October 14, 2007
சங்கவை, அங்கவை
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:34 PM
0
comments (நெற்றிக்கண்)
இந்தியாவில் வரதட்சிணைக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை
- இந்தியாவில் வரதட்சிணைக் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியாவின் சட்ட ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தலைமையிலான சட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை சட்ட அமைச்சர் பரத்வாஜிடம் சமர்ப்பித்துள்ளது.
ஏற்கெனவே, வரதட்சிணைக் குற்றங்களுக்கு தண்டணை விதிக்க சட்டத்தில் இடம் உள்ள நிலையில், அதில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்று நீதிபதி லட்சுமணன் அவர்களிடம் கேட்டபோது, மகளிர் அமைப்புக்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை அடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அரசு சட்ட ஆணையத்தைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார். அதிகபட்ச தண்டனையாக தற்போதுள்ள ஆயுள் தண்டனையை தூக்குத் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆணையத்தில் நடைபெற்ற விவாத்தின்போதும் அதுபோன்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், உலக அளவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வரும் நிலையிலும், பல்வேறு தீர்ப்புக்களை அடிப்படையாகக் கொண்டும், ஆயுள் தண்டனையே போதுமானது என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.ஆர். லட்சுமணன். அதே நேரத்தில், குறைந்தபட்ச தண்டனையாக தற்போது 7 ஆண்டுகளாக இருப்பதை, பத்து ஆண்டுகளாக அதிகரிக்குமாறு அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். - இலங்கைக்கும் ஐ.நாவுக்கும் இடையேயான மோதல் குறித்த செய்தி ஆய்வு : கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த ஐ நா மன்றத்தின் மனித உரிமை ஆணையர் லூயிஸ் ஆர்பர் அவர்கள் தமது பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் தமது கவலைகளையும் விமர்சனங்களையும் வெளியிட் டிருந்தார்
- மத்திய கிழக்கு விஜயத்தில் கொண்டலீசா ரைஸ் : தற்போது மத்திய கிழக்குப் பயணத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் கொண்டலீசா ரைஸ் அவர்கள், முதலாவதாக இஸ்ரேலியத் தரப்புடன் பேசியுள்ளார்
- கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்ற இனக்குரொத கூச்சல் தொடர்பாக கிரிக்கெட் சபை விளக்கம் : ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சிமெண்ட்ஸ்
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இரண்டிலே நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற இனக்குரொத கூச்சல்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விளக்கம் கேட்டுள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:09 PM
0
comments (நெற்றிக்கண்)
October 13, 2007
இதுதான் நமது உலகம்!!
Posted by
Manuneedhi - தமிழன்
at
6:26 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
கற்பவை கற்றுச் சினம் காத்து அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்
அறத்துப்பால் : அடக்கம் உடைமை
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:28 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 130 - ம் குறள்
எடிட்டர் அந்தோணி
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:21 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
2011-ஆம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்பேன்
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:18 PM
0
comments (நெற்றிக்கண்)
ஒரினச் சேர்க்கைப் பாதிரியாரை பதவி நீக்கம் செய்துள்ளது வாட்டிகன்
- இந்தியப் பிரதமரை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி : இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்று நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு புதுடெல்லி வந்தார். சனிக்கிழமை மாலை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்
- இலங்கை மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா உயர்ஸ்தானிகர் வேதனை : இலங்கைக்கு தற்போது விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் அவர்கள், இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தினை அமுல்படுத்துவதில் இருக்கின்ற பலவீனமும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பதும் வேதனைக்குரிய விடயம் என்று கூறியிருக்கிறார்
- யாழ்ப்பாணம் குருநகர் குடாகடலில் மோதல் : இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் குருநகர் குடாகடலில் சனிக்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டு 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய இராணுவத்தின் படகு ஒன்றில் இருந்த 3 படையினர் காணாமல் போயிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது
- பர்மாவில் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் கைது : பர்மாவில் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களில் மீதமுள்ள மூன்று தலைவர்களையும் பர்மிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை வன்முறை மூலமாக இராணுவம் மட்டுப்படுத்தியது
- ரஷ்ய மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமெரிக்கா ஆதரவு : ரஷ்யாவில் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலர் கொண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்
- ஒரினச் சேர்க்கை பாதிரியாரை பதவி நீக்கம் செய்துள்ளது வாட்டிகன் : இத்தாலி நாட்டுத் தொலைக்காட்சியில் தன்னை ஒரினச் சேர்க்கையாளர் என்று ஒப்புக்கொண்ட உயர் பதவியில் இருக்கின்ற பாதிரியார் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தியை வாட்டிகன் ஒப்புக்கொண்டுள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:03 PM
0
comments (நெற்றிக்கண்)
October 12, 2007
இன்றைய குறள்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:54 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 129 - ம் குறள்
குத்துப்பாட்டைத் தமிழகத்தின் தேசியகீதமாக மாற்றாதீர்கள்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:16 PM
0
comments (நெற்றிக்கண்)
வீரப்பன் தொடரை ஒளிபரப்ப இடைக்காலத் தடை
தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையேயுள்ள காட்டுப் பகுதியில் இருந்தபடி கொலைகள், சந்தனக் கடத்தல், யானைகளை வேட்டையாடுதல் போன்ற பல்வேறு குற்றங்களை செய்து வந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும், வீரப்பன் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை தனியார் டி வி ஒன்று தொடராக ஒளிபரப்ப திட்டமிட்டது. அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்தத் தொடரை ஒளிபரப்பவிருந்தனர். இத்தொடர் ஒளிபரப்பானால், அதனால் தனக்கும் தனது இரு பெண்களுக்கும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தம் என்று கூறி வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி நீதிமன்றத்தை அணுகி இத் தொடருக்கு எதிராக தடை கோரினார். அந்த வழக்கை விசாரித்த சென்னை சிவில் நீதிமன்றம் ஒன்று, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அதனை ஒளிபரப்பத் தடை வித்தித்துள்ளதாக, முத்துலட்சுமியின் வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார். இருந்த போதிலும் இந்த நீதிமன்றத் தடைக்கு எதிராக தான் ஏற்கனவே மேன்முறையீடு செய்துவிட்டதாகக் கூறுகிறார், வீரப்பன் குறித்த தொடரை இயக்கும் கவுதமன். இந்தத் தொடர் வீரப்பினின் இரு பக்கங்களையும் மக்கள் முன் கொண்டுவரும் என்றும், தொடரைப் பார்த்த மக்கள் வீரப்பனின் குடும்பத்துக்கு அன்பையும் ஆதரவையும் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.- பெனசிர் நாடுதிரும்புவதை தடுக்கப்போவதில்லை என்கிறார் முஷாரஃப் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ அடுத்த வாரம் நாடு திரும்ப இருப்பதை தான் தடுக்கப்போவதில்லை என பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் கூறுகிறார்
- ஐ. நா மனித உரிமைகள் ஆணையர் யாழ் விஜயம் : ஐநா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான அமைப்பு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட வேண்டும் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ. நா மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆபர் அம்மையாரிடம், யாழ் குடாநாட்டின் பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மூத்த குடிமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
- இலங்கை செய்தியாளர்களின் பிரச்சினைகள் குறித்த சந்திப்பு : இலங்கையில் செய்தியாளர்கள் பணியாற்றுவதில் மிகவும் அபாயகரமான நிலைமையை எதிர்நோக்குவதாக, இங்கு லண்டனில் நடந்த செய்தித்துறையைச் சார்ந்தவர்களின் சந்திப்பு ஒன்றில் விவாதிக்கப்பட்டது
- அமைதிக்கான நோபல் பரிசு : அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர், அல்கோர் அவர்களுக்கும் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவுக்கும் வழங்கப்படுகிறது
- மலேரியா கட்டுப்பாட்டு திட்டம் பலனளிக்கிறது: உலக வங்கி
கொசுக்கடியால் பரவுகிறது மலேரியாமலேரியா நோயை கட்டுப்படுத்துவதற்காக உலக வங்கி ஆரம்பித்த ஒரு புதிய திட்டம் இரண்டு ஆண்டுகளை எட்டியிருக்கும் நிலையில் 18 நாடுகளில் அந்நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைகிறது என உலக வங்கி கூறுகிறது - விசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் - பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு : ஆண்-பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள்
பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்-பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து நீண்டகாலம் உயிர்வாழ்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள் - இன்றைய (அக்டோபர் 12 வெள்ளிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:02 PM
0
comments (நெற்றிக்கண்)
October 11, 2007
சிங்காரச் சென்னையைப் பிரிந்து வெளிநாடு/வெளியூர்களில் வாழும் நண்பர்களுக்காக
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:43 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
சங்கமம் நேரடி ஒளிபரப்பு
Posted by
Manuneedhi - தமிழன்
at
8:42 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : சங்கமம்
இன்றைய குறள்
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:18 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 128 - ம் குறள்
சூட்சுமமான ஓர் உறவு
*****
"கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலோடு தி.மு.க-வுடனான உறவு முடிந்து விட்டது. தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் ஏற்பட்டது தேர்தல் கூட்டணிதான்" -டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:09 PM
0
comments (நெற்றிக்கண்)
நோபல் பரிசைப் பெறும் மிக அதிக வயதானவரான, டோரிஸ் லெஸ்ஸிங்க்குக்கு 87 வயதாகிறது
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் பிரிட்டிஷ் எழுத்தாளர் :
டோரிஸ் லெஸ்ஸிங் பிரிட்டிஷ் எழுத்தாளர், டோரிஸ் லெஸ்ஸிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார். நெருப்பு, அவநம்பிக்கை, மற்றும் தீர்க்க தரிசன சக்தி போன்றவற்றுடன் பெண்கள் பார்வையிலான அனுபவத்தைப் பற்றி அவர் எழுதினார் என்று இந்தப் பரிசை அறிவித்த, ஸ்வீடிஷ் அக்காடமி கூறியது. இந்தப் பரிசைப் பெறும் மிக அதிக வயதானவரான, டோரிஸ் லெஸ்ஸிங்க்குக்கு 87 வயதாகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர், தனது முதலாவது புதினமான, புல் பாடுகிறது, தி க்ராஸ் இஸ் சிங்கிங், என்ற புத்தகத்தில் அவர், தனது குழந்தைப்பருவத்தைக் கழித்த ரோடிஷியாவில் காலனிய அரசின் வீழ்ச்சி குறித்து எழுதினார். அதிலிருந்து அவர் 20க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியுள்ளார்.- நேபாள நாடாளுமன்றத்தில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த விவாதம் : நேபாள மன்னர்நேபாளத்தில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பிலான தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் சேர்ந்துள்ள, ஒரு முன்னாள் மாவோயிஸ்டால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது - இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் லூயிஸ் ஆர்பரைச் சந்தித்தனர் : இலங்கையில் காணாமல் போனவர்களது உறவினர்கள் பலர் இன்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விவகார ஆணையர் லூயிஸ் ஆர்பர் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளனர்
- கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஜனாதிபதிக்குக் கடிதம் : பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் ஹனீபா இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம் தமது கவலையை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது
- இ.தொ.கா பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சர்களாகினர் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த ஆலோசகரும், சகோதரருமாகிய பசில் ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாத முற்பகுதியில், தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று மீண்டும் அந்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றிருக்கிறனர்
- அமெரிக்க- துருக்கிய உறவில் ஒரு சிக்கல் : முதலாவது உலகப் போரின் போது துருக்கியில், ஆர்மீனியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதை, இனப்படுகொலை என்று அமெரிக்கக் காங்கிரஸ் நாடாளுமன்றத்தின், வெளியுறவுக் குழு வாக்களித்துள்ளமையானது, அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையிலான உறவுகளில், புதிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது
- இன்றைய (அக்டோபர் 11 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசை கேட்க இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:54 AM
0
comments (நெற்றிக்கண்)
October 10, 2007
நாம் எங்கிருக்கிறோம் என்பதல்ல!
“மகனே!
எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் நம் தோட்டத்தை நான் காயவிட்டதில்லை, ஆனால் உன் அம்மா மறைந்த அன்று நான் எப்படி வெறுமையாக உணர்ந்தேனோ அதைப்போல் இன்றும் உணர்கிறேன். நீ இருந்திருந்தால் இந்தத் தோட்டம் இந்நேரம் பூத்துக்குலுங்கியிருக்கும். கடந்த வருடம் வரை நீ எனக்கு அவ்வளவு உதவியாய் இருந்தாய். உன் போதாத காலம் நீ சிறையில் வாடுகிறாய். நானும் தனிமையில் யாரும் இல்லாமல் தவிக்கிறேன். என் இந்தத் தள்ளாத வயதில் ஒரு ஏக்கர் நிலத்தைத் தோண்டி உருளை பயிரிட எனக்குத் தெம்பு இல்லை. உன் அம்மா ஆசை ஆசையாய்ப் பராமரித்த இந்த நிலம் இன்று வெறிச்சோடிக்கிடக்கிறது. அதைக் கண்கொண்டு என்னால் பார்க்க இயலவில்லை. எனவே கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தோண்டிப் பயிரிட முயற்சிக்கிறேன். உன் தண்டனை மிக விரைவில் முடியப் பிரார்த்திக்கிறேன்.
உன் வருகைக்காகக் காத்திருக்கும்
உன் அன்புத் தந்தை
என்று மிகுந்த வேதனையோடு தன் மகனுக்கு எழுதியிருந்தார்.
கடிதத்தை அனுப்பிய நான்காவது நாள் ஒரு தந்தி வந்திருந்தது.
அப்பா!
தயவு செய்து அந்த நிலத்தைத் தோண்டாதீர்கள். அதில்தான் நான் எனது அனைத்துத் துப்பாக்கிகளையும், ஆவணங்களையும் புதைத்து வைத்திருக்கிறேன்” என்று அனுப்பப் பட்டிருந்தது. தந்தி கிடைத்த இரண்டாவது மணிநேரத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு பெரும் கூட்டமே வந்து அந்த நிலத்தை தலைகீழாகத் தோண்டிப் போட்டுவிட்டு எந்தத் துப்பாக்கியும், ஆவணமும் கிடைக்காமல் திரும்பிச் சென்றுவிட்டனர். பெரியவருக்கு ஒன்றும் புரியாமல் குழம்பிப்போனார். மறுபடியும் மகனுக்கு எழுதினார். மகனுடைய அடுத்த பதிலில்,
அப்பா!
என்னை மன்னித்து விடுங்கள்! என்னால் இங்கிருந்துகொண்டு இதைத்தான் செய்ய முடிந்தது. இப்போது உருளையைப் பயிரிடுங்கள். அம்மாவின் ஆத்மாவும் சாந்தியடையும்.
தண்டனை முடிந்து விரைவில் சந்திக்கிறேன்.
பாசத்துடன் மகன்
செய்தி:
“நாம் எங்கிருக்கிறோம் என்பதல்ல, எங்கிருந்தும் சாதிக்க முடியும்”
(எனக்கு அறிமுகமில்லா யாரோ எனக்கனுப்பிய ஒரு ஆங்கில மின்னஞ்சலை தமிழ்ப்படுத்தியுள்ளேன். அவருக்கும், மின்னஞ்சலின் மூலவருக்கும் என் நன்றி)
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:49 PM
0
comments (நெற்றிக்கண்)
அர்த்தமுள்ள இந்து மதம் : கவியரசு கண்ணதாசனின் குரலில் - III
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:41 PM
1 comments (நெற்றிக்கண்)
எடிட்டர் அந்தோணி
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:19 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:33 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 127 - ம் குறள்
ஆதாரங்கள் இல்லை என்பதற்காக இராமர் கற்பனையான பாத்திரம் என்று கூறிவிடமுடியாது
"இராமபிரான் வாழ்க்கையில் பல அதிசயிக்கத்தக்க விசயங்கள் நடந்துள்ளன. இதற்கு ஆதாரங்கள் இல்லை என்பதற்காக இராமர் கற்பனையான பாத்திரம் என்று கூறிவிடமுடியாது. மதத் தலைவர்கள் பலரது வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றையெல்லாம் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியுமா?" - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், "வாழும் கலை" நிறுவனர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:24 PM
0
comments (நெற்றிக்கண்)
உள் ஒதுக்கீடு கோரும் அருந்ததியர்
- மனித கடத்தல் குழுக்களின் கேந்திரமாக இந்தியா-ஐநா கவலை :
மனித கடத்தலை தடுப்பதற்கான ஐநா மன்றத்தின் புதிய முன் முயற்சி ஒன்று இந்திய தலைநகர் புது தில்லியில் துவங்கப் பட்டுள்ளது. போதை மருந்துகள் மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்கும் ஐநா மன்ற அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, உலக அளவில் பல பத்து லட்சக்கணக்கான பேர், பலவந்தமாக பாலியல் தொழில் மற்றும் அடிமைத்தொழில் செய்யும்படி வற்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் சிறார்கள் என்றும், இவர்கள் மூலம் 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வருடாந்த வருமானம் ஈட்டப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்கடத்தல் பிரச்சினை தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் நடப்பதாக தெரிவிக்கும் ஐநா மன்றம், தென்கிழக்கு ஆசியாவில் நிலைமை இதைவிட மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த வியாபாரத்தின் முக்கிய கேந்திர இடமாக இந்தியா திகழ்வதாக ஐநா மன்றம் தெரிவித்திருக்கிறது. இங்கிருக்கும் அமைப்பு ரீதியாக செயல்படும் குற்றக் குழுக்கள், பெண்களை யும் குழந்தைகளையும் இந்தியாவுக்கு உள்ளேயும், அதன் அண்டை நாடுகளான வங்க தேசம் மற்றும் நேபாளத்திலிருந் தும் கடத்தி வியாபரம் செய்வதாக கூறியிருக்கிறது - உள் ஒதுக்கீடு கோரும் அருந்ததியர் : இந்திய தலித்துகள்தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், ஆறு சதவீதத்தை தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினரான அருந்ததியினருக்கு தனியான உள் ஒதுக்கீடாக அளிக்க வேண்டும் என்று, ஆதித் தமிழர் பேரவை என்கிற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
- உலக அளவில் மரண தண்டனையை நீக்குமாறு ஐரோப்பிய அமைப்பு கோரிக்கை : போலந்து நாட்டின் எதிர்ப்புக்கு மத்தியில், ஐரோப்பா எங்கிலும் மரண தண்டனைக்கு எதிரான தினமாக புதன்கிழமை அனுட்டிக்கப்படும் நிலையில், ஐரோப்பிய குழு என்னும் மனித உரிமை அமைப்பு, உலக மட்டத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது
- பாதுகாப்பு செலவினத்தை 20 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை அரசு உத்தேசம் : இலங்கை அரசாங்கம் தனது அடுத்த வருடத்துக்கான பாதுகாப்பு செலவினங்களை 20 வீதத்தால் அதிகரிக்க உத்தேசித்துள்ளது
- மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர் வானில் பறந்தார் : மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர் இன்று வானில் பறந்தார்
மலேஷியாவின் முதல் விண்வெளி வீரர், கஜகஸ்தானிலிருந்து இன்று விண்ணுக்கு பறந்திருக்கிறார். சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்துக்கு அவர் சென்று கொண்டிருக்கிறார்
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:56 PM
0
comments (நெற்றிக்கண்)
October 09, 2007
ஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்?
சில நண்பர்கள் வெட்கத்தைவிட்டுச் சொல்லி அழுததை இங்கே வேதனையோடு நினைத்துப்பார்க்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் இந்த விசயங்களை வெளியில் வேறுயாரிடமும் சொல்லக்கூடாதென்று என்னிடம் வேண்டிக்கொள்ளும்போது நான் ஆயிரம் முறை செத்திருக்கிறேன். அவர்களின் மனப்போராட்டத்தை அதே அலைவரிசையில் அனுபவித்து அவர்களோடு சேர்ந்து நானும் கண்ணீர் வடித்திருக்கிறேன். எப்படி என்னிடம் சொன்னார்கள் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றும் மாயமோ, மந்திரமோ இல்லை. அது என் வேலையும் இல்லை. நான் எல்லோரிடமும் நன்றாகப் பேசுவேன். எப்போதும் கலகலப்பாக இருப்பேன். எளிதில் எனக்கு நண்பர்கள் கிடைத்துவிடுவார்கள். இது சில வேளைகளில் அபத்தமாகவும் முடிந்ததுண்டு. அவ்வாறு நான் எல்லோரிடமும் அன்பாகப் பழகும்போது, அவர்கள் என்னிடம் பேசினால் சற்று மனதுக்கு ஆறுதலாக இருப்பதாகவும், கவலை மறந்து சிரிப்பதாகவும் சொல்வார்கள். பிறகு அப்படியென்ன உங்களுக்குக் கவலை என்று எதார்த்தமாகக் கேட்டால், சந்தர்ப்பம் வரும்போது பேச ஆரம்பித்து, பிறகு தன் சோகக்கதைகளைச் சொல்லி வேதனைப்படுவார்கள்.
அவர்களோடு நானும் சேர்ந்து அவர்களுக்காகக் கண்ணீர் விட்டதுண்டு. மனித மனம் எவ்வளவு இதமானது? பாவம்? அது எப்படியெல்லாம் வேதனைப்படுகிறது? ஒரு சின்ன ஏமாற்றத்தைக்கூடத் தாங்கிக்கொள்ளமுடியாமல் அது தவிக்கும்போது அது தேடும் தேடலை யார் உணர்ந்து மருந்திடுகிறார்களோ, ஆறுதலாக நான்கு வார்த்தைகள் கூறுகிறார்களோ அவர்கள் தெய்வத்திற்குச் சமமாகத் தெரிவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அப்படித் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் போசும்போது அவர்களின் சுமை பாதியாகக் குறைவதோடு, நமது மனமும் எவ்வளவு இலகுவாகிறது என்பதை நான் உண்மையாகவே உணர்ந்திருக்கிறேன். இன்னும் அந்தப்பணியைச் செய்துகொண்டுதான் இருக்கிறேன். இன்னும் செய்வேன்.
ஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்? எப்படி அவள் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறாள் என்பதுதான் இங்கே பிரச்சினை. சாதரணமாகப் பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்கிறார்களா? இது யார் குற்றம்? போன்ற ஆராய்ச்சிக்கு நான் வரவில்லை. வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கக்கூடிய நம் அப்பாவி இந்தியச் சகோதரர்கள் சந்திக்கும் பிரச்சினையை நான் இங்கே எனக்குத் தெரிந்த கோணத்தில் உங்கள் முன் வைக்கிறேன்.
முக்கியக் காரணம் அவர்களுக்கு குடும்ப அந்தஸ்து, அதாவது குடும்பத்தோடு வசிக்க அந்த நாடுகளில் அனுமதி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பெண்கள் அதிகபட்சம் தன்னைப் பர்தாவால் மூடிக்கொண்டுதான் (சவூதியில் நூறு சதவிகிதம்)வெளியே வரவேண்டும். தனியாகப் பெண்கள் வெளியே வர அனுமதியில்லை. அங்கு நமது பெண்களுக்கு வேலைவாய்ப்புக்களும் குறைவு. இது நம் இந்தியப்பெண்களுக்குச் சாத்தியப்படாது. தனியாக மனைவியை வீட்டில் இருக்க வைத்துக் கணவன் மட்டும் அலுவலகம் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது. மேலும் முக்கியக் காரணம் வளைகுடா நாடுகளில் ஊதியம் மிகக்குறைவு. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரு ஆண்மகன் என்ன நினைக்கிறான்? தான் சிரமப்பட்டாலும் பரவாயில்லை, நமது சந்ததிகள், நம்மைச் சேர்ந்தவர்கள் நிம்மதியாவும் சந்தோசமாகவும் இருக்கட்டும் என்கிற தியாக மனப்பான்மையில் அனைத்தையும் அர்ப்பணித்துவிட்டு அயல்நாடு தேடிச் செல்கிறான்.
மேலும் சாதாரணத் தொழிலாளி மற்றும் இடைநிலைப்பதவியில் இருக்கும் நண்பர்களுக்கு விடுமுறை என்பது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான். அப்படிக் கிடைத்தாலும் அதிகபட்சம் ஒரு மாதம், விரும்பினால் ஊதியமற்ற விடுமுறையாக ஒரு பதினைந்து நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆகமொத்தம் 45 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும். இதில் அவன் என்ன செய்வான். அப்படிக் கஷ்டப்பட்டு, அங்கு வீசும் பேய்த்தனமான மணற்புயலில் தன் வாழ்நாட்கள் முழுமையும் இழந்து தவிக்கிறான். அந்தச் சகோதரனுக்கு இல்லறம் என்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொலைபேசியில் மட்டுமே நடக்கிறது. கொஞ்சும் மகனும் மகளும் 'அப்பா! எப்பப்பா வருவீங்க?' என்று கேட்கும்போது அவன் இதயம் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறும், ஆனாலும் அதற்குள் இருந்த தொகை தீர்ந்துவிடுமே என்று அனைவரிடமும் இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கடைசியாகக் கண்ணீரோடு காத்திருக்கும் மனைவியிடம் போன் கைமாறும்பொது "கட்" ஆகிவிடுகிறது. மறுபடியொரு வெள்ளிக்கிழமைக்காக என் சகோதரி இங்கே விரதம் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் உணர்வுகளைச் சாகடித்து வாழும் எனதருமைச் சகோதரன் அங்கு வீசும் மணற்புயலில் பாதி உயிரோடுதான் அலைகிறான்.
மணற்புயல் என்றால் அது மரணப்புயல்தான், சாலையில் நடந்து செல்கிற இந்தியனைக் கண்டால், காரில் செல்லும் இந்திய நண்பர்கள் வேகமாகச் சென்றுவிடுவர். ஆனால் மற்ற எந்த நாட்டு நண்பர்களும் அப்படிச் செல்லமாட்டார்கள். நின்று அவர்களையும் ஏற்றிக்கொண்டுதான் செல்வர். நாமெல்லாம் பாரம்பரியம் மிக்க இந்தியப் பிரஜைகள் என்று மார்தட்டிக்கொள்ளலாம். சரி அது போகட்டும்! மாதம் முழுவதும் ரத்தம் சிந்தித் தன் குடும்பத்துக்குத் தேவையான பணத்தை அனுப்பக்கூட அங்கு அவ்வளவு சிரமப்படவேண்டும். அங்கு அந்த நாட்டு குடிமக்களுக்கே முன்னுரிமை. நாம் எத்தனை பேர் வரிசையில் நின்றாலும், அவர்கள் நேராக வங்கிக் காசோலைக் கவுன்டருக்குச் சென்று காசோலை பெறும் தைரியம் அவர்களுக்குண்டு. நாம் அங்கு எதுவும் பேசமுடியாத ஊமைகளாக்கப்படுவோம். இது அங்கு வாழும் ஒவ்வொருவரும் சந்திக்கும் வெட்கப்படவேண்டிய உண்மை. அப்படியே அனுப்பும்போது காசோலையில் எழுத்துப்பிழையிருந்தால்கூட ஏதாவது நாம் கேட்டால் வங்கியிலிருந்து வெளியில் அனுப்பப்படுவோம். காரணம் அவர்களுக்கு ஆங்கிலமோ வேறு மொழியோ தெரியாது. அவர்களுக்கு அது அவசியமும் இல்லை. அவர்கள் தாய்மொழி மட்டுமே பேசுவார்கள். அதன்மீது அதீதப்பற்றுக் கொண்டவர்கள்! வெளிநாட்டவர்களைக் கண்டால் வரிந்துகட்டிக்கொண்டு வேண்டாத பதிலையும், கேட்காத உதவிகளையும்கூட முன்னின்று செய்வதற்கு அவர்கள் இந்தியர்களா என்ன?
சரி! இப்படியெல்லாம் வாழ்க்கையையே அடமானம் வைத்து உழைத்து ஓடாகி இரண்டு வருடங்களுக்கொருமுறை வீட்டுக்கு வந்தால், இங்கு சகோதரிகளின் லீலைகள் அப்பப்பா! அங்கு படும் வேதனைகளனைத்தும் தெரிந்தே கணவர்களுக்குத் துரோகம் செய்யும் மனைவிப் பத்தினிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாளடைவில் இது அவனுக்குத் தெரிய வரும்போது, நொந்து நூலாகி, செத்துச் சுண்ணாம்பாகி வேதனையோடு திரும்பவும் அந்த நாட்டுக்கே சென்றுவிடுகிறான். போகப்போக விரக்தியின் உச்சத்தில் இவனும் அங்கு தவறு செய்ய ஆரம்பித்து விடுகிறான். அதற்கும் அங்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் வெளியில் தெரிவதில்லை.
குறிப்பாக சவூதி அரேபியா போன்ற நாடுகளில் வாழும் நண்பர்கள் தவறு செய்வது மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. துபாய் போன்ற நாடுகளில் சற்றுச் சுதந்திரமாகத் தவறு செய்கிறான். இவ்வாறு வேதனை அனுபவிக்கும் நண்பர்கள் இருபத்தைந்து சதவீதம் இருக்கிறார்கள். இரண்டு வருடத்திலிருந்து ஐந்து வருடம் அங்கு இருக்கலாம் என்று செல்லும் என் பாவப்பட்ட இந்தியத் தோழன், ஐந்து வருடங்கள் பூர்த்தி செய்யும்போது குடும்பத்தில் தன்னிறைவு அடைகிறான். எனக்குத் தெரிந்து எத்தனையோ நண்பர்கள் விடுமுறைக்கு ஊருக்குச் செல்லாவிட்டால் ஒரு மாதச் சம்பளம் அதிகமாகக் கிடைக்கும் என்றும், பாதி விடுமுறையை ஓவர்டைம் பார்த்துச் சாம்பாதிக்கலாம் என்றும் விடுமுறைக்கே வராமல் பணம் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகள், தேவைகள், ஏக்கங்கள் அங்கே சாகடிக்கப்படுகின்றன.
கடன்கள் அடைபட்டு விடுகிறது. பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் சேர்க்கப்பட்டு ஒரு தரமான கல்வி அவனால் கொடுக்கப்படுகிறது. அதுவரை கணவனை நினைத்து, வேதனைப்பட்டும், கடன், குடும்பச் சுமை இவற்றை நினைத்து கவலைப்பட்டும் காலம் கடத்துகிறார்கள் நமது சகோதரிகள். கணவனின் பிரிவும், குடும்பச் சுமைகளும், கடன்களும் தவிர வேறு விதமான தவறான எண்ணங்கள் அவளுக்குள் வருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் ஒரு ஐந்து வருடங்கள் ஆகும்போது ஓரளவு எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடும் நேரத்தில் வீட்டில் தேவையான தொலைக்காட்சி, கேபிள்இணைப்பு, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், குளிர்சாதனம் போன்றவையெல்லாம் நிறைந்த ஒரு அத்யாவசியம் கலந்த ஆடம்பர நிலைக்கு வந்துவிடுகிறது அந்தக் குடும்பம். அனைத்து அடிப்படை வசதிகளும் தன்னிறைவு பெற்றுவிடுகின்றன. கவலைப்பட அவ்வளவாக விசயம் இல்லை. சகோதரிகள் சந்தோசமாக இருக்கவேண்டுமென்று சகோதரன் ஒவ்வொரு முறை வெளிநாட்டிலிருந்து வரும்போதும், அவன் அங்கு கற்றுக்கொண்ட சில நல்ல விசயங்களையும், அதே சமயத்தில் நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத சில தகாத செயல்களையும், வெளி உலகம் தெரியாத மனைவிக்கு அறிமுகப்படுத்துகிறான். வசதிகள் பெருகப் பெருகத் தேவைகள் நியாயங்களாகி மீண்டும் சில வருடங்களாவது அங்கு சம்பாதிக்கலாம் என்ற ஒரு நல்ல நோக்கத்தில் மறுபடியும் செல்கிறான். ஆனால் குடும்பத்தேவைகள், பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து சகோதரிகள் எதைப்பற்றியும் சிந்திக்கவோ, கவலைப்படவோ அவசியமில்லாததால், மனம் உல்லாசத்தைத் தேடுகிறது. எல்லாம் நிறைந்த சொகுசான வீட்டில் இல்லாத ஒன்று என்றால் ‘அது’ மட்டும்தான். அந்தத் தேவைக்காக இன்னொருவரும் வந்து சொகுசாக நுழைந்து கொள்கிறார். எனவே பெண்மணிகள் சுலபமாக இதுபோன்ற தவறுகள் செய்யத்துணிகின்றனர்.
இதுவே பல வெளிநாடுகளில் இருக்கக்கூடிய நண்பர்களுக்குப் பழகிப்போய், எல்லாவற்றையும் தனக்குள்ளேயே போட்டு விழுங்கி, ஒரு நடைபிணமாக ஒவ்வொரு விடுமுறைக்கும் இங்கு வந்து செல்கிறான். வேறு வழியில்லாமல் இந்த வாழ்க்கையையே ஏற்றுக்கொள்ளக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். வேறு என்ன செய்யமுடியும்? ஏனெனில் தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அவன் அதைத் தெரிந்தும் தெரியாதவன் போல், ரணமான மனதைக் கல்லாக்கி அந்தக் கொடுமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலைக்கைதியாகிவிடுகிறான். ஆனால் இதையெல்லாம் பார்த்து வளரும் குழந்தைகள் மனதில் இவை பசுமரத்தாணிபோலப் பதிந்து விடுகிறது. வாய்ப்புக்கள் ஏற்படும்போது அந்த இளம் பிஞ்சுகளும் திசை மாறிப்போகும் கொடூரம் நடக்கத்தான் செய்கிறது. அங்கே கற்பும், கலாசாரமும் என்ன செய்யமுடியும்? தன் பங்கிற்குத் தவறை நியாயப்படுத்தும்! அவ்வளவே! என்னுடைய கோணத்தில் மட்டுமல்ல, எவருடைய கோணத்திலும் இது தவறுதான். ஆனால் மனிதன் இந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் பொருளாதாரத் தன்னிறைவும், தொலைக்காட்சி போன்ற வெளியுலகத் தொடர்புகளும்தான். இவற்றைச் சரியான அலைவரிசையில், கோணத்தில் புரிந்துகொண்டு நல்ல வாழ்க்கை நடத்தும் தோழிகளை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
நான் சொல்லும் இந்தக் கருத்துக்களுக்குச் சிலர் மறுப்புத் தெரிவிக்கலாம். இது உங்கள் கோணத்தில் சற்று மாறுபடலாம். ஆனால் நான் இங்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தக்கட்டுரையின் பின்னனியில் ஏராளமான உண்மைச்சம்பவங்கள் ஒளிந்துகிடக்கின்றன என்பதை ஒளிவு மறைவின்றி உங்கள் முன் வைக்கிறேன். தாராளமாக உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை இங்கே பதிவு செய்யலாம்.
- நவநீ
Posted by
Manuneedhi - தமிழன்
at
4:18 PM
0
comments (நெற்றிக்கண்)
முதல் விதி : எதையும் இழக்கப்போவதில்லை, இரண்டாவது விதி : முதல்விதியை மறக்கப்போவதில்லை
ஆங்கிலத்திற்கு மன்னிக்க : The first rule is not to lose. The second rule is not to forget the first rule : 1. He bought his first share at age 11 and he now regrets that he started too late!
2. He bought a small farm at age 14 with savings from delivering newspapers.
3. He still lives in the same small 3-bedroom house in mid-town Omaha , which he bought after he got married 50 years ago. He says that he has everything he needs in that house. His house does not have a wall or a fence.
4. He drives his own car everywhere and does not have a driver or security people around him.
5. He never travels by private jet, although he owns the world's largest private jet company.
6. His company, Berkshire Hathaway, owns 63 companies. He writes only one letter each year to the CEOs of these companies, giving them goals for the year. He never holds meetings or calls them on a regular basis. He has given his CEO's only two rules. Rule number 1: do not lose any of your share holder's money. Rule number 2: Do not forget rule number 1.
7. He does not socialize with the high society crowd. His past time after he gets home is to make himself some pop corn and watch Television.
8. Bill Gates, the world's richest man met him for the first time only 5 years ago. Bill Gates did not think he had anything in common with Warren Buffet. So he had scheduled his meeting only for half hour. But when Gates met him, the meeting lasted for ten hours and Bill Gates became a devotee of Warren Buffet.
9. Warren Buffet does not carry a cell phone, nor has a computer on his desk.
His advice to young people: "Stay away from credit cards and invest in yourself and Remember: A. Money doesn't create man but it is the man who created money. B. Live your lives, as simple as you are. C. Don't do what others say, just listen to them, but do what you feel good. D. Don't go on brand name; just wear those things in which u feel comfortable. E. Don't waste your money on unnecessary things; just spend on them who really in need rather. F. After all it's your life then why gives chance to others to rule our life"
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:44 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:29 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 126 - ம் குறள்
சேதுசமுத்திரம் கால்வாய் : அரசியல்கட்சிகளின் வீண் ஜம்பம்/வெட்டி விளம்பரம் தேவையா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:08 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
கலைஞரின் போதாத காலம் : பிஜேபி-யின் போர்க்கொடி
Posted by
Manuneedhi - தமிழன்
at
2:05 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
கம்யூனிஸ்ட்டுகளின் காங்கிரசுடனான வாதம் : தேர்தல் வருமா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:50 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
சூட்சுமமான ஓர் உறவு
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:47 PM
0
comments (நெற்றிக்கண்)
கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்
- கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியாவின் மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்திருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இம்முடிவு பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த நிதியமைச்சர் ப. சிதம்பரம். கர்நாடக மாநில சட்டப்பேரவையின் இயக்கம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். கர்நாடகத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இரு கட்சிகளும் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 20 மாதங்களுக்குப் பிறகு, அதாவது அக்டோபர் 3-ம் தேதி பாஜகவிடம் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒப்படைக்க மறுத்ததால் அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இலங்கை வருகை : ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆபர் அம்மையார் அவர்கள் சுமார் ஒருவாரகால விஜமொன்றினை மேற்கொண்டு இன்று இலங்கை வந்திருக்கிறார்
- பாகிஸ்தான் மோதல்களில் 200 பேர் பலி : பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானின் அமைதி குலைந்த பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில், கடந்த மூன்று நாட்களில் இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஏறக்குறைய 200 பேர் வரை கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
- இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு : இயற்பியல் துறைக்கான இந்த வருடத்துக்கான நோபல் பரிசு, பிரஞ்சுக்காரர் ஒருவருக்கும், ஜேர்மன் நாட்டவர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது
- பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளை ஏற்கமுடியாது - ஆங்சான் சூச்சியின் கட்சி அறிவிப்பு : பர்மாவில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின், தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவியான ஆங்சான் சூச்சிக்கும், இராணுவ அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்காக, இராணுவ அரசால் முன்வைக்கப்படக் கூடிய எந்தவொரு நிபந்தனையையும் நிராகரிப்பதாக, அந்தக் கட்சி அறிவித்துள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
1:38 PM
0
comments (நெற்றிக்கண்)
Need A-ve blood Urgently : ஒரு அவசர இருதய சிகிச்சைக்காக உடனடியாக ஏ நெகடிவ் இரத்தம் தேவை
Mobile no : 9344680593 Contact person: Vaseem
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:15 AM
0
comments (நெற்றிக்கண்)
October 08, 2007
ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி பா.ஜ.க. வகுக்கும் புதிய வியூகம்
ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பக்கோரி தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம், பாரதீய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் வீடு வீடாக நிவாரணப் பொருள் சேகரிக்கும் நடவடிக்கை, ஈழத் தமிழருக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்புமாறு கோரி புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் பேரணியென தமிழகமே சூடாகியுள்ளது.
அன்புக்குரிய பேரன்களான மாறன் சகோதரர்களின் பிரிவு, தனது தலைக்கே விலை வைத்துவிட்ட இராமர் பிரச்சினையென தள்ளாத வயதில் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஈழத் தமிழர் பிரச்சினையும் தீராத தலைவலியாக இம்சை கொடுக்கும் நிலையில் தற்போது அதனையே அவரின் எதிர்க் கட்சிகள் கையிலெடுத்துள்ளதால் பெரும் நெருக்கடி நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
இராமரை கற்பனையென கூறிய தனது நாத்திகத்தை காட்டமுயன்ற கருணாநிதி அதற்கு விலையாக தலையையும் தனது அரசையும் இழக்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொண்ட போதிலும் அவரின் அரசுக்கெதிரான நெருக்கடிகள், சவால்கள், சதிகள், அனுமான் வாலாக நீண்டுகொண்டே செல்கின்றன.
இதில் தற்போது பா.ஜ.க.வின் ஈழத்தமிழருக்கான உணவு சேகரிப்பும் சேர்ந்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பழ.நெடுமாறன் தலைமையில் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் பெருமளவு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. பல தலைவர்கள், கட்சிகள் வேண்டுகோள்களை விடுத்தபோதும் தமிழக அரசோ, மத்திய அரசோ அதனை கவனத்தில் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவற்றை உடனடியாக ஈழத்தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த மாதம் யாழ்.குடாநாட்டுக்கான படகுப்பயண போராட்டத்தை பழ.நெடுமாறன் ஆரம்பித்தபோது அவர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அவர் மேற்கொண்ட சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், வைகோ போன்றோரின் வாக்குறுதிகளினால் கைவிடப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பும் விடயம் தொடர்பாக இரு நாட்களுக்குள் பழ.நெடுமாறனுடன் நேரில் பேசுவதாக உறுதிகூறிய கருணாநிதி ஒரு மாதமாகின்ற போதும் இன்னும் பழ.நெடுமாறனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. பழ.நெடுமாறனுக்கு உறுதிகூறிய டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றோரும் இது விடயத்தில் மௌனம் சாதித்து வருகின்றனர்.
5 நாட்களாக தமிழகத்தை மட்டுமன்றி சர்வதேசத்தையும் தன் பக்கம் திருப்பிய பழ.நெடுமாறனின் போராட்டத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்த தமிழகத்தின் எதிர்க் கட்சியும் முன்னாள் இந்திய அரசுமான பாரதீய ஜனதாக் கட்சி தற்போது திடீரென ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்களாக நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாரதீய ஜனதாக் கட்சியின் ஈழத் தமிழருக்கான நிவாரண பொருள் சேகரிப்பின் பின்னணி சகலருக்கும் தெரிந்தவிடயமாக இருக்கின்றபோதும் அதனால் கருணாநிதியின் அரசுக்கு நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனாலேயே கருணாநிதியை எதிர்க்க இராமரை ஒருகையிலெடுத்த, பாரதீய ஜனதாக் கட்சி தற்போது ஈழத் தமிழரையும் மறுகையில் எடுத்துள்ளது.
இராமர் பிரச்சினையை பூதாகரமாக்கிய பா.ஜ.க. அதன் மூலம் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்குமிடையே முரண்பாடுகளை தோற்றுவித்தது. இதனை ஒரு கட்டத்தில் தனது வாயாலே ஒப்புக்கொண்ட கருணாநிதி, மத்திய அரசின் நடவடிக்கைகள் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்திருந்தார். இராமர் பிரச்சினையால் கருணாநிதியின் அரசுக்கு எதிரான சில நிலைப்பாடுகளை காங்கிரஸ் எடுத்ததாலேயே கருணாநிதி இவ்வாறு கூறியிருந்தார்.
தற்போது பா.ஜ.க. ஈழத் தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கும் இதுதான் காரணம். ஈழத்தமிழருக்கு உதவும் விடயத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் இணங்காது என்பது பா.ஜ.க.வுக்குமட்டுமல்ல கருணாநிதிக்கும் நன்கு தெரிந்தவிடயம். பழ.நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டத்தைகூட மத்திய அரசு கணக்கிலெடுக்கவில்லை.
ஆனால், கருணாநிதியால் அவ்வாறிருக்க முடியவில்லை. பழ.நெடுமாறனின் போராட்டத்துக்கு பதிலளிக்காது விட்டால் தான் தமிழின விரோதியாகி விடுவேன் என்பது கருணாநிதிக்குத் தெரியும். அதேவேளை, இருதய நோயாளியான பழ.நெடுமாறனின் உயிருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதன் பிரதிபலிப்புகள் தனது ஆட்சிக்கே வேட்டுவைத்துவிடுமென்பதும் கருணாநிதிக்குத் தெரியும்.
அதனாலேயே பழ.நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதில் முனைப்பாகவிருந்த கருணாநிதி இரு நாட்களில் பழ.நெடுமாறனுடன் பேச்சுகளை நடத்துவதாக பகிரங்கமாக அறிவித்ததுடன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி மன்றாடினார். தனது விசுவாசிகள் மூலம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவும் செய்தார்.
இந்நிலையிலேயே பழ.நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டத்தின் பலாபலன்களை கூட்டிக்கழித்துப் பார்த்த பாரதீய ஜனதாக் கட்சி ஈழத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்தால் கருணாநிதிக்கு சிக்கலை ஏற்படுத்தலாமென்பதை உணர்ந்துகொண்டதாலேயே தற்போது ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்களை எதிர்வரும் 11 ஆம் திகதி ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு கூறி செஞ்சிலுவைச் சங்கத்திடம் பா.ஜ.க. ஒப்படைக்கவுள்ளது. ஆனால், ஈழத் தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்காது. இது தொடர்பில் தமிழக அரசும் எதுவித அழுத்தமும் கொடுக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இதனை வைத்துத்தான் பா.ஜ.க. தனது அடுத்த அடியை தி.மு.க. அரசுக்கு கொடுக்கப்போகின்றது. அதாவது, இராமர் பிரச்சினைமூலம் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசு என்பதை பிரசாரப்படுத்திய பா.ஜ.க. ஈழத் தமிழர் விவகாரத்தை கையிலெடுத்ததன் மூலம் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதமான அரசு என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தப்போகின்றது.
ஆனால், இன்னொரு வகையில் ஈழத் தமிழர் சார்புக்கொள்கையை பாரதீய ஜனதாக் கட்சி எடுத்தமையை சாதாரண விடயமாகக் கருத முடியாது. ஏனெனில், பா.ஜ.க. முன்னாள் இந்திய அரசு, தற்போதைய பலமான எதிர்க்கட்சி. இதில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலமான அணியே உள்ளது.
இவ்வாறானதொரு கட்சி ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினால் அதன் பிரதிபலிப்பு மிகவும் பெறுமதியானதாகவேயிருக்கும். ஆகையால்தான் பா.ஜ.க.வின் ஈழத் தமிழருக்கான நிவாரணப் பொருட் சேகரிப்பு அறிவிப்பினால் தமிழக அரசு மட்டுமன்றி மத்திய அரசும் கலக்கமடைந்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் இல.கணேசன், பட்டினியால் வாடும் ஈழத் தமிழருக்கு நாம் நிவாரணப் பொருட்களை தமிழகத்தில் வீடு வீடாக சேகரிக்கவுள்ளோம். இதில் முழு மூச்சாக எமது தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.
7 நாட்கள் சேகரிக்கப்படும் இந்த நிவாரணப் பொருட்களை ஈழத் தமிழர்களிடம் கையளிக்குமாறு கோரி எதிர்வரும் 11 ஆம் திகதி செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்படும். அவர்களின் சம்மதம் பெற்றே நாம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாம் கொடுக்கும் நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர்களிடம் கையளிக்க மறுக்கப்படுமானால் அதன் பின்னர் நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.
நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கின்றதோ இல்லையோ, தமது பிணங்களின் மீதும் தாம் சிந்தும் குருதிகள் மீதும் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்றாகவே புரிந்துவைத்துள்ளனர்.
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:51 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : தினக்குரல்
மரபுவழிப் பிரச்சினைகளைத் தீர்க்கவழி (ஸ்டெம் செல் ஆராய்ச்சி) - நோபல் பரிசு
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:46 PM
0
comments (நெற்றிக்கண்)
கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்
அன்பார்ந்த நண்பர்களே. ரமலான் மற்றும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்தச் சில ஆலோசனைகள்...
1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாகப் பாதுகாக்க/கையாள வேண்டும்.
2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.
3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.
4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.
5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.
6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.
7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.
8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.
9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.
10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.
11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.
12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.
13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரச்சினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.
17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.
18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.
19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.
(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:34 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : கூகிள் குழுமம்
இன்றைய குறள்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:41 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 125 - ம் குறள்
திருக்குறள் படிக்காமல் மார்க்சிஸம் படிப்பவன் உருப்பட மாட்டான்
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:32 PM
0
comments (நெற்றிக்கண்)
சே-குவராவின் நாற்பதாவது நினைவு தினம்
கியூபாவின் புரட்சிகர கதாநாயகர்களில் ஒருவரும், சமீபத்திய தசாப்தங்களில் தோன்றிய அதிகபட்ச ஆளுமை நிறைந்த குறியீடுமான எர்னெஸ்டோ சே-குவரா அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு, மரணத்தை தழுவிய நாற்பதாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளை கியூபா இன்று கடைபிடித்தது. சே என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, எர்னெஸ்டோ குவேரா அவர்கள், பிடெல் கேஸ்ட்ரோ அவர்கள் தலைமையிலான போராளிகளில் ஒருவராக செயல்பட்டார். இந்த போராளிக் குழுவினர், கியூபாவின் தலைவராக இருந்த புல்ஜென்ஷியோ பட்டிஸ்டோ அவர்களை 1959 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கினார்கள். அர்ஜெண்டினாவில் பிறந்த சே-குவரா அவர்கள், போலிவியாவில் நிகழ்ந்த கிளர்ச்சிக்கு உதவுவதற்காக அங்கு சென்றபோது, பொலிவிய ராணுவத்தினர் அவரை தொடர்ந்து சென்று, 1967 ஆம் ஆண்டு கொலை செய்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளின் கடைசியிலிருந்து, சே-குவராவின் கொள்கைகளும், தோற்றமும், அமைதியற்ற இளம் தலைமுறையினர் பலருக்கு தூண்டுகோலாக, ஆகர்ஷ சக்தியாக இருந்து வருகிறது. சே-குவராவின் தாடி மண்டிய முகத்தின் படத்தை தாங்கிய டி ஷர்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்து வருகின்றன.- காச நோய்க்கெதிரான மருந்துகளின் விநியோகம் : காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது எக்ஸ்ரே ஆராயப்படுகிறதுஉலகின் 19 நாடுகளுக்கு காச நோய்க்கெதிரான மருந்துகளை விநியோகிப்பதில், உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் சபையும் கூட்டாக செயற்படவுள்ளன
- பாகிஸ்தானின் துணை இராணுவத் தளபதியாக உளவுத்துறையின் முன்னாள் தலைவர் நியமனம் : பாகிஸ்தானின் உளவுத்துறையின் முன்னாள் தலைவரான ஜெனரல் அஸ்ஃபாக் கியானி அவர்கள், இராணுவத்தின் துணைத்தளபதியாக பதியேற்றுள்ளார்
- இராக்கில் உள்ள பிரிட்டிஷ் படையினரை குறைக்கும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் அறிவிப்பு : இராக்கில் இருக்கும் பிரிட்டிஷ் படைகளில், பாதி படையினருக்கும் அதிகமானவர்களை குறைப்பதற்கான திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்ணைத்தளபதியாக பதியேற்றுள்ளார்
- மருத்துவத்துக்கான நோபல் பரிசு : இந்த வருடத்துக்கான நோபல் பரிசு, மரபணுக்களை இலக்கு வைத்தல் என்ற தொழில்நுட்பத்தை விருத்தி செய்த, இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டன் நாட்டவர் ஒருவர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது
Posted by
Manuneedhi - தமிழன்
at
3:19 PM
0
comments (நெற்றிக்கண்)
தங்களின் படைப்புக்களில் ஆண்வர்க்கத்தைக் கடுமையாகச் சாடுவதாக ஒரு கருத்து நிலவுவது உண்மையா?
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:00 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Nilacharal
October 07, 2007
இன்றைய குறள்
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:58 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 124 - ம் குறள்
நம் சமூகம் குழப்பத்தில் இருக்கிறது
ஐராவதம் மகாதேவன், தொல்லியல் வல்லுநர், தினமணியின் முன்னாள் ஆசிரியர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:42 PM
0
comments (நெற்றிக்கண்)
கிழக்குக் கடற்கரைச்சாலை
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:27 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
நெஞ்சம் மறப்பதில்லை
- திரைப்படங்கள் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலம் நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் இன்றைய மூன்றாவது பாகத்தில் தமிழ் திரையுலகின் ஒரு காலத்தில் கோலோச்சிய வெளிநாட்டு இயக்குனராகிய எல்லிஸ் ஆர் டங்கன் அவர்களைப் பற்றிக் கூறுகிறார் "BBC" சம்பத்குமார். அமெரிக்கரான டங்கன் அவர்கள் மந்திரிகுமாரி, சதிலீலாவதி மற்றும் பொன்முடி போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர். பல முன்னணி நடிகர்கள் இவரது படங்களின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமாகியுள்ளனர்.
இதிகாச, புராண காப்பியங்கள் முதல் நவீன சமூகக் கதைகள் வரை இவரால் படமாக்கப்பட்டன.
- விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பலை தாக்கியழித்திருப்பதாக இலங்கை கடற்படை கூறுகிறது : இலங்கையில் விடுதலைப் புலிகளிற்கு கனரக ஆயுதங்களையும், வெடிப்பொருட்களையும் ஏற்றிச்செல்லப் பயன்படுத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் மற்றுமொரு ஆயுதக்கப்பலை அழித்திருப்பதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது. இலங்கையின் தென்கடல் எல்லையில் இருந்து சுமார் 1700 கிலோமீட்டர்கள் தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது
- இராக்கில் இருக்கின்ற இரானியத் தூதுவர் மீது புகார் : பாக்தாதில் உள்ள இரானியத் தூதுவர், இரானிய புரட்சிகர இராணுவத்தின் சிறப்புப் பிரிவு ஒன்றின் உறுப்பினராகச் செயற்படுவதாக, இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளின் உயர் தளபதியான ஜெனரல் டேவிட் பெட்ரியஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்
- பேச்சுவார்த்தைக்கான முன்நிபந்தனைகளை பர்மா கைவிட வேண்டும் - மலேசியா : பர்மாவின் ஜனநாயக எதிர்க்கட்சித் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முன்நிபந்தனைகளைக் கைவிடுமாறு பர்மிய இராணுவ ஆட்சியாளர்களை, மலேசியா கேட்டுள்ளது
- சூடானில் அரச கட்டுப்பாட்டு நகரம் நாசமாக்கப்பட்டுள்ளது : சூடானின் பிரச்சனைக்குரிய டார்பூர் பகுதியில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நகரம் ஒன்று முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:05 PM
0
comments (நெற்றிக்கண்)
October 06, 2007
யூஸ்ஃபுல் பெட்ரோல் பம்ப் டிப்ஸ்
If a tanker truck is filling the station's tank at the time you want to buy gas, do not fill up; most likely dirt and sludge in the tank is being stirred up when gas is being delivered, and you might be transferring that dirt from the bottom of their tank into your car's tank.
Tip 3.
Fill up when your gas tank is half-full (or half-empty), because the more gas you have in your tank the less air there is andgasoline evaporates rapidly, especially when it's warm. (Gasoline storage tanks have an internal floating 'roof' membrane to act as a barrier between the gas and the atmosphere, thereby minimizing evaporation).
If you look at the trigger you'll see that it has three delivery settings: slow, medium and high. When you're filling up do not squeeze the trigger of the nozzle to the high setting. You should be pumping at the slow setting, thereby minimizing vapors created while you are pumping. Hoses at the pump are corrugated; the corrugations act as a return path for vapor recovery from gas that already has been metered. If you are pumping at the high setting, the agitated gasoline contains more vapor, which is being sucked back into the underground tank so you're getting less gas for your money .Hope this will help ease your 'pain at the pump'
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:15 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: நன்றி : கூகிள் குழுமம்
இப்படி ஒரு கும்பல்
Abidjan Cote D'Ivoire.
Dearest in faith,
The holly Quaran made us to understand that Blessed is the hand that gives. I took this decision because I don't have any child that will inherit this money and I don't want my husband's efforts to be used useless. I don't want a situation where this money will be used in useless way. This is why I am taking this decision. I am not afraid of death hence I know where I am going. I know that I am going to be in the bosom of the mighty Allah.As stated in the holly Quaran (Surah xxxvi Yasin) Thou wariest only him who followeth the reminder and fearieth the beneficent in secret to him bear tiding of forgives and a rich reward. I don't need any telephone communication in this regard because of my health. With the help of almighty Allah all things are possible. As soon as I receive your reply I shall give you the contact of the bank here in Abidjan.I want you to always pray for me because the almighty Allah is my shepherd. My happiness is that I lived a life of a worthy Muslim. Whoever that Wants to serve the mighty Allah must serve him in spirit and Truth. Please always be prayerful all through your life. Contact me on the above e_mail address for more information, any delay in your reply will give me room in sourcing another person or company for this same purpose. Please assure me that you will act accordingly as I Stated herein.
Sister Aminata ismail.
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:08 PM
0
comments (நெற்றிக்கண்)
இன்றைய குறள்
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:53 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 123 - ம் குறள்
"தமிழ் நிகழ்ச்சியில் தமிழ் பேசிப் பிரபலமாகியிருப்பது நானாகத்தான் இருக்கமுடியும்"
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:41 AM
0
comments (நெற்றிக்கண்)
- ஐஸ்லாந்து இராஜதந்திரி விடுதலைப் புலிகளை சந்தித்த சர்ச்சைக்கு போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு பொறுப்பேற்பு : இலங்கை அரசாங்கத்திற்குத் தெரியாமலும், அறிவிக்காமலும் ஐஸ்லாந்து நாட்டு இராஜதந்திரி ஒருவரை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து போர்நிறுத்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கௌர்வதாகத் தெரிவித்துள்ளது
- பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாராப் வெற்றி : பாகிஸ்தானில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி இராணுவத் தலைவர் பர்வேஷ் முஷாராப் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது
- ஊக்க மருந்து சர்ச்சையில் மன்னிப்பு கோரியுள்ளார் மரியன் ஜோன்ஸ் : பிரபல அமெரிக்க தடகள வீராங்கனையான மரியன் ஜோன்ஸ் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது தொடர்பாக பொய் கூறியதற்காக மன்னிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளார். 2000 ஆம் ஆண்டு சிட்டினியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற மரியன் ஜோன்ஸ். அப்போட்டிகளுக்கு முன்பாக ஊக்க மருந்தினை உட்கொண்டதை ஒப்பு கொண்டுள்ளார்
- கர்நாடக அரசுக்கு பாரதிய ஜனதா ஆதரவு வாபஸ் : தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தில், ஆட்சி மாற்றம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சிக்கும், முன்னாள் பிரதமர் தேவகெளடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் இடையில் நிலவிய பிரச்சினை சனிக்கிழமையன்று உச்சகட்டத்தை எட்டியது
- இன்றைய (அக்டோபர் 06 சனிக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகளுக்கு இணைப்பில் செல்க http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:23 AM
0
comments (நெற்றிக்கண்)
October 05, 2007
மௌனம் குறும்படம்
Posted by
Manuneedhi - தமிழன்
at
12:42 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Dailymotion
குரான் உண்மையா?
You Cant Ignore this, send it to as many Muslims as u can. The new AMERICAN Quran: a dangerous trick A new Quran is being distributed in Kuwait , titled 'The True Furqan'. It is being described as the ayats of the Shay tan and Al-Furqan weekly magazine has found out that the two American printing companies;' Omega 2001' and 'Wine Press' are involved in the publishing of 'The True Furqan', a book which has also been titled 'The 21st Century Quran'! It is over 366 pages and is in both the Arabic and English languages...it is being distributed to our children in Kuwait in the private English schools! The book contains 77 Surats, which include Al-Fatiha, Al-Jana and Al-Injil. Instead of Bismillah, each Surat begins with a longer version of this incorporating the Christian belief of the three spirits.
And this so! called
Quran opposes many Islamic beliefs. in one of its ayats it describes having more than one wife as fornication, divorce being non-permissible and it uses a new system for the sharing out of the will, opposing the current one. It
states that Jihad is HARAAM.
This book even goes as far as attacking Allah, Subhanahu wa Tahala!
All this is poisoning our children at approx. $3.
Brothers and Sisters please make sure you forward this email to as many people as possible so that we can stop this dangerous trick.
Please tell everyone you know and may Allah reward you.
Please go to the below link and sign the petition against these munafiq's
http://www.petitiononline.com/q45yr679/petition.html
Regards,
SHEIKH HAROON AHMED
RIYADH KSA
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:08 AM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Google-Group
October 04, 2007
"அர்த்தமுள்ள இந்துமதம்" 3 & 4 - கவியரசு கண்ணதாசன் குரலில்
| Powered by eSnips.com |
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:36 PM
2
comments (நெற்றிக்கண்)
Labels: from Collections of Nawin
இன்றைய குறள்
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:22 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 122 - ம் குறள்
சுவாமி விவேகானந்தர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:21 PM
0
comments (நெற்றிக்கண்)
- 'ஐஸ்லாந்து இராஜதந்திரி விடுதலைப்புலிகளைச் சந்தித்தது குறித்து ஐஸ்லாந்து அரசு மன்னிப்பு கோரியது'- இலங்கை அரசு : இலங்கை வந்த ஐஸ்லாந்து நாட்டு இராஜதந்திரி ஒருவர், இலங்கை அரசின் அனுமதியின்றி விடுதலைப்புலிகளைச் சந்தித்தது தொடர்பில் ஐஸ்லாந்து அரசு தம்மிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது
- விடுதலைப்புலிகளின் பகுதிக்கு போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் செல்வதில் பிரச்சினை : விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக இன்று கிளிநொச்சிக்குச் சென்ற போர்நிறுத்த கண்காணிப்பு குழு அதிகாரிகளுக்கு ஓம்நதை இராணுவ சோதனைச்சாவடியின் ஊடாகச் செல்ல இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளுக்கும், போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும் இடையிலான தொடர்புகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறாக தடையேற்படுத்தப்பட்டுள்ளது எனவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் தெரிவித்துள்ளார்
- பர்மாவில் கைதுகள் தொடர்கின்றன: சர்வதேச நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் அதிகரிக்கிறது : பர்மாவில் கடந்த வாரம் நடந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும், ஆட்களைச் சுற்றி வளைப்பதற்காக, அந்த நாட்டின் பெரிய நகரான ரங்கூனில், பர்மியப் பாதுகாப்புப் படையினர் மேலும் தேடுதல்களை நடத்தியுள்ளனர்
- எதிர்க்கட்சித் தலைவியைச் சந்திக்க பர்மிய இராணுவத் தலைவர் கொள்கையளவில் ஒப்புதல் : பர்மாவின் இராணுவத் தலைவர், ஜெனரல் தான் ஷ்வே, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜனநாயக ஆதரவுத் தலைவி, ஆங் சான் சூச்சீ அவர்களை சந்திக்கக் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக பர்மிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது
- பேனசீர் நாடு திரும்புவதற்கான உடன்பாடு : பாகிஸ்தானுக்கு தான் மீண்டும் திரும்பவும், மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்குமான நிபந்தனைகள் வாய் வழியாக ஒத்துக் கொள்ளப்பட்டுவிட்டதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பேனசீர் பூட்டோ கூறியுள்ளார்
- காங்கோ விமான விபத்தில் பலர் பலி : காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாஷாவில் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியொன்றில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது
- இன்றைய (அக்டோபர் 04 வியாழக்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:15 PM
0
comments (நெற்றிக்கண்)
பந்த் - ஒரு ஆய்வு
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:45 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
October 03, 2007
இன்றைய குறள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:27 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 121 - ம் குறள்
சுவாமி விவேகானந்தர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:20 PM
0
comments (நெற்றிக்கண்)
ஜனநாயக நாடுகளில் வாரிசு அரசியல் - ஒரு பார்வை
- இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார் : மோதிலால் நேரு முதல், அவரைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, அவருடைய மகள் இந்திரா காந்தி, இந்திராவின் மகன் ராஜிவ் காந்தி, இன்று ராஜிவின் மகன் ராகுல் காந்திவரை, இந்தக் குடும்பத்தின் ஐந்து தலைமுறையினர், காங்கிரஸ் கட்சியிலும், இந்திய அரசியலிலும் முக்கியத்துவம் மிக்கவர்களாகத் திகழ்ந்துள்ளனர். நவீன ஜனநாயக காலத்திலும், இந்த பரம்பரை (வாரிசு) அரசியல் எந்த அளவுக்குப் பொருந்துகிறது, உலகின் ஏனைய பாகங்களிலும் இந்த நிலை காணப்படுகிறதா, அதன் சாதக பாதகங்கள் என்ன என்பது குறித்து பிபிசியின் ஆய்வாளர் நிக் மைல் அவர்கள் தயாரித்த பெட்டகத்தின் தமிழாக்கத்தை நேயர்கள் இன்றைய சிறப்புப் பெட்டகமாகக் கேட்கலாம்
- முஷாரப்புடனான பேச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டதாக புட்டோ அறிவிப்பு : பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் முஷாரப், தான் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே,அவருடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து தான் நடத்திய பேச்சுவார்த்தைகள் முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக தற்போது நாடு கடந்து வாழும் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ கூறியுள்ளார்
- பாகிஸ்தான் செம்மசூதி மீண்டும் திறப்பு : பாகிஸ்தானின் செம்மசூதி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள செம்மசூதியை அந்நாட்டு அதிகாரிகள் மீண்டும் திறந்துள்ளார்கள் - வட இலங்கை மோதலில் 8 படையினர் பலி : இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்களில், வவுனியா ஓமந்தைக்கு மேற்கே கல்மடு பிரதேசத்திலும், மன்னார் கட்டுக்கரை பகுதியில் இரண்டு இடங்களிலும் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 7 விடுதலைப் புலிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், 3 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
- நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் சட்டம் : தமிழ்நாட்டில் இருக்கும் ஏரி, குளம், ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகள், அதன் கரைகள் மற்றும் அவற்றின் நீர்வரத்து மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்திருக்கிறது
- பர்மா மீதான தடைகள்--ஐரோப்பிய ஒன்றியம் தீவிரம் : பர்மாவில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அங்குள்ள இராணுவ ஆட்சி ஒடுக்கியதை அடுத்து, அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர்கள் இணங்கியுள்ளனர்
- வட இந்திய ரயில் நிலைய விபத்தில் 14 பெண்கள் பலி : வட இந்தியாவின் ஜனசந்தடி மிக்க ஒரு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு குறைந்தது 14 பெண்கள் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 47 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாயினர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:12 PM
0
comments (நெற்றிக்கண்)
சேது சமுத்திரம் ஆய்வு : 3
Posted by
Manuneedhi - தமிழன்
at
9:10 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
October 02, 2007
சர்ச்சைமேல் சர்ச்சைகள் : சேதுசமுத்திரம் கால்வாய் ஒரு ஆய்வு - 1
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:53 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
சர்ச்சைமேல் சர்ச்சைகள் : சேதுசமுத்திரம் கால்வாய் ஒரு ஆய்வு - 2
Posted by
Manuneedhi - தமிழன்
at
11:51 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: Courtesy : Indiainteracts
இன்றைய குறள்
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:39 PM
0
comments (நெற்றிக்கண்)
Labels: 120 - ம் குறள்
சுவாமி விவேகானந்தர்
Posted by
Manuneedhi - தமிழன்
at
10:22 PM
0
comments (நெற்றிக்கண்)
புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் - சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.இ. கருணாகரன்
புவி வெப்பமடைதலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க அதிபரின் கருத்து: சுற்றுச்சூழல் விவகாரம் குறித்த ஆய்வாளரின் செவ்வி அதிபர் புஷ் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில், உலகின் தட்பவெப்ப நிலை குறித்த சமீபத்திய முக்கிய நிகழ்வு குறித்த செய்தியை பார்க்கலாம். புவி வெப்பமடைவதற்கு பிரதான காரணியாக கருதப்படும் கிரீன் ஹவுஸ் கேஸ் என்கிற புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பில், ஐ.நா மன்றத்தின் முன் முயற்சியில் கியோட்டோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி உலக நாடுகளை, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் மிகவும் பின் தங்கிய நாடுகள் என்று வகைப்படுத்தி, அதற்கேற்ப அவை வெளியேற்றும் புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் அளவை குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. கார்பன் வெளியேற்றத்தில் அமெரிக்காவின் பங்கு அதிகம் ஆனால், இந்த உடன்பாட்டை அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் ஆரம்பம் முதலே ஏற்க மறுத்து வருகிறார். கியோட்டோ உடன்பாட்டின் அடிப்படையில் அமெரிக்கா தனது புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைத்தால், அதன் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் பொருளாதார ரீதியில் அது இழப்புகளை சந்திக்க வேண்டிவரலாம் என்பதாலும், புஷ் அவர்கள் கியோட்டோ ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்த பின்னணியில் புஷ் அவர்கள், கடந்த வாரம் வாஷிங்டனில் கூட்டிய சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாட்டில் பேசும்போது, கியோட்டோ உடன்பாட்டிற்கு பதில், ஒவ்வொரு நாடும் தனது சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு போர்வை வாயுக்களை குறைத்தால் போதும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். இது புவி வெப்ப மடைவதை குறைக்க போராடிவரும், சுற்றுச்சூழல் குழுக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்னணியில், புஷ் அவர்களின் கருத்துக்கள் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும், கியோட்டோ ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து அவதானித்து வரும் தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சி.இ. கருணாகரன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்.- கர்நாடகாவில் ஆளும் கூட்டணியில் நெருக்கடி : கர்நாடகத்தில் பாரதீய ஜனதா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு தற்போது நெருக்கடியான கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி, ஐக்கிய ஜனதா தளம் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைப்பதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இருபது மாதங்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுவதில் சிக்கல் எழுந்திருப்பதால், கர்நாடக அரசியல் அரங்கம் பரபரப்படைந்துள்ளது. இரு கட்சிகளும் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் கூட்டங்களை நடத்தின. மதச்சார்பற்ற ஜனதா தளத்தைத் சேர்ந்த முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்கள், தங்களது ராஜிநாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்தார்கள். இதனிடையே, பெங்களூரில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கெளட பிபிசியிடம் இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினார். “எங்கள் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக்கூட்டம் 5-ம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக, நாளை மறுதினம் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும். அவர்களிடம் கருத்துக் கேட்கப்படும். பின்னர் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார் தேவெ கெளட.
இரு கட்சிகளின் உயர்நிலைத் தலைவர்களும் அமர்ந்து பேசுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார் - பெனசீருடன் உடன்பாடு ஏற்படக் கூடிய நிலை : பெனசீர் பூட்டோபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவுடன் ஒரு உடன்பாட்டை எட்டக் கூடிய நிலையில் பாகிஸ்தான் அரசு உள்ளதாக பாகிஸ்தான் அரசின் சார்பில் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கு சிலமணி நேரங்கள் முன்பு கருத்து வெளியிட்ட அந்நாட்டின் அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் கைவிடப்படும் என்று கூறியிருந்தார் - பர்மாவுக்கான ஐ.நா பிரதிநிதியின் நான்கு நாள் விஜயம் முடிந்தது : பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்களையும், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவியான ஆங்சான் சூச்சி அவர்களையும் சந்தித்துப் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் இப்ராஹிம் கம்பாரி அவர்கள், 4 நாள் விஜயத்தின் பின்னர் பர்மாவில் இருந்து புறப்பட்டுள்ளார்
- வட இலங்கையின் விமானத் தாக்குதல் தொடர்கின்றது : இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரது மறைவிடம் ஒன்றின் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு அந்த இடம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது
- ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்த கீதபொன்கலனின் செவ்வி : வாக்காளர்களை ஈர்க்க சமஸ்டி என்ற விடயம் உதவாது என்ற அரசியல் யதார்த்தத்தை, ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளது என்பதையே அதன் அண்மைய அறிக்கையும், அதற்குச் சமாந்தரமாக அதன் தலைவர்கள் சிலரது உரைகளும் உணர்த்துவதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்
- நோபல் பரிசுக்கு இணையான பரிசு இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் வீரம்ந்திரிக்கு வழங்கப்படுகிறது : நோபல் பரிசுக்கு சமாமமாக சர்வதேச அளவில் மதிக்கப்படும் த ரைட் லைவ்லிஹூட் 2007 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசு இம்முறை இலங்கையர் ஒருவருக்கும் வழங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது
- இன்றைய (அக்டோபர் 02 செவ்வாய்க்கிழமை 2007) "BBC" தமிழோசைச் செய்திகள் கேட்க இணைப்பை அழுத்துக http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil_aod.shtml?tamil_worldnews
Posted by
Manuneedhi - தமிழன்
at
5:26 PM
0
comments (நெற்றிக்கண்)


