December 06, 2007
தீவிரவாதத்துக்கு ஆதரவாக கவிதை எழுதிய பிரிட்டிஷ் பெண்மணிக்கு தண்டனை
ஷமீனா மாலிக் : தீவிரவாதத்துக்கு ஆதரவாக கவிதைகள் எழுதிய ஒரு பிரிட்டிஷ் பெண்மணிக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஷமீனா மாலிக் எனப்படும் அந்தப் பெண்மணியின் குற்றம், குற்ற நடவடிக்கையின் விளிம்பிலிருந்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தீவிரவாதத்துக்கு உதவியாக இருக்கும் எனக் கருதப்படும் ஆவணங்களை வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட முதல் பிரிட்டிஷ் பெண்மனி இந்த ஷமீனா மாலிக் ஆவார். அவர் தன்னை கவிதைத் தீவிரவாதி எனக் கூறிக்கொள்கிறார். அவர் தனது கவிதைகளில், முஸ்லீம்கள் அல்லாதவர்களின் தலை துண்டிக்கப்படுவதை பாராட்டியிருந்த போதிலும், தீவிரவாதத்துக்கான ஒரு ஆவணத்தை அவர் வைத்திருந்தார் என்கிற குற்றறச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளளார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:06 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
டெல்லி மதுபானக் கடைகளில் பெண்கள் பரிமாற நீதிமன்றம் அனுமதி
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:59 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
நடிகர் விஷாலின் தமிழ்ப் புரட்சி
- சண்டைகோழி என்ற படத்தில் "ஒரு நிமிஷம்" என்ற வசனத்தை மிக அழகாக "ஒனிஷம்" என்று சொல்லி அவர் ஆற்றியது மிகப்பெரும் புரட்சியன்றோ?
- சிவப்பதிகாரம் படத்தில் ஒரு நீண்ட வசனம் வரும். பத்துக்கும் மேற்பட்ட தமிழின் சிறப்பு "ழ" கரம் இடம் பெரும் பல வார்த்தைகளைக்கொண்ட வசனம் அது. ஒவ்வொரு தடவையும் "ழ" கரத்தை மிக அழகாக "ல" கரமாக உச்சரித்து அவர் செய்த தமிழ்ப் புரட்சிக்காகவே ஓராயிரம் புரட்சிப் பட்டங்கள் தரலாம்.
எப்பொழுது நடிகர் விஷால் புரட்சித் தளபதியாக பெயர் எடுத்தாரோ அதற்குமேல் கார்ல் மார்க்ஸ், லெனின், சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, நேதாஜி, பகத்சிங், பிரபாகரன் போன்ற மாபெரும் புரட்சியாளர்களை இனிமேல் "புர்ச்சியாளர்கள்" என்று விஷால் பாணியில் அழைப்பதே சாலப்பொருந்தும்.
என்ன சொல்கிறீர்கள் என் இனிய தமிழ் மக்களே?
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:36 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: வின்சென்ட் - நார்வே
December 05, 2007
பின்னனிப்பாடகர் கிரிஷ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:20 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 179 - ம் குறள்
அடுத்த முதல்வர்? பதற்றத்தில் ஸ்டாலின்
திரு. மு. கருணாநிதிக்குப் பிறகு, திமுக-வின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்காக 'ஜனநாயக' முறைப்படி கட்சிக்குள் வளர்க்கப்பட்டவர் அவரது மகன் திரு. ஸ்டாலின். திரு. வை. கோபால்சாமியின் வெளியேற்றத்துக்குப் பிறகு, கட்சிக்குள் ஸ்டாலினுக்கு முழு ஆதரவு இருப்பதுபோல் தெரிந்தாலும், கருணாநிதியின் குடும்பத்துக்குள் இந்தப் பிரச்சினை இன்னும் 'நீருபூத்த நெருப்பாகவே' இருப்பது அரசியல் தெரிந்தவர்கள் அறிந்ததுதான். திமுக தலைவரின் குடும்பப் பிரச்சினை, உச்ச கட்டத்தில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் 'அழகிரி நாட்டின்' ஒரு பகுதியான திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. விஜயகாந்த், சரத்குமார் போன்ற சினிமா நட்சத்திரங்கள் ஆரம்பித்த புதிய கட்சிகளை நோக்கி இளைஞர்கள் செல்வதைத் தடுப்பதற்காகவும், தமிழக இளைஞர்கள் திமுக-வின் பக்கமே இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவுமே இந்த மாநாடு என்று உதட்டளவில் அறிவிக்கப்பட்டாலும் கூட, ஒட்டுமொத்த திமுக-வும் தனது பக்கமே இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காகவே திரு. ஸ்டாலினால் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருக்கும், இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அழகிரியின் ஆதிக்கம் பரவிக் கிடக்கும் தென் மாவட்ட திமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து வருகிறார் ஸ்டாலின். அமைச்சர்கள் தினம் தினம் மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆனால் 'அனா' அழகிரியோ இன்றுவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நடக்கும் இந்த மாநாட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? இதோ சில ஊகங்கள்: - வீரபாண்டி ஆறுமுகம் போன்ற ஒரு சிலரைத் தவிர மற்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள், ஸ்டாலினின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக முழங்குவார்கள் - 'இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதாகச்' சொல்லி, இளைஞரணிப் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகுவார் - சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதாகத் தெரிந்தால், திமுக-வின் அடுத்த தலைவராக திரு. ஸ்டாலினை கலைஞர் அறிவிப்பார் - 'இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும்' அதே காரணத்தைச் சொல்லி, முதல்வர் பதவியிலிருந்து தான் விலகத் தயார் என கலைஞர் அறிவிப்பார் - குறைந்த பட்சம் 'துணை முதல்வர்' பதவி ஸ்டாலினுக்கு வழங்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு நடத்துவதால், இந்த மாநாடு வெற்றி பெறுவதில் எந்தத் தடங்கலும் இல்லை. ஆனால் தனது தந்தை தலைவராக இருக்கும் திமுக-வில் தனக்கும் "பங்கு" உண்டு என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் 'அஞ்சா நெஞ்சன்' அழகிரி. ஒன்றை அடைவதற்காக, 'எதையும்' செய்யத் தயாராக இருக்கும் தனது சகோதரர் திரு. அழகிரியை சமாளித்து கட்சியையும், ஆட்சியையும் ஸ்டாலின் தனதாக்கிக் கொள்வாரா? முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறது உலகத் தமிழினம்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:46 PM
0
comments (நெற்றிக்கண்)
"எழுதுவதை நிறுத்தப் போவதில்லை" - தஸ்லிமா நசரீன்
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நசரீன் அவர்களுக்கு எதிராக சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் காரணமாக அவர் தமது எழுத்துக்களை நிறுத்தப்போவதில்லை என்று அவர் அறிவித்திருக்கிறார். மேலும், தமது எழுது பொருளும் இதனால் மாறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். சமீபகாலத்தில் தாம் வாழ்ந்துவந்த கொல்கத்தாவை விட்டு அவர் சமீபத்தில் வெளியேறிய பிறகு பிபிசியிடம் முதல் முறையாக பேசிய தஸ்லிமா அவர்கள், மதசார்பற்ற மனிதநேயம் பற்றி மட்டுமே தாம் எழுதி வந்ததாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கம் தமக்கில்லை என்றும் கூறினார். கொல்கத்தாவில் சில முஸ்லிம் குழுக்கள் தஸ்லிமாவுக்கு எதிராக நடத்திய வன்முறை ஆர்பாட்டங்களுக்கு பிறகு, மேற்கு வங்க மாநில அரசு அவரை கொல்கத்தாவை விட்டு பலவந்தமாக வெளியேற்றியது. அவர் தற்போது, இந்திய தலைநகர் புது தில்லியில் ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். - மத நிந்தனை குறித்து பிரிட்டன் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு : பிரிட்டனில் நாடக அரங்குகளும், ஒலிபரப்பாளர்கள் மீது, தெய்வ நிந்தனை அல்லது மத நிந்தனை குற்றச்சாட்டுகளுக்காக வழக்கு தொடுக்கப்பட முடியாது என்று லண்டனில் உள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த முக்கியத்தீர்ப்பு, மதப்பிரச்சாரம் செய்யும் கிறித்தவர்கள் குழு ஒன்று பிபிசி மீது தொடுத்த வழக்கில் வருகிறது. அவர்கள் "ஜெரி ஸ்ப்ரிங்கர் ஒரு இசைநாடகம்" என்ற நிகழ்ச்சி குறித்து ஆட்சேபித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில், ஏசு கிறிஸ்து, சிறு குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியை அணிந்து கொண்டிருப்பதாக காட்டப்பட்டிருந்தார் மேலும் அவரை கொஞ்சம் ஆண் ஓரின உறவுகொள்பவராகவும் இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி மத நிந்தனை புரிந்தே இருந்தாலும் கூட, பிரிட்டிஷ் சட்டத்தின் கீழ், நாடக அரங்குகளும் ஒலிபரப்பாளர்களும் மத நிந்தனை குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதால், பிபிசி மீது இந்த குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது
- கச்சா எண்னை விலை உயர்வு : அபுதாபியில் ஓபெக் மாநாடுபெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவான ஓப்பெக், கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு விடுத்த வந்த கோரிக்கையை பரிசீலிக்க, ஒப்பெக் அமைப்பு அபு தாபியில் கூடியது. அமெரிக்க வீடு மற்றும் கடன் சந்தைகளில் தொடங்கிய பொருளாதார பிரச்சினைகளை, எண்ணெய் விலைகள் உயர்வது மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் என்று அமெரிக்கர்கள் அஞ்சுவதாக பிபிசியின் பொருளாதார செய்தியாளர் கூறுகிறார்
- அநுராதபுரத்தில் பொதுமக்கள் பேருந்து மீது தாக்குதல்: 15 பேர் பலி - இலங்கையின் அநுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவ பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட கிளெமோர் கண்ணிவெடித் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
- வட இலங்கையில் மோதல்கள் அதிகரிக்கின்றன: இரு தரப்பிலும் இழப்புகளும் அதிகரிப்பு : மோதல்கள் அதிகரித்துள்ளனஇலங்கையின் வடக்குப் போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதல்களில் இன்று மாத்திரம் குறைந்தது 7 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது
- வவுனியாவில் தொண்டர் அமைப்பு பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு : இதற்கிடையில், வவுனியா மாவட்டத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இன்று ஒரு நாள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர்
- மீண்டும் வவுனியாவுக்கு ரயில் சேவை : கடந்த ஒரு வார காலமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் வடபகுதிக்கான ரயில் சேவை உடனடியாக வழமைக்குத் திரும்பும் எனவும், ஜனாதிபதியின் அனுமதியோடு இதற்கான பணிப்புரை ரயில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்
- அமெரிக்க அறிக்கையை பாராட்டுகிறார் இரானிய அதிபர் : இரான் தற்போது அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடவில்லை என்று அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தெரிவித்திருக்கும் முடிவை, இரானிய அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் அவர்கள் பாராட்டியிருக்கிறார்
- கொண்டலீசா ரைஸ் ஆப்பிரிக்கா விஜயம் : காங்கோவில் போராளிக் குழுவினர்அமெரிக்க அரசுத்துறை செயலர், கோண்டலீசா ரைஸ் அவர்கள், காங்கோ ஜனநாயகக் குடியரசு, சோமாலியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் சர்வதேச நாடுகளால் மத்யஸ்தம் செய்து ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்த ஆப்ரிக்காவுக்கு ஒரு நாள் விஜயமாக வந்திருக்கிறார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
December 04, 2007
"இசைஞானியின் இசையில் சில"
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:23 PM
0
comments (நெற்றிக்கண்)
கிரிஷ் - பின்னனிப் பாடகர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:10 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 178 - ம் குறள்
பொன்மொழிகள்
- தன் மீது விழும் மண்ணைச் சுமையென நினைப்பதில்லை விதை
- காயங்களுக்கு மருந்து வேண்டாம், கனிவான பார்வை போதும்
- எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள், ஏமாற்றத்தால் சோர்வடையமாட்டாய்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:53 PM
0
comments (நெற்றிக்கண்)
புத்திசாலி சிம்பன்சி குரங்குகள்
எது எப்படியோ, இனிமேல் குரங்கை விட மனிதன் புத்திசாலி என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக்கொள்ள முடியாது. எண்கணித நினைவாற்றலில் மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் குரங்குகள், தற்கால மனிதர்களைவிட திறமையானவர்கள் என்று இந்த சிம்பன்சிகள் நிரூபித்திருக்கின்றன.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:50 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
இலங்கை கைதுகள் குறித்து அரசாங்கம் விளக்கம்
- கொழும்பில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலானோரை விடுவித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழர்களை இலக்கு வைத்து இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதையும் அரசு மறுத்திருக்கிறது. இலங்கையில் தலைநகர் கொழும்பிலும், புறநகர்ப் பகுதியிலும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் கடுமையான சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினரும் பொலிஸாரும் பலநூற்றுக்கணக்கான தமிழர்களை கைது செய்திருந்தனர். இவர்களில் பலர் அந்தந்தப்பகுதி பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அதேவேளை, மேலும் பலர் காலி மாவட்டத்திலுள்ள பூசா தடுப்புச் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். அமைச்சர் பெர்ணாண்டோ புள்ளேதமிழர்கள் வகை தொகையின்றி கைதுசெய்யப்பட்டு ஆங்காங்கே அடிப்படை உணவு, உடை மற்றும் மலசலகூட வசதிகளின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக கூறும் தமிழ்க் கட்சிகள் பலவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அது குறித்து குரல் எழுப்பியிருந்தன. இதனைவிட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்ணணி எனப்படும் ஜே.வி.பியும் அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்திருந்தன. அத்துடன் அவர்களை விடுவிப்பதற்கு உதவக்கோரி ஜனாதிபதியிடமும், சர்வதேச சமூகத்திடமும் முறையீடு செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பிரதான கொறடாவும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்றுமாலை கொழும்பிலுள்ள பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஊடக மத்திய நிலையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடொன்றினை நடாத்தினார். அங்கு எதிர்க்கட்சிகளும், தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே நாட்டினதும், சகல சமூகங்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் ஒரே நோக்குடனேயே இந்த நடவடிக்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது என்றும், பொலிஸாரினாலும் பாதுகாப்புப் படையினராலும் வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது சிங்கள இனத்தவர்கள் சிலரும், முஸ்லிம் இனத்தவர் ஒருசிலரும்கூட விசாரணைகளிற்காக கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 202 பேர் தவிர ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
தமிழர்கள் இலக்குவைத்து பாரியளவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை மறுத்தலித்துப் பேசிய அமைச்சர் பெர்ணாண்டோபுள்ளே தேவையேற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார் - வடபகுதிக்கான போக்குவரத்து நிலைமைகளில் முன்னேற்றம் இல்லை : இலங்கையின் தலைநகரப்பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களையடுத்து, மட்டுப்படுத்தப்பட்ட வடபகுதிக்கான போக்குவரத்து நடைமுறைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்
- அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கை ஏற்புடையதல்ல என்கிறது இஸ்ரேல் : இரான் தனது அணு ஆயுதத் திட்டங்களை 2003 ஆம் ஆண்டிலேயே நிறுத்தி விட்டது என்கிற அமெரிக்க புலனாய்வுத் துறையின் மதிப்பீட்டுடன் தாம் முரண்படுவதாக இஸ்ரேல் கூறியுள்ளது
- இரான் மீது அழுத்தம் தொடரவேண்டும் எனக் கூறுகின்றன பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் : இரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அமெரிக்க உளவு மதிப்பீடு கூறுகின்ற போதிலும், இரான் மீதான இராஜதந்திர அழுத்தத்தை சர்வதேச சமூகம் தொடரவேண்டும் என்று பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டு அரசுகள் கேட்டுள்ளன
- வடகொரியாவுக்கு அமெரிக்காவின் சிறப்புத் தூதர் விஜயம் : வடகொரியாவுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் கிறிஸ்டோபர் ஹில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான பாக் உய் சுன் அவர்களுடன் அபூர்வமான ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்
- தென் ஆப்பிரிக்காவில் சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் : தென் ஆப்பிரிக்காவின் சுரங்கங்களில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கன தொழிலாளர்கள், பணியிடங்களில் தமது பாதுகாப்புகள் குறித்த கரிசனைகளை வெளிப்படுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்
- காலநிலை மாற்றம் குறித்து பசிபிக் நாடுகள் பெருங்கவலை : கடல் மட்டம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாலியில், காலநிலை குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதிகளுக்கு, பசிபிக் பெருங்கடலில் இருக்கும் தீவு நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:36 PM
0
comments (நெற்றிக்கண்)
December 03, 2007
"எண்ணற்ற தீங்குகளுடன் சுயநல வேட்டை நாய்களாகப் பெரும்பாலான அரசியல்வாதிகள் உலவுகிறார்கள்" அண்ணா கண்ணன் - நேர்முகம்" - நவின்
மதிப்பிற்குரிய திரு.அண்ணா கண்ணன் அவர்களை "நிலாச்சாரலுக்காக" நான் எடுத்த செவ்வி - கவிஞர், இதழாளர், ஆய்வாளர், 18 நூல்களின் ஆசிரியர் அண்ணா கண்ணன். இவரின் இரு கவிதைகள் 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்ந்து இளம் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குத் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பைப் பதிந்திருக்கிறார். அமுதசுரபியில் இரண்டரை ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றிவிட்டு, இப்போது இணைய இதழ் ஒன்றின் ஆசிரியராக இருக்கிறார். 'நான் பிறக்கும்போதே பேனாவோடுதான் பிறந்தேன், எனது லட்சியமே எழுத்து, எழுத்தே என் மூச்சு' என்றெல்லாம் பிதற்றும் பிசுபிசுப்பில் சிக்கிக்கொள்ளாத, ஒரு பாசாங்கில்லாத கவிஞனை, எழுத்தாளனை அண்ணா கண்ணன் மூலமாகப் பார்க்கிறேன். தங்களின் நூல்கள், பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்...
'பூபாளம்' (1996), 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' (1997) ஆகிய கவிதைத் தொகுப்புகளை என் சொந்தச் செலவில் வெளியிட்டேன். 'காந்தளகம் - 20 ஆண்டுகள்' (நிறுவன வரலாறு), 'தகத்தகாய தங்கம்மா' (வாழ்க்கை வரலாறு), 'கலாம் ஆகலாம்', 'டம்டம் டமடம்' (சிறுவர் பாடல்கள்), 'நூற்றுக்கு நூறு' (சிறுவர் சிறுகதைகள்), 'தமிழில் இணைய இதழ்கள்' (எம்.ஃபில். ஆய்வேடு) ஆகிய நூல்களையும் படைத்துள்ளேன். கோலாலம்பூரில் உள்ள உமா பதிப்பகம், பழந்தமிழ்க் காப்பிய நூல்களை எளிய தமிழில் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதற்கு இணங்க, இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, நள தமயந்தி, சூளாமணி, பாகவதம் உள்ளிட்ட 10 காப்பிய நூல்களை எழுதி வழங்கினேன்.
மாணவப் பருவத்தில் கவிதை, கட்டுரை, பேச்சு, விளையாட்டு போன்றவற்றுக்காகப் பள்ளியிலும் மாவட்ட, மாநில அளவிலும் பல பரிசுகள் பெற்றேன். நீடாமங்கலம் இலக்கிய வளர்ச்சிக் கழகம் நடத்திய போட்டிகளில் வென்றேன். கல்லூரிப் பருவத்தில் பாரதியார் சங்கம், பாரதி இளைஞர் சங்கம் எனச் சில அமைப்புகள் நடத்திய கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசுகள் பெற்றேன். என் இருபதுகளில் பல கவியரங்குகளில் கலந்து கொண்டேன். அவை பெரும்பாலும், சிறந்த கவிதைக்குப் பரிசு வழங்கும் வழக்கம் கொண்ட அமைப்புகள். அப்படி கவிதை உறவு, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் எனச் சில அமைப்புகளின் கவிதைப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ளேன். சில போட்டிகளுக்கு என்னை நடுவராக இருக்குமாறு அழைத்தார்கள். அதன் பிறகு, போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து விலகிக் கொண்டேன்.
கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பு, 'இளந்தென்றல்' என்று அழைத்தது. பொன்னடியானின் தமிழ்க் கவிஞர் மன்றம், 'கடற்கரை கவிமுத்து' என்ற பட்டம் அளித்தது. வல்லிக்கண்ணன் முதலிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரின் பாராட்டுகள் கிடைத்துள்ளன. ஒரு முறை ஒரு கவியரங்கில் நான் கவிதை வாசித்த உடன், அங்கு முன்னிலை வகித்திருந்த கவிஞர் சுரதா, ஒரு ரூபாயை எடுத்து எனக்குப் பரிசாக அளித்தார். வெறும் வாயால் பாராட்டக் கூடாது, ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று அப்போது அவர் கூறினார். ஆயினும் அறிமுகம் இல்லாத ஒருவர், திடீரென நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ பாராட்டும்போது ஒரு புது உற்சாகம் ஏற்படுகிறது. என் சிறுவர் பாடல்கள் சிலவற்றைச் சில பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தும் விழாக்களில் பாடியும் வருகிறார்கள் என்று கேள்விப்படும்போது மகிழ்ச்சி உண்டாகிறது.
தங்களின் இரண்டு கவிதைகள் மட்டும் 32 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டதன் விசேஷ காரணம் என்ன?
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:00 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:52 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 177 - ம் குறள்
முத்தையா முரளீதரன் உலக சாதனை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:40 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"

