர் வரை
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:50 PM
0
comments (நெற்றிக்கண்)
இசைக்குயில் வசந்தகோகிலம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:42 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : TFM Page Magazine
இன்றைய குறள்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:23 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: ஆறாம் குறள்
தமிழர்கள் வெளியேற்றம்
BBCTamil.com
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:00 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Vivekananda Network
கிழக்குப் பதிப்பகம்
ஒரு புதிய எழுத்தாளர் தமது படைப்பை நூலாக வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
1. தனது படைப்பை விரும்பும் பதிப்பாளரைக் கண்டுபிடிப்பது. அதன் பிறகு பதிப்பாளர் மீதியைக் கவனித்துக் கொள்வார்.
2. பதிப்பாளர் கிடைக்காத பட்சத்தில் தன் புத்தகத்தைத் தானே பதிப்பிப்பது. முன்னைப் போல் இல்லாமல் மிகக்குறைந்த செலவில் on-demand publishing மூலம் பதிப்பிப்பது இப்பொழுது சாத்தியமாகியுள்ளது. Please 'click' the link down
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:42 AM
1 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
June 06, 2007
வாழ்ந்த தெய்வம்
வாழ்ந்த தெய்வம்
வான் நோக்கிச் சென்றுவிட்டால்
வராத கண்களிலும்
வற்றாத கண்ணீர் வரும்.
பூமிதன்னில் சேவைசெய்து
புனிதமாகியது
போதுமென்றென்னி
வானகம் சென்றாயோ
அங்கும் உன் புனிதப்
பாதம் பதிக்க
தாயே!
உன்னால் என் தாயகத்துக்குப் பெருமை!
நீர் இப்பூவுலகில் இல்லாவிட்டாலென்ன
உன்னை வானுலகிலாவது சந்திக்கமாட்டேனா?
அதற்காகவேணும் நான் அங்கு வரவேண்டும்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:52 PM
0
comments (நெற்றிக்கண்)
மேதக ஆளுநர் டாக்டர் திரு.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பேச்சு
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:30 PM
1 comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:24 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: ஐந்தாம் குறள்
"தமிழோசை"
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:16 PM
0
comments (நெற்றிக்கண்)
Today's Quote
The most incomprehensible thing about the universe is
that it is comprehensible.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:11 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
June 05, 2007
நான்காம் குறள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:31 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: இன்றைய குறள்
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
"தமிழோசை"
செய்தி கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:00 PM
0
comments (நெற்றிக்கண்)
June 04, 2007
மனசே சுகமா?
திருமதி.நிலா எழுதும் ஒரு ஊக்கத் தொடர். படித்துவிட்டுத் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்க: Please 'click' the Link down Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:33 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
Today's Quote
with that of vairâgya?
Vivekananda: The first step in
vairâgya is very painful. When perfected, it
yields supreme bliss.
Selections from the Belur Math Diary. Complete Works, 5: 319
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:03 PM
2
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Vivekananda Network
நி ஸ க ம ப நி
இசைக்கு மொழி தேவையில்லை.
என் அபிமான குரு திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுக்குச் சமர்ப்பணம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:32 PM
1 comments (நெற்றிக்கண்)
நடிகர் திலகம் சிலை திறப்பு வீடியோ
இந்த வீடியோவிற்கு விளக்கம் தேவையில்லை.
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:23 PM
0
comments (நெற்றிக்கண்)
'உலகசாதனை'
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:36 PM
0
comments (நெற்றிக்கண்)
"இன்றைய குறள்"
மலர்மிசை ஏகினான் மாணடி சோர்நதார்
நிலமிசை நீடுவாழ் வார்
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:52 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: மூன்றாம் குறள்
"தமிழோசை"
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:51 AM
0
comments (நெற்றிக்கண்)
June 03, 2007
விமலா ரமணி
இளைஞர்கள்
வெண்சாமரம் போன்றவர்கள்
அவர்களை ஒட்டடை அடிக்கப்
பயன் படுத்தாதீர்கள்
அவர்கள் நெம்புகோல்கள்
பல் குத்தப் பயன்படுத்தாதீர்கள்
அவர்கள் வெடிகுண்டுகள்
பொக்ரானில் வெடிக்க வேண்டியவர்கள்
கோவையில் பயன்படுத்தாதீர்கள்..........
இன்றைய எழுத்தாளர் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒரு நேர்முகம். வியாபாரமாகிப்போன இன்றைய எழுத்துலகில், எழுதுபவர்களையெல்லாம் 'கட் அன் பேஸ்ட்' கவிஞர்கள் எனக் 'கமென்ட்' அடிக்கும் கர்வமிக்க எழுத்தாளர்களுக்கு நடுவில், "நான் எழுத்தாளர்களைப் பார்ப்பதை விட எழுத்துக்களைத்தான் பார்க்கிறேன்" என்கிறார். இப்படியும் ஒரு எழுத்தாளர்... தொடாந்து பேட்டியைப் படியுங்கள். அழுத்தவும்.
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews:
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:35 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:19 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: - Swami Vivekananda
"தமிழோசை"
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:06 PM
0
comments (நெற்றிக்கண்)
"இன்றைய குறள்"
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:09 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: இரண்டாம் குறள்
"பழமொழி"
பழம் என்று ஆரம்பித்தால் மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கலாம். இந்தக்காய் சாப்பிட்டால் சூடு, அந்தக் காய் சாப்பிட்டால் அரிப்பு இப்படியாக சொல்லி எதைச் சாப்பிடுவதென்ற குழப்பங்கள் ஏற்படும் வேளையில், பழங்களைப் பற்றி யாரும் அப்படிச் சொல்வதில்லை. ஏனெனில் பழங்கள் எல்லாமே உடலுக்கு நல்லதுதான். அதனால்தான் மொழிகளுக்குள் பழம் நுழைந்து "பழமொழி" யாகிச் சுவையாகி நமது கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் நாசுக்காகச்சொல்லிப் புரியவைக்கிறது. பழமொழிகளைப்பற்றி நூல்கள் அவ்வளவாக இல்லை, "பழமொழி நானூறு" போன்ற சொற்ப நூல்கள் மட்டுமே உள்ளன. காரணம் இவையெல்லாம் பேச்சு வழக்கில் பெரிதும் புலக்கத்தில் இருந்ததால் எழுதிவைக்காமல் போயிருக்கலாம். கிராமங்களில் இன்றும் பழக்கத்தில் இருந்தாலும் நாளடைவில் மறைந்தோ, மறந்தோ போகலாம். ஆனால் அவ்வாறு போகக்கூடாதென்று ஒரு அருமையான நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறது (It's different - News, Views & Music(KZSU Stanford 90.1 FM radio show)நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் எனது அருமை நண்பரும், உங்களின் அபிமானத்துக்குரிய நண்பருமான திரு.ஸ்ரீ அவர்கள். நிகழ்ச்சியில் விருந்தினராக வந்து மிகத்தெளிவாக பழமொழிகளைச் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் நம்மோடு பகிர்ந்துகொண்டவர் திருமதி.டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்கள். மேலும் இதுபோன்ற அரிய நிகழ்ச்சிகளைத் தமிழகத்தில் ஏன்? இந்தியத் தொலைக்காட்சிகளிலோ அல்லது வானொலியிலோ ஒளி அல்லது ஒலி பரப்பியதாக எனக்கு நினைவு இல்லை. ஆனால் அமெரிக்காவில் கேட்கமுடிகிறது என்றால் நம்பமுடிகிறதா? அது மட்டுமின்றி ஒலிபரப்பிய பாடல்களும், தொகுத்து வழங்கிய விதமும் என்னை மிகவும் பிரமிப்புக்குள்ளாக்கியது. இந்த நிகழ்ச்சியைக் கேட்கும்பொழுது நாம் நமது கிராமங்களில், ஒலிபெருக்கிகளில் பாடல்களைக் கேட்டுக்கொண்டு அந்தப் பசுமையான வயல்களில், ரம்மியமான உணர்வுகளோடு செல்வது போன்ற ஒரு உணர்வு எனக்கு இருந்தது. இந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சியைக் கேட்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். நீங்களும் கேட்டு உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்வதோடு, நேரடியாக வானொலி நிலையத்தாருக்கும் அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி (itsdiff@gmail.com). நன்றி. நிகழ்ச்சியைக் கேட்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
Archives
Archives
Archives
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:22 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : itsdiff.com
June 02, 2007
"வெள்ளையம்மா"
சுப்ரமணி ஒண்டிக்கட்டை, கட்டைப் பிரம்மச்சாரி. அவனுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள நான்கே நான்கு எருமை மாடுகளும், இரண்டு கன்றுகளும்தான். அதில் கறக்கும் பாலை இந்த டீக்கடையில் ஊற்றுவதும், காலையிலும் மாலையிலும் ஓசியாகக் கிடைக்கும் டீயைக்குடிப்பதும், எருமைகளை மேய்த்து, குளிப்பாட்டி அழகு பார்ப்பதும், அவ்வப்போது சந்தைக்குச் சென்று, ஊரில் உள்ளவர்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கிவந்து கொடுப்பதும்தான் அவன் வேலை. ஊரில் உள்ளவர்களுக்கு சுப்ரமணி ஒரு பெரிய உதவியாக இருப்பதோடு, தன் தகப்பன் விட்டுச்சென்ற மூன்று ஏக்கர் நிலத்தைப் பராமரித்துக் கொள்வதும்தான் வாழ்க்கை. தவறாமல் வருடா வருடம் பழநி ஆண்டவருக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, கால்நடையாய் நடந்து மலைக்குப் போய் வந்தவுடன் வீடு தவறாமல் பஞ்சாமிர்தம் கொடுப்பதுதான் அவனது பெரிய கடமை. ‘எலேய்! சுப்ரமணி!’ என்று அவனைவிட வயதில் சின்னவர்கள் கூட கூப்பிடும் அளவுக்கு சுப்ரமணி செல்லப்பிள்ளை. ஆனால் மாலை போட்டிருக்கும்போது மட்டும், அனைவரும் “சாமி” என்று மரியாதையாக அழைப்பார்கள். அந்த வாழ்க்கை சுப்ரமணிக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு நாள் கொட்டும் மழையில் தலையில் சாக்கை மடித்து கொங்கானி போட்டுக்கொண்டு, ஊர்த்தலைவர் மகன் பக்கத்துக் கிராமத்துக்குப் பள்ளிக்குச் சென்றதைப் பார்த்து, மனது கேட்காமல், ஓடிவந்து தான் வைத்திருந்த குடையைக் கையில் கொடுத்துவிட்டு, அவன் போட்டிருந்த சாக்கை இவன் வாங்கிக்கொண்டு, “எரவமாடு மேய்க்கறவனுக்கு எதுக்கிய்யா பட்டன் கொடை, நீ படிக்கிற புள்ள இந்தா கொண்டு போய்யா” என்று கொடுத்துவிட்டு, அந்த பிஞ்சு முகத்தில் வந்த சந்தோசக் களிப்பில் சந்தோசப்பட்ட ஒரு சராசரி மனிதன்தான் சுப்ரமணி.
‘சாமி எப்ப மலைக்குப்போகுது? ராமு கேட்க, வார வெள்ளிக்கெழம வெள்ளெனக் கௌம்பிறேஞ் சாமி, ‘சரி, மறக்காம மாட்டுக்கு தீணி வச்சுரு, பாலு ஒட்டக் கறந்துறாத, கண்ணுக்குட்டி தொத்தலாப் போய்ரும்’. சுப்ரமணி தன் சொந்தங்களைப் பிரிந்து செல்வதே இந்த பாதயாத்திரை சமயத்தில்தான். ஒவ்வொரு வருடமும் கோயிலுக்குச் செல்லும் அந்த நாட்களில் ராமுதான் மாடுகளைப் பார்த்துக்கொள்வதுண்டு.
40 நாட்களுக்கு மேல் வளர்த்த தலைமுடியையும், தாடியையும் பழநி முருகனுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு அந்தி சாயும் நேரத்தில் திரும்பிய சுப்ரமணி தன் வீட்டை நெருங்கும்போது ஏதோ ஒரு வித்யாசம் தென்பட்டது. தன் வீடுதானா? என்ற ஆச்சர்யத்தோடு, நெருங்கி வந்தான். வாசல்புறம், மாடு கட்டும் கொல்லைப்புறம், தவிட்டுத்தொட்டி எல்லாம் மிகச் சுத்தமாக தன் தலையைப் போலவே ‘பளிச்’சென்று இருந்தது. வழக்கமாகக் கோயிலுக்குப் போய்த் திரும்பியவுடன், அந்த மொத்த சாணத்தையும், கொல்லைப்புறத்தையும், வீட்டையும் சுத்தம் செய்ய குறைந்தது மூன்று நான்கு நாட்கள் எடுக்கும் சுப்ரமணிக்கு. யார் சுத்தம் செய்திருப்பார் என ஒன்றும் புரியாதவனாய் நெருங்கி வந்தான். திடுக்கிட்டு நின்றான். தன் வீட்டுக்கு பூட்டுப் போட்டு பூட்டிவைக்கும் அளவுக்கு பொக்கிஷங்கள் இல்லாவிட்டாலும், மற்ற பிராணிகள் உள்ளே செல்லாமல் இருக்க கம்பி போட்டு முறுக்கி, இறுக்கிக் கட்டிவிட்டுத்தான் போயிருந்தான். ஆனால் அது அறுக்கப்பட்டு வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒன்றும் புரியாதவனாய் திறந்து பார்த்தான். அவன் கண்களால் நம்பவே முடியவில்லை. உள்ளே அழகாக விளக்கு ஏற்றிவைக்கப்பட்டு ‘பளிச்’சென்று எரிந்து கொண்டிருந்தது. கத்தரிக்காயும், தட்டைப்பயறும் கலந்து செய்து புளிக்குழம்பு வாசனை பசியைக் கிள்ளிவிட்டது. கண்களில் லேசாகக் கண்ணீர் சுரக்க, இந்த ராமுக்கு நான் என்னதான் கைம்மாறு செய்யப்போகிறேனோ என மனதுக்குள் எண்ணி, கொண்டுவந்த பையை ஆணியில் தொங்கவிட்டுவிட்டு வெளியே வந்தான். அவன் வெளியே வருவதற்கும், தண்ணீர்க் குடத்தை தலையில் இருந்து இறக்கி உள்ளே கொண்டுபோக வந்த அந்தப் பெண்ணுக்கும் ஒரு அடி தூரம்தான். அவன் ஒன்றும் புரியாதவனாய் திகைத்துப்போய் நின்றான்.
‘யார் நீ…நீங்…நீங்கெ? இங்க எப்படி வந்திய’ சுப்ரமணி கேட்டான். ‘எனக்குனு யாருமில்ல, என்னெக் குத்தஞ்சொல்லாதிய, எனக்கு வேறவழி தெரியல, என்னெ வெளியகிளிய வெரட்டிராதிய, யாம்பட்டுக்கு இங்கன ஒரு மூலையில குத்தவச்சுக்கறேன், என்னால ஒங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது’ என்று சொல்லி முடித்தவள், பதில் வருவதற்குள், நா..வந்து ரெண்டு நாளாச்சு இந்த வீட்டுக்குள்ள, இனிமே நா எங்கெ போறது? ‘நீங்க எதுவுஞ்சொல்லாம இப்படி இருந்தியன்ன, ஒரு கெணத்துலயோ. கயத்துலயோ என்னோட சீவென முடிச்சுக்கிருவேன்’ என்றாள். சுப்ரமணிக்கு ஒன்றும் பேச வாய் வரவில்லை, ‘இந்தா வாரேன்’ என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
தனக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இன்று யாரும் இல்லை. தான் இரண்டு வயதாக இருக்கும்போது தனது தந்தை, தன்னையும், தனது ஆத்தாவையும் விட்டு ரங்கூன் போனதாகவும், அதன் பிறகு அவர் வேறொரு திருமணம் செய்துகொண்டு திரும்பி வரவே இல்லையெனவும் இரண்டு மூன்று தபால்களுக்குப் பிறகு தொடர்பே தொடர்பே கிடையாது எனவும் தனது ஆத்தா சொன்னதாக ஞாபகம். ஆனால் இந்தப் பெண் யார்? எங்கிருந்து வந்தாள்? நான் இதுவரை என்னொடு ஒரு பெண்ணைச் சேர்த்து நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இது எப்படி நடந்தது… ஒன்றும் புரியாதவனாய் ஒரே குழப்பத்தில் தன்னால் எந்த முடிவுக்கும் வரமுடியாதவனாய், வேறு வழியின்றி…நேராக ஊர்த்தலைவர் வீட்டுக்குச் சென்று, அவரிடம் நடந்ததைப் பக்குவமாக எடுத்துச் சொன்னான்.
இந்தப்பெண் வந்து இரண்டு நாட்களாகியும் ஊரில் யாருக்குமே தெரியாமல் போனதற்கு ஆச்சர்யப்பட்டு எல்லாவற்றையும் தெளிவாக விசாரித்தபின் ஊர்த்தலைவர் ஒரு முடிவுக்கு வந்தார். ‘சரி நீ வீட்டுக்குப்போ, ஒன்னும் மனசப் போட்டு கொழப்பிக்காதெ, வெள்ளெனப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் சுப்ரமணி’ என்றார்.
தன் வாழ்நாளில் இப்படியொரு சூழ்நிலை வருமென்று அவன் நினைத்ததே இல்லை. இந்த இரவு மட்டும் அவனால் மறக்க முடியாத ஒன்று. எங்கு போவதென்று ஒன்றும் புரியாதவனாய், சரி என்ன ஆனாலும் சரி, அந்தப் பழநி முருகன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நடப்பது எதுவானாலும், அது அவன் சித்தம் என்று, தானே புலம்பி, புலம்பி, சோர்வடைந்து தன் கிராமத்தில் உள்ள டி.வி. ரூமில் படுத்துக்கொண்டான். ஆனால் தன் நினைவுகள் அனைத்தும் தன் வீட்டைச் சுற்றியும், அந்தப் பெண் பற்றியுமே சுற்றிச் சுற்றி வந்தன. மனதுக்குள் ஒரு பயம் வேறு, அவள் ஏதாவது அவசரப்பட்டுச் செய்துகொண்டால்? மனது கேட்கவில்லை, நல்ல பௌர்ணமி நிலவு, தன் வீட்டை நோக்கி நடந்தான், அவன் கிராமத்தில் இத்தனை நாய்கள் இருப்பதை இன்றுதான் உணர்ந்தான், அவனைக் கண்டதும் படுத்திருந்த மாடுகளும், கன்றுகளும் தீணி போட வருவதாக எண்ணி விருட்டென எழுந்து நின்றன பாவம்!
தனது மாடுகள் தன்மீது உரசுவதிலிருந்தே, அவற்றின் பார்வைகளிலிருந்தே அவைகளுக்கு என்ன வேண்டும் என்று உணரமுடியும் அளவுக்கு, அவைகளோடு ஒன்று கலந்திருந்த சுப்ரமணி இன்று அவைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. கதவைத் திறந்தான், அங்கு அவள் நிம்மதியாகக் கொறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள், அவளையே உற்றுப்பார்த்துக்கொண்டு நின்ற சுப்ரமணி, நிம்மதியாகப் பெருமூச்சு விட்டு, பிறகு ஒரு தெளிவான முடிவோடு டி.வி. ரூமுக்கே திரும்ப வந்து படுத்துக்கொண்டான்.
பொழுது பளீரென விடிந்தது. ஊர்க்கூட்டம் கூடியது. ஆளாளுக்குப் பேசினர். ‘சரிப்பா, அவனும் ஒண்டிக்கட்டை, அவனுக்குனு யாரு இருக்கா, காலம்பூறா எருமையக் கட்டிகிட்டு அழுகுறாம்பா, இந்தப் புள்ளயிம் பாத்தா, நல்ல மாதிரித்தான் தெரியிது, அந்தப் புள்ள பேரு என்னப்பா…ம்ம்….ம்..வெள்ளையம்மா. அதுக்கிட்டயும் விசாரிச்சேன், அது இங்க சபைக்கி வரக் கூச்சப்படுது. அதுக்கும் கூடப்பொறந்தவக, சொந்தஞ்சொரவுனு சொல்லிக்கிறதுக்கு யாருமில்ல, ஊரு கெழக்கயாம், பேசிப்பாத்தேன். இவனும் ஒத்தையாத்தானே கெடக்கிறான், நாம எல்லாருமே இவன அடிமாடாட்டமா வேலயத்தான் வாங்கிக்கிட்டமே வாசி, அவனுக்குனு என்னத்த செஞ்சிப்புட்டோம்? நளைக்கி அவெம்பாட்டுக்கு படுத்துக்கிட்டான்னா ஒரு தண்ணிவெண்ணி வச்சுக் குடுக்கக்கூட ஆளு இல்ல. நம்ம பொஞ்சாதியலயா அனுப்ப முடியிம்? அதனால நாமதெ…ஆளும்பேருமா நின்டு...அங்கென கோயில்ல வச்சு கட்றா தாலியன்றவேண்டிதான்...…என்ன நாஞ்சொல்றது?’ ஒரே மூச்சாகச் சொல்லிமுடித்தார் ஊர்த்தலைவர்.
கல்யாணம், மனைவி, குடும்பம் குழந்தை இதுபற்றியெல்லாம் சுப்ரமணி கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை. அதற்கான வயதையும் தாண்டிவிட்ட நிலையில், நடப்பதையெல்லாம் தடுக்கமுடியாமலும், ஊர் மக்கள் தனக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டுமென்று நினைத்து இப்படிச் செய்துவிட்டதாகவும், தான் நினைக்காத ஒன்று நடந்துவிட்டதாகவும் ஒருபுறம் நினைத்தாலும், மனதின் ஏதோ ஒரு மூலையில் தனக்கும் ஏதோ ஒரு சொந்தம் இருப்பதாகவும், கொட்டும் மழையில், தாங்கமுடியாத குளிரில் கைகளைத் தன் கால்களுக்கு நடுவில் வைத்துத் தூங்கமுடியாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கும்போது, யாரோ தன் மீது ஒரு கம்பளிப் போர்வையால் முழுவதுமாகப் போத்திவிட்டுச் சென்ற ஒரு சுகமான ஒரு உணர்வு தோன்றியது. அது அவனுக்குத் தேவைப்பட்டது.
‘என்ன சுப்ரமணி! இப்பல்லாம் பால் நெறயக் கொண்டுவர்ற, மாட்டுக்கு நல்லாத் தீணி வக்கிறியா?’ ராமு கேட்டான். ‘ஆமா ராமு, இன்னும் ரெண்டு மாடு கன்னு போட்டுருக்கு அதான் பாலு கொஞ்சம்கூட, நீயென்ன குடுத்த காசத்தானே குடுக்கப்போற, அதுக்குனு கூடவா குடுத்துறப்போறெ’ சுப்ரமணி பதில் சொன்னான்.
‘வெள்ளையம்மா! சுப்ரமணி எங்க புள்ள” போஸ்ட் மாஸ்டர் கேட்டார். ‘இங்கனதான் நின்டது, எரவமாடப் பத்திகிட்டு, கம்மாப்பக்கம் போய்ட்டதோ என்னமோ! இந்தா நான் கூட்டியாறேன்” வெள்ளயம்மா சொன்னாள். பின்புறமுள்ள கண்மாய்ப் பக்கம் போய்ப் பார்த்து, மாடுகளைக் குளிப்பாட்டிக்கொண்டிருந்த சுப்ரமணியை, ‘இஞ்சொறுங்க, ஒங்களத்தானெ, இந்தா தவால்காரு கூப்புடறாரு’ அடித்தொண்டயில் அழைத்தாள் வெள்ளயம்மா. “ஏன்டி! நீயென்ன கிறுக்கா, எந்தக் கொழுந்தியா எனக்குக் காயிதம் போடப்போறா, இல்ல ஒனக்குத்தான் கலைட்ரு வேலைக்கி கடிதாசி வரப்போகுதா’ வேலையப் பாப்பியா’ என்றான் சுப்ரமணி நக்கலாக. ‘சுப்ரமணி! ஒனக்கு லட்டர் வந்திருக்குப்பா’ போஸ்ட்மேன் நேரடியாக அங்கேயே வந்துவிட்டார். ‘என்னய்யா சொல்றிய? எனக்கா? யாரு கடுதாசி போடப்போறா?’ கரையேறி வந்தான் சுப்ரமணி.
லட்டரை அவரே படித்து, முடித்து சுப்ரமணியிடம் கொடுத்துவிட்டு, ‘உங்க சின்னத்தா, தம்பிங்க, புள்ளையளோட எல்லாரும் ராமேஸ்வரத்துல அகதிகள் முகாம்ல இருக்காகலாம், ஒன்னெ வரச்சொல்லி விலாசம் கொடுத்திருக்காகப்பா’ சொல்லிமுடித்தார் போஸ்ட்மேன். சுப்ரமணிக்குத் தலைசுற்றியது, ஒன்றும் புரியவில்லை. வெள்ளையம்மா முகத்தைப் பார்த்தான், அத்தனை மகிழ்ச்சி. ஏய்! வெள்ளையம்மா! பாத்தியாடி, நீ வந்த நேரமுடி, எங்க சின்னத்தா, புள்ளயல்லாம் கொண்டுவந்து சேத்துட்டடி! இனி எனக்கென்ன கொறை? தாங்கமுடியாத சந்தோசத்தில் குளிப்பாட்டிய எருமைமாடுகள் மைலைப்பசுக்கள் போல் காட்சியளித்தன. சுப்ரமணியின் சந்தோசத்தில் வெள்ளையம்மாவுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி, தன்னைத் தாலிகட்டிய அன்று இருந்ததைப்போன்ற ஒரு முகமலர்ச்சி, சந்தோசம். அவனுடைய ஏக்கங்களையும், உணர்வுகளையும், தேவைகளையும் அவளால் மட்டுமே உணரமுடியும். அதன் விளைவு! கொக்கரித்துக்கொண்டு திரிந்த இரண்டு வெடைக்கோழிகள் குழம்பில் கொதித்தன.
இராமேஸ்வரம், முகமே தெரியாது. எப்படிக் கண்டுபிடிப்பது? யாரைப்போய்ப் பார்ப்பது? ஒன்றும் புரியாதவனாய் ஒரு வழியாய்ச் சேகரித்துக்கொண்டு சென்ற தகவல்களையும், தான் கொண்டுபோன குடும்ப அட்டை மற்றும் சில ஆவணங்களையும் காட்டி அங்குள்ள முகாமில் விசாரித்து முடிக்கும் வேளையில் ‘தம்பி! சுப்ரமணி’ ஒரு குரல். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்பதற்குள், தன்னைக் கட்டிப்பிடித்து கதறியழும் அந்தத் தாயின் முகத்தைக் கூட ஒழுங்காகப் பார்க்கமுடியவில்லை, தானும் கதறியழுதான். ஆனாலும் அவன் கண்கள் யாரையோ தேடியதை உணர்ந்த தாய், எங்களையெல்லாம் அனாதியா விட்டுட்டு அந்த மனுஷன் போய்ட்டாருய்யா, எங்களுக்கு யாருமில்லன்னு நெனச்சோம், கடவுளாப் பாத்து ஒன்ன அனுப்பிருக்காருய்யா, ஒங்கப்பாவே திரும்பி வந்தமாதிரி இருக்குய்யா’ என்று கதறியழும்போது, அங்கு தம்பிகள், தம்பியின் மனைவிகள், பிள்ளைகள் எல்லோரும் தன்னைக் கட்டியணைத்து அழுதுகொண்டிருந்தனர். என்ன ஒரு உணர்ச்சி ததும்பிய நிமிடங்கள்! தாம் வாழ்ந்து களித்த தேசத்தை விட்டு, பழகிய மண்ணையும் மக்களையும் விட்டு, அகதிகளாக வந்து, சற்றும் எதிர்பாராது, திடீரெனச் சொந்தம் ஒன்றைக் கண்டு கொண்டுவிட்டால்! அந்தக் கணம், அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.
ராமுவின் டீக்கடைக்குப் பால் கொடுப்பதை சுப்ரமணி நிறுத்திவிட்டான். குடும்பம் பெரியதாகி விட்டது. பக்கத்தில் இரண்டு தம்பிகளுக்கும் சிறிய வீடுகள் கட்டிக்கொடுத்துவிட்டான். ஆளுக்கொரு ஏக்கர் நிலம் கொடுத்துவிடலாம் என்று யோசிக்கையில் ‘அதொன்டும் வேண்டாமண்ணா! நாம ஒன்டாக இருப்பம், அதொன்டு போதும், எங்கட அண்ணன் வேறு, நாங்கள் வேறல்ல அண்ணா! எதச்செய்தாலும், சேந்து செய்வொம்’ என்று தம்பிகள் சொன்னபோது இதுவரை கலங்காத சுப்ரமணியின் கண்களும் அழத்தொடங்கின. என்ன ஒரு ஆரோக்யமான உணர்வுகள்! கொடுக்கல் வாங்கலுக்கே கொலை செய்யத்துணியும் பங்காளிச் சண்டை நிறைந்த மண்ணில் இந்த வார்த்தைகள் அவனுக்குப் பெரிய ஆச்சர்யமாய் இருந்தது. இந்த ரத்த சம்பந்த உறவுகளை அனுபவிக்காமல் இருந்ததன் வேதனையை இப்போதுதான் உணர்கிறான். தம்பியின் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை சுப்ரமணியும் வெள்ளையம்மாவும் பார்த்துப் பூரித்துப் போனார்கள். தன்னையும், வெள்ளையம்மாவையும், தன் ஆத்தாவையும் தவிர அனைவருமே படித்தவர்கள். இப்போது சுப்ரமணி சந்தைக்குச் செல்வதுண்டு, வழக்கமாகக் கிடைக்கும் பரோட்டாக் குருமா மற்றும் மரிக்கொழுந்து வெள்ளையம்மாவுக்கு முன்புபோல முழுவதுமாகக் கிடைப்பதில்லை. ஆனாலும் வெள்ளையம்மா பளீரென்று வெள்ளையாகத்தான் தெரிந்தாள். தனக்குப் பிடித்த ஒருவருக்குப் பிடிக்கும் எல்லாமே தனக்கும் பிடித்துப்போய்விடும், அவர் ரசிக்கும் அனைத்தையும் தானும் ரசிக்கத் தோன்றும். இதுதான் இல்லறத்தின் இலக்கணம். குதூகலம் பூத்துக்குலுங்கியது. வறண்டுபோய்க்கிடந்த வெள்ளையம்மா சுப்ரமணியின் வாழ்க்கையில் முழுச் சந்தோசம் கிடைத்ததாகப் பூரித்துப்போனார்கள்.
ஒருநாள் இரவு சுப்ரமணியிடம் தன்னுடைய அப்பா பற்றிப் பேசிக்கொண்டே இருந்த ஆத்தா, திருமணமாகி சில நாட்களிலேயே ரங்கூனிலிருந்து இலங்கை வந்துவிட்டதாகவும், அடிக்கடி சுப்ரமணி, மற்றும் அக்கா, அதாவது சுப்ரமணியின் ஆத்தா பற்றியெல்லாம் மூச்சுக்கு மூச்சுப் பேசுவாரென்றும், சுப்ரமணியும் உருவத்தில் அவரைப்போலவே இருந்ததாகவும், அதனால்தான் கேம்ப்-பில் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டதாகவும் சொல்லி நெடுநேரம் சந்தோசமாய் பேசிவிட்டு உறங்கச் சென்றவள் அடுத்த நாள் எழுவே இல்லை. அந்தச் சந்தோசத்தோடே ஜீவன் பிரிந்துவிட்டது. அனைவருமே தாங்கமுடியாத சோகத்தில் இருந்தார்கள். பார்க்கமுடியாத பந்தங்களையெல்லாம் பார்த்து, சேர்க்கவேண்டிய சொந்தங்களையெல்லாம் ஒன்று சேர்த்துவிட்ட சந்தோசத்தில் ஆத்தா நிம்மதியாகப் போய்விட்டாள். அனைத்துமே வேகவேகமாக நடந்து முடிந்துவிட்டது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சுப்ரமணியனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தம்பிகள் எல்லோரும் படித்தவர்களாதலால், தங்களுக்கு நீலகிரி மாவட்டம் கூடலூரில் முகாம் மூலமாக வேலை கிடைத்திருப்பதாகவும், இந்தக் கிராமத்தில் அனைவரும் இருந்து அண்ணனுக்கு சிரமம் கொடுப்பதைவிட குடும்பத்தோடு அங்கு செல்ல இருப்பதாகவும், அடிக்கடி வந்து போவதாகவும் சொன்ன நியாயமான விளக்கத்தை சுப்ரமணியாலும், வெள்ளையம்மாவாலும் தட்டமுடியவில்லை. ஒருவரையொருவர் முட்டிமோதி அழுகத்தான் முடிந்தது.
‘ராமு.. ராமு... கோழி கூப்டுருச்சு, எந்திரிப்பா, பால் கொண்டுவந்திருக்கேன்’ வெள்ளையம்மா. ‘இதோ வந்துட்டேன் வெள்ளையம்மா’ ராமு. இப்போதெல்லாம் வெள்ளையம்மா சந்தைக்குச் செல்கிறாள். வேண்டியவற்றையெல்லாம் வாங்கி வந்து அவரவர்கள் கையில் சேர்த்துவிட்டு, வெறுங்கையோடு வீடு திரும்பும் வெள்ளையம்மா வரும் வழியைக் கன்றுக்குட்டிகளும் மாடுகளும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன.
உடலோடு ஒட்டிப்பிறந்த உறுப்புக்களில் ஒன்றை இழக்கும்போதுதான் அதன் அவசியம் புரியும். உயிர்வலி தெரியும். தேடினாலும் காணமுடியாத தன் தாய், தம்பிகள், பிள்ளைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து குதூகளித்த அந்த வீடு தற்போது வெறிச்சோடிக் கிடப்தையும், வந்த வேகத்தில் அனைவருமே பிரிந்து போய்விட்டதையும் நினைத்து நினைத்து சுப்ரமணி கிட்டத்தட்ட ஒரு நோயாளியாகி விட்டான். இப்பொழுது தன் கூடவே இருப்பது தன் வெள்ளையம்மா மட்டும்தான். யாருமே உணரமுடியாத ரண உணர்வுகளை ஆறவைத்த இந்த உத்தமிக்கு நான் என்ன செய்தேன்? என்னைத்தேடி இவளை அனுப்பியது யார்? நான் வணங்கும் பழநி ஆண்டவனா? அனுப்பியவன் நான் இளவயதிலிருக்கும் போது அனுப்பியிருக்கக்கூடாதா? காலம் கடந்துவிட்ட நிலையில் எனக்கு இப்படி ஒரு உறவு! எனக்குப்பிறகு என் வெள்ளையம்மாவை யார் பார்த்துக்கொள்வார்கள்? என்னை நம்பி வந்த இவள் எனக்குச் சாமியா, என் தாயா? இல்லை. அதையும் மீறிய ஒரு உறவாகத்தான் நினைத்தான். நான் இவளை விட்டு எப்படிச் செல்லமுடியும்? பழநியாண்டவா! இவ்வளவையும் நான் கேட்காமலே கொடுத்த நீ ஒரு வாரிசை எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? என முதன்முறையாகக் கடவுளைக் கேட்டான். கொடுத்திருந்தால் நான் நிம்மதியாகக் கண்ணை மூடுவேனே! எனக்குப் பிறகு என் வெள்ளையம்மாவுக்குத் துணை யார்? எப்படி என்னைப் பிரிந்து இருப்பாள்? சுப்ரமணி நடந்தவைகளையெல்லாம் எண்ணி எண்ணி படுத்த படுக்கையாகி விட்டான். தனது சொந்தங்களாகிய பத்துப் பதினைந்து எருமை மாடுகளையும், கன்றுகளையும் இப்போது வெள்ளையம்மா கவனித்து வருகிறாள். முறையாக எழுதித்தராவிட்டாலும் மூன்று ஏக்கர் நிலத்தையும் வெள்ளையம்மா நன்றாக விவசாயம் செய்து வருகிறாள் என்ற மன நிம்மதியோடு சுப்ரமணி கண்ணை மூடிவிட்டான்.
இவற்றையெல்லாம் அசைபோட்டு அசைபோட்டு அவர்கள் பேசிக்கொண்ட வார்த்தைகளையும், நடந்து சென்ற பாதைகளையும், அவன் விட்டுச்சென்ற நீங்கா நினைவுகளையும், தன்னைவிட்டுப் பிரிக்க முடியாமல், ஒவ்வொரு கணமும் தவித்துக்கொண்டு, அவன் நினைவுகளாலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த உத்தமியின் உணர்வுகளை, ஏக்கங்களை, சுப்ரமணி இடத்திலிருந்து எப்போதும் அவள் கைகளைத் தழுவிக்கொண்டிருக்கும் அந்த மூன்றாம் காலான கைத்தடி மட்டுமே உணரும். கவலைதோய்ந்த ரேகைகளை அவள் முகத்திலும், அவள் கூன்விழுந்த முதுகிலும், நரைவிழுந்த தலையிலும், காலம் உணர்த்தியது.
அந்த ஆத்மாவின் சப்தங்களை அந்த ஒருவனால் மட்டுமே உணரமுடியும். இந்த உறவு எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும் கூட புதிராகத்தான் இருக்கிறது. இது காதலா? ரத்த சம்பந்தங்களையும் தாண்டிய ஒரு உறவா? முன் ஜென்ம பந்தமா?
‘வெள்ளையம்மா! வெள்ளையம்மா!’ …
‘ஆரு… தவால்காரத் தம்பியா? இ..ந்..தா.. வா..ரே..ன்’ எனத் தள்ளாடி எழுவதற்கு முன், ‘இதுல ஒரு கைரேகை வைய்யிங்க’ என்று போஸ்ட்மேன் அந்தக் குடிசைக்குள் நுழைந்து, பணத்தை வெள்ளையம்மாவிடம் கொடுத்துவிட்டு, கைரேகையையும் பெற்றுக்கொண்டு, அன்பளிப்புப் பணம் வாங்காமல் சென்றார். தனக்குச் சொந்தமாக நிலமிருந்தாலும், வெள்ளையம்மாவுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்ற நல்லெண்ணத்தில், சுப்ரமணியின் சொத்துக்கள் தனது பெயரில் இல்லையென்பதாலும், ஆண் வாரிசு இல்லையென்பதாலும் அவளுக்கு ‘முதியோர் உதவித்தொகை’க்குப் பரிந்துரை செய்திருந்தார் ஊர்த்தலைவர்.
வாங்கிய பணத்தை சுப்ரமணி உபயோகித்த, ஆணியில் மாட்டப்பட்டிருந்த பழநியாண்டவர் பைக்குள் வைத்துவிட்டு துக்கம் தொண்டையடைக்கத் தன் முந்தானையால், தனது நடுங்கிய கைகளால் கண்களைத் துடைத்துக்கொள்கிறாள். அடைமழை பெய்துகொண்டிருக்கிறது.
- நவநீ
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:42 PM
1 comments (நெற்றிக்கண்)
Labels: சிறுகதை - நவநீ
Today's Quote
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Vivekananda Network
"தமிழோசை"
BBCTamil.com Radio Player
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:33 PM
0
comments (நெற்றிக்கண்)
"இன்றைய குறள்"
அகரம் எழுத்துக்களுக்கெல்லாம் முதன்மை, ஆதி பகவன் உலக உயிர்களுக்கெல்லாம் முதன்மை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:13 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: முதல் குறள்
"அன்னைத் தெரெசா"
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:46 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: எங்கோ படித்தது.










