August 12, 2007
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:41 PM
0
comments (நெற்றிக்கண்)
செவ்வணக்கம் தோழர்களே
மேற்கண்ட பொருளின் தமிழாக்கமும், தொடர்பும் இங்கே தரப்பட்டுள்ளது. சில மணித்துளிகள் செலவிட்டு தமிழர்கள் அனைவரும் தங்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுகிறேன்.
மொழிமற்ற அனுபமின்மையாலும், நேரக்குறைவினாலும் சிலப்பல குறைகள் காணலாம். இதன் ஆங்கில வடிவம் தொடர்பு முகவரியில் காணக்கிடைக்கும்.
------------------------------------------------------
பெறுனர் : சப்பான் அரசு
அனுப்புனர்:
அ.பெ.எண்-991,
சிற்றாத் ஃபீல்டு,
NSW- 2135, ஆசுதிரேலியா.
ஆகசுட்டு - 2007
மான்புமிகு சின்ச்சோ அஃபே,
சப்பான் தலைமை அமைச்சர்.
பிரதிகள்:
திரு.எரிக் சோல்ஃகைம் - அமைச்சர்-அனைத்துலக முன்னேற்றம், நோர்வே,
திரு.ரிச்சர்டு பெலிட்ச்சர் - துணை அமைச்சர், அமெரிக்கா,
திரு. யாசுசி அகாசி, சிறப்புத்தூதுவர், சப்பான்,
திரு.ஆண்ற்றியாசு மைக்கேலிசு, பொது இயக்குனர், அய்ரோப்பிய ஒன்றிய சனாதிபதியம்,
திரு.சேம்சு மோர்ரன், இணைப் பொது இயக்குனர், அய்ரோப்பிய ஒன்றியம்.
மதிப்புயர் தலைமை அமைச்சர் அவர்களுக்கு,
இலங்கைத் தமிழர்கள் மீதான வன்படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள்.
AHRV என்பது ஆசுதிரேலியாவில் பதிவு செய்யப்பட்ட பேச்சுரிமையற்றவர்களாகவும், தங்களுக்கென போராடும் சக்தியற்றவர்களாகவும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடும்/போராடும் அமைப்பாகும். இக்கடிதம் இலங்கையில் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படும் இலங்கைத் தமிழர்களைக் குறித்தானது.
சுதந்திர தமிழர் வாழ்விடத்திற்க்காக போராடும் விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் ஆயுதப்போராட்டம் தாங்கள் அறிந்த்தே.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களின் பிரதிநிதி திரு. யாசுகி அகாசி அவர்கள் பலமுறை இலங்கைக்குச் சென்று இருதரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்ப்படுத்தும் முயற்ச்சி தோல்வியில் முடிவது அறிந்த்தே. இம்முயற்ச்சிகளுக்கு எங்களின் நன்றி, மேலும் தொடர்ந்து மிகுந்த விருப்பத்தோடு செய்துவரும் பணிக்களுக்கு நாங்கள் மிகவும் கடைமமைபபட்டுள்ளோம்.
அதிபர் ராசபக்சே பதவியேற்றப்பின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், சிம்பாவேயில் அதிபர் முகாபேயும், ஈராக்கில் அதிபர் சதாமும் செய்ததற்கு இணையானதாகும்.
தமிழர்கள் பாதுகாப்போடும், தன்மானத்துடனும் அவர்களின் சொந்த மண்ணிலே கூட வாழமுடியாமல், அதிபர் ராசபக்சேவினால் திட்டமிட்டும், தீவிரமாகவும் படுகொலைகள் செய்யப்படுவதாக நாங்கள் நம்புகின்றோம்.
வான்வழி தாக்குதல்களாலும், நீதியற்ற முறையிலும், கடத்திக் கொண்டு செல்லப்பட்டும், மன உளைச்சலை ஏற்ப்படுத்தியும், உடல் வழியாகவும் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வாயை அடைப்பதற்க்காக அவர்கள் கொல்லப்படுகின்றனர்.
வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல், உணவு மற்றும் மருந்துப் பொருள்களின் பறிமற்றம், வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது, தமிழர்கள் தம் சொந்த வீட்டிலிருந்தும் மண்ணிலிருந்தும் விரட்டப்படுகின்றனர். அவர்கள் உயிர் வாழத்தேவையான அனைத்தும் மறுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. கல்விச்சாலைகளும் வழிபாட்டுத்தலங்களும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு புரியும் ஊழியர்கள் கடத்திச் செல்லப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர். தமிழர் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களை சந்திக்கவும் இவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை விடுதலைப்பெற்ற பின் 35 ஆண்டுகளாக சிறுபான்மைத் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பல்வேறு அமைதிப்போராட்டங்களை நடத்தியும், நல்ல தீர்வு கிடைக்காததாலேயே கடந்த 25 ஆண்டுகால ஆயுதமேந்திய போராட்டம் தொடர்கிறது.
பல்வேறு உடன்பாட்டை தமிழ் அரசியல் கட்சிகள் மதிது ஏற்றுக்கொண்டபோதிலும், பெரும்பாண்மை சிங்களர் அரசுகள் அவற்றை மதிது நடந்ததில்லை.
சமீபத்தில், பல்வேறு உலகலாவிய மனித உரிமை அமைப்புகளும், அரசுகளும் இலங்கை அரசின் தீவிரவாத ஆதரவுப்போக்கினை கண்டித்துள்ளன,
சப்பானைத் தவிர்த்த நாடுகள் ஒன்றினைந்து இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்திவைத்துள்ளன். இலங்கையானது தங்களது போர்த் தேவைகளுக்கு வெளிநாட்டு உதவியை எதிர்பார்த்தே உள்ளது. அரசாங்கம் நடத்திவரும் தமிழர்களுக்கெதிரான படுகொலைகு உதவிட ஏனைய பிற பொருளாதாரத்தை திருப்பிவிட ஏதுவாக வெளிநாட்டு உதவிகள் அமைந்துள்ளது. எனவே, இலங்கைக்கு சப்பான் செய்யும் உதவியானது தமிழர்களுக்கு எதிரான படுகொலைக்கும் போருக்கும் உதவிட்டதாகவே அமையும்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் அரசாங்கம் மிகப் பெருமளவிலான பொருளாதார உதவியை இலங்கை மக்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்க்காக அளித்துள்ளது அனைவரும் அறிந்த்தே. இவ்வுதவியானது வடகிழக்குப் பகுதிகளுக்கும் சம அளவில் உதவியிருக்கும் என்ற தங்களின் எதிபார்ப்பு இயற்க்கையானதே.
ஆனால், மிகச்சொற்ப அளவிலேயே தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது என்பதை எங்களால் உறுதியாகக் கூறமுடியும். புவியமைப்படியிலான உதவி செய்த வரவு செலவு கணக்குகளை இலங்கை அரசிடமிருந்து பெறப்படுமானால் இதை எங்களால் நிரூபிக்க முடியும்.
இலங்கை அரசின் இத்தைகைய மோசமான மனித உரிமை மீறல்களை நிறுத்தும் வரை, பிற நாடுகள் செய்தது போல, தங்கள் அரசும் இலங்கைக்கு வழங்கிவரும் அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இலங்கை அரசானது அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை அர்த்தமுள்ள நேர்மையான நடவடிக்கையின் மூலம் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
ஒப்பம். இதை ஆதரிக்கும் தனிமனிதர்களும் சங்கங்களும்
உணமையுள்ள,
ஒப்பம்.
தொடர்பு : http://www.petitiononline.com/GLOBE/petition.html
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:54 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: (நன்றி: தமிழ்நாடன், முத்தமிழ் குழுமம்)
August 11, 2007
இட ஒதுக்கீடு பற்றிய பதிவு பகுதி 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:18 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 71 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:54 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:52 PM
0
comments (நெற்றிக்கண்)
August 10, 2007
நான் பாமரன்..முரட்டுத்தனமானவன்.. கஞ்சா கருப்பு
பல தீபாவளிகள் தன் வறுமையால் கொண்டாட முடியாமல் போனதுண்டாம். "என் கஷ்டம் என்னோடு போகட்டும் எல்லாரும் சந்தோசமா இருக்கணும். எனக்கு கஷ்டம் வர்றப்ப நான் நினைப்பது என்ன தெரியுமா என் கஷ்டம் இனி யாருக்கும் வரக்கூடாதுன்னுதான்" என்கிற கருப்புவை இயக்குனர் பாரதிராஜா அழைத்து ராம் பட நடிப்பை ஒரு மணிநேரம் பாராட்டினாராம். அதுமட்டுமல்ல பதினாறு வயதினிலே படத்தில் ரஜினிக்கு கொடுத்த பரட்டை ரோல் மாதிரி உனக்கு ஒன்று தர்றேண்டா என்று வாக்கு கொடுத்திருக்கிறாராம். சொல்லும் போதே வாயெல்லாம் பல்லாகிறது கருப்புக்கு. இவரது பெயர் கருப்புராஜா. ராம் படம் மூலம் கஞ்சா கருப்பு ஆனார். சொந்த ஊர் சிவகங்கை. சினிமா ஆர்வம் உந்தித்தள்ள ஊரில் பொறுப்பற்று திரிந்து கொண்டிருந்தவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் பாலா. பிதாமகன் படத்தில் திரை தரிசனம். அமீரோ ராம் மூலம் அழுத்தமாக அடையாளம் காட்டினார். அதன் பின் மளமளவென படங்கள் வரவே பதினைந்தை தாண்டிவிட்டார் எண்ணிக்கையில். கருப்பை கேட்டால் எனக்கு எண்ணிக்கை முக்கிதமில்லண்ணே கொஞ்ச நேரம் வந்தாலும் சனங்க மனசுல நிக்கனுமிண்ணே" என்கிறார். தொடாந்து படியுங்கள்... http://www.webulagam.com/cinema/vip/0610/14/1061014002_1.htm
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:11 PM
1 comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:09 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்
"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு" என்று ஒரு மகன் புகழுப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:55 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 70 - குறள்
இந்தியர் வளர்ச்சியும், கறுப்பினத்தவர் கசப்பும்
இந்த வளர்ச்சி பெரும்பான்மை கறுப்பின மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவித்தது. இந்தியர்கள் தம்மைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று அவர்கள் எண்ண ஆரம்பித்தனர். இந்த எண்ணத்துக்கு வெள்ளை இன நிறவேற்றுமை அரசு எண்ணெயூற்றியது.
கடைசியில் 19949இல் கறுப்பின மக்களுக்கும் இந்தியருக்கும் இடையில் பெரும் கலவரம் மூண்டது. அதில் பல இந்தியர் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தியப் பெண்ணெருத்தியின் வயிறு கிழிக்கப்பட்டு அதற்குள் பால்மா டின்கள் அடைக்கப்பட்டன.
கலவரம் முடிந்ததும் இரு தரப்புத் தலைவர்களும் ஒன்று சேர முற்பட்டனர். இதை வெள்ளையரின் நிறவேற்றுமை அரசு விரும்பவில்லை. சட்ட ரீதியாக நிற வேற்றுமையைத் திணிக்கத் தொடங்கியது. இந்திய வம்சாவழியினர் வாழ்ந்த இடங்களை விட்டு, வீடு வாசல், வியாபாரங்களை விட்டு அகற்றப்பட்டு வேறு இடத்தில் குடியேற்றப்பட்டனர். சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட இனப் பாகுபாடு சிறியவர் முதல் பெரியவர் அனைவரையும் பாதித்தது.
கறுப்பினத் தலைவர்களும், இந்தியத் தலைவர்களும் விழிப்புணர்வு பெற்று வெள்ளையரின் நிறவேற்றுமை ஆட்சிக்கு எதிராகக் கைகோர்த்து உரிமைப் போர் நடத்தத் தொடங்கினர். இப்படிப் பல பேராட்டங்களைக் கண்டு தென்னாப்பிரிக்கத் தலைவர்கள் நெல்சன் மன்டேலா, வால்டர் சிசிலு ஆகியோருடன் சிறை சென்ற இந்தியரான அகமத் கத்ரடாவும் இந்த நிகழ்ச்சியில் பேசுகிறார். http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/11/041030_safrica.shtmlமேலும் தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 10 வெள்ளிக்கிழமை 2007) "BBC" செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பில் செல்க
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:38 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : BBC "Tamilosai"
உதவும் கைகளும் கால்களும்
பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவது, கோவில் உண்டியலில் பணம் போடுவது, திருப்பதியில் கால் கடுக்க வரிசையில் நின்று மொட்டை போடுவது என எதையாவது செய்து பாவங்களைப் போக்கவும், நிம்மதியை நாடவும் முயற்சிக்கிறோம். ஆனாலும், உலகம் survival of the fittest என்ற டார்வின் நியதின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அவனவனுக்கு வேண்டியதை அவனவன்தான் செய்துகொள்ள வேண்டும்; யாரும் யாரையும் தூக்கிவிடுவது இயற்கைக்குப் புறம்பானது என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்திருக்கிறது.
உதவுவதற்கான மனம் இருந்தாலும் பல பேருக்கு சூழ்நிலை அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால்.. "காசு பணம் வேண்டுமானால் தரலாம். ஆனால், நம்முடைய நேரத்தை ஒதுக்கி சமூக சேவையில் ஈடுபட முடியாது" என்ற நிலைமை. இருந்தாலும், காசு கொடுத்தால் சரியாக, நேர்மையாகக் கையாண்டு வேலை செய்வார்களா என்ற சந்தேகம்
தவிர்க்க இயலாதது. சேவையை மட்டுமே மனதில் கொண்டு தம்முடைய வாழ்க்கையையின் முன்னேற்றத்தைக் காட்டிலும் பிறருக்காக நேரம் செலவிடும் மனிதர்களால் நடத்தப்படும் அமைப்புகளைப் பற்றிய செய்தி நம்மை வந்தடையாமலே நின்றுவிடுகிறது. ஒரு வேளை அவை தெரிய வந்தால் நமது பணமும், அவர்களது நேரமும் ஒன்றாகச் சேர்ந்து
சமுதாயத்திற்கு உதவட்டும் என நினைப்போம்.
அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுள்ள இரண்டு மனிதர்களைப் பற்றிய அறிமுகமே இந்தப் பதிவு.
முதலாமவர் தமிழர்.
கால்களும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் சுழல்கிற மனிதர்.
இவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. தமிழ்நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான அமைப்பு ஒன்றை 'Tamil Nadu Handicapped Federation Charitable Trust' என்ற பெயரில் நிறுவி அதன் தலைவராக இருந்து வருகிறார். வறுமையில் வாடும் ஊனமுற்றோருக்கு வேண்டிய சக்கர நாற்காலி, தையல் இயந்திரம் முதலிய உதவிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது. மேலதிக விவரங்களுக்கு கீழுள்ள சுட்டியைக் காணுங்கள்.
http://www.tnhfctrust.in/home.htm
http://www.chennaionline.com/health/hopeislife/08life10.asp
மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கிறது இவரது கதை. ஊனம் என்பது தடையல்ல என்பதை உணர முடிவதோடு ஒரு தனி மனிதனால் இவ்வளவு செய்ய முடியுமா என்றும் மலைப்பு உண்டாகிறது.
இந்த அமைப்பு செய்து வரும் பணிகளை நேரில் பார்வையிடவோ அல்லது தொலைபேசி மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளவோ விரும்பினால் கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.
TAMILNADU HANDICAPPED FEDERATION CHARITABLE TRUST
NO.21 AA,
Earikarai Salai,
Kottur,Chennai - 600 085.
Tamilnadu, India
Ph : + 91 44 - 32927664
Fax : + 91 44 – 24405584
உங்களுடை நேரத்தையோ அல்லது பணத்தையோ இவர்களுக்காக சற்று ஒதுக்க முடியுமென்றால் மகிழ்ச்சி.
இரண்டாமவர் பெங்காளி.
பயிற்சி எடுத்து அந்தச் சிக்கலில் இருந்து விடுபட்டவர். "Stammering is not a
disease, it is a habit, bad habit indeed" என்று தனது சொந்த அனுபவத்தில் கூறுகிற இந்த மனிதர் தனக்கு உதவிய டெக்னிக் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டி பிற திக்குவாயர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இது குறையே கிடையாது. சராசரி மனிதனின் மூளையை விட வேகமாகச் சிந்திக்கும் மூளை சிலருக்கு அமைந்து விடுவதுண்டு. காட்டாறு போன்ற அந்த எண்ணத்தை வேகமாகக் கொட்டி விரைவாகப் பேசி முடிக்க நினைக்கிறவர்களுக்கு சிந்தனை-பேச்சு இரண்டும் வெவ்வேறு வேகத்தில் அமைந்து பேச்சில் தடுமாற்றத்தைத் தருகிறது என்கிறார். இது மருந்து மாத்திரைகளால் குணப்படுத்துவதற்கு வியாதியல்ல. மாறாக, மனவியல் சார்ந்த பிரச்சினை என்கிறார். இரண்டு வாரம் பெங்களூரில் தங்கி இவரது வகுப்புகளில் பங்கெடுத்தால் நிச்சயமான முன்னேற்றம் ஏற்படும். அதற்கு மேலும் சுயமாக பயிற்சி தொடர வேண்டும். After all, old habits die hard.
மேலதிக விவரங்களுக்கு. http://www.stammeringcurecentre.com
இந்த இரண்டு மனிதர்களையும் காணும் போது ஒன்று நமக்குப் புரிகிறது. குறைபாடு என்ற ஒற்றைக் காரணத்தினால் துவண்டு போகாமல், தமது சொந்த வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொண்டதோடு நின்று விடாமல், மற்றவர்களுக்கும் வழி காட்டுகின்றனர். இரண்டு பேருக்குமே ஆதரவான வாழ்க்கைத் துணை கிடைத்ததுதான் அவர்களுக்கு பெரும்
ஊக்க சக்தியாக இருந்து இயக்குவிக்கிறது என நான் கருதுகிறேன். தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இல்லாமல் கிடைக்கக் கூடிய நிபந்தனையற்ற அன்புக்கும், ஆதரவுக்கும், காதலுக்கும் அத்தகைய மகத்தான சக்தி இருக்கிறது. அந்த வகையில், உடல் ரீதியாக குறைபாடு இல்லாத எத்தனையோ பேர் மனதளவில் ஊனப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இந்தப் பதிவினைக் காண நேரிடுகிறவர்களுக்கு சில வேண்டுகோள்கள்.
1. உதவ மனமும், பணமும் உள்ளவர்கள் திரு. சிதம்பரநாதன் அவர்கள் நடத்தும் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அல்லது அது பற்றிய தகவலை பிறருக்குத் தெரியப்படுத்தவும்.
2. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது பதட்டமாக தடுமாறிப் பேசினால் அவர்களிடம் Stammering Cure center குறித்து பக்குவமாகத் தெரியப்படுத்துங்கள். இந்தியா முழுவதும் இரண்டு கோடி திக்குவாயர்கள் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
3. இனிமேல் சினிமாவில் ஊனமுற்றவர்கள், அரவாணிகள், திக்குவாயர்கள், சொட்டைத் தலையர்கள் பற்றிய ஜோக் எதாவது வந்தால், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சிரிக்காமல் இருக்க முயன்று பாருங்கள்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:36 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி:karaiyoram
August 09, 2007
உங்கள் குழந்தைகளிடம் செக்ஸ் பற்றிப் பேசியிருக்கிறீர்களா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:10 PM
0
comments (நெற்றிக்கண்)
"மாறன் பிரதர்ஸ்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:51 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 69 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:47 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
- மடுமாதா ஆலயத்திற்கான மடுக்கோவில் வீதி திறக்கப்படமாட்டாது என அறிவிப்பு
- சர்வதேச தன்னார்வப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை வழங்க இலங்கை உத்தரவாதம்
- இலங்கையின் கிழக்கே மிதிவெடிகள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்.... தொடர்ந்து இன்றைய (ஆகஸ்ட் 09 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசை செய்திகள் கேட்க இணைப்பில் செல்க..http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:41 PM
0
comments (நெற்றிக்கண்)
August 08, 2007
இன்றைய குறள்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 68 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:55 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:44 PM
0
comments (நெற்றிக்கண்)
புதிதாக வரப்போகும் டாடாவின் டைட்டேனியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை பற்றிய ஒரு கண்ணோட்டம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:16 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Part II
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:09 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
August 07, 2007
- 'நான்' எங்கிருந்து வருகிறேன்?
- 'நான்' எதனை நோக்கிப் பயணிக்கிறேன்?
- இந்த 'முதலுக்கும்' 'முடிவுக்கும்' இடையில் 'நான்' யார்?
- எத்தனை கல்பகாலத்திற்கு 'நான்'?
- விரஹத்தில் உழல்வது மட்டுமே இந்த 'நான்' லீலைகளின் பிரதானமா?
- பிரளயமற்றவனா?
- முடிவென்பதில்லையா?
- அனந்த சயனமற்ற உயிரா 'நான்'?
- 'பிறவி பற்றிய பிரக்ஞையற்று என்னை 'நீ' 'சுமந்து செல்கிறாய்.
- உன் எண்ணம், பார்வை, குரல், இயக்கம் அனைத்தும் நான். நீ விழும்போது விழுந்து எழும்போது எழுந்திருக்கிறேன். ம்..
- 'நீ ' ஓடுவது எதற்காகவென்றும் எனக்குப் புரிகின்றது.
- ஜீவாத்மாவில் பாசி படிந்துவிடக்கூடதென்கின்ற அக்கறை
அசட்டுப்பிள்ளையே! உன் பாதை முழுக்க பாசியாகவுள்ளதை அறிவதெப்போது? என்னைத் துலக்க நீ துலங்கியாகவேண்டும். துலக்க உதவும் பொருட்களுக்கா பஞ்சம்? கொஞ்சம் முனைப்பு வேண்டும். 'நாம் இருவருமே பிரம்மத்தின் கூறுகள்.. நிலையற்ற இன்பங்கைளைத் தேடி பிறவிகளின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளாதே. ஞானம் பெறு! கட்டுகளை விலக்கு! உண்மை இன்பம் விளங்கும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் செயற்பாடுகளில் எனக்கு முத்தி கொடு. எல்லாம் பிரம்மம் எனபதை 'நீ' அறிவாயாக!
- நீலக்கடல்
நாகரத்தினம் கிருஷ்ணா
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:35 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:10 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 67 - ம் குறள்
தமிழோசை
இன்றைய (ஆகஸ்ட் 07, செவ்வாய்க்கிழமை) "BBC" செய்திகள் கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:08 AM
0
comments (நெற்றிக்கண்)
August 06, 2007
இன்றைய குறள்
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழழைச்சொல் கேளா தவர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:10 PM
1 comments (நெற்றிக்கண்)
Labels: 66 - ம் குறள்
கீதோபதேசத்தின் துவக்கம் இது தான்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:04 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:02 AM
0
comments (நெற்றிக்கண்)
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:08 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : itsdiff.com
August 05, 2007
'நிலாச்சாரல்' இணைய சஞ்சிகைக்காக டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்களை நான் எடுத்த செவ்வி
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:32 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : நிலாச்சாரல்
சென்னையிலிருந்து மும்பைக்கு ஆட்டோவில் பயணம்!
76 ஆட்டோ ரிக்ஷாக்கள் ஹங்கேரி, பல்கேரியா, அமெரிக்கா, லண்டன் போன்ற 8 நாடுகளிலிருந்தும் இந்தியாவிலிருந்து 2 பேரும் சென்னையிலிருந்து மும்பைக்கு சுமார் 1921 கி.மீ. தூரம் 3 மாநிலங்களின் வழியாகச் செல்கின்றனர். சமூக சேவையை கருத்தில்கொண்டு நடைபெறுகிறது. நோட்டுப்புத்தகங்கள் வழங்குதல், கிராம மக்களிடம் நெருங்கிப்பழகுதல் போன்றவை இந்தப்பயணத்தில் குறிப்பிடத்தக்கது. பாராட்டுக்கள்!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:56 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
- இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
- அகதிகளாக வந்த 19 பேர் இராமேஸ்வரத்திலிருந்து தப்பி மன்னார் சென்றுவிட்டனர்
- புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் லண்டனில் நாடகம்
- பீகார் மாநிலத்தில் வெள்ளம் காரணமாக ஒரு கோடிக்கு மேல் மக்கள் இடம் பெயர்வு
- ஏராளமானோர் வீடிழந்தனர்
- பலி எண்ணிக்கை உயர்வு போன்ற
- இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுக்கோவிலின் ஆகஸ்ட் மாதத் திருவிழாவையொட்டி, ஒரு வருடகாலமாக மூடப்பட்டிருந்த நேரடியாகச் செல்லும் வீதி வரும் 10 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளது போன்ற
இன்றைய (ஆகஸ்ட் 05 ஞாயிற்றுக்கிழமை 2007) "BBC" கேட்க செய்திகள் இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:32 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:49 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 65 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:30 AM
0
comments (நெற்றிக்கண்)
இந்திய மற்றும் தமிழகச் சாலைகள் பற்றிய ஒரு அலசல்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:30 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இட ஒதுக்கீடு பற்றிய ஒரு பார்வை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:28 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
பொருளாதார வளர்ச்சிபற்றிய ஒரு ஆய்வு
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:25 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:19 AM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:13 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 64 - ம் குறள்
August 04, 2007
மரணதண்டனை அல்லது தூக்குத்தண்டனை தேவையா?
250 பேரை குண்டு வைத்து கொன்ற கொலைகாரனுக்கு..தூக்கு தண்டனை கொடுப்பது தவறா?...அதை எப்படிகொடூரத்தின் உச்சம் என்று சொல்ல முடியும்??..ஒரு நரகாசுரனைக் கொன்று மக்கள் உயிர்களைக் காப்பாற்றியதாகத்தான் கருதப்படவேண்டும்..
நன்றியுடன் : சம்பத் (ஆதியக்குடியான்) - சவூதி அரேபியா
அதாவது சமீபத்தில் நான் படித்த ஒரு ஆராய்ச்சிக்குறிப்பொன்று, "மரணதண்டனையின் மூலமாக குற்றங்கள் குறைவதாகத் தெரிவிக்கிறது".
ஆனாலும் குற்றம் புரிந்த அந்தக் குற்றவாளி திருந்தி வாழ ஒரு வாய்ப்புக் கொடுக்கும் பட்சத்தில், இந்த அற்புதமான மனிதப் பிறவியை அவன் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே என்ற மனிதாபிமானம் மேலோங்கி நிற்பதால்தான் மரணதண்டனை வேண்டாம், அதனைக்குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையாகவாவது மாற்றி, நடந்த தவற்றை உணரவைக்கலாம் என்பது இந்தச் சிறியேனின் தாழ்மையான கருத்து என்பதை இங்கே சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:42 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:28 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:24 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 63 - ம் குறள்
து(ப்)பாய்!!?
| து(ப்)பாய்.pps |
| Hosted by eSnips |
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:42 AM
0
comments (நெற்றிக்கண்)
பழ.நெடுமாறன் வேண்டுகோள்!
கோவை வெடிகுண்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானிக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை வெடிகுண்டு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது பொய்யான குற்றம்சாட்டிய அதிகாரிகள் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல்வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொய்வழக்கு தொடர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதானிக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்கவேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்று பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:11 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : Yahoo Group
August 03, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:31 PM
0
comments (நெற்றிக்கண்)
அற்புதமான கட்டுரை
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:30 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : கூகிள் குழுமம்
நாலடியார்
1. அறத்துப்பால்
1.12 மெய்ம்மை
இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க
நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்ற முடைத்து
- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை
தன்னிடம் இல்லாத ஒரு பொருளை இல்லை என்று சொல்லிவிடுவது எவருக்கும் தீமை அல்ல, அது இயற்கைக் குணமாகும். அவ்வாறு இல்லாமல் தருவேன் என்று பேச்சளவில் சொல்லி, அப்படிக் கொடுக்காமல் இழுத்தடிப்பது, ஒருவர் செய்த நன்றியை மறந்தவர் செய்யும் தவறுக்கு ஒப்பாகும்
- ஆதியக்குடியான்
ஆங்கில விளக்கவுரை
Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:49 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:36 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:15 AM
0
comments (நெற்றிக்கண்)
August 02, 2007
தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி
பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழவிடவில்லை. தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள். நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை. எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு. கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது."வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை" இலக்கியச் சுடரொளி - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி அவர்களுடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக: "நிலாச்சாரல்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:37 PM
0
comments (நெற்றிக்கண்)
தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி
பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழவிடவில்லை. தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.
நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை. எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு. கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது."வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை"
இலக்கியச் சுடரொளி - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி அவர்களுடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே உங்களுக்காக: "நிலாச்சாரல்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:34 PM
0
comments (நெற்றிக்கண்)
அமெரிக்கா : மினியாபொலிஸ் I 35 என்ற நெடுஞ்சாலை பாலம் இடிந்தபோது எடுத்த வீடியோ
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:31 PM
0
comments (நெற்றிக்கண்)
அமெரிக்கா : மினியாபொலிஸ் பாலம் இடிந்தபோது எடுத்த வீடியோ
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:28 PM
0
comments (நெற்றிக்கண்)
அமெரிக்கா : மினியாபொலிஸ் பாலம் இடிந்த.... வீடியோ
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:26 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:56 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 62 - ம் குறள்
சில மணி நேரங்களுக்கு முன்...
அமெரிக்காவின் மினியாபோலிஸ் என்ற இடத்தில் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம் இடிந்து மிஸிசிபி ஆற்றுக்குள் விழுந்து ஏராளமானோர் பலி, மிகவும் வாகன நெருக்கடியான நேரத்தில் இடிந்து விழுந்ததால் பலர் போன இடம் தெரியவில்லை.மிகவும் பரிதாபத்துக்குரிய அமெரிக்க விபத்துக்களில் இதுவும் ஒன்று. இதுபற்றிய செய்தியை முழுவதுமாகப் பார்க்க இந்த இணைப்பில் செல்க...http://abcnews.go.com/
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:29 AM
0
comments (நெற்றிக்கண்)
August 01, 2007
இன்றைய குறள்
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:54 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 61 - ம் குறள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:54 PM
0
comments (நெற்றிக்கண்)
July 31, 2007
இசையுலகில் மட்டுமல்ல எழுத்துலகிலும் கொடிகட்டிப் பறக்கும் கீதா பென்னட், சங்கீத கலாநிதி டாக்டர் ராமநாதனின் வழித் தோன்றல். வீணையிலும் வாய்ப்பாட்டிலும் வல்லவரான உலகின் பல பாகங்களிலும் இசைநிகழ்ச்சியும் பயிற்சியும் அளித்துவருகிறார். வீணை இசைக்காக அகில இந்திய வானொலி/தொலைக்காட்சியின் உச்சகட்ட விருதைப் பெற்றிருக்கிறார். நாரத கான சபாவிடமிருந்து சிறந்த வீணை வாசிப்பாளர் விருது பெற்ற கீதாவின் மகுடத்தில் இது போல் பல சிறகுகள். ஃப்யூஷன் இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட கீதா, பல மேற்கத்திய இசைக் குழுக்களில் வீணை வாசிப்பாளராக இருக்கிறார். இவரது வீணை இசை இந்திய அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான சந்தோஷ் சிவன் இயக்கும் Road to Happiness எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இடம்பெறுகிறது. இவர் நிலாச்சாரலுக்காகத் தந்திருக்கும் ப்ரத்யேக நேர்முகம் : Nilacharal
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:31 PM
1 comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி சேர்ந்து பாடியவை
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:23 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
ஆர்ட் டைரக்டர் திரு.தோட்டா தரணி பகுதி 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:31 PM
0
comments (நெற்றிக்கண்)
"தயாநிதி மாறனும் தற்போதைய மந்திரியும்" IV
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:30 PM
0
comments (நெற்றிக்கண்)
மலையாள நண்பர் ஒருவரின் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்!!
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:54 PM
0
comments (நெற்றிக்கண்)
படித்ததில் கனத்தது!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:36 PM
1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி - Google Groups
இன்றைய குறள்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு, அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:29 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 60 - ம் குறள்
"மரண தண்டனை என்பது"
- மனித உரிமையை முற்றிலும் அழிக்கிறது.
- மனித வதையின் (Torture) எல்லை
- கொடூரத்தின் உச்சம்
- சட்டப்பூர்வ அங்கீகாரத்தோடு அரசால் நடத்தப்படும் கொலை
- குற்றம் சாட்டப் பெற்றவருக்கு மறு சீர்திருத்தம் அடியோடு இல்லாமல் போகிறது.
- பெரும்பாலான சமயங்களில் இதற்கு ஆட்படுவோர் படிப்பறிவு அற்றவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர், இனப் போராளிகள் மற்றும் மதப் பற்றாளர்கள் மட்டுமே
- சில சமயங்களில் நீதி தவறும் பட்சத்தில், தண்டிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிக்க வாய்ப்பே இல்லை.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:16 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : மனிதம்
சஞ்சய் தத்துக்கு ஆறு ஆண்டு கால சிறை தண்டனை
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்-துக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.டி. கோடே செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்தத் தீர்ப்பை வெளியிட்டார். கடந்த 1993-ம் ஆண்டு மும்பை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில், 257 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை, சிறப்பு தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த வழக்கு மீதான தீர்ப்பு படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. இதுவரை 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதி்க்கப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள், குண்டுவெடிப்புக்கு முன்னதாக வழங்கிய ஆயுதங்களை, சட்டவிரோதமாக தன்னிடம் வைத்திருந்ததாக சஞ்சய் தத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏ.கே. 56 ரக துப்பாக்கி மற்றும் 9 எம்எம் பிஸ்டல் ஆகியவை வைத்திருந்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 6 ஆண்டு சிறை தண்டனையுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டுக்களை ஏற்கெனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத், ஏற்கெனவே 18 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார்.
முதல் முறை குற்றம் புரிந்தவர்களுக்கான பாதுகாப்பு சட்டப்படி தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று சஞ்சய் தத் கோரியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது.
அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை மூலம், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:59 PM
0
comments (நெற்றிக்கண்)
நாமக்கல் கவிஞர்
"இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய்க் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.
அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
'இசை' எனப் படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்.
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்
இசையைக் கேட்க இச்சை கொள்வதே
'தமிழிசை' என்பதன் தத்துவ மாகும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:31 AM
0
comments (நெற்றிக்கண்)
July 30, 2007
செல்போனா! ஐயோ வேண்டாம்!! எச்சரிக்கை!!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:57 PM
0
comments (நெற்றிக்கண்)
வைத்தார்கள் ஆப்பு
நாட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருக்கையில்.....பாராளுமன்றம் செல்பவர்களின் சொகுசு வாழ்க்கையையும் தெரிந்து கொள்வோம்.
Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)
Monthly Salary : 12,000
Expense for Constitution per month : 10,000
Office expenditure per month : 14,000
Traveling concession (Rs. 8 per km) : 48,000 ( eg.For a visit from kerala to Delhi & return: 6000 km)
Daily DA TA during parliament meets : 500/day
Charge for 1 class (A/C) in train: Free (For any number of times)
(All over India )
Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)
Rent for MP hostel at Delhi : Free
Electricity costs at home : Free up to 50,000 units
Local phone call charge : Free up to 1 ,70,000 calls.
TOTAL expense for a MP [having no qualification] per year : 32,00,000 [i.e . 2.66 lakh/month]
TOTAL expense for 5 years : 1,60,00,000
For 534 MPs, the expense for 5 years :
8,54,40,00,000 (nearly 855 crores)
AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES…..
This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities.......
And this is the present condition of our country:
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:40 PM
0
comments (நெற்றிக்கண்)
நாலடியார்
1. அறத்துப்பால்
1.11 பழவினை
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
பெறற்பா லனையவும் அன்னவாம் மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்
- சமண முனிவர்கள்
தமிழ் விளக்கவுரை
போன பிறவியில் செய்த நன்மை தீமையின் பலனால் வந்துசேரும் துன்பத்தைப் போக்க முனிவர்களால் கூட முடியாது. பெறக்கூடிய இன்பமும் அப்படியே! விதி வசத்தால் அமையும். மழையைப் பெய்ய வைப்பாரும் இல்லை. மழை அதிகமாகப் பெய்தால் நிறுத்துவாரும் இல்லை
- ஆதியக்குடியான்
ஆங்கில விளக்கவுரை
To avoid those things which are to happen, or to detain those who are to depart, is alike impossible even to saints, even as there is none who can give rain out of season, or prevent its falling in season.
Translation of Selected Verses
by Rev.F.J.Leeper, Tranquebar
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:35 PM
0
comments (நெற்றிக்கண்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:52 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:03 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 59 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
7:02 PM
0
comments (நெற்றிக்கண்)
வானம் வசப்படும்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:45 AM
0
comments (நெற்றிக்கண்)
சவுதிஅரேபியாவில் இலங்கைப் பணிப்பெண்ணை ரிசானாவின் கவனக் குறைவால் 4 மாதக் குழந்தையொன்று உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு அரசு ரிசானாவுக்கு மரண தண்டனை விதித்தது.
இலங்கை பணிப் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீக்குமாறு இலங்கை அரசும் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் உசைன் பைலா பணிப்பெண்ணின் பெற்றோருடன் சவுதி சென்றார்.
அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து றிசானாவை மன்னித்து விடுதலையாக்கும்படி கேட்டபோதும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். இதனால் ரிசானாவை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிசானாவின் பெற்றோரும் பிரதி அமைச்சர் உசைன் பைலாவும் நாடு திரும்பி விட்டனர்.
இத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் பெண்ணாவார். இவர் இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆட்சேபித்து சர்வதேச மன்னிப்பு சபையிடம் புகார் செய்துள்ளனர்.
இலங்கைப் பெண்ணான ஹெல்மா நிஸ்ஸா அவரது கணவன் நௌஸாப் மற்றும் இலங்கையரான கே.எம்.எஸ். பண்டாரநாயக்க ஆகிய மூவருமே சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.
இம்மூவரும் சவூதி அரேபியாவில் பொலிஸாரின் விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தடுப்புக்காவலில் இருக்கும்போது அவர் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு மிக மோசமாக சித்திரவதைக்குள்ளான நிலையும் காணப்படுகிறது.
சவூதி அரேபிய அரசு தற்போது மரண தண்டனை குற்றவாளிகள் தொடர்பில் இறுக்கமான நடைமுறைகளைக் கையாள்வதன் காரணமாக இவ்வாண்டு இதுவரை 103 பேர் மரண தண்டனைக்குள்ளாகியுள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை, சிரச்சேதம் செய்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:50 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Thinakkural
July 29, 2007
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:57 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: தினமணி, நன்றி : சற்றுமுன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:46 PM
0
comments (நெற்றிக்கண்)
ஒரே குடியரசுத்தலைவன்!
ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த அன்றே சென்னைக்கு அப்துல் கலாம் வந்திறங்கிய போது முகம் கொள்ளாத சிரிப்போடு இருந்தார். அவரைச் சந்திக்க வரிசையில் நின்றிருந்த விசிட்டர்களில் ஒரு பெண்மணி, கலாமிடம் உற்சாகமாக சில வார்த்தகளைச் சொன்னபடியே, அழகிய ஜரிகைக் காகிதத்தில் சுற்றிய ஏதோ ஒரு பரிசுப் பொருளை அவரிடம் அளிக்க... "என்ன இது" என்று கேட்டார் அப்ல்கலாம். ஏதோ "ஒரு விலை மதிக்கமுடியாத பரிசு" என்று அந்தப் பெண்மணி சொல்ல... படக்கென்று கலாமின் முகத்திலிருந்த சிரிப்பு மாறியது. “இப்படியெல்லாம் செய்யக் கூடாது” என்று சற்றே கடுமயாகச் சொல்லி... பரிசை அந்தப் பெண்மணியிடமே திருப்பிக் கொடுத்து விட்டு, வேகமாக அவரைத் தாண்டிப் போனாராம். அன்று இரவே கிண்டி அண்ணா பல்கலக்கழகத்தின் விருந்தினர் மாளிகைக்குப்போன கலாம், மறுபடி ஜாலி மூடுக்குத் திரும்பியிருந்தார். ஜனாதிபதி “புரோட்டோகால்” இல்லாத அந்தச் சுதந்திரத்தை வெகுவாகவே ரசித்து அனுபவிக்க ஆரம்பித்தார். தன்னை நெருங்கிய பேராசிரியர் கஷீம் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் உற்சாகமாகக் கை குலுக்கி, மனம் விட்டுப் பேசி மகிழ்ந்தார். சிலர் பாசத்தோடு கட்டியணைக்க... அதற்கும் பிகு எதுவும் இல்லாமல் அனுமதித்தார். உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர், “ஐயா! அஞ்சு வருஷத்க்கு முன்னாடி, குடியரசுத் தலைவர் பதவிக்கு, உங்க பெயர் பரிந்துரைக்கப்பட்டதுமே அதை முதல்ச் செய்தியாகச் சொன்னது நான்தான். அதுவும் இதே இடத்தில்தான் சொன்னேன்... டெல்லிக்கு உங்களுக்கு லைன் போட்டுக் கொடுத்ததும் நான்தான்” என்று மலரும் நினவூட்ட... கலாம் கண்கள் லேசாகப் பனித்தன. ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கே உரிய பாதுகாப்பு ஏற்பாடு கள் அனத்தும் அண்ணா பல்கலைக் கழக விருந்தினர் வளாகத்தில் செய்யப்பட்டிருக்க, அந்த ஏரியா டெபுடிபோலீஸ் கமிஷனர் சேஷசாயியை அழைத்த கலாம்... “நீங்கதான் எல்லாம் கவனிக்கப் போறீங்களா... குட்! நான் மாதத்தில் சில நாட்கள் மட்டும்தான் இங்கே இருக்க வேண்டி வரும். அந்தச் சமயத்தில் என்னைத் தேடி வர்றவங்களில் பெரும்பாலும் மாணவர்கள்தான் இருப்பாங்க. சந்தேகம் கேட்கணும்-னு என்னிடம் வந்துகிட்டே இருப்பாங்க. பாகாப்புக் கெடுபிடி என்ற பெயரில் அவங்க மனசு நொந்து போயிடக்கூடாது. நீங்கதான் எல்லா காவலர்களுக்கும் அத எடுத்துச் சொல்லணும்” என்று நட்புடன் சொன்னார்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:56 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Vikatan
"டாக்டர் அப்துல்கலாம் இணைய தளம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:52 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: source:http://tamil.sify.com/fullstory.php?id=14500527
இன்றைய குறள்
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:47 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 58 - ம் குறள்
தமிழோசை
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:22 PM
0
comments (நெற்றிக்கண்)
இசையை ரசிக்கக் கூடிய ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத ஒரு வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம்தான். இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை என்று சொல்லி நிகழ்ச்சிகளைத் தொகுத்தும் வழங்கும் விதத்தில் மயங்காத தமிழ் நெஞ்சங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. தொலைக்காட்சி, சினிமாக்கள் இன்றைய அளவுக்குப் பிரபலமடையாத அந்தக்காலத்தில் ஒரே ஒரு பொழுது போக்குச் சாதனம் வானொலி ஒன்றுதான். இலங்கை வானொலி ஒலித்துக்கொண்டிருந்தால் நம்மையறியாமலே மனதில் ஒரு திருமண வீடு போன்ற குதூகலம் பிறக்கும். நெடுநாளைக்குப்பின் அந்த அனுபவத்தை இப்போதும் இந்த ஒலிப்பதிவைக் கேட்கும்போது உணரமுடிகிறது. அப்படிப்பட்ட அற்புதமான, இனிமையான மலரும் நினைவுகளை நம் செவிகளுக்கு விருந்தாக்கியிருக்கிறார் அருமை நண்பர் திரு.யாழ் சுதாகர். அந்த இனிமையான குரல்களில் இவருடைய குரலும் ஒன்று. இப்போது இலங்கை வானொலியில் இவருடைய குரலைக் கேட்க முடியாவிட்டாலும், நமது தமிழகத்தில் "சூரியன் பண்பலை" வரிசையில் இரவு நேரத் தொகுப்பாளராக மிக அருமையாகவும், அற்புதமாகவும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடிவது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைக் கேட்போம். திரு.யாழ் சுதாகர் அவர்களுக்கு நன்றி
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:27 AM
1 comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : திரு.யாழ் சுதாகர்
இலங்கை வானொலி நினைவலைகள் பகுதி II
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:18 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : திரு.யாழ் சுதாகர்
July 28, 2007
கொட்டாவி நல்லதா கெட்டதா?
கொட்டாவி மனிதர்கள் மட்டுமல்ல, எந்த உயிரினத்துக்கும் வரும்.
சோர்வு மற்றும் துõக்கத்துக்கான அறிகுறி என்று தான் இதுவரை, கொட்டாவியை பற்றி டாக்டர்கள் பலரும் சொல்லி வந்தது! ஆனால், சமீபத்தில் அமெரிக்க நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், புது தகவல்கள் கிடைத்துள்ளன.
நியூயார்க் அல்பேனி பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறிய தகவல்கள், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
அவர்கள் கூறியது :
கொட்டாவி, நல்லது தான். துõக்கமில்லாமல் இருப்போருக்கு வருவது தான் கொட்டாவி, அதனால், சோர்வு தான் ஏற்படும் என்று சொல்வதெல் லாம் சரி தானா என்ற கேள்வியை, இப்போது கிடைத்துள்ள மருத்துவ உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளன.
உடலில், ரத்தத்தில் ஆக்சிஜன், கார்பன் டைஆக்சைடு அளவில் மாற் றம் ஏற்படும் போது, கொட்டாவி ஏற் படும். கொட்டாவி விடுவதில் இருந்து தான் இந்த இரண்டின் அளவுகள் சீராகின்றன என்று முன்பு கூறப்பட்டது.
ஆனால், கொட்டாவி ஏற்பட, ஆக்சிஜனோ, கார்பன்-டை-ஆக்சைடோ காரணம் அல்ல என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளை இயக்கத்தை சீராக்கவே, கொட்டாவி வருகிறது. மூளை இயக் கம் துவண்டு போகாமல், அதை மேலும், வலுப்படுத்தவே, கொட்டாவி வருகிறது என்பது தான் உண்மை என்று நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
நாங்கள் 44 பேரை வைத்து, இதற்கான சோதனையை செய்தோம். அவர்களில் சிலர், சிரித்தபடி இருந்தனர். சிலர், வீடியோ படம் பார்த்தபடி இருந்தனர். இப்படி ஆளாளுக்கு ஒரு வேலையில் ஈடுபட்டிருந்தனர். எல்லாரும் சில முறையாவது கொட்டாவி விட்டனர். மூக்கில் வெற்றிடம் உள்ளது. அதில் உள்ள ரத்த நாளங்கள், மூளைக்கு குளிர்ந்த ரத்தத்தை அனுப்பும் போது, இப்படி கொட்டாவி ஏற்படுகிறது என்பது தான் எங்கள் ஆய்வு முடிவு. ஏ.சி. அறையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு அடிக்கடி கொட்டாவி வரும். வீடியோ பார்ப்பது, படிப்பது, எழுதுவது போன்ற செயல்களின் போதும், கொட்டாவி வரும்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:49 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினமலர்
சங்கீத ஜாதிமுல்லை பாடலைப் பாடிய இந்தச் சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு, சங்கீதக் கலாநிதி, பத்மபூசன் டாக்டர் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் விருதும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசும் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார். ஆனால் இந்தச் சிறுவனுக்கு இதைவிட பெரிய பரிசே கொடுத்தாலும் தகும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:25 PM
0
comments (நெற்றிக்கண்)
அபர்ணா
இன்னொரு திறமையான பாடகி உருவாகிக்கொண்டிருக்கிறார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:05 PM
0
comments (நெற்றிக்கண்)










